திங்கள், 3 மார்ச், 2025

"திங்க" க்கிழமை  : காலிஃப்ளவர் பகோடா - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 காலிஃப்ளவர் பகோடா 

ஃஃஃ ஃஃஃ

தேவையான பொருட்கள் :-

காலிஃப்ளவர் 300 gr
அரிசி மாவு  50 gr
சோள மாவு  50 gr
கடலை மாவு  50 gr
வீட்டில் தயாரிக்கப்பட்ட
கரம் மசாலா ஒரு Tbsp
கல் உப்பு தேவைக்கேற்ப 
கடலை எண்ணெய் தேவைக்கேற்ப 





 குறிப்பு :-
கல் உப்பினை கை உரலில் இட்டு நுணுக்கிக் கொள்ளவும்

செய்முறை :-
காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு சிறு பூக்களாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு அதில் சற்று நேரம் ஊற வைத்திருந்து - நீரை மாற்றி விட்டு வேறு தண்ணீரில் கொதிக்க விடவும். 

வெதுவெதுப்பான உப்பு நீர் சிறந்த கிருமி நாசினி என்பதைக் கவனத்தில் கொள்ளவும்..

அரை வேக்காட்டில் நீரை வடிகட்டி விட்டு
காலிஃப்ளவர் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து  வைத்துக் கொள்ளவும்.

வேறொரு பாத்திரத்தில்
அரிசி மாவு, சோள மாவு, 
கடலை மாவு, நுணுக்கிய உப்பு, கரம் மசாலா இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளவும்..

இதனுடன் அரை வேக்காட்டில் எடுக்கப்பட்ட காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பிசறி கொள்ளவும்.

தொடர்ந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பிசறி வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளை கவனத்துடன் எண்ணெயில் இட்டு சிவந்ததும்  எடுக்கவும்.

காலிஃப்ளவர் பகோடா..

செயற்கையான சிவப்பு வண்ணங்கள் வேண்டாம்...

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

16 கருத்துகள்:

  1. அருமை ஜி எனக்கு மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான காலிஃப்ளவர் பக்கோடா நன்றாக உள்ளது. பக்கோடோ செய்வதற்கு சேர்த்து செய்ய வேண்டிய குறிப்புக்கள், செய்முறை அனைத்தையும் படித்துப் பார்த்து தெரிந்து கொண்டேன். ஒரு முறை இவ்வாறு செய்து பார்க்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி

      நீக்கு
  4. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  5. நானே நானா..
    யாரோ தானா?...

    இதென்னடா வம்பு!
    காலையிலேயே நாட்டுச் சரக்கா?..

    ஆமாங்கோ!...

    பதிலளிநீக்கு
  6. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்போதெல்லாம் எண்ணையின் பயன்பாடு ரொம்பவே குறைவாகிவிட்டதால் செய்வதில்லை

    குறிப்பும் நல்லாருக்கு துரை அண்ணா. கரம் மசலா சேர்க்காமல் செய்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. காலி ப்ளவர் பகோடா நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி மாதேவி

      நீக்கு
  8. காலி ஃப்ளவர் பகோடா - சுவையான குறிப்பு.

    பதிலளிநீக்கு
  9. காலிஃப்ளவர் பக்கோடா படமும், செய்முறையும் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!