நாம் இன்னும் மகாபலிபுரத்தில் ஐந்துரதம் பகுதியில் இருக்கிறோம். ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். தர்மராஜா ரதம் இருப்பதிலேயே பெரியது. இது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து பீம ரதம் விஷ்ணுவிற்கும், அர்ஜுன ரதம் இந்திரனுக்கும், நகுல சஹாதேவ ரதம் யமனுக்கும், திரௌபதி ரதம் துர்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இதனை, அந்த அந்த ரதங்களின் சுற்றுப்புறச் சுவர்களில் செதுக்கப்பட்ட சிற்பங்களைக் கொண்டு அறுதியிட்டிருக்கிறார்கள்.
இந்தப் பகுதியில் ஐந்து ரதம் மற்றும் ஒரு சிங்கம், எருது (நந்தி), யானை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட இன்னும் சில அமைப்புகளும் இருக்கின்றன. இவை 7ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டவை என்பதை நினைவில் கொண்டால், அவர்களுக்கு எத்தகைய திறமை இருந்திருக்கும் என்பது தெரியும். பாறையைக் குடைந்து இந்த மாதிரி ரதமோ கோயிலோ அமைக்கும்போது மேலிருந்து கீழாகத்தான் அவர்கள் வேலைசெய்திருக்கவேண்டும். அது எவ்வளவு கடினமான வேலை…யோசித்துப் பாருங்கள்.
இதை ஆங்கிலேயர்
காலத்தில் ஏழு கோயில் பகுதி என்று குறிப்பிட்டிருக்கின்றனர். அதையொட்டித் தயார்
செய்யப்பட்ட பழைய போஸ்டர் (இணையம்).
வெளிப்புறச் சுவர்கள்
இழைக்கப்படவில்லை, பல சிற்பங்களையும் இன்னும் செதுக்கவில்லை. இதுவே இந்தப்
பகுதியில் வேலைகள் பாதியில் நின்றுவிட்டன என்பதைக் காட்டும்.
கற்பாறைகளைச் செதுக்கி
(குடைந்து) கோவிலாக எப்படி மாற்றியிருக்கிறார்கள் பாருங்கள். இது நம் ஐந்தாம்
நூற்றாண்டின் சிற்பிகளின் திறமை (உலகின் பல்வேறு பகுதிகளில் நாகரீகம் வளராத
காலம்). அருகிலிருக்கும் குடவரைக் கோயிலின் கோபுர மாடலைப் பார்த்து, இதுதான்
இராஜராஜ சோழனுக்கு தஞ்சப் பெரிய கோயில் கட்டத் தூண்டுதலாக இருந்திருக்குமா என்று
நினைக்க வைக்கிறது.
பாறையைக் குடைந்து அதில் தூண்கள் மண்டபங்கள் என்று செதுக்கி-யிருக்கிறார்கள். ஓரளவு குறைந்த தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அவர்கள் செய்தது மிகப் பெரிய சாதனைதான்.
தர்மராஜா ரதத்தில் பல்வேறு பட்ட சிற்பங்கள் உள்ளன. அவை, ஸ்கந்தா, சிவா, நரசிம்ஹவர்மன், பைரவர், சந்திரசேகரர், ஹரிஹரர், பிரம்மா மற்றும் அர்த்தநாரீஸ்வரர் போன்றவை. நான் ஒவ்வொன்றாகப் படமெடுக்கவில்லை.
ஒற்றைக்கல் யானைச் சிற்பத்தை ஐராவதம் என்கிறார்கள். அதற்கு அந்தப்
புறத்தில் இந்திரன் சிற்பம் (நகுல சகாதேவ ரதம்) இருக்கிறது என்கிறார்கள்.
தர்மராஜா
ரதத்தில் அர்த்தநாரீஸ்வரர், அதை அடுத்து
சிவன் இரண்டு சிற்பங்களும் அமைந்துள்ளது தெரிகிறதா?
யானையின் தந்தம்
இரண்டு பக்கங்களிலும் காணவில்லை. அகழ்வாய்வின்போதே இல்லையா இல்லை காலம் செய்த
கோலமா என்று தெரியவில்லை.
ஞாயிற்றுக் கிழமை என்பதால் அப்போதே நிறைய மக்கள் வருகை தந்திருந்தனர். நேரம் சென்றால் புகைப்படம் எடுக்கவே முடியாத அளவு கூட்டம் இருந்திருக்கும்.
நகுல சகாதேவன் ரதத்திற்கு அருகிலுள்ள யானை (ஒற்றைக் கல்லில் வார்த்தது) நிஜ யானை அளவு.
உங்களுக்குத் தெரியுமா? இந்த ஐந்துரதம் பகுதியில் பல, மண்ணிலிருந்து அகழ்வாய்ந்தபோது கிடைத்தவை. ஒருவேளை இன்னும் இந்த இடத்தைச் சுற்றித் தோண்டினால் வேறு சிற்பப் புதையல்கள் கிடைக்குமோ என்னவோ. இன்னொன்று எனக்கு இவற்றில் பல பகுதிகள் முழுமையாக முடிந்த மாதிரித் தோன்றவில்லை. இடையில் ஏற்பட்ட படையெடுப்புகளினாலா?
ஐந்துரதம் அருகிலும் மற்றும் மாமல்லபுரத்தின் பல பகுதிகளிலும் சிற்பக்கூடங்கள் இருக்கின்றன.
நிறைய புத்தர் சிற்பங்கள் இருந்தன (சிற்பக்கூடத்தில்). இப்போதும் நம்மிடம் மிகுந்த திறமையுள்ள சிற்பிகள் இருக்கின்றனர். நான் தாராசுரம் சில வாரங்கள் முன்பு சென்றிருந்தபோது, அதையொட்டிய தெருவில் (அந்தக்காலத்தில் மாடவீதியாக இருந்திருக்கலாம்) ஒரு காளை மாட்டையும் அதை அடக்கும் ஒரு வீரன் சிலையை (சிற்பம் என்றுதான் சொல்லணும்) பார்த்தேன். தூரத்தில் பார்த்தபோது நிஜ காளைமாட்டை ஒருவன் அடக்குவதாகத்தான் எனக்குத் தோன்றியது. பிறகு அருகில் சென்று பார்த்தபோதுதான் அது சிற்பம் என்று புலப்பட்டது. அந்தச் சிற்பக்கூடத்தைச் சேர்ந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தேன், அவர் திறமையை வெகுவாகப் பாராட்டினேன் (அந்தப் படம் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்)
ஐந்து ரதங்கள் பகுதியைப் பார்த்த பிறகு ஆட்டோவில்
கோவில் அருகில் இறங்கிக்கொண்டோம். அங்கிருந்து கடற்கரை கோவிலுக்குச் சென்றோம். நான்
இதற்கு முன்பு 1990ல் சென்றிருந்தேன். அப்போது கடற்கரை கோவிலை அலைகள் மோதும். ஆனால்
இப்போதோ தொல்லியல் துறை கொஞ்சம் கவனம் செலுத்தி அந்த இடத்தை மேடாக்கி வைத்திருப்பதாக
எனக்குத் தோன்றியது. அதைப் பற்றி அடுத்த வாரம்
பார்க்கலாமா?
(தொடரும்)
எப்போதும் போல் விவரங்களும் படங்களும் துல்லியம் அழகு. தஞ்சை பெரிய கோயில் போல் கற்களை செதுக்கி அடுக்கும் முறையை அன்றே கடைபிடித்திருந்தனர் எனின் இப்படி சில முடிவடையாத பகுதிகள் இருந்திருக்காது.
பதிலளிநீக்குவாங்க ஜெயகுமார் சார். குடைவரை, கற்றளி போன்றவை சோழர் காலத்துக்கு முந்தைய பொறியியல் அமைப்பு. பல சோழர் காலக் கோவில்கள் சிதைவுற்றிருக்கின்றன
நீக்குசிற்பமாக குடைவதற்குமுன் இவை தனித்தனி பாறைகளாக கிடந்திருக்குமா, இல்லை தனித்தனியாக உடைத்துக் கொண்டார்களா? இங்கு ஏன் இவ்வளவு பாறைகள்? ஒரு எவ்வளவுபேர் வேலை செய்திருப்பார்கள்? யார் சம்பளம் தருவார்கள்?....
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம். இந்த இடம் முழுவதுமே பாறைக் குன்றுகள். அதில் ஆங்காங்கு செதுக்கியிருக்காங்க.
நீக்குநாம (இதுக்கு ஆள் சேர்த்துக்குவோமே) ஒரு பெண்ணைப் பார்த்ததும் முகம் அனுஷ்கா சாயலோ, சைடு போஸ் தமன்னாவோ என்றெல்லாம் கற்பனை செய்வதுபோல சிற்பிகள் கற்பனையில் அந்தந்தத் தொகுதிகள் ஏற்பட்டிருக்கின்றன.
அப்போ அரசர்கள் உணவுக்கு நெல் கலங்கள் கொடுத்திருப்பாங்க. அடிப்படை வாழ்வாதாரத்திற்குக் கிடைத்திருக்கும் திறமைக்கேற்றவாறு
நீக்குபடங்கள் பற்றி என்ன சொல்ல? வார்த்தைகளே இல்லை. அட்டகாசம்.
பதிலளிநீக்குஅது சரி 'குடைவரை' இல்லையோ?
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. குடைவரைக் கோயில்தான்
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜு சார். இப்போ திருப்புல்லாணியிலிருந்து எழுதுகிறேன்
நீக்குவாங்க துரை செல்வராஜு சார். இப்போ திருப்புல்லாணியிலிருந்து எழுதுகிறேன்
நீக்குவணக்கங்கள் பல...
நீக்குஓம் ஹரி ஓம்
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்
நீக்குபடங்கள் எல்லாம் அருமை. உங்கள் துணைவியுடன் இருக்கும் படம் அருமை.
பதிலளிநீக்குபல சிற்பங்களுக்கு கீழே வலை தடுப்புக்குள் போகஸ் லைட் இருக்கா?
இரவு ஒலி வெள்ளத்தில் இருக்குமா மாமல்லபுரம்.
பாறை மேல் நந்தி சிலை இன்னும் முடிவடைய வில்லை போலும் அதற்கு பின்னால் தெரியும் மதில் சுவர் இப்போது கட்டி இருக்கிறார்கள் போலும், முன்பு பார்த்த நினைவு இல்லை.
சிற்பகூட சிலைகள் அழகு. சிற்பிகள் இப்போதும் அழகு சிலைகளை வடித்து வைக்கிறார்கள். அவர்களை பாராட்டியது நல்ல விஷயம்.
பாராட்டு அவர்களுக்கு உற்சாகத்தை தரும்.
வாங்க கோமதி அரசு மேடம். சிற்பிகள் மாத்திரம் தங்கள் பெயரை எழுதி வைத்திருந்தால் (ஊர் பெயர் குலப் பெயர்களோடு) எப்படி இருந்திருக்கும். முகம் தெரியாத சிற்பிகளை இப்போது நினைத்து பிரமிக்கிறோம்.
நீக்குஇரவு அந்தப் பகுதி ஒளியுடன் அழகுற மிளிரும் என நினைக்கிறேன்.
நீக்குதடுப்புச் சுவர்களை நான் முன்பு பார்த்த நினைவு இல்லை
நன்றி
எப்படி இப்படி இவ்வளவு அழகாகக் குடைந்து சித்திரங்களை வரைந்தும், செதுக்கியும்...எவ்வளவு உழைப்பு, ஈடுபாடு, நேர்த்தியான தொழில் என்று பலவும் வியக்க வைக்கின்றன. கூடவே நிறைய சிற்பிகள் அப்போது இருந்திருப்பார்கள் என்றும் தோன்றுகிறது.
பதிலளிநீக்குகீதா
குடும்பம் குடும்பமாக சமூகமாக உழைத்திருப்பர். ஒவ்வொரு இடங்களிலும் அவர்கள் திறமை நேர்த்தி உழைந்பு தெரிகிறது
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய பகுதி குடவரை கோவில் படங்களும், விளக்கங்களும் மிக அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு சிற்பங்களின் அழகும், மனதை கொள்ளை கொள்கிறது. இத்தனை திறமையாக வெறும் பாறைகளை அழகுமிக்க சிறபங்களாக வடித்த சிற்பிகளின் திறமையை எண்ணி மனம் வியக்கிறது. இவர்களின் திறமையை அந்தந்த மன்னர்கள் எப்படி போற்றி புகழ்ந்திருப்பார்கள் எனவும் மனம் நினைக்கிறது. அந்த சமயத்தில் அந்த சிற்பிகளின் மனது எத்தனை சந்தோஷமடைந்திருக்கும் எனவும் தோன்றுகிறது.
நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் மிக அழகாக உள்ளது. நீங்களும், உங்கள் துணைவியாரும் உள்ள புகைப்படம் அழகாக இருக்கிறது. இப்படி தெளிவாக விளக்கம் தந்திருக்கும் தங்களது திறமையை எண்ணியும் வியக்கிறேன். உங்கள் தயவில் வாரா வாரம் நாங்களும் சிற்பங்களை கண்டு தரிசித்து அதை குறித்த விபரங்களையும் அறிந்து கொள்கிறோம். இதற்கு உங்களுக்கு என் பணிவான நன்றிகள் பல. எல்லாப் படங்களையும் கண்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் ங. நேர்த்தியான உங்கள் கருத்துக்கு நன்றி. எல்லா வேலைகளுக்கு மத்தியில் பதிவுகள் எழுதி மற்றவர்கள் பதிவைப்ஆபடித்துக் கருத்திடும் உங்களைப் போன்றவர்களின் உழைப்பிற்கு அருகே கூட என்னால் வர இயலாது
நீக்குஇன்னும் புல் டெம்பிளுக்குச் செல்லவில்லை. சென்று பதிவிட வேண்டும் என்று ஆசை
நீக்குBull Temple. புல்லுக்கெல்லாம் கோவிலான்னு நினைச்சுடப் போறாங்க
நீக்குசிறப்பான பதிவு..
பதிலளிநீக்குவரலாற்றுச் செய்திகள் சரித்திரச் சான்றுகள் காலத்தை வென்று நிற்பவை..
வாங்க துரை செல்வராஜு சார். சரித்திரச் சான்றுகள் காலத்தை வென்று நிற்கும் என்பது உண்மை
நீக்குசிலைகள் செமையா இருக்கு நெல்லை. ஆமாம் அருகே நிறைய இப்படியான கடைகள் உண்டு. நான் ஒவ்வொரு முறையும் இதைக் கடக்கும் போதும் பார்த்ததுண்டு.
பதிலளிநீக்குகீதா
சிலைகள் இல்லை சிற்பங்கள்...சிலைகள் வேறு சிற்பங்கள் வேறு!
நீக்குகீதா
சிலைகள் வடிக்கப்படுகின்றன. சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. அழகிய பெண் சிலையோ அவள் எனக் கவிஞர்கள் எழுதுவார்களே தவிர சிற்பமோ என எழுதமாட்டார்கள். ஸ்ரீராம் திரையிசைப் பாடலில் இப்படி வந்திருக்கான்னு சொல்லணும்
நீக்குஆமாம் நிறைய முடிவு பெறாமல் இருப்பதைப் பார்க்கலாம். ஆட்சி மாறியிருக்குமோ என்னவோ!!!!! ஹாஹாஹா...
பதிலளிநீக்குஇப்ப அப்படித்தானே புதுசா ஒரு திட்டத்தைக் கொண்டு வருவாங்க ஆட்சி மாறினா அம்புட்டுத்தான் அப்படியே நிக்கும் அது.
கீதா
சேச்சே அப்படியெல்லாம் இருக்காது கீதா ரங்கன் க்கா. இதுபற்றி இன்னும் எழுதணும். இப்போதான் தேவிபட்டினத்திலிருந்து கிளம்பி இராமேசுவரம் நோக்கிச் செல்கிறோம்
நீக்குசேச்சே அப்படியெல்லாம் இருக்காது கீதா ரங்கன் க்கா. இதுபற்றி இன்னும் எழுதணும். இப்போதான் தேவிபட்டினத்திலிருந்து கிளம்பி இராமேசுவரம் நோக்கிச் செல்கிறோம்
நீக்கு