ஒரு பக்கக் கதை என்பது குமுதத்தில்தான் தொடங்கியது என்று பெரியோர் சொன்னதை நானும் நம்பி இருந்தேன்! இல்லையாம். அதற்கு முன்னரே விகடனில் இந்த முயற்சி இருந்திருக்கிறது. சிறு சிறுகதைகள் என்கிற புத்தகத்தில் சுஜாதா சொல்லி இருப்பதை கவனியுங்கள்....
தமிழில் சின்னஞ் சிறு கதைகளின் முன்னோடி என்றால் ஐம்பதுகளில் விகடனில் எழுதிய 'சசி' என்பவரைத்தான் சொல்லவேண்டும். ஆனந்த விகடனில் ஒரே ஒரு பக்கத்தில் வாரா வாரம் ஒரு கதை எழுதுவார். நகைச்சுவையும் எதிர்பாராத முடிவும் இருக்கும். நாற்பத்தைந்து வருடங்கள் கழிந்தும் சசியின் ஒரு கதை எனக்கு ஞாபகம் இருக்கிறது. ரயிலில் ஒருவருக்கு திக்குவாய். அவர் சா சா சா என்று ஏதோ சொல்ல வருவார். சக பயணி, "நான் சாகமாட்டேன் சார் கவலைப்படாதீங்க" என்று அவரைக் கிண்டலடிப்பார். பொ... பொ என்பார். "எப்படி சார் ஓடற ரயில்லருந்து போக முடியும்" என்பார். மற்றவர்கள் அட்டகாசமாகச் சிரிப்பார்கள். டி...டி என்பார். "ஸ்டேஷன் வரட்டும் டீ வாங்கித் தரேன்."
கடைசியில் அவர் சொன்னதை ஒருவர் ஒட்டவைத்துப் பார்த் தால் கேலி செய்தவரின் பெட்டியை போன ஸ்டேஷனில் யாரோ எடுத்துக் கொண்டு இறங்கிவிட்டான் என்று சொல்கிறார் என்பது தெரியும்.
'குமுதம்' இதழ் ஒரு பக்கக் கதைகளை எழுபதுகளில் துவங்கி யது. அவை பெரும்பாலும் கதைச் சுருக்கங்களாக இருந்ததால் சிறுகதை வடிவம் தேய்ந்து தேவாங்காகி காணாமற் போய்விடுமே என்ற கவலையில் 'தூண்டில் கதைகள்' என்று நீண்ட கதைகள் எழுத விரும்பினேன். எஸ்ஏபி அதையும் அனுமதித்தார்.
படித்தீர்களா? அடுத்து உடனடி கதைகள் என்று அவர் சொல்லி இருப்பதைப் படியுங்கள்.
உடனடி கதைகள்
Sudden fiction என்பதற்கு உடனடியாக தமிழ் தேவை, திடீர்க் கதை என்பதைவிட 'உடனடிக்கதை' பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஸடன் ஃபிக்ஷன் என்பது தற்போது மேல்நாடுகளில் மிகப் பிரபலமாகியுள்ள கதை வடிவம். இதை ஜான் அப்டைக்கி லிருந்து துவங்கி பலரும் எழுதியுள்ளார்கள். பெர்க்லி பல்கலைக் கழகம் மாதாந்திர போட்டி ஒன்று நடத்துகிறது. ஆறு டாலர் செலுத்தி ஒரு கதையைச் சமர்ப்பிக்கலாம். அதை அவர்கள் படித்துப் பார்த்து பதிப்பிக்கிறார்கள். சிறந்ததற்கு 200 டாலர் அறிவிக்கிறார்கள். நான் எழுதிப் பார்க்கலாம் என்றால் எனக்கு இங்கிலிஷ் போதாது. முதலில் உடனின் விதிகளைச் சொல்லிவிடலாம்.
எளிமையானவைதாம். கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கதை எழுதுபவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அனைத்தை யம் வாசகர்களுக்குக் காட்ட மாட்டான். ஒரு பகுதியைத்தான் காட்டுவான். அதிலிருந்து மற்ற பகுதிகளை வாசகன் உணர வேண்டும்."விவரமா சொல்லாதே. கோடிகாட்டிட்டு இடத்தை காலி பண்ணு. எனக்கு புத்தி இருக்கிறது. நான் மற்றதைப் புரிந்து கொள்கிறேன்".
இதையும் படித்தீர்கள்தானே? இப்போது இதை வைத்து நான் எழுதிய 'அருண்' கதை பற்றி கொஞ்சம்.
தங்கையும் ஓடிப்போயிருக்கிறாள். அந்த அதிர்ச்சியே பெற்றோருக்கு இருக்கும். அவர்கள் ஏன் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை, செய்து வைக்கவில்லையா, அமையவில்லையா, பணமில்லையா, சுயநலமா, மாற்றாந்தாய் பிள்ளைகளா, அக்கா இருக்க, தங்கை அவசரப்பட்டு யோசிக்காமல் ஓடிவிட்டாளே.. இல்லை அதற்கும் ஒரு காரணம் இருக்குமா, என்ன விளைவு... முதல் இரண்டு வரிகளுக்குள்ளேயே எவ்வளவு சாத்தியக்கூறு பாருங்கள்...
நான் இதுதான் என்று எதையாவது அங்கு காரணமாய்ச் சொல்லி இருந்தால் நம் கண்கள் குதிரையின் கடிவாளம் போல கட்டப்பட்டிருக்கும்! தாண்டிச் சென்று விடுவோம்.
இந்த வகையில் அந்த அக்கா ஏன் புன்னகைத்தாள், ஏன் அதிகப்படியான மாவு அரைத்தாள், அம்மா மேலும் அன்பு / அக்கறை இருக்கிறது, முன்னர் ஏன் கோபப்பட்டாள், தம்பியுடன் எப்படி சண்டை போடுவாள், அருண் யார், இவர்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டிருக்கும், அவன் நிலைமை என்ன,,,
உண்மையில் புத்திசாலி வாசகனுக்கு இபப்டியெல்லாம் கோனார் நோட்ஸ் போடவும் கூடாதுதான்!
சுஜாதா ஒரே வரியில் ஒரு திகில் கதை சொல்லலாம் என்று சொல்லி ஒரு கதை சொல்லியிருப்பார். கதை அவருடையதா, ஆங்கிலத்திலிருந்தா நினைவில்லை. ஒருவரிக் கதை இதுதான். "உலகத்தின் கடைசி மனிதன் வீட்டில் தனித்திருக்கையில் நள்ளிரவு அவன் வீட்டுக் கதவு தட்டப்பட்டது" அவ்வளவுதான்.
நான் இதற்கு தலைப்பு 'கடவுள் வருகை என்று வைத்துப் பார்த்தேன். திகில் போய்விட்டது!
இன்னொன்று
தலைப்பு "கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள். கதை : "ஐயோ.... சுட்டு விடாதே...."
சுஜாதா இன்னொரு சின்னஞ்சிறுகதை சொல்லி இருப்பார்... அது என்ன என்றால்...
இடைவேளை...
"டாய்லெட்ல ஒரே அடிதடிப்பா..."
"என்னவாம்..."
"ஏதோ சண்டை... ஒருத்தனுக்கு மூஞ்சியெல்லாம் ரத்தம்"
"என்ன தகறாராம்?"
"ரௌடி கும்பலோ பொம்பளை சமாச்சாரமோ...இல்லை கம்யூனிட்டி தகராறோ.. சரியா தெர்ல... போய்ட்டான்னு நெனைக்கிறேன்..."
"ஐயோ.. அப்புறம் என்ன ஆச்சு?"
"பார்க்கலை.. படம் திரியும் ஆரம்பிச்சிடும்னு வந்துட்டேன்.."
64 வார்த்தைகளில்
என் நண்பனுடன் ஒரு வாக்குவாதத்தின் இறுதியில் நான் சொன்ன வார்த்தைகள் தெளிவாக, அழுத்தமானதாக இருந்தன.
"நான் சொல்வதுதான் சரி. கடவுள் இல்லை. கடவுளை நம்பினவன் முட்டாள். வாழ்க்கை அர்த்தமற்றது."
இதை நிரூபிப்பதற்கு என் துப்பாக்கியை வெளியில் எடுத்தேன். அதன் முனையை என் நெற்றியில் வைத்துக்கொண்டேன். அதன் விசையை அழுத்தினேன். என் மூளை வெடித்துச் சிதறியது. இன் னும் ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னைத் தொந்தரவு செய்கிறது. அதை மட்டும் என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. நான் சொன்னது சரியென்றால் எப்படி என்னால் இதை எழுத முடிகிறது?
இதை எழுதியது ஸ்டான்லி புபியன் என்பவர்.
சிறுகதை எழுதுவதில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. புதிது புதிதாக யோசிக்கிறார்கள். நான் இங்கு புதிது புதிதாக என்று சொல்லி இருப்பதே முப்பது வருடங்களுக்கும் மேல் பழசு!
இன்றைக்குப் படிக்க இயலவில்லை. அயோத்தியிலிருப்து நேபாள் பொகாரா வரை பயணம். இரவு 11:30க்குத்தான் வந்து சேர்ந்தோம்
பதிலளிநீக்கும்...ஹூம்... (பெருமூச்சு) பதிவைத்த திறந்து படிக்க முடியவில்லை என்று சொல்லி விட்டு சென்று விட்டீர்கள்.
நீக்குநேபாள் வந்து சேர்ந்திருக்கிறீர்களா, அயோத்தியா...?
இந்த வாரம் சுஜாதா ஸ்பெசல்?
பதிலளிநீக்குஒரே ஒரு வார்த்தையிலும் கதை சொன்னவர் சுஜாதா. அவருடைய பலம் மற்றும் பலவீனம் மத்யமர்கள் எனப்படும் மிட்டில் க்ளாஸ் மாத சம்பளக்காரர்கள் தான்.
ஒன்று மட்டும் சரி. அவரால தான் சங்கப்பாடல் போன்ற சுருங்க சொல்லி நிறைய உணர்த்தும் சிறுகதைகள் பரவலாக வர்த்தக ரீதியாக வெற்றிபெற்றன.
நியூசிறூமில் இருந்து பல செய்திகளை அறிந்துகொண்டேன். முக்கியமாக 'அந்த சார் யார் சார் ? கேள்விக்கு விடை, தண்ணீர் இல்லாமல் நின்ற திருமணம், வாய் பூட்டு (MASK) இல்லாத நாய்கள் நடைப்பயிற்சிக்கு தடை போன்றவை.
பாட்டுக்கு பாட்டு
இருள்
ஒரு திருடன்.
வெளிச்சம் இருந்தால்
பதுங்கும்
இந்த வார பொக்கிஷ ஆ விகடன் அட்டைப்பட ஜோக்குகள் அபாரம்.
ஒரு சந்தேகம் பாஸோட பிறந்த நாள் இந்த வாரமா? (சுஜாதா ஸ்பெசல்!)
Jayakumar
// ஒரு சந்தேகம் பாஸோட பிறந்த நாள் இந்த வாரமா? (சுஜாதா ஸ்பெசல்!) //
நீக்குஹா.. ஹா.. ஹா... இல்லை. இப்போது இல்லை. இது தற்செயல். ஆனாலும் உங்களுக்கு அபார ஞாபக சக்தி!
கதையே இல்லாத கதை என்று கூடத் தலைப்பிட்டு.....
பதிலளிநீக்குமுயற்சியுங்களேன்.
எனில்,அதன் பெயர் கதை அல்ல,கட்டுரை! எனில்,அதன் பெயர் கதை அல்ல, கட்டுரை!
நீக்குவெளிச்ச இடங்களில்
பதிலளிநீக்குவெதும்பியது
அது இல்லாத இடங்களில்
பிதுங்கியது.
கடைசி ஜோக் கருத்துள்ள ஜோக்.
பதிலளிநீக்குஅந்த Mail Van எழுத்தை ஹிந்தியில் எழுதியிருந்தால்.....
நம்மூர்களில் அப்படித் தான் கேட்கத் தோன்றும்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம், நன்றி.
நீக்கு// அது இல்லாத இடங்களில்
பதிலளிநீக்குபிதுங்கியது. //
பிதுங்கியதா? எப்படி?
// அந்த Mail Van எழுத்தை ஹிந்தியில் எழுதியிருந்தால்.....
பதிலளிநீக்குநம்மூர்களில் அப்படித் தான் கேட்கத் தோன்றும். //
கருத்தான கருத்துக்கு நன்றி ஜீவி ஸார்.
ஐம்பதுகளில் சசி என்பவர் எழுதிய சிறு கதை அசாத்தியம் இல்லையா? எத்தனை எத்தனை திறமையான படைப்பாளர்கள் இருந்திருக்காங்க, இப்பவும் இருக்காங்கன்னு பிரமிப்பாக இருக்கிறது. அப்படியான கதைகளைத் தேடிப் பார்க்க வேண்டும் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குகீதா
உண்மைதான். இன்னமும் புத்தகச்சந்தையில் பழைய எழுத்தாளர்கள் புத்தகங்கள்தான் விலைபோகின்றன.
நீக்கு"விவரமா சொல்லாதே. கோடிகாட்டிட்டு இடத்தை காலி பண்ணு. எனக்கு புத்தி இருக்கிறது. நான் மற்றதைப் புரிந்து கொள்கிறேன்".//
பதிலளிநீக்குயெஸ், இதை நீங்க போன ரெண்டுகதைகளிலும் அப்ளை செய்திருந்தீங்க....இப்படி எழுதி வைத்துவிட்டு அடுத்ததை வாசிக்க வந்தா நீங்களும் அருண் என்று....ஆஹா!!!!! பரவால்லியே நமக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யுதேன்னு!!
எனக்குப் பிடித்த உத்தி இது. எல்லாவற்றையும் கதையில் சொல்லக் கூடாது புட்டு புட்டு ....சிலவற்றை வாசகர்களின் புத்திக்கு விட வேண்டும் என்று தோன்றும்.
பரிசு வென்ற கதைகளில் ஒன்று நீங்க சொன்ன அருண் கதை போல ஆனால் அதில் முடிவு வேறு. நான் எழுதியதில் வாசித்திருப்பீங்க. உண்மைய சொலல்ணும்னா நான் அங்கு அருண் கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். எழுதிவிட்டு பதிவு வெளியிடும் போது கட் பண்ணினேன். ஒரு வேளை ஒப்பீடு ஆகிவிடுமோ என்று...நான் என் வரியைக் குறிப்பிட்டிருந்ததால். எனக்குஇப்படி மறைமுகமான முடிவுகள், அதிலிருந்து பிறக்கும் கிளைக்கதைகள் என்று பிடிக்கும் என்பதால் அதையும் சொல்லியிருந்தேன். கட்!
கீதா
சட்டென பிடித்துக் கொண்டீர்கள்.
நீக்கு'அந்த' வரிசையில் அருண் கதையையா.. நியாயமா இது!
இல்லை கண்டிப்பாக 'அந்த' வரிசை என்றில்லை. நான் ஒரு ஒப்பீட்டைச் சொல்லியிருந்தேன். ஆனால் அது சரியாகாது என்று எடுத்துவிட்டேன். அது போட்டிக்கான கதை என்பதால் எல்லாம் விலாவாரியாக எழுதியிருப்பாங்க போலும். ஆனால் எனக்குப் பிடித்த உத்தி "அருண்"!!!
நீக்குகீதா
நன்றி. நீங்கள் இந்த ஒப்பீடுகளையும் உங்கள் எண்ணங்களையும் அங்கு தனிப்பதிவாக்கலாம்.
நீக்குநான் இதுதான் என்று எதையாவது அங்கு காரணமாய்ச் சொல்லி இருந்தால் நம் கண்கள் குதிரையின் கடிவாளம் போல கட்டப்பட்டிருக்கும்! தாண்டிச் சென்று விடுவோம்.//
பதிலளிநீக்குடிட்டோ டிட்டோ....
ஸ்ரீராம் நீங்க தைரியமாக எழுதறீங்க. அதுக்கு உங்களுக்குப் பாராட்டுகள். உண்மையா...
கீதா
ஹிஹிஹி....
நீக்குஏனென்றால் எனக்கு அந்த தைரியம் இல்லை, வெளியிட்டால் ஏகப்பட்ட கேள்விகள் அப்ஜெக்ஷன்ஸ் வரும் என்ற தயக்கம். ஏற்கனவே நான் எழுதினப்ப இங்கு வந்திருக்கின்றன...உங்ககிட்டவும் இதைச் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
நீக்குஅதை எதிர்க்கொள்ளும் தயக்கம் பயம். காரணம் தன்னம்பிக்கை இல்லாமை...இன்னும் சுருங்கிவிடுவேனோ என்ற பயம். அதிலிருந்து மீளத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்!!!!!!
கீதா
ஏனென்றால் எனக்கு அந்த தைரியம் இல்லை, வெளியிட்டால் ஏகப்பட்ட கேள்விகள் அப்ஜெக்ஷன்ஸ் வரும் என்ற தயக்கம். ஏற்கனவே நான் எழுதினப்ப இங்கு வந்திருக்கின்றன...உங்ககிட்டவும் இதைச் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
நீக்குஅதை எதிர்க்கொள்ளும் தயக்கம் பயம். காரணம் தன்னம்பிக்கை இல்லாமை...இன்னும் சுருங்கிவிடுவேனோ என்ற பயம். அதிலிருந்து மீளத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்!!!!!!
கீதா
இன்னுமா? இந்நேரம் அதிலிருந்து வெளியில் வந்திருக்க வேண்டாமோ...
நீக்குபோற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே...
இன்னுமா? இந்நேரம் அதிலிருந்து வெளியில் வந்திருக்க வேண்டாமோ...//
நீக்குஆகியிருக்கணும். கொஞ்சம் பெட்டர்....இங்கு முன்பு நிறைய எழுதியிருந்தேன் இல்லையா..படத்துக்குக் கூட டக்குனு எழுதி...உங்கள் அப்பாவின் கடைசி முடிவு இப்படி இருக்கணும் என்று சொல்லி எழுதியவை என்று....
இடையில் ஏனோ இப்படி. இப்ப கொஞ்சம் எழுந்து வருகிறேன். வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை.
கீதா
ஆல்ரெடி வந்துட்டீங்க... சரியா பாருங்க...
நீக்குஅருண் கதையில் ஜோதியின் அக்காவின் செயல்பாடுகள் நன்றாகவே புரிந்தது. என்னவோ இருக்கு அதில்...ஏதோ ஒரு வாசனை வீசுதே என்று புரிந்தது.
பதிலளிநீக்குகீதா
எல்லாம் ஒரே வாசனையாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது
நீக்குமுடிவு வாசிக்கும் முன் வேறு வேறு வந்தன ....யோசித்தேன் ஸ்ரீராம்...
நீக்குகீதா
"உலகத்தின் கடைசி மனிதன் வீட்டில் தனித்திருக்கையில் நள்ளிரவு அவன் வீட்டுக் கதவு தட்டப்பட்டது"
பதிலளிநீக்குஇதை வாசித்திருக்கிறேன்.
நான் இதற்கு தலைப்பு 'கடவுள் வருகை என்று வைத்துப் பார்த்தேன். திகில் போய்விட்டது!//
ஸ்ரீராம், கடவுளே வந்து தட்டியிருந்தாலும், கதவைத் திறக்கும் முன் அவன் மன ஓட்டங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதே நமக்குள் எழுமே. இதில் நிறைய சொல்லலாம் இல்லையா...
உலகின் முதல் மனிதன்னு சொன்னா அது இன்னும் வேறு வகையில் சொல்லத் தோன்றும் இல்லையா.
முன்பு சுஜாதாவின் இந்த ஒரு வரிக்கதையை வாசித்தப்போ தோன்றியது ...உலகின் முதல் மனிதன் என்று இருந்திருந்தால் எப்படி அது போகும் என்று...கற்பனை விரிந்தது!
கீதா
அதுவும் (இரண்டுமே) சரிதான்!
நீக்குஉலகத்தின் கடைசி மனிதன் ஏன் கதவை தாள் போடவேண்டும்? கடைசி கரடி உள்ளே வந்துடும் என்று பயமா?
நீக்குமனித இயல்பு.
நீக்குகரடியும் வாசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஆனால் அந்தச் சின்னஞ்சிறு கதை வாசித்த நினைவு இல்லை. சின்னஞ்சிறு கதை சூப்பர்ல?
முதல்ல நீங்கதான் "அது என்னவென்றால்" நு அடுத்தாப்ல இடைவேளை விடுறீங்களோன்னு நினைச்சேன்.... இதை ரசித்தேன் ஸ்ரீராம், "அட! என்று... இந்த இடம்!!!
கீதா
படிக்கப் படிக்க நிறைய ஐடியாக்கள் நமக்குள்ளும்! எஸ்ரா படிக்கும்;போதும் எனக்கு அப்படி இருக்கும்.
நீக்குஎஸ் எஸ்....எஸ் ரா படித்த போது எழுந்ததை வைத்து எங்கள் தளத்தில் ஒன்று எழுதிய நினைவு அப்ப எபிக்கு அனுப்பும் அளவு பரிச்சயம் ஆகும் முன்.
நீக்குகீதா
அடடே... எல்லோருக்கும் பொதுவா இந்த உணர்வு!
நீக்குசிறுகதை எழுதுவதில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. புதிது புதிதாக யோசிக்கிறார்கள். நான் இங்கு புதிது புதிதாக என்று சொல்லி இருப்பதே முப்பது வருடங்களுக்கும் மேல் பழசு!//
பதிலளிநீக்குஆமாம் இதை நானும் நோட் செய்திருக்கிறேன், ஸ்ரீராம். அதுவும் ரொம்பவும் பழைய கதைகள் வாசிக்கறப்ப ஆச்சரியமா இருக்கு அப்பவே இப்படி அழகா யோசித்திருக்காங்களே என்று
கீதா
நான் பொதுவாகக் கதை எழுதப்பட்ட காலத்தை அறிய முயற்சி செய்வதுண்டு.
நீக்குகீதா
ஆனால் இன்னமும் சிலர் பழைய பஞ்சாங்கமாகவே இருக்கிறார்கள்!
நீக்குஆம். அப்படி யாரும் எழுத முன்வருவதில்லை என்பதுதான் அன்று மாலன் பேசிய பேச்சு. அவர் வேறு கலவரம் பற்றி பேசினாலும் எனக்கு குல்சாரின் ராவி நதிதான் நினைவுக்கு வந்தது. இவ்வகையில் நான் படித்தவை மிகச் சொற்பம்.
நீக்குஸ்ரீராம் "பழைய பஞ்சாங்கம்" ஹையோ உண்மை
நீக்குகீதா
ஹிஹிஹி...
நீக்குதண்டேல் - தண்டால் எடுத்து தடி எடுத்து நாட்டாமை செய்யறதுனு எங்க வீட்டுல பேசிக் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநீங்க அனுப்பியிருந்தீங்க ஒரு ரீல் பிட் செமையா இருந்துச்சு அவங்க மூவ்மென்ட்ஸ்.
ஸ்ரீராம், உங்க விமர்சனம் பார்த்தா சாய்பல்லவியின் திறமையை வீணாக்கிட்டாங்கன்னு தோன்றுகிறது.
சாய்பல்லவிக்கு நாம் ஒரு வேண்டுகோள் வைத்துவிடுவோம். செலக்டிவா பண்ணுவாங்கன்னு,,,,பார்க்கப் போனா அவங்க செலக்ட்டிவா பண்ணுவாங்கன்னு வாசித்த நினைவு.
ஒரு வேளை இப்ப பாப்புலாரிட்டினால நிறைய கமிட் பண்ணிக்கறாங்களோ? நோ சாய்பல்லவி...ப்ளீஸ் பி கேர்ஃபுல்!! (ஹிஹிஹி)
கீதா
ஒருவேளை டோலிவுட் இதை மிக ரசித்திருக்கலாம். நமக்கு பிடிக்காமல் போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்!
நீக்குடோலிவுட் இப்படியானவற்றைதான் மிகவும் ரசிக்கும் ஸ்ரீராம். அவங்க ரசனை அது.
நீக்குகீதா
நியூஸ் ரூமில்:
பதிலளிநீக்கு//86 வயதான மூதாட்டி அபாரம்.//
கனியிருப்ப காய் கவர்ந்தற்று.
ஆம். உற்சாகம் குறையாமல் இருக்கிறார்கள்.
நீக்கு86 வயது மூதாட்டி, "அபாரம்"
நீக்குஸூப்பர்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
முதல் பகுதியில், சிறுகதைகளின் சிறப்புக்களை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.
சிறு கதைகளின் முன்னோடி சசி என்பவரின் ரயில் கதை அருமை. அதை சுஜாதா அவர்கள் சொன்ன விதம் நல்ல தெளிவு.
."விவரமா சொல்லாதே. கோடிகாட்டிட்டு இடத்தை காலி பண்ணு. எனக்கு புத்தி இருக்கிறது. நான் மற்றதைப் புரிந்து கொள்கிறேன்".
உண்மை.. விபரங்களை வாசகனின் எண்ணங்களில் விட்டு விட வேண்டும். அவரின் எழுத்தே அப்படியானதுதான்.
அவரின் பாணியில் நீங்கள் எழுதிய "அருண்" கதையை ரசித்தேன். நீங்கள் அதை விவரித்த விதமும் நன்று.
/நான் இதுதான் என்று எதையாவது அங்கு காரணமாய்ச் சொல்லி இருந்தால் நம் கண்கள் குதிரையின் கடிவாளம் போல கட்டப்பட்டிருக்கும்! தாண்டிச் சென்று விடுவோம்./
உண்மை. அதுதான் அதில் உங்களின் முதல் வரியே அந்த குடும்பத்தின் பல கதைகளை சொல்லியது. உங்களின் முயற்சியும் நல்ல முயற்சி. உங்களின் சுருக்க எழுத்தாற்றலுக்கு பாராட்டுக்கள்.
சுஜாதா அவர்களின் ஒரு சில வரி கதைகளும் அருமை. எப்படித்தான் இப்படி வார்த்தைகளை மடக்கி.... பிரமிப்பு ஒருபுறம் என்றால், அதன் மறுபுறம் லேசான பொறாமை.. ஹா ஹா ஹா
/சிறுகதை எழுதுவதில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. புதிது புதிதாக யோசிக்கிறார்கள். நான் இங்கு புதிது புதிதாக என்று சொல்லி இருப்பதே முப்பது வருடங்களுக்கும் மேல் பழசு!/
அடாடா..! அப்போ நா(ன்) ங்கள் எழுதுவதெல்லாம் அத்தர் பழசு.நானும் உங்களைப் போல சுருக்கி எழுத முயற்சிக்க வேண்டும். நடக்குமா? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்கள் சுவையாக எழுதுகிறீர்கள் கமலா அக்கா. அதுவும் வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள். வார்த்தைகளை புதிய பொருள்களில் கையாள்கிறீர்கள். உங்கள் சக்தி உங்களுக்கு தெரியவில்லை கமலா அக்கா.
நீக்குதங்களின் ஊக்கம் தரும் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நீக்குஇரண்டு செய்திகள் ஒரே செய்திகள் - உங்களுடையது.... பானுக்காவும் அனுயிருக்காங்கன்னுதெரியுது.
பதிலளிநீக்குதிருக்குறள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு சூப்பர்!!! 86 வயதான மூதாட்டி! வாவ்.
கீதா
எந்த செய்தி? சுனிதா வில்லியம்ஸ் என்றால் புறப்படப் போகிறார் என்று ஒரு செய்தியும், வந்து சேர்ந்து விட்டார் என்று ஒரு செய்தியும் இருக்கும்!
நீக்குசு வி பார்த்துவிட்டேன்.
நீக்குஇன்னொன்று கராச்சி ரயில் விஷயம்.
சார் - நம்பிட்டோம் நாங்க!!
பாருங்க, எங்க மனசை எப்படி கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைச்சிருக்கு இந்த அரசியல்!
கீதா
காக்க காக்க கனகவேல் காக்க.
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குநாங்களும் பரிமாறுவோம், உபசரிப்போம் என்றாலும் எப்போதாவது நாங்கள் கூட இப்படியொரு தர்மசங்கடத்தில் மாட்டக் கூடாது அல்லவா?//
பதிலளிநீக்குயெஸ் நம்ம வீட்டிலும்...எங்க வீட்டில் பொதுவாகப் பரிமாறும் வழக்கம் இல்லை. நாமே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடுவது.
இது சூப்பரா இருக்கு ஸ்ரீராம்.
உளவியல் கான்ஸ்டெல்லேஷன் படி பெரியவங்கதான் சின்னவங்களுக்குக் கொடுக்க வேண்டும். அண்ணன் அண்ணி வீடு என்பதால் அவங்கதான் கேட்டிருக்க வேண்டும்.... கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஓவராக மறுத்தால் போடுவதும் சிரமம். ஒரு வேளை நாம வற்புறுத்திப் போட்டுவிட்டு அது வினையானாள்?!!! ஹிஹிஹி ...எனவே ஃப்ரீயாக இருபப்து உத்தமம்.
நல்லா பழகினவங்க வீட்டுக்கு எந்த வீட்டுக்குப் போனாலும் கூச்சம் பார்ப்பதில்லை. ஃப்ரீயா இருப்பது வழக்கம்.
ஆனால் எல்லா வீடுகளிலும் இருக்க முடியாது. எங்க வீடுகளிலேயே சில வீடுகளில் கிச்சன் பக்கம் போகக் கூடாது. நானும் அடக்கி வாசித்துவிட்டு வந்துவிடுவேன்.
கீதா
உண்மைதான் நீங்கள் சொல்வது. எல்லா வீடுகளிலும் சுதந்திரமாக இருந்துவிட முடியாது.
நீக்குஉங்க வீட்டில் கூட நான் உங்க புது வீட்டுக்கு வந்திருந்தப்ப நாம எல்லாரும் கிச்சன்ல கீழ உட்கார்ந்து அப்படிச் சாப்பிட்டோமே!
பதிலளிநீக்குஎனக்கு அது பிடிக்கும். நாமே போட்டுக் கொள்வது. இதில் ஒரு சௌகரியம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும். இல்லைனா பழைய முறைப்படி என்றால், வீட்டில் பெரியவங்க பரிமாறுவாங்க....ஆண்களுக்குப் பரிமாறிவிடுவாங்க. பெண்கள் கிச்சனில் கடைசியாக உட்கார்ந்து சாப்பிடும் போது காய் இருக்காது அல்லது குழம்பு இருக்காது,,,..ஏதேனும் ஒன்று பற்றாக்குறை. அல்லது சமையல் செய்பவங்களுக்குக் கிடைக்காது.
எனவே வீட்டு மட்டில் பழக்கம் கடைசி மைத்துனரால் மாற்றப்பட்டது.
நம்ம வீட்டில் மைத்துனர்கள் எல்லாம் ரொம்ப ஃப்ரீ டைப். நாங்களும் ஃப்ரீ. கிச்சனுக்குள் வந்து எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடலாம். மகனின் நண்பர்கள் உட்பட...நீங்களே வந்தாலும் ஃப்ரீயாக எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
ஸோ வீட்டுக்கு வரவங்கள் கேட்டுவிடுவாங்க இல்லைனா தாங்களே எடுத்துப் போட்டுக் கொண்டுவிடுவாங்க.
ஆனால் விசேஷங்களில் பரிமாறப்படும் போது, பார்த்து பார்த்து இன்னும் எத்தனை பேர் இருக்காங்க, எதிர்பாராமல் வந்துவிட்டால் அப்படி யோசித்துப் பரிமாறுவந்து உண்டு... எல்லொருக்கும் வேண்டுமே...தர்மசங்கட நிலைகள் ஏற்படுவதுண்டு.
கீதா
சிலருக்கு மொட்டை மாடி, சிலருக்கு கிச்சன்லேயேவா? :))
நீக்குகீதா... நல்லவேளையாக ரொம்பப் பழமையான அந்தப் பழக்கமெல்லாம் எங்கள் வீட்டில் எங்குமே கிடையாது. எங்கள் உருவு வீடுகளில் எல்லா வேடுகளுமே ப்ரீதான்.
நீக்கு// சிலருக்கு மொட்டை மாடி, சிலருக்கு கிச்சன்லேயேவா? :)) //
நீக்குகிரஹப்ரவேசத்துக்கு வந்தவர்கள் எல்லோருக்கும் மொட்டை மாடியில்தான் அரேஞ்சமென்ட். விசேஷமில்லாத சாதாரண நாளிலும் வந்த ஒரு சந்தர்ப்பத்தை கீதா சொல்கிறார்.
நேற்றைய பதிவில்
பதிலளிநீக்குபடங்கள் மிகவும் அழகு...
பதிவைப் படிக்க வில்லை.. இயலவில்லை..
இணையத்தை ஈர்க்காமல் கைத்தல பேசியில் கோளாறு..
மன்னிக்கவும்
வாழ்க நலம்..
நன்றி.
நீக்குபொக்கிஷம் ஜோக்ஸ் - பொக்கிஷம் தான் சிரித்துவிட்டேன், ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குசுஜாதா அனுபவக் கட்டுரையில் முக்கியமான விஷயம் தெரிந்தது, நம்ம சேட்டைக்காரரின் கருத்தால்!
பதிலளிநீக்குகீதா
எழுத்தாளர் அனுபவக் கட்டுரை என்றால் அதை அப்படியே நம்பிடறதா? அதில் கண்ணு, மூக்கு, காதெல்லாம் வைத்திருப்பது தவிர்க்க முடியதது, தெரியாதா?
நீக்குஅந்த நாளையா ஆனந்தவிகடன் நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் அருமை. நீங்கள் கதை பேசிக் கதையைக் கண்டு பிடிச்சு எழுதினதும் அதை விவரித்த விதமும் சிறப்பு. சுஜாதாவின் இந்த எழுத்துக்களை எல்லாம் நானும் ஓரளவுக்குப் படிச்சிருக்கேன். ஆனந்த விகடன் சசியின் கதைகள் தொகுப்புச் சித்தப்பாவின் பைன்டிங்க் கலெக்ஷனில் இருந்தது.
நீக்குஉங்களுக்கு ஆனந்த விகடன் ஒரு பக்க கதைகள் நினைவிருக்கா கீதா அக்கா?
நீக்குதிருக்குறளை மொழி பெயர்த்த அம்மையாருக்கு எனது வணக்கங்கள்..
பதிலளிநீக்குஇன்றைய பொக்கிஷம் உண்மையில் பொக்கிஷம்
நலம் வாழ்க ....
நன்றி செல்வாண்ணா
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஉங்களின் தற்போதைய கதையின் மூலக்கருவின் விளக்கமும் நன்றாக இருக்கிறது. (அண்ணன், தம்பிக்குள்ளான மன பேதங்களை அலசி ஆராய்ந்த விதம் அருமை. அதிலிருந்து நீங்கள் செவ்வாய்க்கென கதை திரட்டிய தங்களது சாமர்த்தியம் பாராட்டிற்குரியது.)
உணவு பரிமாறும் போது ஒவ்வொருவரின் மன பேதங்களை நானும் பல விதங்களில் உணர்ந்திருக்கிறேன். நான் வீட்டிலும், சரி, வந்த விருந்தாளிகளையும் சரி, அனைவரையும் அதிகப்படியாக உணவை எடுத்துக்கச் சொல்லி, வறுப்புறுத்தும் போதும், சில பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். என்ன செய்வது? என்னிடம் சிலர் கையில் உணவை வைத்துக் கொண்டே, வேணுமா, போதுமா என கேட்கும் போது, வேண்டாமென்றுதான் முதலில் சொல்லி விடுவேன். என்னை மாதிரி யாரும் "கம்பெல் பண்ணி கூட இன்னும் கொஞ்சமாவது எடுத்துக்கோ" என சொல்ல மாட்டார்கள். ஒவ்வொரு வர் ஒவ்வொரு மாதிரி. நம் கையிலும், ஐந்து விரலும் ஒரே மாதிரியாகவா அமைந்துள்ளது.?
தங்களின் இருள் கவிதை அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. அங்கு மன பேதங்கள் என்பது இருக்கும் தான். அதே சமயம் இந்த மாதிரி நிகழ்வுகள் வேண்டுமென்றே நிகழ்ந்ததாகவும் நிச்சயமாக சொல்ல முடியாது. யதேச்சையான தற்செயலாக கூட இருக்கலாம்!
நீக்குசாப்பாடு பரிமாறும்போது பேதங்கள் காட்டுவதை நானும் நிறைய அனுபவிச்சிருக்கேன். அதிலும் மாமாவுடன் சாப்பிடப் போகும்போதெல்லாம். இத்தனைக்கும் அவங்க அழைப்பின் பேரில் தான் போவோம். நான் வரலை, இப்படி எல்லாம் நடக்கும்னால் மாமா வருத்தப்படுவார் என்பதால் ஒண்ணும் சொல்லாமல் போய் விட்டு அங்கே அவரே வருந்தும்படி ஆயிடும் மனிதர்கள் காட்டும் பேதத்தில்.
நீக்குஸ்ரீராமுக்குப் பெரிய மனசு என்பதால் தற்செயல்னு சொல்கிறார். :)
நீக்குநான் இரண்டுக்கும் வாய்ப்பு உண்டு என்று சொல்கிறேன்!
நீக்குசாப்பாட்டில் பேதம் காட்டுவது அபூர்வம் எனத் தோன்றுகிறது அது பெரிய பாவம் என்பதால்
நீக்குஆனால் நம் மனதுதான் இந்த மாதிரி வித்தியாசங்களைக் கற்பிக்கிறது என நினைக்கிறேன்
என் அப்பா சைடு சித்தி எனக்கு கேசரியோ இனிப்போ எனக்குப் பிடிக்கும் என்பதால் நிறைய பரிமாறுவார்கள். என் மனது அது அன்பின் காரணமாக என்று நினைக்கும். என் அம்மா, உனக்கு உடம்பு கெட்டால் தனக்கென்ன என்ற எண்ணம் என்பார்
கஹ மேடம் ரொம்ப வற்புறுத்தி வற்புறுத்தி உணவைப் பரிமாறுவேன் என்றார். யாருக்கும் வேண்டாமோ? ஏன் இவ்வளவு வற்புறுத்துகிறார்? என்று சிலர் எண்ணவும் வாய்ப்புண்டு.
நீக்குஅதனால் மற்றவர்கள் interpretation பற்றி நாம் கவலைப்படக்கூடாது. நம் வேலையைப் பார்த்துக்கொண்டு செல்லணும்
வெளிப்படையாக அவர்கள் இல்லை என்று சொல்லாதவரை பிரச்சனை நண்பருடையது
உண்மை. சாப்பாட்டில் பேதம் காட்டுவது மிகவும் அபூர்வம். தர்மசங்கட நிலைமையோ... நடந்தது அதுதான்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரி கோமதி அரசு அவர்களை இரண்டொரு நாட்களாக வலைத்தளத்தில் எங்கும் பார்க்க இயலவில்லையே..? நலமாக உள்ளாரா? வெளியூர் பயணங்களில் இருக்கிறாரா? எபி க்ரூப்பில் தன் வருகையைப் பற்றி ஏதேனும் தகவல் தந்துள்ளாரா ? தெரிந்தால் தெரிவுக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கோமதி அரசு அக்காவின் கணவரின் சித்தப்பா பையன் ஆன எழுத்தாளர் நாறும்புநாதன் சமீபத்தில் காலமானார். அந்த துக்கத்துக்கு அவர் போயிருப்பதால் அவரால் இங்கு வர முடியவில்லை.
நீக்குசெய்தியைப் பார்த்ததுமே நினைத்துக் கொண்டேன்.
நீக்குஅப்படியா!! விபரம் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே. இவரைப்பற்றி கூட சகோதரியின் பதிவில் சமயத்தில் தெரிவித்திருந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
நீக்குசையத் ஆஷாஜ் திறமைக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குவழமைபோல நியூஸ் ரூம் நன்று பலவித செய்திகளை அறியத்தந்தது.
பிசாசு, ரெயில் ஜோக்ஸ் இரண்டு, எனக்குப் பிடித்திருந்தது.சிரிப்பை வரவழைத்தது.
நன்றி மாதேவி.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஇன்றைய பிற பகுதிகளும் அருமை. செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன். சில ஏற்கனவே தெரிந்தவை. பொக்கிஷ பகிர்வில் அத்தனை ஜோக்குகளும் சிரிக்க வைத்தன. 65ல் 30 காசுக்கு ஒரு (வாரமா, மாதமா..?) பத்திரிக்கை கிடைத்துள்ளது. இப்போது அந்த 30க்கு என்ன மதிப்பு என மனம் யோசிக்கிறது.
அம்மா வீட்டில் இருந்தவரை இந்த பத்திரிக்கைகளை எங்கள் அண்ணா தன் அலுவலக சர்க்குலேஷனில் கொண்டு வருவார். அதில் மாலைமதியில் நிறைய கதைகளை படித்துள்ளேன். அப்படி படித்தது மட்டும் நினைவு பெட்டகத்தில் இருக்கிறது. கதைகள் நினைவில் இல்லை. குமுதத்தில் ஒரு பக்க கதைகள் சற்று ஆ.... மாக வந்திருந்தால் கூட அந்த பத்திரிக்கை என் கைகளுக்கு வராது. (அம்மா, அண்ணா தடை போட்டு விடுவார்கள்.) இப்போது வரும் திரைப்படங்களை பார்க்க வேண்டும் அவர்கள். :))) இன்றைய பதிவு அனைத்தும் நிறைவாக உள்ளது. நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களது உறவின் முறையில் துக்கம் நிகழ்ந்ததை அறிந்து வருந்துகின்றேன்...
பதிலளிநீக்குஎழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களது ஆன்மா சாந்தி அடைவதாக...
//ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களது உறவின் முறையில் துக்கம் நிகழ்ந்ததை அறிந்து வருந்துகின்றேன்...
பதிலளிநீக்குஎழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களது ஆன்மா சாந்தி அடைவதாக...//
எங்கள் துக்கத்தில் பங்கு கொண்டதற்கு நன்றி சகோ.
//சகோதரி கோமதி அரசு அவர்களை இரண்டொரு நாட்களாக வலைத்தளத்தில் எங்கும் பார்க்க இயலவில்லையே..? நலமாக உள்ளாரா? வெளியூர் பயணங்களில் இருக்கிறாரா? எபி க்ரூப்பில் தன் வருகையைப் பற்றி ஏதேனும் தகவல் தந்துள்ளாரா ? தெரிந்தால் தெரிவுக்கவும். நன்றி.//
பதிலளிநீக்குஉங்கள் விசாரிப்புக்கு நன்றி கமலா. உங்களுக்கு ஸ்ரீராம் பதில் கொடுத்து விட்டார். ஞாயிறு அன்று என் கணவரின் சித்தப்பா மகன் "இயற்கை எய்தி" விட்டார் திருநெல்வேலியில் . கோவையிலிருந்து சாரின் உடன்பிறப்புகள் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள் அதுதான் வரமுடியவில்லை.
சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் பதிலில் அறிந்து கொண்டேன் சகோதரி. மனதுக்கு வருத்தமாக இருந்தது. உங்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
நீக்குஸ்ரீராம், வலைத்தள அன்பர்கள் என்னைப்பற்றி விசாரிப்புக்கு பதில் அளித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குபதிவு அருமை. ஒருபக்க கதை பற்றியும், உங்கள் கதை பற்றியும் அலசல் அருமை.
பதிலளிநீக்குபதிவின் பின்னூட்டங்களும் நன்றாக இருந்தன.
விகடன் அட்டைப்பட நகைச்சுவை பகிர்வுகள் மிக அருமை.
நன்றி கோமதி அக்கா. உங்கள் மைத்துனர் மறைவுக்கு எங்கள் இரங்கல்கள்.
பதிலளிநீக்கு