வராஹர் கோயில்
கணேச ரதத்தைத் தாண்டி வந்தால் அருகிலேயே குன்றில் வராஹர் கோயில் செதுக்கப்பட்டுள்ளது. இது வராஹர் குகைக் கோயில், வராஹர் மண்டபம், ஆதிவராஹர் கோயில் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இது பல்லவமன்னர்களான முதலாம் மகேந்திரவர்மன் மற்றும் மாமல்லன் என்று அழைக்கப்பட்ட நரசிம்ஹவர்மன் காலத்தையது. மலைப்பகுதியில் மறைந்து கிடந்த தால் பலகாலம் இது வெளிவரவில்லை. நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்ற பட்டம் கிடைத்த பின்னரே, அதன் நினைவாக இந்த ஊரும் மாமல்லபுரம் என்று அழைக்கப்பட்டதாகவும் சிற்ப வேலைகள் எல்லாம் அவனுடைய தந்தையின் காலத்திலிருந்தே தொடங்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ள வராஹர் கோவில்
(இடது புறத்தில் தெரியும்) – நம்மால் இப்படியெல்லாம் கோயில் அமைக்கமுடியுமா என்று கற்பனை
பண்ணிப்பார்க்க முடியாத விதத்தில் சிற்பிகள் தங்கள் திறமைகளைக் காண்பித்திருக்கின்றனர்.
கடல்மல்லை, முன்காலத்தில் வராக க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது. அந்தப் பிராந்திய அரசன் ஹரிகேசவர்மன், தினமும் திருவிடவெந்தை பெருமானை தரிசனம் செய்த பிறகே தானும் உண்பான், பிறருக்கும் தானம் செய்வான். அவனுடைய ஆழ்ந்த பக்தியைக் கண்டு இறைவன், கடல்மல்லையிலேயே, வராஹராகக் காட்சியளித்தார். அப்போது தாயாரை வலது பக்கத்தில தாங்கிக்கொண்டிருந்ததால், இந்த இடம் திருவலவெந்தை என்று அழைக்கப்பட்டதாம். இதனைக் குறிக்கும் சிற்பம் இந்த வராஹர் கோவிலில் உள்ளது. (அப்பா… மனைவியின் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது)
தாயாரை வலது பக்கம் தாங்கிக்கொண்டிருக்கும் வராஹப் பெருமானின் சிற்பம்
கோயிலின் சுவற்றில், ஆதிவராஹர் சிற்பம், மூன்று உலகங்களையும் தன் திருவடியால் அளந்த திரிவிக்கிரமன் சிற்பம், கஜலக்ஷ்மி மற்றும் துர்கா ஆகியவை காண்பவர் வியக்கும் வண்ணம் செதுக்கப்பட்டிருக்கின்றன.
கஜலக்ஷ்மி சிற்பம். அருகிலிருக்கும் சன்னிதியில் கருவறையில் ஒரு உருவமும் இல்லாமல் இருந்தது.
மூவுலகமளந்த திரிவிக்கிரமன் சிற்பம் மற்றும் துர்கையின் சிற்பம். இந்தத் துர்கையின் சிற்பம் அருகிலேயே தலையைப் பலி கொடுக்கும் வீரனின் சிற்பம் தெரிகிறதா?
மூலைகளிலும் மிக அழகாக பாறையை வெட்டியெடுத்து சிற்பங்களைக் குடைந்திருக்கிறார்கள்.
மண்டபத்தின் தூண்கள் அமர்ந்திருந்த சிங்கத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தூண்களை திருவரங்கம் கோயிலிலும், திருவெள்ளரை கோயிலிலும் இன்னும் பல கோயில்களிலும் கண்டிருக்கிறேன். இந்த மாதிரி அமைப்பு பல்லவர் காலத்தில்தான் உண்டாக்கப்பட்டது என்று கொள்ளலாம்.
துவாரபாலகர்களோடு கூடிய கருவறை. ஏறுவதற்குப் படிகளோடு. துர்கை, உலகளந்த பெருமாள் சிற்பம் அடுத்தடுத்த சுவற்றில்.
அந்த மலைப்பகுதியில் நடந்துசெல்ல அமைக்கப்பட்டிருக்கும் பாதை
ஆதிவராஹர் குடவரைக் கோயிலைக் கண்ட பிறகு நாங்கள் சென்ற இடம் இராயகோபுரம் என்று அழைக்கப்படும் பகுதிக்கு.
இராயர் கோபுரம்
இது ஒரு முற்றுப்பெறாத கோபுரம். ஒருவேளை இது, மகாபலிபரக் குன்றில் அமைந்துள்ள பல சிற்பத் தொகுதிக்கான நுழைவாயிலாக இருந்திருக்கலாமோ? இந்த கோபுரத்தில் இரண்டு தூண்கள் நடுவில் உள்ளன. இரண்டிலுமே ஒரு அழகிய பெண் நிற்கும் சிற்பம் உள்ளது. அதற்கு மேலே, தசாவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
இராயகோபுரம் என்று அழைக்கப்படும் இடம். ராஜகோபுரமாக நினைத்துக் கட்டப்பட்டதாக இருக்குமோ?
கோபுர நுழைவாயிலின் அலங்காரத் தூண்கள்.
யாளியின் மீது நின்றுகொண்டிருக்கும் அழகிய பெண்ணின் மேற்புறத்தில் தசாவதாரச் சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவை பல்லவ அரசின் காலத்திற்குப் பிறகு விஜயநகரப் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று சொல்கின்றனர்.
இதனை திரௌபதி குளியல் தொட்டி என்று அழைக்கிறார்கள். (காரணம் யாரே அறிவர்?)
பிறகு சிறிது தூரம் நடந்து சென்று நாங்கள் இராமானுஜ
மண்டபம் என்று அழைக்கப்படும் மண்டபத்தை அடைந்தோம். இந்தப் பெயர், 14ம் நூற்றாண்டில்
வைணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மண்டபம் என்பதும், அதற்கு முன்னால் இது சிவனுக்குரிய
ஆலயமாக இருந்தது என்பதும் எனக்கு ஆச்சர்யத்தை விளைவித்தது. அதனைப் பற்றி அடுத்த வாரம்
பார்க்கலாமா?
(தொடரும்)
இந்தத் தடவை படங்கள் ஏன் சிறயதாக வெளியாகயிருக்கிறது? தனிப் படங்கள் கூட?
பதிலளிநீக்குஎன்னுடைய கவனக் குறைவுதான் காரணம். மன்னிக்கவும். இப்பொழுது சரி செய்துவிட்டேன்.
நீக்குமிக்க நன்றி கௌதமன்ஜி
நீக்கு__/\__
நீக்குகௌதமன் சார்...இன்று உங்களுக்கு பிறந்த நாளா? வாழ்த்துகள். இனி நினைவு வைத்துக்கொள்வது சுலபம். 2 டிசம்பர் மாத்திரம் யாருக்கு என்று பார்க்கவேண்டும்.
நீக்கு// இனி நினைவு வைத்துக்கொள்வது சுலபம்.// எப்படி?
நீக்குதலையைப் பலி கொடுக்கும் வீரனின் சிற்பம் தெரிகிறதா?//
பதிலளிநீக்குதெரிகிறது, நெல்லை.
சிற்பங்கள் வெகு அழகு, நீங்க எடுத்த படங்களும்
கீதா
வாங்க கீதா ரங்கன். நன்றி
நீக்குநுணுக்கமான படங்கள். அறியாத விவரங்கள். நல்ல வழிகாட்டி பயணக் கட்டுரை. மகிழ்ச்சி.
பதிலளிநீக்குJayakumar
நன்றி ஜெயகுமார் சார்.
நீக்குவராஹர் கோயில் ல், இராயர் கோபுரம் என்று சிற்பங்கள் அசத்தல்.
பதிலளிநீக்குதஷ்ண சித்ர மியூசியம் படங்கள் காலையில் பார்த்தேன். வியந்து போனேன்.அங்கு போயிருந்தீர்களா, நெல்லை?..
வாங்க ஜீவி சார். நன்றி. நாங்கள் அங்கு செல்லவில்லை.
நீக்குநல்ல அழகா பொறுமையா எடுத்திருக்கீங்க, நெல்லை.
பதிலளிநீக்குவிவரங்களும்.
நான் போனப்ப இந்த அளவு செப்பனிட்டு இல்லை. பாதை கொஞ்சம் அப்படியும் இப்படியுமாகத்தான் இருந்தது. ஆனா ரொம்ப வருஷம் ஆச்சு.
கீதா
நானும் 89ல் போயிருக்கிறேன். அப்போது பல சிற்பத் தொகுதிகள் அருகிலிருந்து பார்க்கும்படியாக இருந்தது. இப்போ செப்பனிட்டு வேலிலாம் போட்டிருக்கிறார்கள்.
நீக்குநெல்லை, நான் ரொம்ப முன்னாடிக்குப் பிறகும் சென்றது என் மகன் 6, 7 ஆம் வகுப்பு படித்த சமயங்களில் அதன் பின்னும் ஆனால் சமீபத்தில் இல்லை. அப்பவும் கூட இந்த அளவு இல்லை. இப்ப நல்லா செஞ்சிருக்காங்க என்பது தெரிகிறது.
நீக்குகீதா
பெங்களூருக்கு வந்த பிறகு சென்னையை எப்படி நீங்கள் சுற்றிப் பார்ப்பது?
நீக்குபடங்களுடன் ஒவ்வொன்றையும் விரிவாக எடுத்துக் கூறி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமீண்டும் ஒவ்வொன்றையும் கண்டு மகிழ்ந்தோம்.
நாங்கள் 85 ,96களில் போய் இருக்கிறோம்.
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்குகௌதமன் ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு__/\__
நீக்குகெளதமன் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் , வணக்கங்கள், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் , செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குநாங்கள் இரண்டு முறை போய் இருக்கிறோம்.
மீன்டும் உங்கள் பதிவு மூலம் நன்றாக பார்த்து விட்டேன்.
ஆஆஆ கோமதி அக்கா வெல்கம்.... நாடு திரும்பிவிட்டீங்கள்... மகிழ்ச்சி..
நீக்குபடங்கள் மிகத் துலக்கமாக எடுத்திருக்கிறீங்கள், சிற்பங்களும் மிகவும் நேர்த்தியாக சிதைந்திடாமல் அழகாக இருக்கு. வராகர் கோயில் என்பதை விட, இந்த இடம் முழுக்க அழகாக இருக்கிறது, ஒருநாள் முழுவதும் நன்கு சுற்றித்திரிந்து வர நன்றாக இருக்கும்... நல்ல ஒரு சுற்றுலா இடமாகவே இருக்கிறது.
பதிலளிநீக்குபாறைகளைக் குடைந்து செய்திருப்பது வித்தியாசமான அழகு....
பதிலளிநீக்குவராகர் வலது பக்கம் தாயாரை அணைத்திருக்கிறார் எனச் சொல்லியிருக்கிறீங்கள், அது இடுப்பில் தூக்கி வைத்திருப்பதுபோல எல்லோ இருக்கிறது.. அது எப்படி தாயாக முடியும்? மனைவி அல்லது வேறு ஆராவதாக எல்லோ இருக்கும்...
யார் இதை எல்லாம் கவனிச்சுக் கிளவி சே..சே டங்கு ஸ்லிப்பாகத் தொடங்கிட்டுதே கர்ர்ர்ர்ர்ர்ர்:)) கேள்வி கேட்கப்போகினம் எனும் தைரியத்தில ச்ச்ச்சும்ம்மா அடிச்சு விட்டிருக்கிறீங்களோ எனவும் எனக்கு ஓசனை வருதே ஹா ஹா ஹா:))...
//இது ஒரு முற்றுப்பெறாத கோபுரம். ஒருவேளை இது, மகாபலிபரக் குன்றில் அமைந்துள்ள பல சிற்பத் தொகுதிக்கான நுழைவாயிலாக இருந்திருக்கலாமோ?///
பதிலளிநீக்கு//இராயகோபுரம் என்று அழைக்கப்படும் இடம். ராஜகோபுரமாக நினைத்துக் கட்டப்பட்டதாக இருக்குமோ?///
நீங்கள் போய்ப் பார்த்திட்டு வந்து, போகாத எங்களிடம் டவுட் கேட்கிறீங்க போல:))).. இருக்கட்டும்.. இருக்கட்டும்..:))
///யாளியின் மீது நின்றுகொண்டிருக்கும் அழகிய பெண்ணின்///
பதிலளிநீக்குஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈ:)).. அனைத்து சிலைகளும் கருங்கல்லில்தான் செதுக்கப்பட்டிருக்குது, பார்க்க ஒரே மாதிரித்தான் இருக்குது... அப்போ எதை வச்சு "அழகிய பெண்" என முடிவெடுத்தீங்க நெ த????... ஹா ஹா ஹா :)))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கெள அண்ணன்...
பதிலளிநீக்குநீங்கள் 1ம் நம்பர் எண்டெல்லோ அறிஞ்சனான்... இப்ப 2ம் திகதி வாழ்த்து சொல்றார்கள்.. மீ குளம்பிட்டேன்:)))
வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய தங்களது கோவில் பதிவில், மாமல்லபுரம் படங்களும், அதன் விபரங்களும் மிக நன்றாக உள்ளது. தங்களின் விளக்கங்களால், நிறைய விஷயங்களை தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பதிவில் படங்களை பெரிது படுத்தி பார்க்கும் போது அனைத்தும் அழகாக உள்ளது. பதிவை கருத்தூன்றி வாசிக்கும் போது நேரில் சென்று கண்டது போன்ற எண்ணம் வருகிறது. தங்களது இந்த அருமையான ஞாயறு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.