புதன், 28 அக்டோபர், 2009

இலக்கிய ரசனை.2

அண்மையில் ஒரு உறவினர் மறைய மறைந்தவரின் சகோதரர் கொடிய விபத்துக்கு உள்ளாகி தன உறவினர்களையே அடையாளம் கண்டு கொள்ள  முடியாத நிலையில் இருக்கிறார்.  அதனின்றும் சில நாட்களுக்குள்ளேயே மேலும் ஒரு விபத்தில் ஒரு அன்புக்குரிய நல்ல மனிதர் அகால மரணம் எய்தினார்.

மரணம். எல்லாவற்றுக்கும் முடிவு.  இதை இதன் தாக்கத்தை திருமூலரின் திருமந்திரம் எவ்வளவு வலுவாகச் சொல்கிறது என்று பார்ப்போமா?

ஊரெல்லாம் கூடி உரக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டு
சூரையங்காட்டிடை சுட்டுப் பொசுக்கிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.

மரணத்தில் முற்றத்திலேயே நின்று கொண்டு சாப்பிடும் புகைக்கும், சிரிக்கும், மனித இயல்பை இதை விட வலுவாகச் சொல்ல முடியுமா என்ன?

மேலும் ஒன்று அது போலே.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியோடு மந்தணம் புகுந்தார்
இடப்பக்கமே இறை  நோந்ததேன்றார்
கிடைக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே.

இதுவும் திருமந்திரம் தான்.
(அடிசில்: சமையல்.  மந்தணம்: படுக்கை அறை.)

என்னய்யா இது அபசகுனம் மாதிரி என்று தோன்றுகிறதா? அதிலும் ஒரு படைப்பாற்றல் திறன் ஜொலிப்பதைப்  பாருங்கள். ரசியுங்கள். வேறு என்ன சொல்ல!

3 கருத்துகள்:

  1. இலக்கிய ரசனை ரசிக்க வைக்கிறது. ரசனையை தொடருங்கள். ரசிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. இலக்கியம் இனிக்கிறது ஸ்ரீராம்.
    மெதுவாகப் புரிந்துகொண்டாலும் ஆவலோடு ரசிக்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அழகான இலக்கியத்தை இனிமையானவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போதுதான் இன்னும் ரசனையே....இல்லை மீனாக்ஷி, இல்லை ஹேமா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!