கே. சக்ரபாணி சென்னை :
தோளில் மாட்டிக்கொள்ளும் பையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஔவையார்தான் .சரியா? திருவிளையாடல் படத்தில் ஔவையாராக நடித்த கே. பி. சுந்தராம்பாள் தோளில் அந்த பையைப் பார்க்கலாம்.
# கவனித்ததில்லை. நீங்கள் சொன்னால் சரிதான்.
& ஆம்.
பெண் துறவிகளுக்காக முதல் யூனிஃபார்ம் அவருக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. படத்தில் எங்கும் கைகள் முகம் தவிர உடல் தெரியக்கூடாது என்பதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக டிசைன் என்று நினைக்கிறேன்.
இப்போதெல்லாம் பணமழை பொழியும் முக்கிய இடங்கள். கிரிக்கெட் கிளப்புகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய ஆஸ்பத்திரிகள். சரியா?
# சாராயக் கடை மற்றும் மனமகிழ் மன்றங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
& மிகச் சமீப காலத்தில் ஒரு நீதி அரசரும் இணைந்துள்ளார்!
ஒருவருக்கு லாட்டரி சீட்டில் பரிசு. விழுந்தால் அவருக்கு லாட்டரி அடிச்சிருக்கு என்கிறோம். ஆனால் ஒருவர் மிகவும் ஏழ்மைநிலையில் கஷ்டப்படுகிறார் என்றால் அவன் சோத்துக்கே லாட்டரி அடிக்கிறான் என்கிறோம். இது எப்படி?
# லாட்டரியில் ஏதாவது குருட்டு அதிர்ஷ்டமாக பணம் வந்தால்தான் சோற்றுக்கே வழி பிறக்கும் என்று சொல்லப்படுவது சிறப்பித்துச் சொல்வதாகாது.
பரிசு வரும் போது " அவன் லாட்டரியில் அதிர்ஷ்ட பிரைஸ் அடித்திருக்கிறான் " என்றுதான் சொல்வார்களே தவிர " அவன் லாட்டரி அடித்தான் " என்று சொல்ல மாட்டார்கள்.
சில சமயங்களில் கிரிக்கெட் மேட்ச் டி.வி.யில். பார்க்கும் போது நாம் நமக்கு பிடித்த டீம் ஆடும்போது பார்த்துக்கொண்டு இருந்தால் பேட்ஸ்மேன் ரன் எடுக்கமாட்டார் அல்லது நிறைய விக்கெட்டுகள் விழுந்து விடும். நாம் பார்க்காமல் சென்று விட்டால் நன்றாக ஆடுவார். நிறைய ரன்கள் குவியும். விக்கெட்டும் விழாது. இதுபோன்று தங்களுக்கு ஏதேனும் அனுபவம் உண்டா?
# ஏதேனும் அனுபவமாவது ? ஒவ்வொரு நாளும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. (இதுதான் பொதுவாக நமது மனநிலை. ஆனால் உண்மை அப்படி அல்ல. இதை மிகவும் கூர்ந்து கவனித்து நான் தெரிந்து கொண்டேன்.) " மனிதனின் சுக துக்கங்களுக்கு அவனது விருப்பு வெறுப்பு தான் காரணம் " என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள் ?
& எனக்கும் கூட அந்த அனுபவம் உண்டு. இந்தியா பேட்டிங் செய்யும்போது பார்த்தால், அவர்கள் கன்னா பின்னாவென்று ஆடி, சொதப்புவார்கள். பார்க்காவிட்டால் சூப்பராக விளையாடுவார்கள்.
அதுவே எதிர் அணியினர் ஆடுகிறார்கள் என்றால் - நான் பார்த்தால் பிச்சு உதறுவார்கள். ரன் மழை பொழியும். பார்க்காமல் விட்டால் விக்கெட்டுகளாக விழும்!
நெல்லைத்தமிழன்:
1. மகளிர் தினம், சூரியன் தினம், தோசை தினம் என்று பல தினங்களை ஒதுக்கிக் கொண்டாடுவது வியாபார தந்திரமா இல்லை அக்கறையா?
# எனக்குத் தெரிந்து ஒரு காலத்தில் குழந்தைகள் தினம் என்று நவம்பர் 14 கொண்டாடப்பட்டது மட்டுமே இருந்தது. அதன்பின் ஆசிரியர் தினம் என்று செப்டம்பர் 5 சேர்ந்து கொண்டது. மற்றபடி மகளிர் தினம் கிழவர்தினம் இதெல்லாம் அப்புறம் வந்த பிற்சேர்க்கைகள். இதில் சில யுனெஸ்கோ மாதிரியான அமைப்புகள் சிபாரிசு செய்து கடைப்பிடிக்கப்படுகின்றன. மற்றவை யார் சொல்லி வந்ததோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
மக்கள் கவனத்தை ஒரு குறிப்பிட்ட பிரச்சனையின் பேரில் திருப்ப இந்த மாதிரி தினங்கள் கொண்டாடப்படுவது ஓரளவு உதவக்கூடும் என்று ஒரு பரவலான நம்பிக்கை இருக்கிறது. அது வெறும் பிரமை என்பது என்னுடைய கருத்து.
2. பிறந்தநாள் என்பது மற்றுமொரு சாதாரண நாளே என்பது என் எண்ணம். அன்றைக்கு ஏதோ புதிய விஷயம்போல் வாழ்த்துவது வெறும் சடங்காக உங்களுக்குத் தோன்றவில்லையா?
# பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது மேலைநாட்டு இறக்குமதி. பல ஆண்டுகளுக்கு முன்னால் தமது பிறந்த நாள் எது என்று தெரியாத குழந்தைளே அதிகம். ஆசாரங்களில் நம்பிக்கை மிக்கவர்கள் பிறந்தநாள் அன்று சிறப்பு பூஜைகள் செய்வதுண்டு. சில பேர் ஆயுஷ்ய ஹோமம் கூட செய்து கொள்வர்.
தற்காலத்தில் அடுத்தவர் போல் நாமும் வாழ வேண்டும் என்கிற உந்துதல் அதிகமாகிவிட்டது . எனவே எங்கிருந்தோ தொற்றிக் கொண்ட பிறந்தநாள் விழாக்கள் நம்மை விடாமல் பிடித்துக் கொண்டு விட்டன.
3. இந்த சமூக வலைத்தளங்கள் வந்தது அரசியல்வாதிகளுக்கு, பிரபலமானவர்களுக்கு பெரும் சங்கடத்தைத் தருவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (சாராயம் ஒழிக்கணும், திமுக ஒழிக என்றெல்லாம் வைகோ பேசிவிட்டு இப்போது காலடியில் பதுங்கிக்கிடப்பதைப்பற்றி அவர் மனம் என்ன சொல்லும்? நேற்று கமலஹாசன் முன்பு ஒரு நாள், வாரிசு அரசியலைக் கடுமையாகச் சாடிப் பேசியிருந்த காணொளியைக் கண்டேன்)
# அரசியலை தொழிலாகக் கொண்டவர்களுக்கு வெட்க உணர்ச்சி ரோச உணர்ச்சி போன்றவை இருக்கவே கூடாது. இருந்தால் சரிப்பட்டு வராது. மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே நான் இருக்கிறேன் என்கிற செய்தியை மக்களுக்கு நா கூசாமல் சொல்லுகிற சாமர்த்தியம் வேண்டும். முக்கியமாக அவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கவே கூடாது. இருக்க முடியாது என்பதும் உண்மை. தான் வெட்கம் கெட்டு கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் போது அதை மக்கள் ஏற்கும்படியாக நொண்டிச் சாக்கு சொல்லுகிற சாமர்த்தியம் மிக மிக முக்கியமானது.
4. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுவிட்டதால், அந்த அந்த மாநிலத்தின் மொழியில் படித்தவர்களுக்கு மாத்திரம்தான் அரசு வேலை என்று ஏன் மாநிலங்கள் சட்டம் இயற்றுவதில்லை?
# அது அரசியல் சாசனத்துக்கு முரணானது. அப்படியான சட்டம் போட முடியாது. முன்னுரிமை என்று சொல்லலாமே தவிர இதரர்களுக்கு வேலை கிடையாது என்று சொல்ல முடியாது.
5. மானாவாரியாக நாம் கடைகளில் விற்கும் சிப்ஸ், நொறுக்குத் தீனிகள், இனிப்புகள் போன்றவற்றிற்குப் பழக்கப்பட்டுவிட்டோமே... இது எதில் கொண்டுவிடும்?
# தொப்பை - பண விரயம் தவிர வேறு என்ன ?
& அந்த வகை பொருட்கள் அவ்வப்போது நம் சந்தோஷத்திற்குத் தேவைதான். ஆனால் அவற்றை தினமும் சாப்பிடாமல், வாரம் ஒருமுறை மட்டும் சாப்பிடலாம்.
= = = = = = = = = =
KGG பக்கம் :
'தெய்வீகம்' தலைப்பிற்கு படங்கள் அனுப்பிய
அனு ப்ரேம்,
ஜெயகுமார் சந்திரசேகரன்,
ஸ்ரீராம்,
கௌதமன் (யோவ்!)
K சக்ரபாணி
நெல்லைத்தமிழன்
தில்லைநாயகம் எல்லோருக்கும் நன்றி.
பல தளங்களிலும் வெளியிடப்பட்ட 15 படங்களைப் பார்த்து வோட்டுப் போட்ட வாசகர்களுக்கு நன்றி.
வாக்கெடுப்பில் முதல் இடத்தைப் பெற்ற படம் எண் 206.
அனுப்பியவர் : கே சக்ரபாணி .அடுத்த படம் : 213.
அனுப்பியவர் : எம் தில்லைநாயகம்.
அடுத்ததாக, ஒருவரே அனுப்பிய படங்களுக்கு combined வோட்டுகள் என்ற முறையில், படம் எண் 202 & 203.
அனுப்பியவர் : அனு ப்ரேம்.
அனுப்பிய எல்லா படங்களுக்கும் (207,208,209,214) சேர்த்து, 2 ஓட்டுகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்தவர் உங்கள் கௌதமன் !!
(வேண்டாம் - அந்தப் படங்களை இங்கே பகிர்ந்து, Don't buy my sky!)
பரிசு பெற்ற கே சக்ரபாணி, எம் தில்லைநாயகம் மற்றும் அனு ப்ரேம் ஆகியோரின் மொபைல் எண்ணுக்கு, பரிசுத்தொகை நாளைக்குள் அனுப்பி வைக்கப்படும்!
= = = = = = = = = = = = = = =
அடுத்த படப் போட்டி :
தலைப்பு : மீன்.
ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமான மீன்.
நீங்கள் அனுப்பும் படம், உங்கள் வீட்டு மீன் தொட்டியிலோ அல்லது நண்பர்கள், உறவினர்களின் வீட்டில் வளர்க்கப்படும் மீனாகவோ இருக்கலாம்.
தயவு செய்து இறந்துபோன மீன் மற்றும் கருவாடு படங்கள் வேண்டாம்!
அப்படி மீன் வளர்ப்பு / மீன் தொட்டி இல்லாதவர்கள், கீழ்க்கண்ட படத்தைப் பார்க்கவும்.
மீன் வரையும் முறை வரிசையாகக் காட்டப்பட்டுள்ளது.
ஒரு வெள்ளைத் தாளில் இந்த வரைமுறையில் மீன் படம் வரைந்து, அதற்கு வர்ணம் தீட்டி, மொபைலில் ஃபோட்டோ எடுத்து எங்களுக்கு அனுப்பலாம்.
உங்கள் வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் படம் வரையலாம்.
படத்தில் பெயர் குறிப்பிடவேண்டாம். நீங்கள் அனுப்புகின்ற படம், தனியாக சேமிக்கப்படுவதால், எந்தப் படம் யார் அனுப்பியது என்ற விவரம் எங்களுக்குத் தெரியும்.
சரி - சார். மீன் படம் எடுக்க இயலவில்லை, படம் வரைய தெரியவில்லை. அப்போ நீங்க என்ன செய்யலாம் என்றால், மீன் பற்றி ஒரு நான்கு வரிக் கவிதை எழுதி அனுப்பலாம்.
அதுவும் தெரியவில்லையா?
அரிசியில் மீன் படம் வரைந்து அதை மொபைலில் zoom செய்து படம் எடுத்து அனுப்பலாம்.
Creative ideas மீன் என்ற தலைப்புக்கு ஏற்ப புதுமையாக ஏதாவது முயற்சி செய்யுங்கள். வித்தியாசமான ideas க்கு பரிசு உண்டு.
படங்கள் அனுப்ப இறுதி தேதி : ஏப்ரல் 20 ஞாயிறு (மாலை 6 மணி)போட்டி இதோ, இன்றைக்கு, இப்பொழுது ஆரம்பம்.
எங்கள் வலையை உங்கள் மீன்கள் அலங்கரிக்கட்டும்!
= = = = = = = = = = = =
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குபரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅப்பால வாரேன்
கீதா
நன்றி.
நீக்குமீண்டும் வருக.
நீக்குஆமாம். நாரதர் தன் ஜால்ராவை எப்போதுமா கையில் வைத்திருப்பார்? அவ்வப்போது பையில் போட்டுக்கொள்ள மாட்டார்?
பதிலளிநீக்குஅடுத்த புதன் கேள்வியா?
நீக்குஇல்லை. ஔவையாருக்கு முன்னாலேயே நாரதர் ஜோல்னாபை உபயோகித்திருப்பார்
நீக்கு:)))
நீக்குமீன் தலைப்பு ஓக்கே. அதுக்கு விளக்கம்தான் சகிக்கலை
பதிலளிநீக்கு:)))))
நீக்குமீன் தலைப்பிற்கு, நீங்கள் அனுப்பிய தமன்னா கண் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. படம் நீங்களே எடுத்ததாக இருக்கவேண்டும்!
நீக்குஹாஹாஹா சிரித்து முடியலைப்பா சாமியோவ்....
நீக்குநெல்லை என்ன பதிலோடு வாரார்னு பாப்பம்...
கீதா
:))))
நீக்குநான்கூட தமன்னா கண்ணைப் பார்த்ததில்லையே.. கேஜிஜி இவ்வளவு கூர்ந்து கவனித்திருக்கிறார். எனக்கே வெட்கமா இருக்கு. ஹாஹாஹா
நீக்கு;))))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதெய்வீகம் படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
அடுத்த போட்டியாக (மீன் என்பதற்கு) அதைப்பற்றிய விபரங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. ஆனால், ஒரே ஒரு குறை.
வெள்ளைத் தாளில் மீன் வரைவது எப்படியென சொல்லி தந்து விட்டீர்கள்.
அடுத்து அரிசியிலும் எப்படி வரைந்திருக்க வேண்டுமென குறிப்பிட்டதைப் பார்த்து எப்படியாவது கற்று கொண்டு விடுவோம்.
மீட்டா வரைந்த ஓவிய மீனும் மிக அழகு.
பிறகு குறையென நான் சொல்ல வந்தது என்னவென்றால்( I Meen) மீனைப்பற்றிய கவிதைகளை ஒரு நாலைந்து சேர்த்திருக்க வேண்டாமோ. ? ஹா ஹா ஹா. அதையும் பி(ப)டித்து திருத்தி வேறு ஒரு மீன் கவிதையாக வடிவமைக்க ஏதுவாக இருக்குமே..! :)) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல சந்தேகம்!
நீக்குபணமழை-ஒரு நீதி அரசர்.. சார் பத்திரிகைகள் படிப்பதில்லை போலிருக்கு. நீதித்துறையில் ஏகப்பட்ட கர்ணன்கள் உண்டு. சிபிஐ ரெய்டிலிருந்து விலக்கு உண்டு என்பதால் பலர் சிக்கவில்லை. 150 செலவழிச்சிருக்கேன் ஜாமீன் கிடைச்சுடும் என ஏமாந்தவர்களை நினைவில்லையா?
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குபடம் எண் 206 தேர்ந்தெடுத்த எல்லாருக்கும் மனமார்ந்த
நீக்குநன்றிகள்
கே. சக்ரபாணி
நல்ல படத்தை அனுப்பியதற்கு நன்றி.
நீக்கு& மிகச் சமீப காலத்தில் ஒரு நீதி அரசரும் இணைந்துள்ளார்! //
பதிலளிநீக்குஆ! இன்னாபா, அண்ணாத்த அதாருன்னு சொன்னா இன்னாவாம்?
கீதா
அதெல்லாம் சொன்னால் சரிப்பட்டு வர்மா ?
நீக்குபிறந்தநாள் என்பது மற்றுமொரு சாதாரண நாளே என்பது என் எண்ணம். அன்றைக்கு ஏதோ புதிய விஷயம்போல் வாழ்த்துவது வெறும் சடங்காக உங்களுக்குத் தோன்றவில்லையா?//
பதிலளிநீக்குமீக்கும் just another day!
கீதா
வாழ்த்துவதற்கு ஏதோ ஒரு சந்தர்ப்பம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை
/தோளில் மாட்டிக்கொள்ளும் பையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஔவையார்தான் .சரியா? திருவிளையாடல் படத்தில் ஔவையாராக நடித்த கே. பி. சுந்தராம்பாள் தோளில் அந்த பையைப் பார்க்கலாம். /
அது பிறகு ஜோல்னா பை என்ற பெயரை பெற்றது. அவர் காலத்தில் இந்த பையை தைத்து தந்தவர் யாராக இருக்கும்.? (அதுவும் அவரின் டிரஸுக்கு பொருத்தமாக... )
நாரதர் கைகளில் எப்போதும் தோளில் மாட்டிய தம்புரா, கையில் தாளத்திற்கு சுதி சேர்க்கும் கட்டையோடுதான் வருவார். அவருக்கென்று பை ஏது? அப்படித்தானே படங்களில் பார்த்துள்ளோம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆம், சரி. ஆனால் நாரதர் மாட்டியிருப்பது தம்புரா அல்ல. வீணை. அந்த வீணைக்கு 'மஹதி' என்று பெயர்.
நீக்குநல்ல வேளை. "அப்படித்தானே படங்களில்......." வாக்கியம் இல்லாமலிருந்திருந்தால் எனக்கு தலை சுற்றியிருந்திருக்கும்
நீக்குநாரதர் கையிலிருப்பதன் பெயர் தெரிந்து கொண்டேன்.
நீக்கு/நல்ல வேளை. "அப்படித்தானே படங்களில்......." வாக்கியம் இல்லாமலிருந்திருந்தால் எனக்கு தலை சுற்றியிருந்திருக்கும்./
ஹா ஹா ஹா. உங்களுக்கு ஏன் தலை சுற்ற வேண்டும்.? நாரதர் அல்லவா மூன்று லோகங்களையும் முறையாக சுற்றி வருபவர்.:))
அதானே!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஆம். பிறந்த நாளை விஷேஷமாக கொண்டாட எனக்கும் விருப்பமில்லை. சொல்லப்போனால், அது ஒரு முதுமைக்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுகள் அல்லவா? இதில் என்ன சந்தோஷம் என எனக்குத் தோன்றுவதுண்டு.
இப்போதெல்லாம் தினந்தினம் ஒரு அடையாள தினமென வருகிறது. யார் கண்டு பிடித்தார்களோ .?
இப்போது தொடர்ந்து கமல் அடிக்கடி இங்கு எட்டிப் பார்க்கிறார்.:)) மீன் போட்டிக்கு தயாராக முயற்சி செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
போட்டியில் பங்கேற்க வாருங்கள்.
நீக்குசொல்லமுடியாது. பூரண கொழுக்கட்டையை மீன் வடிவத்தில் பண்ணி படம் அனுப்புவாரோ கமலா ஹரிஹரன் மேடம்?
நீக்குநல்ல யோசனை.
நீக்கு/சொல்லமுடியாது. பூரண கொழுக்கட்டையை மீன் வடிவத்தில் பண்ணி படம் அனுப்புவாரோ கமலா ஹரிஹரன் மேடம்?/
நீக்குஆ... நல்ல ஐடியாவாக தந்திருக்கிறீர்கள். நன்றி. காலையிலிருந்து மீனுக்கு எங்கே போவது என ஒரே குழப்பமாக இருந்தது. :))
அனுப்புங்க, அனுப்புங்க. மீன் வடிவில் உப்புக் கொழுக்கட்டை படம்!
நீக்கு:)))) உண்மையாகவா?
நீக்குஆம்!
நீக்குமீன் படப்போட்டிக்கு உள்ள நிபந்தனைகள் சரியில்லை. மீன் செத்தாலும் மீன் தானே. செத்த மீனை படம் பிடிக்கக்கூடாது என்றால் உயிருள்ள மீனை படம் பிடிக்க தண்ணீரில் மூழ்கியா படம் பிடிக்கமுடியும். (வளர்ப்பு மீன்கள் விதி விலக்கா?). அதே போல் படங்களை எப்படி உயிருள்ள மீன் ஆகும். தலைப்பை மாற்றுங்கள் தலைவரே.
பதிலளிநீக்குJayakumar
மீன் தொட்டி கண்ணாடியால் ஆனது. வெளியிலிருந்தே படம் பிடிக்கலாம். உயிர் போய்விட்டால் எந்த ஜீவராசிக்கும் வேறு பெயர்.
நீக்குஅப்போ மார்க்கெட்டில் விற்பதெல்லாம் மீன் அல்ல. அப்படித்தானே?
நீக்குபடம் போட்டால் மீன் ஆகும்!!! உண்மையான மீன் மீன் ஆகாது. நல்ல வேடிக்கை!.
பெருமாளின் படம் போடலாமா? அவர் மச்சவதாரம் எடுத்தவர் தானே!
Jayakumar
:))))
நீக்குபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமீன் படமும் ...மச்ச அவதாரமும் படம் எடுத்து அசத்துங்கள் இப்பொழுதே வாழ்த்துகள்.
கருத்துரைக்கு நன்றி.
பதிலளிநீக்குபரிசு பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை அனுப்பப்பட்டது.
பதிலளிநீக்குஎவ்வளவு என்பது ரகசியமோ .? "சொக்கா பரிசு தொகை எவ்வளவு.?" திருவிளையாடல் தருமி வசனங்கள் நினைவுக்கு வருகிறது. ஹா ஹா
நீக்குதொகை முக்கியமில்லை. அவர்களின் படைப்பாற்றலுக்கு ஊக்கத் தொகை.
நீக்குஆம். இது உண்மையான, உன்னதமான கருத்து. பரிசை விட படைப்பாற்றல் என்றுமே உயர்வுதான். நன்றி.
நீக்கு__/\__
நீக்குகேள்விகளும் அதற்கு பதில்களும் அருமை.
பதிலளிநீக்குவெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
அடுத்த படப்போட்டி மீன் அருமை. மீன் படங்கள் போட ஆலோசனைகளும் நன்றாக இருக்கிறது.
நன்றி. போட்டிக்கு படங்கள் அனுப்பவும்.
நீக்கு