வெள்ளி, 28 மார்ச், 2025

வானமுதே தேனே வாழ்குல சீமானே வளர் கண் தாலேலோ

 இன்று நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து மேலும் இரண்டு பாடல்கள் 

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
காலம் சல்லாப காலம்
உலகம் உல்லாச கோலம்
இளமை ரத்தங்கள் ஊரும்
உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்பமயம்
தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப்பறந்து கொண்டாடுவோம்
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

காலை Japanல் Coffee
மாலை New Yorkல் Cabaret
இரவில் Thailandல் ஜாலி
இதிலே நம்மக்கென வேலி
இங்கும் எங்கும் நம்முலகம்
உலகம் நமது pocketலே
வாழ்க்கை பறக்கட்டும் rocketலே
இரவு பொழுது நமது பக்கம்
விடிய விடிய கொண்டாடுவோம்

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்

ஆடை இல்லாத மேனி
அவன் பேர் அந்நாளில் ஞானி
இன்றோ அதுஒரு hobby
எல்லோரும் இனிமேல் baby
வெட்கம் துக்கம் தேவையில்லை
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
Come on everybody
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
Join me
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
கடவுள் படைத்த உலகமிது
மனிதர் சுகத்தை மறுப்பதில்லை

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்


எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்



தீபக் என்று ரஜினியை கமல் அறிமுகப்படுத்தி விட்டு "அப்பப்போ எம் எஸ் விஸ்வநாதன் குரல்ல பாடுவான்" என்பார்!  அதற்காக ஒரு பாடல்!

ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ
ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ
ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

 ம‌னிதா உன் ஜென்ம‌த்தில்
எந்நாளும் ந‌ன் நாளாம்
ம‌றுநாளை எண்ணாதே
இந்நாளே பொன் நாளாம்
ப‌ல்லாக்கைத் தூக்காதே
ப‌ல்லாக்கில் நீ ஏறு
உன் ஆயுள் தொண்ணூறு
எந்நாளும் பதினாறு….ஊ…..

 ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

 அப்பாவும் தாத்தாவும்
வ‌ந்தார்க‌ள் போனார்க‌ள்
த‌ப்பென்ன‌ ச‌ரியென்ன‌
எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்க‌ள்
த‌ப்பாக‌ நினைக்காதே
எப்பாதை போனாலும்
இன்ப‌த்தைத் த‌ள்ளாதே…..ஏ…ஏ….

க‌ல்லை நீ தின்றாலும்
செறிக்கின்ற‌ நாளின்று
கால‌ங்க‌ள் போனாலே
தின்னாதே என்பார்க‌ள்

ஆ…..ம‌துவுண்டு பெண்ணுண்டு
சோறுண்டு
சுக‌முண்டு ம‌ன‌முண்டு என்றாலே
சொர்க்க‌த்தில் இட‌ம் உண்டு

 ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல
சிவ‌ ச‌ம்போ
ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல
சிவ‌ ச‌ம்போ


======================================================================================

அப்பா அடிக்கடி எம் கே தியாகராஜ பாகவதர் பாடல்கள் கேட்பார்.  கேட்கும்போது முதலில் என்னை அதிகம் கவர்ந்த பாடல் ஒன்று.  பின்நாட்களில் அவர் பாடிய நிறைய பாடல்களை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

உன்னையே அன்புடன்
வாரியணைக்கும்
உன்னையே அன்புடன்
வாரியணைக்கும்
அன்னையே
ஊணினைத் தேடவும்
சென்றாள்ஆ

விதி வசமிதே
கண்ணை இழந்தேன்
காணவுமில்லேன்
என் கண்ணை இழந்தேன்
காணவுமில்லேன்
கண்மணி நீயே
கண்ணுறங்காயே
கண்மணி நீயே
கண்ணுறங்காயே

வானமுதே தேனே
வாழ்குல சீமானே
வானமுதே தேனே
வாழ்குல சீமானே
வளர் கண் தாலேலோ
வளர் கண் தாலேலோ

புன்னகை மாமுக
கனி பிழி ரஸமே
கனி பிழி ரஸமே

தாதியர் சூழத் தங்க
மஞ்சமேலுறங்கஆ
மஞ்சமேலுறங்க

தாதியர் சூழத் தங்க
மஞ்சமேலுறங்கஆ
விழிகள் குளிரக்காணும்
பூஜை செய்திலோமே
பூஜை செய்திலோமே
தங்கமே ஏழை
எமதாவியும் நீயே
தங்கமே ஏழை
எமதாவியும் நீயே
ஆவியும் நீயே

14 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் எப்போதும்" நினைத்தாலே இனிக்கிறது." முதல் இரண்டு பாடல்களும் நினைத்து, நினைத்து இனிக்கும் பாடல்கள்தாம். மூன்றாவது பாடல் கேட்டால் இனிமை தரும். அவரின் அற்புதமான குரலுக்கு ஈடு இணை உண்டா? மூன்றாவதையும் கேட்டு விட்டு பிறகு வருகிறேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. சம்போ சிவ சம்போ மிகவும் பிடித்த பாடல்.

    இளமை ரத்தங்கள் ஊரும்.. இறைவா தமிழை ஊறச்செய்

    நான் எம்கேடி பாடல்களின் ரசிகன் நிறைய பாடல்களை பலமுறை எகப்பட்டமுறை கேட்டிருக்கிறேன். இதுபற்றி ஒருநாள் எழுதறேன். பகிர்வு எம்கேடி பற்றிய நினைவைத் தூண்டி மனதை கனக்க வைத்துவிட்டது

    பதிலளிநீக்கு
  4. முதல் ரெண்டும் என் ஃபேவரிட். அதுவும் சம்போ சிவ சம்போ பாட்டு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். எம் எஸ் வி செமையா பாடியிருப்பார் இசையும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  5. எம் கே டி பாகவதர் பாடல் இப்பாடல் இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம். retro effect! ரொம்ப நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருநெவேலி பக்கம் வாழ்ந்துட்டு இன்னும் கேட்டதில்லையா? என்ன நாரோயிலோ

      நீக்கு
  6. கடவுளே! இன்னும் நி.இ. ஹேங்க் ஓவர் தீரவில்லையா?

    என் அப்பா எம்.கே.டி.யின் தீவிர ரசிகர். அவருக்கு எம்.கே.டி.யின் கேஸட் மஸ்கட்டிலிருந்து வாங்கி வந்தேன். அப்பா சிவகவி படத்தை 37 முறை பார்த்தாராம். அதில் வரும்
    பாடல்களை அப்பாவை பாடச்சொல்லி அவர் நண்பர்கள் கேட்பார்களாம். அப்பாவும் மிக நன்றாக பாடுவார். நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடல் இடம் பெற்ற படம் 'ஹரிதாஸ்' என்று நினைக்கிறேன். அந்தப்படத்தில் கதாநாயகனுக்கு நடந்ததெல்லாம் எம்.கே.,டி.க்கு நிஜ வாழ்க்கையிலும் நடந்ததாம். "தங்கத்தட்டில் சாப்பிட்டவர் ஏழ்மைக்கு தள்ளப்பட்டார், கண் பார்வையை இழந்தார்" என்பார் என் அப்பா.
    உங்கள் பதிவால் என் அப்பாவை நினைவு கூர்ந்தேன். பகிர்வுக்கு நன்றி
    .

    பதிலளிநீக்கு
  7. இரண்டு நாள் முன் "சிவகவி" படம் வைத்தார்கள் மேகா தொலைக்காட்சியில்.
    அதில் "அம்பா மனம் கனிந்துனது" பாடல் வரும் பாடல் கேட்டு இருக்கிறேன் படம் பார்த்தது இல்லை அதற்காக பார்த்தேன்.
    இன்று நீங்கள் பகிர்ந்த பாடலும் நன்றாக இருக்கிறது.

    மற்ற பாடல்கள் எல்லாம் அடிக்கடி கேட்டப்பாடல்கள்.
    இன்றும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  8. இரண்டு பாடல்களும் சூப்பர்

    எம்.கே.டி பாடல்கள் எல்லாமே என்னிடம் உண்டு ஜி ஆனால் இந்தப்பாடல் இன்றுதான் கேட்டேன்.

    படம் அசோக்குமார் போல....

    //வானமுதே தேனே
    வாழ்குல சீமானே//

    அன்றே நாம் தமிழரைப் பற்றி பாடி இருக்கிறாரே....

    பதிலளிநீக்கு
  9. முதல் இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். பிடித்தமான பாடல்கள்.

    மூன்றாவது பாடல் இப்பொழுதுதான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!