எங்கு விட்டேன்? காஸ் ஏஜென்ஸியில் ஃபோன் எடுக்கவில்லை என்று சொன்னேன் அல்லவா.... சட்டென்று வேறு ஒரு காரியம் செய்தேன்.
வீட்டுக்கு சிலிண்டர் போடும் முருகனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஃபோனில் அழைத்தேன். அவர் செல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. நான்கைந்து மாதங்களாகத்தான் முருகன் எங்களுக்கு சிலிண்டர் போடுகிறார். அதற்குமுன் போட்டவர் ராஜேந்திரன் (ஆம். பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரை அழைத்தேன்.
'நான் இப்போ உங்கள் ஏரியா இல்லையே என்று தொடங்கியவரை இடைமறித்து விஷயத்தை விளக்கி, 'இப்படி ஒன்று நடைபெறுகிறதா?' என்று கேட்டதும், அவர் 'ஆம். இந்த மாதத்துக்குள் முடிக்கச் சொல்லி இருக்கிறார்கள். KYC.. இது முடித்தால்தான் உங்களுக்கு அடுத்த சிலிண்டர்' என்று பீதியூட்டினார். 'ஏஜென்சி நம்பர் போட்டால் எடுக்கவில்லை' என்றதும் 'சிலிண்டர் சப்ளை செய்த 'பில்'லில் மூன்று எண்கள் இருக்கும் பாருங்கள்... அதை அழையுங்கள் என்று கூறி ஃபோனைத் துண்டித்தார்.
அட, ஆமாம்...
அந்த எண்ணில் அழைத்ததும் ஃபோன் எடுக்கப்பட்டது.
"வணக்கம்... Gகனி (ஹிஹிஹி... பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏஜென்ஸி.. காஸ் புக் பண்ணனுமா... கன்ஸ்யூமர் நம்பர் சொல்லுங்க" என்று இயந்திர கதியில் ஆரம்பித்த பெண்ணை இடைமறித்து விவரம் கேட்டேன்.
சிரிப்பு வந்து விட்டது அந்தப் பெண்ணுக்கு.. கொஞ்சம் முன்ஜாக்கிரதையாய் இருந்து விடக்கூடாதே...
"ஆமாம்.. வருவார்கள்... உங்கள் ரேகை, கண் எல்லாம் பதிவெடுப்பார்கள்... உங்கள் ஸ்டவ், டியூப் எல்லாம் செக் செய்வார்கள்" என்றார்.
"முன்னரே கஸ்டமர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் அறிவிப்பு தரமாட்டீர்களா? எத்தனை பேரை நியமித்திருக்கிறீர்கள்?"
"மூன்று பேர் ஸார்"
"மூன்று பேர்களின் பெயர்களையும் சொல்ல முடியுமா?"
அவர் சொன்ன மூன்று பேர்களின் பெயர்களில் எங்களை அழைத்தவர் பெயரும் இருந்தது.
"ஐடி கார்ட் கொடுத்திருக்கோம்... செக் செய்து உள்ளே விடுங்கள் சார்" என்று சின்னச் சிரிப்புடன் கூறி ஃபோனை கட் செய்தார் அந்தப் பெண்.
என்ன சிரிப்போ...
எரிச்சலுடன் என்னை முதலில் அழைத்த தனசேகருக்கு கால் செய்தேன். யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார், பின்னர் அவரே என்னை அழைத்தார்.
விவரம் சொல்லி அட்ரஸும், லொகேஷனும் கொடுத்தேன். மாலை வந்தார்.
வந்தது ஒரு சின்ன பையன். இருபது வயதிருக்கும். B Sc Maths படித்திருக்கிறா(னா)ராம். இருபதாயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்களாம். பெர்மனெண்ட் செய்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்களாம். இந்த மாதத்தோடு இந்த டாஸ்க் முடிக்க வேண்டும். எப்படி நிரந்தரம் ஆக்குவார்களோ... பாவம் பையன். திருப்பத்தூரிலிருந்து சென்னை வந்து ரூம் எடுத்து தங்கியிருக்கிறானாம்.
அவரையும், அவர் ஐடி கார்டையும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அசௌகரியமாக சிரித்தான் பையன். "என்னப்பா செய்யறது... மக்களை இப்படி ஏமாற்றி பயமுறுத்தி வச்சிருக்காங்களே" என்றேன்.
கண்ணை படம் எடுத்தான். இமைக்காகச்சொல்லி ஒருதரம் எடுத்தான். ஒரு படிவத்தில் நிரப்பி கையெழுத்து வாங்கி கொண்டு "நூறு ரூபாய் கொடுங்க" என்றான். "என்னப்பா... இருபது ரூபாய்க்கு வேலை பார்த்துட்டு நூறு ரூபாய் கேட்கறியே" என்று சொன்னாலும் எடுத்துக் கொடுத்தேன். எதற்கு அந்த நூறு ரூபாயோ... பையனுக்காகவே என்றிருந்தாலும் கொடுக்கவே தோன்றியது.
இப்படியாக ஒரு அனுபவப் படலம் முடிந்... இல்லை, இன்னும் முடியவில்லை. இரண்டு நாள் கழித்து மறுபடி இன்னொரு அறியா எண்ணிலிருந்து அலைபேசி வந்தது. வீட்டில் ACT ஃபைபர்நெட் டுடன் போராட்டம் நடந்து கொண்டிருப்பதால் எந்த எண்ணிலிருந்து வந்தாலும் உடனே எடுத்து விடுகிறேன். ஏனென்றால் அவர்களுக்கு தப்பிப்பதற்கு பல வழிகள் வைத்திருக்கிறார்கள். எவர்கள்? ACT காரர்கள். வராத காலை செய்ததாய் சொல்லி புகாரை மூடி விட்டார்கள்!
என்னுடைய ஹெல்த் பாலிஸி, ACT Internet ஆகியவை இந்த மாதம் சப்ஸ்க்ரைப் செய்ய வேண்டும். பேங்க்கிலிருந்து KYC க்கு கூப்பிடுகிறார்கள். இவை யாவற்றையும் என்னுடைய சாம்ஸங் ஃபோன் சகட்டுமேனிக்கு ஸ்பாம், பொட்டன்ஷியல் பிராட், பிராட் என்றெல்லாம் வகைப்படுத்துகிறது. அவை எல்லாவற்றையும் எடுத்துப் பேசி விடுகிறேன். அதனாலும் பயம் வருகிறது.
இந்த எண்ணுக்கு அப்படி எச்சரிக்கை எதுவும் வரவில்லை. பேசினால் நான் Gகனிகாஸ் ஏஜென்சியிலிருந்து பேசுகிறேன் என்று ஒரு பெண் தொடங்கி, ஆள் வந்தாரா என்று கேட்டார். ஆம் என்றேன். காஸ் லீக், டியூப் எல்லாம் செக் செய்தாரா என்று கேட்டார். தனா செய்யவில்லை என்றாலும் ஆம் என்று சொல்லி விட்டேன். இல்லை என்றால் திருப்பி வேறு ஆளை அனுப்பினால் விளையாட்டை முதலிலிருந்து ஆடவேண்டும்! "அப்டேட் செய்துக்கவா?" என்றார். ஓ எஸ் என்றேன். இங்குதான் மறுபடி என் எச்சரிக்கை உணர்வுக்கு சோதனை வந்தது.
"OTP நம்பர் வரும்.. சொல்லுங்க" என்றார். 'ஆ... மறுபடியுமா?' அழைப்போ பெயர் இல்லாத ஒரு எண்ணிலிருந்து வந்திருக்கிறது.
அவர் லைனிலேயே காத்திருந்தும், 'வரவில்லையே... வரவில்லையே... இன்னும் வரவில்லையே.....' (உண்மையில் வந்திருந்தது_) என்று டபாய்த்தேன். 'சரி சார் போனை வைக்கிறேன். வந்ததும் கால் பண்ணுங்க' என்று அவர் போனை கட் செய்தார். தெரியாத நம்பரிலிருந்து அழைத்து OTP கேட்டால் பின்னே....
ஓடு... மறுபடி இளையவனிடம்.....
ட்ரூ காலரில் பார்த்து எங்கள் ஏஜென்சி பேயரைச் சொன்னான். கொஞ்சம் நிம்மதி வந்து அவரை அழைத்து OTP நம்பர் சொன்னேன். லைனிலேயே ஏதோ 'டக்டக்' கென்று சத்தம் கேட்க வேலை செய்தவர் (என் இதயமும் அப்படிதான் துடித்தது) "இப்போ இன்னொரு OTP வரும் அதைச் சொல்லுங்க" என்றார்.
அதற்குள் அருகில் வந்த இளையவன் "சமயங்களில் அவர்கள் ஃபோனில் அவர்கள் இந்த ஏஜென்சி பெயரைப் போட்டு Save செய்து கொண்டால் நமக்கு இந்தப் பெயர்தான் காட்டும்" என்று பீதியூட்டிவிட்டுச் செல்லவும், நான் இரண்டாவது OTP நம்பரையும் சொல்லி முடிக்கவும் சரியாய் இருந்தது.
'அப்படியும் இருக்குமோ.....' ஐயோ....
அடுத்த 72 மணி நேரம் பயத்திலேயே கழிய, கடைசியில் அந்த மெசேஜ் வந்து என் பயத்தை நீக்கியது!
======================================================================================================
KB.....
நாகேஷை வைத்து 36 படங்களுக்கும் மேல் இயக்கினார். கமலை வைத்து 27 படங்கள் பண்ணினார். ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, ஜெயசுதா, ஸ்ரீவித்யா, சுஜாதா, ஜெயந்தி, சரிதா, கீதா, ஜெயப்ரதா, சுமித்ரா, ஷோபா என நடிகைகளை நடிக்கப் பயன்படுத்துகிற அளவுக்கு கேரக்டர்கள்.
தமிழ் சினிமாவில் அதிக அளவில் நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்தது பாலசந்தராகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட 65க்கும் மேற்பட்டவர்களை அறிமுகப்படுத்தி, இதில் முக்கால்வாசிபேரை நம் மனதில் நிற்கவைத்தும் சாதித்தவர் பாலசந்தர். எம்ஜிஆர் - சிவாஜிக்குப் பிறகான அந்த இடத்தை, கமல் - ரஜினியை உருவாக்கி நிரப்பினார். தன்னைச் சுற்றியுள்ள கலைஞர்களை அற்புதமாகப் பயன்படுத்துவார். எம்.எஸ்.வி.யின் மிகச்சிறந்த இசையை தன் படங்களுக்குள் இணைத்திருக்கிறார். ‘எத்தனையோ இயக்குநர்களின் படங்களுக்கு பாட்டு எழுதியிருக்கிறேன். பாலசந்தருக்கு பாட்டு எழுதுவதுதான் சிரமமாக இருக்கும். ஒரு பாட்டுக்குள் படத்தின் ஜீவன் மொத்தத்தையும் சொல்லச் சொல்லுவார்’ என்று தெரிவித்துள்ளார் கவியரசு கண்ணதாசன். இசையைப் போலவே பாடல்களும் தனியிடம் பிடித்தன.
‘தெய்வம் தந்த வீடு’ ஒரு மாதிரி. ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ இன்னொரு மாதிரி. ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலும் ‘கேள்வியின் நாயகனே’வும் புதுவிதம். ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’, ‘இலக்கணம் மாறுமோ’, ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’, ‘ஓடுகிற தண்ணியில’, ‘கனாக்காணும் கண்கள் மெல்ல’, ‘ஆண்டவனின் தோட்டத்திலே’, ’சொல்லத்தான் நினைக்கிறேன்’ , ‘பூமாலை வாங்கி வந்தால்’, ‘என்ன சத்தம் இந்த நேரம்’, ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’, ‘காதோடுதான்’... என்று இன்னும் இன்னுமாகச் சொல்லிக் கொண்டே போக பாடல்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
‘அரங்கேற்றம்’ டால்டா டப்பாவுடன் திரியும் மனப்பிறழ்வுப் பெண், ‘மூன்று முடிச்சு’ மனசாட்சி, ‘எதிர்நீச்சல்’ இருமல் தாத்தா என்று இவர் கேரக்டர்கள் நம்மை ஏதோ செய்யும். எனக்குத் தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களை கலர் பட காலகட்டத்திலும் அதிகமாய் எடுத்தது பாலசந்தராகத்தான் இருக்கும்.அவள் ஒரு தொடர்கதை விகடகவி கோபால், அவர்கள் ராமனாதன், அபூர்வ ராகங்கள் பிரசன்னா, சிந்துபைரவி ஜே.கே.பி. மனதில் உறுதி வேண்டும் நந்தினி, எதிர்நீச்சல் மாது, வறுமையின் நிறம் சிகப்பு திலீப், நினைத்தாலே இனிக்கும் சந்துரு, அவர்கள் அனு, அபூர்வ ராகங்கள் பைரவி... என ஒவ்வொரு கேரக்டர்களிலும் உயிர்ப்பு... ஜீவன்! அதுதான் கே.பி. டச்!
இன்றைக்கு ரெண்டு மணி நேர சினிமாவில், காமெடி டிராக், புரியாத அஞ்சு பாட்டு, தூக்கிப் பிடிக்கும் ஹீரோயிஸம். ஆனால் ஹீரோ பேர் மறந்து கேரக்டர் பெயர், கதை, உணர்வு, வலிகளைச் சொல்லும் பாடல், படம் முழுவதும் விரவியிருக்கும் காமெடி... என நிரம்பி வழியும் கே.பி.யின் படங்களில்!
ஊருக்குப் போய்விட்டதைக் காட்ட ரயிலைக் காட்டுவார்கள் சினிமாவில். ஆனால் பத்துப்பையன்கள், ஒருவர்பின் ஒருவராகச் சட்டையைப் பிடித்துக் கொண்டு, ரயில் மாதிரி செல்வதைக் காட்டுவார். ஒரு வாரத்தைக் காட்ட, படபடவெனப் பறக்கும் தினசரிக் காலண்டரைக் காட்டுவார்கள். கல்கி, விகடன் என ஒவ்வொரு நாளும் வருகிற புத்தகங்களைக் கொண்டே ஒருவாரத்தைக் காட்டியிருப்பார்.
பூவா தலையா படம். அத்தைக்கு கட்டுப்படும் மருமகப்பிள்ளை. தலையாட்டி பொம்மை ஆடுவதையும் பீரோவில் தொங்கும் சாவிக்கொத்தையும் காட்டியிருப்பார். ’எதிர்நீச்சல்’ படத்தில் இருமல் தாத்தா, ’அவர்கள்’ பொம்மை, டெலிபோன், அருவி, ஃபடாபட் எனும் சொல், விளக்கை அணைத்து எரிய வைத்து அணைக்கும் லவ் சிக்னல்... அவள் ஒரு தொடர்கதை வில்லனின் கை மடக்கி விரிக்கும் ஸ்டைல் என கே.பி. விடும் ரகளைக்கும் அவரின் ரசனைக்கும் பஞ்சமே இல்லை.
அழுகாச்சி கேரக்டராகவே செளகார் ஜானகிக்குக் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா என்று எதிர்நீச்சலிலும் தில்லுமுல்லுவிலும் வாய்ப்பை வழங்க, அதைக் கொண்டு அதகளம் பண்ணியிருப்பார் செளகார் ஜானகி.
எதிர்நீச்சல் படத்தில், திருடி விட்டு மாட்டிக் கொள்வார் தேங்காய் சீனிவாசன். அடித்ததில் விழுந்திருப்பார். போலீஸில் சொல்லிவிடலாம் என்று ஒருவர் சொல்ல, ‘வேணாம் சார். விழுந்துட்டாரு. எழுந்திருக்கும் போது, நல்லவனாத்தான் சார் எழுந்திருப்பாரு’ என்று வசனம்.
அவள் ஒரு தொடர்கதையில், ‘பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்ளோ கர்வமா இருக்கா’ என்று விஜயகுமாரின் அம்மா கேரக்டர் சொல்ல, ‘கல்யாணத்துக்கு முன்னாடி கர்வமா இருக்கலாம். கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது’ என்று சட்டெனச் சொல்லுவார் சுஜாதா.
நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா, தலையை ஆட்டி ஆமாம் சொல்லிவிட்டு, பிறகு மெல்ல மெல்ல தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிவிட்டு, இல்லை என்று சைகையில் சொல்வதை, செய்யாத, செய்து பார்க்காத ரசிகர்களே அப்போது இல்லை.
காட்சி கவிதையாய் இருக்கும். பாடலில் கதையே சொல்லப்படும். வசனத்தில் அவ்வளவு ஷார்ப் வைத்திருப்பார். நடிப்பில் அவ்வளவு யதார்த்தம் குடிகொண்டிருக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை, கந்தசாமி R, Face Book
====================================================================================================================================================
என் சி வசந்த கோகிலத்தின் சோக வாழ்க்கை கைவிட்ட கணவன் காசநோய் 32 வயதில் மரணம்
1930களில் அன்றைக்கிருந்த பெண் இசை கலைஞர்களோடு நட்சத்திரமாக மின்னியவர் என்.சி. வசந்த கோகிலம் நாகப்பட்டினம் சந்திரசேகர வசந்த கோகிலம் என்பது இவரது முழுப்பெயர் கேரள மாநிலத்தில் கொச்சி சமஸ்தானத்துக்குட்பட்ட இரிஞ்சாலக்குடா எனும் ஊர்தான் பூர்வீகம்.
1936ல், இவரது 17வது வயதில் இவர் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. அதற்குள் இவர் கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததால், சென்னை வந்தவுடன் பல இடங்களில் கச்சேரி செய்ய அழைக்கப்பட்டார். இவருடைய இனிய குரலும்,அழகிய தோற்றமும், இவர் பாடும் கச்சேரிகளுக்கு மக்கள் வெள்ளம்போல் வரத் தொடங்கினர்.
திரைப்படங்களிலும் பின்னணி பாடல்கள் பாடி புகழ் பெற்றார். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய சுத்தானந்த பாரதியாரின் பாடல்களையும் இவர் பாடி பிரபலப் படுத்தியிருக்கிறார். பொதுவாக தெலுங்கு மொழியிலும், சம்ஸ்கிருத மொழியிலும் அமைந்த பாடல்களையே பிரபலமான வித்வான்கள் பாடிவந்த நிலையில் வசந்தகோகிலம் தமிழில் பாடல்களை பாடினார்.
1940ல் "சந்திரகுப்த சாணக்கியா" எனும் படத்தில் இவர் இளவரசி சாயா தேவியாக நடித்தார் தொடர்ந்து அதே ஆண்டில் "வேணுகானம்" 1942ல் "கங்காவதார்", 1944ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "ஹரிதாஸ்", 1946ல் ஹொன்னப்ப பாகவதர் நடித்த "வால்மீகி" "குண்டலகேசி" ஆகிய படங்களில் நடித்தார். 1950ல் இவருடைய கடைசி படமான "கிருஷ்ண விஜயம்" வெளியானது. இவர் நடித்த அத்தனை படங்களும் ஹிட்டானது.
முதல் திருமணம் 15வயதில் நடந்தது. ஆனால் அந்த கணவருக்கு இசை 'பிடிக்காமல் போகவே அவரை விட்டு பிரிந்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சி.ரி. சதாசிவம் என்பவரை மணந்து கொண்டு வாழ்ந்தார். இளம் வயதிலேயே காசநோயால் பாதிக்கப்பட்டார். அப்போது அந்த நோய்க்கு உயர் சிகிச்சை இல்லாததால் 1951ல் தனது 32வது வயதில் சென்னை கோபாலபுரத்தில் இருந்த இவரது இல்லத்தில் இவர் காலமானார்
தினமலர் ஃப்ளாஷ்பேக் 11 12 2024
==============================================================================================
"பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான்.
தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ - இன்னும் பெரிய ஒருவராக - ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான்."
தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ - இன்னும் பெரிய ஒருவராக - ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான்."
அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி....
....... நல்ல மனதை நம்பி எவ்வளவு நாள் வாழ்வது? அங்கே மஜீது மட்டும்தான். இருக்கிறான் என்றால் அவளுக்கு எந்த மனவருத்தமும் ஏற்பட்டிருக்காது.
மஜீதின் வாப்பாவிடமோ உம்மாவிடமோ சகோதரிகளிடமோ அவளுக்கு எந்தப் பிணக்கமும் கிடையாது. இருந்தாலும் மஜீதிடமுள்ள எதுவோ ஒன்று மற்றவர்களிடமில்லை. மஜீது அவளது எதிரில் இருக்கும்போது எதுவும் தோன்றுவதில்லை. அவன் இல்லாதபோது மனதில் ஏதோ குறைபாடு. மஜீது காலையில் பாடசாலைக்குப்போனால் சாயுங்காலம் திரும்பி வருவதுவரை அவளுக்குள் ஒரு சஞ்சலமிருக்கும். மஜீதுக்கு உடம்புக்கு ஏதாவது வந்தால் அவளுக்குத் தூக்கம் வராது. எப்போதும் மஜீதின் பக்கத்திலேயே இருக்க வேண்டும். இரவு பகல் பாராமல் அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்.
அவளது ஆசையைப் பூர்த்திசெய்வதுபோல் அப்போது ஒரு சம்பவம் நடந்தது. மஜீதின் வலதுகாலில் ஒரு விஷக் கல் குத்திவிட்டது. அது, பட்டணத்தில் உயர்நிலைப் பாடசாலைக்குப் படிக்கச் சென்ற நான்காம் ஆண்டு.பாடசாலையிலிருந்துத் திரும்பி வரும்போது காலில் வேதனை தொடங்கியது. நொண்டியபடியே அவன் வீட்டில் வந்து ஏறினான். மறுநாள் காலின் அடிப்பாகத்தில் கட்டி பழுத்துத் தெரிந்தது. உடல் முழுவதும் வலியும் வேதனையும். மஜீது கட்டிலில் கிடந்து நெளிந்துகொண்டிருந்தான். கட்டி உடைந்தால் வலிகுறைந்து விடுமென்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால், யாராவது பக்கத்தில் சென்றால்கூடபோதும், மஜீது அழுதுவிடுவான்.
அங்கே, எப்போதுமே ஆட்களின்கூட்டம்தான். அவனைப் பார்க்க வருபவர்கள் இல்லாத நேரமாகப் பார்த்து சுகறா அறைக்குள் சென்று மஜீதின் கால்பக்கத்தில் நின்று வீங்கியிருந்த காலில் ஊதிவிட்டுக் கொண்டிருப்பாள். பெரிய, மஞ்சள் நிறக் கொய்யாப்பழம் போல் அது காலிருந்து புடைத்து பழுத்து, வீங்கியிருந்தது. மஜீதால் வலியைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
சொகறா, நான் மரிச்சுப் போவேன்."மஜீது வருத்தத்துடன் சொன்னான்.
என்ன செய்யமுடியும்? அவளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. அழுகைதான் வந்தது. அவள் மஜீதின் பாதத்தைத் தனது கன்னத்துடன் சேர்த்துப் பிடித்தாள்.
உள்ளங்காலில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தாள்.
முதல் முத்தம்!
அவள் எழுந்து அவனது கொதிக்கும் நெற்றியைத் தடவியபடியே அந்த முகத்தின் மீது குனிந்தாள்.
சுகறாவின் கூந்தல் அவிழ்ந்து மஜீதின் நெஞ்சில் விழுந்து பரந்தது அவளுடைய மூச்சுக்காற்று அவனது முகத்தில் பதிந்தது. சுகறாவின் முழுமையான வாசம். மின்னோட்டம், அவனது நாடி நரம்புகளை அதிரச்செய்துகொண்டிந்தது காந்தத்தால் ஈர்க்கப்பட்டதுபோல மஜீதின் முகம் மேலெழுந்தது. கைகளிரண்டும் அவளது கழுத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டன. அவளை, அவன் நெஞ்சோடு சேர்த்தணைத்து தன்னில் சுவீகரித்துக்கொண்டான்.
"சொகறா!"
"ம்...?"
சுகறாவின் சிவந்த உதடுகள் மஜீதின் உதடுகளில் பதிந்தன.
வாழ்க்கையின் தொடக்கக்காலம் முதலாக இருந்த நட்புதானென்றாலும் அன்று, முதன்முதலாகக் கிளர்ந்தெழுந்த உணர்வுகளுடன் அவர்கள் பரஸ்பரம் ஒட்டிக்கொண்டார்கள் ஆயிரமாயிரம் முத்தங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டார்கள். கண்கள், நெற்றி, கன்னங்கள், கழுத்து மார்பு உடல்கள் நடுங்க சுகமான ஒரு பதற்றம். புதிதாக ஒரு ஆசுவாசமும். எதுவோ நிகழ்ந்திருக்கிறது. என்ன அது?
"கட்டி உடைஞ்சி போச்சு." சிறு புன்சிரிப்புடன் இனிமையான சங்கீதம்போல் சுகறா கிசுகிசுத்தாள்.
மஜீது எழுந்து அமர்ந்தான். ஆச்சரியம் ..! கட்டி உடைந்து போயிருந்தது. வெட்கத்தால் தாழ்ந்த சுகறாவின் மோகம் படிந்த முகத்தை மஜீது பார்த்தான். அந்தப் பவள உதடுகளின் இனிமையும் அந்த முதல் முத்தங்களின் மயக்கும் மென்மையும்!
சுகறா முத்தம் பதித்த வலது உள்ளங்காலில் இனம் புரியாத குளிர்ச்சி..!
சுகறாவால் அன்றிரவு தூங்க முடியவில்லை. உடல் முழுக்க சூடாக அவள் கரைந்துகொண்டிருந்தாள்.
சுகறாவின் வாழ்க்கையில் ஒரு நோக்கமிருந்தது. ஆனால், அதன் சாத்தியங்களைக் குறித்து சிந்திப்பதற்கு அவளுக்குப் பயமாக இருந்தது.
பெரும் நிச்சயமற்ற தன்மைகளுடன் அவளது தினப்படி வாழ்க்கை அப்படியே கழிந்துகொண்டிருந்தது......
=========================================================================================================
திருச்சி அருகே திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிகோவிலில் உள்ள யானை நடிகர் திலகம் சிவாஜியால் வழங்கப்பட்டது.
அந்த யானையை பராமரிக்க முடியாத நிலையில் கோவில் நிர்வாகம் சிவாஜியிடம் எங்கள் கோவில் வருமானத்தில் யானைக்கு தீனி போட
முடியவில்லை வேறு கோவிலுக்கு யானையை கொடுத்து விடுங்கள்
என்று கூறினார்களாம்.
அதற்கு நடிகர் திலகம் நாளை வாருங்கள் பதில் சொல்கிறேன் என்று கூறினாராம் ஒரு வாரம் வரை பதில் வராத காரணத்தால் கோவில் நிர்வாகம் மீண்டும் நடிகர் திலகத்தை காண சென்ற போது அவர் சொன்ன வார்த்தை நிர்வாகத்திற்கு அதிர்ச்சி அளித்தது என்னவென்றால் கோவிலுக்கு அருகே இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும் அந்த விளை நிலத்தில் பயிர் செய்து வரும் வருமானத்தில் கோவிலுக்கும் யானைக்கும் யானைப் பாகனுக்கும் விவசாயிக்கும் கொடுக்க ஏற்பாடு செய்து உள்ளதாகவும் யானைப் பாகனுக்கும் விவசாயிக்கும் வீடு ஒன்று அமைத்துத் தருவதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார் நடிகர் திலகம் ...
இன்று வரை நடந்துக் கொண்டு இருக்கிறது அந்த யானை இறந்த பிறகு மீண்டும் ஒரு யானையை வாங்கி கொடுத்துள்ளார் ..
இளைய திலகம் பிரபு அவர்கள் கோவிலுக்கு சமீபத்தில் சென்ற போது யானைப் பாகன் சொன்னார் .. கஜ தானம் (யானை தானம்) செய்வது
நாடு செழிப்புடன் எந்தவித பஞ்சம் இல்லாமல் மக்கள் வாழ செய்யும்
தானம் ஆகும் ...
இது போல் கோவில்களுக்கு ஆறு யானை வாங்கிக் கொடுத்து உள்ளார் நடிகர் திலகம் என்பது குறிப்பிடத்தக்கது .
.
சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ணன் போல் வாழ்ந்துள்ளார்
பேஸ்புக்கிலிருந்து......
========================================================================================
இதை இலக்கிய பக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம், கவிதைப் பக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்! - படித்ததன் பகிர்வு.
\\\\வி ரா ராஜகோபாலன் நல்ல கவிஞர். கதைகளும் நாடகமும் எழுதும் ஆற்றல் உடையவர். பழம் தமிழ் இலக்கிய ஞானம் பெற்றிருந்தவர். மணிமேகலையின் கதையை சுயசரிதையாக மணிமேகலையே கூறுவது போல உரைநடையில் தொடர்ந்து எழுதி வந்த அவர், ஒவ்வொரு இதழிலும் 'சங்க இலக்கியத்திலிருந்து' என்று, பாடல்களின் பொருளை வசனப்படுத்தியும் கொடுத்து வந்தார். லட்சிய வேகம் பெற்றிருந்த நண்பர் தமக்கு குற்றம் என்று தோன்றியதை, அது எவர் செய்ததாக இருந்தாலும், அஞ்சாது கண்டிக்கும் மெய்த் துணிவும் பெற்றிருந்தார். அவரது இந்தப் பண்பை கலாமோகினி அடிக்கடி எடுத்துக்காட்டியது.
அந்நாட்களில் ரசிகமணி டி கே சி அவர்கள் கம்பன் பாடல்களை திருத்தி பத்திரிகைகளில் வெளியிட்டு வந்த போதும், திருத்தம் பெற்ற பாடல்களை 'கம்பர் தரும் ராமாயணம்' என்று புத்தகமாக பிரசுரித்த போதும் ஆதரவும் வரவேற்பும் இருந்தது போலவே எதிர்ப்பும் கண்டனங்களும் கிளம்பி கொண்டிருந்தன. டி கே சி அவர்களின் செயலை 'சாலிவாஹனனு'ம் எதிர்த்து கண்டித்தார்.
'சாலிவாஹனன்' எழுத்தில் உண்மையின் வேகத்தோடு பரிகாசமும், நளினமான நகைச்சுவையும் கலந்து மிளிரும். அத் தன்மையிலே 'ஐந்தாம் படை ரசிகர்கள்' என்று ஒரு கட்டுரை எழுதினார் அவர்.
'ஐந்தாம் படை வேலை' என்பது யுத்த காலத்தில் வழக்கில் அடிபட்ட ஒரு சொல்.
ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு உதவி செய்பவர்களை போல் நடித்துக் கொண்டு, அதே காரியத்திற்கு பாதகமான செயல்களை செய்வதைத்தான் ஐந்தாம் படை வேலை என்கிறோம். 'இப்போது" என்று கட்டுரையை ஆரம்பித்து டி கே சி அவர்களும் அவர்களது ரசிகர்களும் செய்து வருவது இலக்கிய நாச வேலையே தான் என்று கண்டித்து இருந்ததோடு, முத்தாய்ப்பாக கவிதையும் எழுதி தீர்த்தார் சாலிவாஹனன். -
கொங்குகரை யற்ற சுவைக் கம்பன் பாட்டை
கழித்தொழித்துக் கூட்டித் தம் கசப்பைச் சேர்த்து
தங்களிடம் உள்ள பெரும் புன்மை புத்தி
தான்தோன்றித்தனம் செருக்கு எல்லாம் தோன்ற
"இங்கை தான் கம்பனுடைய கனிந்த பாடல்
இவற்றையவன் இவ்வாறே பாடக் கேட்டோம்
எங்களுக்கே தெரியுமவன் கவிதைப் பண்பு!"
என உரைத்துத் திரிகிறதோர் விஷமக் கூட்டம்
பொங்கு புகழ்க் கோசலையின் செல்வன் கானம்
போவதற்குக் கைகேசி புரிந்த தீமை
இங்கிந்தக் கைகேசி முதலோர் கும்பல்
இனிய சுவைக் கம்பனுக்கே சூழ்கின்றார்கள்;
மயங்கிவிட்ட கொஞ்சநஞ்சம் மறம்கொண்டேனும்
மாபாவச் செயலிதனை மடக்காவிட்டால்
சிங்கமென சிவன் தனையே எதிர்த்த கீரன்
சீர் மிகுந்த தமிழ்ப் பெருமை அழிந்தே போகும்
பாவமிது கலைப்பண்பு ரஜனை யென்று
பாவனைகள் நிதம் செய்து நடிக்கும் இந்த
காவியத்தின் கடும் பகைவர் கூட்டந்தன்னை
கடிதினிலே களையவே களையாவிட்டால்
பாவினிலே கொஞ்ச நஞ்சம் இரக்கம் உள்ள
பரமார்த்தத் திருக்கூட்டம் ஒன்றைத் தங்கள்
காவலெனக் கொண்டு நிதம் கடையர் செய்யும்
காவியத்தின் கடுங் கொலைகள் சகிக்கொணாது.
இதற்கு எதிர்ப்புகள் வந்தபோது கலாமோகினியில், 'அம்பலம்' என்றொரு பகுதி துவக்கப்பட்டது. அதில் பதில் கூறும் போது, இந்த வியவகாரம் எந்த விதத்திலும் தனிமனிதர் சம்மந்தப்பட்டதே இல்லை. அதற்கு மாறாக நிரந்தர இலக்கியங்களைப் பாதுகாப்பதில் கையாளப்பட்டு வரும் முறைகளில் நமக்குள்ள அபிப்பிராய பேதங்களே காரணமாகும்' என்று எழுதி விளக்கம் அறிவித்த சாலிவாஹனன், 'நக்கீரருக்கு' என்ற ஒரு அருமையான கவிதையும் தீட்டினார்.
பொங்கு கனல்சின விழியைச் சினந்த கீர !
பொழுதினிலே நீ உயிரோடு இருத்தல் வேண்டும்.
இங்கு பலகீரர்கட்க்கு இந்த நாட்டில்
ஈடெடுப்பே யற்றதொரு தேவையின்று.
சிங்கமென துணியுமுங்கள் தீர்த்த கேள்வி
சீர் மிகுந்த கலையுணர்வும் தீர்ந்து எங்கும்
பொங்கு மிருள் மலிந்து தமிழ் கவியை மூடப்
பொய் கலைகள் பொதி பொதியாய் மலிந்ததின்று
எங்களையின் நிலையினின்றும் ஏற்றற காக
ஏதமற்ற மெய்த் துணிவை தருவதற்காக
மங்குகின்ற மாகவிதை காத்தற்காக
மாசறுநல் லிலக்கியங்கள் நிலைத்ததற்காக
சங்கமற்ற இழிந்த நிலை மறைதற்காக
சார்ந்த பல திரிசமங்கள் போக்கற்காக
பங்கமற்ற பவித்திரராம் உன்னைப் போன்றோர்
பாழடைந்த தமிழகத்தில் உதித்தல் வேண்டும்
டி கே சி அவர்களின் ராமாயணத்தை 'இமிடேஷன் இலக்கியம்' என்று குறிப்பிட்டு சாலிவாஹன்ன் தொடர்ந்து இரண்டு கட்டுரைகள் எழுதினார்.
'யாப்பில்லாக் கவிதை'யை எதிர்த்தவர்களுக்கு மறுப்புரையாக ஒரு சமயம் 'க்ஷேமலாபங்கள்' பகுதிகள் வேகமாக கவிதை ஒன்றை அவர் வெளியிட்டதும், கவிஞர் பாரதிதாசன் கலாமோகினிக்கு கவிதை தர மறுத்ததனால் சீற்றம் கொண்டு, அவரை 'நமது அதிதி' யாக்கி காரசாரமான கவிதை ஒன்று படைத்தளித்ததும் இப்ப பத்திரிகையின் வரலாற்றில் முக்கியமானவை தான்.
- கலாமோகினி.... -
==================================================================================================
நியூஸ் ரூம்
- ‛சிலை கடத்தல் கோப்புகள் மாயமானது எப்படி? தமிழக அரசின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது!': உச்ச நீதிமன்றம். புதுடில்லி: தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரத்தில், தமிழக உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஜப்பானின் கெய்ரோஸ் ராக்கெட் திட்டம் தோல்வி; ஏவிய சில நிமிடங்களில் வெடித்து சிதறியது!
- வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது.
- லக்னோ: உத்தரபிரதேசத்தில் 150 ஆண்டுகள் பழமையான படிக்கிணறு இருப்பதை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
- சென்னை: சாத்தனுார் அணை மற்றும் முதலை பண்ணையில் இருந்து பெண்ணையாற்றில், 150க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சாத்தனுாரில் இருந்து முதலைகள் அதிக அளவில் வெளியேறிய நிலையில், அந்த தகவலை நீர்வளத்துறை மற்றும் வனத்துறையினர் மூடி மறைத்ததாக புகார் எழுந்து உள்ளது.
- பிரபல பாடகர் அபிஜித் பட்டாச்சாரியார் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். "மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை. இந்தியாவிற்கு அல்ல. இந்தியா முன்பிருந்து இங்கு இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது. காந்தியை தவறுதலாக இந்தியாவின் தேச தந்தை என அழைக்கிறோம். அவர் பாகிஸ்தானின் இருப்புக்கு காரணமானவர்.' என்று பேசியுள்ளார் இது சர்ச்சையாகி இருக்கிறது
- சமீபத்தில் சையது மோடி சர்வதேச பாட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து, ஐதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானின் உதய்பூரில் கோலாகலமாக நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
- புவனேஸ்வர்: 'சீட்டு நிறுவன மோசடியில் நானும் பாதிக்கப்பட்டேன். பணத்தை திரும்பப் பெற முடியவில்லை,' என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி கூறினார்.
- புதுடில்லி அறிமுகமில்லாத சர்வதேச அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதுபோன்ற அழைப்புகள் வந்தால், தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. தங்கள் தந்திரத்தை மாற்றிய மோசடிக்காரர்கள், சர்வதேச எண்களிலேயே அழைக்கத் துவங்கி விட்டனர். எனவே, இந்திய தொலைபேசிக் குறியீடான +91 என்பதில் துவங்காத, முன்பின் தெரியாத சர்வதேச குறியீடுடன் துவங்கும் எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
- சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள பார்க்க விண்கலம் புதன்கிழமை அதிகாலை 6 53 மணிக்கு இந்திய நேரப்படி மாலை 5:23 மணிக்கு இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடக்க இருக்கிறது சூரியனிலிருந்து 38 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் தான் அந்த விண்கலம் கடக்கும் என்றாலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் சூரியனை அந்த அளவுக்கு நெருங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- புதுடில்லி : பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் தடை செய்யப்பட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்ற சர்ச்சை புத்தகம் 36 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சர்ச்சை புத்தகத்திற்கு கடந்த 1988-ம் ஆண்டு அப்போதைய ராஜிவ் பிரதமராக இருந்த போது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் நீக்கப்பட்டு 36 ஆண்டுகளுக்கு பின் ‛தி சாத்தானிக் வெர்சஸ் புத்தகம் இந்தியாவில் ரூ. 1999 என்ற விலையில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்த அளவே அச்சிடப்பட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக பஹரிஸன் புத்தக விற்பனை நிலைய உரிமையாளர் ரஜினி மல்ஹோத்ரா ‛எக்ஸ்' வலைதளத்தில் பதிவேற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- கோழிக்கோடு: பிரபல மலையாள சினிமா கதாசிரியர், இயக்குனர் எம்.டி. வாசுதேவ நாயர் ,91 உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
========================================================================================================
பொ க் கி ஷ ம் :
இண்டேன் அனுபவங்கள் பற்றி நான் சென்ற வாரமே கூறிவிட்டேன். இது போன்ற தனிமனித கண்காணிப்புகள் தற்போது கூடிவிட்டது வருத்தற்குரியது. இந்த ஆதார் படுத்தும் பாடு. கட்டிலில் எழுந்திருக்க முடியாதவரை எல்லாம் ஆதார் சென்டருக்கு கொண்டு வ்ருவதை பார்த்த பின் ஆதார் மேல் வெறுப்பு தோன்றியது உண்மை.
பதிலளிநீக்குஇயக்குனர் பாலச்சந்தர் விருது பெறாதது துரதிர்ஷ்டம்.
வசந்த கோகிலத்தை பற்றி ஆர்வத்துடன் எழுதி இருக்கிறீர்கள். ஆனால் அவருடைய கடைசி படம் வெளியான பத்தாண்டுகளுக்குப் பின் தான் நீங்கள் பிறந்தீர்கள். ஈர்த்தது பெயரா? நடிப்பா? பாட்டு திறமையா?
பஷீரின் சகி சுகறா என்பதை விட சுஹைரா என்பதே சரியாகும்.
கலாமோகினி என்று ஒரு பத்திரிகை இருந்ததா? புதிய செய்தி.
டாக்ஸி ஜோக்குகள் டாக்டர் ஜோக்குகள் போன்ற கடி ரகமாக அமைந்து விட்டன.
கடைசி படத்தில் இவர் யார் என்று கேட்டிருப்பது உங்கள் அப்பாவா?
Jayakumar
இன்டேன் அனுபவங்களில் இந்த அனுபவங்கள் எனக்கானவை!!
நீக்குஆதார் மேல் வெறுப்பு வர இன்னும் காரணங்கள் இருக்கின்றன. அட்ரஸ் மாறினால் லேசில் மாற்ற முடியாது. நமக்கு தரப்படும் போஸ்டல் அட்ரஸ் வேறு, அதில் வரும், அதை பதிவு செய்யக் காட்டும் அட்ரஸ் வேறு... படுத்தும்.
பாலச்சந்தரை எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ அதே அளவு பேர்களுக்கு பிடிக்காது!
என்னை ஈர்த்த விஷயங்களை மட்டும் நான் பகிர்வதில். இது சிலராலலாவது விமர்சிக்கப்படும் / ரசிக்கப்படும் என்று நம்பியே பகிர்கிறேன். ஆனால் NCV குரலில் பாடல்களை ரசித்திருக்கிறேன். உயிரோடிருந்த தொடர்ந்து பாடி இருந்தால் எம் எஸ்ஸுக்கு சவால் விட்டிருப்பார் என்கிறார்கள் விற்பன்னர்கள்.
அந்த மொழிபெயர்ப்பில் அப்படிதான் போட்டிருந்தது. ஒருவேளை பேச்சு வழக்கை அப்படியே கையாண்டிருக்கிறார்களோ என்னவோ....
கலாமோகினி பத்திரிகையில் வந்தது என்று அவர்கள் போட்டிருப்பதிலிருந்து அப்படி ஒரு பத்திரிகை இருந்தது தெரிகிறது. மேலும் சில வாரங்களுக்கு முன் நான் பொக்கிஷம் அப்பகுதியில் 'கலாமோகினி' பத்திரிகை அட்டைப்படம் ஒன்று வெளியிட்டதாய் நினைவு.
அவர் என் அப்பா இல்லை!
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குசமூக ஒழுங்கீனங்களுக்கு அரிதாரம் பூசி அலங்கரித்தவர் பாலசந்தர் அவர்கள்
பதிலளிநீக்கும்ம்ம்... சில சமயம்... ஆம்.
நீக்குசெல் போன் இல்லாமல் இருப்பதே சுகம் போலிருக்கின்றது.
பதிலளிநீக்குமுடிகிறதா?
நீக்குபெரிய விஷயம்!
ஆதார அட்டை மாதிரியான ஒன்றினால் வேறு எந்த நாட்டிலாவது இத்தகைய தொந்தரவுகள் உண்டா?..
பதிலளிநீக்குயாருக்குத் தெரியும்? மொத்தத்தில் படுத்தல்.
நீக்குபாக்கியைப் பிரித்து சீதனத்துடன் வழங்குவதற்குத் துணை நின்ற்வர் காந்திஜி..
பதிலளிநீக்குநமக்கு நல்லது தானே செய்திருக்கின்றார்..
அப்படியா?
நீக்குஅந்த காலத்துப் பெரியவர்கள் வேறொன்றும் சொல்வார்கள்..
பதிலளிநீக்குஅது இங்கே வேண்டாம்..
எங்கே வர?!
நீக்குஸ்ரீராம், //இவை யாவற்றையும் என்னுடைய சாம்ஸங் ஃபோன் சகட்டுமேனிக்கு ஸ்பாம், பொட்டன்ஷியல் பிராட், பிராட் என்றெல்லாம் வகைப்படுத்துகிறது. //
பதிலளிநீக்குஇது ஏனென்றால் பல எண்கள் ஃபோன் கம்பெனிகளில் பதிவு செய்யாம தற்காலிக எண்களை எடுக்கிறார்கள். அதில் கம்பெனி பெயர் வருவதில்லை. எனவே ஃபோன் ஸ்பாமில் தள்ளிவிடும்.
கூகுளில் போட்டால் ஆள் பெயர் சிலப்போ வரும் இல்லைனா இப்படியான நம்பர் இல்லை என்றே வரும். ஆள் பெயர் வந்தாலும் கூட அது அந்த சிம்மை வைத்திருந்த முந்தைய ஆளின் பெயராக இருக்கும்.
அரசு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். எல்லா கம்பெனிகளின் ஃபோன் அலைபேசி எண்களும் பதிவு செய்யப்பட வேண்டும், அதில் வேலை செய்பவர்கள் தற்காலிக ஆட்களாக இருந்தாலும் சரி கம்பெனி ஃபோனைத்தான் பயன்படுத்த வேண்டும் அது பதிவு செய்யப்பட்ட எண்ணாக இருக்க வேண்டும் என்று.
முன்பெல்லாம் தொலை பேசி (அலை பேசி கைப்பேசி அல்லா) மட்டுமே இருந்தது அது பெரும்பாலும் நிரந்தரமான எண்ணாக இருக்கும். கம்பெனிக்கான ஏஜன்ட்ஸ் என்றோ இல்லை, மார்க்கெட்டிங்க் ஆட்களோ இருக்கமாட்டாங்க இப்ப அப்படி இல்லையே. அவுட் சோர்சிங்க் என்று நிறைய வந்துவிட்டதே அத்னால் இப்படி நம்பர்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன.
இதற்கு ஒழுங்கு நடவடிக்கை கொண்டு வர வேண்டும்.
கீதா
kyc என்கிற ஆதார் எண் இல்லாமல் தொலைபேசி இணைப்பு/எண் கிடையாது என்ற சட்டம் ஏற்கனவே அமுலில் உள்ளது.
நீக்குJayakumar
உண்மைதான் அண்ணா. ஆனால் ஏன் நடைமுறையில் இல்லை?
நீக்குகீதா
// கம்பெனிகளில் பதிவு செய்யாம தற்காலிக எண்களை ..//
நீக்குஇது வேறயா? அந்த கடுப்பா?
தொலைபேசி விவரங்கள் காணக்கூடியதாக இருந்தனதான். இப்போது அப்படி செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை.
"சமயங்களில் அவர்கள் ஃபோனில் அவர்கள் இந்த ஏஜென்சி பெயரைப் போட்டு Save செய்து கொண்டால் நமக்கு இந்தப் பெயர்தான் காட்டும்" என்று பீதியூட்டிவிட்டுச் செல்லவும்//
பதிலளிநீக்குஇது பாயின்ட்!
ஸ்ரீராம் நான் இதைத்தான் அடுத்தாப்ல சொல்ல வந்தேன்.
(ஜெ கே அண்ணா நான் இதைத்தான் அடுத்தாப்ல சொல்ல வந்தேன்)
பாருங்க ஸ்ரீராம், நம்முடைய பார்வையும் எச்சரிக்கை உணர்வும் எப்படி மாறியிருக்குன்னு. எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும்படி ஆகிவிட்டது. தொழில்நுட்பத்தின் சாபக்கேடான பகுதியும் மனித மனதின் வக்ரபுத்தியும் இணைந்து செயல்படும் ஒன்று...(முன்னர் இந்த அளவு தொழில்நுட்பம் வளரலையே!!! இதையும் நேற்று சொல்ல நினைத்து விட்டுப் போச்சு) நம் மனதையும் அப்படி மாற்றிவிட்டது பாருங்க.
கீதா
நம் எச்சரிக்கையுணர்வால் செய்ய வேண்டாம் என்று நாம் சில செயல்களை செய்யாமல் இருக்க முடிவதில்லை, விடுவதில்லை! சரியாய் அமைத்திருக்கிறேனா வார்த்தைகளை?!
நீக்குஆமாம் ஸ்ரீராம் நிச்சயமாக நானும் டிட்டோ செய்கிறேன்...
நீக்குசரியாகத்தானே அமைச்சிருக்கீங்க ஸ்ரீராம்!!!!!
கீதா
:))
நீக்குநான் இதுபற்றி எழுதுகிறேன் என்று தெரிந்ததுமே ஏதாவது பிரச்னை வந்துவிடப் போகிறது என்று முந்திக் கொள்கிறார்கள்!//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன். நம்ம முஜாமு டேஞ்சரான ஆளுன்னு தெரிஞ்சுருக்காதா நீங்க கேள்வி கேட்டதிலேயே அவங்க புரிஞ்சுக்கிட்டிருப்பாங்க. நானும் இப்படித்தான் கேள்வி கேட்டு நொந்து போன ஆட்களும் உண்டு. கூடவே பலரிடமும் சொல்வது நீங்க கொடுக்கும் எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் மட்டுமே எடுப்பேன் என்றும்.
அதில் ஒரு தமிழ் பேசும் இந்திப் பையன் சொன்னார், ஏன் இப்படி டார்ச்சர் பண்ணறீங்க, கொஞ்சம் நம்புங்கம்மா என்று.
நான் சொன்னேன் நாங்க நம்பிக்கையோடுதான் வரோம். இருக்கிறோம். ஆனா நடைமுறையில் அப்படி இல்லையே...வரும் நம்பர்கள் பெரும்பாலும் அஹமதாபாத், மஹாராஷ்ட்ரா, குஜராத், குர்காவ்ன், ஆந்த்ரா என்று வந்து ஃபோன் எச்சரிக்கை விடும் அல்லது ஸ்பாமில் தள்ளும் போது நாங்க எப்படி விழிப்புணர்வோடு இல்லாம இருக்க முடியும்?
அவரால் பதில் சொல்ல முடியலை. பின்னர் சொன்னார். ஒகே மேடம் இந்த நம்பரில் இருந்து மட்டும் தான் அழைப்பு வரும்னு சொல்லிய பிறகுதான் நான் நகர்ந்தேன்.
ஏர்டெல்லே கூட பல நம்பர்கள் வைச்சிருக்காங்க வட மாநிலங்களில் இருந்தெல்லாம் வரும் ஆனால் பெயரில்லாமல்....
வருவதால் அவர்களிடம் இதைச் சொன்னேன் ஏர்டெல் என்று நம்பர் வந்ததால் எடுத்துப் பேசியதால் மற்றும் பேசியவர் தமிழில் பேசியதால்...
கீதா
எனக்கு வந்தவர் லோக்கல். திருப்பத்தூர் இளைஞன். வேலை தேடும் அவனுக்கு கிடைத்த வேலை இதுதான் பாவம். இதை வேறு நிரந்தரமாக்குகிறேன் என்று சொல்லி இருக்கிறார்களாம்! இன்னும் பாவம்.
நீக்குஆமாம் சொல்லியிருக்கீங்களே கட்டுரையில் புரிந்தது ஸ்ரீராம். பாவம் அப்பையன்
நீக்குகீதா
அடுத்த பகுதிக்கு நகரு கீதா.....!!!
பதிலளிநீக்குஅடுத்த பகுதி முதல் பாரா வாசிக்கும் போதே தெரிந்துவிட்டது பாலச்சந்தர் என்று.
குறிப்பிட்டிருக்கும் பாடல்கள், ஆம் செம வரிகள் உள்ள பாடல்கள் கதையின் சாராம்சம் வந்துவிடும்.
அது போன்று குறிப்பிட்டிருக்கும் கேரக்டர்கள்....அதுவும் டிட்டோ.
அழகன் படத்தில் வரும் சுரேஷ் சக்கரவர்த்தி கூட வித்தியாசமான கதாபாத்திரம் அருமையான நடிப்பு. காட்சிகளில் யுனிக் டச் வித்தியாசமாக அமைப்பது...பல ஷார்ப் வசனங்கள்...
சரிதாவை விட்டுவிட்டாங்களே, கட்டுரையில். அக்னிசாட்சி, தண்ணீர் தண்ணீர் கேரக்டர்கள் அசாத்தியமானவை.
பலரும் பாலச்சந்தரை ஏதேதோ சொல்வாங்க. ஆனால் எனக்கு அவரது காட்சி அமைப்புகள், வசனங்கள், யுனிக் கதாபாத்திரங்கள் ரொம்பப் பிடிக்கும். தனிப்பட்ட விஷயங்களையோ, வம்புகளையோ ஒதுக்கிவைத்து திறமையை மட்டும் பார்க்கலாமே!
கீதா
இவர் படங்களை பற்றி நிறைய அலசலாம். நம் ஜம்புலிங்கம் சார் இவரின் பெரிய விசிறி. அவருக்கு கடிதம் போட்டு பதில் வாங்கி வைத்திருக்கிறார். உண்மைத்தமிழன் கூட இவரின் தீவிர விசிறி.
நீக்குஎம் சி வசந்தகோகிலம் அவர்களின் குரல் அசாத்தியமான வித்தியாசமான குரல். பாவம் ரொம்பச் சின்ன வயசிலேயே அவரை மரனம் தழுவிக் கொண்டது.
பதிலளிநீக்குஇதுக்கு வேறு கட்டுக்கதைகள் கூட உண்டே அப்பவே.
கீதா
ஆமாம். பாவம்.
நீக்குபஷீரின் எழுத்து எளிமையான எழுத்து ஆனால் அதில் இருப்பவை நிறைய.
பதிலளிநீக்குஸ்ரீராம் நீங்க கொடுத்திருக்கும் பகுதியை வாசிக்கறப்பவே, தெரிகிறது.
கட்டியைப் பற்றிச் சொன்னதும். அதன் பின் சுகறா வந்து பார்த்ததுமே தெரிந்து விட்டது கட்டி உடையப் போகிறது என்று. அந்த நிகழ்வு விவரிப்பில் பல அர்த்தங்கள்...கட்டி உடைவது உட்பட. அவர்கள் இத்தனை காலப் பரிச்சயம் இருந்தாலும் அன்று தானே இப்படி நெருக்கமாக...அந்த உடைதலும்!!
நான் வாசிக்க நினைத்து தேடிக் கொண்டே இருக்கும் புத்தகம். அமேசானில் கிண்டிலில் இருக்கிறது..நீங்க சொன்னீங்க. முயற்சி செய்ய வேண்டும்.
கீதா
ஆமாம் கீதா... இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதியையாவது பகிரவேண்டும் என்று நான் நினைத்தபோது இந்தப் பகுதிதான் நினைவுக்கு வந்ததது. சிறிதாகவும் பகிர முடியவில்லை!
நீக்குஅகிலாண்டேஸ்வர் கோவில் யானை பற்றியும், சிவாஜி பற்றியும் அறியாத தகவல்கள் சுவாரசியம்...
பதிலளிநீக்குகீதா
__/\__
நீக்குotp அனுபவம் சற்று பயமாகத்தான் இருக்கிறது...
பதிலளிநீக்குஆம் DD. நலம்தானே?
நீக்குDD க்கு நல்வரவு.
நீக்குகலாமோகினி விவரங்கள் சுவாரசியம்.
பதிலளிநீக்குசாலிவாஹனன் பற்றி முன்பு வியாழனில் சொல்லியிருக்கீங்க என்று சின்னதா நினைவு.
கவிதைகள் பிரமாதம். வாசிக்கும் போதே அர்த்தம் புரிகிறது.
கீதா
எளிமையாக இருக்கின்றன.
நீக்குசில கவிதைகள் என்ன சொல்ல வருகின்றன என்றே புரியாது இல்லையா?!!
கடைசி படம், தேவன் என்கிற மகாதேவன் - சரியா?
பதிலளிநீக்குசரி.
நீக்குநியூஸ் ரூம் - முதல் செய்தி - உச்ச நீதிமன்றம் இவ்வளவு தெரியாமலா இருக்காங்க அதிர்ச்சி யடைய? இதெல்லாம் சர்வ சகஜமப்பா எங்கூர்ல!
பதிலளிநீக்குஓடிசா முதல்வருக்கே இந்த ஆப்பா!
சர்வதேச அழைப்புகள் குறித்து எச்சரிக்கை வந்து கொண்டே தான் இருக்கின்றது. ஒரு சில சர்வதேச அழைப்புகள் வந்திருக்கின்றன ஆனால் தொடுவதில்லை உடனே ப்ளாக்கும் செய்துவிடுவதுண்டு குறிப்பாக நம் உறவினர்கள் நட்புகள் இல்லாத தேசங்களில் இருந்து வந்தால். பெரும்பாலும் பாகிஸ்தான் அப்புறம் வேறு சில வாயிலேயே நுழையாத பெயருடைய நாட்டிலிருந்தும் வந்து கொண்டிருந்தது இப்ப சமீபகாலமாக வருவதில்லை.
கீதா
ஒடிசா முதல்வர்.. அவரும் மனிதர்தானே... நம்மூர் அரசியல்வாதிகள் அளவு இல்லை போல...!
நீக்குஎம் டி வாசுதேவன் நாயர் பற்றிய செய்தி பார்த்தேன் .
பதிலளிநீக்குகீதா
நான் அவர் படைப்பு எதுவும் வாசித்தது இல்லை.
நீக்குடாக்ஸி வெயிட்டிங்க் போட்டு இருந்த காலம் நினைவுக்குவருகிறது...
பதிலளிநீக்குஒரு பேபியின் கதை புன்னகைக்க வைத்தது
கடைசிப் படம் - எழுத்தாளர் தேவன்?
கீதா
ஆம். கடைசி படம் தேவன்தான்.
நீக்குotp அனுபவம் படிக்கும் போதே பயத்தை ஏற்படுத்துகிறது.
பதிலளிநீக்குஆனால் otp கொடுக்க வேண்டியதற்கு கொடுக்க வேண்டி உள்ளது.
கவனமாக இருக்க வேண்டியதுதான் இளைய தலைமுறையிடம் கேட்டு கொள்ள வேண்டும் தான். உங்கள் மகனிடம் கேட்பது நல்லதுதான்.
எழுத்தாளர் தேவன் என்று பார்த்தவுடன் தெரிந்து விட்டது. அவர் கதைகள் பரிசளிக்க வாங்கினேன் முன்பு, அதில் எல்லாம் அவர் படம் பார்த்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குKB..., சிவாஜி, வசந்த கோகிலம் , பஷீர், ரசிகமணி எல்லோரை பற்றியு நிறைய தகவல்கள் . வசந்த கோகிலம் பாடல் நிறைய கேட்டு இருக்கிறேன், பிடிக்கும் அவரை பற்றிய வாழ்க்கை வரலாறு தெரியாது.
பதிலளிநீக்குபஷீரின் வீடு பற்றிய கதை படித்து இருக்கிறேன் இந்த கதை படித்த நினைவே இல்லை.
வேறு கவிதைகள் இடம் பெற்று விட்டதால் உங்கள் கவைதை இல்லை போலும்.
செய்திகள் படித்து தெரிந்து கொண்டேன்.
சிரிப்பு டாக்ஸிகள் நிற்கும் இடம் காத்து இருந்தவரின் கோபம் தெரிகிறது.