18.3.25

சிறுகதை : வயசுப்பையன்  - ஸ்ரீராம்

வயசுப்பையன்   
-  ஸ்ரீராம் -

ண்ணன் உள்ளே நுழைந்தபோது மாமா, மயினி, முத்து மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"வாடா மருமகனே..... என்ன அது..  அம்மா கொடுத்து விட்டாளா?"  இடது கையை நீட்டியபடி மாமா அட்டகாசமாக வரவேற்றார்.

அம்மா கொடுத்த பையை அவர் கையில் கொடுத்து விட்டு நாற்காலியில் அமர்ந்தான் கண்ணன்.  அவன் பார்வை அவர்கள் தட்டிலும் பாத்திரத்திலும் பதிந்தது.  

தோட்டத்திலிருந்து பறித்த வாழை இலையில் ஆவி பறக்க பரிமாறி இருந்தாள் மயினி.

ஆப்பம், மட்டன் குருமா.

'சாப்பிடு கண்ணா.."  மயினி குரல் கொடுத்தாள்.  மாமன் மனைவியை என்னவோ இவனும் இவன் தம்பியும் மயினி என்றுதான் அழைப்பார்கள்.  அம்மா அழைப்பதைப் பார்த்து வந்த பழக்கம்.

"வேண்டா மயினி...   "

"அட..  சாப்பிடு..  சூடா குருமா போட்டு ஒரு ஆப்பம் சாப்பிடு"

"இல்ல மயினி .. வேணாம்...  முத்து ஸ்கூலுக்கு போவலையா?  பிரதீப் எங்கே?"

"முத்துவுக்கு பரீட்சை நடக்குது இல்ல?  இன்னிக்கி லீவு..  நாளைக்கி கணக்கு பரீட்சை..  என்ன செய்வானோ.."

"பிரதீப்?"

"அவன் அப்பவே கிளம்பி வெளில போயிட்டான்.  நாம சொல்ற  வேலையைச் செய்யறாங்களோ இல்லையோ..  அவங்க வேலையை கரெக்ட்டா செய்துக்கறாங்க"

மயினி எழுந்து, கைகழுவிக்கொண்டு ஒரு தட்டில் ஒரு ஆப்பம் போட்டு அதன் அருகே குருமா ஊற்றி இவன் கையில் கொடுத்து விட்டு மறுபடி சாப்பிட அமர்ந்தாள்.

மாமா ஃபோனில் யாரிடமோ பேசிக் கொண்டிருக்க, மயினி முத்துவிடம் ஏதோ பாட சம்பந்தமாய் கேட்டுக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.  முத்து தன்னுடைய தட்டிலேயே கவனமாயிருந்தான்.

ஹாட் பாக்ஸிலிருந்து ஆப்பங்கள் மாறி மாறி தட்டுகளுக்குச் செல்ல,  ஒரு ஆப்பத்தை விரைவாக முடித்து விட்ட கண்ணன், சிறிது தயங்கி அமர்ந்திருந்தான்.  குருமா ருசி நாவில் சுற்றி வந்தது.  டிவியில் அது பாட்டுக்கு ஏதோ ஓடிக்கொண்டிருந்தது.  அதைப் பார்ப்பவன் போல கொஞ்ச நேரம் கடத்தினான் முத்து.

பின்னர் தான் எழுவதை அவர்களுக்கு கவனப்படுத்தும் வகையில் நாற்காலியைத் தள்ளி சத்தம் செய்துகொண்டு எழுந்தான்.

"பார்த்துடா கண்ணா..   தேய்க்கற இடத்துல தட்ட போட்டுடு..  பொன்னி வருவா.."

"சரி மயினி..."  அணைக்கப்பட்ட அடுப்பின்மீது ஒரு பாத்திரத்தில் குருமா வைக்கப்பட்டிருந்தது.  வாசம் வீசியது.

'ஒண்ணு மட்டுமா வச்சு கொடுப்பாங்க..  இரண்டு ஆப்பமாவது கொடுத்திருக்கலாம்'  கண்ணனின் நாக்கு அரற்ற, செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினான்.  வீட்டில் இட்லியும் நேற்று வைத்த மீன் குழம்பும் இருக்கும்.

"நேத்து வச்ச குழம்பாம்மா...   இன்னிக்கி சட்னி எதுவும் அரைக்காலியா?"  காலை அம்மாவிடம் கேட்டது நினைவுக்கு வந்தது.

"வரேன் மயினி..  வர்றேன் மாமா...   வர்ரேண்டா முத்து...   பரீட்சை  நல்லா எழுது"

சைக்கிளை உந்தி ஏறி அமர்ந்தான் கண்ணன்.

"அம்மா..  மாமா கைல கொடுத்துட்டேன்..."  வீடு திரும்பி வந்து சட்டையைக் கழற்றிக் கொண்டே சொன்ன கண்ணனின் கண்கள் சமையலறையைத் துழாவின.  பாத்திரங்கள் கழுவி கவிழ்த்து வைக்கப்பட்டிருப்பதை கவனித்தான்.  வயிறு சூடானது.

"தெரியுண்டா கண்ணா.  மாமா ஃபோன் செஞ்சாரு...  ஆப்பமும் பாயாவும் சாப்பிட்டியாமே...  சொன்னாரு..."

"பாயா இல்லம்மா..   குருமா...   நல்லா இருந்துச்சு..  ஆனா அம்மா.."

அவனைத் தொடர்ந்து பேசவிடாமல் இடைவெட்டினாள் அம்மா.

"ஏதோ ஒண்ணுடா கண்ணா..  சாப்பிட்டே அவ்வளவுதானே?   மாமா கிட்ட பேசிட்டு உனக்கு வச்சிருந்த இட்லியையும் மீன் குழம்பையும் - பொன்னி பாத்திரம் தேய்க்க வந்தா...- அவ கிட்ட கொடுத்துட்டேன்" 

கண்ணனுக்கு இனம் தெரியாத ஒரு கோபம் 'சுள்' என வந்தது. 

"பொன்னி இங்க வந்துட்டுதானே மாமா வீட்டுக்கு போறாங்க..   பையையும் அவங்க கிட்ட கொடுத்தனுப்பி இருக்கலாம்ல.."

-----------------&&&---------------------

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\



\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

கதை அங்கு மேலே முடிந்து விடுகிறது.  ஒரு கற்பனை......

ஜீவி ஸார் பின்னூட்டம் : " எனக்கு என்னவோ மனம் இன்னும் கொஞ்சம் யோசிக்கிறது.  கதையை இன்னும் கொஞ்சம் வளர்த்தலாம்.  மாமாக்கள் பாசமானவர்கள்...  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  இதில் வேறு கதை கிடைக்கலாம்.  எபி வாசகர்கள் வேறு யாராவது இதை தொடரலாம்.  மாற்றி முயற்சிக்கலாம். "

இதை எதிர்பார்த்து முடிவை கொஞ்சம் நீட்டிக்கிறேன்!

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

ண்ணனுக்கு கோபம் வந்தது. 

"பொன்னி இங்க வந்துட்டுதானே மாமா வீட்டுக்கு போறாங்க..   பையையும் அவங்க கிட்ட கொடுத்தனுப்பி இருக்கலாம்ல.."

"நல்லா இருக்கே..  அவ்வளவு பணத்தை அவ கைல கொடுத்து அனுப்ப முடியுமோ...   நல்லவங்களையும் நாமளே கெட்டவங்களாக்கக் கூடாது..." என்றபடியே உள்ளே போனவள், 

ஒரு இரண்டடுக்கு  கேரியரை எடுத்து வந்தாள்.

"நீ இந்தப் பக்கம் போனதுமே பிரதீப் வந்து இதைக் கொடுத்து போனான்.  உனக்கு பிடிக்கும்னு மாமா கொடுத்தனுப்பி இருக்கார்....   அண்ணன் கிட்ட போன்ல சொன்னேன், இங்கயும் கொடுத்து அங்கயும் கொடுக்காதன்னு சொன்னேன்... தட்டை எடுத்துக்கோ...  எலே...  எலே..  பறக்காவெட்டி..  கால கைய அலம்பிட்டு வந்து உட்காருடா..."

"எல்லாம் சுத்தமாத்தான்மா இருக்கு.."

- நிறைவு -

**********************************************************************************

====================================================================

இதை அதாவது 'வயசுப்பையனை' மேலே சொன்னபடி செல்வாண்ணா கதை போல பாஸிட்டிவ் கதையாகக் கூட கொள்ளலாம்!

சரி..  இதையே,  'சின்ன கதையாக இருக்கு..  இன்னும் கொஞ்சம் நீட்டலாம்' என்றால் என்ன செய்யலாம்?

சரி..  வாங்க...  இப்படி தொடங்குவோம்...

காலை முதல் கண்ணன் சமர்த்தாகவே இருந்தான்.  அடங்கி ஒடுங்கி அமைதியாக வீட்டுக்கடங்கிய பிள்ளையாகவே வலம் வந்தான்.  

மதியானதுக்கு மேல் கம்பி நீட்ட வேண்டும்.  கிரிக்கெட் போட்டி இருக்கிறது.  சுந்தர் நேற்றிரவே மெசேஜ் கொடுத்து விட்டான்.  

பெட்மேட்ச்.  கிரௌண்ட் புக் செய்தாயிற்று.  இவன்தான் இவன் டீமின் பும்ரா.  'எறிபந்து வேந்தன்' என்று இவனுக்கு பட்டப்பெயர் கூட உண்டு.

"கண்ணா..  என்னடா பண்றே...  கொஞ்சம் இங்க வாயேன்.."  கண்ணன் உஷாரானான்.  இந்த மாதிரி குழைவுக்குரல் ஆபத்து.  வேலை ஏதோ காத்திருக்கிறது!

"என்னம்மா டிஃபன்?" கண்ணன் திசை திருப்ப விரும்பினான்.  நடக்கவில்லை.

"இட்லி, மீன் குழம்பு...  அது இருக்கட்டும்...  அந்தப் பையை எடு"

"மீன் குழம்பா?  நேத்து வச்சதா?  என்னம்மா இது?  சட்னி எதுவும் இல்லையா?"

"நேத்து வச்ச மீன் குழம்புதான்டா ருசிக்கும்..  அது கிடக்கட்டும்..  இந்தப் பையைக் கொண்டு போய் பத்திரமா மாமா கைல, கவனி, மாமாவோட கைல சேர்க்கணும்..  அங்க வச்சேன், இங்க வச்சேன்னு சொல்லாத..   மயினி கைலயும் கொடுக்காத..  கைமறதியா எங்கயாவது வச்சிடுவா...   இப்படி சொன்னேன்னு மயினி கிட்டயே போட்டுக் கொடுக்காத...   தப்பாயிடும்.  பக்குவமா நடந்துக்கோ...  புரிஞ்சுதா...  ரூவா மேட்டரு...  ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னு உன்னை தோலுரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவார் அப்பா" 

"சாப்பிட்டு போறேனே..."

"வந்து சாப்பிடலாம்..  அவசரம்..  கிளம்பு..."

"அப்போ வெங்காயம் பூண்டு சட்னி அரச்சு வை..  வர்றேன்.."   - முறைப்புடன் கிளம்பினான் கண்ணன்.  

சைக்கிள் வாங்கி கொடு என்று கேட்டதால் வந்த வினை.  என்ன வேலையாயிருந்தாலும் இவன் தலையில்தான் விடியும்...

வழியில் சுந்தர் எதிர்ப்பட்டான்.
"டேய்..  எங்கடா போறே...  மதியம் மேட்ச் இருக்குன்னு சொன்னேனே.."

"ஞாபகம் இருக்குடா...   ரெண்டு மணிக்குதானே?  மாமா வீட்டுக்குப் போறேன்.  பத்து நிமிஷ வேலைதான்...  வந்துடுவேன்...  கவலைப்படாதே.."

"அம்மா திட்டினா..   ஆட்டுக்குட்டி திட்டினா ன்னு வராம இருந்துடாதடா...   உன் பௌலிங்கை நம்பிதான் இருக்கோம்.."

"அட..  அவசியம் வந்துடுவேண்டா,,,  வராம இருப்பேனா?"  பாரில் நின்று கொண்டிருந்தவன், மீண்டும் ஸீட்டில் ஏறி  அமர்ந்து சைக்கிளை உந்தினான்.

மாமா வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போடும்போதே உள்ளேயிருந்து வந்த வாசனை மூக்கைத் துளைத்தது.  தன்னையும் மீறிய ஒரு ஆர்வமுடன் உள்ளே நுழைந்தான்.

-------------------------------

-------------------------------

--------------------------------------

------------------------------------------  
(முன்னர் வந்ததையே இங்கும் நிரப்பிக் கொள்ளலாம்) 

"முத்துவுக்கு பிரதீப் பாடம் சொல்லிக் கொடுப்பானா மயினி?"

அவனுக்கு சொல்லிக் கொடுக்கவே நாலுபேர் வேணும்...  அவன் எங்க இவனுக்கு சொல்ல்லித்தந்து கிழிக்க..."  மயினி அலுத்துக் கொண்டாள்.

மாமா தட்டில் இன்னும் இரண்டு ஆப்பத்தை வைத்து குருமாவால் அதை நனைத்தாள். 

தட்டுடன் பார்த்துக் கொண்டிருந்த முத்து தனக்கு வைக்கும்போது ஓரமாக குருமாவை விடச் சொல்ல வேண்டும்...  அதன்மேலே ஊற்றினால் அதன் மொறுமொறு பகுதி நனைந்து வீணாகி விடும் என்று நினைத்துக் கொண்டான்

"வயசுப்பா...  விடுப்பா..."  மாமா யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டே ஆப்பத்தை பல கை பார்த்தார்.

இவன் கண்களின் ஏக்கத்தை யாரும் பார்க்கவில்லை.

நாற்காலியை சத்தமாக பின்னுக்குத் தள்ளிக்கொண்டு...... (மறுபடி பழைய பகுதி)


- அப்புறம் இப்படி தொடரலாம்...

வழியில் மறுபடி  சுந்தரைப் பார்க்க எண்ணி இருந்தான்.  அதுவும் மறந்து போனது.

இப்போதைக்கு கிரிக்கெட் அவன் மனதிலேயே இல்லை.

வழியெல்லாம் மனது அரற்றிக் கொண்டே இருந்தது.  என்ன என்று சொல்ல முடியும்?

வீடு வந்தது.

சைக்கிளை ஸ்டான்ட் கூட போட பொறுமை இல்லாமல் சுவரில் சாய்த்து வைத்து விட்டு உள்ளே நுழைந்தான்.

"அம்மா..  இனிமே மாமா வீட்டுக்கு என்னை அனுப்பாதீங்கம்மா..." என்றான் கண்ணன்.

"ஏண்டா...  மாமாவுக்கு உன்ன பிடிக்கும்.  உனக்கும் அவங்க எல்லோரையும் பிடிக்கும்...  என்ன ஆச்சு?  முத்து கூட ஏதாவது சண்டையா" 

"அதெல்லாம் ஒண்ணுமில்ல.."  முறைப்புடன் சொன்ன கண்ணனுக்கு எதை எப்படி சொல்வது  தெரியவில்லை.  விழித்தான்.  வெட்கமாகவும் இருந்தது.  பக்கி என்று நினைத்து விடுவாளோ என்று தோன்றியது.


இப்படி இன்னும் உரையாடலை நீட்டலாம், முடிக்கலாம்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


=============================================================================

சரி, சென்ற வார கதை போல சுருக்கி முயற்சிக்கவா?

நான் முயற்சிக்கவா"  பின்னூட்டத்தில் நீங்கள் யாராவது முயற்சிக்கிறீர்களா?

அம்மா மாமாவிடம் கொடுக்கச்சொன்ன பணத்தை எடுத்துக்கொண்டு மாமா வீட்டுக்கு கண்ணன் வந்தபோது அவர்கள் வீட்டில் ஆப்பமும் மட்டன் குருமாவும் வெளுத்துக் கொண்டிருந்தார்கள்

மத்தியானம் தான் நினைத்தபடி அம்மாவை சமாதானப்படுத்தி கிரிக்கெட்டுக்கு வேறு போகவேண்டும் என்பதால் இங்கு அம்மா சொன்னதைக் கேட்டு வந்திருந்தான்.  காலேஜுக்கு சைக்கிள் வேண்டுமென்று கேட்ட பலன், எல்லா வேலையும் இவன் தலையில் விழுகிறது!

மயினி இவனையும் சாப்பிடும்படி வற்புறுத்தினாள்.  இவன் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தும் ஒரு ஆப்பத்தை தட்டில் போட்டு குருமா ஊற்றிக் கொடுத்தாள்.  ( இரண்டாய் தட்டில் போடக்கூடாதோ?' - (மைண்ட் வாய்ஸ்!)
"முத்து நாளைக்கு என்ன பரீட்சை?"

"மேத்ஸ்ண்ணா.."

"பிரதீப் எங்கே?  ஆளைக் காணோம்?" 

"அவன் அப்பவே வெளில கிளம்பிப் போயிட்டான்"

சாப்பிட்டவனுக்கு இன்னும் ஒன்றிரண்டு கிடைக்காதா என்று தோன்றியது.  நாக்கு ஏங்கியது.  அவர்கள் இவனை கவனிக்காமல் சாப்பிட்டு முடித்தார்கள்.

அம்மா சொன்ன இட்லி மீன் குழம்பை சாப்பிட்டு வந்திருக்கலாம் என்று தோன்ற, மீன் குழம்பு நினைவு இழுத்தது.

வீட்டுக்கு வந்தபோது அம்மா "மாமா பேசினார்..  ஆப்பம் சாப்பிட்டியாமே...  இட்லி மீன் குழம்பை பாத்திரம் தேய்க்கற பொன்னிக்கு கொடுத்து விட்டேன்" என்றாள்.

கண்ணன் வயிறு கபகபவென்றது!

"சாப்பிட்டேன் என்று சொன்னாரே...  எவ்வளவு சாப்பிட்டேன் என்று சொன்னாரா" என்ற கேள்வி இவன் மனதுக்குள் அலறியது.

"ஏன்..   என்கிட்டே கொடுத்த கவரையும் பொன்னி கிட்டயே கொடுத்து அனுப்பி இருக்கலாமே.."  கோபத்துடன் இரைந்தான்.

"அதெப்படி..?" என்ற அம்மா, தொடர்ந்து "அதோ..  அங்க ஒரு கேரியர்ல மாமா உனக்கு ஆப்பமும் பாயாவும் கொடுத்தனுப்பி இருக்கார் பாரு..  நீ அந்தப் பக்கம் கிளம்பியதும் இந்தப் பக்கம் பிரதீப் வந்து கொடுத்துட்டு போனான்.  மாமா கிட்ட நான்தான் இங்கயும் கொடுத்தனுப்பி, அங்கயும் போடவேண்டாம்னு சொன்னேன்" 

அம்மா பேசியபடியே வாசல் பக்கமாய்ச் சென்றாள்.

===========================================================================

கதை ஒண்ணுதான்...   ஸ்ரீ அதை வெவ்வேறு விதமா பிரசண்ட் பண்ண ட்ரை பண்ணி இருக்காரு..  நீங்க என்ன நினைக்கறீங்கன்னு மனசு விட்டு -  பானுக்கா...  மனசு விட்டு - சொல்லுங்க...   ஓகே?

சரி டார்லிங்ஸ்....   இந்த வார செவ்வாய் எப்படி?

78 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. சாப்பிடு கண்ணா.." மயினி//

    எங்க வீட்டிலும் கூட சில குடும்பங்களில், அண்ணா மனைவியை, அம்மாக்கள் மன்னி என்று அழைத்திருந்தால் குழந்தைகளும் மன்னி என்று அழைப்பதியப் பார்த்திருக்கிறேன். அது போல தங்கள் அப்பாவை அப்பாவின் தங்கைகள் - அத்தைகள் அண்ணா என்று அழைப்பதை குழந்தைகளும் அப்பாவை அண்ணா என்று அழைப்பதையும் பார்த்திருக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அப்பாவை அண்ணா என்று அழைப்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன்.  தெலுங்கில் அப்பாவை நைனா என்று அழைப்பதைவிட அன்னா என்றும் அழைக்கிறார்கள்.

      நீக்கு
    2. என்னோட மன்னி அம்பத்தூருக்கே மன்னி. அதே போல் நான் எல்லோருக்குமே அக்கா. இப்போ அந்தப் பழைய குழுவெல்லாம் கலைஞ்சிருக்கும்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய செவ்வாய் கதை(கள்) அருமை. ஒரு கதை அதைத் தொட்டும், தொடர்ந்தும் என பின்னப்பட்ட பல கதைகள் என அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். நல்ல முயற்சி. ரசித்தேன்.

    மாமாவிடம் கொடுத்தனுப்பிய அந்த பணம் எதற்காக என்பதை வைத்து கூட ஒரு (பல) கதை புனைந்திருக்கலாம். (அது பற்றி இந்த கதைகளில் ஏதும் சொல்லப்படவில்லையே..?) "பல கதை மன்னன்" என உங்களுக்கு பட்டமளிக்கலாம். உங்களின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.. எல்லாவற்றையும் வாசித்து விட்டீர்களா? உங்கள் வோட்டு எதற்கு?

      நீக்கு
  4. இடைவெளியில் - இருந்த கட்டம் மெசேஜ் - எனக்கும் தோன்றியது என்னடடா கதை எதுவும் முடியலை எதுவும் சொல்லவில்லையே கதைக்குள்...கதை என்ன சொல்லப் போகிறது இன்னும் எழுதியிருக்கலாமோ? இப்படி விட்டு மீண்டும் தொடரப் போகிறாரோ, நம்ம ஸ்ரீராம் என்று தோன்றியது. இருங்க இன்னும் கீழ வாசிக்கவில்லை...ஜீவி அண்ணா அந்தக் கட்டம் வரைதான் வந்திருக்கிறேன்.

    மாமா ஃபோன் பேசிக் கொண்டிருந்ததால் மருமகன் எழுந்து போனதைக் கவனிக்கலை....ஃபோன் பேசி முடித்துவிட்டு வந்ததும் என்னது இப்படி எந்திச்சு போயிட்டான் சரியா சாப்பிடாமன்னு கேட்கலையா? ஃபோன் போட்டு கூப்பிட்டிருப்பாரோன்னு தோன்றியது.

    சரி அம்மா கொடுத்துவிட்ட டப்பா என்ன? இட்லியும் நேத்து வைச்ச மீன் குழம்புமா?

    கீதா





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இடத்தில கதை முடியவில்லை என்று சொல்ல முடியாது கீதா....  ஒன்று, இவன் மறுபடி இன்னும் போடுங்க என்று கேட்டிருக்க வேண்டும்.  அல்லது அவர்கள் தானாகவே போட்டிருக்க வேண்டும்.

      மேலும் அந்த இடத்தில இந்த இடத்தி(லும்)ல் கதை முடிந்தது என்று சொல்வதற்கு ஒரு டிஸைன் போட்டிருக்கிறேன் பாருங்கள்...!!!!!

      நீக்கு
  5. "நீ இந்தப் பக்கம் போனதுமே பிரதீப் வந்து இதைக் கொடுத்து போனான். உனக்கு பிடிக்கும்னு மாமா கொடுத்தனுப்பி இருக்கார்....//

    ஆங்.....இதை எதிர்பார்த்தேன்....ஹிஹிஹிஹி....

    ஓ டப்பால பணமா?

    சரி இப்ப அடுத்த முடிவு என்னன்னு பார்க்கிறேன் எந்த முடிவு நல்லாருக்குன்னு சொல்லறேன் இருங்க,...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஓ டப்பால பணமா? //

      பணமா?  ஹாங்... 

      நான் சரியாக சொல்லவில்லையோ....    அது அவன் நாக்குப் பிரச்னை!  வயிற்றுப பிரச்னை!  டீனேஜ் பையன்!

      நீக்கு
    2. அது புரியுது அவனுக்கு நாக்கு...வயசுப் பையனுக்கு நாக்குக்கு வேண்டியிருக்கும்...கொஞ்சம் இன்னும் மசாலா தூவி...ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கலாமோ, ஸ்ரீராம்?

      கீதா

      நீக்கு
    3. அப்படியும் செய்யலாம்.  இப்படி இயல்பாயும் செய்யலாம்!  இது உண்மையில் வியாழனுக்காக எடுத்து வைத்திருந்த ஒரு உண்மைச் சம்பவம்.  எனக்கும் என் நண்பனுக்கும் நடந்த உரையாடல்.

      சென்ற வார சிறுகதைப் பின்னூட்டங்களைத் தொடர்ந்து யாராவது எழுதி அனுப்புவார்கள் என்று திங்கள் கிழமை வரை காத்திருந்து ஏமாந்தபின், வியாழனை செவ்வாயாக்கி விட்டேன்!

      ஒன்னொரு விஷயம்  முன்பு ஒரு தலைப்பு கொடுத்திருந்தேன்.  ப்ரஹஸ்பதியில் சோமன் என்று..   அதைப் பற்றி யாருமே ஒன்றும் கேட்கவுமில்லை, சொல்லவுமில்லை!

      நீக்கு
    4. "நல்லா இருக்கே.. அவ்வளவு பணத்தை அவ கைல கொடுத்து அனுப்ப முடியுமோ... நல்லவங்களையும் நாமளே கெட்டவங்களாக்கக் கூடாது..." என்றபடியே உள்ளே போனவள், //

      இந்தப் பகுதி முடிவும் நல்லாதான் இருக்கு. இதைப் பார்த்தபின் தான் ஓ டப்பாவில் பணமான்னு கருத்து போட்டேன்.

      முதலில் சாப்பாடு பரிமாற்றம்தான் தோன்றியது.

      ஹையோ உங்க எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டேனோ போன வாரம்...ஜீவி அண்ணாவும் இதில் உண்டே...

      பரவால்ல ஸ்ரீராம் வியாழன் இங்கு வந்தது. இதுவும் நல்லாருக்கு.

      ப்ரஹஸ்பதியில் சோமன்//

      நினைவு இருக்கு ஸ்ரீராம். இதைப் பத்தில் கேட்க நினைத்திருந்தேன். இதன் அர்த்தம் எனக்குப் புரியலை. அதுவும் அந்த வேலைப் பளுவில் என் மைன்ட் சரியாவே வேலை செய்யலை.

      கோமதிக்கா பதிவுல கூட கருத்தை அவங்களுடைய வேற பதிவுல போட்டிருக்கேன்னா பார்த்துக்கோங்க....அக்கா அப்புறம் அதை எல்லாம் எடுத்து புதுப் பதிவுல போட்டிருந்தாங்க...அந்த ஹர்ஷர் காலம் பத்தி அவங்க சொல்லியிருட்ந்த பதிவு...

      போன வாரம் முழுவதும்....எப்படியோ போச்சு

      சரி இப்ப கேட்கிறேன் இந்த ப்ரஹஸ்பதியில் சோமன் அப்படினா என்னா?

      கீதா

      நீக்கு
    5. பிப்ரவரி 20 ம் தேதி பதிவு!   யாராவது ஏதாவது கேட்பாங்கன்னு நினைச்சேன்!   ஹிஹிஹி...  கண்ணன் கணக்கா ஏமாந்து போனேன்!

      பிரஹஸ்பதி - வியாழன்.  சோமன் - திங்கள்!

      நீக்கு
  6. ஸ்ரீராம், யுட்யூப் நிறைய பார்க்கறீங்க!!!! ஹாஹாஹாஹா....யுட்யூப் பழக்கம் தொத்திக்கிடுச்சா....இடைல இடல இப்படி இடைவேளை மாதிரி துணுக்குகள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கீதா..  வெவ்வேறு விதங்களில் இந்தக் கருவையே நீட்டி, சுருக்கி என்று முயற்சிக்கும் போது இடைவெளி விட்டு வித்தியாசப்படுத்த முயற்சித்தேன். 

      அப்படியே இடையிடையே ஜோக்ஸ் மாதிரி வந்த மாதிரியும் ஆச்சு!

      நீக்கு
    2. ஆனால் இந்த யு டியூப் விளம்பரங்கள் பற்றி ஒரு பாட்டம் குமுறணும்.  பாடல் கேட்டுக் கொண்டிருப்பேன்.  சரியான இடங்களில் கத்தரி போட்டு விளம்பரம் வரும். 

      சோதனை என்னவென்றால் பேஸ்புக்கிலும் இப்போது அப்படியே கழுத்தறுக்கிறார்கள்.

      நீக்கு
    3. ஆனால் இந்த யு டியூப் விளம்பரங்கள் பற்றி ஒரு பாட்டம் குமுறணும். பாடல் கேட்டுக் கொண்டிருப்பேன். சரியான இடங்களில் கத்தரி போட்டு விளம்பரம் வரும். // //பேஸ்புக்கிலும் இப்போது அப்படியே கழுத்தறுக்கிறார்கள்.//

      ம்ஹூக்கும்......அப்ப நாங்க?!!!!!!!!!!!!!! பழிக்குப் பழியா....ஹிஹிஹிஹி

      கதை படிக்கும் போது... எந்த வித இடையூறுகளும் (எனக்கு) இருக்கப்டாது கேட்டேளா, ஸ்ரீராம்!!!!!!!!!!!!!!!!!!

      அதனால இடையில் வந்தவற்றை ஸ்கிப்ட்! யுட்யூப்ல அதை ஸ்கிப் பண்ணுவது போல்!!!!

      இப்பதான் பார்த்தேன்...செவி கேட்காதது புன்னகை வந்தது.

      ஒயில்காரி அழகு...அனுஷ் போட்டு போரடிச்சிடுச்சோ இல்லை அவங்க பிசியோ!

      கீதா

      நீக்கு
    4. பத்திரிகைகளில் நடுநடுவே துணுக்குகள் போட்டிருப்பார்கள் அல்லவா.. அது போல... அவை விளம்பர இடைவேளை அல்ல... அப்படியே தாண்டிச் சென்று விடலாம்!

      நீக்கு
  7. இப்படி விளம்பரம் இல்லாம பார்க்கணுமா? ப்ரீமியம் கட்டுங்கன்னு சொல்லப் போறீங்களோன்னு....ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  டிஸ்டர்பிங்கா இருக்கோ...   

      இனியும் கதைகளுக்கு நடுவில் ஜோக்ஸ், துணுக்கு போடலாம்னு ஒரு ஐடியா வச்சிருக்கேனே...

      நீக்கு
    2. அப்படிப் போட்டா கதைக்குப் பொருந்திப் போறாப்ல கிடைச்சா நல்லாருக்கும். இதைக் கீழ சொல்ல நினைத்தேன் இந்தக் கருத்தைப் பார்த்ததும் தோன்றியது.

      ஒரு உதாரணம்....ஹோட்டல் சாப்பாடு....வீட்டுச் சாப்பாடு நகைச்சுவை வரும் இல்லையா அப்படி.. ஏதாச்சும் கதையின் ஒன்று துணுக்கில் வராப்ல..??

      கீதா

      நீக்கு
    3. ஊ..  ஹூம்...   எனக்கு அபிப்ராயப்பபடவில்லை!  வாராந்தரிகளில் வரும் துணுக்குகள் அவை இடம்பெறும் பக்கத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்களுக்கு சம்பந்தமாய் இருக்காது.  நீங்கள் சொல்வது போல போடலாம்.  ஆனால் தொடர்ந்து அப்படி தேர்ந்தெடுப்பது சிரமம்.

      நீக்கு
    4. ஆமாம் இதழ்களில் இடையில் வரும் தான் பெட்டிகள்...துணுக்குகள்....சரிதான் நானும் பார்த்திருக்கிறேன். இருக்கும் பைண்டிங்கில்.

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    கதைக்கு நடுநடுவே வந்த நகைச்சுவைகள் அருமை. மூன்றுமே சிரிக்க வைத்தது. ஒரு வேளை இன்று வியாழனோ என மனதுக்குள் சின்ன பொறியையும் ஏற்படுத்தியது.

    ஆயினும் இன்றைய மாற்றம் வரவேற்கத்தக்கது. தங்களது வித்தியாசமான இந்த செவ்வாய் மாற்றங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 👍👋பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றங்கள் ஏமாற்றம் அளிக்கவில்லை என்கிறீர்கள்..  சரிதானே?  சிறிய மாற்றம்.  அஷ்டே.....

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  9. எல்லா முடிவுகளையும் வாசித்தேன்...அந்தக் கிரிக்கெட் பகுதி பொருந்திப் போகிறது...வயசுப்பையன் கிரிக்கெட் ஆர்வம். மற்றதை விட அது ஓகே.

    இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேறு ஏதாச்சும் சொல்லலாமோ? ஒரு சின்ன ட்விஸ்ட்....அல்லது 'பல்பு'....

    (மட்டன்) குருமா காரசாரமா இல்லையேன்னு!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கதையைப் பொறுத்தவரை முடிவு என்பது அவன் ஏமாற்றம்தான் கீதா. 

      அவனும் கேட்கவில்லை.  அவர்களும் எக்ஸ்டரா போடவில்லை. 

      ஆனால்  நலலவர்களாகக் காட்டவேண்டி கொஞ்சம் பட்டி பார்த்தால், சின்ன ட்விஸ்ட்.. 

      ஏற்கெனவே வீட்டுக்கு கொடுத்து அனுப்பி இருக்கிறார். 

      அப்புறம் வருவது கதையை எப்படி வளர்த்துவது, எப்படி சுருக்கிக் கொடுப்பது என்பதுதான்.  அவற்றை ஒவ்வொன்றையும் வித்தியாசப்பபடுத்தவே இடையில் துணுக்குகள்.  கதை தொடர்ச்சியாக வரும் மாற்றங்கள் அல்ல!

      நீக்கு
    2. இந்தக் கதையைப் பொறுத்தவரை முடிவு என்பது அவன் ஏமாற்றம்தான் கீதா.

      அவனும் கேட்கவில்லை. அவர்களும் எக்ஸ்டரா போடவில்லை. //

      இதுவும் புரிந்தது ஸ்ரீராம். முதல் பகுதியிலேயே புரிந்துவிட்டது.

      இதையும் கீழ சொல்ல வந்தேன்...இங்கு பார்த்துவிட்டேன்...

      கீதா

      நீக்கு
  10. கதையை எப்படி சொன்னாலும் "காது கேக்காதவனை எப்படி வேணும்னாலும் சொல்லலாம் சார், அவனுக்கு கேட்கவோ போகுது" தான்.

    எப்படி எழுதினாலும் கதையின் நடை மாறவில்லை.

    பெரிய எழுத்தாளர்கள் சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், என்று அவரவர் நடையில் எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    ஒன்று மட்டும் புரிகிறது. உங்களுக்கு NV சாப்பிட ஆசை, ஆனால் சம்பிரதாயம் தடுக்கிறது. அது மறைவாக கதையில் வெளிப்படுகிறது.

    முடிச்சு இன்னும் கூட ஸ்ட்ராங் ஆக பணத்தை மறந்து வீட்டில் வைத்து விட்டு தவித்து பின்னர் அதனை கண்டு சமாதானம் ஆவதாக மாற்றி எழுதலாம்.

    இந்தக்கதையை ஒரு பத்தி கதையாக எழுதினேன்.

    முத்துவுக்கு ஆசை விடவில்லை. பணம் கொடுக்க அத்தை வீட்டுக்கு வந்தவனுக்கு அத்தை ஒரே ஒரு ஆப்பம் மட்டன் குருமாவுடன் தந்தாள். பசி அடங்காமல் வீட்டில் இருக்கும் இட்லி மீன் குழம்பையாவது சாப்பிடலாம் என்று வந்தவனுக்கு அதிர்ச்சி. அம்மா தட்டில் ஆப்பமும் குருமாவும் கொடுத்தாள். ஏறிட்டு பார்த்தவனுக்கு அம்மா சொன்னாள் " கொஞ்ச நேரம் முன் தான் பிரதீப் கொண்டு வந்து கொடுத்திட்டு போனான். இட்லியை பொன்னிக்கும் கொடுத்து விட்டேன்"

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எப்படி எழுதினாலும் கதையின் நடை மாறவில்லை.//

      நல்ல விஷயம்.

      // பெரிய எழுத்தாளர்கள் சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், என்று அவரவர் நடையில் எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். //

      அதற்குதான் அவர்களே இருக்கிறார்களே...  நான் எதற்கு?  சில பாடகர்கள் SPB போல, யேஸுதாஸ் போல பாடிக் காண்பித்தபோது MSV சொன்னாராம்.. 

      'அந்தக் குரலில் பாட அவர்கள் இருக்கிறார்களே..  அப்புறம் நீ எதற்கு?  நீ உன் பாணியில் பாடு' என்றாராம்.  அது போல..

      ஆனால் அப்படி நாம் முயற்சிக்கலாம்.  அதற்கும் இந்தக் கரு உதவாது.

      //ஒன்று மட்டும் புரிகிறது. உங்களுக்கு NV சாப்பிட ஆசை, ஆனால் சம்பிரதாயம் தடுக்கிறது. அது மறைவாக கதையில் வெளிப்படுகிறது.//

      புன்னகைக்க வைக்கிறீர்கள்.  நான் எழுதினால் 'ஆஹா...  பருப்புமுண்டு..  நெய்யுமுண்டு..  பாயாசமும் வடையுமுண்டு' என்றுதான் எழுத வேண்டும் என்கிறீர்களோ!  நான் ஒரு கொலையைப் பற்றி எழுதினால் "ஒன்று புரிகிறது..  உங்களுக்கு கொலை செய்ய ஆசையாக இருக்கிறது.  ஆனால் சமூகமும் சட்டமும் தடுக்கிறது" என்று சொல்வீர்களோ..!!  ஹா..  ஹா..  ஹா..

      கதைக்கு முடிச்சு என்று ஒன்று அவசியம் என்று ஏன் நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை.  சமயங்களில் ட்விஸ்ட் இல்லாததே ட்விஸ்ட்!  அவன் உணர்வுகள்தான் கதை.

      உங்கள் ஒரு பத்தி கதையில் ஒன்றும் இல்லை.  எதையுமே அது ரெப்ரசண்ட் செய்யவில்லை.

      நன்றி JKC ஸார்.

      நீக்கு
    2. ​ஆப்பம் தேங்காய்ப்பால், அல்லது காலிபிளவர் குருமா என்றும், இட்லி மீன் குழம்புக்கு பதில் இட்லி மிளகு குழம்பு இட்லி வத்தல் குழம்பு என்று எழுதியிருக்கலாம் அல்லவா?

      நீக்கு
    3. என்ன கட்டாயம்?  அவர்கள் ஏன் அதை சாப்பிட வேண்டும்?  ஏன் இதைச் சாப்பிடக் கூடாது?!!

      நீக்கு
    4. ஜெ கே அண்ணா ஸ்ரீராம் சொன்னதைத்தான் நான் சொல்ல வந்தேன் பார்த்துவிட்டேன்.

      கொலை க்ரைம் கதைகள் எழுதுபவர்கள் அப்படித்தான் நினைப்பார்களா?

      கதையை நாம் வேறு சமூக மொழியில் எழுதுவது போலத்தான். நாம் கதையில் என்ன சமூகத்தைக் குறிப்பிடுகிறோமோ அதைத்தான் கதையில் கொண்டு வரவேண்டும். சப்போஸ் நா ந் கதையில் புகைப்பிடித்தான் என்று எழுதினால் எனக்கு அந்த ஆசை என்று சொல்ல முடியுமா?

      கதைகளை லிட்டரலாகப் பார்க்கக் கூடாது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் நினைக்கக் கூடாது என்பது என் தனிப்பட்ட்க கருத்தும்.

      கீதா

      நீக்கு
    5. கதைக்கு முடிச்சு என்று ஒன்று அவசியம் என்று ஏன் நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை. சமயங்களில் ட்விஸ்ட் இல்லாததே ட்விஸ்ட்! அவன் உணர்வுகள்தான் கதை.//

      இதையும் டிட்டோ செய்கிறேன் ஸ்ரீராம்.

      கதைக்கு இலக்கணம்னு எதிர்பார்ப்பதும் ஏன் என்று எனக்கும் தோன்றும். அதுவும் கதைக்குப் பொருத்தமில்லாமல் ட்விஸ்ட் வேண்டும் என்று வைப்பதும் பொருந்தாது.

      இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று முடிப்பதும் சரியாகாது என்பதும் தோன்றும். கதை போகும் ஃப்ளோவில் முடிக்கலாம்...

      கீதா

      நீக்கு
  11. மாமா வீட்டிலிருந்து ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்தவனுக்கு சர்ப்ரைஸ்.....கிச்சனில் ஆப்பாம் குருமா வாசனை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைதான் கீதா நானும் சொல்லி இருக்கிறேன்.  மாமா முதலிலேயே பிரதீப் மூலம் கேரியரில் கொடுத்து அனுப்பி இருக்கிறார்!  இவன் கைகால் கூட கழுவாமல் பறக்காவெட்டி போல பாய்கிறான்! 

      நீக்கு
    2. ஓகே....கரீக்க்டு

      கீதா

      நீக்கு
  12. மத்தியானம் தான் நினைத்தபடி அம்மாவை சமாதானப்படுத்தி கிரிக்கெட்டுக்கு வேறு போகவேண்டும் என்பதால் இங்கு அம்மா சொன்னதைக் கேட்டு வந்திருந்தான். காலேஜுக்கு சைக்கிள் வேண்டுமென்று கேட்ட பலன், எல்லா வேலையும் இவன் தலையில் விழுகிறது!

    வீட்டுக்கு வந்தபோது அம்மா "மாமா பேசினார்.. ஆப்பம் சாப்பிட்டியாமே... இட்லி மீன் குழம்பை பாத்திரம் தேய்க்கற பொன்னிக்கு கொடுத்து விட்டேன்" என்றாள்.

    கண்ணன் வயிறு கபகபவென்றது!

    "சாப்பிட்டேன் என்று சொன்னாரே... எவ்வளவு சாப்பிட்டேன் என்று சொன்னாரா" என்ற கேள்வி இவன் மனதுக்குள் அலறியது.

    "ஏன்.. என்கிட்டே கொடுத்த கவரையும் பொன்னி கிட்டயே கொடுத்து அனுப்பி இருக்கலாமே.." கோபத்துடன் இரைந்தான்.

    "அதெப்படி..?" என்ற அம்மா, தொடர்ந்து "அதோ.. அங்க ஒரு கேரியர்ல மாமா உனக்கு ஆப்பமும் பாயாவும் கொடுத்தனுப்பி இருக்கார் பாரு.. நீ அந்தப் பக்கம் கிளம்பியதும் இந்தப் பக்கம் பிரதீப் வந்து கொடுத்துட்டு போனான். மாமா கிட்ட நான்தான் இங்கயும் கொடுத்தனுப்பி, அங்கயும் போடவேண்டாம்னு சொன்னேன்"

    அம்மா பேசியபடியே வாசல் பக்கமாய்ச் சென்றாள்./


    அதற்கு பிறகு இந்த இடத்திலிருந்து இப்படியும் ஒரு கதை தொடர்ந்தால் என்ன?.

    இவன் ஆவலாய் அந்த கேரியரை அணுகினான்.

    " என்னை மன்னிச்சுகோடா கண்ணா.. மாமா ஒரு அவசர தேவையென்றதால், உனக்கு சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து அவருக்கு தந்து விட்டேன். அதனாலே இப்போ உடனே சைக்கிள் வாங்க முடியாது. மாமா திருப்பித் தந்ததும் வாங்கித்தரேன். அதுவரை நீ பழைய சைக்களில்தான் காலேஜுக்கு போய் வரணும். இதை உன்னிடம் நேரடியாக சொல்ல எனக்கு தைரியம் இல்லை. ஆனால், நீ பொறுத்துப்பேன்னு நான் நினைக்கிறேன். " அம்மா வருத்தமாக மனதுக்குள் சொல்லியபடி, அவன் சமையலறை உள்ளை ஆவலாக, கேரியரை திறந்து சாப்பிடுவதை கண்களில் நீர்மல்க வாசலில் இருந்தபடியே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். .

    உங்களின் பல கதைகளின் தாக்கம் என்னையும் பாதித்து விட்டது. உங்களின் சிறந்த கதைகளுக்கு போட்டியாக நடுவே என்னால் வர இயலாது. இருப்பினும் என் ஒரு சிறு முயற்சி. "ராமரிடத்தில், அவர் கையில் இருக்கும் அணிலாக" தவறாயின் மன்னிக்கவும். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கற்பனை கமலா அக்கா. 

      ஒன்றே ஒன்று.. 

      இதற்கு ஏற்றாற்போல கதையில் முன்னர் சைக்கிள் பற்றி வரும் இடத்தில் சிறு மாற்றம் செய்ய வேண்டும்.  அவ்வளவுதான்.

      நீக்கு
    2. /உங்களின் பல கதைகளின் தாக்கம் என்னையும் பாதித்து விட்டது/

      என்னையும் பாதித்து ஒரு கதையாக கதையில் சிறு முடிவாக எழுத வைத்து விட்டது என வந்திருக்க வேண்டும். நன்றி.

      நீக்கு
    3. செவ்வாய்க்கு உங்களிடமிருந்து சில கதைகள் எதிர்பார்க்கிறேன் கமலா அக்கா.

      நீக்கு
    4. கண்டிப்பாக நேரமும், கற்பனையும் ஒன்று சேர்ந்து வாய்த்தால், எழுதி அனுப்புகிறேன். ஆனால், உங்களின் எழுத்திற்கு ஈடாகாது. தங்களின் ஊக்கம் நிறைந்த கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நீக்கு
    5. // ஆனால், உங்களின் எழுத்திற்கு ஈடாகாது.  //

      ஆமாம்.  உண்மை.  அதைவிட நன்றாக இருக்கும்.  வித்தியாசமாக இருக்கும்.  ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!

      நீக்கு
    6. ஹா ஹா ஹா. தவறுதலான மாறுபட்ட புரிதல். நான் சொன்னது உங்களை. நீங்கள் தோசையை போல், மறுபக்கம் புரட்டி விட்டீர்கள். இதுதான் உங்கள் எழுத்தின் சுவாரஸ்யம். நன்றி சகோதரரே.

      நீக்கு
  13. கதை நடை இயல்பாக இருக்கிறது ஸ்ரீராம். அதை ரசித்தேன்...அதுவும் அவன் மாமா வீட்டிற்கு வந்து இயல்பாகப் பேசிக் கொண்டு ஆப்பம் எப்ப தட்டில் வைப்பாங்க்ன்னு பார்ப்பது...கழுவப் போகும் போது கிச்சனில் அந்தக் குருமா வாசனை......ரொம்ப இயல்பான உரையாடல்கள் பையனின் மனதில் எழும் இயல்பான எண்ணங்கள்....

    நம்ம வீட்டில் செய்திருப்பது சில சமயம் அலுப்பாக இருக்கும் வேறு வீட்டுக்குப் போகும் போது அங்கு பரிமாறப்படுவது இல்லைனா பார்ப்பதில் நமக்குக் கிடைக்காதான்னு அந்த வயசு ஆசைப்படும்....அதெல்லம் ரொம்ப இயல்பாகச் சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா...   இப்போது முழுமையாக படித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்! 

      ஏதோ வேலையாக - அம்மா சொன்னதால் - மாமா வீடு செல்பவனுக்கு - அங்கு இப்படி ஒரு எதிர்பாராத சோதனை. 

      வேணும்னு சொல்வதா , வேணாம்னு சொல்வதா .. 

      சம்பிரதாயக் குழப்பங்கள்!

      நீக்கு
  14. மாமா குடும்பத்தின் பாசமும் தெரிகிறது.

    கிரிக்கெட் ஒரு பக்கம்....இருந்தாலும் அப்போதைக்கு அந்த ஆப்பமும் மட்டன் குருமாவும்!!!! இது ரொம்ப பளிச் வயசுப்பையன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரிக்கெட் சும்மா கதையில் தேவையில்லாத ஆணி! அது இல்லாமல் கூட எழுதலாம்!

      நன்றி கீதா.

      நீக்கு
  15. வயசுப்பையன்ன்னு உங்க ஃபோட்டோவை போட்டிருக்கீங்க பாருங்க!!!!! ஹாஹாஹாஹா அதை ரசித்தேன் ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   அது எழுதியவரின் புகைப்படமாக்கும்!

      நீக்கு
    2. ஆம.. நானும் "வயசு பையன்" என்ற டைட்டில் என்னுமிடத்திற்கு கீழ் சகோதரர் ஸ்ரீராமின் வலைப்பூவின் அடையாள போட்டோவை பார்த்து மிகவும் ரசித்தேன். குறிப்பிட காலை வேளைகள் இடையூறாக வந்து மறந்து விட்டது. நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு ஸ்ரீராம் சகோதரரே.

      சகோதரர் நெல்லைத் தமிழர் இப்போது வடநாட்டு பயணத்தில் இருப்பதால் அவராலும் காலையிலேயே உடனடியாக வந்து ஏதேனும் சொல்லி, கலாய்க்க இயலவில்லையே என வருத்தபட்டிருப்பார். ஹா ஹா ஹா. ஆனாலும் மதியத்திற்கு மேல், இந்த மாறுபட்ட "செவ்வாய் கதை களத்தை" ரசிக்க வருவார் என நம்புவோம்.
      அருமையான பதிவு. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ஹிஹிஹி.. நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  16. காக்க காக்க கனகவேல் காக்க.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    /சரி டார்லிங்ஸ்.... இந்த வார செவ்வாய் எப்படி?/

    இதற்கு அனுஷ்காவின் புகைப்படம் பொருத்தமாக இருந்திருக்கும். ஒருவேளை அவரின் முகச்சாயல் இந்த அழகான பெண்ணின் ஓவியத்திலும் தெரிகிறதால், இதுவென நினைக்கிறேன்(றோம்.) ஹா ஹா ஹா. சரியா? மொத்தத்தில் கதைகளுக்கு படங்களின் தேர்வு அருமை. நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்து வச்ச படம் ஒன்று வீணாகி விடக் கூடாதே என்று உபயோகப்படுத்தி விட்டேன்.  செல்வாண்ணாவுக்கு ரொம்பப்பிடிக்கும்னு நம்பறேன்!

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  18. பிரமாதமான சங்கதிகள், அபாரமான ஸ்வரங்கள் போடும் தேர்ந்த சங்கீத வித்வான்களைப் போல கலக்கி விட்டீர்கள்! பாராட்டுகள்! இந்தக் கதையின் அடி நாதம் மாமா வீட்டின் உறவும், நேசமும். அப்படித்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...    வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்!  நன்றி பானு அக்கா...    ஆமாம்..  நிஜமாத்தானே சொல்றீங்க?!

      // இந்தக் கதையின் அடி நாதம் மாமா வீட்டின் உறவும், நேசமும். அப்படித்தானே? //

      இல்லை.  உண்மையில் அந்தப் பையனின் சின்ன ஆற்றாமையும், ஏக்கமும். 

      மாற்றி எழுதிய பின் நீங்கள் சொல்வது!

      நீக்கு
  19. ஆப்பம் குருமா ஆப்பம் பாயா மீன் குழம்பு இவற்றையெல்லாம் நீங்கள் ரசித்து ருசித்து எழுதிய விதம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது ஜெயமோகனின் சோத்து கணக்கு கதை கொஞ்சம் ஞாபகம் வந்தது
    இவற்றையெல்லாம் அந்த ஊர் பாஷையிலேயே நீங்கள் எழுதியிருந்த விதம் எனக்கு பிடித்திருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆப்பம் பாயா மீன் குழம்பு இவற்றையெல்லாம் நீங்கள் ரசித்து ருசித்து எழுதிய விதம் //

      ரசித்து மேலும் ருசித்து!! ஹா.. ஹா.. ஹா...

      // ஜெயமோகனின் சோத்து கணக்கு கதை கொஞ்சம் ஞாபகம் வந்தது //

      ஆஹா..

      பாராட்டுக்கு நன்றி சகோ...

      நீக்கு
  20. கதை மூன்று விதங்களாக நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

    வீட்டுக்கு கள்வன் வந்தது தெரியும்.......ஹா...ஹா.

    பதிலளிநீக்கு
  21. இன்றைய சிறுகதை பலவித முடிவுகளுடன் இருப்பதைப் படித்தேன்.

    எப்படி சிறுகதை எழுதலாம் என்ற பாடபுத்தகத்துக்கு வேண்டுமானால் இந்த உத்திகள் சரிப்படும். ஆனால் சிறுகதை பதிவுக்கல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனில், முதல் பகுதியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான்!!

      நீக்கு
  22. நாம ஆசைப்படுவது மேட்ச் பார்க்க. ஆனால் அதிலும் பல்வேறு ஸ்கோர்கள், இவன் அவுட்டாகாமல் இருந்தால் எப்படி மேட்ச் இருந்திருக்கும் என்றெல்லாம் இருந்தால் ரசிக்காது

    என் அபிப்ராயம் இது.
    நான் எதிர்பார்த்த முடிவு, இவன் வீட்டிற்குப் போகும்போது அவனுக்குக் கொடுத்தனுப்பியிருப்பார்கள் அல்லது கிளம்பும்போது ஏன் நீ இன்னும் கேட்கலை? உனக்கு ரொம்பப் பிடிக்குமே.. ஒருவேளை பசியில்லையோ? அதான் டப்பால போட்டுத் தந்திருக்கேன் அப்புறமா சாப்பிடு என முடியும் என

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் இருக்கிறது பாருங்கள்.  உலகில் எல்லோரும் நல்லவங்களாகவே இருப்பாங்கன்னு நம்புவீங்க  போல...!

      நீக்கு
  23. நாம ஆசைப்படுவது மேட்ச் பார்க்க. ஆனால் அதிலும் பல்வேறு ஸ்கோர்கள், இவன் அவுட்டாகாமல் இருந்தால் எப்படி மேட்ச் இருந்திருக்கும் என்றெல்லாம் இருந்தால் ரசிக்காது

    என் அபிப்ராயம் இது.
    நான் எதிர்பார்த்த முடிவு, இவன் வீட்டிற்குப் போகும்போது அவனுக்குக் கொடுத்தனுப்பியிருப்பார்கள் அல்லது கிளம்பும்போது ஏன் நீ இன்னும் கேட்கலை? உனக்கு ரொம்பப் பிடிக்குமே.. ஒருவேளை பசியில்லையோ? அதான் டப்பால போட்டுத் தந்திருக்கேன் அப்புறமா சாப்பிடு என முடியும் என

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் உண்டு..  அப்படியும் உண்டு...   சிலநேரங்களில் சில மனிதர்கள்...

      நீக்கு
  24. எனக்கு உணவைப் பிறரிடம் கேட்க ரொம்பக் கூச்சம். அவங்க ரொம்ப வற்புறுத்தி (திரும்பத் திரும்ப) கொடுத்தால்தான் சாப்பிடுவேன் எனக்கு எவ்வளவு பிடித்ததாக இருந்தாலும்

    இதனால் எனக்குத்தான் இழப்பு.. ஆனாலும் நான் அப்படித்தான்

    எனக்கு இரு நிகழ்வை நினைவுபடுத்தியது இந்தக் கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அவங்க ரொம்ப வற்புறுத்தி (திரும்பத் திரும்ப) கொடுத்தால்தான் சாப்பிடுவேன் எனக்கு எவ்வளவு பிடித்ததாக இருந்தாலும் //

      // எனக்கு இரு நிகழ்வை நினைவுபடுத்தியது இந்தக் கதை //

      எழுதுங்களேன்.... ஆனால் பாருங்க இதுதான் கதையின் வெற்றி!


      பார்த்தீர்களா.. கதை மேட்டருக்கு நீங்களே வந்துட்டீங்க....!

      நீக்கு
    2. எல்லாமே பொருந்தி வந்தாலும் ஏனோ கதை மனதில் நிற்கலை. மன்னிக்கவும் ஸ்ரீராம்.

      நீக்கு
  25. சிறுகதை ஆர்வ வாசிப்பிற்கு வழிவகுப்பது அதன் ஆரம்ப வரி தான்.

    அது ஒற்றை வரியில், தொடரும் கதைக்கு தொடர்பாக இருந்தால் வாசிப்பின் சுவை கூடும்.

    ஆரம்பம் குட்டியாக ஒரே வரி தான். அதன் தொடர்ச்சியான அடுத்த வரி, அடுத்த பாராவின் முதல் வரியாகத் தொடரும்.

    இந்தக் கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தி வாசிப்பு சுவையை கூட்டியது குமுதம் பத்திரிகை தான்.

    பெரும்பாலும் ரா.கி.ரம்க்கராஜன், எஸ்.ஏ.பி ஆகியோர் எழுதும் எதுவும் இப்படித் தான் இருக்கும்.

    எதுக்கு சொல்றேன்னா, சிறுகதைகள் இவ்வளவு சாவதானமாக நகரக்கூடாது. வாசகர் கொட்டாவி விட வாய்ப்பே கொடுக்கக் கூடாது. கார்கள் நெடுஞ்சாலை தார் ரோடுகளில் வேகமெடுத்துச் செல்லும் பொழுது தார் ரோடை விழுங்கிக் கொண்டு முன்னேறுவது போலத் தோன்றும். வார்த்தை வார்த்தையாய் வந்து விழுந்து எழுத்தின் வேகமும் அப்படியான ஒரு
    விறுவிறுப்பைக் கூட்ட வேண்டும்.

    சொல்லப் போனால் கண்ணனை வளர்த்து எடுத்ததே அவன் மயினி தான் என்று அடுத்த பகுதி ஆரம்பத்திலாவது ஒரு போடு போட்டிருகக வேண்டாமோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊக்க வரிகளுக்கும், உற்சாகப்படுத்துவதற்கும் நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
  26. ** ரா.கி. ரங்கராஜன்

    பதிலளிநீக்கு
  27. கதையின் முதல் வடிவமே நன்றாக அமைந்துள்ளது. அதன் நீட்சி புன்னகைக்க வைத்தது. தொடர்ந்த முயன்றவை யாவும் பயிற்சிக் களமாகத் தோற்றமளித்தாலும் நல்ல கண்ணோட்டங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!