வெள்ளி, 21 மார்ச், 2025

என்றும் தொடர்ந்து போவதுதான் இனிய காதல் விதியாகும் வெல்க இளமை வெல்க வாழ்க காதல் வாழ்க

 1979 ல் வெளியான நினைத்தாலே இனிக்கும் படம் பற்றி சில சுவையான குறிப்புகள்.

ஜெயசுதாவின் தங்கை சுபாஷினிக்கும் இது முதல் படம்.  சிறிய ; பாத்திரம். ஆனால் படத்தில் அவர் எந்த இடத்தில வருகிறார் என்பது தெரியாது.

தாசரி நாராயண ராவ் தான் ராஜாப்பாவாக நடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யம்.  குருநாதருக்காக அவர் ஆற்றிய கடமை.  அதையும் இப்போதுதான் கவனித்தேன்.  ராவ் / மாமா வாக நடித்தவர் பெயர் மிஸ்ரோ.  ரஜினியின் பேட்ச் மேட்டாம்.  அன்பே சிவத்தில் மிஸ்ரோவாக வருவது இவர்தானா என்று தேடிப்பார்த்தேன்.  விவரம் கிடைக்கவில்லை.

KB பீட்டில்ஸ் இசைக்குழுவினால் இன்ஸ்பைர் ஆகி இந்தப் படத்தில் இசைக்குழு போல அமைத்தாராம்.

The scene where Deepak (Rajinikanth) is challenged to flip his cigarette 10 times or lose a finger is based on Roald Dahl's Man from the South.] என்கிறது விக்கி.

சென்ற வாரம் பானு அக்கா இந்தப் படத்தில் இடம்பெற்ற 'பாரதி கண்ணம்மா பாடலை பகிர முடியுமா என்று கேட்டிருந்தார்.

இதோ பகிர்ந்து விட்டேன்.  எனக்கு இந்தப் படத்தில் வரும் எல்லா பாடல்களும் பிடிக்கும்.  பாரதி கண்ணம்மா, மேலும் சில பாடல்கள் முதல் வரிசையில் பிடிக்கும்!

இன்று அந்தப் படத்திலிருந்து மூன்று பாடல்களை பகிர்கிறேன்.  மிகவும் இனிமையான பாடல்கள் என்பதில் சந்தேகமில்லை.

வாணி ஜெயராம் : ஆ ஆஹ் ஆ ஆ ஆ ஆ ஆஹ் ஆஹ்

SPB  : ஆ ஆ ஆஹ் ஆஹா ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆ ஆ ஆஹ் ஆஹ் ஆஹ் ல லா லா

SPB  : பாரதி கண்ணம்மா
நீயடி சின்னம்மா
கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா
நீயடி சின்னம்மா

வாணி ஜெயராம் : பாரதி கண்ணய்யா
நீயே சின்னைய்யா
கேள் இதை பொன்னைய்யா
அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

வாணி ஜெயராம் : ஒரே ராகங்களில் பாடும் விதம்
மாறும் தினம் மாறும்
ஒரே ராகங்களில் பாடும் விதம்
மாறும் தினம் மாறும்
மேகங்களில் காணும் படம்
மாறும் தினம் மாறும்
அழகிய கலை அது
இவளது நிலை இது
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

SPB  : நிலா காலங்களில் சோலைகளில் ஆடும்
சுகம் கோடி
நிலா காலங்களில் சோலைகளில் ஆடும்
சுகம் கோடி
தோகை இடம் காணும் சுகம்
இன்னும் பல கோடி
பலவகை நறுமணம் தருவது திருமணம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

வாணி ஜெயராம் : பாரதி கண்ணய்யா
நீயே சின்னைய்யா
கேள் இதை பொன்னையா
SPB  : அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா

வாணி ஜெயராம் : விழாக் காலங்களில் கோவில் சிலை
பாடும் உரை பாடும்
விழாக் காலங்களில் கோவில் சிலை
பாடும் உரை பாடும்
காலை வரை காமன் கனை
பாயும் வரை பாயும்
சுகம் ஒரு புறம் வரும்
இடையிடை பயம் வரும்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

SPB  : அலைமோதும்படி ஓடும் நதி
நெஞ்சம் இள நெஞ்சம்
அலைமோதும்படி ஓடும் நதி
நெஞ்சம் இள நெஞ்சம்
ஆசை வலை தேடும் சுகம்
மஞ்சம் மலர் மஞ்சம்
முதன்முதல் பயம் வரும்
வரவர சுகம் வரும்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

வாணி ஜெயராம் : பாரதி கண்ணய்யா
நீயே சின்னைய்யா
கேள் இதை பொன்னையா
SPB  : அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
வாணி ஜெயராம் : அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்


===========================================================================================

இந்தப் படத்தின் பாடல்கள் யாவற்றையும் எழுதியவர் கண்ணதாசன்.  கீழ்வரும் பாடலின் வரிகள் மிகவும் அருமை.  இல்லை?  இசை எம் எஸ் விஸ்வநாதன்.

பாடல் வரிகளைத் தேட மாட்டீர்கள் நம்புகிறேன்!

=====================================================================================

இது ஒரு தேனிசை மழை என்றுதான்   .சந்தேகமில்லாமல்...

நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன் மோகம் கொண்டு
முகத்தைக் காணத் தேடுகின்றான்

நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்

 என்றும் தொடர்ந்து போவதுதான்
இனிய காதல் விதியாகும்
என்றும் தொடர்ந்து போவதுதான்
இனிய காதல் விதியாகும்
வெல்க இளமை வெல்க
வாழ்க காதல் வாழ்க

 நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன் மோகம் கொண்டு
முகத்தைக் காணத் தேடுகின்றான்

நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்

25 கருத்துகள்:

  1. நேபாள்ல புது சிம் வாங்கணும். நாங்க வாங்கவில்லை. தங்கும் ஹோட்டல்ல odd timeல WiFi. என்ன பண்ண? நேற்று முக்திநாத் தரிசனம் முடிந்தது. இன்று பொகாரா திரும்புகிறோம். அடுத்த மூன்று நாட்களும் நேபாள்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   நேற்றைய பதிவில் கமெண்ட்ஸ் ஆரம்பித்து வைத்ததோடு அம்பேல் ஆயிட்டீங்க...

      நேபாளில் யாரைப் பார்த்தாலும் நம்ம அபார்ட்மெண்ட் கூர்க்கா போலவே இருக்கிறதா?!!

      நீக்கு
    2. நாம் எங்க அவங்இளைப் பார்க்கப்போகிறோம் ஹிஹி. நம்ம கொய்ராலா நேபாளியாமே

      நீக்கு
  2. இன்றைய இரு பாடல்களில் முதல் பாடல் கேட்டிருக்கிறேன். பெரிதாக விரும்பியதில்லை. இரண்டாம்பாடல் சுத்தம்

    பதிலளிநீக்கு
  3. முதல் இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். நல்ல பாடல்கள்.

    மூன்றாவது பாடல் இப்பொழுதுதான் கேட்கிறேன்.இனிமை.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    என்னவோ இன்று காலையிலிருந்தே எந்த பதிவுக்கும் கருத்துக்கள் தர இயலவில்லை. இப்போதுதான் என் கருத்தை தர முடிகிறது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. பாரதி கண்ணம்மா பாடலுக்கு கண்ணதாசன், MSV, வாணி ஜெயராம், SPBஎல்லோருக்கூம் நன்றி. அதை பகிர்ந்தமைக்கு உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வாவ்! ஸ்ரீராம் நினித்தாலே இனிக்கும், கேட்டாலும் இனிக்கும்.....பாடல்கள்.

    முதல் இரண்டு பாடல்களும் ஒரே போன்றிருக்கும் ராகம். ஆனாலும் இரண்டுமே அருமையான பாடல்கள்.

    நிறைய கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம். நினைத்தாலே இனிக்கும் பாட்டில் ஆரம்பத்தில் வரும் இசை ரொம்ப அருமையா இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் மூன்று பாடல்களுமே அருமை. ஆனால், முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இனிமையான இசையில், இனிமையான குரல்களில், இனிமையான பாடல்.இந்தப் பாடல் கேட்கும் போதே மனதுக்கு ரம்யமாக இருக்கும்.

    மற்ற இரண்டும் கேட்ட நினைவில்லை இப்போது கேட்கிறேன். படத்தைப்பற்றிய பல செய்தி தொகுப்பிற்கு நன்றி.

    கூகுள் பிரச்சனையோ என்னவோ காலையிலேயே எந்த கருத்துரைகளும் வழங்க இயலவில்லை. இப்போதுதான் உங்கள் தளத்தில் சரியாகி உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. மூன்றாவது பாட்டும் அருமையான பாட்டு....

    இரண்டாவது பாட்டு வியக்க வைக்கும் ஒன்று. ஹம்மிங்க், இரண்டே இரண்டு வார்த்தைகள் அவ்வளவுதான் ஆனால் அதில் இடையிடையே வேரியேஷன்ஸ் எஸ்பிபியும் சரி இசை அமைத்த எம் எஸ் வியும் சரி பின்னியிருக்காங்க.

    எனக்கு ரொம்பப் பிடித்த பாட்டு இது...இரண்டு வார்த்தைகளை மட்டும் வைத்து ஒரு இசை, பாடல்!!! சீனுக்கேத்த பாட்டு . அருமையான காட்சி அமைப்பு....

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம், எனக்கும் இந்தப் படத்தில் வரும் எல்லாப் பாடல்களும் பிடிக்கும்.

    சூப்பர் பாடல்கள். 79 பாடல்களுக்காகவே இப்படம் ஓடியது. கூடவே சிங்கப்பூரை சுத்திக் காட்டிடுவாங்க!

    பீட்டெல்ச் இசைக்குழு - அந்தச் செய்தி மட்டும் தெரியும். படத்தைப் பற்றிய மற்றவை புதுசு. படம் பார்த்ததில்லை ஸ்ரீராம் அதனால தாசரி சீன் பத்தி தெரியலை.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இரண்டாவது பாடல் மிக அருமை. இந்தப்படத்தில் எல்லா பாட்டுக்கும் நன்றாகத்தான் இருக்கும். அப்போது இந்த பாட்டுக்கள் மிக பிரபலம்.

    ஒரு படத்தின் டைட்டில் பாடலாக வருவது இதுதான் முதல் முறையா? இல்லை இதன் முன்னோ, பின்னோ இப்படி வந்திருக்கிறதா? யோசிக்க வேண்டும். ஆனால், உங்களுக்கு இவையெல்லாம் அத்துபடி...! சுலபமாக தெரிந்திருக்கும். மூன்றாவதையும் கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.

      டைட்டில் பாடல்கள் நிறைய இருக்கின்றன கமலா அக்கா.

      நீக்கு
  11. மிகச் சிறப்பான பாடல்கள்..

    மெல்லிசை மன்னரின் புகழ் மகுடத்தில் மற்றுமோர் வைரம்...

    மகிழ்ச்சி..
    நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!