எழுத வந்த போது ஏற்கனவே பேப்பரில் ஒரு கதை இருந்தது.
இன்னமும் எதுவுமே எழுதாமல் எப்படி வந்ததது இது?
கதையில் ஒரு நாளின், ஒரு வீட்டின் அன்றாட நிகழ்வுகள் இருந்தன.
படித்து முடித்ததும் ஏமாற்றம் தலைதூக்க தன்னை அறியாமல் உதடு பிதுங்கியது.
"இதில் என்ன சம்பவம் இருக்கிறது? ஒன்றுமே இல்லாமல் ஒரு நாளின் நிகழ்வு.."
கதையின் நாயகன் கேட்டான். "என்ன சம்பவம் வேண்டும் உனக்கு? இவ்வளவு சம்பவங்கள் வரிசையாக நடக்கும்போது?"
"யார் நீ?"
"நீ படித்த கதையின் நாயகன் என்று வைத்துக் கொள்ளேன். எழுபது வயசு நாயகன்"
"ஒரு திருப்பமோ, மாறுதலோ இந்த தினசரி வரிசையில் ஒன்றும் இல்லையே"
"என்னய்யா சத்தம் அங்கே?"
"ஏழாம் நம்பர் ரூம் எழுத்தாளர் ஸார்.. தினசரி படுத்தல். கதை எழுதறாராம்"
"வா போய்ப்பார்ப்போம்... தலைவலி... தூக்கத்தைக் கெடுக்கறாரு.."
."திருப்பம், மாறுதல்னா.... என்ன செய்யணும்? வெய்யிலில் சமைக்கணும், மழையில் குளிக்கணுமா? நாயைக் கடிக்கணுமா?"
"எழுபது வயசாச்சுன்னு சொன்னே... ஏன் கோபப்படுகிறாய்?"
"வயதானவன் என்று தெரிந்தும் பேப்பர் நாயகன் என்பதால் மரியாதை உன் வாயில் வரவில்லை.."
"ஊரும் தெரியாத பேரும் தெரியாத, ஏன் உருவமே தெரியாத உனக்கு நான் ஏன் மரியாதை கொடுக்கணும்?
"என்னய்யா.. கேக்கறாரா, சொல்றாரா..."
"இருங்க.. பார்ப்போம்..."
"அப்போ நீ எழுதப்போற கதைல ஒரு மரியாதையும் இருக்காது ம*ரும் இருக்காதுன்னு சொல்லு"
"மரியாத கெட்டுடும் கிழவா... இறங்கி வெளில போ... கதைல நீ மட்டும்தான் இருக்கியா?
"சத்தம் போடாதே.. என் மனைவி உடம்பு சரியில்லாம தூங்கறா"
"சரி.. அவளையும் இழுத்துகிட்டு வெளில போ நாயே... நான் என் மனசுல இருக்கறதை எழுதறேன்.. "
"இவ்வளவு நாள் எழுதினியே.. என்ன கிழிச்சே?"
"என்னய்யா.. புரியுதா....
அதான் பார்க்கறேன் ஸார்...
யோவ்.. பேப்பர்ல இருக்கற மனுஷனோட பேசறாராம்... அதுவும் அவர்தான், இதுவும் அவர்தான் போல... ஆமாம்.. அந்த பேப்பர்ல ஏதாவது எழுதி இருக்காரா?"
"அட, நீங்க வேற ஸார்.. உங்க ரூம்லேருந்து ரெண்டு A4 சீட் எடுத்து நான்தானே கொடுத்தேன். பேப்பர் எம்ட்டியாகத்தான் இருக்கு..."
"நீயும் நானும் இங்கதான் நிக்கறோம்.. மதிக்கிறாரா பாரேன்.."
"தனி உலகத்துல இருக்கார் ஸார்.."
"எத்தனை வகையான கேஸ் பாரு..."
"வாங்க ஸார்... அவங்க ஆபத்தில்லாம உரையாடிகிட்டிருக்கட்டும். நாம போய்த் தூங்கலாம்"
"இப்ப உன் பேச்சுல மரியாதை குறையுது.. கிழவா..."
"நீ என்ன சின்னப்பையனா? இந்தக் கதைல வித்தியாசம் மாறுதல் இல்லைன்னியே... லூசு முண்டம்.. நான் உன் கூட பேசுவது வித்தியாசம் இல்லையா?"
"என்னை பயமுறுத்த பார்க்காத... உன்னை இப்போதே கிழித்துப் போட்டு விடுகிறேன்... ஏய்.. பறக்காதே... ஓடாதே... ஆம்பளையா இருந்தா ஒரு இடத்துல நில்லு... ஏய்....ஏய்...."
"கேரக்டர் எழுத்தாளனோட எங்காவது பேசிக் கேட்டிருக்கியா? சந்தோஷப்படாம என்னைக் கிழிக்க வர்றே.. பைத்தியம்..."
"கேரக்டரா... வெத்து பேப்பர் நீ... நான்தாண்டா உன்னைப் படைக்கணும் அதிகப்ரசங்கி..."
"ஐயோ... லூட்டி தாங்கலியே..."
"காதுல பஞ்சு வச்சுக்கோங்க ஸார்"
"சாதாரண பேப்பர்தானே நானு? முடிஞ்சா பிடிச்சுப் பார்றா மட எழுத்தாளா... புடிச்சு என்னை மாத்தி எழுது பார்ப்போம்...."
"ஹா.. ஹா... ஹா... என்ன சுவர்ல முட்டி முட்டி விழறே..... எழுந்திரு... பிடி என்னை.. நீ ஆம்பளைதானே?"
"எங்க பறந்தாலும் விடமாட்டேண்டா... இன்னிக்கி என் கதைதான் பேப்பர்ல வரப்போகுது..."
ஹா.. ஹா.. ஹா... ஹோ... ஹோ... ஹோ.... ஹீ.. ஹீ... ஹீ... உயரத்துல பறந்து வந்து பிடிப்பியா?"
"உன்னை இப்பவே இல்லைன்னு பண்றேன் பாரு..."
"என்ன ஆச்சு அந்த ஏழாம் நம்பர் ரூம் எழுத்தாளர் விஷயம்?"
"முடிந்தது. முற்றும் போட்டுட்டாரு.. இனி அவர் தொல்லை இல்லை நமக்கு.. ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க... அடுத்து அங்க யார் வருவார்களோ..."
தலையப் பிச்சுக்கலாம் போல இருக்கு
பதிலளிநீக்குஒருவேளை இதெல்லாம் முற்போக்கு எழுத்து வகையைச் சேர்ந்ததோ? நாமதான் வளரலையோ?
தலையைப் பிச்சுக்கிறதுக்கு பதில் மொட்டையே அடிச்சிகிட்டாரே.
நீக்குJayakumar
ஹா.. ஹா... எல்லாம் ஒரு முயற்சிதான். என்னென்ன வகை புரிதல்கள் வருகின்றன என்று பார்க்கலாம்!
நீக்குஇதில் கவனித்தீர்களானால் 99.9 சதவிகிதம் உரையாடல்கள்தான்.
நெல்லை முற்போக்கு என்பதை விட, புதிய புதிய பரிணாமங்கள். இல்லைனா ஒரே வடிவத்தில் ஒரே இடத்தில் எழுத்து நின்றுவிடுமே.
நீக்குஅது போல இப்படியான பிரச்சனைகள் அதிகம் பேசப்படுவதில்லை. அது வேறு ஒரு சொல்லில் சொல்லப்படுகிறது. உடல் பிரச்சனைகளைப் போலதான் இதுவும்.
சமூகத்தை, நம்மைச் சுற்றி உற்று நோக்கினால் நிறைய புரிந்து கொள்ள முடியும். எழுதவும் நிறைய கிடைக்கும்.
வாசகர்களும் கண்டிப்பாக வளர வேண்டும் நெல்லை. இல்லைனா தேக்கம் உருவாகிவிடும். எப்படி டெக்னாலஜி வளர வளர டெக்னாலஜி என்று இல்லை, ஒவ்வொரு துறையிலுமே மேம்படுத்தல் முக்கியமோ அப்படித்தான் எழுத்தும்.
கீதா
ஆ!!! ஸ்ரீராம், முதல் சில வரிகளைப் படித்ததும்....ஆஹா....நம்ம மனச புடிச்சிட்டாரா இல்லை படிச்சிட்டாரான்னு.....ஏன் சொல்லுங்க ...
பதிலளிநீக்குநான் தேடணும் இப்ப....கொஞ்சம் எழுத முடியாம ஒரு சுணக்கத்துல நான் இருந்தப்ப, நானும் மனசும் பேசிக்கறாப்ல ஒன்று எழுதினேன். தலைப்பு என்ன வைத்தேன் மறந்து போச்சு...தேடுகிறேன்......
உங்க கதைய முழுசும் வாசித்துவிட்டு வருகிறேன்.
கீதா
கொஞ்சம் எழுத முடியாம ஒரு சுணக்கத்துல நான் இருந்தப்ப,//
நீக்குஇப்ப மட்டும் என்னவாம்னு உள்ளே குரல் கேக்குது!
கீதா
உண்மையில் கீதா... அந்த முதல் வரியை மறுபடி கடைசியில் போட்டு 'உங்கள் பாணியில் இதைத் தொடர்ந்து ஒரு கதை எழுதுங்களேன்' என்று சொல்ல நினைத்தேன்.
நீக்குயாரும் எழுத மாட்டார்கள் என்பதால் விட்டுவிட்டேன்!
அப்படி எல்லாம் நினைக்கப்படாது கேட்டேளா ஸ்ரீராம்....!! ஹிஹிஹிஹி
நீக்குதேடிக் கொண்டிருக்கிறேன் ஸ்ரீராம். அது முடித்து வைத்த ஒன்று....
கீதா
எப்படியும் அடுத்த மாதம் முதல் வாரம் உங்கள் கதைதான்!
நீக்குரெண்டு கதைகள் எழுதியிருப்பதை முடிக்க நினைத்துள்ளேன். அனுப்புகிறேன் ஸ்ரீராம்.
நீக்குகீதா
ஏப்ரல் முதல் செவ்வாய் உங்கள் கதைதான் கீதா...
நீக்குகன்னா பின்னான்னு திட்டி எதிர்மறையாக வரப் போகும் கருத்துகளுக்கு இப்பவே என் மனசை தயார்பண்ணிக்கிட்டிருக்கேன் ஸ்ரீராம்!!!!!!!!!
நீக்குவேறும் முடிக்க நினைச்சிருக்கேன்.....பார்ப்போம்.
கீதா
ஹா... ஹா... ஹா...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குகாக்க காக்க கனகவேல் காக்க.
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குமனிதன் பாதி மிருகம் பாதி, ஆளவந்தான் கேஸ் போல! இரு மனதும் ஒன்றை ஒன்று ஆக்ரமிக்கும் முயற்சியில் நிஜம் தோற்றுவிடுவது போல் இருக்கிறது.
பதிலளிநீக்குசில வரிகள் புன்சிரிப்பு.
கீதா
உண்மை. இது ஒரு மாதிரி அல்லாட்டத்தைக் குறிக்க எழுதியது! தலைப்புதான் எனக்கு திருப்தியாய் இல்லை. அவசரம்! நேரமாகி விட்டது! கமாலா அக்கா சஜஸ்ட் செய்திருக்கும் தலைப்பை வைத்து விடலாமா என்று யோசிக்கிறேன்!
நீக்குஸ்ரீராம் மனம் படும் பாடு நிலை புரிந்தது கதையில்.
நீக்குகீதா
ஹையோ.. என்ன புரிந்தது என்று எனக்கும் சொல்லுங்கள் கீதா...
நீக்குஅதான் கருத்தில் உள்ளதுதான், ஸ்ரீராம்....கதையின் கதாபாத்திரம் இரு மன நிலை....
நீக்கு//"ஏழாம் நம்பர் ரூம் எழுத்தாளர் ஸார்.. தினசரி படுத்தல். கதை எழுதறாராம்"
"வா போய்ப்பார்ப்போம்... தலைவலி... தூக்கத்தைக் கெடுக்கறாரு.."//
இந்த வரிகளே சொல்லிவிடுகின்றனவே......மனம் கொஞ்சம் புரண்ட எழுத்தாளர். ட்ரீட்மென்டில். அவருக்குள் போராட்டம். நல்ல எழுத்தாளராக இருந்திருக்க வேண்டும். அறிவு கற்பனை வளம் கூடுதலாக இருந்திருக்க வேண்டும் அந்தக் கதாபாத்திரம்
நேரிட்டே அனுபவம் உண்டு என்பதால் டக்கென்று புரிந்து கொள்ள முடிந்தது, ஸ்ரீராம், அதான் சொன்னேன் நல்ல கற்பனை என்று......கூடவே அந்த வரிகள்....வலு சேர்க்கின்றன
கீதா
நன்றி.. நன்றி கீதா.
நீக்குsplit personality
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று உங்கள் (நீங்கள் படைத்தது) கதையாகத்தான் இருக்குமென நினைத்தபடி வந்தேன்.அதன்படியே நீங்கள்.
"ஒரு பேப்பரின் கதை." கதைக்கு தலைப்பை நான் சூட்டி விட்டேன். நல்ல வித்தியாசமான சிந்தனை கதை.
பாடலில் பி(ப)றந்த கதை அருமை. என் கருத்தின் வரிகளையும் சுருக்க நினைக்கிறது உங்கள் கதையின் வரிகள். ஹா ஹா ஹா.
எப்படியோ நீண்ட கதைகளையும் வடித்து சுருக்க கதைகளாக்கும் திறமையில் நீங்கள் "ஆளவந்தான்" ஆகி விட்டீர்கள்.
பொருத்தமான 7 நம்பர் ரூம்வாசி வேறு கதை நாயகனாக கிடைத்து விட்டார். ஹா. ஹா. கதையை மிக ரசித்தேன். இது போல் பல கதைகள் உங்களிடமிருந்து தொடரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எழுதிய பின் பாடலின் காட்சிகளை படமாகச் சேர்த்தேன். முதலில் இணையத்திலிருந்து வேறு படங்கள் எடுத்து வைத்தேன். பாடலின் ஒரு படத்தை மட்டும்... கமல் பேப்பரைத் துரத்திக் கொண்டு நடைபோடும் காட்சியை - மட்டும் சேர்க்கலாம் என்று நினைத்தேன். அப்புறம் இப்படி செய்து விட்டேன்!!!
நீக்கு// நீங்கள் "ஆளவந்தான்" ஆகி விட்டீர்கள். //
ஆ... இதற்கு வேறு பொருள் இருக்கிறதா?!!!
அப்புறம் ஆளவந்தார் கொலை வழக்கு வேறு நினைவுக்கு வருகிறது. யாரும் ஆட்டோ அனுப்பி விடாதீர்கள்! ஹா.. ஹா.. ஹா...
/எழுதிய பின் பாடலின் காட்சிகளை படமாகச் சேர்த்தேன். /
நீக்குஎழுதிய பிறகா? அருமை. பாடலுக்கேற்ற வரிகள் எழுத்தாக வந்ததோ என நினைத்தேன்.
/அப்புறம் ஆளவந்தார் கொலை வழக்கு வேறு நினைவுக்கு வருகிறது. யாரும் ஆட்டோ அனுப்பி விடாதீர்கள்! ஹா.. ஹா.. ஹா.../
அச்சச்சோ...! அது வேறா? இத்தனையையும் நீங்கள் நினைவில் கொண்டும்.... ஒரு கதை எழு(பற)ந்தது என்றால் ... உங்கள் துணிவுக்கு வாழ்த்துகள். ஹா ஹா ஹா. நன்றி.
பேப்பரின் கதை பொருத்தம் என்றாலும், கமலாக்கா...இது மனம் படும் பாடு......
நீக்குகதையின் கதை? நிழலா நிஜமா? இப்படி தலைப்புகள் கருத்தில் கொடுக்க வந்தேன்....உங்க கருத்து பார்த்ததும் இங்கு இப்படியே கொடுத்துவிட்டேன்....
ஸ்ரீராம் கும் சேர்த்து இங்கு
கீதா
இந்தியாவின் அல்லது தமிழகத்தின் பிரபல கொலை வழக்குகள் என்கிற புத்தகத்தில் பிரதான கொலை வழக்கு விவரம் இந்த 'ஆளவந்தார் கொலை வழக்கு'.
நீக்குமுப்பதுகளிலோ, நாற்பதுகளிலோ நடந்தது என்று ஞாபகம்.
கீதா... வெற்றுத்தாளும் வெறும் சண்டையும் அல்லது வெற்றுத்தாள் வெறும் சண்டை! எப்படி?
நீக்கு/பேப்பரின் கதை பொருத்தம் என்றாலும், கமலாக்கா...இது மனம் படும் பாடு......
நீக்குகதையின் கதை? நிழலா நிஜமா? இப்படி தலைப்புகள் கருத்தில் கொடுக்க வந்தேன்....உங்க கருத்து பார்த்ததும் இங்கு இப்படியே கொடுத்துவிட்டேன்....
ஸ்ரீராம் கும் சேர்த்து இங்கு/
உண்மைதான் சகோதரி. நல்ல கருத்து. நல்ல தலைப்பு. யோசிக்க, யோசிக்க இது போல் நிறைய வரும்.
கதை மனம் படும் "பாட்டை" விவரிக்கிறது. அதற்கு அந்த "பாடலும்" துணை போகிறது. மொத்தத்தில் ரசிக்கும் வண்ணம் இன்றைய "செவ்வாயை" மலர வைத்து தந்து விட்டார் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள்.
சகோதரர் ஸ்ரீராமின் தேர்ந்தெடுத்த தலைப்புகளும் அருமை. நன்றி.
ஸ்ரீராம், கதையில் என்ன இருக்குன்னு வாசகர்களுக்குத் தெரியாம தலைப்புனா நீங்க சொல்றது ஓகே.....ம்ம்ம்ம்ம்
நீக்குகமலாக்கா ஆமாம் நீங்க சொல்றதுபோல யோசிக்க யோசிக்க நிறைய கிடைக்கும்...
கீதா
மனம் பற்றிய மிக ஆழமான ஒன்று மறைமுகமாக இருக்கிறது இதில். எனக்கு அப்படிப் புரிந்தது. இயலாமையின் போது - உடல் இயலாமை என்பது மட்டுமல்ல, நினைத்ததை அல்லது செய்ய நினைப்பதைச் செய்ய முடியாமல் போகும் போது - EQ என்பது சற்றுக் குறைவாக இருப்பவர்களின் உள் மனம் ஒருவரை எப்படி எல்லாம் படுத்தும் என்பதை நான் நேரில் கண்டவள் என்பதால்....கதையின் போக்கைப் புரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குநல்ல கற்பனை, ஸ்ரீராம். உங்க கற்பனைய ரசிக்கிறேன் பாராட்டுகிறேன். இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் நல்ல வடிவம் கிடைத்திருக்குமோ!?
கீதா
இன்னும் சில உரையாடல்களில் கணம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். இயலவில்லை. நேற்று இரண்டு ரிட்டயர்மெண்ட் பார்ட்டி. அதற்கு சென்று விட்டு வந்து வீட்டில் வந்திருந்த கார்பென்டரைச் சமாளித்து, அப்புறம் வந்த வாஷிங் மெஷின் ரிப்பேர்க்காரரை பேசி அனுப்பி...
நீக்குபார்த்தால்
செவ்வாய் வெற்றிடமாக இருக்கிறது. அவசர யோசிப்பில் கொஞ்சம் இங்குமங்கும் படித்து திடீரென மனதில் தோன்றியது இது!! மன்னித்துக் கொள்ளுங்கள்.
எதுக்கு மன்னிப்பு எல்லாம். உங்களின் யதார்த்தப் பிரச்சனைகள் புரிகிறது...அப்ப கமலாக்காவின் கருத்தின் கீழ் கொடுத்த தலைப்புகள் யதார்த்தத்தோடும் இணைந்து பொருந்தும் என்று தோன்றுகிறது ஸ்ரீராம்.....
நீக்குஎனக்கும் இப்படித்தான் நிலைமை...என்னென்னவோ பணிகள்...மனதில் ஓட்டங்கள் அது தேவையில்லை என்று நினைத்தாலும், சொல்லப்பட்டாலும், மனம் அதில் போய்விடுகிறது.
கீதா
// எதுக்கு மன்னிப்பு எல்லாம். //
நீக்குஉங்களை எல்லாம் தலையைப் பிய்த்துக்கொள்ள வைத்து விட்டேன் என்றுதான்! அதிகாலை வெளி மாநிலத்திலிருந்து எனக்கு ஒரு ஃபோனே வந்து விட்டது - கதை சம்பந்தமாக!
அப்படி எல்லாம் எதுவும் இல்லையே....கதை நல்லாதானே இருக்கு வித்தியாசமாக.....என்ன ஒன்று நீங்க்ளே சொல்லிருப்பது போல....கொஞ்சம் மெருகு அவ்வளவுதான் ...அது முடியாமல் போனதற்கான காரணங்களும் புரிகிறது...
நீக்குபரவால்லா இது நிறைய கதைகளுக்கு வழி வகுக்கும்
கீதா
:-))
நீக்குநம்பர் 7 சந்திரனாமே அதாவது மனம் சம்பந்தப்பட்ட ஒன்று என்று....திருவனந்தபுரத்தில் இருந்தப்ப நம்ம வீட்டு ஓனர் சொல்லியிருக்கிறார்.
பதிலளிநீக்குஅதான் ரூம் நம்பர் 7 ந்னு போட்டீங்களோ? அது சரி, அப்ப அடுத்தாப்ல வரவரும்? ஆ! ஆ!
கீதா
இந்த நம்பர் - 7 மனம் கற்பனைகளோடு கலைகளோடு இருப்பவர்கள் இது பாசிட்டிவ். நெகட்டிவ் சைட் - moodiness, anxiety.
நீக்குகீதா
// நம்பர் 7 சந்திரனாமே அதாவது மனம் சம்பந்தப்பட்ட ஒன்று என்று.... //
நீக்குஅப்படியா? பார்றா.... நான் எழுத்தாளர் என்பதற்கு ஏதுவாக அல்லது ஹேதுவாக ஏழை எடுத்துக் கொண்டேன்!
// து சரி, அப்ப அடுத்தாப்ல வரவரும்? ஆ! ஆ! //
ஏன் ஒன்றிலிருந்து ஆறு வரையோ அப்புறம் எட்டு ஒன்பதையோ எழுதக் கூடாதா என்ன!!!
எழுதலாம்....ஆனா நீங்க கதைல முடிவில் அந்தக் கதைல அடுத்து அந்த ரூமுக்கு யார் வருவாங்களோன்னு சொல்லியிருப்பதால் ஹிஹிஹிஹி
நீக்குகீதா
அதையும் எழுதலாம்!
நீக்குகீதா வை அங்க உக்காத்தி வைச்சா என்னானு ஹாஹாஹாஹா
நீக்குஆனா கண்டிப்பா பேப்பர் பறக்காது....கிழிக்கப்படாது ...கம்ப்யூட்டர்லா....அழித்து மீண்டும் தட்டி, வெட்டி, தட்டிக் கொட்டியாவது ஏதோ ஒன்று வந்துவிடும்.
கீதா
அது தெரியும் கீதா.... ஆனால் எப்போது என்றுதான்..... ஹிஹிஹி...!
நீக்கு/இந்த நம்பர் - 7 மனம் கற்பனைகளோடு கலைகளோடு இருப்பவர்கள் இது பாசிட்டிவ். நெகட்டிவ் சைட் - moodiness, anxiety./
நீக்குதங்களின் கருத்து உண்மையோ என நினைக்க வைக்கிறது. நன்றி சகோதரி.
கமலாக்கா கீழ கொடுத்திருக்கிறேன் ....உங்க பி நா 7 என்று தெரிந்ததும்
நீக்குஉண்மையாக இருந்தாலும் அந்த பாசிட்டிவை மட்டும் எடுத்துக்கோங்க....நெகட்டிவ் ஒரு வேளை சரின்னு தோன்றினாலும் அதை மனதிலிருந்து எடுத்துடலாம் கமலாக்கா....
கீதா
இன்றைக்கே எழுதான்..
நீக்கு25 = 2+5= 7
//கதையில் ஒரு நாளின், ஒரு வீட்டின் அன்றாட நிகழ்வுகள் இருந்தன.
பதிலளிநீக்குபடித்து முடித்ததும் ஏமாற்றம் தலைதூக்க தன்னை அறியாமல் உதடு பிதுங்கியது.//
அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்களோ?
//"இவ்வளவு நாள் எழுதினியே.. என்ன கிழிச்சே?"//
கேட்பது 70 வய்சு கிழவன். நானா? எனக்கு 75 வயசு.
எங்கேயிருந்து பிடித்தீர்கள் இந்த படங்களை? கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் படங்களில் இருப்பது ரூம் போல் தெரியவில்லை. கையில் இருப்பது A4 இல்லை.
//"உன்னை இப்பவே இல்லைன்னு பண்றேன் பாரு..."//
//"முடிந்தது. முற்றும் போட்டுட்டாரு.. //
வேற்று பேப்பரில் முற்றும் என்பது மட்டும் எப்படி வந்தது.
ஒன்று புரிந்தது. சந்தடி சாக்கில் உங்கள் போட்டோவை கதை என்ற கதைக்கு பயன் படுத்திக்கொண்டீர்கள் என்று தோன்றுகிறது.
// அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்களோ? //
நீக்குஏதோ சிந்தனையில் வெறும் உரலை இடித்தால் கொஞ்சம்போல அவல் கிடைத்தது!!
// எங்கேயிருந்து பிடித்தீர்கள் இந்த படங்களை? கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் படங்களில் இருப்பது ரூம் போல் தெரியவில்லை. கையில் இருப்பது A4 இல்லை. //
இந்தப் படங்களை ஒரு பாடல் காட்சியிலிருந்து பிடித்தேன். படம் ஆளவந்தான். பாடல் 'கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்'. பாடியவர் கமலஹாசன். படங்களில் இருப்பவரும் அவரே!
ஒரு ஓவியரை வைத்துக் கொண்டு கதையைக் கையில் கொடுத்து படம் வரையச் சொன்னால் பொருத்தமாக வரையலாம். அப்படியும் பத்திரிகைகளில் நிறைய ஓவியர்கள் அலட்சியமாக கோட்டை விட்டிருப்பார்கள். இங்கு ஏதோ கொஞ்சம் பொருந்தும் படங்களை சேர்த்திருக்கிறேன். அவ்வளவுதானே!
மேலும் அவர் (எழுத்தாளர்) மன அளவில் எங்கு இருக்கிறாரோ... இடத்தை அவர் மனம் வழியாக பாருங்களேன்!
// வேற்று பேப்பரில் முற்றும் என்பது மட்டும் எப்படி வந்தது. //
இந்த உரையாடல் மனநல மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசுவது எழுத்தாளர் மரணமடைந்து விட்டார் என்று சொல்வது!
சந்தடி சாக்கில் என் படங்களா? நான் இப்படியா இருப்பேன்! ஹா.. ஹா.. ஹா...
அண்ணா, கடைசி வரியை பாருங்க....ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க....ந்னு வருதே...அவர் முற்றும் போட்டது பேப்பரில் அல்ல....அதான் மனநிலைப் போராட்டம் என்பதை நான் மேலேயே கருத்தில் சொல்லியது.
நீக்குநான் நேரில் கண்டவள் என்பதால் கதையை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு/நீயும் நானும் இங்கதான் நிக்கறோம்.. மதிக்கிறாரா பாரேன்.."
"தனி உலகத்துல இருக்கார் ஸார்.."
"எத்தனை வகையான கேஸ் பாரு..."
"வாங்க ஸார்... அவங்க ஆபத்தில்லாம உரையாடிகிட்டிருக்கட்டும். நாம போய்த் தூங்கலாம்"/
/முடிந்தது. முற்றும் போட்டுட்டாரு.. இனி அவர் தொல்லை இல்லை நமக்கு.. ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க... அடுத்து அங்க யார் வருவார்களோ..." /
கதையில் இது போன்ற பல வரிகளை ரசித்தேன். நல்ல கற்பனை உங்களுக்கு. பாராட்டுக்கள்
ஒரு சந்தேகம்... "நினைத்தாலே இனிக்கும்." படம், பாடல்கள் பல, பல தடவைகள் பார்த்ததின் பாதிப்போ இந்த கதை. ? ஹா ஹா ஹா. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
நினைத்தாலே இனிக்கும் பார்த்து பைத்தியமாகி விட்டேன் என்கிறீர்களா? அல்லது பைத்தியக்கார கதை படைத்து விட்டேன் என்கிறீர்களா? ஹா.. ஹா.. ஹா... அந்தப் படத்துக்கும் இந்த படைப்புக்கும் சம்பந்தம் இல்லை.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஅடாடா.. தப்பு, தப்பு நான் அப்படி நினைக்கவும் இல்லை. சொல்லவும் இல்லை.
கமல் படத்தை பார்த்து அவர் நினைவாகவே இருக்கிறீர்களோ என சொல்ல வந்தேன். நான் சொன்னது தவறாக பட்டிருந்தால் மன்னிக்கவும்.
கதை மிகவும், வித்தியாசமாக நன்றாக ரசிக்கும்படி உள்ளது. இப்படி ஒரு பாடலையும், மாறுபட்ட கோணத்தில் கற்பனையில் வந்த கதையையும் இணைத்து வந்த இந்த சிறு கதையை மிகவும் ரசித்தேன். அந்த ரசித்த மனநிலையில் கடந்து வந்த வெள்ளி வாரங்களில் தொடர்ந்து வந்த அந்த படத்தைப் பற்றி குறிப்பிட்டேன். தவறாயின் மீண்டும் மன்னிக்கவும். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹையோ... மன்னிப்பெல்லாம் எதற்கு கமலா அக்கா> நானும் ஜாலியாகத்தானே கேட்டிருக்கிறேன்? மேலும் உங்கள் கருத்துகளை தைரியாக வெளிபப்டையாக சொல்லுங்கள். நான் அவ்வளவு சுலபத்தில் தவறாக எடுத்துக் கொள்ளும் ஆசாமி இல்லை. நான் சொல்ல வந்ததது இந்தக் கதை எந்த வகையில் நினைத்தாலே இனிக்குமோடு ஒத்துப்போகிறது என்று உங்களுக்குத் தோன்றுகிறது என்பதைக் கேட்கத்தான்!
நீக்குஒவ்வொரு முறையும் வணக்கம் வார்த்தையை சேர்ப்பிப்பதைத் தவிர்த்து விடுங்கள் அக்கா. மேலும் மன்னிப்பு என்கிற வார்த்தையே இன் உங்களிடமிருந்து வரக்கூடாது!!
நீக்குஇருங்கள் ஒரு ஸ்மைலி போட்டு விடுகிறேன்...!!
:)))
ஓ. K . திருந்(த்)திக் கொள்கிறேன்.
நீக்கு"நீங்கள் பையித்தியகாரத்தனமான கதை படைத்து விட்டேனா" என கேட்டதும், நானும், நான் சொன்னது தவறோவென சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். வேறு ஒன்றுமில்லை. 😊. நன்றி.
அதுவும் jewellery டேஸ்ட் தான் அக்கா.
நீக்குகமல்லாக்கா நான் சொல்லி வருவ்தும் அதேதான்...வணக்கம், நன்றி (ரொம்ப கூடுதல் வேண்டாமே!!), மன்னிப்பு எல்லாம் தவிர்த்துவிடுங்கள் கமலாக்கா...மற்ற இரண்டும் இங்கு வேண்டவே வேண்டாமே....எல்லாரும் ஜாலியாதான் பேசுகிறோம்...என்பதால்
நீக்குஸ்ரீராமின் கருத்தை டிட்டோ செய்கிறேன் கமலாக்கா
கீதா
(ஸ்ரீராமின் கருத்தை டிட்டோ செய்கிறேன் கமலாக்கா/
நீக்குநீங்களும் சொல்லி விட்டீர்கள். அப்படி யென்றால், இனி இரட்டை (DOUBLE) O. கேதான். ஓ. K. (இன்றைய கதைக்கேற்றபடி மொழிகள் மாற்றம். :)) )
Ok... Ok....
நீக்குபுதிய பரிணாமங்களில் கதை சொல்கின்றீர்கள்...
பதிலளிநீக்குபாராட்டுகள்...
வாழ்க நலம்...
புரிதலுக்கு நன்றி செல்வாண்ணா.. குறை ஏதாவது தோன்றினாலும் சொல்லலாம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு/அப்படியா? பார்றா.... நான் எழுத்தாளர் என்பதற்கு ஏதுவாக அல்லது ஹேதுவாக ஏழை எடுத்துக் கொண்டேன்!/
நான் கூட கமல் பாடலுக்கு (அந்த படங்களுக்கு) பொருத்தமாக சொல்லிக் செல்லும் கதை என்பதால், அவரின் பிறந்த நாளை குறிக்கும் ஏழு என நினைத்தேன். புரிதலில் சில மாறுபாடுகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அடடே... அப்படி நினைத்தீர்களா. இன்னொன்று தெரியுமா? அனுஷுக்கும் அதே ஏழுதான் பிறந்த நாள்! (ரொம்ப முக்கியம் என்கிறீர்களா?!)
நீக்கு"அனுஷுக்கும்.. " அவரோட சேர்த்து எனக்குத்தான்..
நீக்குஅட... நீங்களும் ஏழா?
நீக்குஅதே நவம்பர் ஏழா?
இல்லை.. வரும் மாத ஏப்ரல் ஏழு. முட்டாள்கள் தினம் என புகழ் பெற்ற மாதத்தின் ஏழு.
நீக்குஅடடே... சிறப்பு... மிகச்சிறப்பு.... என் அம்மாவின் பிறந்த நாளும் அதே ஏப்ரல் ஏழுதான்.
நீக்குஇன்று தில்லையகத்து துளசிதரன் ஜியின் பிறந்தநாள். வாழ்த்துகள் துளஸிஜி.
ஆஹா கமலாக்கா நீங்களும் 7? அதான் கற்பனை சிறகு விரித்துப் பறக்கிறது! அப்ப அந்த திருவனந்தபுரம் வீட்டு ஓனர் சரியாதான் சொல்லியிருக்கிறார்!!!!
நீக்குகீதா
துளசியின் பிறந்த நாளா இன்று? ம்ம்ம்ம்ம்...ஓ சரி ....புரிகிறது,...இது டேட் எப்படி என்று..
நீக்குகீதா
25=
நீக்கு2+5=7
/இன்று தில்லையகத்து துளசிதரன் ஜியின் பிறந்தநாள். வாழ்த்துகள் துளஸிஜி./
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரரே. இன்று போல் என்றும் சிறப்பாக வாழ்ந்திட வேண்டுமாய் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
டர்ர்
பதிலளிநீக்குடர்ர்ர்
டர் டர்ர்ர்
என்ன சத்தம் இந்த நேரம் ?
( துணி கிழிக்கும் சத்தம்!)
ஏன்?
(பைத்தியம் பிடிச்சுடுச்சு)
எங்கே அவர்?
ஓடிட்டார்.
ஆகா....! என் பி. நாளும், ஏழு என்றவுடன், வ(இ)ந்த கருத்தா.. ? :)))
நீக்குஎன்னடா இவ்வளவு கருத்துகள் செவ்வாய் கதைக்குன்னு நினைத்துப் படித்திருப்பாராயிருக்கும். பாவம் கேஜிஜி. நாளை புதன் பதிவை முடித்துவிட்டுத்தான் செவ்வாய் கதையைப் படித்திருப்பார்னு நினைக்கிறேன்
நீக்குஎன்னடா இவ்வளவு கருத்துகள் செவ்வாய் கதைக்குன்னு நினைத்துப் படித்திருப்பாராயிருக்கும். பாவம் கேஜிஜி. நாளை புதன் பதிவை முடித்துவிட்டுத்தான் செவ்வாய் கதையைப் படித்திருப்பார்னு நினைக்கிறேன்
நீக்கு// டர்ர்... டர்ர்ர்... டர் டர்ர்ர் //
நீக்குGrrrrrrrrrrrrrrr
:))))
நீக்கு/என்னடா இவ்வளவு கருத்துகள் செவ்வாய் கதைக்குன்னு நினைத்துப் படித்திருப்பாராயிருக்கும். பாவம் கேஜிஜி. நாளை புதன் பதிவை முடித்துவிட்டுத்தான் செவ்வாய் கதையைப் படித்திருப்பார்னு நினைக்கிறேன். /
பதிலளிநீக்குஹா ஹா ஹா. ஆமாம் கதைக்கான கருத்தை விட ஜாலி மனநிலை கருத்தை அதிகமாக்கி உள்ளது. இதோ பாருங்க... . நீங்களே உங்கள் பங்குக்கு இரண்டு ஒரே கருத்தை தந்து கருத்தின் எண்ணிக்கையை கூடுதல் செய்து விட்டீர்கள்.
பொதுவாக சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் எழுத்துக்கள் நூறை தாண்டும் சிறப்புடையவை . நன்றி
:-))
நீக்கு"படுத்தும் ஏழாம் நம்பர் ரூம் வாசி..." படங்களிலும் படுத்துகின்றார் ஹா....ஹா.
பதிலளிநீக்குவித்தியாசமான முயற்சி.
நன்றி மாதேவி.
நீக்குசில சமயம் அவசரமாக ஒரு ரவா உப்புமா பண்ணுவோம், அது பிரமாதமாக அமைந்து விடும். அப்படி அவசரமாக கிறுக்கிய கதை நன்றாக அமைந்து விட்டது. புதுமைக்கு புதுமை, சொல்ல நினைத்ததை சொல்லியாச்சு. Good attempt! இருந்தாலும், நொறுக்குத் தீனி சாப்பிட்ட மாதிரி இருக்கிறதே ஒழிய வயிறு ரொம்பிய நிறைவு இல்லை.
பதிலளிநீக்கு// இருந்தாலும், நொறுக்குத் தீனி சாப்பிட்ட மாதிரி இருக்கிறதே ஒழிய வயிறு ரொம்பிய நிறைவு இல்லை. //
நீக்குஉண்மை. ஒத்துக்கொள்கிறேன்.
Good attempt என்று சிலாகித்ததற்கு நன்றி. கதை எழுதிய பிறகு இரண்டாம் யோசனையாகத்தான் உ நா படங்கள் சேர்த்தேன்!!
உலக நாயகர் படத்தை போட்டதால், அவர் பேசுவது போலவே கதை அமைந்து விட்டதோ?
பதிலளிநீக்குஓ.. இதற்கான பதிலையும் மேலே சேர்த்து விட்டேனோ....
நீக்குஉலக நாயகரும் ஏழாம் எண்காரர்தான். A.R. Rahman, M.S. சுப்புலட்சுமி, போன்ற மாபெரும் கலைஞர்கள் எல்லோரும் 7எண்காரர்கள். பொதுவாகவே ஏழாம் தேதி பிறந்த பலர் படைப்புத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்.
பதிலளிநீக்குஒன்றாம் எண்ணுடையவர்கள்?
நீக்கு@Geetha: ஏழாம் எண்ணுக்குரியவர் கேது. சந்திரன் இரண்டாம் எண்ணுக்குரியவர், மனோகாரகன்.
பதிலளிநீக்குஎங்கம்மா ஏழாம் எண்தான். எங்களை படைத்ததைத் தவிர வேறு எதுவும் அவர் படைக்கவில்லை! அவ்வப்போது பூஜையில் சாமிக்கு படைப்பார்!
நீக்குஉங்களுக்கு வித விதமாக உணவு படைத்தாரே தினம் தினம் அப்புறம் கோலம் போட இறைவனை வழி பட, மற்றும் எல்லோர் இடமும் அன்பாய் இருக்க கற்றுக் கொடுக்கவில்லையா?
நீக்குஆமாம்.. ஆமாம்... இன்னும் நிறைய சொல்லலாம்.
நீக்குஎழுபது வயசு நாயகன்" கதையில் பாதி, நிஜத்தில் பாதி.
பதிலளிநீக்குகமலஹாசன் படத்தை வைத்து படக்கதை செய்து விட்டீர்கள்.
கதை எழுதுகிறேன் என்று அந்தக் காலத்தில் கதை ஆசிரியர்கள் பேப்பரை சுருட்டி சுருட்டி போடுவது போல கதை இருக்கும்.
எவ்வளவு நாள் தான் காகிதம் பொறுத்து கொள்ளும் கதை ஆசிரியரை ஓட ஓட வைக்கிறது போல பறந்து பறந்து.
இந்த 70 வயது நாயகனுக்கு கணினியில் எழுத தெரியாதோ?
வாங்க கோமதி அக்கா... கமலஹாசன் படத்தை வைத்து படக்கதை செய்யவில்லை. எழுதியபிறகு அட, இந்தக் காட்சிகளை இணைத்தால் கொஞ்சம் பொருந்துமே என்று இணைத்தேன்!
நீக்கு//இந்த 70 வயது நாயகனுக்கு கணினியில் எழுத தெரியாதோ?//
அவரைக் கேட்டிருக்கலாம். கேட்பதற்குள்,
"அவர் பறந்து போனாரே..."... !!!
நன்றி அக்கா.
ஸ்ரீராம் இந்த பதிலை ரொம்ப ரசித்தேன்! சிரித்தும் விட்டேன்.
நீக்குஅக்கா, அந்த 7 ஆம் நம்பர் ஆளு கணினியில் எழுதத் தெரிந்திருந்தாலும் கூட கோபத்தில் கணினியின் ஸ்க்ரீனில் குத்தி உடைத்திருப்பார்!!!!
கீதா
:-)) __/\__
நீக்கு