வெள்ளி, 7 மார்ச், 2025

என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது

 

கோயில்புறா - 1981ல் வெளிவந்த படம்.  வினு சக்ரவர்த்தி எழுதி, ஒரு தலை ராகம் சங்கர், சரிதா போன்றோர் நடித்த படம்.   மூன்று பாடல்களை கொடுத்திருந்தார் இளையராஜா.  மூன்றுமே அருமையான பாடல்கள்.  இந்தப் படத்தில் வரும் 'வேதம் நீ' பாடல் கெளளா ராகம் என்று விக்கி சொன்னாலும் நான் வேறு ராகத்தின் பெயரால் அறிந்திருந்தேன்.  என்ன ராகம் என்று நினைவில்லை.

இன்று பகிரப்போகும் 'அமுதே தமிழே அழகிய உயிரே' பாடல், நீலக்குயிலே உன்னோடு நான்' பாடல் ஆகிய இரண்டும் என்ன ராகம் என்பது கேள்விக்குறி!  சிலர் ரசிகரஞ்சனி என்றும், சிலர் மலயமாருதம் என்றும் சிலர் ரசிகப்ரியா என்றும் சொல்கிறார்கள்.  இன்று பகிரப்படும் இரண்டு பாடல்களுமே ஒரே ராகம்.  இந்தப் பாடல்களை பூர்விகல்யாணி என்றும் சொல்கிறார்கள்.  அவர்களுக்குள்ளேயே தெளிவில்லை.

இரண்டாவது பாடல் 1984 ல் வெளியான மகுடி திரைப்படத்திலிருந்து SPB - S. JANAKI பாடிய நீலக்குயிலே உன்னொடுநான் பாடல்.  முதல் பாடலை எழுதியவர் புலமைப்பித்தன்.  இரண்டாவது பாடல் வாலி..

என்னைப்பொறுத்தவரை இளையராஜா பாடல்களில் இரண்டு முத்துகள்.

பாடல் தொடக்கத்திலிருந்து கிடைக்கவில்லை.  இப்போதெல்லாம் நிறைய பாடல்கள் முன்பு ஆரம்பத்தில் இருந்த வடிவத்தில் இல்லாமல் வெட்டுப்பட்டு கிடைக்கின்றன.  இதுவும்!

பெண் : சரிசரி கபகரி சரிகா

பெண் : சரிசரி கபகரி சரிகா

பெண் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா

பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா

பெண் : சுவையோடு கவிதைகள் தா

பெண் : சுவையோடு கவிதைகள் தா

பெண் : தமிழே நாளும் நீ பாடு

பெண் : தமிழே நாளும் நீ பாடு

ஆண் : ஆஹா..  அப்படி இல்ல பா….
தம்பி எவ்ளோ நல்லா
அழகா பாடினான் பாத்தியா

ஆண் : தமிழே நாளும் நீ பாடு…..எங்க பாடு

பெண் : தமிழே நாளும் நீ பாடு

பெண் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
எங்க பாடுங்க

பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண் : தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்

பெண் : தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்

பெண் : தமிழிசையே
பெண் : தனியிசையே

பெண் : தரணியிலே
பெண் : முதலிசையே

பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்

பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்

பெண் : பூங்குயிலே என்னோடு
தமிழே நாளும் நீ பாடு

பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண் : பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

பெண் : பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

பெண் : கலை பலவும்
பெண் : பயிலவரும்

பெண் : அறிவு வளம்
பெண் : பெருமை தரும்

பெண் : என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது

பெண் : என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது

பெண் : என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு

பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா

பெண் : தமிழ்ப்பா

பெண் : சுவையோடு கவிதைகள் தா

பெண் : கவிதைகள் தா

பெண்கள் : தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே


பெண் : கபகரிசா ரிஸசதச
ஆண் : கபகரிசா ரிஸசதச
பெண் : சரிகபகரி கபகரி சரிசா
ஆண் : சரிகபகரி கபகரி சரிசா
பெண் : கபதப கபகரி சரிகபசா
ஆண் : கபதப கபகரி சரிகபசா
பெண் : தபதபதப
ஆண் : கபதபதப
பெண் : தபதபதப
ஆண் : கபதபதப கபதபகப
இருவர் : ஸா……ஆஆ……ஆஆஆ………….

பெண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே…………

ஆண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே…………

பெண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
ஆண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

பெண் : அதிகாலை நான் பாடும் பூபாளமே
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு
ஆண் : நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு

பெண் : ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
ஆண் : சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி
பெண் : திசைகளில் எழும் புது இசை அமுதே வா வா…..

ஆண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
பெண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
ஆண் : இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
பெண் : உள்ளம் பாமாலை பாடுதே…………

ஆண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
பெண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

பெண் : நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
தூரல்கள் நீ போட தாகம் தீரும்
ஆண் : நதி பாயும் அலையோசை சுருதியாகவே
நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்,

பெண் : மலர்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
ஆண் : பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்
பெண் : செவிகளில் விழும் சுரலய சுகமே வா வா…..

பெண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
ஆண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
பெண் : இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
ஆண் : உள்ளம் பாமாலை பாடுதே…………

பெண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
ஆண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
பெண் : ஆ….ஆ….அ……



கோயில் புறா படத்தின் யேசுதாஸ் பாடலையும் பகிர்கிறேன்.  இதை நான் எங்கே தனியாக ஒரு நாள் பகிரப்போகிறேன்?  ஒலி அளவு சற்றே கம்மியாக இருக்கும்.  ஆனால் இனிமையான பாடல்.

வேதம் நீ இனிய நாதம் நீ
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்

வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்

வேதம் நீ இனிய நாதம் நீ

கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்

இளைய தென்றல் காற்றினிலே
ஏ…..ஏ……ஏ……ஏ……ஏ……ஏ…….
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்

வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்

வேதம் நீ இனிய நாதம் நீ

அண்டம் பகிரண்டம்
உனை அண்டும் படி வந்தாய்
அண்டம் பகிரண்டம்
உனை அண்டும் படி வந்தாய்

தண்டை ஒலி ஜதி தருமோ
கமல பாதம் சதிரிடுமோ
தண்டை ஒலி ஜதி தருமோ
கமல பாதம் சதிரிடுமோ
மனமும் விழியும் தினமும்
எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே

நெஞ்சம் இது தஞ்சம் என
உனைத் தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம் புது
இசைத்தமிழ் வடித்தது
ஒருமுறை தரிசனமும் தருக
இசையில் உனது இதயம் இசையும்
மனம் குணம் அறிந்தவள்

குழலது சரியுது சரியுது
குறுநகை விரியுது விரியுது
விழிக்கருணை மழை
அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்

வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்

நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்

வேதம் நீ இனிய நாதம் நீ

38 கருத்துகள்:

  1. இன்றைய மூன்று பாடல்களுமே மிக அருமை.

    நீலக்குயிலே பாடலைச் சில மிறை கேட்டிருக்கிறேன். ஆனால் மற்ற இரண்டு பாடல்களும் வரிகள் ஓரளவு மனப்பாடம் ஆகும்படி பலமுறை கேட்ட பாடல்கள்.

    இயக்குநர்கள் இளையராஜாவிடம் சென்று பிரசாதம் வாங்கி வருவது போல பாடல்கள் வாங்கி வந்ததையும் இளையராஜாவின் பல்வேறு திறமைகளையும் இணையத்தின் பாட்டிகளில் காணும்போது அவர் மீதான பிரமிப்பு இன்னும் கூடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  

      ஆச்சர்யம் என்னவென்றால், கோயில் புறா பாடல்களை நிறைய பேர் கேட்டிருக்க மாட்டார்கள்.  இந்த மகுடி படப் பாடலை நிறைய பேர் கேட்டிருப்பார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன்.  வானொலி உபயம், நீங்கள் அந்தப் பாடல்களையும் நிறைய கேட்டிருக்கிறீர்கள் போல..  

      என்ன பாடல்கள்...  நான் கேட்டு சிலிர்த்துப் போகும் பாடல்கள்.

      நீக்கு
    2. வானொலி உபயமல்ல. ஹாஸ்டல் வாழ்க்கை

      நீக்கு
    3. ஆஹா.. 'நினைத்தபோது நீ வரவேண்டும்' என்று பாடலை வரவழைத்து கேட்கலாம்!

      நீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. மூன்று பாடல்களையும் காலை நேரத்தில் கேட்டு மகிழ்ந்தேன்.
    அடிக்கடி முன்பு கேட்கும் பாடல்கள்.
    சரிதாவின் நடிப்பை ரசித்தேன். இசையை ரசிப்பதும், தாளத்திற்கு ஏற்ப அவர் தலை, ஜிமிக்கி எல்லாம் ஆடுவதும் அழகு.
    சிறு குழந்தைகள் பாடும் முதல் பாடலில் ஆரு , குளம், கோயில், வயல் என்று காட்சிகள் அருமை. ஆடு , மாடுகள் மேய்வது அழகு.
    குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடும் போது எழும் நீர் அலையின் வட்டங்கள் அழகு.

    கடைசியில் குழந்தைகள் மணல் கோபுரம் கட்டி விளையாடுவதும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்கள்தான்.  இனிமையான பாடல்கள்.  நன்றி அக்கா.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் மூன்று பாடல்களுமே முத்தானவை. முன்பு இந்த மூன்றையுமே அடிக்கடி வானொலியில் கேட்டு ரசித்திருக்கிறேன். படம் பார்த்ததாக நினைவில்லை.

    பாடல்களின் ராகங்கள் மனதை நிறைப்பவை. தாங்களும் ராகங்களைப்பற்றி தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி. மூன்று பாடல்களும் அருமை. இப்போதும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டு ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா. படங்கள் நானும் பார்க்கவில்லை! ஒன்லி சாங்ஸ்!

      நீக்கு
  6. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  7. மூன்றுமே முத்தான பாடல்கள்... மூன்றும் எனக்குப் பிடித்தவை...

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  8. தமிழிசையே தனியிசையே
    தரணியிலே முதலிசையே...

    ஆகா...
    தமிழே உன்னால் இருந்தேன்..

    இன்றைக்குத் தமிழ் தமிழ் என்று குறட்டை விடுவோரில் எத்தனை பேருக்கு தமிழின் அருமை தெரியும்?..

    பதிலளிநீக்கு
  9. காதலி : நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
    தூறல்கள் நீ போட தாகம் தீரும்..
    ஆண் : காதலன் நதி பாயும் அலையோசை சுருதியாகவே
    நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்..

    அடடா...

    மோகனும் நளினியும் நடித்திருக்க அழகான பாடல்..

    பதிலளிநீக்கு
  10. /// வேதம் நீ இனிய நாதம் நீ
    நிலவு நீ கதிரும் நீ
    அடிமை நான் தினமும் ஓதும்
    வேதம் நீ இனிய நாதம் நீ... ///


    உடலும் நீ உயிரும் நீ
    வளமும் நீ வாழ்வும் நீ
    தனமும் நீ தவமும் நீ
    தமிழும் நீ அமுதும் நீ

    அமுது உயிர் காக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்!?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழியும் நீயே, ஊழியும் நீயே போலவா?  நன்றாயிருக்கிறது.

      நீக்கு
  11. சூப்பர் சூப்பர் பாடல்கள் ஸ்ரீராம். இப்பவும் கேட்டு ரசித்தேன்.

    வேதம் நீ - கௌளை தான் ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  12. வேதம் நீ இனிய நாதம் நீ
    நிலவு நீ கதிரும் நீ
    அடிமை நான் தினமும் ஓதும்
    வேதம் நீ இனிய நாதம் நீ...

    இந்தப் பாடலையும்,

    இதயம் ஒரு கோயில் அதில்
    உதயம் ஒரு பாடல்...

    என்ற பாடலையும் எந்தக் கோயில் சந்நிதியிலும் நேரிடையாகப் பாடலாம்...

    ஜனனி ஜனனி -
    பாடலிலும்

    மாசறு பொன்னே வருக.. - பாடலிலும் அம்பிகையின் திருநாமங்கள் பயின்று வருகின்றன..

    இருந்தமிழே உன்னால் இருந்தேன் வானோர்
    விருந்தமிழ்தம் எனினும் வேண்டேன்..

    - பழந்தமிழ்ப் பா..

    பதிலளிநீக்கு
  13. வேதம் நீ - பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிலேயே சொல்லி இருக்கிறேனே...  புலமைப்பித்தன்.

      நீக்கு
  14. ஸ்ரீராம், மலையமாருதம், ரசிகரஞ்சனி எல்லாம் சக்கரவாகம் ராகத்தோட பிள்ளைங்க. அதனாலா கொஞ்சம் அப்படியும் இப்படியும் ஸ்வரங்களைத் தொடும் போது அதாவது கீ போர்டில் (சினிமா பாட்டை சொல்கிறேன்) mix and match இருக்கலாம். ஆனா பூர்யி கல்யாணி வர சான்ஸ் இல்லை ஏன்னா அந்த ராகத்துல பிரதி மத்யமம் வருமே.

    கண்மணி நீ வரக் காத்திருந்தேன் பாடல் மலையமாருதம்.

    அமுதே தமிழே ...ரசிக ரஞ்சனியா, வர்ணரூபிணியா ? நம்ம சின்மயி அம்மா இதை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்ததில் வர்ணரூபிணி என்று சொல்லியிருக்கிறார். முன்பு வாசித்த நினைவு.

    ஆனால் ரசிகரஞ்சனியின் அம்மா சக்கரவாகம். வர்ணரூபினியின் அம்மா சூர்யகாந்தம்.

    சரி விடுங்க ஸ்ரீராம், இதுக்குப் போய் நாம குழம்பிக்கிட்டு, நமக்கு ரொம்ப ஃப்ரென்ட் ஆச்சே இல்லை?! நாம கூட அன்னிக்குக் கூட ராஜாகிட்ட பேசினோமே!!! இல்லை? ராஜாவை கூப்பிட்டு கேட்டுருவோம்! எந்த ராகத்துல போட்டிருக்கீங்கன்னு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  வர்ணரூபிணி..  அதை மறந்து விட்டேன் பாருங்க..  சென்ற வாரம் சொல்லி இருந்தேன்.  இந்த இரண்டு பாடல்கள் பற்றியும் சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன்!

      நீக்கு
  15. சரிசரி கபகரி சரிகா//

    இந்த ஸ்வரத்தை நான் 25 வருடங்களுக்கு முன்னால வீட்டுல ஒரு கீபோர்டு இருந்ததில் வாசித்துப் பார்த்தேன்....முதல் வரிகள் வந்தன....அதன் பின்னான வரிகள் வந்தால்தான் அங்கு என்ன ஸ்வரம் போட்டிருக்காங்கன்னு பார்த்தால் தான் ராகம்..

    இந்த மூன்று பாடல்களும் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்....நம்ம ராஜாவின் இந்த இசையை நம்ம வீட்டில பிரிச்சு மேய்ந்த சமயங்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்வர ஞானம் எல்லாம் கிடையாது. ஆனால் நல் இசைக்கு மயங்கி விடுவேன்.

      நீக்கு
  16. இன்றைய வெள்ளிப் பகிர்வு மூன்றுபாடல்களும் அருமையான பாடல்கள்.முன்பும் கேட்டிருக்கிறேன்.

    இன்றும் கேட்டு மகிழ்ந்தேன். பாடல்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. மூன்று பாடல்களும் கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி.

      மூன்றுமே பிரபலமான நல்ல அருமையான பாடல்கள்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!