ஞாயிறு, 19 ஜூலை, 2009

சமூகப் புரட்சி - 02

அன்று எங்கே நிறுத்தினோம்?
ஆம். வீட்டுக்கு ஒரு குழவி என்பது நியதி ஆனால், என்று ஆரம்பிக்கும் முன்னரே அனானி ஒருவர் "அம்மி யார் தருவார்கள்?" என்று கேட்டு விட்டார். சிலப்பதிகாரத்தில் வரும் கனாத் திறம் உரைத்த காதையை [ஸ்ரீ, இது கால் முளைத்த கதை தான் - amputation not needed] உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் போதே சரியாகப் படித்திருந்தால்.... என்று டைப் செய்யும் போதே தோளில் சவாரி செய்பவரின் குரல் : "அம்மா இலவசமா இல்லை நாங்களாக வாங்கிக் கொள்ள வேண்டுமா? இலவசம் இல்லை என்றால் குழவியும் எங்களுக்கு வேண்டாம் என்பாரோ?" அவர் அப்படிச் சொன்னதும், சற்றும் தாமதியாமல் பின்னே போய் இலவசமா என்பதற்குப் பின் இருந்த கால் புள்ளியை நீக்கி விட்டேன். இப்பொழுது அம்மாவை எழுவாயாக எண்ணிப் படித்துப் பாருங்கள் - புரிகிறதா நம் அறிவு என்ன சொல்ல வருகிறார் என்று?

வீட்டுக்கு ஒரு குழவி வெற்றி பெற்றால் ...
- நிறைய [இன்னும் எத்தனை நிறைய வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளுங்கள்] குழப்பங்கள் தீரும். ஆனால் தொலைக்காட்சிகளில் சீரியலுக்குக் கதையே கிடைக்காது. அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் விடுப்பில் செல்பவர் மிகவும் குறைந்து நாட்டின் பொருளாதாரம் சீர்படும் என்றெல்லாம் அவர் சொல்லிக்கொண்டே போக. ....."ஐயா அறிவு, எல்லாவற்றையும் நாமே பட்டியல் போட்டு விட்டால், படிப்பவருக்குப் படித்த பின் அது பற்றி சிந்தித்துத் தாமும் அறிவுடை நம்பிக்கு எந்த விதத்திலும் குறைந்தவரல்ல என்ற நம்பிக்கை வளர வேண்டும்." ஆகையால்
நமக்குப் பின்னூட்டம் அளித்து வரும் தோழர்கள் [பன்மையில் ஆண்பால், பெண்பால் இரண்டும்] இந்த முயற்சி வேறு எப்படியெல்லம் நன்மை பயக்கும் என்பதனை அவரவர்க்குத் தோன்றிய படி எழுதுக.

11 கருத்துகள்:

  1. T V Serials like Siththi, sithappa,
    maamaa etc will not be there.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. akkaa annan thambi thangaiyE illai ennum nilayil, siththiyaam, maamaa vaam idhukkuth thaan oreyadiyagap paRakkakkoodathu enbathu.

    பதிலளிநீக்கு
  4. சமூகப் புரட்சி சுமுகப் புரட்சியாக இருந்தால் சரி...

    பதிலளிநீக்கு
  5. Suppose in this generation, each family has 'one' house and 'one' child.
    Next generation child will have 2.
    Next gen will have 4.
    4th gen: 8
    5th : 16
    6 : 32
    7 : 64
    so, in 2175 each person will be having more than 60 houses.

    பதிலளிநீக்கு
  6. Good point about the inverse geometric progression and effects!

    பதிலளிநீக்கு
  7. I do not understand the progression pointed out. If say there are 32 families with only one child each, some children may go un married since gender ratio could be adverse. Assuming 32 families have 16 males and girls, there will be age disparity. Assuming there is no disparity, 32 children will become 16 couples. They can get ideally 16 children. This would reduce the next gen to 8 families and the reduction should go on till one family with one child is left, who has to marry his/her grandmother / grandfather!!!

    பதிலளிநீக்கு
  8. படா தமாஷா கீதே!
    ஹும் நான் 2175 வரை வாழ வழி இருந்தால், பார்த்திருந்து, அப்பொழுது எங்கள் Blog ஆசிரியராக இருக்கும் "A" Series - களின் பேரன் பேத்தி வகையறாவிற்கு - அனானியாக
    எழுதி ஆனந்தப் படுவேனே!

    பதிலளிநீக்கு
  9. இப்பொழுதைய S சீரீஸ் மக்களுக்கு நீங்கள் எழுதுவது புரிகிறதா என்றால் ....

    பதிலளிநீக்கு
  10. //so, in 2175 each person will be having more than 60 houses.//
    commented an anany ....

    Still he/she does not want to part with any surplus accommodation to the roofless but projects it up to 2175 when he/she will be left with >60 houses and may be wanting to know if exp on maintenance of such houses is elgible for concession under ITXXX/1996 !

    What a strange world is this?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!