புதன், 25 டிசம்பர், 2024

இரட்டைக் குழந்தைகள் பற்றி ஓர் அலசல்!

 



எல்லோருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துகள்! 

நெல்லைத்தமிழன்: 

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது லாபமா இல்லையா? இரண்டு குழந்தைகளோடு போதும், ஓரளவு ஒத்த மனதுடையவர்களாக இருப்பார்கள், நம் கடமைகளையும் ஒரே நேரத்தில் முடித்துவிடலாம். என்ன சொல்றீங்க?

# இரண்டு குழந்தைகளை ஏககாலத்தில் வளர்த்து ஆளாக்குவதிலுள்ள சிரமங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் ஒப்புக் கொள்ளக்கூடிய விஷயம்தான். ஆனால் திட்டமிட்டுச் செய்யவியலாத விஷயம்.‌

& உங்கள் கேள்வியை நான் முன் வாரம் சொல்லியிருந்த இ கு பெற்ற தாய்மார்களுக்கு அனுப்பி, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டிருந்தேன். 

என் அம்மா பெற்ற இ  கு இருவருமே (ஆண் + பெண்) சிறு வயதில் இறந்துவிட்டனர். அம்மாவும் இப்போது உயிரோடு இல்லை. 

இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்ற என் தங்கை சொன்ன விவரங்கள் : 

இதில்  லாபக் கணக்கு எல்லாம் பார்க்க இயலாது. உதவிக்கு என்னைச் சுற்றிலும் சொந்த பந்தங்கள் நிறைய பேர் இருந்ததால், அவர்களை வளர்த்து ஆளாக்குவதில் சிரமம் எதுவும் இருக்கவில்லை. அவர்களுக்குச் செய்வதை கடமையாக நான் நினைக்கவில்லை. இரண்டு குழந்தைகளும் வளரும் சூழ்நிலையைப் பொருத்து அவர்களுடைய குணாதிசயங்கள் அமைந்தன. 

அடுத்து ஒரு ஆண் + ஒரு பெண் பெற்ற என்னுடைய ஒன்று விட்ட அண்ணனின் மகள் கூறியது :

One way it's good. One way it's not so. Double joy-no doubt. It also depends on whether it's the same gender or not. With my experience, I would say, the maturity attained is different for different genders. I had difficulty in handling it, given the challenges of corona and my work. I had to answer differently and separately. Suddenly, now I feel both understand each other way better. Don't know about future. In my case, they both are way different in almost everything except for opposing my views. Unable to actually conclude, but I do enjoy even the challenges. I feel I would have been the same even if they were born with gap.

I think I have replied like director Visu, confusing you more.

Extra notes: 

Even if gender was same, I feel every individual is different - from my husband's twin experience. 

(Her husband is one of the twin - brothers- ) 

அடுத்து என் தங்கையின் பெண் - (அவளுக்குப் பிறந்தவை ஒரு ஆண் + ஒரு பெண்): 

 From my experience, both have very different personalities and perspectives. Every individual is different, and so are they. They need individual care and attention. 

Moreover, we have to spend everything on double, for example school fees, donations everything comes at the same time.  

So, it's all the same ..

(நானும் என் இரட்டைச் சகோதரனும்!) 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஒருவரை பார்த்து காபி அடிப்பதற்கும், ஒருவரால் inspire ஆகி ஒரு வேலையை செய்வதற்கும், ஒருவரோடு போட்டி போட்டு ஒரு வேலையை செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

# முதலாவது (காபி அடிப்பது): இதில் தன் முயற்சி ஏதுமில்லை. தோல்வி சாத்தியம்.

இரண்டு& மூன்று: 

ஊக்கம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுவதால் தகுந்த சாமர்த்தியம் இல்லாதபோது பலன்கள் எப்படியும் இருக்கலாம்.

ஆக எல்லாமே சாமர்த்தியம் + அதிர்ஷ்டத்தைப் பொருத்து வெற்றி தருபவைதான். முதலாவது தவிர மற்ற இரண்டும் சற்று மேலானவை.

& பல ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய அலுவலகத்தின் சுவாரஸ்ய நிகழ்வு -  ஒரு குறிப்பிட்ட வண்டியின் ஒரு அமைப்பு - எங்கள் தயாரிப்பைவிட போட்டியாளரின் தயாரிப்பு உறுதியானதாக இருந்தது. பார்த்தோம் - உடனே போட்டியாளரின் வண்டி ஒன்றை விலைக்கு வாங்கி, அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ஆராய்ந்து, அதைப் போலவே சில பாகங்களை உருவாக்கினோம். 

அதைக் கண்ணுற்ற ஒருவர் கேட்டார் :" போட்டியாளரின் வடிவமைப்பை காப்பி அடிப்பது முறையா? "

எங்களில் ஒருவர் சொன்னார் : " Don't say we copy them. Say that we are inspired by their design and follow them!" 

ஊடகங்கள் மகளிர் தினத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ஆடவர் தினத்திற்கு ஏன் அளிப்பதில்லை?

# அப்படியா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.  இந்த தினம் அந்த தினம் இதெல்லாம் எங்கோ யாரோ சிலருக்கு மகிழ்ச்சி பலருக்கும் பொழுதுபோக்கு.  லாபம் யாருக்கும் இராது.  மக்களின் கவனத்தை ஈர்க்க உதவும் முயற்சிகள் எல்லாமே வெற்றி பெறுவதில்லை. உதாரணமாக பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது, காற்று மாசுபாடு. மற்றபடி மகளிர் தினம் மாமனார் தினம் எல்லாமே வெறும் ஆடம்பரம் என்பது என் எண்ணம்.

& ஹை - நான் இதற்கு ஏதாவது ஏடா கூடமாக பதில் சொல்லி வைத்தால், நீங்க என்னைத் துரத்தித் துரத்தி அடிப்பீங்க. (நெல்லை - நீங்களும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க. இது பா வெ வைக்கின்ற trap - மாட்டிக்காதீங்க :))))

கே. சக்ரபாணி  : சென்னை 28: 

1.  Mind voice தங்கள் அனுபவம்  மற்றும்  அதுபற்றி  தங்கள் கருத்தை  பகிரவும்

# மனசாட்சியின் குரல்:

ரொம்ப சரியானதை‌ நாம் ஏற்க இயலாதபோது அதாவது ரொம்பத் தப்பானதை நாம் ஆர்வமாக செய்ய முனையும்போது ஒலிக்கும் சின்னக் குரல்.  நான் அது சொன்னதை வேண்டா வெறுப்பாக ஏற்ற தருணங்கள் பலப்பல.‌

& முன் காலங்களில் மைண்ட் வாய்ஸ் அடிக்கடி ஏதாவது சொல்லிக்கொண்டு இருந்தது. எனக்கு காது கேட்காமல் போனவுடன் மை வா ஊமையாகிவிட்டது! 

2. இப்போதெல்லாம்  பெரும்பாலான  வார இதழ்கள்  படிக்க லாயக்கற்றதாக இருக்கிறதே!  ஒரே சினிமா செய்திகள் தான் அதிகமாக இருக்கிறது.

நான் மிக வருத்தப்பட்டது குமுதம் இதழின் சீரழிவு. விகடன் அவ்வளவு மோசமாகாமலிருந்தது - நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த போது.

& மின்நிலா தவிர மற்ற வார இதழ்கள் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டன! 

= = = = = = = = =

எங்கள் பட்டி மன்றம் 

= = = =  == = = = = = = = = = = 

சென்ற வார வியாழன் அரட்டையில் நியூஸ் ரூம் பகுதியில் இடம் பெற்ற காந்தி அணிந்திருந்த மாலை (யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை ) பற்றிய செய்தி சிந்திக்க வைத்தது. 

" காந்தி மாலை, ராஜாஜி கைத்தடி, அண்ணாவின் பொடி டப்பா - போன்ற விஷயங்களுக்கு - அதிக விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு முக்கியத்துவம் தேவையா அல்லது தேவை இல்லையா? " 

தேவைதான் என்பவர்களும் தேவை இல்லை என்பவர்களும் கருத்துரைப் பகுதியில் தங்கள் பக்க வாதங்களை எழுதவும். 

நடுவர் தீர்ப்பு இந்தப் பதிவின் கடைசி கருத்தாக வெளியாகும். 

= = = = = = = = = = =

KGG பக்கம் : 

சமீப கால நிகழ்வுகளில் என்னை பாதித்த பொது நிகழ்வு பெங்களூர் ஐடி கம்பெனி ஆள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம். 

சென்ற வியாழன் பதிவிலும் ஸ்ரீராம் அது பற்றி சொல்லியிருந்தார். 

அவருடைய தற்கொலை பிரச்சனைகளுக்கு முடிவா அல்லது ஆரம்பமா? 

தற்கொலையினால் அவர் யாருக்காவது பாடம் கற்பித்தாரா ? யாராவது அதனால் திருந்தினார்களா? 

தற்கொலையினால் அவர் சாதித்தது என்ன? 

இதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். 

இது ஜீவனாம்ச கொடுமை நிகழ்வு. 

ஆனால் வடநாட்டில் முன் காலத்தில் (இப்பொழுது குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன்) வரதட்சணைக் கொடுமைகள், கொலைகள் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டு இருந்தன. 

மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி - பிறந்த வீட்டுக்கு அனுப்பி, மருமகளின் பெற்றோரைப் பாடாகப் படுத்தி,  மருமகளைக் கொல்வது போன்ற நிகழ்வுகளும் சாதாரண நிகழ்வுகளாக இருந்தது ஒரு காலம். 

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு நீதியரசர் வீட்டில் கூட இந்த வகை வரதட்சணைக் கொடுமை நடந்தது என்று படித்த ஞாபகம். 

மனிதர்கள் (குறிப்பாக மாமியார்கள்) பொன் மற்றும் பொருள், பணத்தாசை கொள்வதாலும், அதை எதிர்த்துப் பேச வக்கில்லாத மாமனார் / அந்தப் பேராசைப் பெற்றோர்களின் பையன் எல்லோரும் வாயிருந்தும் ஊமையாக இருப்பதாலும் வரதட்சணைக் கொடுமை, மருமகள் மரணம் எல்லாம் பெரும்பாலும் நிகழ்ந்துள்ளன.

மேற்கண்ட பெங்களூர் ஐ டி ஊழியர் தற்கொலை வித்தியாசமாக ஆண் மரணத்தில் முடிந்தது என்றாலும், இங்கேயும் திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண் மற்றும் அவளுடைய அம்மா, அண்ணன்(?) போன்றவர்களின் பணத்தாசைதான் இந்தக் கொடூர நிகழ்வுக்குக் காரணம் என்று நினைக்கிறேன். 

ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கும் - எதிர்கால உலக வாழ்க்கை -  பற்றிய வரிகளில், " கலியுகத்தின் இறுதியில் மக்கள் பணம் பணம் என்று பேயாக அலைவார்கள். மக்கள்  நல்ல செயல்களையும், கடவுள் பக்தி, மற்றவர்களுக்கு உதவும் எண்ணம், உறவுகளை, பெரியவர்களை மதித்தல் , கீழ்ப்படிதல் போன்ற நல்ல குணங்களை மறந்து, பணத்தின் பின்னே ஓடி நிம்மதி இழப்பார்கள் " என்று சொல்லப்பட்டுள்ளது. 

அது கொஞ்சம் கொஞ்சமாக உண்மையாகி வருகிறதோ என்ற சந்தேகம் வலுத்துக்கொண்டு உள்ளது. 

உங்களில் யாரேனும் 'இதை எல்லாம் பார்த்து கவலை கொள்ள வேண்டாம்; உலகம் உருப்படும் - கவலை வேண்டாம்' என்று உதாரணங்களோடு எழுதுங்கள்.  

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். 

= = = = = = = = = = = 

27 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. // கலியுகத்தின் இறுதியில் மக்கள் பணம் பணம் என்று பேயாக அலைவார்கள்.. //

    இறுதியில் மக்கள் பிரியாணி பிரியாணி என்று பேயாக அலைவார்கள்!..

    பதிலளிநீக்கு
  3. உலகம் உருப்படும் - கவலை வேண்டாம்..' என்று உதாரணங்களோடு எழுதுங்கள்.

    எழுதலாம் தான்...

    ஒன்றையும் காணோமே!..

    பதிலளிநீக்கு
  4. உலகம் உருப்படுகின்றதோ இல்லையோ..

    நாம உருப்படற வழியப் பார்ப்போம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமதானே உலகம்!  நாம உருப்பட்டா உலகம் உருப்பட்டா மாதிரிதான்.

      நீக்கு
    2. உலகம் - ஒரே இருட்டு; நீ
      உருப்படியா ஏத்திக்கடா விளக்கு !
      பழைய சினிமா பாடல் !!

      நீக்கு
  5. ​நான் சென்ற வாரம் அனுப்பிய இந்த கேள்விகளை காணவில்லை.

    jayakumar chandrasekaran
    18 Dec 2024, 15:42 (7 days ago)

    to Engal

    கேள்விலேயே எதிர்பார்க்கும் பதில் உட்படுத்தி கேட்பதால் என்ன பயன்?

    விடை சொல்ல கடினமான கேள்வி "முதலில் வந்தது எது?கோழியா, முட்டையா? " என்ற கேள்விக்கு உங்கள் பதில்?

    எ பி கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஆசிரியர்களின் ஈடுபாட்டை இழந்து வருகிறது. வாரிசு அடிப்படையில் வாரிசுகளுக்கு இணை ஆசிரியர் பதவி கொடுக்கலாம் அல்லவா? உங்கள் பதில்? உங்கள் VRS அல்ல எதிர்பார்ப்பது.
    Jayakuma​r

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா - miss பண்ணிவிட்டேனே! இனிமேல் நீங்கள் எ பி மெயிலில் கேள்வி அனுப்பினால், அன்றைய எங்கள் பதிவில், எ பி மெயில் பார்க்கவும் என்று ஒரு வரி கருத்துரை இடவும். பல வாரங்களாக engalblog மெயில் பகுதியில் கேள்விகள் வராததால், நான் அதை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். மன்னிக்கவும். இப்பொழுது பார்த்து, அடுத்த வாரம் பதில் அளிக்கிறோம்.

      நீக்கு
    2. மேலும் ஒரு முக்கியமான விஷயம் - கேள்விகள் அனுப்பும்போது அது ஜீவி சார் பதிலுக்கா அல்லது எ பி பதில்களுக்கா என்று குறிப்பிடவும்.

      நீக்கு
  6. கண்ணாடியில் தெரியும் உங்கள் இரட்டைச் சகோதரன் உங்களைவிட அழகாகவும் இளமையாகவும் இருப்பதாக நான் சொன்னால் நீங்க ஒத்துக்கொள்ளவா போறீங்க? திருக்குறுங்குடியிலிருந்து

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
    எல்லோருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
    இரட்டை குழந்தைகளை வளர்க்க கஷ்டமானாலும் அவை வளர்வதை பார்க்க ஆனந்தமாக இருக்கும். பக்கத்து வீட்டில் பார்த்து இருக்கிறேன், உறவினர் வீட்டில் பார்த்து இருக்கிறேன். இரட்டையாக இருந்தாலும் குணநலன்கள், விருப்பு, வெறுப்பு வேறு வேறு மாதிரி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் இரட்டை படம் நன்றாக இருக்கிறது, நன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. முக்கியத்துவம் தேவையே இல்லை. அதில் அர்த்தமும் இல்லை. அந்தப் பொருளை அவரிடமிருந்தே நேரடியாகப் பெற்றுக்கொண்டிருந்தால் பெற்றுக்கொண்டவருக்கு அதன் மீது ஈர்ப்பு இருக்கும். மத்தலங்களுக்கு நஹீன்.

    பதிலளிநீக்கு
  11. இரட்டை குழந்தைகள் அனுபவ
    பரிமாற்றம் வெகு ஜோர் நன்றி
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!