ஜெயகுமார் சந்திரசேகரன் :
ஆன்மிகம், தெய்வீகம் இரண்டும் ஒன்றா? இல்லை என்றால் 6 வித்தியாசங்கள் கூறவும். (உதாரணமாக முகத்தில் அப்படி ஒரு தெய்வீக களை என்று கூறுகிறோம், ஆன்மிக களை என்று கூறுவதில்லை)
# ஆன்மீகம் தெய்வீகம் இரண்டும் ஒன்றல்ல. ஆன்மீகம் என்பது நம்முள்ளே , நம் மனம் அறிவு இவற்றுக்கு அப்பால், இவற்றை இயக்குகிற ஒன்று இருக்கிறது. அதற்கு ஆத்மா என்று பெயரிட்டு அதை குறித்து உள்நோக்கி அறியும் முயற்சிக்கு ஆன்மீகத் தேடல் என்று பெயர் வைத்திருக்கிறோம். இப்படி நம்மைப் பற்றி நாமே தீர யோசித்து உணர்ந்தால் ஆத்ம ஞானம் வந்ததாக சொல்கிறார்கள்.
தெய்வீகம் என்பது கடவுளிடம் இருக்கும் நற்குணங்களை கடவுள் அல்லாத ஒருவர் வைத்திருப்பது தெய்வீகமான ஒன்றாகும். அது உணர்வாக இருக்கலாம். நடவடிக்கையாகவும் இருக்கலாம்.
ஆறு வித்தியாசங்கள் சொல்லுங்கள் எட்டு வித்தியாசங்கள் சொல்லுங்கள் என்றெல்லாம் அந்த ஆறும் எட்டும் அறிந்தவர்கள் மட்டுமே கேட்க வேண்டிய கேள்வி. எனவே இதர வித்தியாசங்களை நீங்கள் எனக்குச் சொல்லுங்கள்! 😀
product managerக்கும் production manager க்கும் என்ன வித்தியாசம்?
# Product க்குப் பொறுப்பு ஒருவர். Quality Quantity இவர் நிர்ணயம் செய்வார்.
அதன் Production க்குப் பொறுப்பு மற்றவர்.
& ப்ராடக்ட் மேனேஜர் பேப்பரில் வடை சுடுவார்.
ப்ரொடக்ஷன் மேனேஜர், எண்ணெயில் வடை சுட ஏற்பாடு செய்வார்!
காய்கறிகளின் விலை ஏற்றமும் இரக்கமும் மிகவும் அதிகம் ஆக இருப்பதேன். ஏறினால் ஆனை விலை. குறைந்தால் தூக்கிப் குப்பையில் போடும் விலை. இந்த வித்தியாசம் ஏன்?
# சரக்கு இருப்பு அதிகமாகி அதுவும் அது இரண்டே நாட்களில் விற்றதாக வேண்டிய சரக்காகவும் இருந்தால் விலை மலியத்தானே வேண்டும்? அதே போல் என்ன விலையானாலும் தக்காளி வெங்காயம் வாங்கியே தீருவேன் என்று அடம் பிடிப்பவர் இருக்கும் வரை வரத்து கம்மியான பொருள் விலை எகிறத்தான் செய்யும்.
நெல்லைத்தமிழன்:
சிவராத்திரினா உங்களுக்கு என்ன நினைவு சட்னு தோணுது? எனக்கு ஈஷா யோகாவில் தமன்னா போன்றவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுதான் நினைவுக்கு வருது.
# எனக்கும் சிவராத்திரி என்றால் ஈஷா யோகா நடத்தும் மகா கொண்டாட்டம்தான் நினைவுக்கு வருகிறது. அதில் வரும் பெரிய மனிதர்களை காட்டிலும் அவர்கள் அரங்கேற்றும் கலை நிகழ்ச்சிகள் மிகச்சிறந்த முறையில் அளிக்கப்படுகின்றன என்பது நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இவ்வளவு கூட்டத்தையும் சமாளித்து எல்லோருக்கும் உணவும் தருகிறார்கள் என்றால் கிட்டத்தட்ட நம்ப முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
& என்னுடைய சிறு வயதில், நாங்கள் கூடியிருந்த வீட்டுக் குடித்தனக்காரர்கள் எல்லோருமே வீட்டு கூடத்துப் பகுதியில், உட்கார்ந்து கண் விழித்து, 'ஓம் நமச்சிவாய' என்று சொல்லிக்கொண்டிருப்போம். அப்பா இரவு எட்டு மணி சுமாருக்கு, குளித்து வந்து, சிவ பூஜை செய்வார்.
நான் எல்லோருடனும் உட்கார்ந்து 'ஓம் நமச்சிவாய' சொல்லிக்கொண்டே இருப்பேன். அநேகமாக மணி இரவு ஒன்பது அல்லது ஒன்பதரை ஆகும்பொழுது, கண்ணயர்ந்து அப்படியே தரையில் படுத்துத் தூங்கிவிடுவேன். மறுநாள் காலையில் கண் விழிக்கும்போது என்னுடைய பாயில் படுத்து இருப்பேன். யார் என்னைத் தூக்கி வந்து அங்கே படுக்க வைத்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். என்னுடைய இரண்டாவது அக்காதான் அப்படி என்னைத் தூக்கி வந்து பாயில் படுக்க வைத்தார் என்று பிறகு தெரிந்துகொண்டது உண்டு.
கே. சக்ரபாணி சென்னை 28:
Time Management என்பது 100% தொலைகாட்சி நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமானது.
ஒவ்வொரு நாளும் 24 மணிநேரமும் வருடம் முழுவதும் 365 நாட்களிலும் எல்லா நிகழ்ச்சிகளையும் சரியான நேரத்தில் ஒளிபரப்பி விளம்பரங்களையும் கொடுத்து ரசிகர்களை பிரமிக்கவைக்கும் தொழிலை செய்கின்றனர். எல்லா தொலைகாட்சி நிறுவன ஸ்டாஃப் களுக்கும் ஒரு சல்யூட். இதைப்பற்றி உங்கள் கருத்துகளை பகிரவும்.
# செய்தி ஒளிபரப்பு தவிர சாதாரணமாக 2 ((அ) 3 நாட்களுக்கு முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட நாளுக்கான எல்லா நிகழ்ச்சிகளும் தயார் செய்யப்பட்டு விடும்.
விளம்பரங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சியின் நேரம் கூட்டி அல்லது குறைத்து வழங்கப் படும்.நேரலை நிகழ்ச்சிகளைக் கூட சில மணிகளுக்கு முன்பே பதிவு செய்து ஒளிபரப்புவதும் உண்டு.
Breaking news வந்தால் நடைபெறும் நிகழ்ச்சி எதுவானாலும் பதிவு செய்து வேறொரு நாளில் ஒளிபரப்பப்படும். இப்படியெல்லாம் நேர நிர்வாகம் செய்வது சரியான புரிதல் இருக்குமானால் சிரமமானது அல்ல.
"தடங்கலுக்கு வருந்துகிறோம்" கார்டு காணாமல் போனது இப்படித்தான்.
" அடுத்த நிகழ்ச்சி சில நொடிகளில்" என்று கார்டு போட்டு ஐந்து நிமிஷம்(!) திரை ஜடமாக இருந்த காலமும் உண்டு!
Fillers என்று குறிப்பிட்ட நேரம் ஓடக் கூடிய பல தயாராக இருக்கும்.
" ஒரு எட்டு நிமிஷ பிட் " என்று கேட்டு வாங்கி அவசரத்துக்கு சமாளிக்கலாம்.
= == = = = = =
KGG பக்கம் :
பாண்டிச்சேரி பயணத்தில் எடுக்கப்பட்ட மேலும் சில படங்கள்:
திரை அரங்குகளில் 70 களில் மாட்டினீ ஷோ என்ற பிற்பகல் காட்சிகள் பெண்கள் வருகையால் மட்டுமே நிரம்பி வழிந்தது. தற்போது அவ்வாறு இல்லை. இந்நிலைக்கு காரணம் என்ன?
பதிலளிநீக்குதினசரிகள் வாங்கும்/வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவது ஏன்?
தனியார் கல்லூரிகள் போய் தனியார் பல்கலைக் கழகங்கள் நிறைந்து விட்டன. இந்நிலை எத்தனை காலம் தாக்குப் பிடிக்கும்?
பதில் அளிப்போம்.
நீக்குபதில் அளிக்கிறேன் என்று சொன்னால் சரி.
நீக்குஅது என்ன அளிப்போம்?
கேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கு நன்றி. kgg சார் படம் மட்டும் போட்டிருக்கிறார். ஒன்றும் எழுதவில்லை. ஏனோ?
பதிலளிநீக்குJayakumar
உங்கள் இரண்டாவது கேள்விக்கு நானும் பதில் சொல்லி இருக்கின்றேன்.
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குகந்தன் அருள் இருந்தால் கவலை எல்லாம் பறந்தோடி விடும்.
நீக்குபேப்பரில் வடை, எண்ணெயில் வடை... அனுபவபூர்வமான அட்டகாசமான உதாரணத்துடன் கூடிய பதில். சூப்பர்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇரண்டாவது அக்காதான் என்னைத் தூக்கிவந்து........ இந்த வாழ்க்கையில் நம்மூது அன்பு செலுத்தி, நமக்கு நம் இந்த வாழ்க்கைக்கு பல்வேறு நபர்கள் சிறிய சிறிய காரணிகளாக இருந்து நம் ஏற்றத்திற்கு இதவியிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நன்றி கூறுவது சாத்தியப்படுமா?
பதிலளிநீக்குஉண்மையான வார்த்தைகள். நன்றி.
நீக்குபோட்டியில் கலந்துகொள்வது முக்கியம்தான். ஆனால் ஐடியா வரணும் நானும் கலந்துக்கிட்டேன் என்று எதையாவது அனுப்பிடக்கூடாது இல்லையா?.
பதிலளிநீக்குநியாயம்தான்!
நீக்குநமது முன்னோரின், சிவன் ராத்திரி வணக்க முறைகளை இந்த ஈஷா மையம் மாற்றி விட்டது.
பதிலளிநீக்குஅதன் வழியே மக்களும் எல்லாம் சுகபோக மயக்கம்.
அங்கு கூத்தாடன்களுக்கும், கூத்தாடிகளுக்கும் என்ன வேலை ???
தனிநபர் வருமானத்தை பெருக்கி விட்டு மக்கள் காலம் முழுவதும் ஏழையாகவே வாழ்கிறார்கள்.
ஜக்கி காலில், ஜாக்கி கட்டி டான்ஸ் ஆடுகிறார் இதைக் காண மக்களும் செலவு செய்கிறார்கள்.
இந்த நாடு பி.எஸ்.வீரப்பா சொன்ன வழியே செல்கிறது.
வீரப்பன் சாகாமலிருந்தால் ஜக்கி இப்படி ஆடிக்கொண்டு ராஜபோகமாக வாழமுடியாது.
சன்யாசி என்று சொல்பவன் வெளிநாடுகளில் இளம் பெண்களோடு உலாவுகிறான்.
இதைக் கண்டும் மாறாத மக்களை ஈசன் தான் நெற்றிக்கண் திறந்து பொசுக்க வேண்டும்.