பாடம் பதினொன்று.
மகிழ்ச்சி என்றால் என்ன?
மகிழ்ச்சி என்பது, ஒரு செயலை, திட்டமிட்டு, திட்டமிட்ட நேரத்தில் அல்லது அதற்கு முன்பாக, செவ்வனே செய்து முடித்தல்.
திட்டமிடுதல் என்றால் என்ன?
எதை எண்ணிக்கை அடிப்படையில் அளவிட முடியாதோ அதை நமது கட்டுப் பாட்டில் கொண்டு வர இயலாது. இதனால் தான் நிமிடங்களைப் பற்றி இதற்கு முன் அவ்வளவு விரிவாக எழுதியிருந்தேன்.
எதை திட்டமிட்டாலும், அதை ஏதேனும் ஒரு அளவிடமுடிந்த அலகுக்குள் கொண்டுவருவதில்தான் நம் சாமர்த்தியம் உள்ளது.
உதாரணங்கள் :
நான், இன்று படுக்கைக்குச் செல்லு முன் - ஒரு புதிய ஆங்கில வார்த்தை கற்றுக் கொண்டு, அதை வாக்கியத்திலும் அமைத்துப் பார்ப்பேன்.
நான் இன்று வலையில் பூத்த மலர்களில் - ஏதேனும் ஒன்றையாவது ஊன்றிப் படித்து, அதில் உள்ள நல்ல அம்சத்தைப் பாராட்டி - அந்த பதிவுக்குப் பின்னூட்டம் இடுவேன்.
இன்று பழைய நண்பர்களில் யாராவது ஒருவரையாவது - கண்டு பிடித்து - அவரின் நலன் அறிய அவருக்கு மின் அஞ்சல் அனுப்புவேன்.
இன்று இந்த வாரத்தில் நான் முடிக்கவேண்டிய ஐந்து முக்கிய பணிகளை ஒரு வெள்ளைத் தாளில் பட்டியலிட்டுக் கொள்வேன்.
திட்டமிட்ட நேரத்தில் என் வேலையை முடிக்கிறேனோ இல்லையோ, படித்து விட்டுப் பின்னூட்டம் போட்டு வெற்றி அடைந்து விட்டேன்! படித்ததையும், ஆங்கில வார்த்தையையும் இரவு படுக்கும் போது யோசிக்கிறேன்...!
பதிலளிநீக்கு//இன்று பழைய நண்பர்களில் யாராவது ஒருவரையாவது - கண்டு பிடித்து - அவரின் நலன் அறிய அவருக்கு மின் அஞ்சல் அனுப்புவேன்.//
பதிலளிநீக்குஉங்கள் செயலும் சிந்தனையும் அப்படியே என்னை போலவே இருக்கிறது....
'பெய்யெனப் பெய்யும்' கணக்கா சட் சட்னு பதிவு போட்டுக்கிட்டே இருக்கீங்க.. உங்க தீர்மானத்துக்கும் முயற்சிக்கும் வணக்கம். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு- இலக்கிய ரசனை பதிவு அற்புதம் - இன்னும் எதிர்பார்க்கலாமா?
- சுனில் காவஸ்கரின் பழைய புகைப்படம் என்னை எங்கேயோ கொண்டு போய்விட்டது - இரண்டு பக்கமும் இருப்பது - வாடேகர், சோபர்ஸ்? ரிச்சர்ட்ஸ்? சுனிலை விட விசுவனாத்தை அதிகம் ரசித்தேன் - மச்சான் மாதிரி ஒழுங்கா கன்சிஸ்டன்டா ஆடக்கூடாதோ? 'உள்ளங்கவர்..' ரசித்துப் படிக்க முடிந்தது. கூடும் எல்லாம் வேணாங்க, தொடரட்டும்.
- உலகத் தமிழ் மாநாடு has become a farce. நல்ல எண்ணத்தோடு அண்ணாதுரை (?) தொடங்கி வச்சது அரசியல் மற்றும் சமூக ஆதாயம் பார்க்கும் கும்பலின் கைகளில் சிக்கி குரங்கு கையில் பூமாலையான கதையாகி விட்டது. இத்தனை பேர் பதிவு போடுகிறோமே, நாம் எல்லாம் சேந்து ஏன் ஒரு virtual உலகத் தமிழ் மாநாடு நடத்தக்கூடாது? அகலக்கால் வைக்காமல் தொடங்குவோம்.. போகப் போக பூவின் வாசம் புரியட்டுமே? இன்றைக்கு அத்தனை தொழில் நுட்பம் இருக்கும் போது தேவைக்கேற்றபடி நடத்தலாம்
- யக்கோவ்,அண்ணே... ஆங்கிலமும் மதர் தான்; ஜெர்மன் மொழி மட்டும் எனக்குத் தெரிந்து 'அப்பா'; உலகில் மொழிகள் எல்லாமே உறவு முறையில் தான் அங்கீகரிக்கப்பட்டன; அதில் தவறு இல்லை. தமிழ்த்தாத்தா (அவரை விடுங்க) என்பதை விட தமிழ்த்தாய் நன்றாக இருக்கிறது. சம்ஸ்க்ருதம் இருந்த அதே காலத்தட்டில் தமிழ் வழங்கியதற்கும் ஆதாரம் இருக்கிறது
- இந்த 'வாழ்க்கை நெறி' போல அடிக்கடி எழுதுறது நிஜமா நையாண்டியா?
பாடங்கள் பிரயோசனமாகவே இருக்கு.
பதிலளிநீக்குராத்திரி ஆங்கில வார்த்தை யோசிச்சீங்களா ரவி, அதை ஏன் சொல்லலை?
பதிலளிநீக்குநன்றி புலவன் புலிகேசி,
பதிலளிநீக்குஒத்த கருத்துடையவர்கள் அடிக்கடி சந்திக்க வேண்டும். அடிக்கடி, தினமும் இரண்டு மூன்று முறை வாங்க...!
அப்பா சார்,
பதிலளிநீக்குபழைய பதிவுகளையும் இங்கேயே அலசிட்டீங்க...ஊர்லதான் மழை பெய்யலை, இங்கயாவது பொழியட்டுமேன்னுதான்... அதை கவனித்தமைக்கு நன்றி! இலக்கிய ரசனை, கிரிக்கெட் தொடரும்...உங்களை விட்டுடுவோமா என்ன? இது மாதிரி ஒரு வார்த்தைக்குதானே காத்திருக்கிறோம்?! பதிவுலக தமிழ் மாநாடு நல்ல சிந்தனை.
நன்றி ஹேமா
பதிலளிநீக்கு