11.3.25

சின்ன கதை ; அருண் - ஸ்ரீராம்

 ஜோதி கடைசி வரை தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை

​ஆனால் இவளால் அப்படி இருக்க முடியவில்லை.  ஜோதி இவள் தங்கை. 

​"ஏய் சனியனே தடிமாடு....  என்ன அங்கே பராக்கு பார்த்துக்கிட்டு நிக்கறே..  பகல்லயே தூக்கமா?  கனவா?  முண்டம்... இங்க வந்து வேலையை கவனி...  தேய்ச்ச பாத்திரமெல்லாம் அப்படியே  கிடக்குது பாரு..  எடுத்து​ அடுக்கு..​"

அம்மா ற்குள் மூன்றாவது முறையாக குரல் கொடுத்த போதும் கோபம் வரவில்லை புன்னகை தான் வந்தது. அந்த புன்னகை அம்மாவின் கோபத்தை இன்னும் கிளறியது​.

சொல்லப்போனால் இப்போது இரட்டிப்பு வேலை.

"என்னம்மா இப்போ...  எதுக்கு கத்தறே...  செஞ்சுகிட்டுதானே இருக்கேன்"  என்று எப்போதும் இவள் பதில் சத்தம் விடும்போதெல்லாம் அம்மா கொஞ்சம் அடங்கிப் போவாள்.  இரண்டு நாட்களாய் இந்த புன்னகை அவள் கோபத்தை விசிறி விட்டு விடுகிறது..

நேற்று இப்படிதான் 

கோபி இவள் கோலநோட்டை எடுத்து கையில் வைத்துக் கொண்டு இவளை பார்த்துக்கொண்டே ஒவ்வொரு பக்கமாகக் கிழித்து பறக்க விட்டபோது புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சாதாரணமாக இந்நேரம் கோபியின் முதுகு பழுத்திருக்க வேண்டும்.  

அவனுக்கு சுவாரஸ்யம் போய் அதைக் கீழே போட்டு விட்டுப் போய் விட்டான்.

துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தவள் அரவம் கேட்டு நிமிர்ந்தாள். 

அப்பா. 

வழக்கம்போல இவளை முறைத்தபடியே கடைக்கு கிளம்பிப் போனார்.  இனி அவர் வர இரவாகும்.

மத்தியானம் அம்மா மறுபடி கத்தினாள்.

""ஏண்டி சனியனே...   இன்னும் இரண்டு நாளைக்கு மாவு இருக்கு..  அதுக்குள்ற ஏன் ஊறப்போட்டு அரைக்கிறே...   அதுவும் இவ்வளவு..  என்ன கேக்க மாட்டியா...   முப்பத்திரண்டு வயசாறது...   தானாவும் தெரியாது..  சொன்னாலும் புரியாது..."

தலைகுனிந்து புன்னகைத்தாள்.

ரவு 2 மணி இருக்கும்.  

தெருவில் சின்ன ஓசை கேட்டது.

சப்தமில்லாமல் வெளியே வந்து கதவைச் சாத்தினாள்.

 தெரு முனையில் இருட்டில் அருண் வண்டியோடு காத்திருந்தான்...  அன்புடன் தோள் அணைத்தான்.

"கட்டின புடவையோடதான வர்றே?  செயின், வளையலை கழட்டி வச்சுட்டே இல்ல...  வேற ஒண்ணும் வேணாம்..  வா..  " 

59 கருத்துகள்:

Kamala Hariharan சொன்னது…

காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கமலா அக்கா... வணக்கமும், நன்றியும்,

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

சின்னகதை அருமையாக உள்ளது.

வீட்டில், தன் அன்றாட செயல் மாற்றத்தில் வித்தியாசம் காட்டி விட்டு, இறுதியில் தனக்கு பிடித்த துணையுடன் அவள் வாழ வெளியேறுவதை நச்சென ஒரு சிறுகதையில் உணர்த்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

ஏதேனும் பத்திரிக்கை சிறுகதை போட்டிகென எழுதிய கதையோ? (வார்த்தைகளை அளவுடன் அழகாக செதுக்கி வடிவமைத்திருக்கிறீர்களே அதனால் கேட்டேன்.:)). ) பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி கமலா அக்கா. 

போட்டிக்கெல்லாம் அல்ல. 

ஒரு முயற்சி.  அஷ்டே.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

/ஜோதி கடைசி வரை தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை

​ஆனால் இவளால் அப்படி இருக்க முடியவில்லை. ஜோதி இவள் தங்கை. /

அப்படியானால், இதே நிகழ்வு அந்த தங்கை ஜோதி மூலமாகவும் அந்த வீட்டில் நடந்துள்ளதா? அதனால்தான் பெற்றோர்கள் கடுமையான சுபாவமாக நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்களா?

என் சந்தேக வினாக்கள் தங்கள் கதையை விட பெரிதாக வந்து விட கூடாதென்பதிலும் , கவனம் கொள்கிறேன்.

ஆனாலும், எப்படித்தான் இவ்வளவு சிறிதாக ஒரு கதை புனைந்தீர்களோ.? மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan சொன்னது…

ஓ.. சூப்பர். 👌.

ஸ்ரீராம். சொன்னது…

சரியான அனுமானம். நன்றி கமலா அக்கா.

// என் சந்தேக வினாக்கள் தங்கள் கதையை விட பெரிதாக வந்து விட கூடாதென்பதிலும் , கவனம் கொள்கிறேன்.//

ஹா.. ஹா.. ஹா...

// ஆனாலும், எப்படித்தான் இவ்வளவு சிறிதாக ஒரு கதை புனைந்தீர்களோ.? //

சொல்கிறேன்!

ஸ்ரீராம். சொன்னது…

__/\__

நெல்லைத்தமிழன் சொன்னது…

இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு பெற்றோர் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறார்கள் இல்லையா? வீட்டுச் சூழ்நிலையும்.

சிறிய கதை.. பலதை அனுமானிக்க வைக்கிறது. நன்று

நெல்லைத்தமிழன் சொன்னது…

அருணிடன் இவள் சென்றதும், பெற்றோர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். இலவசமாக வீட்டின் வேலைகளைச் செய்துவந்தவள் போயிட்டாளே, இனி அத்தனை வேலையும் நம் தலையில் விழுந்திடுமே என்று.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி நெல்லை.

ஸ்ரீராம். சொன்னது…

அப்படியும் ஒரு கோணம் கொள்ளலாம்.

கோமதி அரசு சொன்னது…

அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கோமதி அக்கா... வணக்கம்.

கோமதி அரசு சொன்னது…

கதை மிக அருமையாக சொல்ல வேண்டியதை சொல்லி விட்டது.
முதிர் கன்னிக்கு வீட்டில் கிடைக்காத அன்பை வெளியே தேடி விட்டார்.

//இரண்டு நாட்களாய் இந்த புன்னகை அவள் கோபத்தை விசிறி விட்டு விடுகிறது..//

அவளின் புன்னைகைக்கு காரணம் தெரிந்து விட்டது. இன்னும் மூண்ரு நாள் தானே என்று எல்லா திட்டுக்களையும் புன்னகையாக ஏர்று கொண்டு இருக்கிறார்.

வீட்டில் யாரும் அன்பாய் பேரை சொல்லவில்லை, அன்புடன் அழைத்து செல்பவரும் (அருணும்) பேரை சொல்லவில்லையே!

கோமதி அரசு சொன்னது…

காலை அவசரத்தில் அடித்த பின்னூட்டத்தை (மூன்று, ஏற்று ) பிழைகளை பொருத்து கொள்க.

ஸ்ரீராம். சொன்னது…

ஆம். நன்றி கோமதி அக்கா.

ஸ்ரீராம். சொன்னது…

பெயர் முக்கியமா என்ன!

ஸ்ரீராம். சொன்னது…

இதை என்னிடம் சொல்லி வெட்கப்படுத்தாதீர்கள்.  எனக்கு இது சகஜமோ சகஜம்!

:))

கோமதி அரசு சொன்னது…

அருண் ஜேம்ஸ்பாண்ட் போல நிற்கிறார் படத்தில்.
அதுவும் பொருத்தம் தான் ஜோதியை மீட்டு செல்கிறார் அன்பு எனும் சோலைக்கு இல்லையா?

ஸ்ரீராம். சொன்னது…

வெவ்வேறு படங்கள் முயற்சித்து, எதுவும் நான் நினைத்தவண்ணம் வராமல்,  கடைசியில் சில்லவுட் முறையில் இந்தப் படத்தை இரவு ஒன்பதரைக்கு சேர்த்தேன்!!! 

கதை தயாராகி ஒரு வாரம் ஆகிறது!

ஜீவி சொன்னது…

அருண்? ஆரானும் அது?

அட! . யார் அந்த அருண்?

இவ்வளவு எழுதிய கதாசிரியர் அந்த அருண் யாரென்று எழுதியுருந்தால் இப்படி ஒரு மண்டைக் குடைச்சல் ஏற்பட்டிருக்காதே!..

இந்தக் கேள்வி மனசில் எழுந்தால் விட்ட இடத்திலிருந்து கதையை வேறொரு கோணத்தில் தொடரலாம்.

அடுத்த செவ்வாயில் வாய்ப்பு கிடைத்தால் தொடரும் கதையைப் பிரசுரிக்கலாம்.

எபி வாசகர்கள் முயற்சித்தால் கதைகள் எழுத எபி தளம் ஒரு பயிற்சிப் பட்டரையாகவும் அமையும்.

அது வரை அருண் யாரென்று கதாசிரியர் சொல்லாதிருக்க வேண்டும் என்பதே ஒரே கண்டிஷன்.

செய்யுமா எபி?

துரை செல்வராஜூ சொன்னது…

முருகன் திருவருள் முன் நின்று காக்க..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஸ்ரீராம், கதை சூப்பர்.....எனக்குக் கதை பிடித்திருக்கு...ஏனென்றால்....அது வேறு ஒரு கதை கரு கிட்ட்த்தட்ட இது போல ஆனால் அதில் முடிவு வேறாக இருக்கும்... அப்புறம் என் தளத்தில் வரும்....

ஜோதியின் மேலுள்ள கோபம் இப்ப இவளிடம் திரும்பியிருக்கிறது......புரிந்தது.

இரண்டு நாட்களாய் இந்த புன்னகை அவள் கோபத்தை விசிறி விட்டு விடுகிறது..//

செய்யப் போவதற்கான நடவடிக்கைகள். இனி இங்கு இருக்கப் போவதில்லை என்றான பிறகு...அமைதியாகப் பார்த்துக் கொள்கிறாள் இவள். ஒரு வேளை ஜோதி வெளிப்படையாகச் செய்திருப்பாள் என்பதும் தோன்றுகிறது.,

அழகா வார்த்தைகள் கொஞ்சமாக....

குமுதம் ஒரு பக்கக் கதை போல!!!

நல்லாருக்கு ஸ்ரீராம்.

கொஞ்சம் வேலைப் பளு. கதை என்று பார்த்ததும் வந்துவிட்டேன்

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

உண்மையில் அவனுக்கும் பெயர் வைக்கவில்லை.  கதைத் தலைப்புக்காக சுயநலமாக அவனுக்கு அருண் என்று பெயரிட்டேன்!

சொல்வது கொஞ்சம்.  சொல்லாதது நிறைய.  அதுதான் உத்தி.  சொல்ல ஒன்றுமில்லை.  யாரும் இதைத் தொடர்வதில் ஆட்சேபமில்லை.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க செல்வாண்ணா..  வணக்கம்.

ஸ்ரீராம். சொன்னது…

இதை அரைப் பக்க கதை, அல்லது கால் பக்கக் கதை என்று சொல்லலாம் கீதா... 

நன்றி.  மெல்ல வாருங்கள்.

துரை செல்வராஜூ சொன்னது…

இப்படியெல்லாம் எழுதுதற்கு தயங்குகின்றேன்... அதனாலேயே சற்று பின்னடைவு...

ஜோதி அருண் எங்கிருந்தாலும் வாழ்க.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி செல்வாண்ணா...   

தவறான புரிதல்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருண் யார்...? தொடர்? நிறைய விஷயங்கள் முடிவில்,,,அப்பெண்ணிற்கு ஒரு நல்ல காலம்....நெகட்டிவாக இருக்கலாமோ என்றும் தோன்றும்.... அதே சமயம் பரவால்ல தோளோடு அணைத்து நகையில்லாமல்...கட்டின துணி...ஆனால் இதுவும் நாடகமாக? ஏமாற்று வேலையாக...

படம் நல்லாருக்கு அருண் துப்பறியும் ஆளாக இருப்பானோன்னு!!!ஹிஹிஹிஹி

இப்படி நிறைய ஓடியது....

கீதா




ஸ்ரீராம். சொன்னது…

தொடருங்கள் கீதா.. 

எல்லா சாத்தியங்களையும் 

இங்கேயே,

நீங்களே

சொல்லி விட்டால் எப்படி!

Jayakumar Chandrasekaran சொன்னது…

அரை பக்க கதை. "முடிவற்று நீளும் கோடை" என்று யுவன் சந்திரசேகர் எழுதிய கதை- "நான் படிச்ச கதை"- நினைவில் வந்தது. தேவர் மகனை காதலித்த பிராமண பெண் பானு அக்காவின் கடைசி இரவு -தயிர் சாதம்- நினைவில் பளிச்சிட்டது.

ஆக ஓடிப்போக வயது தடையில்லை. ஜோதியின் காதல் சட்டென்று உருவானதில்லையே. வளர சில மாதங்களாவது ஆகியிருக்கும். வீட்டில் உள்ளவருக்கு இந்தக் காதல் தெரியாமலா போகும். அவர்கள் ஊக்குவித்தார்களா? தெரிந்திருந்தும் எப்படியாவது ஒரு வாழ்க்கை துணை அமைந்தால் சரி என்று விட்டு விட்டார்களா?

'அது தான் நான் முன்னமேயே சொல்லிட்டேனே? இது கதை. கதை என்றால் எப்படி வேண்டுமானாலும் போகும்.' அப்படிங்கிறீர்களா? கரெக்ட்.

இந்தக் கதை நேற்று இரவு தீடிரென்று எழுந்த ஞானோதயத்தில் ஒரு இம்பல்சில் எழுதப்பட்டது என்று தோன்றுகிறது. இது போன்று ஒவ்வொரு திங்கள் இரவும் ஞானோதயம் ஏற்ப்படட்டும்.

Jayakumar

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி JKC சார்..   நல்ல புரிதல். 

எதிரே தெரியும் பாதை எங்கு வேண்டுமானாலும் முடியலாம், இல்லை தொடரலாம், இல்லை எதிர்பாராத திசையில் திரும்பலாம்!

வியாழனில் சிறு விளக்கம் தருகிறேன்.  

ஆனால் ஒரு விஷயம்...     இவள் ஜோதியல்ல!

Jayakumar Chandrasekaran சொன்னது…

​ஆமாம் 'ஜோதியின்' என்பதை 'ஜோதியின் அக்காவின்' என்று மாற்றிக்கொள்ளவும்.

மாதேவி சொன்னது…

"சிறிய கதை" நல்ல கதை.
இரண்டு நாட்களாக புன்சிரிப்புடன் நடந்து கொள்வது கதை படிக்கும்போதே முடிவை கோடி காட்டியது.

அணைத்துக்கொண்ட அருண் "கட்டிய புடவையுடன்தானே வந்தாய்" என கேட்பது உழைத்துக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையை தருகிறது.

ஸ்ரீராம். சொன்னது…

மாற்றிக் கொண்டால் போச்சு!

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி, உங்கள் நம்பிக்கைக்கு!

KILLERGEE Devakottai சொன்னது…

முன்பு குமுதத்தில் ஒரு பக்க கதை வரும் அதைப்போல இருக்கிறது சிறப்பு ஜி

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி ஜி.

Geetha Sambasivam சொன்னது…

மண வாழ்க்கை அமைதியாக அமையட்டும், நெடுங்காலம் வாழட்டும்.

Geetha Sambasivam சொன்னது…

அப்பா,அம்மாவுக்கு ஏற்படப் போகும் அதிர்ச்சி! சகோதரனின் மனோபாவம் இதை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்.

ஸ்ரீராம். சொன்னது…

​வாழ்க...!

ஆனால் இதைத் தொடரும் எண்ணம் சிலருக்கு இருக்கிறது.. உதாரணமாக ஜீவி ஸார், கீதா ரெங்கன்...

:))

ஸ்ரீராம். சொன்னது…

பழகி இருக்கும்!

ஜீவி சொன்னது…

தொடர்வதற்கு ஹேதுவாக வாசகர்களிடம் கோரிக்கை வைக்கச் சொல்லி காலையில் எபியிடம் கேட்டுக் கொண்டதோடு சரி. அதற்கு நேரிடையான பதில் வரவில்லை. அதோடு சரி.

பாதிக் கதையை நான் எழுத மீதிக்கதையை எழுத வாசகர்களிடம் கேளுங்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கூட எபியிடம் கேட்டுக் கொண்டேன். அப்பொழுதும்
இந்த மாதிரியான முயற்சிகளில் எபிக்கு ஆர்வம் இல்லாதிருந்தது இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

ஜீவி சொன்னது…

கீதா ரெங்கன் -- பானுமதி சகோதரிகள் ஒரு தொடரை மாற்றி மாற்றி எழுதியதற்கும் நான் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு.

பாதிக் கதை இங்கே --
மீதிக் கதையை எழுதுங்களேன்
என்று ஒரு போட்டி மாதிரி கேட்டுக் கொள்வது நான் சொல்வது.

ஸ்ரீராம். சொன்னது…

முடியுமோ, முடியாதோ என்று வெளியில் சொல்லாமல் எழுத நினைத்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

மறுபடியும் முயற்சிப்பதில் தவறில்லை என்றாலும், பாதிக்கதை, மீதிக்கதை எல்லாம் ரொம்ப முன்னரே இங்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராம். சொன்னது…

​// ஹேதுவாக //

இந்த வார்த்தை எங்கிருந்து நம் வழக்கத்துக்கு வந்தது? வேறு எங்கெங்கு உபயோகித்திருக்கிறார்கள்?

ஜீவி சொன்னது…

ஹேதுவாக என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தை.
ஹேதுவாக என்பதைத் தமிழில் ஏதுவாக என்று எழுதும் வழக்கம் இருந்தது.

அதன் பொருட்டு என்ற அர்த்தம்
கொள்ளலாம். அதற்கு வசதியாக என்ற அர்த்தத்திலும் சில இடங்களில் இந்த வார்த்தை பொருந்தும்.

ஜீவி சொன்னது…

கல்யாணத்தில் பாணிக்கிரஹணம் பொழுது ஹேதுவாக என்ற வார்த்தையோடு அந்த மந்திரம் உச்சரிக்கப்படுவதைக் கேட்டிருக்கிறேன். மணப்பெண்ணின் வலதுகை ஐந்து விரல்கள் மொட்டு மாதிரி குவிந்திருக்க அந்த ஐந்து விரல்களை மணமகன் தன் வலக்கை விரல்களைக் குவித்துப் பற்றி வலம் வரும் பொழுது பாணிக்கிரஹண மந்திரங்களை சாஸ்திரிகள் உச்சரிப்பார்கள். தேவர்கள், ரிஷிகள்,,
பித்ருக்கள் எல்லோரும் மகிழ்ந்து ஆசிர்வதிக்கும் படியாக
நல்ல சந்ததிகளை இந்த மணமக்கள்
பெற்றுக் கொள்வதற்கு இந்த பாணிக்கிரஹணம் ஹேதுவாக இருக்கிறது என்கிற மாதிரி மந்திரத்தின் அர்த்தம் அமைந்திருக்கும். இந்த இடத்தில் வரும் ஹேதுவாக என்பதற்கு காரணமாக என்று பொருள் கொள்ளலாம்.

ஜீவி சொன்னது…

கல்யாணத்தில் பாணிக்கிரஹணம் பொழுது ஹேதுவாக என்ற வார்த்தையோடு அந்த மந்திரம் உச்சரிக்கப்படுவதைக் கேட்டிருக்கிறேன். மணப்பெண்ணின் வலதுகை ஐந்து விரல்கள் மொட்டு மாதிரி குவிந்திருக்க அந்த ஐந்து விரல்களை மணமகன் தன் வலக்கை விரல்களைக் குவித்துப் பற்றி வலம் வரும் பொழுது பாணிக்கிரஹண மந்திரங்களை சாஸ்திரிகள் உச்சரிப்பார்கள். தேவர்கள், ரிஷிகள்,,
பித்ருக்கள் எல்லோரும் மகிழ்ந்து ஆசிர்வதிக்கும் படியாக
நல்ல சந்ததிகளை இந்த மணமக்கள்
பெற்றுக் கொள்வதற்கு இந்த பாணிக்கிரஹணம் ஹேதுவாக இருக்கிறது என்கிற மாதிரி மந்திரத்தின் அர்த்தம் அமைந்திருக்கும். இந்த இடத்தில் வரும் ஹேதுவாக என்பதற்கு காரணமாக என்று பொருள் கொள்ளலாம்.

ஸ்ரீராம். சொன்னது…

வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து கொள்ளக்கூடியதே..   

ஆனால் எங்கிருந்து வந்தது, எங்கெங்கே அதிகம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது? யார் அதிகம் உபயோகிப்பார்கள்?

Raman சொன்னது…

இந்தக் கதையின் முன்னும் பின்னும் ஆக நிகழ்ச்சிகளை ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு சின்னஞ்சிறு கதையாக அடுக்கிக் கொண்டே போனால் அது சுவாரசியமாக வரக்கூடும்.

Raman சொன்னது…

சி சி க நன்றாக இருக்கிறது என்று சொல்ல மறந்தேன்.

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம்.  ஏகப்பட்ட சாத்தியக்கூறுகள்...

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி.

ராமலக்ஷ்மி சொன்னது…

புன்னகைக்குப் பின்னாலிருந்த பொறுமை, பொறுமைக்குப் பின்னால் இருந்த காரணம் இவற்றை இறுதியில் வெளிக் கொண்டு வந்த விதம் அருமை. கச்சிதமான சிறுகதை.

ராமலக்ஷ்மி சொன்னது…

கச்சிதமான *சின்ன கதை :) !

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி ராமலக்ஷ்மி.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி ராமலக்ஷ்மி.