திங்கள், 30 டிசம்பர், 2024

"திங்க"க்கிழமை  :  கொத்தமல்லி தொக்கு -- பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி

 

 கொத்தமல்லி தொக்கு 


தேவையான பொருள்கள்:


கொத்தமல்லி.  - ஒரு பெரிய கட்டு 

புளி.                     -  ஒரு சிறிய

எலுமிச்சம்பழம் அளவு

மிளகாய் வற்றல்.     - ஐந்து 

உளுத்தம் பருப்பு   -   2 மேஜைக் கரண்டி

*பெருங்காயம்.    - ஒரு சிறு கட்டி

உப்பு.                        - 1 1/2 டீ ஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்.    -  6 மேஜைக் கரண்டி

கடுகு.                           - 1 டீ ஸ்பூன்    

உளுத்தம் பருப்பு.     - 1 டீ ஸ்பூன்   


செய்முறை:  

கொத்தமல்லியின் வேரை நறுக்கி விட்டு மண் போக நன்றாக கழுவி வடிய வைக்கவும். ஒரு சுத்தமான துண்டில் போட்டும் வைக்கலாம்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், புளி இவைகளை தனித்தனியாக போட்டு, கருகாமல் வறுத்து எடுத்து வைக்கவும்.



பின்னர் கொத்தமல்லியை லேசாக வதக்கிக் கொள்ளவும்.
எல்லாம் ஆறியதும் முதலில் உ.பருப்பு, புளி, மிளகாய் வற்றல் இவைகளை  மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு வதக்கிய கொத்தமல்லியை சேர்தது, உப்பும் சேர்த்து அரைக்கவும். தேவையானால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.



பிறகு வாணலியை நன்றாக அலம்பி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு போட்டு அது வெடித்ததும், ஒரு டீ ஸ்பூன் உ.பருப்பு போட்டு சிவந்ததும், அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதைப் போட்டு, அதில் இருக்கும் நீர் வற்றும் வரை அடி பிடிக்காமல் கிளறி, ஆறியதும் ஒரு பாட்டிலில் எடுதது வைத்துக் கொள்ளவும். 

தோசைக்கு ஏற்ற சைட் டிஷ். சூடான சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.  



* கட்டிப் பெருங்காயம் இல்லை என்றால் தூள் பெருங்காயம் ஒரு டீ ஸ்பூன் தாளிக்கும் பொழுது சேர்த்துக் கொள்ளலாம்

மிக்ஸி இல்லாத கல்லுரல், அம்மி, இரும்பு உலக்கை போன்றவை புழக்கத்தில் இருந்த காலத்தில் எங்கள் அம்மாவெல்லாம் வதக்கிய கொத்துமல்லி, மிளகாய் வற்றல், புளி இவைகளை கல்லுரலில் இட்டு, இரும்பு உலக்கையால் இடிப்பார்கள். கெட்டியாக இருக்கும்.       

31 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. கொத்தமல்லி தொக்கு கொத்தமல்லி சட்னி இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தொக்கு தண்ணீர் இல்லாமல் கட்டியாக இருக்கும் என்பதைத் தவிர?

    கடைசி வரி கல்லீரலை சரியாக்கவும். "கல்லுரல்"

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொ.ம. சட்னியில் சேர்க்கப்படும் பொருள்கள் வேறு.

      நீக்கு
  3. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  4. குறிப்பு நன்றாக இருக்கிறது.
    எங்கள் வீட்டிலும் முன்பெல்லாம் இடித்து தான் செய்வார்கள், எனக்கு வேறு வழியில்லாமல் மிக்ஸியில் தான் செய்கிறேன். ஜனவரி மாத குட்டை வேர்களுடைய மல்லி இந்த தொக்கிற்கு சூப்பராக இருக்கும். மல்லியை உலர வைத்த பின் மற்ற சாமான்களை இடித்து மல்லியையும் இடித்து வைத்து நன்றாக கலந்து ஸ்டோர் பண்ணி விடுவோம்!!
    கொத்தமல்லி சட்னி தண்ணீர் கலந்து சட்னியாக அரைப்பது. ஒரு நாளைக்கு மேல் உபயோகிக்கக்கூடாது. ஆனால் கொத்தமல்லி தொக்கு ஃபிரிட்ஜில் வைத்தால் 20 நாட்கள் வரையில் உபயோகிக்கலாம். சுவை மாறாது.

    பதிலளிநீக்கு
  5. பானுக்கா உங்கள் செய்முறை கொத்தமல்லித் தொக்கு நன்றாக இருக்கு. படங்களும்.

    நம் வீட்டில் தொக்கு என்பதற்கு எல்லாவற்றிற்கும் பொதுவாக வெந்தயப் பொடி சேர்ப்பதுண்டு வதக்கும் போது. கொத்தமல்லியை கழுவி துணியில் பரப்பி வைத்து வாணலியில் நல்லெண்ணையில் கொஞ்சம் வதக்கிவிட்டு, கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் ஆனதும் சிறிதாகக் கட் செய்து வறுத்த வற்றுடன் அரைக்கும் போது தண்ணீர் இல்லாமல் சிறிதாக கொஞ்சம் கொஞ்சமாக கொத்தமல்லியைப் போட்டு அரைத்து அரைத்து அல்லது உரலில் போட்டு இடித்து...செய்வதுண்டு. புளியும் சேர்த்து.

    கீதா.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொத்துமல்லியை கழுவி துணியில் பரப்பி வைக்க வேண்டும் என்பதை நானும் குறிப்பிட்டிருக்கிறேன்.

      நீக்கு
  6. கமலாக்கா என்னாச்சு காணும்? நலம்தானே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நான் நலமாக உள்ளேன். தாங்கள் அன்புடன் என்னை விசாரித்தமை கண்டு மிக மகிழ்ச்சியடைந்தேன். சென்ற வாரம் தீடிரென அமைந்த பல கோவில்கள் பயணங்களினால் இதுவரை பதிவுலகிற்கு வர இயலவில்லை.

      நீங்கள் அனைவரும் என்னை காணவில்லையே என தேடுவீர்கள் என்றுதான் விபரமாக கீழே ஒரு கருத்தை பதிந்து விட்டு சற்றே மேலே அண்ணாந்து பார்த்தபடி வந்தால் உங்கள் கருத்துரை..! 🙏.

      அன்புடன் என்னை காணவில்லையே என கேட்ட உங்கள் அன்புக்கு நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் சகோதரி. உங்களுக்கு என் அன்பான நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. சூப்பர் கமலாக்கா ட்ரிப் நல்லா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். நல்ல தரிசனமும் கிடைத்திருக்கும்.

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      ஆமாம்.. கடவுளருளால் டிரிப் நன்றாக அமைந்தது. சென்ற கோவில்களில் நல்ல தரிசனங்களும் கிடைத்தது. அன்புடன் விசாரித்தமைக்கு மிக் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. இயற்கையின் அருங்கொடைகளில் ஒன்று தான் கொத்தமல்லி.. நற்பலன்களைத் தருவது..

    என்னதான் கு.சா. பெட்டி வசதிகள் இருந்தாலும் மூன்று நாட்களுக்குள் பயன்படுத்தி விடுதல் மிகவும் நல்லது..

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    சகோதரர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இறைவனின் அருளால் பூரண உடல் நலம் பெற்று, பதிவுலகிற்கு வந்தமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் வந்தவுடனே என் பதிவுக்கும் வந்து நல்லதொரு கருத்தை தந்தமை கண்டும் மிக மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு இங்கே என் அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்ற வாரம் குடும்பத்துடன் பல கோவில்களுக்கு தரிசனம் செய்து வந்ததில் இது வரை யாருடைய பதிவுகளுக்கும் வர இயலவில்லை. மன்னிக்கவும். நேற்றுதான் நலமுடன் திரும்பி வந்தோம். உடல் அலுப்பு காரணமாக உடனே வர இயலவில்லை. விடுபட்ட அனைவரின் பதிவுகளையும் இனி படிக்கிறேன்.

    அனைவருக்கும் வரும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு அனைவருக்கும் பல நலன்களை தரும்படி இறைவனை வேண்டுகிறேன்.

    என்னை பதிவுலகில் காணவில்லையே என சற்றே குழப்பத்துடன் 😇தேடிய அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலய தரிசனம் நல்லவிதமாக நிறைவேறி இல்லம் திரும்பியதற்கு மகிழ்ச்சி...

      எல்லாருக்கும் நன்மைகள் விளையட்டும்...

      நீக்கு
    2. தங்களது அன்பான நல்ல வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோதரரே. எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்கட்டுமென. இறைவனை பிரார்த்திப்போம். நன்றி.

      நீக்கு
    3. தங்கள் அன்பினுக்கு நன்றியம்மா..

      நீக்கு
    4. என்னென்ன கோவில்களில் தரிசனம் செய்தீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆவல்.

      நீக்கு
    5. வணக்கம் சகோதரரே

      சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்கள். ஹொரநாடு, சிங்கேரி, உடுப்பி என சென்று வந்தோம். விசாரித்தமைக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான கொத்தமல்லி தொக்கு படங்களுடன் நன்றாக உள்ளது. நானும் இதே முறையில்தான் செய்வேன்.இது பித்த உபாதைகளுக்கு சிறந்ததொரு மருந்தும் கூட. கல்லுரலில் போட்டு இடித்து வைத்துக் கொண்டால் அதன் சுவையே தனி.

    உண்மை. கொத்தமல்லியை அலம்பிய பின் நன்றாக துணியில் போட்டு அதன் ஈரம் முழுமையாக காயும் வரை உலர்த்தி விட்டால் பல நாட்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. கொத்தமல்லி தொக்கு செய்முறை நன்று. படங்களும் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  13. கொத்தமல்லி தொக்கு செய்முறை நன்று. படங்களும் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  14. படங்களுடன் கொத்தமல்லி தொக்கு மிக அருமை.
    நாங்களும் செய்வோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!