Tuesday, March 16, 2010

கவர்ந்த பத்துப் பெண்கள்


பிடித்த பத்து பெண்கள்...


தொடர்பதிவுக்கு அழைத்த திவ்யா ஹரிக்கு நன்றி...

நிபந்தனைகள் :-உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது, 
வரிசை முக்கியம் இல்லை, 
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும், 
அல்லது வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

உறவுகளைச் சொல்லக் கூடாது என்ற நிபந்தனை கஷ்டமாக இருக்கிறது. இந்தியர்கள் எல்லோரும் உடன்பிறந்தவர்கள் என்று சொல்கிறோமே, அப்படிப் பார்த்தால் இந்தியர்கள் யாரைச் சொன்னாலும் உறவுதானே. (என்ன கொனஷ்டையான சிந்தனை..) எல்லோரும் முதலில் வணங்கும் தெய்வம் பற்றி சொல்லாமல் எப்படி? எனவே, 
முதலில், என்னுடைய "எல்லா" நண்பர்களுடைய நண்பனின் அம்மா. காரணம் தேவையா என்ன..முதலில்அறிந்த முழு முதல் தெய்வம்தான்.


இரண்டாவது, நான் அறிந்த, என்னுடன் பணி புரியும் பெண். (படம் எல்லாம் போட முடியாதுங்க..) சற்றே கோபமான, வாய்த் துடுக்கான பெண் என்றாலும், கவர்ந்தது தன்னுடைய சற்றே மன நிலை குறைந்த இரண்டாவது பெண்ணை வளர்ப்பதில் அவள் காட்டும் பொறுமையும், பாசமும், அக்கறையும். கொஞ்சம் கூட கோபம் வராமல் சொல்லிக் கொடுக்கும் குணம்.

அந்தக் குழந்தையிடம் இப்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது.


நான்காவது, திரை இசையில் பல இனிய பாடல்கள் தந்த P. சுசீலா. விளக்கம் தேவை இல்லை..!

ஐந்தாவது, திறமையாக, எளிமையாக, இனிமையாக, புதுமையாக கதா காலட்சேபம் செய்யும் கிருஷ்ண ப்ரேமியின் மருமகள் விசாகா ஹரி.

ஆறாவது, ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்றும் ரங்க ராஜன் என்றும் அறியப் பட்டவருக்குத் தன் பெயரைத் தந்து மங்காப் புகழைத் தந்த அவர் மனைவி சுஜாதா. (படம் கிடைக்கவில்லை)

ஏழாவது, (அம்மா..இப்பவே கண்ணை கட்டுதே..) ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து மேற்கத்திய இசையில் கலக்கிய (லதா மங்கேஷ்கர் பாராட்ட வரும் போது கண் கலங்கி, கை கூப்பி, தமிழில், "ஐயோ...என்ன பண்றது..." என்று மேடையில் உணர்ச்சி வசப்பட்ட ) உஷா உதூப்.

எட்டாவது, பொன்னியின் செல்வன் நந்தினி. (உறவுகள்தான் கூடாது என்று 
நிபந்தனை சொல்கிறது...கற்பனைப் பாத்திரம் கூடாது என்று சொல்லவில்லையே...!)

ஒன்பதாவது, பதிவுலகை கலக்கி வரும் பெண் பதிவர்கள் அனைவரும்...!

பத்தாவது, இந்த இடத்தை காலியாக விட விரும்புகிறேன்...எதிர்காலத்தில் இன்னும் விரும்பக் கூடியதாய் பெண்மணிகள் கிடைக்கலாம். அல்லது இதைப் படிப்பவர்கள் "இவரை விட்டு விட்டீர்களே.." என்று பின்னூட்டமிட நினைக்கும் நபரை அந்த இடத்தில் Fill Up செய்து விடலாம்.

Be Indian என்று இந்தியர்களாகப் பட்டியலிட்டு விட்டேன்...
வாழ நினைத்தால் வாழலாம் மாதிரி தொடர நினைப்பவர்கள் அனைவரும் தொடரலாம்யார் தொடர்ந்தாலும் 'எங்களை'ச் 'சுட்டி' சொல்லி விட்டுத் தொடர்ந்தால் சந்தோஷமடைவோம்...!
12 comments:

சாய்ராம் கோபாலன் said...

//இரண்டாவது, நான் அறிந்த, என்னுடன் பணி புரியும் பெண். (படம் எல்லாம் போட முடியாதுங்க..) சற்றே கோபமான, வாய்த் துடுக்கான பெண் என்றாலும், கவர்ந்தது தன்னுடைய சற்றே மன நிலை குறைந்த இரண்டாவது பெண்ணை வளர்ப்பதில் அவள் காட்டும் பொறுமையும், பாசமும், அக்கறையும். கொஞ்சம் கூட கோபம் வராமல் சொல்லிக் கொடுக்கும் குணம். அந்தக் குழந்தையிடம் இப்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது.//

I guess she is the best. Good pick. Wishing her the best

kggouthaman said...

சாரி - எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். - 'கவர்ந்த பத்துப் பெண்கள்' திங்கட் கிழமைப் பதிவு, ஒரு சிறிய திருத்தம் செய்யும்போது காணாமப் போயிடிச்சு. கருத்துரைகள் உட்பட. வாசகர்கள் மன்னிக்கவும்.

Madhavan said...

//சாரி - எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். - 'கவர்ந்த பத்துப் பெண்கள்' திங்கட் கிழமைப் பதிவு, ஒரு சிறிய திருத்தம் செய்யும்போது காணாமப் போயிடிச்சு. கருத்துரைகள் உட்பட. வாசகர்கள் மன்னிக்கவும்.//

ஏதோ மாயா ஜாலம்னு நெனைச்சேன்.. தெரியாம மிஸ் ஆயிடுச்சா.. அதுக்கு என் சார் மன்னிபெல்லாம் கேக்குறீங்க.. பின்நூட்டந்தானே போயிடுச்சு.. பரவயில்லையே.. அதுதான் பதிவ திரும்பபோட்டுட்டீங்களே..

kggouthaman said...

(பழைய பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள் இதோ கொடுத்துள்ளேன்.)

புலவன் புலிகேசி said:
அன்னை தெரேசாவை விட்டு விட்டீர்களே நண்பா...

சைவகொத்துப்பரோட்டா said:
பத்தாவது பெண் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :))

அண்ணாமலையான் said:
சரியாயிருக்கு

கிருஷ்ணமூர்த்தி said:
எம்ப்டியா விட்ட பத்து, கற்பனைப் பாத்திரம் நந்தினி ரெண்டையும் கழிச்சுப் பாத்தா, உங்களுக்குப் பிடிச்ச பத்துன்னு பத்துப் பேர் கூடத் தேறலே!

பெண்ணைப் பற்றிப் பேச வந்தால்,கண்ணைக் கட்டாமல் என்ன செய்யும்? :-))

நான் சொல்லமாட்டேம்பா said :
கிருஷ் சார் - நீங்க பரவாயில்ல. நான் எத்தனை முறை படித்தாலும், கட்டுரையின் முதல் வரியை, 'பித்துப் பிடித்த பெண்கள்' என்று படித்துத் திகைக்கிறேன்.

Chitra said :
.......
.........
...........
ஆமாம், அதேதான். கரெக்டா fill-up பண்ணிட்டீங்க. நன்றி.

ராமன் said:
எல்லாரும் மதர் தெரஸா, ஜான்ஸி ராணி, ஐஸ்வர்யா ராய் என்று சொன்னால் எப்படி? மிகப் பிரபலங்களைத் தள்ளி விட்டு, எல்லாருக்கும் தெரியாத ஆனால் உங்களுக்கு / எனக்கு தெரிந்து பாராட்டப் பட வேண்டிய பெண்மணிகளைச் சொல்லலாமே. அப்படிச் செய்யும் போது பத்து பேர் தேறுவது கடினம். சில பெயர்களைக் குறிப்பிட முடியாது. எனினும் அந்த மாதிரி பெண்களின் சாதனைகளை ஊரறியச் செய்வது நல்லது. என்வரை என்னைக் கவர்ந்த அம்மாதிரி இருவர் பற்றித் தனியாக இடுகை போட இருக்கிறேன்.

geetha santhanam said :
பிடித்த பெண்கள் என்றவுடன் எல்லோரையும் போல் அன்னை தெரெசா, இந்திரா காந்தி என்று கதை கட்டாமல் வித்தியாசமாக எழுதியிருக்கிறீர்கள். நல்லா இருக்கு. பொன்னியின் செல்வன் நந்தினி எனக்கும் பிடித்த கற்பனை பெண்.---geetha

எங்கள். said :
புலிகேசி,
இதுக்குதான் பத்தாம் இடம் வெறுமையாய் விட்டுள்ளோம்...!

ஹலோ, சைவகொத்துபரோட்டா,

எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகப் பெண்கள் வந்தால் அதற்கும்தானே பத்தாவது இடம்...அதற்குள் கூப்பிட்டால் எப்படி..!!

கிருஷ் சார்,

கிடைக்காமல் இல்லை. எல்லோர் பெயரையும் எல்லா ப்ளாக்கிலும் மாற்றி மாற்றி சொல்லியாகி விட்டது. திரும்பத் திரும்ப முத்துலட்சுமி ரெட்டி, அன்னி பெசன்ட், மதர் தெரசா, என்று சொல்லிய பெண்களையே சொல்ல விருப்பமில்லாததால் இப்படி சொன்னோம்..அப்படியும் P. சுசீலா பெயர் மீண்டும் மீண்டும் வந்து விட்டது...!

அன்புள்ள 'நான் சொல்ல மாட்டேம்பா',
வம்பா இது... சொல்ல மாட்டேம்பா என்று சொல்லியே வம்பில் மாட்டி விட்டால் எப்படி...!

நன்றி சித்ரா,

நன்றி..அண்ணாமலையான்,
கீதா சந்தானம்,
சரியாகப் புரிந்து கொண்டீர்கள்...உண்மை. நன்றி.

Madhavan said :
"India is my country. All Indians are my brothers & sisters" --> அப்படினா, இந்தியப் பெண்கள் அனைவரும் உறவினர்கள்.. அப்பா ரூல் படி இந்தியப் பெண்களை லிஸ்டுல சேர்க்க முடியாதா?
மேலும், அதன்படி, ஒருவர் வெளிநாட்டுப் பெண்ணைதான் மணமுடிக்க வேண்டும்.. (All indians are brothers & sisters..) ??

Anonymous said :
அதென்ன விசாகா ஹரி பற்றி மட்டும் ஒரு வரிக்கு ஒரு எழுத்தாகப் போட்டு விட்டீர்கள்? படிக்கக் கஷ்டமாக இருக்கிறதே!

எங்கள் said :
அனானி - ரெஃபிரெஷ் (F5) பண்ணிப் பாருங்கள். எங்கள் திரைகளில் - வரிக்கு வரி சரியாகத் தெரிகிறது. எழுத்துக்கு ஒரு வரி எங்கும் வரவில்லை.

ஹுஸைனம்மா : said:
உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என்னுடைய இந்தப் பதிவில் வெளியிட்டுள்ளேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!

சாய்ராம் கோபாலன் said:
I would say LR Eswari much more than Usha Uthub....she is such an versatile singer.

Anyway your list...

எங்கள் said :
நன்றி ஹுசைனம்மா - உங்க பதிவிலும் சொல்லிட்டோம்.

எங்கள் said :
நன்றி தமிழ் உதயம்,

நன்றி மாதவன், பதின்ம பருவங்கள் தொடர்ந்து விட்டீர்கள் போலும்...

சாய்ராம்,
இதை நீங்களும் தொடரலாமே... நீங்க்டல் ஒரு லிஸ்ட் போடுங்கள்..

Madhavan said...

//எங்கள் said : "நன்றி மாதவன், பதின்ம பருவங்கள் தொடர்ந்து விட்டீர்கள் போலும்..."//

You made open invitation for continuing 'கவர்ந்த பத்துப் பெண்கள்', that made me to realize the then pending job, hence finished that first.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//முதலில், என்னுடைய "எல்லா" நண்பர்களுடைய நண்பனின் அம்மா.//

தாய் எந்த நிபந்தனைகளுக்கும் உட்படாதவள் என்பதை உங்களை விட சிறப்பாக இது வரை யாருமே சொல்லி இருக்க முடியாது..

இதற்காக உங்களுக்கு ஒரு ஓஹோ..

வாழ்க.. நன்றி..

வானம்பாடிகள் said...

நல்ல வரிசை சார்!

அப்பாதுரை said...

இந்தியான்னதும் நினைவுக்கு வரும் முதல் பெண் இந்திரா காந்தி தாங்க. (அடுத்த படியா பூலான் தேவி)

அப்பாதுரை said...

||தன் பெயரைத் தந்து மங்காப் புகழைத் தந்த அவர் மனைவி சுஜாதா||

பெயரைக் கடன் கொடுத்தற்கே அங்கீகாரமா? சரிதான். அவருடைய புகைப்படம் (என்று நினைக்கிறேன்) இணையத்தில் இருக்கிறது, இதோ .

thenammailakshmanan said...

நல்ல பகிர்வு எங்கள் ப்ளாக்

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

//தன் பெயரைத் தந்து மங்காப் புகழைத் தந்த அவர் மனைவி சுஜாதா. (படம் கிடைக்கவில்லை)//

இங்கே கிடைக்குது பாருங்க:

http://www.kirukkal.com/2007/04/writer-sujatha-short-biography

திவ்யாஹரி said...

//எட்டாவது, பொன்னியின் செல்வன் நந்தினி. (உறவுகள்தான் கூடாது என்று
நிபந்தனை சொல்கிறது...கற்பனைப் பாத்திரம் கூடாது என்று சொல்லவில்லையே...!) //

எனக்கும் கூட நந்தினியை ரொம்ப பிடிக்கும்.. நான் மிஸ் பண்ணிட்டேன் ஸ்ரீராம்.. பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.. நேரமின்மை காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை..

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!