நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 27 டிசம்பர், 2024
பெண்மையின் பாகம் தாமரையாகும் இடையின் பாகம் நூலாகும்
சில சமயம் ஒரிஜினல் பாட்டுகளை விட, அந்தப் பாடலை வேறு யாராவது பாடி நாம்முதலில் கேட்டது மனதில் அமர்ந்து விடும், பிடித்து விடும். உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கும் என்றே நம்புகிறேன்.
என் மாமா ஜவர்லால் நல்ல பாடகர், இசை ஞானம் உள்ளவர். சிறுவயதிலிருந்தே நன்றாகக் பாடுவார். சில பாடல்கள் ஜவர்லால் பாடும் பாடல்களில் ஒன்று என்றே முத்திரை குத்தப்பட்டிருக்கும்.
அதில் ஒன்று ராதிகா... கிருஷ்ணா... தவ விரஹே கேசவா எனும் ஜெயதேவர் அஷ்டபதி. ஜவர்லால் 'ராதிகா....' என்று தொடங்கி இழுத்து 'ஆ... ஆ..' என்று வளைத்து வளைத்து ஒரு ஆலாபனை செய்வார். பிறகு அடுத்த வரி வரும் தவவிரஹே கேஸவா,,, சட்டென டியூன் மாறும் "ஸ்தன வினிஹித மபி ஆரமுதாரம்" இந்தப்[ பாடல் கேட்டு கேட்டு மனதில் நின்று விட்டது. ஜவர்லால் பாடிய இந்தப் பாடல் கேஜிஜிக்கும் நினைவிருக்கும் என்று நம்புகிறேன். ஜவர்லால் பாடியது மேகசந்தேசம் என்னும் தெலுங்கு படத்திலிருந்து கே ஜே யேசுதாஸ், பி சுசீலா பாடிய பாடல்.
அந்தப் பாடலை பல நாட்களுக்குப் பிறகு நான் கேட்க நேர்ந்தபோது எனக்கு அது பிடிக்காமல் போனது! காரணம் கே ஜி ஜவர்லால்!
இதே பாடலை அஷ்டபதி சீரிஸில் பாலமுரளி ஒரு மாதிரி பாடுவார். எனக்கு அது மி...க....வு...ம் பிடிக்கும்! பாலமுரளியின் அஷ்டபதி கேசெட் எனக்கு இஷ்டமான ஒன்று.
இப்போது அடுத்த உதாரணம். இதுதான் இன்றைய வெள்ளி வீடியோ. இதுவும் நீங்கள் பெரும்பாலானோர் அறிந்ததுதான். சில நாட்களுக்கு முன்னால் சூப்பர் சிங்கர் ஜூனியரில் ஸ்பூர்த்தி பாடிய பாடல்.
ராகங்கள் மாறுவதில்லை என்னும் படத்தில் இளையராஜா இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல் "விழிகள் மீனோ மொழிகள் தேனோ.. நிலவின் மகளே நீதானோ " என்னும் பாடல். அந்தப் படம் சிவாஜியின் 'இருவர் உள்ளம்' படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்டது. 'இருவர் உள்ளம்' எழுத்தாளர் லக்ஷ்மியின் பெண்மனம் நாவலை அடிப்படையாகக் கொண்டது.
ஸ்பூர்த்தி இந்தப் பாடலை போட்டிக்காக தெரிவு செய்து பாடியதும்தான் அவருக்கும் நமக்கும் இந்தப் பாடல் மீண்டும் நினைவுக்கு வந்தது.
காணொளியில் ஸ்பூர்த்தியின் குரலில் இனிமையான இந்தப் பாடலையும், எஸ் பி பியின் உணர்ச்சி வெள்ளத்தையும் பாருங்கள்.
விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ பூக்களின் மேலே தேவதை போலே நீந்தி வரும் முகிலோ ஓ…..ஓ…
விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ
குழலில் மேகம் குடியிருந்தாலும் விழியில் ஏதோ புது வித தாகம் பௌர்ணமி பார்வை பொழிகிறதே மனம் தனில் இன்பம் வழிகிறதே பெண்மையின் பாகம் தாமரையாகும் பெண்மையின் பாகம் தாமரையாகும் இடையின் பாகம் நூலாகும்
விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ பூக்களின் மேலே தேவதை போலே நீந்தி வரும் முகிலோ நிஸ நிரிதம கம தமக
அடடா கால்கள் அழகிய வாழை நினைத்தால் மணக்கும் ரகசியச் சோலை நகங்கள் யாவும் பிறை நிலவு இவள் தான் இங்கே கலை நிலவு நாயகி பாதம் நாயகன் வேதம் நாயகி பாதம் நாயகன் வேதம் நீயே காதல் தேவாரம்
விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ பூக்களின் மேலே தேவதை போலே நீந்தி வரும் முகிலோ ஓ… ஓ…
பிற்சேர்க்கை 2 : ஒரிஜினல் பாடல். பாடலில் ஒலியின் தரம் கொஞ்சம் கம்மிதான். பாடலின் ராகம் கல்யாணி என்று கீதா ரெங்கன் உதவி இல்லாமலேயே சொல்லி விடுவேன். இந்தப் பாடலைக் கேட்கும்போதே வேறு கல்யாணி ராகப் பாடல்களாக வந்தாள் மகாலக்ஷ்மியே உள்ளிட்ட சில பாடல்கள் நினைவுக்கு வரும்.
ஸ்பூர்த்தி புராணம் என்றில்லை. ஒரு பாடலை வெவ்வேறு விதங்களில் ரசிக்க முடிகிறது என்று சொல்ல வந்தேன். KGJ பாடிய ராதிகா பாடலையும் இணைக்க எண்ணியிருந்தேன். கிடைக்கவில்லை.
ஸ்ரீராம், பாலமுரளி பாடியது மிகவும் பிடித்தது. முதலில் பகிர்ந்த பாடல் ஓகே பிடித்திருக்கிறது குரல் நன்று என்றாலும் - இதை இப்பதான் முதன் முதலாகக் கேட்கிறேன் - பாலமுரளி பாடியது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நீங்கள் சொல்லியிருப்பது போல் முதலில் நாம் கேட்டு மனதில் படிந்துவிட்டால் அதுதான் பிடித்துப் போகும் என்பதாக இருக்கலாம். ஆனால் இப்படியானதில் ஒரு சில மாறியும் அமையும். ஒரிஜினலை விட அதை வேறு ஒருவர் பாடியது ரொம்பப் பிடித்துப் போகும்...நீங்க சொல்லிருப்பது போல்
பாலமுரளியின் அந்த அஷ்டபதி சங்கீதா கேசெட் எங்கள் வீட்டில் நான் கேட்டுக்கிட்டே தேய்ந்திருக்கும்! எல்லாப் பாடல்களுமே நன்றாயிருக்கும். அதேபோல பத்ராச்சல ராமதாசர் கீர்த்தனைகள், மற்றும் புரந்தரதாசர் கீர்த்தனைகள்
ஆமாம் நானும் டேப்பில் தான் - என் மூன்றாவது மாமா சங்கீதப் பிரியர். அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஒவ்வொரு வார விடுமுறைக்கும் ஊருக்கு வரப்ப அவர் நிறைய கேஸட்கள் வாங்கி வீட்டில் ரூமில் போடுவார். அந்த கலெக்ஷனில் கேட்டிருக்கிறேன். மற்றவை சென்சார்ட்!!!!
ஸ்ரீராம், ஸ்பூர்த்தி பாடிய இந்தப் பாடலை ரொம்ப ரசித்திருக்கிறேன். அந்த வயசுல இப்படி ஒரு உணர்வுபூர்வமான குரலில் எஸ் பி பி எப்படிப் பாடியிருப்பாரோ அப்படியே பாடியிருப்பார்....நான் வியந்து ரசித்த பாடல் ஸ்ரீராம். அழகான பாடல் கல்யாணி அதை விட தலைவர் பாடியது அந்தக் குழைவு எந்தென்ந்த இடங்களில் வேண்டுமோ அங்கு....அதை அப்படியே ஸ்பூர்த்தி அந்தச் சின்ன வயசுல கொண்டு வந்து பாடியதை பிரமிப்போடு கேட்டேன் இப்பவும்.
இப்ப ஸ்பூர்த்தி வளர்ந்து மிகத் திறமையாகக் கச்சேரி செய்கிறார். அதுவுமே பிரமாதமாக இருக்கிறது.
ஸ்பூர்த்தி பாடியதும் (முன்னரே இதைப் பார்த்திருக்கிறேன் அப்பவே) எனக்குக் கண்ணில் என்னை அறியாமல் நீர் துளிர்த்தது என்று பார்த்தால் எஸ் பி பியும் கண்ணைத் துடைத்துக் கொள்கிறார்!
தான் பாடிய பாடலை அக்குழந்தை பாடுவதை எப்படி ரசிக்கிறார் பாருங்க....எனக்கு எஸ் பி பியிடம் மிக மிகப் பிடித்த குணம் இது. தான் டாப்பில் இருந்தாலும், மற்றவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் குணம். அதுவும் வெளிப்படையாகவே. தனக்குக் கூட வராது என்று சொல்லி! இதில் ஸ்பூர்த்தியை ரசித்தது போல எஸ் பி பியையும் ரொம்ப ரசித்தேன். இப்பவும் ரசித்தேன். உண்மையை சொல்லணும்னா அப்போ இது வெளிவந்தப்ப இந்த வீடியோவையும் இன்னும் சில வீடியோக்களை எஸ்பிபி இப்படி ரசித்து ஸ்லாகித்துப் பாராட்டும் தானும் அதைப் பாடிப் பார்ப்பதை நிறைய பார்த்ததுண்டு,
'அட' என்று சில இடங்களில் பிரமித்து நான் ரசிக்கும் போதே அங்கு வீடியோ திரும்பி எஸ்பிபி ரசிப்பதைக் காட்டும் நான் மீண்டும் ;அட!' என்று எனக்குள் சொல்லிக்குவேன்!
அக்குழந்தை ஸ்வரங்கள் பாடும் போதும் மேலே போகும் போது இடது கையை அழகா கொண்டு செல்லும் எவ்வளவு லயித்துப் பாடுகிறாள் என்று நினைப்பேன். அப்படி நான் ரசித்த ஒரு இடம் "அடடா கால்கள் அந்த வரி பாடும் போது கை விரல்களை கமகத்திற்கு ஏற்ப முன்னும் பின்னும் அசைக்கும் அந்த இடம், ஆஹா நான் ரொம்ப ரசித்த ஒன்று.
அதே அதே ஸ்ரீராம்....ஆஹா! அது என்னமான ஒரு பாடல் அதுவும் மேடையில் அவர் பாடியது அசாத்தியமா இருக்கும்...அனுராதா ஸ்ரீராம் வியந்து உணர்வுப்புர்வமாக ரசிப்பார்...கூட்டமே தான்!!
என்னிடம் வைத்திருந்த ஆடியோ இல்லை. காணோம். இப்போது ஒன்று பாதித்த தரச்சொல்லிக் கேட்டேன். உடல்நிலை சரியில்லாததால் ஜவர்லாலாலும் பாடிக்கொடுக்க முடியாத நிலைமை.
ஸ்பூர்த்தி புராணமா?
பதிலளிநீக்குஎஸ் பி பி எப்படி வேதம் என்ற வார்த்தையை குழைவுகளின்றி உச்சரித்தார் என்பதையெல்லாம் விளக்கியது நினைவுக்கு வருது. நல்ல பாடல் பகிர்வு
வாங்க நெல்லை....
நீக்குநேற்று காணோம் போல.....
ஸ்பூர்த்தி புராணம் என்றில்லை. ஒரு பாடலை வெவ்வேறு விதங்களில் ரசிக்க முடிகிறது என்று சொல்ல வந்தேன். KGJ பாடிய ராதிகா பாடலையும் இணைக்க எண்ணியிருந்தேன். கிடைக்கவில்லை.
நேற்று பதிவு படித்துவிட்டேன், காலையிலேயே. ஆனால் கருத்திட நேரம் கிடைக்கவில்லை
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஸ்ரீராம், பாலமுரளி பாடியது மிகவும் பிடித்தது. முதலில் பகிர்ந்த பாடல் ஓகே பிடித்திருக்கிறது குரல் நன்று என்றாலும் - இதை இப்பதான் முதன் முதலாகக் கேட்கிறேன் - பாலமுரளி பாடியது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நீங்கள் சொல்லியிருப்பது போல் முதலில் நாம் கேட்டு மனதில் படிந்துவிட்டால் அதுதான் பிடித்துப் போகும் என்பதாக இருக்கலாம். ஆனால் இப்படியானதில் ஒரு சில மாறியும் அமையும். ஒரிஜினலை விட அதை வேறு ஒருவர் பாடியது ரொம்பப் பிடித்துப் போகும்...நீங்க சொல்லிருப்பது போல்
பதிலளிநீக்குகீதா
பாலமுரளியின் அந்த அஷ்டபதி சங்கீதா கேசெட் எங்கள் வீட்டில் நான் கேட்டுக்கிட்டே தேய்ந்திருக்கும்! எல்லாப் பாடல்களுமே நன்றாயிருக்கும். அதேபோல பத்ராச்சல ராமதாசர் கீர்த்தனைகள், மற்றும் புரந்தரதாசர் கீர்த்தனைகள்
நீக்குஆமாம் நானும் டேப்பில் தான் - என் மூன்றாவது மாமா சங்கீதப் பிரியர். அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஒவ்வொரு வார விடுமுறைக்கும் ஊருக்கு வரப்ப அவர் நிறைய கேஸட்கள் வாங்கி வீட்டில் ரூமில் போடுவார். அந்த கலெக்ஷனில் கேட்டிருக்கிறேன். மற்றவை சென்சார்ட்!!!!
நீக்குகீதா
அப்ப ரேடியோவிலும் பத்ராசல கீர்த்தனைகள் பாலமுரளி பாடியது போடுவாங்க அதுவும் இப்படிக் கேட்டதுண்டு.
நீக்குகீதா
என் நண்பர் சுகுமார் சங்கீதா கெஸெட்ஸ் எல்லா இசைக் கலைஞர்களும் வாங்குவார். நான் அதை சாதா எம்டி கேசெட் வாங்கி காபி எடுத்து விடுவேன்!
நீக்குநான் ரேடியோவில் கேட்ட நினைவு இல்லை.
நீக்குஸ்ரீராம், ஸ்பூர்த்தி பாடிய இந்தப் பாடலை ரொம்ப ரசித்திருக்கிறேன். அந்த வயசுல இப்படி ஒரு உணர்வுபூர்வமான குரலில் எஸ் பி பி எப்படிப் பாடியிருப்பாரோ அப்படியே பாடியிருப்பார்....நான் வியந்து ரசித்த பாடல் ஸ்ரீராம். அழகான பாடல் கல்யாணி அதை விட தலைவர் பாடியது அந்தக் குழைவு எந்தென்ந்த இடங்களில் வேண்டுமோ அங்கு....அதை அப்படியே ஸ்பூர்த்தி அந்தச் சின்ன வயசுல கொண்டு வந்து பாடியதை பிரமிப்போடு கேட்டேன் இப்பவும்.
பதிலளிநீக்குஇப்ப ஸ்பூர்த்தி வளர்ந்து மிகத் திறமையாகக் கச்சேரி செய்கிறார். அதுவுமே பிரமாதமாக இருக்கிறது.
கீதா
ஸ்பூர்த்தி இப்போது எப்படி பாடுகிறார் என்று நான் கேட்டதில்லை. திறமையாக, நன்றாக பாடுவார் என்று நம்புகிறேன்.
நீக்குஸ்பூர்த்தி ரொம்ப நன்றாகப் பாடுகிறார், ஸ்ரீராம். கச்சேரிகளில். சினிமாவில் பாடுகிறாரா என்று தெரியலை. இல்லைன்னே நினைக்கிறேன்.
நீக்குகீதா
நான் கேட்டதில்லை.
நீக்குஸ்பூர்த்தி பாடியதும் (முன்னரே இதைப் பார்த்திருக்கிறேன் அப்பவே) எனக்குக் கண்ணில் என்னை அறியாமல் நீர் துளிர்த்தது என்று பார்த்தால் எஸ் பி பியும் கண்ணைத் துடைத்துக் கொள்கிறார்!
பதிலளிநீக்குதான் பாடிய பாடலை அக்குழந்தை பாடுவதை எப்படி ரசிக்கிறார் பாருங்க....எனக்கு எஸ் பி பியிடம் மிக மிகப் பிடித்த குணம் இது. தான் டாப்பில் இருந்தாலும், மற்றவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் குணம். அதுவும் வெளிப்படையாகவே. தனக்குக் கூட வராது என்று சொல்லி!
இதில் ஸ்பூர்த்தியை ரசித்தது போல எஸ் பி பியையும் ரொம்ப ரசித்தேன். இப்பவும் ரசித்தேன். உண்மையை சொல்லணும்னா அப்போ இது வெளிவந்தப்ப இந்த வீடியோவையும் இன்னும் சில வீடியோக்களை எஸ்பிபி இப்படி ரசித்து ஸ்லாகித்துப் பாராட்டும் தானும் அதைப் பாடிப் பார்ப்பதை நிறைய பார்த்ததுண்டு,
'அட' என்று சில இடங்களில் பிரமித்து நான் ரசிக்கும் போதே அங்கு வீடியோ திரும்பி எஸ்பிபி ரசிப்பதைக் காட்டும் நான் மீண்டும் ;அட!' என்று எனக்குள் சொல்லிக்குவேன்!
அக்குழந்தை ஸ்வரங்கள் பாடும் போதும் மேலே போகும் போது இடது கையை அழகா கொண்டு செல்லும் எவ்வளவு லயித்துப் பாடுகிறாள் என்று நினைப்பேன். அப்படி நான் ரசித்த ஒரு இடம் "அடடா கால்கள் அந்த வரி பாடும் போது கை விரல்களை கமகத்திற்கு ஏற்ப முன்னும் பின்னும் அசைக்கும் அந்த இடம், ஆஹா நான் ரொம்ப ரசித்த ஒன்று.
ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்
கீதா
ஆஹா.. நான் ரசித்தது போலவே நீங்களும் ரசிக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி.
நீக்குஇதுபோல ரசிக்கும் இன்னொரு SPB நிகழ்ச்சி 'என் காதலே என் காதலே பாடல்...
உங்களுக்கும் தெரியும்!
அதே அதே ஸ்ரீராம்....ஆஹா! அது என்னமான ஒரு பாடல் அதுவும் மேடையில் அவர் பாடியது அசாத்தியமா இருக்கும்...அனுராதா ஸ்ரீராம் வியந்து உணர்வுப்புர்வமாக ரசிப்பார்...கூட்டமே தான்!!
நீக்குகீதா
அருமை..
பதிலளிநீக்குஇதற்கு முன்பு கேட்டதில்லை..
சிறப்பு
நன்றி செல்வாண்ணா...
நீக்குஇனிமை...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குமுதலாவது பாடல் எனக்கு புதியது.
பதிலளிநீக்குஇப்பொழுதுதான் கேட்கிறேன்.இரண்டுமே நன்றாக உள்ளது.
எஸ் பி .பி பாடல் கேட்டிருக்கிறேன்.ஸ்பூர்தி இப்பொழுதுதான் அறிகிறேன்.
நன்றி மாதேவி.
நீக்குஎல்லா காணொளியும் கண்டேன் சிறப்பு ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குமுதல் பாடல் இப்போது தான் கேட்கிறேன், பாலமுரளி அவர்கள் பாடியதையும் கேட்டேன். நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉங்கள் மாமா பாடியதையும் இணைத்து இருக்கலாம்.
அடுத்த பாடல் ஸ்பூர்த்தி பாடியது பாலசுப்பிரமணியம் அவர்கள் ரசிப்பது எல்லாம் முன்பே பார்த்து இருக்கிறேன்.
மீண்டும் கேட்டு, பார்த்து ரசித்தேன்.
சினிமாவில் பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியதையும் கேட்டேன்.
பாடல் பகிர்வுக்கு நன்றி.
என்னிடம் வைத்திருந்த ஆடியோ இல்லை. காணோம். இப்போது ஒன்று பாதித்த தரச்சொல்லிக் கேட்டேன். உடல்நிலை சரியில்லாததால் ஜவர்லாலாலும் பாடிக்கொடுக்க முடியாத நிலைமை.
நீக்குநன்றி கோமதி அக்கா.