ஞாயிறு, 15 டிசம்பர், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – மனைவியுடன் யாத்திரை – பகுதி 10 நெல்லைத்தமிழன்

 


ஐந்துரதம் பகுதி மிகப் பெரிய வளாகமாக வேலியுடன் உள்ளது. இதனை பஞ்சபாண்டவர் ரதங்கள் அல்லது ஐந்திணைக் கோயில் என்று அழைக்கின்றனர். (அஞ்சுகோயில் என்று வழங்கப்படுவது திருவிற்றுவக்கோடு. அங்கும் பஞ்சபாண்டவர்கள் அமைத்த ஓரோர் கோயில் ஒரே வளாகத்தில் உள்ளது. அதுபற்றி இன்னொரு தொடரில் எழுதுகிறேன்). இந்த ரதங்களை, அதைச் சுற்றியுள்ள சிற்பங்களை முதலாம் நரசிம்மவர்மன் காலத்த து என்று நினைத்தார்கள். பிறகு அங்கிருந்த கல்வெட்டுச் செய்தியின் மூலம் இது இரண்டாம் நரசிம்மவர்மன் (690-725) காலத்தது என்று அறுதியிட்டனர்.

இங்குள்ள ஐந்து ரதம்/கோயில்களும் ரதத்தை ஒத்திருப்பதால், ரதம் என்றே அழைக்கின்றனர். (பல சோழர் காலக் கோயில்களில் முழுக் கோவிலோ அல்லது கர்பக்ரஹம் சார்ந்த கட்டுமான அமைப்போ ரதம் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.  இதனை தாராசுரம், சார்ங்கபாணீ கோயில் போன்றவற்றில் நீங்கள் கண்டிருக்கலாம்). இவை எப்போதுமே கோயில்களாக இருந்த தில்லை. காரணம் இது முழுமை பெறவில்லை. இந்தக் கட்டுமானத்தில், ஒவ்வொரு கட்டுமானத்தின் அளவைப் பொருத்து, தர்மராஜா ரதம், பீம ரதம், அர்ஜுன ரதம், நகுல சகாதேவ ரதம் மற்றும் திரௌபதி ரதம் என்று அழைக்கின்றனர்.

ஐந்து ரதங்கள் அமைந்துள்ள வளாகம் இங்கிருக்கும் பெரும் கற்களைப் பார்த்தால், முழுமை பெற்றிருந்தால் இன்னும் நிறைய சிற்பங்கள் நமக்குக் கிடைத்திருக்கும் என்று தோன்றும். முதலில் தெரிவது திரௌபதி ரதம், அதையொட்டி அர்ஜுன ரதம், அதற்கு அப்புறம் பீம ரதம், யானைச் சிற்பத்தை அருகில் கொண்டுள்ள சிறிய ரதம் நகுல சகாதேவர்களுக்குரியது.

ஐந்து ரதங்கள் அமைந்துள்ளவிதம் (இணையம்)

நடுவில் தெரிவது நகுல சகாதேவ ரதம்

நகுல சகாதேவ ரதம், பீம ரதம், தர்மராஜா ரதம்


திரௌபதி ரதம், அர்ஜுன ரதம், நகுல சகாதேவ ரதம், பீம ரதம், தர்மராஜா ரதம்

யானைக்குப் பின்னால் சிங்கச் சிற்பம் தெரிகிறதா?

திரௌபதி ரதம் துவாரபாலகர்(பாலகி)களோடு. உள்ளே துர்கையின் சிற்பம். 

அர்ஜுன ரதம். இரண்டு கோணங்களில்

ஐந்து ரதம் – பழைய படம். தற்போது கொஞ்சம் சீரமைக்கப்பட்டிருக்கிறது

அர்ஜுன ரதத்தின் தோற்றம்.

 


அர்ஜுன ரதத்தின் பின்புறமுள்ள நந்தி

 


திரௌபதி ரதத்தின் முன்புள்ள சிங்கச் சிற்பம்

 

 

திரௌபதி ரதத்தின் பின்புறப் பகுதி. அடுத்தது அர்ஜுனன் ரதம்.


அர்ஜுனன் ரதம் (திரௌபதி ரதத்தின் அருகிலேயே)



பீமன் ரதம்

 


பீம ரதத்தின் முன்பகுதி முழுமையாக

 

பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட ரதங்கள்/மண்டபங்கள் இவை. 



பாறையைக் குடைந்து செய்துள்ள மாடங்கள். முழுமை பெறவில்லை

 


தர்மராஜா ரதம் (சிற்பங்களின் அழகுக்குக் குறையொன்றுமில்லை)



இன்னும் கால அவகாசம் கிடைத்திருந்தால் இருக்கும் பல சிறிய குன்றுகளும்/பாறைகளும் சிற்பங்களாக, கோயில்களாக மாறியிருக்கும்.

 

ஒருவேளை இந்தப் பகுதி முழுமை பெற்றிருந்தால் அனைவரும் பிரமிக்கும்படி அழகிய சிற்பங்களுடன் இருந்திருக்கும்.  இன்னும் பார்க்கவேண்டிய இடங்கள் இங்கு இருக்கிறது . அடுத்த வாரம் தொடர்வோமா?

 

(தொடரும்) 

27 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். உடல் நிலை நன்றாகிவிட்டதா?

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    இந்த வார கோவில் தரிசன பகுதியும் பல அழகான புகைப்படங்களை கொண்டதாகவும் விளக்கங்கள் சுவாரஸ்யமாகவும், இருக்கிறது. தங்கள் பகிர்வினை பார்த்த மாத்திரத்தில் இங்கெல்லாம் உடனே சென்று நேரில் பார்த்து ரசிக்க வேண்டுமென்ற அவா மனதினில் எழுகிறது. ஆனால், அது இயலாத விஷயம். அதனால் தங்கள் பதிவையே ஒன்றிரண்டு முறைகளுக்கும் மேலாக படித்து, படங்களை பெரிதாக்கி ரசித்து திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..!

    ஐந்து ரத கோவில்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது.சிற்ப கலைஞர்கள் சிற்பங்களை எவ்வளவு பொறுமையாக செதுக்கியிருக்கிறார்கள். இப்படி செதுக்கும் போது இது உலகளவில் இவ்வளவு புகழ் பெற்று இருந்திருக்கும் என நினைத்திருப்பார்களா? அப்போது அதற்கு தகுந்த மரியாதையை செலுத்திய நம் மாமன்னவர்களுக்குதான் எத்தனை கலாரசனைகள் என்ற வியப்பு தோன்றுகிறது. (எல்லாமே அக்கரைப் பச்சைதான் என்பதும் வேறு விஷயம்..!)

    படங்களை நீங்கள் எடுத்த விதங்கள் பாராட்டுக்குரியது. இதை( தங்களின் கோவில் தரிசன பகுதிகள் அனைத்தையும்.) ஒரு மின்னூலாக்கி விடுங்கள். அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். நான் எழுதியதைவிட இன்னும் நிறைய முக்கியத்துவங்கள், பகுதிகள் இருக்கலாம். ஆனால் இவையே என்னை பிரமிப்புக்குள்ளாக்குகின்றன.

      ஒரு அரசர் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தின் நலத்தைப் பேணுவதுடன், கலைகள் இலக்கியங்கள், புலவர்கள், கலைஞர்கள் என்று எல்லோரையும் ஆதரிப்பவராக இருக்கவேண்டும்.

      இப்போகூடப் பாருங்கள்... கில்லர்ஜியின் வார்த்தைகள்படி, கூத்தாடிகளுக்கும் அரசு பெரும் கௌரவம் கொடுக்கிறதல்லவா? படித்தவர்களைவிட.

      நீக்கு
    2. செதுக்கும்போது இவ்வளவு உலகப் புகழ் பெறும் என நினைத்திருப்பார்களா? நினைத்திருக்க மாட்டார்கள். தற்போது உச்சகட்டப் புகழைப் பெற்று, மிலியன் கணக்கில் விலைமதிப்பில்லாத ஓவியங்களைப் படைத்த பெரும்புகழ் பெற்ற ஓவியர்கள், தங்கள் வாழ்வின்போது சாதாரண நிலையில்தான் வாழ்ந்திருந்திருப்பர். ஏன்... கம்யூனிச சித்தாந்தத்திற்கான அடிப்படை நூலான மூலதனம் நூலின் ஆசிரியரும் வறுமையில் வாடி, மனைவி கரிச்சுக்கொட்டிய நிலையில்தான் இருந்திருப்பார். நம் கண் முன் இருக்கும் உதாரணம் பாரதியார்.

      நீக்கு
  4. படங்களும் குறிப்புகளும் சூப்பர் வழக்கம் போல.

    அர்ஜுனன் ரதம் கோபுரம் கலைவடிவம் செமையா இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்(க்கா). அங்கிருந்த எல்லாக் கலைப் படைப்புகளுமே என்னைக் கவர்ந்தன.

      நீக்கு
  5. இன்னும் கால அவகாசம் கிடைத்திருந்தால் இருக்கும் பல சிறிய குன்றுகளும்/பாறைகளும் சிற்பங்களாக, கோயில்களாக மாறியிருக்கும்.//

    இதை வாசித்ததும் ஆஹா நம்ம நெல்லை எப்ப சிற்பக் கலை செய்யத் தொடங்கினார்னு!!!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பங்கள் செதுக்குவது, ஓவியம் வரைவதைவிடக் கடினம் என்று எண்ணுகிறேன். வேலைச் சூழல், சிறுகற்கள் தெறிக்கும் வாய்ப்பு, கண், கை, உடம்பு எல்லாமே ஒத்துழைக்கவேண்டும், கடினமான சூழலில்.

      நீக்கு
  6. திரௌபதி ரதம் துவாரபாலகர்(பாலகி)களோடு. உள்ளே துர்கையின் சிற்பம். //

    வலப்புறம் செம சுத்தமா இருக்கு. தெளிவாக இருக்கு பராமரிச்சுருக்காங்க. இது எந்த வருடம் நெல்லை?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சில மாதங்களுக்கு முன்னால்தான் இந்த இடங்களுக்குச் சென்றுவந்தோம். பராமரிப்பு தேவலாம்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. மிக அழகாக படம் எடுத்து இருக்கிறீர்கள்.
    மிக தெளிவாக இருக்கிறது.
    பராமரிப்பு தெரிகிறது.

    பராமரிப்பு செய்யும் போது கலை படைப்புகளை சிதைக்காமல் இருந்தால் நல்லது.

    மகாபலிபுரத்தை பார்க்கும் போது எல்லாம், சீர்காழியின் 'கல்லிலே கலைவண்ணம் கண்டான்" பாடல் காதில் ஒலிக்கும், அப்புறம் வாராஜா வா படம் நினைவுக்கு வரும். அதில் சீர்காழி நடித்து இருப்பார், அருமையான பாடல்களையும் பாடி இருப்பார்.

    இப்போது உங்கள் பதிவு மூலம் நன்றாக பார்த்து விட்டேன்.
    அடுத்து கடற்கரை கோயில் , கடற்கரை படங்கள் பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நன்றாகவே பராமரிப்பு செய்கிறார்கள். காவலுக்கு ஆட்கள் இருந்தாலும் நம்மவர்கள் கொஞ்சம் போதாது. கல்லிலே கலைவண்ணம் பாடம் மிகவும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  9. சிற்பங்களின் புகைப்படங்கள் அருமை தமிழரே....
    - கில்லர்ஜி தேவகோட்டையிலிருந்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... தேவகோட்டை திரும்பி விட்டீர்களா ஜி...

      நீக்கு
    2. ஆமாம் ஜி கடந்த மாதம் எனது தம்பி திருப்பூரில் இறந்து விட்டான்.

      அதற்கு வந்து போனேன், அதன் எதிரொலி நான் கேன்சலில் வரவேண்டிய நிலை.

      நீக்கு
    3. விசா கேன்சல் ஆகிவிட்டதா? (மல்டி ரிட்டர்ன் இல்லாததால்) அல்லது இடையில் வந்துபோனதால் கேன்சல் செய்துவிட்டார்களா?

      நீக்கு
    4. மிகவும் வருந்துகின்றேன் கில்லர் ஜி..

      காலம் தான் தங்களுக்கு ஆறுதலைத் தர் வேண்டும்..

      ஓம் சாந்தி..

      நீக்கு
    5. கில்லர்ஜி அவர்கட்கு சகோதர துக்கத்துடன் மேலும் இக்கட்டான நிலை நல்லதே நடக்க வேண்டுகிறோம்.

      நீக்கு
  10. இனிமேல் மாமல்லைக்குச் செல்கின்ற வாய்ப்பு கிட்டுமா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சோழ சாம்ராஜ்யத்தில் இருக்கீங்க. பல்லவ சாம்ராஜ்யம் வருவது கஷ்டம்தான்.

      நீக்கு
  11. நீங்கள் கூறியதுபோல இவை முழுமைபெற்றிருந்தால் அழகிய சிற்பங்கள் பலவற்றை காணக்கூடியதாக இருந்திருக்கும்.

    இந்த ரதங்களையே நாங்கள் ஒருவித மலைப்புடன் தான் பார்த்தோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!