ஆப்பிள் ரசம்
நாடு போற்றும் நல்லதொரு ரசம்!
டே!.. இதெல்லாம் உனக்குத் தேவையா?..
சரிங்க குருவே!..
ஆப்பிள் ரசம் வைப்பதற்குத் தேவையானவை :-
பச்சை ஆப்பிள் ஒன்று
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 7
பால் பெருங்காயம் சிறிதளவு
மஞ்சள்தூள் 1⁄2 tsp
கல்உப்பு தேவையான அளவு.
மல்லித்தழை சிறிது
வறுத்து அரைப்பதற்கு : -
துவரம்பருப்பு இரண்டு tsp
மிளகு ஒரு tsp
சீரகம் ஒரு tsp
தாளிப்பதற்கு :
பசுநெய் தேவைக்கு
கடுகு சிறிதளவு
சீரகம் சிறிதளவு
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
செய்முறை:
1)
பூண்டு வெங்காயம் இவற்றை உரித்தெடுத்து அலசி விட்டு கல்லுரலில் நசுக்கிக் கொள்ளவும்..
2)
பால் பெருங்காயத்தைப் பொரித்து பொடி செய்து கொள்ளவும்..
3)
துவரம் பருப்பு மிளகு சீரகம் இவற்றை இளஞ்சூட்டில் வறுத்து - பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
4)
ஆப்பிளை நாலு துண்டுகளாக நறுக்கி 750 ml தண்ணீரில் வேகவிட்டு தண்ணீரைத் தனியே வடிகட்டி வைத்துக் கொண்டு ஆப்பிள் துண்டுகளை நன்றாக மசித்துக் கொள்ளவும்..
5)
ஆப்பிளை வேக வைத்த தண்ணீரில் அரைத்த பருப்பு மிளகுப் பொடியைக் கரைத்துக் கொள்ளவும்..
6)
நெய்யில் கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து நசுக்கி வைத்துள்ள பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கி பருப்புப் பொடி கரைத்த தண்ணீரை ஊற்றவும்..
7)
இத்துடன் -
மஞ்சள்தூள், பெருங்காயத் தூள், உப்பு போட்டு இரண்டு கொதி வந்ததும் மல்லித் தழை கிள்ளிப் போட்டு இறக்கி வைக்கவும்..
ஃஃஃஃஃ
தரமான சமையல்
தரும் மகிழ்ச்சி..
நம்முடைய நலம்
நம்முடைய கையில்.
அட.. இது புதுவித ரசமாக இருக்கே
பதிலளிநீக்குஇதைப்பார்த்து கேரட் ரசம், பப்பாளிக்காய் ரசம்னுலாம் வந்துடுமோ
மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஎல்லா செய்முறையிலும் பசு நெய்னு சொல்றாரே இந்த துரை செல்வராஜு சார். நான் பெங்களூரில் பார்க்கும் பசுக்களெல்லாம் பிளாஸ்டிக் குப்பை கழிசடை உணவுகளெல்லாம் தின்கிறதே பரவாயில்லையா .. பல.ரயாக்ராஜிலிருந்து
பதிலளிநீக்குமகிழ்ச்சியுடன் தங்களுக்கு நமஸ்காரம்
நீக்குஅனைவருக்கும் நலன்கள் விளையட்டும்..
ஓம் ஹரி ஓம்
நம சிவாய...
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது பிரார்த்தனைக்கு
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான ஆப்பிள் ரசம் நன்றாக உள்ளது. புது மாதிரியான ரசம். இந்த ஆப்பிளில் சற்று புளிப்பு கலந்துள்ளதால், ரசத்திற்கு இயல்பானதாக அமையும்.
இதைப் போலவே நான் தக்காளி சேர்த்தும்/ சேர்க்காமலும், குடமிளகாய் போட்டு ரசமும் செய்வேன். அதுவும் வித்தியாசமாக இருக்கும்.
இந்த ஆப்பிள் வைத்து ஒரு முறை இவ்விதமே ரசம் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மேலதிக செய்திகளும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா..
புதிதாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஜி
பச்சை ஆப்பிள் ரசம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது! பச்சை ஆப்பிளில் ஊறுகாய் செய்திருக்கிறேன். ரசம் செய்ததில்லை சில பச்சை ஆப்பிள் வகைகளில் புளிப்பு இருக்காது. அதனால் புளிப்பு இன்னும் தேவையென்றால் எலுமிச்சை ரசம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மேலதிக செய்திகளும்
மகிழ்ச்சி..
நன்றி..
காக்க காக்க கனகவேல் காக்க...
பதிலளிநீக்குவாங்க செலவாண்ணா... வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஇந்தப் பதிவு மறந்து போயிற்று..
:-))
நீக்குஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
பதிலளிநீக்குநன்றி. நன்றிக்கு நன்றி.
நீக்குதுரை அண்ணா, நல்ல ரெசிப்பி. நல்லாருக்கு.
பதிலளிநீக்குநானும் இதைச் செய்யும் போது படம் எடுத்து எபிக்கு அனுப்புவதற்காக மொபைல் கேமராவை ஆன் செய்திருக்கிறேன் என்று நினைத்து...ஹிஹிஹி...கவனிக்கவும் இல்லை. என்னட எடுத்த பட்ம வரமாட்டேங்குதே மொபைல் கேமரா பிரச்சனையாகிவிட்டதோ என்று கவலை வந்து கடைசிலதான் ஆன் செய்யவே இல்லைன்னு ..ஹிஹிஹி..அதுக்குள்ள ரசம் செய்து முடிஞ்சு போச்சு.
ஆப்பிள் ஃபெஸ்டிவல் மனாலியில் இந்தப் பச்சை ஆப்பிளில் சூப், ஜாம், கிரேவி, கேக் என்று இன்னும் பல வகைகள் செய்திருந்தாங்க.
சூப் சுவைத்து நன்றாக இருந்திடவே அட ரசம் செய்யலாம் போலன்னு வீட்டில் செய்து பார்த்தது....
கீதா
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மேலதிக செய்திகளும்
மகிழ்ச்சி..
இந்தப் பச்சை ஆப்பிளில் சூப், , குழம்பு, கேக் என்று பல வகைகள் செய்யலாம்
நன்றி சகோ
பச்சை ஆப்பிள் ரசம் செய்முறை நன்று. பச்சை ஆப்பிள் கறி செய்திருக்கிறேன்.ரசம் செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஇதேபோல மாங்காய், அன்னாசி, திராட்சை ரசங்கள் செய்திருக்கிறேன்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மேலதிக செய்திகளும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி..