வெள்ளி, 13 டிசம்பர், 2024

அப்படிப் படைக்காமல் நிறுத்தி வைத்தால் பாரென்ன ஆகும்?

 M P சிவம் எழுதிய பாடலுக்கு தானே இசை அமைத்து பாடலைப் பாடி அருளி இருக்கிறார் திரு T M சௌந்தரராஜன்.

தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே ... முருகய்யா ...
தீஞ்சுவை யாகவில்லையே (2)


எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே ... குமரய்யா ...
இன்பம் ஏதும் இல்லையே

அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே ... முருகய்யா...
அங்கம் மணக்கவில்லையே (2)

சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே ... குமரய்யா ...
சீர் மணம் வேறு இல்லையே

முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும்
முதற் பொருள் ஆகவில்லையே ... முருகய்யா ...
முதற் பொருளாகவில்லையே

சத்திய வேலென்று சாற்று மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே ... குமரய்யா ...
மெய்ப் பொருள் வேறு இல்லையே

எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆட வில்லையே ... முருகய்யா...
எண்ணத்தில் ஆட வில்லையே (2)

மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே ... குமரய்யா ...
மற்றொரு தெய்வமில்லையே

தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே ... முருகய்யா ...
தீஞ்சுவை யாகவில்லையே

எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல்
இன்பம் ஏதும் இல்லையே ... குமரய்யா ...
இன்பம் ஏதும் இல்லையே 
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே ... முருகய்யா ...
தீஞ்சுவை யாகவில்லையே
முருகையா......


================================================================================================

G R நாதன் இயக்கத்தில் கண்ணதாசன் கூட்டுத் தயாரிப்பில் கே வி மகாதேவன் இசையில் 1963 ல் வெளியான வானம்பாடி படத்திலிருந்து இன்னுமொரு பாடல்.

T M சௌந்தரராஜன் குரலில் வரும் பாடல்.  காதல் தோல்வியின் கோபத்தில் நாயகன் கடவுளை பார்த்து கோபமாக சாபமிடும் பாடல்.  

'அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்று எழுதி இருந்தாராம் கண்ணதாசன்.  T M S அதை பாட மறுத்து விட்டாராம்.  நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.  அப்படி பாடமாட்டேன் என்று சொல்லி விட்டாராம்.  அப்புறம் கண்ணதாசன் அதை 'வாட வேண்டும்' என்று மாற்றினாராம்.

இனி பாடல் 

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்
(கடவுள்)
எத்தனை பெண் படைத்தான்
எல்லோர்க்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையெனும் விஷம் கொடுத்தான் 
எத்தனை பெண் படைத்தான்
எல்லோர்க்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையெனும் விஷம் கொடுத்தான்- அதை
ஊரெங்கும் தூவி விட்டான்
உள்ளத்திலே பூச விட்டான்
ஊரெங்கும் தூவி விட்டான்
உள்ளத்திலே பூச விட்டான்
ஊஞ்சலை ஆட விட்டு
உயரத்திலே தங்கி விட்டான்....
(கடவுள்)
அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்
அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்
படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தை
படைக்காமல் நிறுத்தி வைப்பான்

33 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. முதல் பாடல் அடிக்கடி கேட்டு மனம் ஒன்றிய பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  பெரும்பாலும் அப்படிப்பட்ட பாடல்களை மட்டுமே நினைவூட்ட வேண்டி பகிர்கிறேன்.

      நீக்கு
  3. இன்றைய இரண்டு பாடல்களுமே அருமையானவை.

    முதல் பாடலில் உள்ளம் மயங்கும். நம் மனதை இறைவனை நினைத்து ஒன்றச் செய்திருப்பார் டி எம் எஸ்.

    எனக்கு ஆச்சரியமளிப்பது, புகழ், பணம், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு, சக கலைஞர்கள் வியக்கும்படியான திறமை என்று எல்லாவற்றையும் பெற்ற இவர்கள், பணக்கஷ்டத்தில், இன்னும் சம்பாதிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்ததுதான். அதிலும் எம் எஸ் வி பணக்கஷ்டத்தில் இருந்தார், விகே ராமசாமி மற்றும் பல கலைஞர்களும் என்பதை என்னால் சீரணிக்கவே முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயாரிப்பாளராகி படம் எடுக்க ஆசைப்பட்டு வீணாய்ப்போனவர்கள் (பெரிய உதாரணம் டி ஆர் மகாலிங்கம்) அகலக்கால் வைத்தவர்கள், ஒன்றுக்கு மேல் "வீடு" வைத்துக் கொண்டவர்கள்...  

      பணம் காணாமல் போக எத்தனையோ வழி...

      இந்தக் கால நடிகர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பல்வேறு வகையிலும் தங்கள் பணத்தை முதலீடு செய்திருக்கிகிறார்கள்.

      நீக்கு
  4. கண்ணதாசன் இதனை வெளிப்படையாகப் பேசியவர். என்னுடையது சகட ராசி, பணம் வந்துகொண்டே இருக்கும், போய்க்கொண்டே இருக்கும், தங்காது என்று.

    ஆனாலும் காலத்தால் அழியாத, கேட்பவர்கள் மனதை ஒன்றச் செய்யும் பாடல்களை அளித்தவர்கள் எம்எஸ்வி, கண்ணதாசன், டிஎம்எஸ் அவர்கள்.

    இந்த காம்பினேஷனில் சோடை போன பாடல்கள் சில பகிர முயற்சிப்பாரா ஶ்ரீராம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனுங்க நெல்லை - எல்லாம் நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு! ஏன் இந்த விபரீத ஆசை !

      நீக்கு
    2. அதானே... என்ன விபரீதம்! 

      அது சரி..  சோடை போன பாடல்கள் என்று எப்படி சொல்ல முடியும்?  காதல் ஓவியம் படம் த்ராபை.  ஆனால் பாடல்கள் அத்தனையும் ஹிட். 

      நமக்குத் பிடிக்காது என்னும் பாடல்கள் வேறு பலருக்குப் பிடித்திருக்கலாம்.

      நீக்கு
    3. ஹிட் ஆகாத பாடல்களும் பலரின் முயற்சியால் பிறந்தவை தானே.. அவை மாத்திரம் என்ன பாவம் செய்தன என்று தெரிந்துகொள்ள ஆசை.

      நீக்கு

  5. தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
    தீஞ்சுவை யாகவில்லையே ... முருகையா .
    தீஞ்சுவை யாகவில்லையே
    முருகையா....

    இதற்கு மேல்
    வேறு என்ன தான் சொல்வது!!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் நானும் கையைப் பிசைந்துகொண்டு யோசிக்கிறேன்!

      நீக்கு
  6. // தானே இசை அமைத்து பாடலைப் பாடி அருளி இருக்கரியார் திரு T M சௌந்தரராஜன்//

    இருக்கரியார்

    !?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றி விட்டேன்.  இன்னொரு பிழையையும் சரி செய்து விட்டேன்.

      நீக்கு
  7. இரண்டாவது பாடல் அன்றைய அற்புதம்...

    அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் தோற்றுப்போன காதல்தான் சரித்திரமாகிறது.  ஜெயித்த காதல்கள் வெறும் சம்பவமாகிறது!

      நீக்கு
  8. கவியரசரின் இந்தப் பாடலைப் பதிவு செய்தது போலவே -

    பெண்மையின் மங்கலம் குறித்து அவர் இயற்றிய சில பாடல்களை எதிர் வரும் வாரங்களில் பதிவு செய்வீர்களாக!..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரு பாடல்களுமே அருமை. முதல் பாடல் இது வரை கேட்டதில்லை. இப்போது கேட்டு ரசித்தேன்.

    இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். இரு பாடல்களிலுமே வரிகள் நன்றாக அமைந்துள்ளன. இன்றைய பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  இன்றைக்கு ஒரு மாற்றம்!  பிரார்த்தனை இன்றி நேரடியாக விஷயத்துக்கு வந்து விட்டீர்கள்!   ஹா..  ஹா..  ஹா...

      முதல் பாடல் கேட்டதில்லை என்பது வியப்பளிக்கிறது.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      ஹா ஹா ஹா. பிரார்த்தனைதானே...! செய்து விடுகிறேன் இறைவனிடம் பிரார்த்தனைகள் எப்போதும், எந்நேரமும் செய்து கொண்டேயிருக்கலாம் . தவறில்லையே..!

      இன்று வழக்கமாக கைப்பேசியை எடுத்தவுடன் ஒரு வேலை வந்து விட்டது. அதனால் அவசரமாக பதிவை மட்டும் படித்து இனிமையான பாடல்களை கேட்டு விட்டு கருத்து தந்தபடி சென்று விட்டேன்.

      அனைவருக்கும் என் அன்பான திருக்கார்த்திகை அண்ணாமலை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள். உண்ணாமலை தாயாருடன் திருவண்ணாமலையில் அருள் புரிந்தபடி அமர்ந்திருந்திருக்கும் அருள் மிகும் அண்ணாமலேஸ்வரர் அனைவருக்கும் உடல் நலத்தையும், மனநலத்தையும் தந்து அருள் பாலிக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.🙏. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. முதல் பாடல் வரிகளைப் பார்த்ததுமே என்ன பாடல் என்று பாட வந்துவிட்டது. அருமையான பாடல். நிறைய கேட்டிருக்கிறேன்......பாடலில் உருக்கம் வெளிப்படும்...இசையும் மெட்டும் அப்படி சிவரஞ்ச்னி போல இருக்கு...அதான் அந்த உருக்கமோ என்றும் தோன்றுகிறது! ஒவ்வொரு ராகமும் ஒவ்வொரு உணர்வைத் தரும் அதை அமைக்கும் விதத்தில்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இரண்டாவது பாடலும் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம் அப்போதைய இலங்கை வானொலி உபயத்தில். அருமையான பாடல்....பெரும்பாலும் மதிய நேரப் பாடல்களாக இருக்கும் இப்படியானவை.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இங்கே குடியிருக்கும் நகரில் அருகாக புது வீடு கிரக ப்ரவேசம்... விடியற்காலையில் இருந்து தஞ்சையின் பாரம்பரிய இரட்டை நாயனம்... பிறவிக் கலைஞர்கள் போல..

    மழையோடு மழையாக இசை மழை..

    பதிலளிநீக்கு
  13. புதன் நள்ளிரவில் பிடித்த மழை இன்னும் விடவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு காலை பத்து மணிக்கும் அதிகாலை போல மேகமூட்டம். மழைச் சாரலுடன் இன்றைய நடைப்பயிற்சி முடிந்தது. வரும் வாரங்களில் திருவரங்கம் ஆரம்பித்மு பாலக்காடு வரை பல கோவில்கள் தரிசனம். மழை வலுத்து திட்டம் பாழாகுமா என்று தெரியவில்லை.

      நீக்கு
    2. மாமழை போற்றுதும்..
      மாமழை போற்றுதும்..

      நீக்கு
  14. இரண்டு பாடல்களுமே கேட்டிருக்கிறேன். அருமையான பாடல்கள்.

    முதல்பாடல் பக்தி எங்கள் அப்பாவுக்கு பிடித்தமானது. கசெட்டில் ஒலிக்கும்.

    கார்த்திகை குமராலய தீபம் இன்று. அனைவரையும் அவனருள் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. முதல் பாடல் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த பாடல். எங்கள் வீட்டில் பதிவு செய்து வைத்து இருக்கிறார் என் கணவர். பகிர்வுக்கு நன்றி.
    அடுத்த பாடலும் பிடிக்கும்.
    முன்பு அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!