பாலு மகேந்திராவின் ஊமைக்குயில் படத்திற்காக, பெங்களூரில் ஒரு ஸ்டுடியோவில், நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பக்கத்து செட்டில் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் இருப்பதாக சொன்னார்கள். விசாரித்ததில், அவர் செட்டில் இல்லை; ஸ்டுடியோவை சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறார் என்றனர். எடுக்க வேண்டிய காட்சியில், அவர் ரொம்ப களைப்பு அடைந்தவராக இருக்க வேண்டும் என்பதற்காக, தன்னை வருத்திக் கொண்டு, ஓடுகிறார் என்று தெரிந்தது.
இது பற்றி, சிவாஜியிடம் நான் ஒரு முறை பேசிய போது, 'யுசுப்பாய் பெரிய நடிகர். அவர் செய்தது அவருக்கு பொருந்தும். என்னைக் கேட்டால், டயர்டாக காட்சியில் இருக்க வேண்டும் என்றால், டயர்டாக நடிக்க வேண்டும். கொலைகாரனாக வரும் போது, இரண்டு கொலை செய்துட்டா, செட்டுக்கு வர முடியும்...' என்றார்.
- வொய் ஜி மகேந்திரனின் நான் சுவாசிக்கும் சிவாஜி - 16 பிப்ரவரி 2014
தினமலரில் வந்த இந்த தொடரை நான் அவ்வப்போது வாசித்து, சிலவற்றை இங்கும், ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருக்கிறேன். YGM பயங்கர சிவாஜி பக்தர்.
முன்னர் அவர் பகிர்ந்திருந்த இந்தத் தகவலைப் படித்தபோது சாதாரணமாக 'அடடே' என்று கடந்து போனேன்.
இப்போது 'சிவாஜி கணேசன்' என்று திரு மோகன் எழுதிய மூன்று புத்தகங்கள் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதில் படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
அதாவது ஃபேஸ்புக் மெமரியில் நான் முன்பு பகிர்ந்திருந்த இந்தப் பகுதியை காட்டியது. படித்ததும், இப்போது நான் படித்த பகுதி நினைவுக்கு வந்தது.
அந்தப் புத்தகத்தில் கீழ்க்கண்ட விவரம் இருக்கிறது.
பாசமலர் கிளைமேக்ஸ் காட்சி ஈடுப்பதற்கு முதல்நாள் சிவாஜி தன் நண்பர்கள் ஒருவரையோ, இருவரையோ அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாராம்.
[இப்போது வீட்டின் ஒரு பகுதி ஜப்தி என்று செய்தியில் அடிபட்டுக் கொண்டே இருக்கிறதே.. அதே வீடு.
'பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடி' என்று ஒரு பாடல் உண்டு. இங்கு பேரன் பட்ட கடன் சிவாஜியைச் சேர்ந்து அவர் பெருமைக்கு களங்கம் விளைவிக்கிறது. சோகம்தான்.]
இரவு முழுவதும் வீட்டிலேயே பல ஆங்கிலப் படங்கள் விடிய விடிய பார்த்தார்களாம். விடிவதற்கு கொஞ்சம் முன்பு அவர் நண்பர் கிளம்பி வீட்டுக்குச் செல்ல, சிவாஜி வீட்டைச் சுற்றி நெடுநேரம் களைத்துப் போகும் அளவு ஜாகிங் செய்தாராம். தூங்கவே இல்லையாம். பின்னர் கிளம்பி படப்பிடிப்பு தளத்துக்கு வந்தபோது அவர் முகத்தைப்;பார்த்தபோது அனைவரும் பயந்து போனார்களாம்.
அந்த சோகக் காட்சிக்கு இப்படி ஒரு முகம் தேவையென சிவாஜி தன்னை வருத்திக் கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டார்களாம். படப்பிடிப்பு தொடங்கும் முன்பு மிகக் கொஞ்ச நேரம் கண்ணயர்ந்து உடனே பாதித் தூக்கத்தில் முகம் இருக்கும் கோலத்தில் வந்து கலந்து கொண்டாராம்.
காட்சி மிக இயற்கையாக இருந்ததாம். கட் சொல்லக் கூட மறந்து இயக்குனர் உட்பட எல்லோரும் கண்கலங்கி பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.
எந்நாளும் மறக்க முடியாத காட்சிதான் அது. கண்கலங்காமல் இருக்க முடியாது.
ஆனால், என்ன ஒரு முரண், இல்லை!
============================================================================================
====================================================================================================
நியூஸ் ரூம்
- போப் மறைவுக்குப் பின் உலகத்துக்குப் பேரழிவு? 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு.
- புதுடில்லி : 'பிரதமர் நரேந்திர மோடியின் பட்டச் சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், மற்றவர்களுக்கு காண்பிக்க முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் டில்லி பல்கலை தெரிவித்துள்ளது.
- சென்னை : 'ஜாதியே வேண்டாம் என்று கூறுவதில், தமிழக அரசுக்கு என்ன சிரமம்?' என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிகள், கல்லுாரிகள், பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் இடம்பெற்றுள்ள ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து பதில் தெரிவிக்க, மார்ச் 6ம் தேதி வரை கெடு விதித்து உள்ளது.
- தர்மபுரி: ''கலெக்டர், எஸ்.பி., யாராக இருந்தாலும் என் பேச்சை கேட்கவில்லை என்றால், அவர்கள் மாவட்டத்தில் இருக்க மாட்டார்கள்,'' என, தி.மு.க.,வின் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. இது, கட்சி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதாக எந்த விபரமும் பதிவாகவில்லை என, தேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதெனினும், சென்னை நந்தனத்தில் ஒரு ஐந்து மாடி கட்டடத்தில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் ள்ள அலுவலகங்களில்நேற்று (28-2-25) பகல் 12:00 மணிக்கு, அந்த கட்டடம் குலுங்கியதாக தகவல் பரவியது. அந்த கட்டடத்தில் பணியில் இருந்த அனைவரும் அச்சத்துடன் வெளியேறினர். கட்டடத்துக்கு வெளியிலும், அண்ணா சாலையிலும், பணியாளர்கள் மொத்தமாக கூடியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கோட்டயம்: கேரளாவில், பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட பின் தலைசுற்றல் ஏற்பட்ட 4 வயது சிறுவனின் சிறுநீரை பரிசோதித்த போது, அதில் மன அழுத்த நோய் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும், 'பென்ஸோடியாசெபைன்' மருந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
- கடந்த பிப்ரவரி மாதம் தான் 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக வெப்பமான மாதமாக இருந்துள்ளது. அதாவது வழக்கமாக இருக்க வேண்டிய வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியஸ். ஆனால் கடந்த பிப்ரவரி பதிவானது 22.4 டிகிரி செல்சியஸ். இந்த பிப்ரவரி மாதம் தான் 1901-க்கு பிறகு அதிக வெப்பமும் அதிகள குளிரும் பதிவான மாதமாக உள்ளது.
- நிறுவனங்களை மறு மறுசீரமைத்தல் செலவுகளை குறைத்தல் ஊழியர்களுக்கு பதிலாக செயல் நுண்ணறிவை பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உலக அளவில் பெரும் நிறுவனங்களில் பிப்ரவரியில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
- எர்ணாகுளம்,: கேரளாவில், 77 வயதான பிரபல சிறுநீரகவியல் டாக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
- சிட்னி: ஆஸ்திரேலியாவில் ரீசஸ் நோயினால் பாதிப்பிற்கு உள்ளான 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளை, தனது ரத்த தானம் வாயிலாக காப்பற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் 88 வயதில் உடலநல்குறைவால் காலமானார்.
===========================================================================================
நின்று துடிக்கும் இதயம் :
ஒற்றையடிப் பாதையில்
ஒருவருமில்லாத சாலையில்
வளைந்து திரும்புகையில்
ஒற்றை யானையின்
கண்கள்
நிறுத்துகிறது
ஒருகணம்
நெஞ்சின் துடிப்பை...
========================================================================================
இன்றைக்கு நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால்,
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தி ஒன்றாம் ஆண்டு...
அந்த வாரப்பத்திரிகையில் அந்தத் தொடர்கதை வந்து கொண்டிருந்தது.
எழுதியவர் ஒரு பிரபல எழுத்தாளர்தான். அவர்தான் பாதி கதைக்கு நடுவே இப்படி கேட்டிருக்கிறார்.
வாசகர்கள் அபிப்ராயப்படி நிஜமாக கதையை மாற்றி எழுதுவாரா, இல்லை, மெஜாரிட்டி இதுதான் வந்தது ( யார் பத்திரிகை ஆபீசுக்கு வந்து எண்ணிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?!) என்று சொல்லி கதை அதன் போக்கில் போகுமா, தெரியாது. விளம்பர யுக்தி! வாசகர்கள்தான் இதற்கு எந்த அளவு ரெஸ்பாண்ட் செய்திருப்பார்களோ..
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
ஜானகிராமனின் வாசகர்கள் நிறைய இருக்கலாம். ஆனால் இலக்கியம் என்பது மனதை மயக்கும் மொழி நடையிலோ, விவரணை அடுக்கலிலோ இல்லை. இலக்கியம் என்பது மனித விசாரத்தைச் சொல்லுவது. வாழ்வின் கோலங்களை ஆத்ம விசாரணையுடன் அணுகுவது. பிறள் உறவுகளைப் பற்றி ஜானகிராமனைப் போல் ஜெயகாந்தனும் வெகு சில கதைகளில் எழுதினாலும் அதில் மனித விசாரம் ஊடும் பாவுமாக ஓடும். இது ஜானகிராமனிடம் அறவே இல்லை.
ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்களில் இந்த விசாரம் இடையறாது ஓடிக்கொண்டே இருக்கிறது. ஜானகிராமனிடம் இந்த அம்சத்தைத் தேடித் தேடித்தான் சலிக்க வேண்டும். முள்முடி, பாயாசம், சிலிர்ப்பு போன்ற சிறுகதைகளில் வடிவ நேர்த்தி, அவரது மனதை மயக்கும் நடை இவை எல்லாம் இருக்கின்றன. எந்தச் சிறுகதையிலும், நாவலிலும் ஆத்ம விசாரம் இல்லை. அதனால்தான் ஜானகிராமனை வெறும் எழுத்தாளர் என்றும், ஜெயகாந்தனே இலக்கியகர்த்தா என்றும் சொல்கிறேன்.
-வண்ணநிலவன் அவர்களின் முகநூல் பதிவு.
=============================================================================================
இந்தப் படம் யாரால் வரையப்பட்டது என்பதிலோ, எந்தக் கதைக்காக வரையப்பட்டது என்பதிலோ யாருக்கும் சந்தேகம் இருக்காது.
ஆனால்,
இதை எடுத்துப் பகிரும் எனக்கே இருக்கும் சந்தேகம் என்னவென்றால் இது முதலா, இரண்டாவதா என்பதே..
ஏனெனில் வேறொரு ஒரு (அப்புசாமி) தொடர்கதைக்குப் பின்பக்கத்தில் இந்தப் படம் மட்டும் கிடைத்தது. வருடம் அநேகமாக 1981.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொக்கிஷம் : -
ஜெ பாணியில் ஓவியர் ராமு வரைந்த ஓவியத்தைப் பார்த்ததும், உயர உயரப் பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. ஓவியர் ஜெ பாணியே தனி, ராமு அவர்களின் பாணி வேறு வகை
பதிலளிநீக்குஉண்மைதான். ஆனால் ராமுவும் வேறு வகையில் திறமையான ஓவியர் என்பதில் சந்தேகமில்லை! ஊர்க்குருவி பருந்து உதாரணமெல்லாம் பாவம்!!
நீக்குஇந்த ஓவியத்தைப் பார்க்கும்போது ஜெ பாணி என்று அவர் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!
நாங்கள் பிரயாணம் செய்தபோதெல்லாம், குழந்தையைக் கொண்டுவருகிறார்கள் என்றால் முதல் வரிசை இருக்கைகளை ஒதுக்குவார்கள், அதில் இதுபோன்ற சிறிய தொட்டிலை மாட்டுவார்கள்.
பதிலளிநீக்குஇது அறுபதுகளில்! என்னென்னவோ முன்னேற்றம் இருந்தும் கைக்குழந்தைகளுக்கு வசதி ஒன்றும் செய்யப்பபடாது போல!
நீக்குஓசிப் பிரயாணத்துக்கு இதுவே அதிகமல்லவா?
நீக்குஓசி பிரயாணமா?
நீக்குஅந்தக் குழந்தைக்கு இது ஓசி பிராயணந்தானே..! ஆனால், பொதுவாக விமானத்தில் கைக்குழந்தைக்கும் (தொட்டிலில் படுக்கும் குழந்தைக்கு) விமான டிக்கெட் உண்டோ என்னவோ? இல்லை, அந்த காலத்தில், அவர்களுக்கு இலவசமா? இதுவும் முரணோ?
நீக்குகுழந்தைகளுக்கு எப்படி டிக்கெட்? தரைப்போக்குவரத்தில் ஐந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு டிக்கெட் கிடையாது முன்பு. இப்போது எப்படியோ...
நீக்குஒரு ஓடும் விமானத்தில் அவசரமாக பிறந்த குழந்தைக்கு அதன் வாழ்நாள் வரை விமான பயணம் இலவசமென ஒரு செய்தி படித்தது நினைவுக்கு வருகிறது. அது எ பியிலா என்பதும் நினைவில்லை. அந்த எந்த விமானத்தில் என்பதும் நினைவில்லை.
நீக்கு//ஒரு ஓடும் விமானத்தில் அவசரமாக பிறந்த குழந்தைக்கு// ஹா ஹா ஹா... இதுபோல அது பறக்கும் நாட்டின் குடிமகன் என்ற உரிமையும். இப்போல்லாம் முழிச்சுக்கிட்டாங்க. 7 மாதம் ஆகிவிட்டால், (அதுக்கு டாக்டர் சர்டிபிகேட் காண்பிக்கணும்) விமானப் பயணம் அனுமதிக்க மாட்டாங்க. நான் என் மனைவியை அதுக்கு 3 நாள் முன்னதாக (7 அல்லது 8மாதமோ நினைவில்லை) டாக்டர் சர்டிபிகேட்டுடன் அனுப்பினேன்.
நீக்குஓ.. இதெல்லாம் செய்தி... தெரிந்து கொள்கிறேன்.
நீக்குபராசக்தி படத்தின்போது இளமையாக இருந்த சிவாஜி, பாலுமகேந்திரா காலத்தில் ஓடும் நிலையிலா இருந்திருப்பார்? கோஹ்லிக்கும் ரோஹித்துக்கும் உள்ள வித்தியாசமே இல்லையே.. கோஹ்லிக்கும் தற்போதைய காவஸ்கருக்கும் உள்ள வித்தியாசம் அல்லவா?
பதிலளிநீக்குஇல்லை. அவர் சொல்லும் கருத்து பொதுவான கருத்து. பராசக்திக்கும் பாசமலருக்கும் சில வருட இடைவெளிகள்தான். கருத்து, அபிப்ராயம் நிரந்தரம் அல்லவா?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கமும் நன்றியும்.
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குசிவாஜி பற்றி ஒய்ஜி மகேந்திரன் சொல்லியிருப்பதில் சிவாஜிசொல்வதும், நீங்க பகிர்ந்திருக்கும் சிவாஜி பற்றிய விஷயத்திலும் முரண். முதல் பகுதி வாசிக்கும் போதே ...இதுல ஏதோ விஷயம் இருக்கு அதான் ஸ்ரீராம் நைசா இதைக் கொண்டுவருகிறார் என்று கொஞ்சம் யூகிக்க முடிந்தது. அது சரிதான்! எனக்கும் திருப்தி!
பதிலளிநீக்குஇப்ப சிவாஜியின் வீடு பற்றிய செய்தி வேதனை. பெரியவர்கள் சொத்து சேர்த்தாலும் அதுக்கப்புறம் வரும் தலைமுறை அதைப் பாதுகாக்கும்னு எல்லாம் நினைச்சு சேர்க்கக் கூடாது. அடுத்த தலைமுறைக்கு அந்த உழைப்பின் வலியும், முக்கியத்துவமும் தெரிந்தால் மட்டுமே பொறுப்போடு பாதுகாப்பாங்க. இல்லைனா யூஸ் பண்ணிக்கட்டும் என்று பெரியவங்க பொறுப்பா அதைப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் பின்னாடி பிரச்சனை வராது பாருங்க.
பணத்தின் மறு பக்கத்தின் கோர முகங்களில் இதுவும் ஒன்று.
கீதா
// சிவாஜி பற்றி ஒய்ஜி மகேந்திரன் சொல்லியிருப்பதில் சிவாஜிசொல்வதும், நீங்க பகிர்ந்திருக்கும் சிவாஜி பற்றிய விஷயத்திலும் முரண்.//
நீக்குஅப்படி உடலை வருத்தி தோற்றத்தை, களைப்பை கொண்டு வர தேவை இல்லை. நடிப்பில் கொண்டு வரவேண்டும் என்று சொல்லி இருந்திருக்கிறார் சிவாஜி - YGM ஸ்டேட்மென்ட்.
சிவாஜி புத்தகத்தில் நான் படித்தது அபப்டியே நேரெதிர். எப்படி நான் சொல்வது முரணாகும். அபுரி!
தான் சிரமப்படாமல் ஏற்கெனவே பெரியவர்கள், முன்னோர்கள் சொத்து சேர்த்து வைத்திருந்தால் அதன் அருமை இப்போதைய இளைய தலைமுறைக்கு தெரிவதில்லை.
நீக்குபடம் சூப்பர். இப்படி நான் பார்த்திருக்கிறேன். வேறு விதமான வசதிகள் வந்துவிட்டன. ஆனால் குழந்தைகளுன் பயணிப்பவர்களுக்கான வசதிகள் விமான நிலையங்களில் நல்ல வசதிகளுடன் வந்துவிட்டன.
பதிலளிநீக்குகீதா
ஓ.. அப்படியா.. இப்போதைய வசதிகளும் தெரிந்தால் படங்களை ஒப்பிட்டுப் போட்டிருக்கலாம்!
நீக்கு'ஜாதியே வேண்டாம் என்று கூறுவதில், தமிழக அரசுக்கு என்ன சிரமம்?'//
பதிலளிநீக்குகோர்ட் விஷயம் நல்லாருக்கே...
என, தி.மு.க.,வின் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. இது, கட்சி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.//
அதிருக்கட்டுங்க....அண்ணா பல்கலைக்கழக நிகழ்வுக்குத் தர்ம்சங்கடம் ஏற்படலையாங்க? அது அப்படியே அமுங்கிடுச்சோ?
சிவாஜி வீடு ஜப்தி நியூஸ்லயும் வந்துருச்சே...இங்க
கீதா
திமுக தலைவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதும், ஆபாசமாக பேசுவதும் மிக வாடிக்கையாகி வருகின்றன.
நீக்குஅண்ணா பல்கலைக்கழக விஷயம் மட்டும்தானா?!!
சிவாஜி பற்றிய செய்தியும்.. ஆம், வருத்தமாக இருந்தது. அந்த மாபெரும் கலைஞனுக்கு ஏற்பட்ட அவமரியாதை.
இதை ஏன் அவமரியாதையா நினைக்கணும்? சொத்தை அவரே பிரித்திருக்கவேண்டும் அல்லவா? அவரே உயில் எழுதி வைத்திருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. பணத்தின் அருமை சம்பாதிப்பவர்களுக்குத் தெரியும். அதனால் அவரவர் பணத்தில் கவனமாக இருப்பார்கள்
நீக்குஒரு குடும்பம் பிரிவதை விரும்பி இருக்க மாட்டார். சமீபத்தில் கூட இன்னும் கூட்டுக்குடும்பமாக வாழும் சிவாஜி குடும்பம் என்று பிரபுவின் ஒரு பேட்டி பார்த்தேன்.
நீக்குநின்று துடிக்கும் இதயம் - வாசிச்சப்ப சீன் விரிந்து இதயம் நின்று துடித்ததுங்கோ!!!
பதிலளிநீக்குநல்லாருக்கு, ஸ்ரீராம்
கீதா
__/\__
நீக்குலாலியை - பார்த்தப்ப புஷ்பாதங்கதுரையாக இருக்குமோ என்று தோன்றியது கீழ வந்தா அட! கீதாக்கும் ஏதோ கொஞ்சம் தெரியுதேன்னு எனக்கே எனக்கு ஒரு ஷொட்டு வைத்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குகீதா
:-))
நீக்குவண்ண நிலவனின் கருத்து யோசிக்க வைத்தது கூடவே அட! இந்த வித்தியாசம் நல்லாருக்கே என்றும் தோன்றியது
பதிலளிநீக்குகீதா
ஆமாம், சட்டென மனதில் பதிந்ததால் பகிர்ந்து விட்டேன்.
நீக்குபொக்கிஷத்தில் முதல் ஜோக்!! நல்ல டிமான்ட்
பதிலளிநீக்குஅந்த நிர்வாகம் தானே ஓவர்டைம் அமௌன்டும் கொடுக்குமில்லையோ!! பாராட்ட வேண்டிய விஷயம்தான்.
கீதா
இப்போ டிமாண்ட்ஸ் இன்னும் அதிகமாகி விட்டதாகக தகவல்!
நீக்குபொக்கிஷம் - மாட்டின் கோபத்தை ரொம்ப ரசித்தேன்!!!!
பதிலளிநீக்குகீதா
ஹா.. ஹா.. ஹா...
நீக்குபதிவை வாசித்து விட்டு யார் யார் எப்படியெல்லாம் பின்னூட்டம் போடுகிறார்கள் என்று பார்ப்பதில் தனியான வேறொரு வாசிப்பு வித்தியாசம் கிடைக்கத்தான் செய்கிறது. யாராவது முயற்சித்துத் தான் பாருங்களேன்.
பதிலளிநீக்குவாசித்தால்தானே பதிலும் தரமுடியும்? இங்கு மட்டுமில்லை, ஒவ்வொரு தளத்திலும் வரும் பின்னூட்டங்களை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நீக்குஎன் முந்தைய பின்னூட்டத்தைப் புரிந்து கொண்டவர்கள் யாராவது ஏதாவது கருத்து சொல்கிறார்களா என்று பார்ப்போம். மனிதர்களின் மனங்களைப் படிக்கும் வித்தை ரொம்ப சுவாரஸ்யமானது.
நீக்குதிரு. சிவாஜி கணேசன் அவர்களின் தகவல்கள் ஏற்கனவே படித்த நினைவு வருகிறது ஜி.
பதிலளிநீக்குஓ.. இரண்டையுமே படித்திருக்கிறீர்களா? கனெக்ட் செய்து பார்த்தீர்களா?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
நடிகர் சிவாஜி பற்றிய முரணான கருத்துக்களை படித்து தெரிந்து கொண்டேன். ஆக மொத்தத்தில், ஒரு அன்பான அண்ணன், தங்கையை நம்மால் மறக்க முடியாத அளவுக்கு ஒரு படத்தை தந்தவர்களுக்கு நன்றிகளை சொல்லித்தான் ஆக வேண்டும்.
மனிதர்களின் சுபாவங்கள் சொல்வது, ஒன்றாக, நடைமுறையில் ஒன்றாக மாறுபடுவது இயல்புதானே..! ஆனால் இது மற்றவரைப் பார்த்து காப்பி அடிப்பதாக சில விமர்சனங்கள் வரும்.( இதைச் சொல்வதும் மனித சுபாவந்தான்.)
தங்கள் கவிதையை ரசித்தேன். திக், திக் தருணங்கள்.
அந்த ஒரு கணத்தில் ஓடும் கால்களை இயக்கத் தெரியாமல் போகுமென்பது, அந்த ஒற்றை விழிப் பார்வையும் ஒரே நொடியில் உணர்ந்து கொள்ளும். அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ராம்குமார் அந்த வீட்டில் தங்களுக்கு உரிமை இல்லை என்று சொல்லி, வழக்கு வாபஸ் ஆகி இருக்கிறது!
நீக்குநீதிபதிக்கு செய்தித்தாளில் செய்தியாக வரும்வரை அது சிவாஜி கணேசன் வீடு என்று தெரியாதாம்.
சொல்லி இருக்கிறார்.
மற்ற பகுதிகளையும் ரசித்திருப்பதற்கு நன்றி கமலா அக்கா.
இந்த வாரம் சிவாஜி. முன்னுக்குப் பின் முரண் கண்டு பிடிப்பு!
பதிலளிநீக்குசந்தர்ப்பத்திற்கேற்ப நடப்பது இயற்கையான மனித இயல்பு.
ஆக அடுத்த வாரம் எம் ஜி ஆரா?
விமானத்தில் குழந்தைகளுக்காக bassinet சார்ஜ் சாதாரண டிக்கெட் சார்ஜில் additional ஆக வசூலிப்பார்கள்.
newroom செய்திகளில் கேரள செய்திகள் அதிக இடம் பெற ஆரம்பித்து விட்டனவே? JC சாருக்கு எடுத்துரைக்கவா?
தற்காலம் நல்ல சுபாவமுள்ள கோயில் ஆனைகளும், வளர்ப்பு ஆனைகளும் கூட மதம் அதிகமாகி வெறிச்செயல்களில் ஈடுபடுவது கூடுதலாகி விட்டது. எல்லாம் peta வால் வந்த பயன்.
வாசகர்களிடம் கேட்டு கதையை எழுதினால் பத்திரிகை வியாபாரம் நஷ்டத்தில் தான் ஓடும். நல்ல வாசகர்கள் அறிவுரை கூறுவதில்லை.
//இலக்கியம் என்பது மனித விசாரத்தைச் சொல்லுவது. வாழ்வின் கோலங்களை ஆத்ம விசாரணையுடன் அணுகுவது//
//ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்களில் இந்த விசாரம் இடையறாது ஓடிக்கொண்டே இருக்கிறது. ஜானகிராமனிடம் இந்த அம்சத்தைத் தேடித் தேடித்தான் சலிக்க வேண்டும். முள்முடி, பாயாசம், சிலிர்ப்பு போன்ற சிறுகதைகளில் வடிவ நேர்த்தி, அவரது மனதை மயக்கும் நடை இவை எல்லாம் இருக்கின்றன. எந்தச் சிறுகதையிலும், நாவலிலும் ஆத்ம விசாரம் இல்லை. அதனால்தான் ஜானகிராமனை வெறும் எழுத்தாளர் என்றும், ஜெயகாந்தனே இலக்கியகர்த்தா என்றும் சொல்கிறேன்.//
இப்படி இலக்கியகர்த்தா, எழுத்தாளர் றன்று வகைப்படுத்துபவர் சுஜாதாவை பற்றி என்ன சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆத்ம விசாரம் ஜானகி ராமனின் கதைகளில் இல்லாதது ஒரு குறை என்று எனக்கு தோன்றவில்லை. வண்ண நிலவன் கருத்து சரியில்லை என்பதே எனது அபிப்பிராயம்.
ஜீவி சார் இந்த விஷயத்தில் கமண்டடிக்கவில்லையே ஏன்?
காளைமாடு துரத்தும் ஜோக் பரவாயில்லை. கல்கியின் விலை 1.20 என்பது ஆச்சர்யம்.
Jayakumar
// சந்தர்ப்பத்திற்கேற்ப நடப்பது இயற்கையான மனித இயல்பு.
நீக்கு//
என்றால், அது தன் இயல்பான குணம் என்பது போல கிளெய்ம் செய்யக்கூடாது!
யானைகளை வைத்து கோவில்களிலும், விழாக்களிலும் வித்தை காட்டுவது நிறுத்தப்பட வேண்டும். பாவம் அவை.
வண்ணதாசன் திடீரென ஏதோ கருத்து சொல்லி இருக்கிறார். அது அவர் கருத்து! இதற்கு மற்றவர்களிடமிருந்தும் இன்னும் கொஞ்சம் தீவிரமான எதிர்வினையை எதிர்பார்த்தேன்!!
அப்போதெல்லாம் சம்பளம் என்ன என்று நினைவுகொண்டால் பத்திரிகை விலை நியாயம் புலப்படும்!
அறுபதுகளில் குழந்தையின் விமானப் பயணம் படம் கண்டோம்.
பதிலளிநீக்குஇப்பொழுது முன் இருக்கைதான். குழந்தைக்கும் ரிக்கற் உண்டு.
நியூஸ்ரைம் பிப்ரவரியில் அதி வெப்பம் செய்தி அறிந்தோம்.
கவிதை நன்று.
பொக்கிசம் ரசனை. மாடு முட்டுவது ஹா...ஹா.
ரசிப்புக்கு நன்றி மாதேவி.
நீக்கு