சனி, 29 மார்ச், 2025

ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவரின் பெயரில் தன் சொந்த பணத்தில் 1,000 ரூபாய் டிபாசிட் மற்றும் நான் படிச்ச கதை

 

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், அடஹள்ளட்டி கிராமத்தில் உள்ள பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் சித்தமல்லா கோத்தா, தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர், தன் பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்க முயற்சிக்கிறார்.  பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவரின் பெயரில், தன் சொந்த பணத்தில் 1,000 ரூபாயை வங்கியில் டிபாசிட் செய்கிறார். நடப்பாண்டு ஒன்பது மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களின் பெயரில் வங்கியில் 1,000 ரூபாய் டிபாசிட் செய்துள்ளார். கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள இந்தப்பள்ளி, 2005ல் திறக்கப்பட்டது; 2015 வரை, ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை, 60 - 70 மாணவர்கள் இருந்தனர். ஆனால், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறையால், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது.  சித்தமல்ல கோத்தா, இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக, 2023ல் நியமிக்கப்பட்டார். பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார். கிராமத்தின் துவக்க, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக, வினாடி - வினா போட்டி ஏற்பாடு செய்து, தன் சொந்த செலவில் பரிசு வழங்குகிறார். கோடை காலத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறார். நன்கொடையாளர்களின் உதவி பெற்று, பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்கிறார். ஒன்றாம் வகுப்பில் இருந்தே மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறார். அரசு பள்ளிக்காக இவர் செய்யும் சேவை, மற்றவருக்கு முன் மாதிரியாக உள்ளது.  தலைமை ஆசிரியர் சித்தமல்ல கோத்தா கூறியதாவது: கடந்தாண்டு எங்கள் பள்ளியில், ஒன்றாம் வகுப்பில் இரண்டு மாணவர்கள் இருந்தனர்; நடப்பாண்டு ஒன்பதாக உயர்ந்துஉள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அவர்களின் பெயரில் வங்கியில், 1,000 ரூபாய் டிபாசிட் செய்வது, என் சிறிய முயற்சி. இதன் பயனாக, ஒன்றாம் வகுப்பு மட்டுமின்றி மற்ற வகுப்புகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

===========================================================================================






=================================================================================================
மாரடைப்பை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் செயலியை வடிவமைத்த 14 வயது சிறுவனுக்கு ஆந்திர முதல்-மந்திரி பாராட்டு தெரிவித்தார். அமராவதி, ஆந்திர மாநிலம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவரது மகன் சித்தார்த். (14). இவர் இவர் மாரடைப்பை சில வினாடிகளில் கண்டுபிடிக்கும் மொபைல் செயலியை கண்டுபிடித்துள்ளார். இதனை அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் சோதனை செய்து பார்த்தத பார்த்ததில் மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியப்பட்டது. இந்நிலையில் மகேஷ், தனது தாய்நாட்டிற்கு மகனை அழைத்து வந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் இந்த செயலியை ஸ்மார்ட்போன் மூலம் இதய துடிப்பு ஒலிகளை பதிவுசெய்து, ஆரம்பகட்ட இருதய நோய்களை துல்லியமாக கண்டறியப்பட்டது. ஒரேநாளில் சுமார் 700 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.  இதையடுத்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார் ஏற்பாட்டின்பேரில் நேற்றுமுன்தினம் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சித்தார்த் சந்தித்தார். தனது கண்டுபிடிப்பு குறித்து முதல்-மந்திரிக்கு நேரடியாக சித்தார்த் விளக்கினார். அப்போது ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணும் உடனிருந்தார். சித்தார்த்துக்கு முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


================================================================================================



==================================================================================================================




mso-pagination: none; text-align: center;">நான் படிச்ச கதை (JKC)

ஒரு இண்டர்வியூவில்

 கதையாசிரியர்: ஜே.வி.நாதன்

ஜே.வி.நாதன்,
பொறுப்பாசிரியர்,
‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழ்,

சென்னை.

ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் பிறந்தவர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வேலூரில் வாசம். ‘ஆனந்த விகடன்’ நிறுவனத்தில் ஆசிரியர் இலாகா செயல் அலுவலராகவும், அப்போதைய விகடன் எம்.டி.யான திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியவர். விகடனுக்குப் பிறகு, ‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தார்.

சக்தி விகடன் மாதமிருமுறை இதழில் பிற மாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற ஆலயங்களை நேரில் தரிசித்து, அவை குறித்துத் தொடர்ந்து எழுதினார். ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் தொடரை 48 அத்தியாயங்கள் சக்தி விகடனில் எழுதி, அதை ஆனந்தவிகடன் நூலாக வெளியிட்டது. இதுவரை அந்நூல் இரண்டு பதிப்புகள் வந்து வாசகர்கள் மத்தியில் அமோக ஆதரவு பெற்றுள்ளது.

கேரள திவ்ய தேசங்கள் என்று கேரளாவில் உள்ள மகாவிஷ்ணுவின் திருத்தலங்களைப் பற்றிய தொடர் ஒன்றை சக்தி விகடன் இதழில் தொடர்ந்து எழுதிப் புகழ் பெற்றவர் இவர்.

மேலதிக விவரங்களுக்கு

ஜே வி நாதன்   <======இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒரு இண்டர்வியூவில்

அந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு வந்த ஏழெட்டுப் பெண்களும் அவர்களோடு என் மகள் லதாவும் வரிசையாக நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். நான் கண்ணாடித் தடுப்புக்கு வெளியில் ரிசப்ஷனில் காத்திருந்தேன்.

இது லதாவுக்கு ஏழாவது முயற்சி. இந்த வேலையாவது கிடைக்க வேண்டுமே என்று சிதம்பரம் நடராஜப் பெருமானை வேண்டிக் கொண்டேன். இங்கிருந்து பார்த்தாலே அவர்கள் அமர்ந்திருப்பதும் சற்றுத் தள்ளி பி.. டூ எம்.டி என்ற பலகை இருந்த மேஜையில் ஒரு கம்ப்யூட்டருக்கு முன் இளம் பெண் ஒருத்தி அமர்ந்து ஏதோ வேலையில் மும்முரமாக இருப்பதும் தெரிந்தது. அவளுக்கு இடப்பக்கம் எம்.டி.யின் அறைக் கதவு..

பார்த்துக் கொண்டிருக்கும்போதே எம்.டி.யின் அறைக்கதவு திறந்தது. கதவின் வெளிப்புறம் நின்ற பியூன் விறைப்பாக சல்யூட் அடித்து முழுமையாகக் கதவைத் திறந்து பிடித்துக்கொள்ள, கோட்டும் சூட்டும் கழுத்தில் டையுமாக எம்.டி. வெளிப்பட்டார். அவரது முகம் கடுகடுவென்று இருந்தது. எனக்கு அந்த முகம் பரிச்சயமானதாகத் தெரிந்தது. சட்டென்று நினைவில் ஒரு ஃபிளாஷ்அட, இது நம்ம தியாகு! உடம்பு நடுங்கியது. தியாகுவா?. அவன்தான் இங்கே எம்.டி.யா?

எழுந்து நின்ற பி..விடம் ஏதோ உத்தரவு கொடுத்தபடி பக்கவாட்டிலிருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்தார் எம்.டி. இந்தத் தியாகுவும் நானும் எவ்வளவு நெருக்கம்! சிதம்பரம் விளங்கியம்மன் கோயில் தெருவில் என் வீடு. வீட்டின் முன் அறையில் மாலை வேளையில் மட்டும் இயங்கும் லெண்டிங் லைப்ரரி வைத்திருந்தேன். அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய சிரஞ்சீவி, மேதாவி, சந்திரமோகன், கலாதர் ஆகியோரின் மர்ம நாவல்கள், தேவனின் துப்பறியும் சாம்பு, வாண்டுமாமாவின் வீர விஜயன் என நிறையப் புத்தகங்கள். ஒரு வாரம் வைத்துப் படித்துத் திருப்பித் தர ஒரு அணா வாடகை.

தியாகு என் லைப்ரரிக்கு வந்து தொடர்ந்து புத்தகம் எடுத்துப் போவான். அவனே நான் படித்த பள்ளியில்தான் படிக்கிறான் என்று எனக்குத் தெரியாமற் போயிற்று. நான் 9 ம் வகுப்பிலிருந்து 10 ம் வகுப்பு தேறியதும் சி பிரிவுக்குப் போகச் சொன்னார்கள். அங்கு முதல் பெஞ்சில் தியாகு இருந்தான். சந்தோஷத்தோடு தன் பக்கத்தில் உட்கார இடம் ஒதுக்கிக் கொடுத்தான். அவன் வீடு பள்ளி செல்லும் வழியில் இருந்ததால் போகும்போது அவனை அழைத்துச் செல்லுவேன். திரும்பி வரும்போது ஒன்றாகவே வீடு திரும்புவோம்.

இருவரும் குண்டு மல்லிகை என்று ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். நான் கதை கட்டுரைகள் எழுதுவேன் அவன் நன்றாக ஓவியம் வரைவான். குண்டு மல்லிகையை வகுப்பில் சுற்றுக்கு விடுவோம்.

அவன் வீட்டுக்கு அருகில் ஒரு சந்து. அங்கு இரவில் தினமும் ஷம்ஷு பாய் எனக்கு சிலம்பம் கற்றுக் கொடுப்பார். தியாகு ஓர் ஓரமாக நின்று அதைப் பார்த்து ரசிப்பான். நான் சிலம்பம் விளையாடுவதை ரசிக்கத்தான் அவன் அங்கு வருவதாக நினைத்த என் நினைப்பு தவறு என்று தாமதமாக எனக்குப் புரியவந்தது. அவன் தினமும் அங்கு வந்ததற்குக் காரணம், சரசு!

அந்தச் சிலம்பப் பள்ளிக்கு எதிர் வீட்டில்தான் சரசு என்கிற சரஸ்வதி இருந்தாள். அவளும் எங்கள் பள்ளிக்கூடம்தான். அவள் 10-ம் வகுப்பு ஏ பிரிவு. படிப்பில் படு சுட்டி! அவள் பரத நாட்டியம் கற்று வந்தாள். பள்ளி ஆண்டு விழாக்களில் அவளுடைய நாட்டியம் கட்டாயம் இடம் பெறும். பாம்பு நாட்டியத்தில் அவள் கெட்டிக்காரி. இரு உள்ளங்கைகளையும் சேர்த்து நல்ல பாம்பின் படம் போல வைத்துக்கொண்டு, சுழன்று சுழன்று ஆடி அப்ளாஸை அள்ளுவாள்.

நானும் மேலவீதி காபிக்கடை பாண்டியனும் ஒருநாள் ஜதை போட்டு சிலம்பத்தில் மோதியபோது தியாகு கைதட்டினான். கூடவே, இன்னொரு கைதட்டல் சத்தமும் கேட்டது. எதிர்வீட்டு ஜன்னலில் முழு நிலவாக நின்று சிரித்தபடி, சரசு கைதட்டிக் கொண்டிருந்தாள். என் இதயம் பூரிப்பில் அதிர்ந்தது. உற்சாகமான என் சிலம்பக் கழி வீச்சில் பாண்டியனின் கையிலிருந்த சிலம்பம் எகிறி வானில் பறந்தது.

சரசுவின் சிரிப்பு என் மனதில் ஆழப் பதிந்து விட்டது. அன்று முதல் நானும் தியாகுவும் சரசு பள்ளிக்குக் கிள்ம்பிய சில நிமிடங்களில் கிளம்பி, சற்று தூரத்தில் பின் தொடருவோம். பள்ளியில் எங்காவது வழியில் பார்த்தால் சரசு என்னை நோக்கிச் சிரிப்பாள்; நானும் பதிலுக்குச் சிரிப்பேன்.

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என எல்லாவற்றிலும் தியாகுதான் பள்ளியில் முதல் பரிசைத் தட்டிச் செல்வது வழக்கம். இரண்டாவது பரிசு பெரும்பாலும் சரசுவுக்குத்தான்! கொஞ்ச நாளிலேயே பள்ளிக்குப் போகும்போதும், வீட்டுக்குத் திரும்பி வரும்போதும் சரசுவும் அவள் தோழிகள் சிலரும் எங்களோடு சேர்ந்து பேசிக் கொண்டே நடப்பது வழக்கமாகி விட்டது. நுட்பமாகக் கவனித்தபோதுதான் தெரிந்தது, தியாகுவும் சரசுவும் பக்கம் பக்கமாகச் சேர்ந்து நடப்பது, அடிக்கடி அவள் எதற்கோ வெட்கபட்டுச் சிரிப்பது, பேச்சுச் சுவாரசியத்தில் அவள் இவன் கையைத் தட்டித் தமாஷ் செய்வதுஎன் மனதுள் பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

பள்ளி விழாவுக்கு நாடகம் ஒன்று திட்டமிடப்பட்டது. சேர நாட்டு அரசனாக தியாகுவும் சரசு அரசியாகவும் வேடம் ஏற்று ஒத்திகை தினமும் மாலையில் வகுப்பு முடிந்ததும் நடந்தது. இருட்டியபின் தியாகு, சரசு இருவர் மட்டுமே தனியாகப் பேசியபடி வீடு திரும்பினார்கள்.

எனக்குப் பொறுக்க முடியவில்லை.

ஒருநாள் சரசு பள்ளிக்கு வந்தபோது அவளுடைய அப்பாவும் உடன் வந்தார். அழுது அழுது சரசுவின் முகம் வீங்கியிருங்தது. இருவரும் ஹெட்மாஸ்டர் ரூமுக்குப் போனார்கள். சற்றுநேரத்தில் வீட்டுக்குக் கிளம்பி விட்டார்கள். சரசு டி.சி. வாங்கிக் கொண்டு போய்விட்டதாகப் பள்ளி முழுவதும் பேச்சு அடிபட்டது.

தியாகு பிறகு என்னிடம் நொந்துபோய்ச் சொன்னான். “என்னையும் சரசுவையும் இணைத்து யாரோ மொட்டைக் கடிதம் போட்டிருக்காங்கடா! நாங்க காதலிக்கிறோமாம்; வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கப் போகிறோமாம்எந்தப் பாவி இப்படியெல்லாம் கதை கட்டி விட்டானோ?”

செங்கல்பட்டுக்கு சரசுவின் அப்பா மாறுதல் வாங்கி விட்டதாகவும், அங்குள்ள பள்ளியில் சரசு சேரப்போவதாகவும் விஷயம் தெரியவந்தது.

தியாகு ஒருநாள் மாலையில் ஸ்கூல் கிரவுண்டில் என் சட்டையைப் பிடித்து நெருக்கி, என் கன்னத்தில் பளாரென்று அறைந்தான். “ஏண்டா உனக்கு இந்த வேலை? நீதான் அந்த மொட்டைக் கடிதத்தை எழுதினவன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. சரசுவோட அப்பா ஊருக்குப் போகும்போது அந்தக் கடிதத்தை என் கிட்டே காட்டினார். உன் கோணல் கையெழுத்து எனக்குத் தெரியாதா? உன் கையெழுத்து மாதிரியே உன் புத்தியும் ஏண்டா கோணலாப் போச்சு? துரோகி! இனிமே என் மூஞ்சியிலேயே விழிக்காதே!” என்று கூச்சல் போட்டான். கூட்டம் கூடி விட்டது.

ஆம், அந்தத் தப்பைச் செய்தவன் நான்தான்! நானும் அவனும் சேர்ந்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதால் என் கையெழுத்து அவனுக்கு நிரம்பவே பரிச்சயம் ஆகியிருந்தது. அதற்கப்புறம் அவன் என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டான்.

காலம் வேகமாக ஓடுகிறது இல்லையா? நான் பி.. முடித்து விட்டு அரசு உத்தியோகம் கிடைத்து, திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானேன், அம்மா, அப்பா, நான்கு தங்கைகள் என்று பெரிய குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளும் என் தோளில்! இடையில் என் மகளைக் கஷ்டப்பட்டு இன்ஜினீயரிங் காலேஜில் சேர்த்தேன். நன்றாகப் படித்துப் பட்டமும் வாங்கினாள். அவளுக்கு ஒரு வேலை கிடைத்தால்தான் குடும்பக் கஷ்டம் தீரும் என்ற நிலைஇதோ, இந்தக் கம்பெனியின் எம்.டி. என் நண்பன். என் மூஞ்சியிலேயே முழிக்காதே! என்று பல வருடங்களுக்கு முன் என்னைச் சாடியவன்! இந்நிலையில் இண்டர்வியூவுக்கு வந்திருக்கும் லதா என் மகள் என்று தெரிந்தால் எவ்வளவு ஆத்திரம் கொள்வான்?

சற்று நேரத்தில் இண்டர்வியூவுக்கு வந்திருந்த பெண்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு உள்ளே போய்த் திரும்பினார்கள். முள்ளின் மீது உட்கார்ந்திருப்பது போல நான் உட்கார்ந்திருந்தேன். லதாவின் முறை வந்தது. உள்ளே போனாள். மனசில் லேசான வலி. சேஅன்று ஏன் அப்படி ஒரு கேவலமான காரியத்தைச் செய்தோம்? எத்தனயோ வருடங்கள் கழிந்தும் அது இன்று பாதிப்பை ஏற்படுத்துகிறதே?

தோளில் ஒரு கரம் விழ, சட்டென்று சுய நினைவுக்கு வந்தேன். லதா!

“என்னம்மா… இண்டர்வியூ முடிஞ்சதா?” என்றேன், பலவீனமான குரலில்.

“வாங்கப்பா, போகலாம்!” என்று முன்னே நடந்தாள்.

“என்னம்மா சொன்னாங்க?”

கம்பெனியின் வாசலுக்கு வந்து கொஞ்ச தூரம் நடந்ததும் சாலையோர மர நிழலில் நின்றாள். ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினாள். வாங்கிப் பிரித்தேன். என்ன ஆச்சர்யம்! சம்பளம், இதர அலவன்ஸ்கள் என்று மாதம் நாற்பதாயிரம் ரூபாய் நிர்ணயித்து என் மகளுக்க்கு அப்பாயின்மெண்ட் ஆர்டர்!

என்னால் நம்பவே முடியவில்லை; திக்குமுக்காடி நின்றேன்.

ஆனால், லதாவின் முகத்தில் அதற்கான சந்தோஷமில்லையே, ஏன் வருத்தமாக இருக்கிறாள்?

“ஏம்ப்பா அப்படிச் செஞ்சீங்க?” என்றாள் மெல்லிய, அழுத்தமான குரலில்.

“என்னம்மா சொல்றே? நான் என்ன செஞ்சேன்?” என்றேன்.

அவள் உதடுகளில் விம்மல் வெடித்தது. கண்களில் குபுக்கென்று நீர் பூத்துச் சிதறியது.

“இந்தக் கம்பெனியின் எம்.டி. உங்க பள்ளிக்கூட நண்பராமே? ரெண்டுபேரும் ரொம்ப நெருக்கமாப் பழகினவங்களாமே? அவருக்கு நீங்க எப்பேர்ப்பட்ட கெட்ட பேரை ஏற்படுத்தினீங்கன்னு விவரமா சொன்னாருப்பா. அப்படிச் செய்ய உங்களுக்கு எப்பிடிப்பா மனசு வந்துச்சு?”

என் உடல் நடுங்கியது. முப்பது வருடங்களுக்குப் பிறகு என்னைப் பற்றி என் மகளிடம் போட்டுக் கொடுத்துப் பழி தீர்த்து விட்டான் தியாகு. லதா தொடர்ந்து சொன்னாள்: “அப்பா, உங்க மேல் நான் எவ்வளவோ மதிப்பு வெச்சிருந்தேன். எல்லாம் போச்சுப்பா! உங்களை என் அப்பான்னு சொல்லவே நா கூசுது!”

மகளின் பேச்சில் என் உச்சி முதல் உள்ளங்கால் வரை கூனிக் குறுகியது. “லதா!” தள்ளாடினேன்.

“இருந்தாலும் உன் அப்பா மீதுள்ள பகையை மனசுல வெச்சுகிட்டு திறமைசாலியான உனக்கு இந்த வேலையை நான் கொடுக்க மறுத்தா அது நேர்மையே இல்லைன்னு சொல்லி, எனக்கான அப்பாயின்மெண்ட் ஆர்டரை என் கையில் கொடுத்தாருப்பா! அவர் உங்களைப் பற்றிய விவரத்தைச் சொன்னபோது, நீங்க வெளியில்தான் காத்திருக்கீங்கன்னு நான் அவர்கிட்டே சொல்லலை. எப்படியப்பா சொல்ல முடியும்?”

“ஸாரிம்மா… அந்த வயசில் என் புத்தி அப்படிப் போயிடுச்சு! தப்புதான். என்னை மன்னிச்சுடும்மா!” என்றேன், தழுதழுத்த குரலில்.

“நான் எப்படிப்பா உங்களை மன்னிக்க முடியும்? தப்பு பண்ணினவங்க கட்டாயம் தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகணும்னு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க? நீங்க பண்ணின தப்புக்குத் தண்டனை வேண்டாமா?” என்றபடியே லதா அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை இரண்டாக, நாலாகக் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டாள்.

“ஐயோ!” என்று அலறினேன்.

“என்னப்பா, என்ன ஆச்சு?” என்ற குரல். என்னை யாரோ உலுக்கினார்கள்.

திடுக்கிட்டுக் கண் விழித்தேன். எதிரில் லதா. அவள் அருகில் புன்முறுவலோடு நிற்பது.. தியாகு!

அப்படியானால்… இவ்வளவு நேரம் நான் கண்டது கனவா?

லதா சிரித்தாள். “எம்.டி.சார் உங்க பால்ய நண்பராமேப்பா? என் ரெஸ்யூமில் உங்க பெயரை ராமேசன்னு பார்த்ததுமே, எந்த ராமேசன்? சிதம்பரத்தில் இருந்தாரே, அவரா?”ன்னு கேட்டார்ப்பா. நான் ஆமாம்னேன். “அடடே, அவன் என்னோட நெருங்கிய ஃப்ரெண்டாச்சேம்மா. இப்ப எங்கே அந்தப் படவா?”னு கேட்டார். “இங்கேதான் ரிசப்ஷன்ல உட்கார்ந்திருக்கார்”னு சொன்னதும், ரொம்பச் சந்தோஷத்தோடு ஓடி வந்திருக்காரு. நீங்க என்னடான்னா, பகல்லயே தூங்கி வழியறீங்க?” என்று செல்லமாகக் கோபித்தாள்.

தியாகு என்னைக் கட்டிக் கொண்டான். “படவா! எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து? சிலம்பம் கிலம்பம்லாம் ஆடி, உடம்பை இன்னும் கிண்ணுனு வெச்சிருக்கியே! நான் தான் தொப்பை போட்டுட்டேன். வாடா உள்ளே! உன் பொண்ணு உன்னை மாதிரி இல்லே. ரொம்பவும் புத்திசாலி… ஷி ஈஸ் அப்பாயிண்டட்!”

எம்.டி.யின் அறைக்குள் ஏ.ஸி. சில்லிட்டது. கண்கள் பனிக்க கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, “என்ன மன்னிக்கணும் தியாகு.. அன்னிக்கு நான்…” என்று நான் பேச ஆரம்பித்தபோது, என் பெண்ணுக்குத் தெரியாமல், “உஸ்ஸ் ..” என்று என்னை அடக்கிவிட்டு, “சரி, உன்னையும் உன் மகளையும் சந்தித்த சந்தோஷம் எனக்கு. என்ன ஸ்வீட் சாப்பிடலாம், சொல்லு ராமேசா?” என்று புன்னகையுடன் கேட்டான் தியாகு.

பேச முடியாமல் சிலையாக அமர்ந்திருந்தேன் நான். என் கண்ணில் ஏனோ கண்ணீர் பொங்கி வந்தது.

பின்னுரை.

வித்தியாசமான திருப்பம் வேண்டி ஆசிரியர் செய்த சினிமா கனவு கொஞ்சம் செயற்கையாக தோன்றுகிறது. எல்லாம் நன்மைக்கே என்று கடைசியில் வேலை கிடைத்தது என்ற செய்தி வாசகர்களுக்கு எதிர்பார்த்த முடிவை தருகிறது.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற முறையில் தியாகு ராமேசனை பழி வாங்கி விட்டார்

(இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்ற சிறுகதை. – ஆனந்த விகடன் வார இதழ்) 


23 கருத்துகள்:

  1. முதல் செய்தி பெலகாவி கிராம பள்ளி பற்றிய செய்தி மிக மிக அருமையான செய்தி.

    ரயிலில் பயணிக்கும் போது தில்லிக்கானாலும், மும்பைக்கானாலும் சரி, ஆந்திரா பக்கமானாலும், நிறைய கிராமங்களை, மலைக்கிராமங்களைப் பார்க்கும் போது மனம் ஒரு புறம் நல்ல காற்றுச் சூழல், பசுமை என்று நினைத்தாலும், குழந்தைகளுக்குப் பள்ளி வசதி, மருத்துவ வசதி எல்லாம் எப்படி என்ன செய்வாங்க, தினப்படியான விஷயங்களுக்கு எப்படிச் சமாளிக்கறாங்க என்று நிறைய தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில கிராமங்கள் மிகவும் வறுமையாக, வறண்ட பூமியாக இருக்கும். மக்கள் தொலை தூரம் சென்று நீர் எடுத்துக் கொண்டு போவதையும் பார்க்கலாம். மனம் வேதனைப்படும். கிராமங்களுக்கான விஷயங்களுக்கு அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டும், அப்பதான் கிராமத்திலிருந்து குடும்பங்கள் பிழைப்பு தேடி நகரத்திற்குப் பெயர்வது எல்லாம் குறையும் இப்படிப் பல சிந்தனைகள் விரியும்.

      கீதா

      நீக்கு
  2. சீமா குமாரி ஜார்கண்ட் வந்துவிட்டதே பாசிட்டிவ் செய்தியில் முன்பே...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பாவா மெடிக்கல்ஸ் செய்தி மனதை நெகிழ்ச்சியடையச் செய்தது. நல்ல மனம் படைத்த மனிதர்கள் இன்னும் பூமியில் வாழ்கிறார்கள். ஷாஹுல் ஹமீது பதிவில் சொன்னது போல் இப்படியான விஷயங்களை நிறைய பகிர வேண்டும். எதை எதையோ பகிர்வதற்குப் பதில்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. மகேஷின் கண்டுபிடிப்பு நிஜமாகவே உதவும் என்பதில் ஐயமில்லை. இன்னும் சில கேள்விகள் எழுகின்றன, விளக்கங்கள் வேண்டியுள்ளது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கான்சர் ஆராய்ச்சி செம...ரிவர்ஸல் மெத்தட்...இது எல்லா கான்சர் வகைகளுக்கும் பொருந்தினால் நல்லதுதான்.

    இப்போது இந்த ரிவர்ஸல் மெத்தட் சர்க்கரை வியாதிக்கும் பேசப்படுகிறதுதான். ஆனால் சர்க்கரை வியாதிக்காரர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நல்ல கதை. எழுதிய விதமும் பிடித்திருக்கு.
    குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் போது மனம் எப்படி எல்லாம் செயல்படும் என்பதும் கதையில் ...

    சின்ன விஷயம்தான் ஆனால் அழகாக எழுதியிருக்கிறார். இன்டெர்வியூ எனும் தலைப்பு டக்கென்று கதைக்குள் என்ன சாராம்சம் என்பதையும் சொல்லாதது, கவர்ந்தது, தலைப்பு நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமான திருப்பம் வேண்டி ஆசிரியர் செய்த சினிமா கனவு கொஞ்சம் செயற்கையாக தோன்றுகிறது. //

    இல்லை ஜெ கே அண்ணா. அது வாசிப்பவர்களின் மன நிலை பார்வையைப் பொருத்து.

    என்னைக் கேட்டால் யதார்த்தம் என்பேன். காரணம்...நம் மனம்.

    என் மகன் 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, சைக்கிளில் செல்லப் பழக்கப்படுத்த தொடங்கியிருந்த நேரம். அதுவரை நான் இருசக்கர வாகனத்தில் கொண்டுவிட்டு அழைத்துவந்து கொண்டிருந்தேன். ஆனால் அவனும் தனியாகச் செயல்பட வேண்டும், வெற்றி தோல்விகளுக்குப் பழகிக் கொள்ள வேண்டும் (ஏனென்றால் அவன் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் கடைசிப் பரீட்சை வரை பாசானதே இல்லை!) தைரியம் வர வேண்டும், எங்களுக்கும் தோல்விகளே பழக்கப்பட்டுப் போனதால்...சமூகத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று பயிற்சிகள் தொடங்கியிருந்தேன்.

    அடையாறில் பள்ளியில் மிகுந்த போக்குவரத்துப் பகுதியைக் கடந்து செல்ல வேண்டும்...அதுவும் காலை நேரம். அடையாறு குடியிருப்புப் பகுதிகள், தெருக்களிலும் அதீத போக்குவரத்து இருக்கும், பெரிய சாலையை இணைக்கும் இடையே செல்லும் சின்ன சாலைகளும் மிகுந்த போக்குவரத்து, பெரிய சாலையில் சிக்னலைத் தவிர்க்க இப்படியான உள்பக்க சாலைகள் வழியாக, மத்தியகைலாஷ் சிக்னலுக்குச் செல்வோரும், டைடல் பார்க் சிக்னலுக்குச் செல்வோரும் நிறைய.

    மகன் இவற்றைக் கடந்து 3 1/2 கிலோமீட்டர் செல்ல வேண்டும். கொஞ்சம் பக் பக்கென்றுதான் இருக்கும். தினமும் பள்ளி விட்டு சரியாக 4.30 க்கு வீட்டிற்கு வந்துவிடுபவன் 5 மணியாகியும் வரவில்லை. அப்படியான நேரத்தில் என் மனதில் விரிந்த எண்ணங்கள் காட்சிகள்.....அவன் வரும் வரை....அவன் வருவது தெருவில் வந்ததும்தான் யதார்த்த உணர்வுக்கு வந்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் கதையில் வரும் அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வும்....//முள்ளின் மீது உட்கார்ந்திருப்பது போல நான் உட்கார்ந்திருந்தேன். //

      இது போதும், நம் மனம் கற்பனையில் assumptions களில் புகுந்து புறப்பட...

      //அன்று ஏன் அப்படி ஒரு கேவலமான காரியத்தைச் செய்தோம்? எத்தனயோ வருடங்கள் கழிந்தும் அது இன்று பாதிப்பை ஏற்படுத்துகிறதே?//

      அதுதான். வாழ்க்கையின் ஓட்டத்தில் சில விஷயங்கள் மனதிற்குள் பின் தள்ளப்பட்டிருந்தாலும், அவை ஆழ்மனதில் இருக்கத்தான் செய்யும். அவை அந்ததத் தருணங்களில் வெளிப்படும். அப்பிரச்சனை சரியாகத் தீர்க்கபப்டவில்லை என்றால் மனம் கோணங்கித்தனமாகப் பல assumptions களில் கற்பனையில் செயல்படும்.

      கீதா

      நீக்கு
    2. ​//வித்தியாசமான திருப்பம் வேண்டி ஆசிரியர் செய்த சினிமா கனவு கொஞ்சம் செயற்கையாக தோன்றுகிறது.//

      கனவுகளுக்கும் எண்ணங்களுக்கும் வித்தியாசம் உண்டு. கனவுகள் காட்சிப் பொருளாய் மனதில் தோன்றும். எண்ணங்கள் வெறும் கற்பனை மாத்திரமே காட்சிகள் இல்லை. இங்கு கதையில் காட்சிகளை விவரிக்கிறார் ஆசிரியர். அவ்வாறு விவரித்து விட்டு கடைசியில் அவற்றை கனவு சீன் ஆக்குகிறார்.

      உங்கள் மகன் உங்களுக்கு கொடுத்த அனுபவம் எங்களுக்கும் உண்டு. எப்போதும் வரும் நேரத்தில் வராததால் (மாலை 6 மணியாகியும் வரவில்லை) ஆறு மணிக்கு ஒருவர் மகனை ஆட்டோவில் கொண்டு வந்து வீட்டில் இறக்கி விட்டார்.... தலையில் கட்டுகளுடன்.

      பஸ் பிடிக்க ரோடை க்ராஸ் செய்தவன் மீது ஸ்கூட்டர் இடித்து விட்டது. ஸ்கூட்டர் காரர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் கட்டு போட்டு வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார்.
      Jayakumar

      நீக்கு
    3. நான் அதை விவரிக்கவில்லை ஜெ கே அண்ணா. எனக்கும் காட்சிகளாய்தான் ஓடின.....அதை கதையாகவும் எழுதியிருக்கிறேன். அந்த சில நிமிடங்கள் என்று தலைப்பு கொடுத்திருந்தேன் என்று நினைக்கிறேன்.

      ஒரு நொடி போதும், மனதில் காட்சிகள் விரிய....of course அது ஒவ்வொருவர் மனம் பொருத்து. மனம் பதற்றம் பொருத்து.

      ஓ உங்க மகனுக்கும்...பல பெற்றோர்களுக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.

      கீதா

      நீக்கு
    4. நல்ல காலம் ஜெ கே அண்ணா, தலைப்பாகையோடு போச்சுன்னு சொல்வாங்களே அப்படி...அப்போதெல்லாம் ஃபோனும் கிடையாதே டக்கென்று தெரியப்படுத்த, இல்லையா?

      மகனுக்கும் கார் இடித்துத் தள்ளிய அனுபவம் உண்டு. நல்லகாலம் மகனும் காயங்களோடு தப்பித்தான். ஆனால் அந்த ஆள் கண்டுக்காமல் போய்விட்டான்.

      கீதா

      நீக்கு
    5. மனதிற்குக் பகலில் எந்த இடத்தில் இருந்தாலும்....ஒரு செகன்ட் கண்ணை மூடி யோசித்தாலும்....இல்லைனா விழித்து இருந்தாலுமே மனம் அதுவும் குற்ற உணர்வு இருப்பதால் கண்டபடி யோசிக்கும் இக்கட்டான சூழல் வேறு அந்த நண்பர் வேலை கொடுக்கும் இடத்தில்....அப்ப கிடைக்குமா கிடைக்காதா? அவன் என்ன சொல்வான், என்று மனம் போகும் சான்ஸ் உண்டு.

      எனவே மனதில் உள்ள குற்ற உணர்வு எப்படிப் படுத்தி மனதை எங்கு கொண்டு செல்கிறது ஒரு சில நிமிடங்களில் என்பதைச் சொல்ல....

      கீதா

      நீக்கு
  8. நானும் ஜெ கே அண்ணாவும் மட்டுமே பேசிக்கிட்டிருக்கோம் யாரையும் காணும்? கமலாக்கா?
    கோமதிக்கா மாலையில் வருவாங்க....ஆனால் மத்தவங்க?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ... நான் எப்போதும் மாலையிலா வருவேன். இதுவரை காலையே வந்து விடுவதாகத்தான் ஞாபகம். ஹா ஹா ஹா . ஆனால், இன்று அமாவாசை வேலைகள் காலையில் கைகளை கட்டி விட்டன. இப்போது குழந்தைகளுடன் வெளியில் வந்துள்ளோம். கண்டிப்பாக இரவில் தூங்கப் போகும் முன் வந்து விடுவேன். . நன்றி சகோதரி.

      நீக்கு
    2. கமலாக்கா....உங்களைக் காணலையேன்னு தேடினேன் காலைல....
      கோமதிக்காதான் மாலையில் வருவாங்கன்னு ....

      யாரையும் காணும் கமலாக்கா? - இப்படி போட்டிருக்கேன் பாருங்க...அதாவது உங்களை காலைல காணலியேன்னு!!!
      ஓ ஆமாம்ல அமாவாசை வேலைகள் ஓகே ஓகே...

      சூப்பர் குழந்தைகளோடு வெளியில் வந்திருப்பது ஜாலி...எஞ்சாய் மாடி...கமலாக்கா

      கீதா

      நீக்கு
    3. //நானும் ஜெ கே அண்ணாவும் மட்டுமே பேசிக்கிட்டிருக்கோம் யாரையும் காணும்?// நான் நினைத்தேன் நீங்க மாத்திரம்தான் தனியா பேசிட்டிருக்கீங்களோ என்னவோன்னு. சரி சரி.. ஏதோ பிரச்சனையாயிருக்கும், நமக்கெதற்கு என்று நினைத்தேன் ஹா ஹா ஹா

      நீக்கு
    4. ஓகே சகோதரி தங்கள் கருத்தை புரிந்து கொண்டேன். தங்களின் உற்சாக வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நேற்று வீட்டிருந்தே செல்லுமிடத்திறகு கார் வசதி என்ற குழந்தைகளின் அன்பான வறுப்புறுத்தலுடன், சென்று வந்தோம். இரவு திரும்பி வரவும் மிகவும் தாமதமாகி விட்டது. இனிதான் கதைப் பதிவை படித்து பார்க்க வேண்டும். நான் சொன்னபடி இரவு படுப்பதற்குள் கதையை வாசிக்க இயலவில்லை. தூக்கம் வந்து விட்டது. மன்னிக்கவும். பிறகு இன்றைய மதியத்தில் கதையைவாசித்து கருத்தை இடுகிறேன். மிக்க நன்றி சகோதரி.

      நீக்கு
    5. நெல்லை, சிரித்துவிட்டேன்....ஹிஹிஹிஹி....

      கீதா

      நீக்கு
    6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கமலாக்கா நான் மிரட்டியும், திரும்பவும் மன்னிக்கவும் என்ற வார்த்தை எல்லாம் எதுக்கு?!!!!!!!!!!!!!!!!ஹாஹாஹாஹா...... யதார்த்தம் எல்லாருக்குமே வெளியில் சென்று வந்துவிட்டால் தூக்கம் வரும். ஓய்வு எடுக்கத் தோன்றும் ஒன்றுதான்.

      விளக்கங்கள் கொடுக்கவே தேவையில்லை, அடிக்கடி நன்றி, மன்னிப்பு இதெல்லாம் தேவையில்லை கமலாக்கா. Casual conversation.

      கீதா

      நீக்கு
    7. ஹா ஹா ஹா. நீங்கள் இப்படி அடிக்கடி மிரட்டியதால்தான் இப்படி மன்னிப்பு என்ற வார்த்தை வந்து விடுகிறது என சொல்ல மாட்டேன் சகோதரி. ஹா ஹா ஹா.
      என் இயல்பு அப்படி வந்து விடுகிறது. இன்னமும் இன்று முழுவதுமே என்னால் இயல்பாக வலைதளம் வர இயலவில்லை பாருங்கள். என்னவோ வேலைகள். இத்தனைக்கும் பிரமாதமாக சமையல் எதுவும் செய்யவில்லை. அப்படியும் இன்றைய நேரங்கள் பறந்து விட்டன. வருகிறேன். நாளைக்கும் எப்படியோ...! உங்களுடன் இப்படி மனம் விட்டு பேசுவதற்கு நன்றி சகோதரி.

      நீக்கு
  9. மாணவர்களுக்கு பண உதவி செய்யும் அதிபர் வாழ்த்துவோம்.

    கதைக்குள் வரும் கனவு இளமைக்காலத்தில் நடந்த குற்ற உணர்வை கிளறுகிறது. நண்பரின் பெண்ணுக்காக உதவும் நட்பு வாழ்க.

    பதிலளிநீக்கு
  10. பாஸிடிவ் செய்திகள் அருமை.
    கதை நன்றாக இருக்கிறது.
    கதை பதின்ம பருவத்தின் குணங்களை சொல்கிறது.
    குற்றத்தை புறம் தள்ளி பள்ளி நாளில் தனக்கு நணபராக இருந்தவரின் மகளுக்கு வேலை கொடுத்தும், மற்றும் நண்பரை தேடி வெளியே வந்து பழைய அன்போடு பேசியது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!