வெள்ளி, 2 அக்டோபர், 2020

வெள்ளி வீடியோ : தீதிலா காதலா  ஊடலா  கூடலா  அவள் மீட்டும் பண்ணிலா

1977 இல் வெளியான இந்தப் படத்தில்தான் டெல்லி கணேஷ், சரத் பாபு, சிவச்சந்திரன் ஆகியோர் திரையுலகில் நுழைந்தனர்.  விசு எழுதி மேடையேற்றிய நாடகத்தை சுடச்சுட பாலச்சந்தர் வாங்கி, படமாக்கினார்.

பட்டினப்ரவேசம்! 



டெல்லி கணேஷும், காத்தாடி ராமமூர்த்தியும் நாடகத்தில் நடித்த பாத்திரங்களையே படத்திலும் நடித்தனர்.

சுந்தரேசன் ராமமூர்த்தி.  இதுதான் காத்தாடி ராமமூர்த்தியின் சொந்தப பெயர்.  குடந்தையில் பிறந்த இவர் விவேகானந்தா கல்லூரியில் படித்த பட்டதாரியாம்.  சோ, விசு, கிரேஸி மோகன் அனைவருமே இவராலேயே அறிமுகப்படுத்தப் பட்டனர்.  சோ எழுதிய If I Get It நாடகத்தில் இவர் நடித்த பாத்திரத்தால் புகழ் பெற்று காத்தாடி ராமமூர்த்தி ஆனார்.



அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்!!  சிவச்சந்திரனின் இயற்பெயர் நாராயணன்!

கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.

இந்தப் படத்தில் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு நல்ல பாடல்தான்.  அதை இன்று பகிர்கிறேன்.

லா என்கிற எழுத்திலே முடியும் வண்ணம் முழுவதும் எழுதப்பட்டிருக்கும் பாடல்.   வழக்கம்போலவே வரிகளும் எஸ் பி பி குரலும் ரொம்ப ஸ்பெஷல்.  அப்போ டியூன்  என்கிறீர்களா?  அதனால்தானே கேட்கிறோம்!

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா 
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா 
நீ இலாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா 

மான் இல்லாத ஊரிலே  சாயல் கண்ணிலா 
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா 

தெய்வம் கல்லிலா  ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா  
அவள் காட்டும் அன்பிலா 
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா 
 தீதிலா காதலா  ஊடலா  கூடலா  
அவள் மீட்டும் பண்ணிலா

வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா  
ஊரிலா  நாட்டிலா  ஆனந்தம் வீட்டிலா  
அவள் நெஞ்சின் ஏட்டிலா  
சொந்தம் இருளிலா  ஒரு பூவையின் அருளிலா  
எண்ணிலா ஆசைகள் என்னிலா  கொண்டதேன்  
அதைச் சொல்வாய் வெண்ணிலா..


(இந்தப்  பதிவை  ஸ்ரீராம்  எழுதியது   பல   வாரங்களுக்கு  முன்பாக.  ஆனால்  இது  திரு  எஸ்  பி   பி  அமரரான   பிறகு   வெளியாவது ,   பாடலைப்   பாடிய  நிலாவுக்கு   அஞ்சலியாக  அமைந்துவிட்டது ) 


கேஜிஜி சொல்லி இருப்பதுபோல இதை ஷெட்யூல் செய்து பல நாட்களாகி விட்ட நிலையில் இன்று எஸ் பி பி இல்லாத நிலையில் இது வெளியாகிறது.  பல நாட்களுக்குப் பின் இன்றுதான் கணினிக்கு வந்து செட்டிங்ஸ் வந்தால் தலைகால் புரிய சில நாட்களாகும்போல..  

வேறு பாடல் மாற்ற நேரமில்லை.  அதனால் என்ன/ அவ்வப்போது அவர் பாடல் பகிர்ந்து கொண்டுதானே இருக்கிறேன்.  இன்னமும் தொடரப்போகிறது..

பானு அக்காவின் விருப்பமாக எஸ் பி பிக்கே பிடித்த பாடல் என்று சொல்லப்டுவதாகச் சொல்லும் பாடலையும் பகிர்கிறேன்.


====


இன்று அக்டோபர் இரண்டாம் தேதி. காந்தி ஜெயந்தி முன்னிட்டு நான் முன் காலத்தில் பதிவு செய்த ஒரு காணொளி இங்கே கொடுத்துள்ளேன். (kgg) 



===

78 கருத்துகள்:

  1. இனிய வெள்ளிக் கிழமை காலை அனைவருக்கும் நன்னாள்
    ஆகட்டும்.
    நல்ல பாடல்களைப் பதிவிட்டிருக்கும்
    அன்பு ஸ்ரீராமுக்கு நன்றி மா.

    இறைவனிடம் தினமும் சொல்லும் பிரார்த்தனைகளையே இங்கேயும் சொல்கிறேன்.
    யாரையும் வருத்தாமல் இந்த நோய் சீக்கிரமே அகல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளில் இணைகிறோம்.  வாங்க அம்மா..   வணக்கம்.

      நீக்கு
    2. எல்லோரும் பிரார்த்திப்போம். நன்றி.

      நீக்கு
  2. வான் நிலா அற்புதமான கவிதை.
    அதைப் பாடிய நம் பாலு சார் அனாயாசமாக
    எப்படித்தான் இந்த மந்திரத்தைப் போட்டாரோ.

    என்ன சத்தம் பாட்டு தூங்குவதற்கு முன் கேட்கவேண்டும்.
    பார்க்க வேண்டாம்.
    1985 என்று நினைக்கிறேன்.
    இந்தப் பாடலின் மயக்கம் தீர வெகு நாட்களாயிற்று.

    பதிலளிநீக்கு
  3. லதாஜியின் குரலில் வைஷ்ணவ ஜனதோ
    இனிய தேனாகக் காதில் ஊறுகிறது.

    பதிலளிநீக்கு
  4. இலங்கை வானொலியில் தினமும் கேட்ட பாடல்...
    அண்ணலுக்கு நினைவஞ்சலி...

    பதிலளிநீக்கு
  5. இப்பாடலின் தாக்கம்தான் வாலி எழுதிய..
    "தேவகோட்டை ஊரிலா
    தேன் சிந்தும் வேம்பிலா"
    பாடலோ... ?

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. இனீய காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் இனிமை பெருக்கெடுத்துப் பெருக மனமார்ந்த பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. மமூட்டி, அமலா பாடும் டூயட் பாடல் ஒன்றும் இப்படித்தான் "லா"வில் முடியும், சமீபத்தில் கில்லர்ஜியும் அதைப் போல் ஒரு பாடல் எழுதிப் பகிர்ந்திருந்தார். இந்தப் பாடல் கேட்டதில்லை. கீழே உள்ள "புன்னகை மன்னன்" பாடல் என்னமோ கேட்கமுடியவில்லை. மிக மெதுவாகப் பாடுகிறாரோ? பக்கத்திலேயே நம்மவர் யூ ட்யூப் பார்க்கிறார். அதன் சத்தம் காரணமோ தெரியலை. மத்தியானம் கேட்கணும். ஆனால் இப்போல்லாம் மத்தியானங்களில் கூடக் கணினிப் பக்கம் வர முடிவதில்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெதுவா வாங்க கீதாக்கா.. அந்தப் பாடல் எனக்கு சாதாரண வால்யூமில் கேட்கிறதே...

      நீக்கு
  9. வைஷ்ணவ ஜனதோ பாடலின் பின்னணியில் காணொளி நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  10. அன்றைக்கு எல்லாரையும் கட்டிப் போட்ட இனிய பாடல்... சிறப்பு...

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்கள் அருமை. முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். எஸ்பிபி குரலில் அந்தப் பாடல் தேன் போல நன்றாக இருக்கும். அந்தப் படத்தை பற்றிய நிறைய தகவல்கள் தந்ததற்கு நன்றிகள்.

    இரண்டாவது புன்னகை மன்னன் பாடலும் அவர் குரலில் பிரசித்தம். அவர் இது போல் பாடிய பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்.

    காணொளியும் இனிய பாடலுடன் காந்தியடிகளின் பால்ய பருவத்திலிருந்து தொகுத்து தந்த விதம் நன்றாக உள்ளது. ரசித்தேன். அவருடைய நினைவுகளையும் காலம் உள்ளவரை போற்றுவோம். இன்றைய பகிர்வனைதிற்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம். இன்று காந்தி ஜெயந்தி. காமராஜர் நினைவு நாள். காந்திக்கு அஞ்சலி செலுத்திய எ.பி. காமராஜரையும் நினைவு கூர்ந்திருக்கலாமோ? 
    காந்திக்கான அஞ்சலியில் படங்களை தொகுத்திருந்த விதம் நன்றாக இருக்கிறது. குழந்தை மோகன்சந்தின் முகத்தில் தெரிந்த கபடமற்ற தன்மை பொக்கை வாய் காந்தியின் முகத்திலும்  தெரிந்தது  ஆச்சர்யம்!

    பதிலளிநீக்கு
  13. பாட்டுத் தலைவன் என்று எஸ் பி பி அவர்களை கண்ணதாசன் மகன் தொகுத்து வழங்கும் தேன்கிண்ணம் ஜெயா தொலைக்காட்சியில் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
    எத்தனை இனிமையான பாடல்கள் ! மனது முழுதும் பாரம். இன்னும் சில காலம் இருந்து இருக்கலாம் அவர்.

    நீங்கள் பகிர்ந்த பாடலும் அருமை. கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இன்னும் சில காலம் இருந்திருக்கலாம் அவர்..//

      அவருக்கான நீரும் சோறும் பூரணமாகி விட்டன...

      ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி..

      நீக்கு
    2. //அவருக்கான நீரும் சோறும் பூரணமாகி விட்டன...//

      ஆமாம் , புரிகிறது.

      நீக்கு

  14. பானுவுக்கும், எஸ் பி பிக்கும் பிடித்த பாடல் கேட்டேன் , அந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி குரலில் ஒரு சோகம் தெரியும் பாடலை நன்றாக பாடி இருப்பார்.

    இப்போது ஜெயா தொலைக்காட்சியில் "கடவுள் அமைத்து வைத்த மேடை"" பாடலை பாடிக் கொண்டு இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  15. வைஷ்ணவ ஜனதோ லதாமங்கேஸ்வர் குரலில் இனிமை. காந்தி ஜெயந்தி சிறப்பு காணொளி பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  16. தேனாய் இனிக்கும் இரண்டு பாடல்களை எஸ்.பி.பி.யின் நினைவாக பகிர்ந்திருந்தது சுவை. முதல் பாடலை கேட்ட பொழுது , "எம்.எஸ்.வி. என்றால் மெலடி, மெலடி என்றால் எம்.எஸ்.வி." என்று (சித்ரா)விஸ்வேஸ்வரன் ஒரு முறை கூறியது நினைவுக்கு வந்தது. எஸ்.பி.பி.க்கும், எனக்கும் பிடித்த(great people think alike) 'என்ன சத்தம் இந்த நேரம்.. பாடலை  இணைத்ததற்கு நன்றி. அந்த பாடலின் காணொளியையும் இணைத்திருக்கலாம். மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கும். ஒரு மேடைக் கச்சேரியில்,"நீங்கள் பாடிய பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?" என்ற கேள்விக்கு ,இந்த பாடலைத்தான் அவர் குறிப்பிட்டார். "சில பாடல்களின் வரிகள் நன்றாக இருக்கும், சில பாடல்களில் ட்யூன் நன்றாக இருக்கும். சில பாடல்களை நாங்கள் கஷ்டப்பட்டு பாடியிருப்போம்,ஆனால் அதை படமாக்கும் பொழுது கெடுத்திருப்பார்கள். அப்படியெல்லாம் இல்லாமல், பாடல் வரிகள், ட்யூன், பாடப்பட்ட விதம்,அதை படமாக்கிய விதம் என்று எல்லா விதங்களிலும் என்னைக் கவர்ந்த பாடல் இது" என்றார். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரே இன்னொரு பேட்டியில் நாம் பெற்ற குழந்தைகளில் ஏதாவது ஒன்று நிரம்பப் பிடிக்கும் அன்று எப்படி சொல்ல முடியும் என்று கேட்டிருந்தார்.

      நீக்கு
  17. 'வைஷ்ணவ ஜனதோ' பாடலின் பொருள் தெரிந்து பாடுதல் இன்னும் உற்சாகம் கூட்டும். அப்பாடலை இயற்றியது யார், அப்பாடலின் பொருளை நம் மொழியில் நாமக்கல் பெருமான் ஆக்கித் தந்த அரிய கவிதை வடிவில் புரிந்து கொள்வது இன்னும் சிறப்பாக அமையும். கூடவே காந்தி புராணம் என்ற அரிய நூலை எழுதிய பண்டிதை
    அசலாம்பிகை அம்மையார் பற்றியும் அறிமுகம் கொள்ளலாம்.

    விரும்புவருக்கு கீழே உள்ள சுட்டி உதவும்.

    https://tamilandvedas.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Narasi Metha written Vishnavo Jeyatho! It was portraited by Kanu Desai and written and explained by somebody in Kalki long long back! It was in a binding with me once. :(

      நீக்கு
    2. நார்ஸி மேத்தா குஜராத்தில் வாழ்ந்த ஒரு மகான். இவரை சிலர் நரசிம்ம மேத்தா என்று அழைப்பார்கள். 

      நீக்கு
    3. இல்லை, நரசிம்ம மேதா இல்லை. இவர் வாழ்ந்த வீட்டுக்கெல்லாம் போயிருக்கோம். நரசி மேதா தான் பெயர்.

      நீக்கு
    4. நம்ம தமிழ்க்காரங்க பெயரை எப்போவும்போல் அவங்க வழக்கத்துக்கு மாத்தி இருப்பாங்களோ?

      நீக்கு
  18. திரைப்படச் செய்திகள், பாடல்கள், பாடலுக்கு இசையமைத்தவர் என்று வரிசையாக எழுதி கட்டக்கடைசியில் காந்தி மகான் பற்றி என்று எப்படித் தீர்மானித்தீர்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பொழுதும் என் தேர்வுப் பாடல்கள் சில வரிகளோடு முதல் நாள் - அதாவது வியாழக்கிழமைதான் சேர்ப்பேன். முதல் பகுதி, அதன் தலைப்பு எல்லாமே பல வாரங்களுக்கு முன்பே draft வடிவில் சேர்க்கப்பட்டிருக்கும். பதிவில் முதல் கடைசி என்று பாராமல், கடைசி பகுதியை அடிக்கரும்பாக எண்ணி சுவைக்க வேண்டுகிறேன். நன்றி.

      நீக்கு
    2. அடடே.. பதில் நல்லாயிருக்கே..

      நீக்கு
  19. வான் நிலா நிலா அல்ல.. - எனக்குப் பிடித்த எஸ்பிபி பாடல்களில் ஒன்று.
    கவிஞனின் வரிகளே அருமை. அதற்கு குரல்வழி, இசைவழி போதையேற்றி... ரசிகனின், ரசிகையின் காதில் ஊற்றி..

    பதிலளிநீக்கு
  20. மிகவும் கடுமையான பணிச்சுமை..
    இன்று கூட பணியிடத்துக்கு வரும்படியான நிர்பந்தம்...

    பொதுச் சமையலை எடுத்துக் கொள்ளாமல் புரட்டாசி அனுசரிக்கும் போது இப்படியான சிக்கல்.. இது இப்போதைக்குத் தீராது...

    2:50 க்கும் எழ இயலவில்லை...

    அவ்வப்போது வருவேன்...
    பிழையாகக் கொள்ள வேண்டாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறே இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் வாருங்கள், கருத்துரையுங்கள். நன்றி.

      நீக்கு
    2. முடியும்போது வாங்க துரை செல்வராஜு ஸார்.

      நீக்கு
  21. காந்தி அஞ்சலிக்காக வீடியோ தொகுப்பு ஒன்று செய்வதற்கு ஆசைப்பட்டேன்...

    நான்கு மாதங்களாக கணினி இணைப்பு இல்லாததால் ஒன்றும் சரியில்லை...

    எனது பதிவுகளை கைத் தொலைபேசி வழியாகத் தான் வழங்குகின்றேன்...

    பதிலளிநீக்கு
  22. என்ன சத்தம் இந்த நேரம் என ஒரு நெடுந்தொடர் கூட பாலசந்தர் தயாரிப்பில் விஜய் தொலைக்காட்சியில் வந்தது. இந்தப் பாடலையும் இப்போது கேட்டுக் கொண்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  23. எந்தக் கருத்தும் எனக்கு வரலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முதல்லே மறந்துட்டேன், அப்புறமாத் தொடரனு தனியா போட்டேன். அப்போவும் எதுவும் வரலை! அநியாயமா இல்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யாரிடமிருந்தும் எதுவும் வரலை. பதிவுகளுக்குப் போய்ப் பார்க்க வேண்டி இருக்கு! :( இந்த விளையாட்டு எத்தனை நாளைக்கோ? :))))

      நீக்கு
    2. கீதா அக்கா... நேற்று உங்கள் பதிவில் ஒரு கமெண்ட் போட்டேன். என்ன ஆச்சு?

      நீக்கு
    3. வெளியிட்டிருக்கேனே. சோதிச்சும் பார்த்துட்டேன், ஸ்பாமில் ஏதும் இல்லை. ஆனால் இந்தக் கருத்துகள் எதுவும் எனக்கு இதுவரை வரலை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

      நீக்கு
  24. அருமையான பாடல்கள்... முதல் பாடல் SPB தொகுப்பில் உள்ள ஒரு பாடல்...

    மகாத்மா பாடல் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  25. முன்னரே ஷெட்யூல் செய்து வைத்த பதிவு - தகவல்கள் நன்று. பாடல்களையும் கேட்க வேண்டும் - இப்போது வல்லிம்மா தளத்தில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதைக் கேட்ட பிறகு இங்கே! :)

    அட மஹாத்மாவுக்காக ஒரு காணொளியும்! பார்க்கிறேன்.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  26. ஆஹா இனிமையான பாடல்கள்.

    மூன்றாவது பாடல் - எப்போது கேட்டாலும் இனிமை. கூடவே காந்திஜியின் நிழற்படங்களும் சேர்த்து! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட் சார். பத்து வருடங்களுக்கு முன்பு நான் தயார் செய்த முதல் காணொளி இது!

      நீக்கு
  27. இந்தப் பாடலைப் பாடி என்னுடன் படித்தவன் சவேரியார் மேல் நிலைப்பள்ளியில் பரிசு வாங்கினான். அவனை ப்ரேயர் சமயத்தில் இந்தப் பாடலைப் பாடச் சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
  28. 'வான் நிலா... மிகவும் இனிமையான பாடல் .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!