வியாழன், 30 ஜனவரி, 2025

டெல்லி அப்பளம் 60 ரூபாய், இரண்டு மிளகாய் பஜ்ஜிகள் 40 ரூபாய், ஒரு டீயின் விலை 30 ரூபாய்...

 

முன்குறிப்பு : புத்தகக் அக்கண்காட்சி பற்றி தனியே இங்கு எதுவும் எழுதாமல் ஓரளவு FaceBook ல் பகிர்ந்ததைதான் இங்கும் பகிர்கிறேன். மறுபடியும், இந்த வாரமும் சொல்கிறேன்... படங்கள் அதிகம் என்பதால் பதிவு பெரிதாக தெரிகிறது!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&

புத்தகக் கண்காட்சி செல்பவர்களுக்கு ஒரு முக்கியமான குறிப்பு.
புத்தகங்களை பார்வையிடுவதற்கு நடுவே சாப்பிட நினைத்தால், நீங்கள் அங்கு வெளியில் சாப்பிடுவதை விட மகளிர் சுய உதவிக் குழு மூலம் நடத்தப்படும் அந்த கண்காட்சிக்கு செல்லுங்கள்.


அங்கு வித்தியாசமாக, சுத்தமாக, சுவையாக ஐட்டங்கள் செய்து தருகிறார்கள். அங்கு சமைக்கும் இடத்தை படம் எடுக்க விட்டு விட்டேன்.
-----------------------------------------------

--------------------------------------
என்னதான் விடுமுறை நாளாக இல்லாமல், வேலை நாளாக இருந்தாலும் ஓரளவுக்காவது கூட்டம் இருக்கும். இந்த அளவுக்கு ஃப்ரீயாக பார்த்ததில்லை.
இந்த வருடம் கூட்டம் கொஞ்சம் கம்மிதான் என்று பரிசல் கிருஷ்ணா பதிவுகளில் இருந்தும் தெரிந்தது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாளில் நகரவே முடியாமல் கூட்டம் அள்ளும். ஆனால் இந்த முறை அந்த அளவுக்கு கூட்டம் இல்லை என்று தான் அங்கு ஸ்டால்களில் பேசிக் கொண்டார்கள்.
ஒரு புகழ்பெற்ற ஸ்டாலில் இரண்டு பெண்கள் சற்றே உவகையுடன் பேசிக் கொண்டது 'சனி ஞாயிறே ஃப்ரீயாதான் இருந்தோம். இன்னைக்கு இன்னும் ஃப்ரீயாக இருக்கலாம்'.
அங்கு ஸ்டால் வைத்து இருந்த ஒரு பெண்மணி சொன்னார் "அம்பத்தூரில் இருந்து வந்திருக்கிறேன். ஐம்பதாயிரம் வாடகை இந்த கடைக்கு. சனி ஞாயிறு கூட ஒரு நாளைக்கு 2500 முதல் 4000 வரை தான் வரவு. இந்த முறை விற்பனையும் ரொம்ப மந்தம்" என்றார்.
படத்தில் காணப்படுவது போல சில கடைகளில் 'இங்கு எந்த புத்தகத்தை எடுத்தாலும் 99 ரூபாய்', என்றும் இன்னொரு செக்ஷனை பிரித்து 'இங்கு எந்த புத்தகத்தை எடுத்தாலும் 199 ரூபாய்' என்றும் மேலே சீட்டு தொங்க விட்டிருந்தார்கள். ஏற்கனவே தள்ளுபடி சேல்ஸ் பற்றி காலச்சுவடில் பார்த்ததை சொல்லி இருந்தேன்.
புத்தக கண்காட்சி முடிந்த உடனே 'இவ்வளவு கோடி விற்பனை ஆயிற்று, அவ்வளவு கோடி விற்பனை ஆயிற்று' என்று சொல்வார்கள். அப்போது பார்த்துக் கொள்ளலாம்!
இந்தப் படத்தில் உள்ளது போல ஒரு புகைப்படக்காரருடன் வந்து, புத்தகத்தை புரட்டும் பாவனையில், பார்க்கும் பாவனைகளில் எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். சாதாரணமானவர்களா, வி ஐ பி களா என்று தெரியவில்லை!

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ஒரு டீயின் கதை... ச்சே... ஒரு டீயின் விலை...
சாதாரணமாக சாலையோரங்களில் நீங்கள் டீ குடித்தால் பத்து ரூபாய். அதில் டீ பாய் போன்ற கடைகள் பத்து ரூபாய், 15 ரூபாய் என்று அளவை வைத்து தரம் பிரித்திருப்பார்கள். சற்றே அதிகம் இருந்தால் 15 ரூபாய்.
சாலையில் இருந்து இந்த காம்பவுண்டை தாண்டி உள்ளே சென்று விட்டால் ஒரு டீயின் விலையை உதாரணமாக வைத்துக் கொள்வோம் என்றால்,
புத்தகங்களை ஸ்டால் ஸ்டாலாக மேயும் போது நீலச் சீருடை அணிந்த பெண்கள் டீ ,சுண்டல், ரொட்டி வகையறாக்களை ஒரு சிறு தள்ளுவண்டியில் தள்ளிக் கொண்டு வருகிறார்கள். அங்கு சுண்டலை நான் சுவைக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. டீ கிடைத்தது. உள்ளே டீ 20 ரூபாய். அது வெளியே கிடைக்கும் 10 ரூபாய் டீயில் முக்கால் பங்கு இருக்கும்.
வெளியே வந்து இந்த கடைக்கு வந்து நீங்கள் கேட்டால் டீ விலை என்ன என்று படத்தில் காட்டி இருக்கிறேன். டீ கோப்பையையும் காட்டி இருக்கிறேன்.

அதோ டீக்கோப்பையை பாட்டில்கள் மேலே வைக்கிறார் பாருங்கள்... அதைத் தனியே எடுத்து க்ளோசப்பில் எடுத்த படத்தைதான் மேலே போட்டிருக்கிறேன். அதைப் பார்த்தால் ஏதோ மாபெரும் கப் போல இருக்கும் என்பதால் இங்கு அளவைக் காட்டுகிறேன்!


ஆமாம், என்ன கடை அது?' என்று நீங்கள் கேட்பீர்கள் என்று தெரியும்!

ஆமாம்.... டீ எப்படி இருந்தது என்று கேட்கிறீர்களா?
பால் அடுப்பிலேயே இருந்து கோவா பதத்திற்கு வந்திருக்க, அதை கிளறிக் கிளறி டம்ளரில் ஊற்றி, அருகில் இருக்கும் டீ டிகாக்‌ஷனை அதில் விட்டு தருகிறார்கள். எப்படி இருக்கும் என்று உங்கள் நாக்குக்கு புரிந்திருக்கும்!
டெல்லி அப்பளத்திற்கு ஆசைப்பட்டது ஒரு குத்தமாய்யா.... ஏதோ புதிதாக பொரித்து கொடுப்பார்கள் என்று பார்த்தால், முன்னதாக டோக்கன் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள். டோக்கனுடன் சென்றால் ஏற்கனவே பொறித்து வரிசையில் இருக்கும் அப்பளங்களில் இருந்து ஒன்றை எடுத்து அதில் கேசரி பவுடர் போல எதையோ தூவி கையில் கொடுத்து விட்டார்கள்.

FaceBook ல் ஏன் டெல்லி அப்பளத்தை புகைப்படம் எடுக்கவில்லை என்று கேட்டிருந்தார்கள். ஒரு கையில் மிளகாய் பஜ்ஜி என்கிற வஸ்துவும், புத்தகப்பையும். மறுகையில் பெரிய அளவில் கெட்டியான, கீழே விழுந்தால் கூட உடையாத அந்த டெல்ல்லி அப்ப்ப்பளம்! அதனால் எடுக்கவில்லை!
யானைக்கு ஜட்டி போட்டது போல் அந்த டெல்லி அப்பளத்துக்குக் கீழே பஜ்ஜிக்கு வைக்கும் சைஸ் பேப்பரை வைத்து கொடுத்து விட்டார்கள். அது எதற்கு ஆகும்?
மிளகாய் பஜ்ஜிக்கு ஆசைப்பட்டதும் தவறாகப் போனது. மிளகாய் பஜ்ஜிக்கு ஆல்டர்நேட் வாழைக்காய் பஜ்ஜி. இரண்டுமே அங்கு டிரேயில் குவிந்து கிடந்தன. அதிலிருந்து ஆறிப்போன கை எறி குண்டு போன்ற ஒரு சமாச்சாரத்தை எடுத்து கையில் கொடுத்துவிட்டார்கள். ஒரு சட்னி கூட இல்லாமல் சாப்பிடுவது மிகவும் சிரமமாக இருந்தது.
சாதாரண கடை என்றால் சூடாக போடுகிறார்களா, சட்னி கொடுக்கிறார்களா என்று பார்த்துவிட்டு பிறகு வாங்குவதைப் பற்றி முடிவு செய்யலாம். டோக்கன் போட்டுக் கொண்டு அருகில் நெருங்கியதால் மாற்றவும் முடியவில்லை.
கனமான அந்த டெல்லி அப்பளம் 60 ரூபாய். கீழே விழுந்தால் உடைந்து நொறுங்கி விடுமோ என்று பயப்பட வேண்டாம். நீங்கள் எடுத்து உடைத்தால் தான் உண்டு.
இரண்டு மிளகாய் பஜ்ஜிகள் 40 ரூபாய்.
'நீ ஏன் அங்கு போனே?' என்று கேட்பது காதில் விழுகிறது. ஆசைதான்... நப்பாசை.... நாக்கு ஆசை..
அருகிலேயே மகளிர் சுய உதவி கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்தான். அங்கும் சாப்பிட கிடைக்கிறது. இங்கும் ஒப்பிடுகையில் அது சுவையாகவும், தரமாகவும், சுத்தமாகவும் இருக்கிறது.
**********************************************

பின்குறிப்பு...

அடுத்த வாரத்துடன் புத்தகக் கண்காட்சி விவரங்களை முடித்து விடுவேன் என்று நான் வணங்கும் முருகன் சாட்சியாக உறுதி அளிக்கிறேன்!

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் +


இக்கோவிலில் கடைசியாக எப்போது கும்பாபிஷேகம் நடந்தது என்ற தகவல் இல்லாத நிலையில், ரூ.5 கோடி மதிப்பீட்டில், கோவிலின் தொன்மை மாறாமல் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் முடிந்து, 2023ம் ஆண்டு, நவ., 3ம் தேதி கோவில் கும்பாபிஷகம் நடத்தப்பட்ட ஆபத்சகாயேஸ்வரர் கோவில் 'யுனெஸ்கோ' விருதுக்கு தேர்வு

தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவக்கம்: முதல்வர் ஸ்டாலின் சொன்ன சஸ்பென்ஸ்.

-  தண்ணீர் பாட்டில், 125 ரூபாய், இட்லி, 250, பிரியாணி, 450 ரூபாய் என, விலை இருக்கும். மத்திய சிவில் விமான பாதுகாப்பு பணியகம், 100 மி.லி, அளவு குடிநீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கிறது.  இதனால், பயணியர் அதிக விலை கொடுத்து, தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றி, பயணியருக்கு குறைந்த விலையில், குடிநீர், டீ, காபி உள்ளிட்டவை கிடைக்கும் வகையில், மத்திய அரசு, 'உடான் யாத்ரி கபே' எனப்படும், விலை குறைவாக பொருட்கள் விற்கும் உணவகங்களை திறக்க முடிவு செய்தது.  சென்னை: 'தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், மத்திய அரசின், 'உடான் யாத்ரி கபே' என்ற, குறைந்த விலை உணவகத்தை துவக்க முன்வர வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. 10 ரூபாய் டீ, 20 ரூபாய் சமோசா திட்டம்

-  சென்னை:'வானத்து இளவரசி' என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், ஜோர்டான் நாட்டிலிருந்து சென்னைக்கு முதல் முறையாக வந்தது.  இந்த சரக்கு விமானம், 125 டன் சரக்குகளை ஒரே நேரத்தில் கையாளக்கூடியது. அது மட்டுமின்றி, பயணியர் விமானமாகவும் இயங்கக் கூடியது. ஒரே நேரத்தில் 660 பயணியர் பயணிக்கலாம்.

-  மஹாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில், குய்லின்-பார் சிண்ட்ரோம் என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய், மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும். இதனால் 101 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புனேவில் ஒரு நோயாளி இன்று உயிரிழந்தார்.

-  லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் மஹா கும்பமேளா நிகழ்ச்சியில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறையில் உணவுகள் தயாரித்து தினமும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

-  நேதாஜி மரணம் தொடர்பாக பொய்யான தகவலை பரப்புவதாக ராகுல் மீது தெற்கு கோல்கட்டாவின் பவனிபூர் போலீஸ் ஸ்டேஷனில் அகில பாரதிய ஹிந்து மகாசபா அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  ஜன.,23ம் தேதி நேதாஜியின் பிறந்த நாளையொட்டி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., எம்.பி.,யுமான ராகுல் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், ஆக.,18ம் தேதி 1945ல் நேதாஜி உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

திருவனந்தபுரம்: கேரளாவில், குடியரசு தின விழாவில் அம்மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றிய போது, மேடையில் நின்றுக் கொண்டிருந்த போலீஸ் கமிஷனர் தாம்சன் ஜோஸ் மயங்கி விழுந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

-  சிறுமி பயன்படுத்தும் மொபைல் போன் டவர் வாயிலாக போலீசார் தேடியபோது, பெரம்பூர் வீனஸ் சந்தை பகுதியில் சிறுமி இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு, 12 வயது சிறுமி, 16 வயது காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார்.  அதேபோல், பெரம்பூரைச் சேர்ந்த 14 வயது மற்றொரு சிறுமி, அவரது காதலன் கரிமுல்லா, 21, உடனும், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அகரம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக், 19, என்பவருடனும் இருந்துள்ளனர்.  மூன்று ஜோடிகளும் தனிமையில் இருப்பதை பார்த்த போலீசார்

-  மதுரா; உத்தர பிரதேசத்தில் மனைவியுடன் சண்டை போட்ட கணவன் வாக்குவாதத்தின் முடிவில், மனைவியின் உதட்டை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-  விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் 87வது சீசன் நடக்கிறது. இதன் சாலஞ்சர் பிரிவு 4வது சுற்றில் இந்திய வீராங்கனை வைஷாலி, உஸ்பெகிஸ்தான் வீரர் நாடிர்பெக் யாகூப்போயவ் மோதினர். போட்டி துவங்கும் முன் மரியாதை நிமித்தமாக வைஷாலி, நாடிர்பெக்கிடம் கை குலுக்க, தனது கையை நீட்டினார். நாடிர்பெக் இதை மறுத்து, போட்டியை துவக்கினார். பின் வைஷாலி போட்டியில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றார்.

                                           - வங்கதேசத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா.

பெய்ஜிங்,: ஒரே இரவில் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது, சீனா. டீப்சீக் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த இரண்டு மாடல்களை அறிமுகம் செய்து, அந்நாட்டின் கனவை கலைத்திருக்கிறது.

புதுடில்லி 'முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்பது கற்பனை கதை. அந்த கற்பனையை எல்லாம் ஏற்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

-  சென்னை : தமிழகத்தில் மினி பஸ்களுக்கான புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. மினி பஸ்கள் கட்டணமும் மாற்றப்பட்டு உள்ளது. மேலும், சென்னையில் முதல்முறையாக மினி பஸ்கள் இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

-  விண்வெளி துறையில் உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரோவின் 100வது ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

-  சென்னை : 'ரயில்களில் நள்ளிரவு மொபைல் போன் சார்ஜிங் வசதி இருக்காது' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

-  மங்களூரு: தட்சிண கன்னடா, பந்த்வால் தாலுகா, புஞ்சலகட்டா கிராமத்தில் வசித்த சேத்தன்(25) என்பவருக்கும், குந்தாபூரின் சைதன்யா(24) என்னும் பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி திருமணமும் நிச்சயிக்கப்பட்ட பட்டது. இந்நிலையில் சேத்தனுக்கு வேறொரு பெண்ணுடனும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. அந்த இரண்டாவது பெண்ணின் போஸ்டிற்கு சேத்தன் ஹாட்டின் லைக் கொடுத்ததை பார்த்த சைதன்யா சேத்தனோடு தகராறு செய்திருக்கிறார், இதனால் மனமுடைந்த சேத்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

- மைசூரு: பஸ்ஸில் பயணம் செய்த பெண் தலையை வெளியே நீட்டியபொழுது பேருந்தை முந்திச் செல்ல முயன்ற லாரியில் அவருடைய தலையும், கையும் மாட்டிக்கொள்ள, ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். லாரியோடு தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை போலீஸ் தேடி வருகிறது.

- வெளிநாடுகளுக்கு அமெரிக்கா செய்து வந்த நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

- வழக்கறிஞராக வருவோரில் 10 ல் 7 பேர் தகுதியற்றவர்கள் - உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கவலை.

- சென்னை: நடிகர் கஞ்சா கருப்பு மூன்று லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும், வீட்டை லாட்ஜ் போல மாற்றி விட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

- கெளஹாத்தியில் இருக்கும் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்த திருமணமாகாத 70 வயது தாத்தாவும், திருமணம் செய்து கொள்ளாத 65 வயது பாட்டியும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் திருமணத்தை அந்த முதியோர் இல்ல நிர்வாகிகளே விமரிசையாக நடத்தி வைத்துள்ளனர்.

- உத்தர்கண்டில் அமலுக்கு வந்தது பொது சிவில் சட்டம்.

- French fries எனப்படும் உருளைக் கிழங்கு வறுவல் இறக்குமதி செய்து கொண்டிருந்த நாம்(இந்தியா) இப்போது அதை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளோம்.

- கோலார்: வயல்களில் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக திருஷ்டி பொம்மைகளை வைப்பதுண்டு. கோலாரில் உருளைக் கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் திருஷ்டி படக்கூடாதென்பதற்காக சினிமா நட்சத்திரங்கள் உள்பட பெண்களின்  கவர்ச்சிகரமான படங்களை பேனரில் ஒட்டி வைத்துள்ளனர். அவற்றை அகற்றும்படி பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
=============================================================================================

பாலகணேஷ் FaceBook ல் அறிவித்திருக்கும் சிறுகதைப்போட்டி ஒன்று.  படத்துக்கு ஏற்ற கதை!  நீங்களும் எழுதுங்களேன்....  



=========================================================================================
எழுத்தும் தொழிலும் என்கிற ஒரு தொடர் வந்ததது - அமுதசுரபி அல்லது கலைமகளில்...  அதில் பல எழுத்தாளர்கள் தங்கள் தொழிலையும் எழுத்து வாழ்க்கையையும் எழுதி இருக்கிறார்கள்.  எடுத்து வைத்திருக்கிறேன்.  பகிர நேரம் வரவில்லை.  அதில் ஜா.சீ எழுதிய பகுதிக்கு புத்தகாசிரியரின் முன்குறிப்பு!

=================================================================================================

FaceBook ல் பார்த்து நெகிழ்ந்த படம்...



இந்த மீன் பற்றி குறிப்புகள் தரும் ரீல்ஸ் பகுதி.  அதன் பெயர் 'ஒட்டி' யாம்.  சுவரொட்டி என்பது போல...  அங்குள்ள சுவர்களில், தரையில் வைத்தால் அது அங்கு இறுக்கப் பிடித்துக் கொண்டு விடுகிறது.  எடுப்பதே சிரமமாக இருக்கிறது என்பதைக் காட்டினார்.  திமிங்கிலம் போன்ற மீன்களின் வயிற்றுப பகுதியில் ஒட்டிக்கொண்டு உயிர் வாழுமாம்.
============================================================================================================

"எங்கிருந்தாலும் வாழ்க" பாடலின் சரண வரிகளின் டியூனில் நான் மாற்றி 2014ல் எழுதி பகிர்ந்திருந்த பாடல், கவிதை!


==========================================================================================

திரு கந்தசாமி பகிர்ந்திருந்த இந்த செய்திக்கு நான் அங்கு கொடுத்த என் கமெண்ட்டையும் கீழே கொடுத்திருக்கிறேன்!


கலைமேதை பாலசரஸ்வதிக்கு மியூசிக் அகாடமியில் அவருக்கு விருது ..
பொன்னாடை ..பதக்கம் ..
மூன்றடி உயரம் - அகலத்திற்கு பாராட்டுப்பத்திரம் ...
விழா நடத்தியவர்கள்
பாராட்டிப்பேசியவர்கள்
காலில்விழுந்து ஆசி பெற்றவர்கள்
பார்வையாளர்களாக வந்திருந்த கலையுலகப் பிரபலங்கள் ...
அனைவரும் தத்தம் கார்களில்ஏறி சிட்டாகப் பறந்துவிட ...
பதக்கம் - பொன்னாடை - வாழ்த்துமடல் ஆகியவற்றை சுமந்துகொண்டு பாலாவின் மகள் அவரை ஒரு கையால் பிடித்தபடி நின்று ஆட்டோவுக்காகக் காத்திருந்து அலுத்துப்போய் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிப்போன காட்சி இன்னும் கண்முன்னே நிற்கிறது ...!
-எம். எஸ். பெருமாள்

===============================================================================================

மறைக்கப்பட்டு, மறக்க வைக்கும் விஷயங்களிலிருந்து ஒன்று....



=================================================================================================

பொக்கிஷம் :-






========================================================================

இவ்வளவு சேர்த்தும், இன்னும் ஏதோ சேர்க்கவில்லையோ, குறைகிறதோ என்றே தோன்றுகிறதே..  ஏன் ஸ்ரீராம்?  

102 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள் ஜி நூல் ஏதும் வாங்கவில்லையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தேவகோட்டை ஜி.. 

      முடிந்த வரை புத்தகம் எதுவும் வாங்கக் கூடாது என்கிற முடிவுடன்தான் சென்றேன்.  ஆனாலும் சில வாங்கினேன்.  அடுத்த வாரம் சொல்கிறேன்.

      நீக்கு
  2. ​விலை கூடுவதாலும், அமேசான் போன்ற தளங்கள் அதிக அளவில் தள்ளுபடி தந்து வீட்டிற்கே புத்தங்களை டெலிவெரி செய்வதாலும், இலவச pdf, மற்றும் e-book, kindle, போன்ற காரணங்களால் அச்சு புத்தகங்கள் விற்பனையில் சரிவு என்று நினைக்கிறேன்.

    செய்திகள் நிறைய. ஆனால் தினமலர் மட்டுமே செய்தித் தாள் ஆகாது. மற்ற செய்தி பத்திரிகையில் (தினத்தந்தி?) வந்த செய்திகளையும் தயிர் சாதத்தில் பச்சைமிளகாய் போல கலந்து தரலாம்.

    சினிமா பாட்டு உல்டா செய்வது கில்லெர்ஜீ வேலை. நமக்கேன் அந்த வேலை?

    பரிசு தொகை அறிவிக்க்காமல் கதைப்போட்டியா? அவருக்கு வேண்டாத புத்தகங்களை ஒழிக்க இப்படி ஒரு உத்தியா? புரியவில்லை.

    மீன் பற்றிய செய்தி ஏன் என்று புரியவில்லை !!!

    பொக்கிஷம் வழக்கம் போல்.
    முதல் ஜோக் போல memory transfer இன்னும் சில ஆண்டுகளில் வரலாம், A I வரவில்லையா?

    பதிவின் கடைசி பக்கம் சே கடைசி படம் எனது சிந்தனையையும் தூண்டுகிறது. கவர்ச்சி?

    ஆமாம். இந்த வார பதிவு அளவில் பெரியது என்றாலும் foam தலையனையாய் இருக்கிறது. கணம் இல்லை. ஆர்வம் இல்லையா? அல்லது நேரம் இல்லையா? அல்லது இப்படி ஒரு வாரம் செய்து பார்க்கலாம் என்ற நினைப்பா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  நானே தற்சமயம் கிண்டில் புத்தகங்கள் வாசிக்கிறேன்.  என்னிடம் ஏராளமான PDF கள் இருக்கின்றன.

      தினமலர் மட்டுமல்லாது, தினமணி, தமிழ் ஹிந்து ஆகியவையும் இருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?  தினத்தந்தியும் பார்க்கிறேன்.  இதே செய்திகள்தான் அங்கும்!

      சினிமா பாட்டு உல்ட்டா.....   அதற்குதான் தேதியை கவனிக்க வேண்டும்.  சேட்டைக்காரன், நான் எல்லாம் பல வருடங்களாக செய்து வருவதுதான்.  மட்டுமல்ல, முக்கிய வித்தியாசத்தை அநேகமாக கீதா ரெங்கன் சொல்வர்!

      ஆம்.  பழைய புத்தகங்கள்தான் பரிசு.  பணம் அலலது பரிசு முக்கியமல்ல.  தேர்ந்தெடுக்கப்படுவதுதான்!

      அது உடும்பு போல...   பெரிய மீன்களின் வயிற்றில், முதுகில் ஒட்டிக்கொண்டு மற்ற மீன்களைப் பிடித்துத் தின்று உயிர் வாழுமாம்.

      பொக்கிஷம்..  மதன் முன்பே கிரிக்கெட்டில் இப்போது இருக்கும் சியர் கர்ல்ஸ் பற்றி தீர்க்கதரிசனமாக ஜோக் போட்டிருந்தார்!

      கவர்ச்சியா?  ச்சே..  அப்படி எல்லாம் இல்லை! அழகை ரசிப்பது ஸார்...  

      புத்தகக் கண்காட்சி பதிவும் அதன் படங்களும் இடத்தைத் தின்பதால் வருவது, நேர்வது! 

      ஆர்வமும் நேரமும் சற்றே  குறைந்திருப்பதும் உண்மைதான்.  ஆனால் நான் குறை வைக்க நினைக்கவில்லை!!

      நீக்கு
    2. ஜெ கே அண்ணா, கில்லர்ஜி பாணி வேறு, ஸ்ரீராம் பாணி வேறு.

      பலருக்கும் ஒரே போன்ற எண்ணம், கருத்தும் வரலாமே. அதைப் பிரயோகிக்கலாமே. ஒரே ஐடியாவைக் கூட ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் தருகிறார்கள். இங்கு பொருத்தமான அர்த்தமுள்ள வரிகளாகத்தானே இருக்கின்றன.

      எங்கள் வீட்டிலும் கூட நாங்க சின்னவங்களா இருந்தப்ப காமெடியாக உல்டா செய்து பாடிக் கலாய்ப்பதுண்டு. பலரும் இதைச் செய்திருப்பார்கள் செய்வார்கள்.

      கீதா

      நீக்கு
  3. வித்தியாசமான கதம்பம். படித்து முடித்தபின் எது சட் என்று மனதில் தங்குகிறதோ அதற்குக் கருத்திடுவேன்.

    அசோகமித்திரன், பாலசரஸ்வதி தகவல்கள் ஆச்சர்யப்படுத்தவில்லை. பிரபலங்களுக்கு தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியோ கலைஞர்களைப் பற்றியோ ஒன்றும் தெரியாது. தாங்களும் போனோம் போட்டோ எடுத்துக்கொண்டோம், தங்கள் முகமும் பேப்பரில் வந்தது என்ற கதைதான். ஒரு முறை பிபி ஶ்ரீநிவாஸ் பேச ஆரம்பித்ததும் மரியாதையில்லாமல், பேசினது போதும் என மைக்கைப் பிடிங்கி விட்டார்கள் என்று வருத்தப்பட்டிருந்தார். எவ்வளவு பெரிய கலைஞர் என்ற மரியாதைகூடத் தெரியாத பயலாக இருந்திருக்கவேண்டும்.

    பழைய கலைஞர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுப்போம் என்று எண்ணுவதை விட்டுவிட்டு ஆளுயர ஷீல்டு இத்யாதி வேஸ்டுகளைக் கொடுப்பதால் என்ன பிரயோசனம்? என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முயன்றிருந்தால் கார் அனுப்பி வரவழைத்துக் கொண்டுவிட்டிருப்பார்கள். அலட்சியமான, கலைஞர்களை மதிக்கத் தெரியாத ஆட்கள் இவர்கள்.

    இதை எழுதும்போது சமீபத்தில் உறவினர் திருமணத்தில் எனக்கு காஷ்மீர் சால்வை கொடுத்தது நினைவுக்கு வருது. வேஷ்டியை வைக்க இடமில்லாமல், எனக்குப் பிடித்த அழெஆன வேஷ்டிகளை என் உபயோகத்திற்காக நிறைய வைத்திருக்கிறேன். யாரேனும் வேஷ்டி கொடுத்தால் தேவையில்லாத ரவிக்கைத் துண்டு போல ஆகிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்து சரிதான் என்றாலும், பரிசளிக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் வேஷ்ட்டியா, சால்வையா, கடிகாரமா என்று அலைபாயும் மனம் அவரவர்களுக்குதான்தெரியும்!  சமயங்களில் பணமாகக் கொடுத்து விடுவதே சிலாக்கியம்.

      பிரபலங்கள் விஷயம்..  பிரபல்யம் இருக்கும் வரை மரியாதை!

      நீக்கு

    2. ​வேஷ்டி என்பது வஸ்திர தானம் என்பதைக் குறிக்கிறது என்பது எனது அனுமானம். வேள்வி செய்த குருக்களுக்கு வேஷ்டி கொடுக்காமல் பேண்ட் அல்லது சால்வை கொடுக்க முடியுமா?

      Jayakumar

      நீக்கு
    3. பணமாகக் கொடுத்து விட்டால் பரம சௌக்கியம்!

      நீக்கு
    4. ​பணம் தட்சணையாக தரப்படுகிறேதே. தட்சணை வேறு தானம் வேறு.

      நீக்கு
    5. ஜெயகுமார் சொல்லியிருப்பது சரி.ஆனால் தானத்திற்கு வெளுக்காத unbleached வேஷ்டிதான் தரணும். பிராமணர்களுக்கு வேஷ்டி, சொம்பு, டம்ளர் தானமளித்தால் (செம்பு அல்லது வெள்ளி) எத்தனையைத்தான் அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்ள முடியும்? அவங்களும் அவற்றைச் சொற்ப விலைக்கு (சால்வை போன்று) விற்றுவிடுவார்கள். இந்தக் காலத்தில் பணம்தான் தேவையாக இருக்கிறது அல்லவா?

      நீக்கு
    6. // பணம் தட்சணையாக தரப்படுகிறேதே. தட்சணை வேறு தானம் வேறு. //

      தானத்தையும் பணமாக தந்து விடலாம் என்கிறேன்.  அவர்கள் அதைக் கொண்டுபோய் நாம் வாங்கிய கடையிலேயே பாதி விலைக்கு கொடுப்பதற்கு நாமே பணமாக தந்து விடலாம்!

      நீக்கு
  4. //மாப்பிள்ளைகள் எங்கெங்கே இருக்காங்கன்னு/-- அப்பவே இப்படி வெற்றுப் பீத்தலா? இந்தக் கதை கடந்த முப்பது வருடங்களாக இருக்கிறது. இது சரி.. நீங்க என்ன பண்ணறீங்கன்னு எதிர் கேள்வியை அவர்களிடம் கேட்டால், நானும் ஹஸ்பன்டும் மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு, அபூர்வமாக அகப்படுபவர்களிடம் பெண்கள், மாப்பிள்ளைகள் பையன்கள் மருமகள்கள் எந்த எந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம், எங்களைக் கவனிக்க ஈ காக்கை கிடையாது என்று சொல்வார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஆள்படை ஐந்தாறுபேர் இருக்கும் மேல்வர்க்கம் பற்றி மதன் போட்ட கார்ட்டூன்!

      நீக்கு
    2. ஆனால் அங்கே குச்சியோடு சுட்டிக்காட்ட வருவது ஃபீமேல் என்று ஜோக்கடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!

      நீக்கு
  5. தி வெ கோபாலய்யர்..... சமீபத்தில் ஓர் இரவு சீர்காழி கோயிலுக்குச் சென்றிருந்தேன். உற்சவருக்கு மண்டபத்தில் பாராயணம் நடந்து அப்போதுதான் முடிந்திருந்தது. மூலவர் சந்நிதி திறக்க பத்துப் பதினைந்து நிமிடங்களாகும். சேவித்துவிட்டு இரயில் நிலையத்துக்கு ஓடணும். அப்போ சிறிது தூரத்தில் ஒருவர் (பாராயணத்தில் இருந்தவர்) அவருடைய நண்பரோடு பிரபந்தங்களின் பெருமை பற்றி சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். காதால் கூர்ந்து கேட்டேன். அவருக்கு அறுபதுக்கு மேல் இருக்கும். (70 இருக்கலாம்). என்ன ஒரு நாலட்ஜ், பல ஆழ்வார்களின் பாசுரங்களை ஒப்புமைப் படுத்தும் அறிவு... எவ்வளவோ மகான்கள் நம்மிடையே இருக்கிறார்கள். நமக்குத்மான் அவர்களோடு பழகி ஒஇஷயங்கள் தெரிந்துகொள்ளும் பேறு இல்லை என நினைத்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போலி வியாபாரிகளுக்குதான் இங்கு மரியாதை.  தமிழைக் காப்பவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலபேர் அதை விற்றுத்தான் பிழைக்கிறார்கள்.

      நீக்கு
  6. சுஜாதா தேசிகன் செய்தது கவனக் குறைவு. நல்லது செய்யாதவர்களை கிசுகிசு பாணியிலும் நல்லது செய்தவர்களை பெயரோடும் எழுதியிருக்க வேண்டும்.

    கிசுகிசு என்பதே தவறான ஒன்று. தேவையில்லாமல் சம்பந்தப்படாதவர் மேல் நாம் குற்றமோ இல்லை பாராட்டோ வைத்துவிடுவோம். இதில் நல்லது செய்தவர் மிஷ்கினாகவும் இருக்கலாம், பிரபல டைரக்டர் ஷங்கர் அல்லது மற்றவர்களாகவும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. 

      அப்போது அவர்கள் அங்கு இல்லை.  சரி, யாராக இருந்தாலும் நல்லது செய்த ஒருவருக்கு அவருக்கு கிடைக்கும் நல்ல பெயரைக் கூடவா இருட்டடிப்பு செய்ய வேண்டும்?  அதுவும் சு. தே 

      நீக்கு
    2. அவர் பார்த்திபன் இல்லை.

      இது சுஜாதாவின் மறைவின் போது ஏற்கனவே ஆனந்த விகடனில் வந்த செய்தி தான்.

      அது சரி, நீங்கள் பார்த்திபன் என்று சொன்னதற்கு கந்தசாமி ஸார் என்ன பதிலளித்தார்?

      அரைகுறயாக எழுதுவதே எல்லொருக்கும் வழக்கமாகப் போய்விட்டது.

      நீக்கு
    3. அவர் எனக்கெல்லாம் பதில் அளிக்க மாட்டார் என்பதோடு, தனக்கு யாரும் பதில் சொல்வதில்லை என்றும் மற்றவர்கள் மீது குற்றப்பத்திரிகை வாசிப்பார் அவர்.

      இப்போது பாருங்கள், அங்கே சொல்லப்பட்ட க்ளூவைக் கொண்டு பார்த்திபன் என்று தோன்றுகிறது என்று  சொல்லி இருந்தேன்..  நீங்கள் இல்லை என்று சொல்லும் அதே நேரம் அவர் யார் என்று சட்டென சொல்லும் வழக்கம் உங்களிடமும் இல்லை!

      நீக்கு
    4. சுஜாதா தேசிகன் கூட சொல்லாததை நான் சொன்னல் எப்படி? ..
      ஜெஸி ஸார் கூட கதைப் போட்டி,
      புத்தகப் பரிசா என்று ஆதங்கப் பட்டவர் கணேஷ் பாலா என்று பெயரைக் குறிப்பிட்டாரா பாருங்கள்.

      நீக்கு
    5. சொல்லாத வரை யூகங்கள் பரவிக்கொண்டுதான் இருக்கும்.  அதில் குறைகாண வழியில்லை.  

      மேலும்,

      அது யாரோ இருந்து விட்டுப் போகட்டும்..

      இப்போது என்ன ஆகப்போகிறது!

      நீக்கு
    6. யூகங்கள் இருந்து கொண்டே இருந்தால் தான் எந்தச் செய்திக்கும் மவுசு.

      நான் குறை என்று சொல்ல வில்லை. கந்தசாமி ஸார் பதில் சொன்னாரா என்று தான் கேட்டேன். அவராவது சரியான பதிலைச் சொன்னாரா என்று தெரிந்ரு கொள்வதற்காக.

      நீக்கு
    7. கந்தசாமி ஸார் ஆங்காங்கே வருபவற்றை எடுத்துக் கொடுப்பார் / தொடுப்பாரே தவிர, அவருக்கு தெரியாது என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
  7. அது என்ன புத்தகத் திருவிழாவில்
    (ஸாரி சந்தையில்) எல்லோரும் முதுகில் ஒரு பையை மாட்டிக் கொண்டு?.. இது, அரதப் பழசான இளைஞர்களின் ஸ்டைல் அல்லவா?

    நீங்களோ குடும்பஸ்தன் வழக்கத்தில் கையில் ஒரு பையனை சுமந்து கொண்டு பழ.கருப்பையா ஸார் அருகில் நின்றபடி போஸ் கொடுத்துக் கொண்டு?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் அதை வசதி என்று நினைக்கிறார்கள் போல..  இளைஞர்கள் என்கிறீர்கள்.  சில பெரிசுகளே அப்படி தான் வந்தனர். 

      ஆனால் அதில் ஒரு வசதியும் இருக்கிறது.  புத்தகங்கள் வாங்குவோர் கையில் தூக்குவதைவிட முதுகில் சுமப்பது எளிதுதான்!

      நீக்கு
  8. பின்னூட்டம் போடுவதற்கு ஒரு பிரத்யேக ஸ்டைலை உருவாக்கியிருக்கிறேனே, கவனித்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது, பதிவின் மற்ற பகுதிகளை விடுத்து, ஒரு சிறு பகுதியை மட்டும் கவனித்து அதில் தேவை இல்லாத ஒரு பகுதியை மட்டும் கமெண்ட் செய்வதா?

      பதிவைப் படித்து அது சம்பந்தப்பட்ட அவரவர்கள் கருத்தை, அவரவர்களுக்குத் தெரிந்த மேல் விவரங்கள் கொடுப்பதே சிறந்ததது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. தேவையில்லாத பகுதியா?
      எது? அசோக மித்திரன் பற்றிய அந்தக் குறிப்பா?

      கொடுமை!

      நீக்கு
    3. தேவை இல்லாத பகுதி என்றால் பகிர்ந்திருப்பேனா நான்?!!!

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. புத்தகச் சந்தை - பதிவுகள் நன்று. மற்றவையும் ரசித்தேன் - குறிப்பாக கடைசி துணுக்குகள்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. புத்தக கண்காட்சி செய்திகள் படங்கள் என எல்லாமே நிறைவாக உள்ளது. டெல்லி அப்பளம் சென்னையில் நடைபெறும் தீவுத்திடல் பொருட்காட்சியில்தான் முன்பு பார்த்துள்ளேன். அப்போது அதன் விலை பத்து ரூபாய் இருக்குமென நினைக்கிறேன். குழந்தைகளுடன் சென்ற ஓரிரு தடவைகள் வாங்க வேண்டுமென ஆசை வரும். அதற்கு வீட்டில் நிறைய தடைகள். ஆனால், ஒரு முறை வாங்கி பங்கிட்டு சாப்பிட்டு ஆசையை தணித்துள்ளோம்.

    மேலும் அறிந்திராத நிறைய செய்திகளுடன் வந்துள்ளது. அப்படியும் ஏதோ குறையென அழகான அனுஷ்கா அழகாக குறைப்பட்டுக் கொள்கிறார். அவர் சொல்வது நியாமாவென மேலும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசியில் டெல்லி அப்பளத்தில் ஒன்றுமே இல்லை கமலா அக்கா. 

      கும்பகோணம் சென்று வந்தபோது ஆசையாக இலவடாம் வாங்கி வந்தேன்.  கூடவே அரிசி அப்பளமும் வாங்கி வந்தேன்.  இலவடாம் தடியாக இருந்தது.  அரிசி அப்பளம், மெலிதாக, காரமாக நன்றே இருந்தது.

      நீக்கு
  12. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  13. டெல்லி அப்பளம் 60 ரூபாயா?

    பெண்கள் சுய உதவிக் குழு நல்ல விஷயம், கொஞ்சம் வருமானம் பார்க்கலாம் வந்தால் நல்லது.

    அது சரி அடையாளமே தேவையற்ற புத்தகக் கண்காட்சிக்கு எதுக்கு இப்படி அரசியல் பிரமுகர்களின் படங்கள்? முகப்பில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தக்க் கண்காட்சிக்கு அடையாளம் டிஸ்கவுன்ட்தான். கொள்ளை விலை விற்பவர்களைப் பற்றி வேறு என்ன சொல்வது?

      நீக்கு
    2. டெல்லி அப்பளம் மட்டுமா?  அங்கு எல்லாமே விலை அதிகம்தான்!

      பெண்கள் சுய உதவி குழு பொருட்கள் நன்றாய் இருந்தாலும் பெரிய விற்பனை நடந்ததாய் தெரியவில்லை!

      தமிழ் டிஜிட்டல் லைப்ரரி என்று ஒரு தளம் இருக்கிறது. திறந்து பாருங்கள்.  தமிழில் எத்தனை லட்சம் படைப்புகள் இருக்கின்றன?  ஆனால் அங்கு திமுக தலைவர் படம்தான் முதல் ஐந்து பக்கங்களுக்கு!

      நீக்கு
  14. சிறப்பான பதிவு..
    கண்காட்சியின் போது வயிற்றுக்கு ஈயப்பட்ட வைபவம் ரசனை..

    உள்ளூர் ஏவாரி அல்லாமல் டெல்லி வாலாவே டெல்லி அப்பளத்தைப் பொரித்திருந்தாலும் எனக்குப் பிடிப்பதில்லை...

    அருமையான தொகுப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி செல்வாண்ணா...  சென்ற வாரம் சொன்ன புத்தகம் பற்றிய விவரங்கள் எல்லாம் படித்திருப்பீர்கள்!

      நீக்கு
  15. விடலைப் பருவத்திற்கும் கீழான குழந்தைகளுக்கு உடல் கவர்ச்சி எண்ணங்களைத் தூண்டி விட்ட காரணிகள் பற்றி ஆராய வேண்டும்..

    இளம் பிள்ளைகள் காதல் வசப்படுவது மாதிரியான திரைப் படங்களை எடுத்து சேவை செய்த கலைக் காவலர்களுக்கு காலம் தான் நன்றி சொல்ல வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ மஞ்சுவில் தொடக்கம்.  அலைகள் ஓய்வகதில்லையில் பலம் பெற்று பல படங்களில் வ(ள)ர்ந்தது..

      நீக்கு
  16. மர்ம நபரையும் 'யார் அந்த சார்' என்பதையும் முடிச்சு போட்டிட்டீங்க!!!!

    புத்தகக் கண்காட்சி ஃப்ரீயாக இருப்பதைப் பார்க்கும் போது, வாசிப்பு குறைந்திருக்கிறது என்ற காரணம் இருந்தாலும் இணைய வழி வாசிப்பும், புத்தகங்கள் வாங்குவது சேமிப்பது வீடு மாறுவது என்று பல காரணங்களாலும் இருக்கலாம்.

    இருந்தாலும் கண்காட்சிக்குப் போவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ஆனால் இங்கு எப்போது வருகிறது என்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும், ஏகாந்தன் அண்ணா முன்பு - இப்போது அல்ல இப்ப அவர் சென்னைக்கு விசிட் கொடுத்திருந்தார் - அவர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மர்ம நபரையும் 'யார் அந்த சார்' என்பதையும் முடிச்சு போட்டிட்டீங்க!!!! //

      :-))

      லட்சக்கணக்கான புத்தகங்களிடையே உலவிய அனுபவம் நன்றாக இருந்தது. ஆனால் நேற்று வந்த ஒரு எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை நீங்கள் வாங்குவீர்களா?

      அட, நான் ஒரு புத்தகம் போடுகிறேன். நீங்கள் வாங்கலாம். கமலா அக்கா கிடைத்தால் வாங்குவேன் என்று சொல்லலாம். வேறு யார் வாங்குவார்கள்?

      ஜீவி ஸார் கூட வாங்க மாட்டார்!!

      நீக்கு
    2. அதைச் சொல்லுங்க....வாங்குவதை விட அதைப் பாதுகாப்பது மிகவும் சிரமம் ஸ்ரீராம். அதுவும் என்னைப் போல் ஜிப்ஸி வாழ்க்கை வாழ்பவர்களுக்கு....

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      /அட, நான் ஒரு புத்தகம் போடுகிறேன். நீங்கள் வாங்கலாம். கமலா அக்கா கிடைத்தால் வாங்குவேன் என்று சொல்லலாம். வேறு யார் வாங்குவார்கள்?/

      என் மீதுதான் உங்களுக்கு என்ன ஒரு நம்பிக்கை...! இதற்காகவாவது நீங்கள் உங்கள் திறமையான எழுத்தில், கருத்தில் நல்ல கதைகள் எழுதி ஒரு புத்தகம் வெளியிட வேண்டும். அதில் நீங்கள் எழுதி பரிசு பெற்ற கதையும் அடங்கி இருக்க வேண்டும் . உங்கள் நம்பிக்கைக்கு என் பணிவான நன்றி சகோதரரே.

      இங்கு எங்கள் வீட்டில் புத்தகம் வாங்க ஆளிலில்லை. முன்பு நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்துக் கொண்டிருந்தேன்.. இப்போது அதுவுமில்லை.
      அம்மா வீட்டில் பைண்டிங் செய்யப்பட்ட பழைய புத்தகங்கள் ஒன்றையும் கண்களிலேயே காணவில்லை. கரையான்களுக்கு இரையாகி இருக்கலாம். தவிரவும் இப்போது பகலில் படிக்க நேரமில்லை. இரவில் மின்சார ஒளியில் என் கண்களுக்கு துணிவில்லை. கைப்பேசியையே அதிகம் நேரம் பயன்படுத்தினால், எதிர்ப்புக் குரல்கள் வருகின்றன. அப்படியும் சில, பல கதைகளை அதில்தான் படிக்கிறேன். நான் வீட்டில் சேர்த்து வைத்த சில புத்தகங்கள் என்னை கேட்காமலேயே வெளியேறி விட்டன. குழந்தைகளுக்கு புத்தகங்கள் படிக்கவும் ஆர்வமில்லை. அவர்கள் நேரங்கள் வேலை, அலுவலகம், குடும்பம் எனச் செல்கிறது. அப்படியே படித்தாலும் சில ஆங்கில புத்தகங்களை பயன்படுத்துகிறார்கள். தங்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. புத்தகம் போடுவீங்களா? சரியா போச்சு. எல்லாம் விளையாட்டுப் பேச்சானா இருக்கு?

      ஸ்ரீராம்! புத்தகம் போடுவதில் இரண்டு முறைகள் வழக்கத்தில் இருக்கின்றன.

      என்னன்ன தெரியுமா?

      1. நீங்களே உங்கள் செலவில் பதிப்பித்து நீங்களே விற்பனை செய்வது.

      2. வேலைக்கு ஆகாது. தெரிந்து கொண்டாலும் 'அப்படியா சமாச்சாரம்' என்று மனசு கொதிக்கும்.

      அதனாலே தெரியவே வேண்டாம்.

      நீக்கு
    5. ஹையோ ஜீவி ஸார்.. . புத்தகம் போடுவ தா நானா? கொஞ்சம் இப்படி காதைக் கொண்டு வாருங்கள்.. நான் புத்தகம் போடுவதாக இல்லை. இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள் ப்ளீஸ்....

      நீக்கு
    6. நன்றி கமலா அக்கா... புத்தகம் போட்டால் உங்களை நினைவு வைத்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  17. புகைப்படம் எடுத்துக் கொள்வதெல்லாம் சும்மா ஒரு ஃபேஷனாகவும் இருக்கலாம் இல்லை எழுதுபவராகவும் இருக்கலாம் ....பிரபலங்கள் என்றால் பின்னில் காரியம் இருக்கும்!

    ஒரு வேளை யுட்யூபர்ஸோ என்னவோ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரபலங்கள், சில எழுத்தாளர்கள் அப்படி எடுத்து பொதுவெளியில் போட்டுக்கொண்டார்கள்.

      நீக்கு
  18. இங்கு கப் சைஸ் பரவாயில்லை ஸ்ரீராம் கொஞ்சம் பெரிசு...விலையும் கம்மி....ஆனா இப்படியான இடங்களில் 15-20....30 என்பது அபூர்வம்

    பப்பாயா ஏதோ பழம் கலந்த டீன்னு புதுசா இருக்குமோன்னு நினைச்சேன்

    பால்கோவா டீயா ஆஆஆ...நாக்கில் பால் தடம் பதியும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற எல்லா இடங்களிலும் இருக்கும் கப் சைஸுக்கும் புத்தகக்கண்காட்சி அளவுக்கும் இருக்கும் வேறுபாட்டைச் சொன்னேன். 

      பால்கோவா டீன்னா பால் அடுப்பில் தொடர்ந்து இருந்து சுண்டக் காய்ச்சப்பட்ட பாலாய் இருக்கும்.  அதில் டீ டிகாக்ஷன்!

      நீக்கு
    2. பால்கோவா ..டீ அது புரிந்தது ஸ்ரீராம்...டீக்கடையில் பால் சின்னதான தீயில் காய்ந்து கொண்டே இருக்கும்...திக்காக இருக்கும் அதுதான் சொன்னேன்...

      கீதா

      நீக்கு
    3. வடக்கே மலாய் டீ என ஒன்று உண்டு. ஆனால் சாதாரணத் தேநீர் போட்டு அதில் தான் மலாய் போட்டுக் கொடுத்துப் பார்த்திருக்கேன்/சாப்பிட்டிருக்கேன்.

      நீக்கு
    4. இது இப்படிதான் போடவேண்டும் என்று அவர்கள் போடவில்லை.  பாலை அடுப்பிலேயே வைத்து...  அலட்சியம்.

      நீக்கு
  19. டெல்லி அப்பளம் வாயில் போட்டா நொறுங்கும் அது திக்கா இருந்ததா? ஆச்சரியம்..

    //யானைக்கு ஜட்டி போட்டது போல் அந்த டெல்லி அப்பளத்துக்குக் கீழே பஜ்ஜிக்கு வைக்கும் சைஸ் பேப்பரை //

    சிரித்துவிட்டேன்...

    மகளிர் குழுவில் சாப்பிட்டிருக்கலாமோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...  கிண்ணுன்னு ராமர் வில் பலத்தோட இருந்தது! 

      மகளிர் சுய உதவிக்குழு இடத்துக்கு போகும் முன்பு  விட்டோமே... 

      சோகம்!

      நீக்கு
  20. பின் குறிப்பு - ஹாஹாஹா ...ஸ்ரீராம் .....பாவங்க முருகன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. புத்தகக் கண்காட்சியும் அவை பற்றிய விபரங்களும் கண்டோம்.

    நியூஸ் ரூம் நிறைந்த செய்திகளைத் தந்தது.
    கோபத்தில்?மனைவியின் உதட்டை துண்டாடிய கணவன் என்ன வன்முறை?

    தலையை வெளியே நீட்டி லாரியில் தலை மாட்டிய பெண் பெண்ணின் தவறுதான் இருந்தாலும் நிற்பாட்டாமல் ஓடிய லாரி ரைவர் என்ன மனம்?
    பால் கறப்பது, ஆபீசரின் காவல்....ஹா.....ஹா....

    உலகப்படத்தில் காட்டுவது :).....தனிமையில் மோட்டுவளைதான் மிச்சம். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி. 

      நான் கூட முதலில் அந்த செய்தியைப் படித்தபோது ஓவர் அன்பில் உதட்டைக் கடித்து விட்டார் என்று நினைத்துதான் படித்தேன்.  ஹா....  ஹா.. ஹா...

      நீக்கு
  22. சித்தப்பா விஷயம் முன்னாடியே வந்து நான் அதுக்கு பதிலும் எழுதியாச்சு. தேடணும். சித்தப்பாவைக் கூட்டிச் சென்ற்து மூன்றாவது மகன் திரு ராமகிருஷ்ணன் )ஹிந்துப் பத்திரிகையில் வேலை செய்கிறார்} மற்றவை பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... 

      ஸோ, அவரும் இல்லை, இவரும் இல்லை!

      நீக்கு
    2. எங்கே சென்றாலும் பிள்ளைகள் இருவரும் மூத்த பிள்ளை/கடைசிப் பிள்ளை ஆகியோர் தத்தம் காரில் அழைத்துச் செல்வார்கள். ஆகவே சுஜாதா இறந்தப்போ சித்தப்பா தனியாக வந்திருக்க வாய்ப்பே இல்லை. அதுவும் வேளச்சேரியில் இருந்து.
      ஜெயலலிதா முதல்வராக இருந்தப்போ அவருக்குக் கலைமாமணி விருதோ என்னமோ கொடுத்தார். அப்போவும் கடைசிப் பிள்ளை தான் அழைத்துச் சென்றிருந்தார். எனக்குத் தெரிந்து அப்போத் தான் மேடை ஏறி விருதை வாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இந்த வயதில் மேடை ஏறுவது சிரமமாக இருந்தது என்றார்.

      நீக்கு
    3. எப்படி இருக்கீங்க, கீதாம்மா?
      எல்லோரும் நலமா?

      நீக்கு
    4. தகவலுக்கு நன்றி கீதா அக்கா. சு. தே இஷ்டத்துக்கு கதை விடுகிறார்!

      நீக்கு
    5. ஜீவி ஸார்..   கீதா அக்கா பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கிறாரே..  பார்க்கவில்லையா?

      நீக்கு
  23. டெல்லி அப்பள பலம் உட்பட அனைத்து விவரிப்பும் அருமை...

    பதிலளிநீக்கு
  24. ஏர்போர்ட் விஷயம் நல்லாருக்கு...வந்தா நல்லது, இல்லைனா விலை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கூடுதல்..

    ஒரு 12 வயதுப் பெண் குழந்தை இப்படி வெளியில் பையனோடு போகிறாள் என்றால்.....முதலில் பெற்றோருக்கு கவுன்சலிங்க் தேவை...

    இந்திய வீராங்கனை வைஷாலி// பாராட்டுகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாடு கெட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது என்று தெரிகிறது.

      நீக்கு
  25. போட்டிக்கான படத்தைப் பார்த்ததும் எப்படி யோசித்தாலும் கண்டிப்பாக வேறு யாராச்சும் அந்தக் கருவில் எழுதுவாங்க என்றே தோன்றுகிறது.

    பங்கு பெறுபவர்களை வாழ்த்துகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அது சொல்லும் கருக்கள் எல்லோருக்கும் உதிக்கும்.  ஆனால் வித்தியாசமாய் யோசிக்கோணும்!

      நீக்கு
  26. இங்கு விளக்குகிறார் - தேடினேன் கீழே....அங்கு வரும் போல ஜா சீ எழுதியது.....அடுத்த வியாழனில்?

    ஃபேஸ்புக் படம் நெகிழ வைத்துவிட்டது, ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போது பகிர்வது என்று தெரியவில்லை கீதா...  எம் வி வி உட்பட நிறைய எழுத்தாளர்களின் எழுத்து கலெக்ஷன் இருக்கிறது.

      நீக்கு
  27. ஒட்டி மீன் அவர் கையை இறுகப் பற்றிக்கலையோ?

    கவிதை சூப்பர்....ஸ்ரீராம்...ஆந்திராக்குப் போறதை வாழ்த்தியிருக்கீங்களே ஓ புயல் அங்கு போய்டுச்சுன்னா?!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. அசோகமித்திரன் அவர்களை 'இவருக்கா இந்த நினைலை தமிழ்நாட்டின் ஹெம்மிங்க்வே என்று சொன்ன பிரபலமே கொண்டு விட்டு வந்திருக்கலாமே தன் காரில். மனம் என்னவோ செய்துவிட்டது. பாவம்...

    வித்தியாசமாகச் செய்யும் டைரக்டர் - பார்த்திபன்? பெயரைச் சொல்லியிருக்கலாமே...

    பிரபலமான டைரக்டர் - சங்கர்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ இப்பதான் உங்க கருத்தைப் பார்த்தேன், ஸ்ரீராம்....பார்த்திபன் தானோ அவர்? ஆமாம் பெயரைச் சொல்லியிருக்கலாம்

      கீதா

      நீக்கு
    2. இல்லை என்கிறாரே கீதா அக்கா?

      நீக்கு
  29. அனைவரும் தத்தம் கார்களில்ஏறி சிட்டாகப் பறந்துவிட ...
    பதக்கம் - பொன்னாடை - வாழ்த்துமடல் ஆகியவற்றை சுமந்துகொண்டு பாலாவின் மகள் அவரை ஒரு கையால் பிடித்தபடி நின்று ஆட்டோவுக்காகக் காத்திருந்து அலுத்துப்போய் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிப்போன காட்சி இன்னும் கண்முன்னே நிற்கிறது ...!//

    மரியாதை, இங்கிதம் அதைவிட மனிதநேயம் இல்லாத ஏற்பாட்டாளர்கள் விருந்தினர்கள், பிரபலங்கள்....பரிசு கொடுத்துக் கௌரவித்து இருக்கவே வேண்டாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் பிரபல்யத்தை அவர்கள் தக்க வைத்துக் கொண்டார்கள்!

      நீக்கு
  30. தி வே கோபாலையர் பற்றி அறிகிறேன். வியக்க வைக்கும் மனிதர்.

    பொக்கிஷங்கள் எல்லாமே ரசித்தேன் ஸ்ரீராம். புன்னகைக்கவும் சிரிக்கவும் வைத்தன.

    ம்ஹூக்கும் கேள்வி மட்டும் கேட்கத் தெரியுது, அனுஷ் கு....

    புத்தகக் கண்காட்சில ஒரு போட்டோ மிஸ் ஆகுதே ஸ்ரீ! கம்போஸிங்க்ல விட்டுப் போச்சு போல...பரவால்ல அடுத்த வாரம் போட்டுக்குவோம்! அப்படின்னு அனுஷ் சொல்றாங்க போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. TVG பற்றி கொஞ்சம் கொஞ்சம் தான் அறிய முடிகிறது.

      நீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    புத்தக கண்காட்சியில் விற்ற அப்பளம் மி. பஜ்ஜி டீ எல்லாமே விலை அதிகம். நீங்கள் சொல்வது போல் அந்த டெ. அப்பளத்தின் சுவையும் அவ்வளவு அப்போதே சிலாக்கியமுமில்லை என்றுதான் எனக்கு இப்பவும் தோன்றுகிறது. ஒரே எண்ணொயாக இருக்கும். டீ பால் கோவா பதத்திற்கு வந்த பின் எப்படி இருக்குமோ? நான் பொதுவாக வீட்டிலேயே டீயை என்றுமே விரும்பி அருந்தியதில்லை.

    பாடலுக்கேற்ற தங்களின் மழை கவிதை அருமை. ரசித்தேன்.

    ஒட்டுண்ணி மீன பற்றிய செய்தி அறிந்து கொண்டேன். (அட்டை போல) இரண்டு காலும் இழந்தவர் தன் செய்கையால், மனம் நெகிழ செய்து விட்டார்.

    செய்திகள் நிறைய. ஆனால் படிக்க வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.  ஆம், செய்திகள் நிறைய போல தோன்றினாலும் படிக்க சுவாரஸ்யமாய் இருக்கும்.

      நீக்கு
  32. பதிவில் அனைத்தும் அருமை.
    டெல்லி அப்பளம் முன்பு போல இல்லை, அது போல பஜ்ஜிகளும் நன்றாக இருப்பது இல்லை, முன்பு சுடச்சுட போட்டு தருவார்கள் பொருட்காட்சிகளில்.

    உங்களின் மழை கவிதை அருமை.
    அசோகமித்திரன் அவர்களை செய்தி படித்தவுடன் முன்பு வந்து இருக்கிறது, கீதா சாம்பசிவம் பதில் சொல்லி இருந்தார்கள் என்று நினைத்தேன், அவர்களும் வந்து பேசி விட்டார்கள்.

    பத்திரிக்கை செய்திகளில் சிறுமிகள் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது,
    பஸ்ஸில் பயணம் செய்த பெண் தலையை வெளியே நீட்டி உயிர் போனது , மற்றும்
    கணவன் மனைவியை கடித்து குதறியது எல்லாம் படிக்க வேதனை தான் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.  டெல்லி அப்பளமும் தன் இயற்கையை இழந்தது!!

      நீக்கு
  33. FaceBook ல் பார்த்து நெகிழ்ந்த படம்.//

    நானும் பார்த்து மனம் நெகிழ்ந்தேன்.
    அடுத்த ஜெயராஜ் படம் எந்த கதையில் வரும் படம்? எந்த பத்திரிக்கையில் வந்தது? குறிப்பு ஒன்றும் இல்லையே!

    //திமிங்கிலம் போன்ற மீன்களின் வயிற்றுப பகுதியில் ஒட்டிக்கொண்டு உயிர் வாழுமாம்.//

    எப்படி எல்லாம் ஜீவராசிகள் இருக்கிறது! வாழ பல வழியை இறைவன் கொடுத்து இருக்கிறார்.
    பொக்கிஷபகிர்வுகள் அருமை.
    அனுஷ் அவரை பற்றி செய்திகள் கொடுக்காது குறை என்கிறார் போலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி..   அந்த ஜெயராஜ் படம் பற்றி நீங்களாவது கேட்டீர்கள்.  வித்தியாசமாய் கேள்வி கேட்பவர் கூட கேட்கவில்லை!!!   அதனுடன் கூட இன்னொன்று   .அது சேர்க்கவில்லை என்பதை கடைசியில் பார்த்தேன், ஆயினும் யாராவது என்ன என்று கேட்க்கிறார்களா என்று பார்த்தேன்.

      நீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு அருமை. பொக்கிஷ நகைச்சுவை பகிர்வுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    பிள்ளைகள், மாப்பிள்ளைகள் எங்கெங்கு உள்ளனர் என்பதை காட்ட உலகத்து வரைபடத்தை பயன்படுத்தும் அளவுக்கு அந்தக் காலத்திலேயே வெளிநாட்டு மோகம் வந்து விட்டதா என ஆச்சரியமாக இருந்தது.

    செய்திகளில் இன்று சிலது மனதை பாதித்தது. காலம் கெட்டுப் போகிறதா? இல்லை மக்கள்தான் காலத்தின் மேல் பழியைப் போட்டவாறு கெட்டு சீரழிந்து போகிறார்களா? ஒன்றும் புரியவில்லை.

    அத்தனை பகிர்விற்கும் மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்து, ரசித்து, கருத்திட்டமைக்கு நன்றி கமலாக்கா.

      நீக்கு
  35. இன்றைக்கு தமிழில் இருக்கும் எல்லா இலக்கியங்களையும் எரித்து விட்டால், கோபால ஐயர்  அவற்றை  மீண்டும் எழுதி கொடுத்து விடுவார் என்பார்கள். ஆனால் பட்டிமன்றங்களில் இவரை நடுவராக அழைக்க விரும்பமாட்டார்களாம், காரணம் யாராவது தவறாக மேற்கோள் காட்டினாலோ, செய்யுளை தவறாக சொன்னாலோ மேடையிலேயே அதை சுட்டிக் காட்டுவாராம். 
    இவர்  என் மாமாவின் சம்பந்தி, அதாவது என் மாமா பெண்ணின் மாமனார். பேச்சில் கிண்டல் தெறிக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அத்தனை சுலபத்தில் யாரையும் ஒப்புக் கொண்டுவிட மாட்டார்.   பாரதியாரைக் கூட கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.  நான் இவரை நேரில் சந்தித்தே இல்லை என்பது கொஞ்சம் வருத்தம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'அட!..' என்று வியந்து நினைத்துப் பார்க்கும் தகவல்கள். தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

      நீக்கு
    2. ​புதிய தகவல் சேர்க்கைக்கு நன்றி பானு அக்கா. அவர் உங்கள் உறவினர், மன்னிக்கவும், அவருக்கு நீங்கள் உறவினர் என்பது வியப்பு.

      நீக்கு
  36. புத்தக திருவிழா ஏமாற்றம் அளித்ததோ? பதிவில் தெரிகிறது. பொக்கிஷமும், அனுஷ்கா படமும் அதை ஈடு செய்து விட்டன. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் எழுத்தாளர்களானால் வாசகர்கள் பாவம் இல்லையா?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!