நெல்லைத்தமிழன்:
1. தமிழ்மணம் என்று ஒன்று இருந்தபோது மாய்ந்து மாய்ந்து அடுத்தவர்களின் பதிவுகளையும் படித்த பிளாக் எழுத்தாளர்கள், இப்போது அப்படிப் படிப்பதுபோலவே தெரியவில்லையே. அப்படி என்றால் அப்போது படித்ததே சுயநலம் காரணமாகத்தானா?
& தமிழ்மணம் காலம் எல்லாம் தமன்னா காலம் போல பொலிவிழந்துவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் கூட பதிவைப் படிக்காமலேயே தமிழ்மணம் வோட்டுப் போட்டவர்கள் பலர். மேலும் அந்தக் காலத்தில் தமிழ்மணம் grading கொஞ்சம் திப்பிசங்கள் நிறைந்தவைகளாக இருந்தன என்பது என் அபிப்பிராயம்.
Blog காலத்தை, facebook களவாடிவிட்டது. சிலர் மட்டுமே இன்னும் blog படிப்பவர்களாக தொடர்கின்றனர். facebook, யுட்யூப், whatsapp ஆகிய தளங்கள் blog தளத்தை முடக்கிவிட்டன.
2. பிளாகுகளில் நீங்கள் காலையில் முதலில் பார்க்கும் பிளாக் எது?
#, & , * : இதில் என்ன சந்தேகம்? எங்கள் Blogதான்!
3. உங்களை இப்போதும் உயிர்ப்புடன் இயங்கவைக்க நீங்கள் கடைபிடிக்கும் பழக்கங்கள் என்ன என்ன?
# தினசரி சுமார் மூன்று கிலோ மீட்டர் நடை. மூச்சுப் பயிற்சி. இரண்டு வேளை தியானம்.
& பச்சைத் தண்ணீர்க் குளியல், பச்சைக் காய்கறிகள், பச்சைப் பழங்கள் உண்பது, பச்சைப் புல் தரையில், பச்சை மரங்கள் சூழ்ந்த பார்க்கில் பத்து கிலோ மீட்டர் நடப்பது என்றெல்லாம் எழுத ஆசை! ஆனால் அப்படி எல்லாம் எழுதினால் அது பச்சைப் புளுகு ஆகிவிடும்!
4. நாய் வளர்ப்பதன் காரணம் என்ன? ஒரு காரணமா இல்லை பல காரணங்களா? எனக்கு 'பந்தா' என்ற ஒரு காரணம் தவிர வேறு தென்படமாட்டேன் என்கிறது.
# சிலருக்கு நாயோடு விளையாடுவது, கொஞ்சுவது, நாய் நம் மேல் குதித்து விளையாடுவது, இவை பிடிக்கிறது. எனக்குப் பிடிக்காது என்பதால் இவர்களுக்கு ஏன் பிடிக்கிறது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை .
நம் மீது அன்பு காட்டும் பிராணி மீது நாம் அன்பு கொள்வது புரிந்து கொள்ளத்தக்கதுதான்.
& எவ்வளவு யோசித்தாலும், எனக்கும் பிடிபடாத விஷயம், இந்த நா வ சமாச்சாரம்தான். சிறு வயதில், நானும் நாய்க்குட்டி வளர்க்க ஆசைப்பட்டது உண்டு. பக்கத்து வீட்டு நண்பர், அவர்களின் வீட்டு நாய் போட்ட குட்டி ஒன்றை எங்கள் வீட்டுக்குக் கொடுத்தார். கொட்டங்கச்சியில் வைத்த பாலை மடமடவென்று நக்கிச் சாப்பிட்டது. அப்புறம் ஒரு மூலையில் போய்ப் படுத்துக்கொண்டது. மீண்டும் பால் அல்லது சாதம், மீண்டும் முடங்கல். இரவு நான் தூங்கியபிறகு, மெல்லிய குரலில் அழுதுகொண்டே இருந்தது. மறுநாள் நான் பள்ளிக்கூடம் போயிருந்த சமயம், என்னுடைய அம்மா, அதை பக்கத்து வீட்டாரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு கும்பிடு போட்டுத் திரும்பிவிட்டார்.
" எங்கே அம்மா அந்த நா கு ?"
" எதுக்குடா அந்த சனி! எப்போ பார்த்தாலும் வாலை பின்னங்கால்களுக்கு நடுவே மடக்கி வைத்துக்கொண்டு சோம்பேறித்தனமா படுத்துகிட்டு இருக்கு. ராத்திரி தூங்கவிடாம அழுதுக்கிட்டே இருக்கு. அந்த சனியனை பிறந்தவீட்டுக்கே அனுப்பிவிட்டேன். "
அப்போது அந்த ஆசை இருந்தது! ஆனால் இப்போ, யாராவது ஒரு நாயையும் கொடுத்து அதை வளர்க்க மாதம் இருபதாயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்றாலும் வேண்டாம் என்று சொல்லி ஓடிவிடுவேன்.
( நான் ஆராய்ச்சி செய்துள்ள ஒரு விஷயம் : 'நாய் வளர்க்கும் வீடுகளில் உள்ள பையன்கள் (பெண்கள் அல்ல, பையன்கள்) கொஞ்சம் மக்குகளாக இருக்கின்றனர்!'
5. நன்றாக விதவிதமான இட்லி/தோசை மாவு- ராகி இட்லி, பெசரட், இட்லி/தோசை மா, அடை, வெந்தயக்கீரை தோசை என்றெல்லாம், ரொம்ப அதிக விலை இல்லாமல் கிலோ 60 ரூபாய்க்குக் கிடைக்கும்போது, அதுபோல இடியாப்பமும், எதற்கு வீட்டில் கஷ்டப்பட்டு அரைத்து, அலம்பி என்றெல்லாம் உழலவேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா?
# பல உணவு வகைகள் நியாயமான விலைக்கு வெளியில் எளிதாகக் கிடைக்கிறது என்பது உண்மைதான். என்றாலும் அவை தயாரிப்பில் காட்டப்படும் சுத்தம் நம்மால் சரி பார்க்கப்பட முடியாத ஒன்று.
அதிக அளவில் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் சில சமயம் சரியான சுவை இருப்பதில்லை என்பதும் உண்மை.
& என் வீட்டு சமையல் உதவியாளர், சுலபமாக இடியாப்பம் செய்கிறார். குறுகிய நேரத்தில் மாவு தயார் செய்து, அதை இடலித் தட்டுகளில் இடியாப்பமாகப் பிழிந்து, ஆவியில் வைத்து எடுத்துவிடுகிறார்! அதற்கு தேங்காய்ப்பால் தயார் செய்து, ஸைட் சப்போர்ட் ஆகக் கொடுக்கிறார்!
6. ப்ரார்த்தனைக்கு மதிப்பா இல்லை ஸ்லோகத்துக்கு மதிப்பா? தன் கஷ்டத்துக்கு மனமுருகி ஒருவர் பாடல் எழுதுகிறார் அவருக்குச் சரியாகிவிடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களும் அந்தப் பாடலைப் பாடினால் கஷ்டம் சரியாகிவிடுமா?
# பிரார்த்தனை செய்வது ஆகட்டும், ஸ்லோகம் சொல்வது ஆகட்டும், இரண்டுக்கும் பலன் என்பது ஏற்படும் போது , அது தற்செயல் இல்லை என்று நாம் நினைக்கிறோம்.
இதில் ஒன்று உயர்வு, ஒன்று தாழ்வு என்று இருப்பதற்கு இடமில்லை. மனம் உருகிச் செய்யப்படுகிறதா என்பது தான் அளவுகோல் என்று பொதுவாக சொல்லப்படுகிறது.
பிரார்த்தனை பலித்தால் இறை அருள் என்றும் அது பலிக்காவிட்டால் நமது பூர்வ ஜென்ம பாபம் அது பலிப்பதற்கு தடையாகி விட்டது என்றும் நம்பி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்கிறோம். நமக்கு எது மன அமைதி தருகிறதோ அதனை நாம் நாடுவது இயல்புதானே.
6. கங்கையில் குளித்தால் பாவம் தீரும், கும்பமேளாவின்போது மூழ்கி எழுந்தால் பாவம் தீரும் என்பது நம்புபவர்களுக்கு மட்டுமா இல்லை எல்லோருக்குமா?
# பாவங்களை தீர்க்கும் புண்ணிய தீர்த்தங்களாக நமது கும்பகோணம் மகாமகக் குளம் உட்பட பல தீர்த்தங்கள் நமது சம்பிரதாயத்தில்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவைகளில் உன்னத ஸ்தானம் வகிப்பது கங்கை.
இதெல்லாம் " நம்பினவருக்கு நடராஜா " வகையான விஷயங்கள்.
பாவங்கள் தீருகின்றனவோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால் அப்படி நடக்கும் என்கிற அதீத நம்பிக்கையையும் ஒரு மன நிறைவையும் கோடிக்கணக்கான மக்களுக்கு அளிக்கிறது என்பதில் ஐயத்திற்கிடமில்லை.
= = = = =
KGG பக்கம் :
இன்றைய பதிவில், "தெய்வீகம்" என்ற தலைப்பிற்கு, வாசகர்கள் அனுப்பிய 14 படங்கள் இங்கே கொடுத்துள்ளேன்.
எல்லாவற்றையும் நீங்கள் பார்த்து, தெய்வீகம் என்ற தலைப்பிற்கு ஏற்ற ஏதாவது இரண்டு படங்களை மட்டும் கருத்துரையில் குறிப்பிடவும்.
ஒவ்வொரு படத்தின் வடகிழக்கு மூலையில் அந்தப் படத்தின் எண் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்களுக்கு காரணம் எதுவும் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை.
இதே படங்கள் எங்கள் Blog வாசகர்கள் whatsapp குழுவிலும், மின்நிலா புத்தகங்கள் whatsapp குழுவிலும், facebook பக்கத்திலும் வெளியிடப்படும்.
அதிக ஓட்டுகள் பெறுகின்ற இரண்டு படங்கள் பரிசுக்கு உரியதாக அடுத்த புதன் பதிவில் அறிவிப்போம்.
படங்கள் இங்கே:
தேர்வு செய்யுங்கள் நீதிபதிகளே!
= = = = = = = = = =
கேள்வி பதில்கள் ரசிக்க வைத்தது ஜி.
பதிலளிநீக்குதெய்வீக படங்கள்
தாயை வணங்கும் பையன் - 212
குழந்தைகள் இழுக்கும் தேர் - 213
நன்றி+ நன்றி.
நீக்குஎன் தேர்வு 203, பின் 202
நீக்குநன்றி.
நீக்குஎன் மனைவி எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டு 211 என்றாள். கூடவே நீங்கள் கலந்துகொள்ளவில்லையா என்றும் கேட்டாள்
பதிலளிநீக்கு:))))
நீக்குஉங்கள் இரண்டாவது தேர்வு எது?
நீக்குஎங்கப்பன் குதிருக்குள் இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குகீதா
:))))))
நீக்குஎன்னுடைய தேர்வு 213, 211
நீக்குகீர. இப்போ உங்களுக்கு பதிலெழுத முடியாது. பிறகு சொல்றேன் அவளுக்கு இதுபற்றித் தெரியாது
நீக்குநன்றி.
நீக்குஅவங்களுக்குத் தெரியாதுன்னு எனக்கும் தெரியும் நெல்லை.....
நீக்குஉங்களை வம்பிக்கிழுத்தேன்.
கீதா
பொதுவாகவே புகைப்படங்களை தெளிவாக எடுக்கும் சகோதரர் நெல்லைத் தமிழர் இந்த மாதிரி புகைப்படங்கள் தேர்வில் கலந்து கொள்ளாமல் இருப்பாரா.? கண்டிப்பாக கலந்து கொண்டிருப்பார். . 211 ம், இப்போது புதிதாக சேர்ந்திருக்கும் 215ம் அவருடையதாகத்தான் இருக்குமென்பது என் அனுமானம். நன்றி.
நீக்குநெல்லை! முக்திநாத், மானசரோவர் பயணமா? கைலை போக மாட்டீங்க இல்லையா? முக்திநாத் நீங்க ஏற்கெனவே போயிட்டு வந்தாச்சு இல்லையோ?
நீக்குகேள்வி 6 ப்ரார்த்தனை சரியா புரிந்துகொள்ளவில்லை எனத் தோன்றுகிறது. தன்னைத் தீயில் இட்டபோதிலும் சுண்ணாம்புக்காளவாயில் இட்ட போதும் நற்றுணையாவது நமசிவாயமே என நாவுக்கரசர் பாடியதால் அவைகளினால் பாதிக்கப்படவில்லையா இல்லை அவரின் இறை உணர்வின் பலனா? வெறும் பாடல் வரிகள் என்றால் நம்மைத் தீயில் தள்ளி நாம் இந்தப் பாடலைப் பாடினால் தீ ஒன்றும் செய்யக்கூடாது, இல்லை இந்தத் தூணிலும் எந்தத் தூணிலும் இருப்பார் என யார் சொன்னாலும் நாம் தூணை உடைத்தால் தெய்வம் வரணும்
பதிலளிநீக்குநேபாள் பார்டரை ஓரிரு மணிக்குள் அடைவோம்
// இந்தத் தூணிலும் எந்தத் தூணிலும் இருப்பார் என யார் சொன்னாலும் நாம் தூணை உடைத்தால் தெய்வம் வரணும்// அப்படி அழைக்க, பிரகலாதன் போன்ற பகவத் கிருபை பெற்ற ஆள் இருக்கவேண்டுமே!
நீக்குசமயம் தொடர்பான பல கதைகளில் மிகையும் பொய்யும் நிறைந்து இருக்கின்றன என்பது என் கணிப்பு . இது தவறாகவும் இருக்கலாம் . சில பிரார்த்தனைகள் பலிக்கலாம். பல பலிக்காமலும் போகலாம்.
நீக்குஎப்படியானாலும், நமக்கு மன அமைதி கிடைக்கிறதா என்பது மட்டுமே, ஏதோ ஒன்று பலிக்குமா பலிக்காதா என்பதை நிர்ணயம் செய்ய அடிப்படையாக இருக்க முடியும்.
ஒரு பாடலைப் பாடி தீ என்னை சுடாமல் இருக்க வைக்க முடியுமா என்று கேட்டால் முடியாது என்பதுதான் ஆணித்தரமான பதில். அப்படி நடப்பதற்கான பக்குவம் உனக்கு இல்லை என்பது ஒரு நொண்டிச்சாக்கு. எல்லாவற்றையும் விபரீதமாக மிகைப்படுத்தி சொல்லுவது நமக்கு பழக்கமாகிப் போய்விட்டது.
நீக்குநமது அபிமான நபர் , அல்லது நமது அபிமான தெய்வம், அல்லது நமது அபிமான குரு என்று வந்துவிட்டால் எதையும் நாம் நம்பத் தயாராக இருக்கிறோம். இது பற்றி இதற்கு மேல் விவாதம் செய்வது சிலர் மனம் புண்பட ஏதுவாகும்.
இல்லை ராமன் சார். கேட்பதைப் பொறுத்து நமக்கு அந்த நேரம் வந்துவிட்டாலோ இல்லை விதி இருந்தாலோ நடக்கும். இங்கு நம் பக்தி உணர்வு தீவிரமா விரும்பும் தன்மை வேண்டும். பொதுவா நமக்கு (எல்லாருக்குமே) நம்பிக்கை விசுவாசம் குறைவு. அதனால்தான் பல நடப்பதில்லை. உதாரணம் பிரம்மாத்திரம், கொடிகளாலும் கட்டிய தன்மை
நீக்குநான் தேர்ந்து எடுத்து. படம்
பதிலளிநீக்கு206 & 203
கே. சக்ரபாணி
நன்றி.
நீக்குகாக்க காக்க கனகவேல் காக்க.
பதிலளிநீக்குகாக்க காக்க கனகவேல் காக்க.
பதிலளிநீக்குவேண்டுவோம்.
நீக்குதமிழ்மணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.
பதிலளிநீக்கு//facebook, யுட்யூப், whatsapp ஆகிய தளங்கள் blog தளத்தை முடக்கிவிட்டன. //
Absolutely!
கீதா
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குகேள்வி. பதில்கள் கண்டோம்.
பதிலளிநீக்குபடத்தேர்வு 205, 211.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் நன்றாக உள்ளது.
/நான் ஆராய்ச்சி செய்துள்ள ஒரு விஷயம் : 'நாய் வளர்க்கும் வீடுகளில் உள்ள பையன்கள் (பெண்கள் அல்ல, பையன்கள்) கொஞ்சம் மக்குகளாக இருக்கின்றனர்!' /
எனக்கு இது புது தகவல். எனக்கும், என் இளைய மகனுக்கும், இந்த நாய் வளர்க்கும் ஆசை இருந்தது. ஆனால், அதை வளர்ப்பது கஸ்டமென தெரிந்து புரிந்ததும், ,இப்போது இல்லை.
பாவங்கள், புண்ணியங்கள் நாம் இந்த உலகிற்கு வரும் போதே நம்மோடு வாங்கி வந்தவை என்றுதான் நானும் நினைக்கறேன்.
இடியாப்ப படங்கள் கண்களை கவர்கின்றன. இவை பச்சரிசி மாவில் தயாரிக்கப்பட்டதா? மாவைப் பற்றிய விபரம் தெரிவித்தால் நல்லது. பயனுள்ளதாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// இடியாப்ப படங்கள் கண்களை கவர்கின்றன. இவை பச்சரிசி மாவில் தயாரிக்கப்பட்டதா? மாவைப் பற்றிய விபரம் தெரிவித்தால் நல்லது. பயனுள்ளதாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.// உதவியாளர் ஊரிலிருந்து திரும்பியதும் அவரிடம் கேட்டு எழுதுகிறேன்.
நீக்கு/உதவியாளர் ஊரிலிருந்து திரும்பியதும் அவரிடம் கேட்டு எழுதுகிறேன்./
நீக்குகாத்திருக்கிறேன். நன்றி சகோதரரே.
எங்கே பிடிச்சீங்க இத்தகைய சமையல் உதவியாளரை? எங்களுக்கும் இப்படி ஒருத்தர் கிடைச்சால் நல்லா இருக்கும்.
நீக்கு:))))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வாரத்தில் போட்டிக்கென வந்த தெய்வீக படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.
என்னுடைய முதல் தேர்வு- 206.
இரண்டாவது - 211.
போட்டியில் வெற்றிப் பெற போகிறவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வோட்டுப் போட்டதற்கு நன்றி.
நீக்குஎன்னோட தேர்வு 208, 209 , 210. அந்த ஒற்றைச் செம்பருத்தியையும் சேர்த்துக்கலாம். என்றாலும் மனதைக் கவர்ந்தது 208 மட்டுமே
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎன்னுடைய தேர்வு: முதலிடம் 204, இரண்டாம் இடம் 206
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு