திடீரென்று சில பழக்கங்களை நாம் ஏற்படுத்திக் கொள்வோம் தெரியுமா...
சிறு வயதில் சபரிமலைக்கு மாலை போட்டவர்களைக் கண்டால் நானும் என் சகோதரியும் வாய் விட்டு 'சாமியே சரணம் ஐயப்பா' என்று சொல்வோம். சிலமுறை அவர்கள் காதில் அது பட்டு அவர்களும் பதில் சொல்வதைக் கேட்டு கூச்சப்பட்டு, எங்களுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் 'சாமியே சரணம் ஐயப்பா' என்று மூன்று முறை சொல்வோம். புண்ணியம் அதிகமாக கிடைக்கும் என்று ஒருமுறை என்பதை மூன்று முறை என்று ஆக்கியிருந்தோம்.
ஐயப்ப பூஜைகளில் அவர்களின் சரண கோஷம் கேட்டு அவர்கள் போல நாங்களும் ஸ்வாமியின் நாமத்தைச் சொல்ல வேண்டும் என்றே அப்படிச் செய்தோம். ஒரு கட்டத்தில் இன்று எவ்வளவு மாலை அணிந்தவர்களைப் பார்த்தோம் என்று போட்டி ஏற்பட்டது. சில சமயங்களில் அங்கு இருந்த சூழலில் சொல்ல முடியவில்லை. கூட்டமாக நான்கைந்து பேர்களை பார்த்தோம் என்று சொல்லி வீட்டுக்கு வந்து ஐந்து என்றால் ஐந்து X மூன்று, 15 முறை சொல்வோம்.
வயது ஏற ஏற மெல்ல அந்தப் பழக்கம் குறைந்தாலும் அப்படி நிறுத்துவது பெரிய தெய்வ குற்றம்போல் மனதில் பட்டு நிறுத்துவதற்கு கொஞ்ச காலம் சிரமப்பட்டோம்.
இப்போதும் மாலை அணிந்தவர்களைப் பார்த்தால் சட்டென இந்த வழக்கம் மனதில் வந்துபோகும். 'ஸ்வாமியே சரணம் ஐயப்பா' என்று மனதுக்குள் வாசகம் ஓடும்.
அதுபோல,
என் பதின்ம வயதுகளில் யாரோ சொன்னார்கள், வாகனங்களுக்கு இருக்கும் பதிவு எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பது என்று இருந்தால் விசேஷம். காசு அதிகம் கொடுத்தாவது அப்படி அமைவதுபோல் பார்த்து பார்த்துதான் வாங்குவார்கள் என்று சொன்னார்கள்.
இதில் என்ன நம்பரை எப்படி கூட்டுவீர்கள்!
அவ்வளவுதான்...
சாலையில் தாண்டிச் செல்லும் வாகனங்களை எல்லாம் ஆராய்ந்து பதிவு எண்ணின் கூட்டுத் தொகையை பார்ப்பது வழக்கமானது. காலங்கள் செல்லச் செல்ல நடுநடுவில் அது குறைந்தாலும், இன்றும் சாலையில் வாகனங்களின் எண்ணைக் கண்கள் பார்த்ததும் மனம் கூட்டத் தொடங்கிவிடும்! சமயங்களில் வரிசையாக தாண்டிச் செல்லும் வாகனங்களின் கூட்டுத்தொகை எதிர்பாராமல் ஒரே எண்ணே வந்து ஆச்சரியப்படுத்தும்.
மனதுக்குள் அவ்வப்போது ஒரு அலுப்பும் தோன்றும். எனினும் இந்த பழக்கத்தையும் நிறுத்த முடியாமல் தொடர்வது இன்றும் வாடிக்கையாகி விட்டது. அப்படி நிறுத்தினால் கைவிரல்கள் ஆடும்! தாவாங்கட்டை வலிப்பது போல இருக்கும். மண்டைக்குள் விர்ரென்று இருக்கும்!!! மனம் அடுத்த விஷயத்துக்கு நகராமல் ஏதோ அரியர் வைத்தது போல ஒரு இடத்தில தடுக்கி நின்று தவிக்கும்!
சொல்ல மறந்து விட்டேனே...
ஒன்பதாம் நம்பர் மட்டுமல்ல மூன்று கூட நல்ல எண் என்றார்கள். அப்புறம் ஒற்றைப்படை என் ஓகே என்றார்கள். அப்புறம் இரட்டைப்படை கூட ஓகே தான், ஆனால் எட்டு மட்டும் கூடாது என்றார்கள்.
கூட்டுத்தொகை பார்க்கும்போது இவை யாவும் மனதில் வந்து போகும்!
இதைப்பற்றிச் சொன்னபோது மருமகள் சொன்னாள், கல்லூரியில் படிக்கும்போது பஸ்ஸில் செல்கையில் எதிரில் எத்தனை வாகனங்கள் வருகின்றன தோழிகள் ஒவ்வொருவரும் என்று கணக்கெடுப்பார்களாம். போட்டி என்ன என்றால் ஒருவருக்கொருவர் சரிபார்க்கும்போது ஆட்டோ, எவ்வளவு, இருசக்கர வாகனம் எவ்வளவு, பஸ் எவ்வளவு லாரி எவ்வளவு என்று கணக்கு சொல்ல வேண்டுமாம்!
===========================================================================================
நியூஸ் ரூம் - பானுமதி வெங்கடேஸ்வரன்
- ராய்ப்பூர்: உணவுக் கட்டுப்பாடு மற்றும் பாரம்பரிய சிகிச்சையால் புற்றுநோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக கூறிய விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மனைவிக்கு ரூ.850 கோடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. - குன்னுார்: மேட்டுப்பாளையத்தில் இருந்து, குன்னுாருக்கு, 6 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, மலை ரயிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாடகைக்கு எடுத்து வந்தனர்.
- குரூப்1, 1 பி முதன்மைத் தேர்வை கருப்பு மை பேனாவில் மட்டுமே எழுத வேண்டும் எனவும், கருப்பு மை பேனாவை தவிர மற்ற பேனாவை உபயோகித்தால் அந்த விடைத்தாள் செல்லாது என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
- சென்னை: வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுத் தருவதாக கூறி, கலவையைச் சேர்ந்த தம்பதியிடம் ரூ. ஐந்து லட்சம் தர வேண்டும் என்று பேசி முடித்த மஞ்சு என்னும் பெண் தரகரும் அதற்கு உடன்பட்ட பெண்ணும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
- பெங்களூரு: பெண் தொழிலதிபரை விசாரணையின்பொழுது ஆடையைக் களைந்து அவமதித்ததால் அந்த பெண் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை.
- நியூபோர்ட், இங்கிலாந்து: ஹேவல்ஸ் என்பவர் 2009 ஆம் ஆண்டு 8000 பிட்காயின்களை வாங்கி தன்னுடைய அப்போதய காதலி வீட்டில் வைத்திருக்கிறார். காதலியை பிரிந்த அவர் தான் பிட் காயின்கள் வாங்கியதை மறந்தும் போய்விட்டார். அவற்றின் இன்றைய மதிப்பு 569 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் ₹5900 கோடி). அந்த பிட் காயின்களை முன்னாள் காதலியிடமிருந்து திரும்ப பெற அவரை அணுகிய பொழுதுதான் அவள் வீட்டை ஒழிக்கும் பொழுது பிட்காயின்கள் மற்றும் அதன் டிஜிட்டல் கீ அடங்கிய ஹார்ட் டிஸ்கையும் குப்பையில் வீசியது தெரிய வந்திருக்கிறது. குப்பையைக் கிளறி தன் ஹார்ட் டிஸ்கை தேடித்தரும்படி அந்த ஊர் முனிசிபாலிடியை நாடியுள்ளார், அவர்கள் கை விரிக்க கோர்டில் விண்ணப்பித்திருக்கிறார்.
- ஒரு வங்கி கணக்கிற்கு நான்கு நாமினிகளை நியமிக்கலாம். புதிய சட்டம் மக்களவையில் நிறைவேறியது.
பிறக்கும்போதே பறக்க அனுமதி...
- திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் எம்.பி., சசி தரூரின் மடியில் வந்து அமர்ந்து குரங்கு ஒன்று, வாழைப்பழத்தை சாப்பிட்டு, அவரது மடியிலேயே குட்டித் தூக்கம் போட்ட நிகழ்வு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த 104 வயது முதியவருக்கு கருணை அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளது. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
மறுபடியும் RV யின் 'சிலிக்கான் ஷெல்ப்' பக்கத்திலிருந்து...
கல்கிக்கும் புதுமைப்பித்தனுக்கும் ஒரு காலத்தில் குடுமிப்பிடி சண்டை நடந்திருக்கிறது.
கல்கி விகடனை விட்டு விலகி கல்கி பத்திரிகையை ஆரம்பித்திருந்த தருணம். எஸ்.எஸ். வாசன் எடுத்த மங்கம்மா சபதம் திரைப்படத்தை கல்கி கன்னாபின்னா என்று தாக்கி இருந்தாராம். அது ஒரு ஆபாசக் கதை என்பதுதான் அவர் விமர்சனத்தின் சாரம். (ஒரு ஆபாசமும் இல்லை, ஆனால் மோசமான திரைப்படம் என்பது என் கருத்து) புதுமைப்பித்தன் இதில் ஒரு ஆபாசமும் இல்லை, உமக்கு ரசனை இல்லை என்று திருப்பித் தாக்கி இருக்கிறார்.
அப்போது கல்கி காப்பி அடித்து எழுதியவை என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறார். புதுமைப்பித்தனின் முக்கிய விமர்சனம் கல்கி அவற்றை தழுவல் என்று சொல்லாமல் காப்பி அடித்திருக்கிறார் என்பதுதான். சரிதானே! ஆனால் இந்த சண்டையின் போது கல்கி தான் ஒரு ஏழெட்டு சிறுகதைகளை தர்ஜுமா செய்து எழுதி இருக்கிறேன் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். புதுமைப்பித்தனோ நீர் எழுதிய எல்லாமே அப்படித்தான் என்று ஒரு அடி அடித்திருக்கிறார்!
என்னைப் பொறுத்த வரையில் தழுவலில் ஒரு தவறுமில்லை. ஆனால் மூலத்திற்கு குறைந்தபட்ச அங்கீகாரமாவது தரப்பட வேண்டும்.
இந்த மாதிரி வம்பு என்றால் எனக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான். அதனால் புதுமைப்பித்தன் போட்ட பட்டியல் கீழே.
- சாரதையின் தந்திரம் சிறுகதைத் தொகுப்பு - இதில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் சிசிர் குமார் கோஷ் எழுதிய "Glimpses of Indian Life" தொகுப்பில் உள்ளவற்றைத் தழுவியதாம்.
- புது ஓவர்சீயர் சிறுகதை - இது பிரேம்சந்தின் நமக் கா டரோகா சிறுகதையின் அப்பட்டமான காப்பி. (நான் இரண்டையும் படித்திருக்கிறேன். மோசமாக காப்பி அடித்திருக்கிறார், பிரேம்சந்தின் அருகே கூட வரமுடியவில்லை.)
- காங்கிரஸ் ஸ்பெஷலில் கோர சம்பவம் - இது மார்க் ட்வெய்னின் Cannibalism in the Cars சிறுகதையின் அப்பட்டமான காப்பி. (மூலமும் சரி, தழுவலும் சரி, என்னைக் கவரவில்லை.)
- ஏட்டிக்குப் போட்டி - இதில் பல கட்டுரைகள் ஜெரோம் கே. ஜெரோமின் Three Men in a Boat புத்தகத்திலிருந்து சுட்டவையாம்.
- வீணை பவானி - பால்சாக்கின் Opera Singer சிறுகதையின் தழுவலாம்
புதுமைப்பித்தனால் இவ்வளவுதான் சொல்ல முடிகிறது என்றால் அது கல்கியின் output-இல் ஒரு சிறு பகுதிதான். அதே நேரத்தில் ஏட்டிக்குப் போட்டியால்தான் அவரால் விகடனில் நுழைய முடிந்தது, அவரது வெற்றிக்கு முதல் படி அதுதான். கல்கியை நான் நல்ல எழுத்தாளர் என்பதை விட நல்ல பத்திரிகையாளர் என்றே மதிப்பிடுகிறேன். என் கண்ணில் பொ. செல்வனும் சில பல கட்டுரைகளும் மட்டுமே அவரது எழுத்தில் கால வெள்ளத்தில் நிற்கும். சி. சபதம், பா. கனவு, அலை ஓசை எல்லாம் வெளியான காலத்தில் வெற்றி பெற்றவைதான், ஆனால் அவை எல்லாம் எதிர்காலத்தில் மறக்கப்படும் என்றுதான் தோன்றுகிறது. புதுமைப்பித்தன்? நவீனத் தமிழின் முதல் மேதை எழுத்தாளர், என்றும் அழியாத சிறுகதைகளை எழுதினார்...
புதுமைப்பித்தனே சுப்பையா பிள்ளையின் காதல்கள் சிறுகதையை வால்டர் மிட்டியை தழுவி எழுதி இருக்கலாம். இரண்டுமே சாதனைகள்தான், ஆனால் புதுமைப்பித்தன் அனாயாசமாக ஜேம்ஸ் தர்பரை தாண்டி செல்கிறார். மேதை!
தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம், புதுமைப்பித்தன் பக்கம்
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
இந்த விடியோவை எத்தனைபேர் பார்த்தீர்கள்? பார்த்திருக்கிறீர்கள்? நான் இங்கு வீடியோ இணைக்கவில்லை. அவர் பாடும் அந்த வரிகளின் பொருள் ஒரு இடத்தில கொடுக்கப் பட்டிருந்தது. அதைத்தான் ஷேர் செய்திருக்கிறேன்.
M āori மொழியில் "kamatee kamate hao" என்ற வார்த்தைகள் பாரம்பரிய போர் பாடலான ஹாகாவின் ஒரு பகுதியாகும். இந்த வாக்கியங்கள் நியூசிலாந்தின் மோரி கலாச்சாரத்தின் முக்கிய பகுதியான பிரபல ஹகா "கா மேட்" இருந்து எடுக்கப்பட்டவை. இந்த பாடல் M āori பழங்குடியின வீரர்களின் ஒற்றுமை, வலிமை, மற்றும் உற்சாகம் ஆகிய பாடலாகும். வெளிப்படுத்த பாடப்பட்டது. "கா மேட்" என்பதன் பொருள் மற்றும் மொழிபெயர்ப்பு:
இந்த பாடலை அசலாக மாவோரி பழங்குடியின தலைவர் தே ராவுபராஹாவால் இயற்றப்பட்டது. அதன் சில ஆரம்ப வார்த்தைகளும் அதன் உருது மொழிபெயர்ப்பும் பின்வருமாறு:
கா மேட்! கா மேட்!
"நான் இறக்கிறேன்! " நான் இறக்கிறேன்! "
கா ஓரா! கா ஓரா!
"நான் உயிரோடு இருக்கிறேன்! நான் உயிரோடு இருக்கிறேன்! "
Tenei Te Tangata Puhuruhuru
"இதுதான் அந்த வலிமையான மனிதர்! "
Nana Nei I Tiki Mai Whakawhiti Te Ra
"சூரியனை மீண்டும் பிரகாசிக்க வைத்தவர் யார்! "
பயத்தையும் மரணத்தையும் வென்று உயிர் திரும்பிய உணர்வை வெளிப்படுத்தும் பாடல், போர்க்களத்தில் தைரியத்தை உயர்த்த பாடப்பட்டது.
ஆராய்ச்சி.
==================================================================================
சுஜாதாவின் முதல் கதை குமுதத்தில் அதிர்ச்சி அதிர்ச்சி என்ற பெயரில் வெளியானது. அதற்கு முன்னர் நண்பரின் கதை ஒன்றை திருத்தி அவர் பெயரில் அனுப்பி இருக்கும்போது அது வெளியாகிவிட்ட சந்தோஷம். ஆனால் அப்புறம் அவர் எழுதிய கதை பிரசுரமாக விட்டாலும் சலிக்காமல் தொடர்ந்த முயற்சியில் அதிர்ச்சி வெளியானது.
இதுவரை அவற்றை சுஜாதா தொகுப்புகளில் பார்த்திருப்போமா என்பது சந்தேகம். இன்னொரு வேடிக்கை, இந்த சமயத்தில் நடந்த ஒரு வேடிக்கை சம்பவத்தையும் சொல்லுகிறார்.
வெகுஜன பத்திரிகைகளை சுஜாதா என்ற பெயரில் கதைகள் எழுதி வந்தவர் கணையாழியில் ஸ்ரீரங்கம் எஸ் ஆர் என்ற பெயரில் விமர்சன கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் வாசகர்களுக்கு இவர்தான் அவர், அவர்தான் இவர் என்று அப்போது தெரியாது.
கணையாழியின் ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் சுஜாதாவின் நெருங்கிய நண்பர் என்பதால் சுஜாதாவுக்கு நிறைய சுதந்திரம். அந்நாளில் தனக்கான பகுதியில் சுஜாதாவையே கிண்டல் அடிப்பார். உதாரணத்திற்கு இரண்டு... சென்ற மூன்று இதழ்களில் சொந்த வேலையாய் கலிபோர்னியா வரை சென்றிருந்ததால் என்னால் இந்த பகுதிக்கு எழுத முடியவில்லை. சுஜாதா என்கிறவரும் ஆண்டாளு அம்மாள் என்கிறவரும் இந்த பகுதியில் இடம் பெற்று இருக்கிறார்கள். முன்னவர் ஏதோ சிறுகதை எழுதுகிறவர். படித்ததில்லை. அடுத்தவரை தெரியாது என்று கிண்டல் அடித்திருக்கிறார்.
இதில் ஆண்டாளம்மாள் என்று நிஜமாகவே எழுதினார்களா என்றும் நமக்கு தெரியாது. இவர் அவ்வாறு பெயர் ஒன்றை சொல்கிறார். இதில் கலிபோர்னியா சுஜாதாவின் உட்டாலக்கடி சுஜாதாவை படித்ததில்லை என்பது இன்னும் குறும்பான உட்டாலக்கடி.
இன்னொரு முறை சுஜாதாவை ஸ்ரீரங்கம் எஸ் ஆர் சந்திப்பது போல எழுதியிருக்கிறார். இந்த எழுத்தாளரை சமீபத்தில் நான் சந்தித்தபோது நடந்த சம்பாஷணையில் 'ஐ ஹேட் தி லாஸ்ட் வேர்ட்'.
அறிமுகப்படுத்தியவர் : 'இவர் தான் ஸ்ரீரங்கம் எஸ் ஆர்'
சுஜாதா : 'அப்படியா சந்தோஷம்'
இவர் அறிமுகப்படுத்தியவர் மறுபடி : 'இவர்தான் கணையாழியில் நீர்க்குமிழிகள்; பெட்டி; கடைசி பக்கம் எல்லாம் எழுதுகிறவ.ர் .
சுஜாதா : 'அப்படியா நான் படித்ததில்லை'
நான் : 'நானும் உங்கள் கதைகளை படித்ததில்லை'
சுஜாதா : யூ ஹேவண்ட் மிஸ்ட் மச்
நான் : பட் யூ ஹேவ்.
இதில் கணையாழியில் சுஜாதா நீர்க்குமிழி பட்டி என்று ஒன்று எழுதினாரா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று
==============================================================================
திரு காரைக்குடி நாராயணன் பேட்டியிலிருந்து...
கலைஞர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள்.
அச்சாணி படத்தில் ;'இடம்பெற்ற 'மாதா உன் கோவிலில்' பாடல் வரிகளின் கனம் தாங்காமல் அதைப் பாட முடியாமல் எஸ் ஜானகி அழுதாராம். அவரை சமாதானப்படுத்தவே முடியவில்லையாம். தேற்றிக் கொண்டு வந்து பாட கொஞ்சம் நேரம் கேட்டாராம்.
நேரம் இல்லை என்று சொல்லி பாட வைத்து எடுத்தார்களாம். அதுவும் இரண்டு பாடல்களை ஒரு மணி நேரத்தில். இது இளையராஜாவின் சாதனை.
இதே பாடலின் காட்சியில் நடிக்கும் சமயம் லக்ஷ்மி இயக்குனர் சொல்லலித் தராத மூவ்மெண்ட் ஒன்றைக் கொடுத்தாராம், அதுவும் மறுபடி மறுபடி! காரைக்குடி நாராயணன் லக்ஷ்மியை அழைத்துக் கேட்கும்போது 'தனக்கும் குழந்தை இல்லை (அந்த சமயம்) கர்ப்பம் ஆனதும் கலைந்து போனது.. இந்த வரிகளில் எனது உணர்ச்சியையும் கலக்கிறேன்... எனக்கும் ஒரு வழி பிறக்காதா' என்றாராம்.
===============================================================================================
==========================================================================================
பொக்கிஷம்
இப்படி எல்லாம் பத்திரிகை வந்ததுங்க.....
இப்படி எல்லாம் சினிமா வந்ததுங்க....
இன்றைய வியாழன் பகுதிகள் சிறப்பு. ஒவ்வொன்றும் வித்தியாசமான டாபிக்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... நன்றி.
நீக்குஒருமுறை இடொதுக்கீடோ இல்லை சலுகையோ கொடுத்துவிட்டால் அதை மாற்றவே முடியாது என்பது அம்பேத்காருக்கும் காந்தி நேருக்கும் தெரியவில்லை. நியூசிலாந்துக்கு அதன் பிரிட்டிஷ் முன்னோடிகளுக்கு மாத்திரம் தெரியுமா என்ன? பாடியதை அப்னோதே கேட்டேன்.
பதிலளிநீக்குஅது சரி.. அந்தப் பாட்டு மற்றும் அந்தப் பெண்ணின் அபிநயங்கள் மிக பயங்கரமாக இருக்கின்றனவே.... விரல்களை என்ன ஆட்டு ஆட்டுகிறார்...
நீக்குமுதலில் பார்த்தபோது நன்றாக இருந்தது. பிறகு செய்திகளையெல்லாம் படித்த பிறகு மீண்டும் காணொளி பார்த்தபோது அடாவடியாகத் தெரிந்தது. அது சரி... ஒரிஜினல் மவோரிகள் என்று யாரும் இல்லையாமே... பெரும்பாலும் பிரிட்டிஷாரின்/ஆங்கிலேயரின் கலப்பினமாமே.
நீக்குநான்தான் உங்களுக்கு அனுப்பி இருந்தேன் என்று நினைக்கிறேன். நமமவர்களும் இதைப் பார்த்து இதேபோல நிறைய சுஜார்ட் வீடியோ ரெடி செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இனி செய்வார்களோ என்னவோ... இதுவே அந்தப் படத்தை உபயோகித்து போட்டிருக்கும் ஜோக்தானே!
நீக்குஎனக்கும் கூட்டுத்தொகை ஒன்று வந்தால் ராசி என்ற எண்ணம் இப்போதும் உண்டு.
பதிலளிநீக்குசில சமயங்களில் இந்த கூட்டுத்தொகை சமாச்சாரம் நம் பிறந்த வருடம், நாள், தேதியின் கூட்டுத்தொகையோடு ஒத்துப்போகவேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கும்.
நீக்கு80கள் வரை வேறு பொழுதுபோக்குகள் இல்லாத்தால் பத்திரிகைகள் சக்கைப்போடு போட்டன. 2000 வரை புலனாய்வு என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் வராத அரசியல் மற்றும் விஷயங்களைப் பேசின. இப்போது பலவித ஊடகங்கள் இருப்பதால் பத்திரிகைக்கு மதிப்பில்லை.
பதிலளிநீக்குஊடகங்களையே யாரும் அவ்வளவு பொருட்டாக கருதுவதில்லை!
நீக்குசிறுவர்களின் குறும்புகளும் சேட்டைகளும் சில சமயங்களில் எரிச்சல் மூட்டினாலும் ரசிக்கத் தகுந்தவை. நான் சிறுவனாக இருந்தபோது நண்பர்களிடம் பேசும் தமிழே வேறு. அந்த பாஷை எங்கள் குழுவில் உள்ளவருக்கே புரியும்.
பதிலளிநீக்குபள்ளியில் மாந்தோபபு உண்டு. யாரும் ஒற்றர்கள் இல்லாத சமயத்தில் கல்லெறிந்து மாங்காய் அடிப்போம்.குழந்தை விளையாட்டு, சிறுவர் விளையாட்டு என்பதெல்லாம் தனி ரகம்.
பொறுக்கி எடுத்த செய்திகள் இன்றைய நியூஸ் ரூமில் இடம் பெற்றிருக்கின்றன. சசி தரூர் பற்றிய செய்தி திருவனந்தபுரத்தில் வசிக்கும் எனக்கே புதிய செய்தி. சம்பவம் டெல்லியில் என்று தோன்றுகிறது. காரணம் குரங்குகள் அதிகம் உள்ள இடம்.
எம் வி வி போன்றோர் சொல்லியபடி எழுத்து மட்டுமே தொழிலாகக் கொண்ட எழுத்தாளன் என்றுமே ஏழைதான். கல்கி பத்திரிக்கை ஆசிரியர் என்ற முறையில் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றார் என்பது உண்மை.
பாட்டுக்கு பாட்டு.
இளமையில் கல் என்றார்.
ஆம்
கல்லே மாங்காய் அடிக்க
தூண்டியது.
பொக்கிஷம் வித்தியாசம். ஜோக் இல்லாதது குறை. ஜோக்குகள் திகட்டுவது இல்லை.
நீங்கள் சொல்வது போல எங்களுக்குள்ளும் ஒரு பாஷை வைத்திருந்தோம் JKC ஸார்... இரண்டாம் எழுத்திலிருந்து தொடங்கி முதல் எழுத்தை கடைசி எழுத்தாய் முடிப்போம்.
நீக்குஉதாரணமாக 'நாளைக்கி நீ ஸ்கூல் வருவியா' என்று கேட்ட்க வேண்டுமென்றால், 'ளைக்கிநா நீ லுக்குஸ் ருவியாவ ..'. இப்;படி..
ஏனென்றால் அப்போது நிறையபேர் ஒவ்வொரு வார்த்தைக்கும் முன் க சேர்த்து பேசுவது வழக்கமாகி விட்டிருந்ததால் நாங்கள் வித்தியாசமாய் முயற்சித்தோம். இதை அறிமுகப்;படுத்தியவன் என் நண்பன் தேவன். இதை எழுதும்போது அவன் பெ\யார் சட்டென ஞாபகத்துக்கு வந்து விட்டது!
ஜோக் நீங்கள் மட்டும்தான் ரசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இனி தவறாது இடம்பெறவைக்க முயற்சிக்கிறேன்.
நீக்குபாட்டுக்குப் பாட்டு சுமார்! சசிதரூர் செய்தி திருவானந்தபுரம்தான்.
செய்தி திருவனந்தபுரம் என்றாலும் சம்பவம் டெல்லி தான். பாராளுமன்ற கூட்டம் நடக்கிறது. அதில் ரயில்வே அமைச்சர் சசி தரூரைப் பார்த்து தர்ணா இருக்க கேலி செய்கிறார். போர்வை எல்லாம் போர்த்திக் கொள்கிற குளிர் திருவனந்தபுரத்தில் இல்லை. இது எடுக்கப்பட்ட இடம் டெல்லியில் அவரது குவார்ட்டர்ஸில் என்று தோன்றுகிறது.
நீக்குJayakumar
மறுபடியும் இணையம் சென்று கூகுள் செய்து தேடினேன். சசிதரூர் தன் வீட்டு தோட்டத்தில் என்றுதான் எல்லா ஊடகங்களிலும் வருகிறதே தவிர எந்த ஊர் என்று வரவில்லை. எனவே அது திருவானந்தபுரம்தான் என்று நினைக்கிறேன்.
நீக்குசில வாரங்களாக டல்லடித்துக் கொண்டிருந்த வியாழன் பகுதிக்கு இன்று புது ரத்தம் பாய்ந்திருக்கிறது.
பதிலளிநீக்கு:)))
நீக்குகல்கி×புதுமைப் பித்தன் தகவல்கள் சுவாரஸ்யம். கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு பதிவர் இருந்தாரே அவர் ஒரு முறை எ.பி.யில் நான் எழுதியிருந்த 'கேட்ட வரம்' என்னும் கதையை பாராட்டுவதற்கு தொலைபேசியில் அழைத்து ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கல்கியின் பொன்னியின் செல்வன் ஏதோ ஒரு ஆங்கில நாவலின்(எனக்கு பெயர் மறந்து விட்டது) அப்பட்டமான காபி, வர்ணனைகள், கமா,ஃபுல்ஸ்டாப் உட்பட என்றார். எனக்குதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தஞ்சாவூர் ஜில்லாவை சேர்ந்த கல்கி சூழ நாட்டை வர்ணிக்க இரவல் வாங்க வேண்டுமா என்ன?
பதிலளிநீக்குமதுரை பதிவர் கிருஷ்ணமூர்த்தி ஸாரா? அவர் மறைந்து விட்டார். வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அன்னை பக்தர்.
நீக்குவெளிநாட்டவர் சோழநாடு பற்றி சொல்லி இருக்க மாட்டார். அவர் சொன்னதை கல்கி இந்த நாட்டுக்கு பொருத்தமாக மாற்றி விட்டாரோ என்னவோ...
May be Sir Walter Scott!
நீக்கு__/\__
நீக்கு*சூழ நாட்டை - சோழ நாட்டை
பதிலளிநீக்குபுரிந்தது.
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஹைஃபைவ் ஸ்ரீராம். எனக்கும் சிறு வயதில் சபரிமலைக்கு மாலை போட்டு இருமுடி கட்டும் பூஜையைப் பார்க்க நேர்ந்தால் அங்கு அவர்கள் சாமியே சரணம் ஐயப்பா எனும் போது புல்லரித்து நானும் என்னை அறியாமல் சொல்லுவேன் அவர்கள் ஒவ்வொரு நாமமாகச்சொல்லி சரணம் விளிக்கும் போது நானும் அப்படியே சொல்லியதுண்டு.
பதிலளிநீக்குஅது போல எங்கள் ஊரில் சபரிமலை சீசனில் மாலை போடுபவர்கள் குளத்தில் குளித்துவிட்டு ஈரத் துண்டுடனேயே நேரே முதலில் பிள்ளையார் சன்னதிக்குச் சென்று ஒவ்வொரு நாமமாகச் சொல்லி சரணம் சொல்லும் போதும் அந்தச் சமயத்தில் நான் கோயிலில் இருக்க நேர்ந்தால் நானும் கூடவே சொல்லியதுண்டு.....அதன் பின் வளர்ந்து வரும் போது கேட்க நேர்ந்தால் மனதிற்குள்.
இப்போதும் அப்படியான சரணங்களையோ இல்லை கூட்டமாக வேறு இறைவன் பெயரில் சொல்லப்படுவதையோ அங்கு இருக்க நேர்ந்தால் எப்போதாவது மனம் அப்படியான ஒரு நிலைக்குச் செல்லும்
எல்லாமே மனம் தான்.
கீதா
நாங்கள் அவர்களை பார்த்ததுமே எங்களுக்குள் சொல்லிக்கொள்வோம்!
நீக்குஆ!! ஸ்ரீராம், பள்ளியில் நட்பு வட்டம் சொல்லியதுண்டு கூட்டுத் தொகை 9, 3 வந்தால் லக்கி என்று. நம் பிறந்த தேதி வருடம் மாதம்....அது போல வண்டி எண்கள், வீட்டு எண் இப்படி ஒரு பேச்சு சுற்றியதுண்டு. அப்ப நானும் இப்படிக் கூட்டிப் பார்த்ததுண்டு. யாரைப் பார்த்தாலும் அவங்க பிறந்த தேதி மாதம் வருடம் கேட்டு கூட்டியும் பார்த்ததுண்டு,
பதிலளிநீக்கு3 ம் இல்லை 9 ம் இல்லை...எனக்கு அப்ப ரொம்ப வருத்தம் வரும் அப்ப நான் லக்கி இல்லை...ம்ம்ம் அது தெரிஞ்ச விஷயம்தானே...அப்படித்தானே இருக்கு நம்ம நிலவரமும் அப்படின்னு எல்லாம் பள்ளியில் ஒரு காலகட்டத்தில் வந்தது. அதிலிருந்து எல்லாம் என்னை மீட்டெடுத்தது மேரி லீலா டீச்சரும், ஸ்டெல்லா மேரி டீச்சரும். அதன் பின் கல்லூரியில் உஷா தாமஸ்!. அவர்களை இப்பவும் எப்போதும் நினைத்துக் கொள்வேன்.
மனம் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவியவர்கள். அதன் பின்னும் வாழ்க்கையில் அதைப் பற்றி அறிய நிறைய படிக்க வேண்டிய சூழலும் வந்தது. மனிதர்களைப் படிக்கவும் உதவியது. உதவுகிறது.
கீதா
வெளிநாட்டுக்காரங்களுக்கு 13 ம் நம்பர் சுராசி இல்லை என்பார்கள். அதுபோல நமக்கு நம் நம்பிக்கை. ஒவ்வொரு ஊர்ல அவரவர்களுக்கு தகுந்தாற்போல லக்கி நம்பர் சொல்வாங்க போல...!
நீக்குகார் பஸ் ஆட்டோ லாரி பதிவு எண்களைக் கூட்டிப் பார்க்கும் பழக்கம் எனக்கும் உண்டு. எனக்கு நியூமராலஜியும் தெரியும் என்பதால் அதையும் சேர்த்து மொத்த எண் கணக்கிடுவேன். அப்புறம்? அப்புறம் என்ன அவ்வளவுதான்! அந்த எண் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தக் காரின் சொந்தக்காரரின் பெயர் டேட் ஆஃப் பர்த் தெரிந்திருந்தால்தான் சுவாரஸ்யம்!
பதிலளிநீக்குஎனக்கு சோதிடம் தெரியாது. எனவே அந்த அளவில் நிறுத்தி விடுகிறேன்!!
நீக்கு:))) (எனக்கும் ஜோதிடம் தெரியாது! அப்பப்போ சும்மா குன்சா அடிச்சுவிடுவேன்!)
நீக்குசும்மா சொல்றார் நெல்லை.. நம்பாதீங்க...!!!
நீக்குஒரு சந்தேகம். தமிழ் எண் ஜோதிடக்காரர்கள் ஏன் ஆங்கிலத்தில் பெயரை எழுதி அதற்கேற்ப எதோ எண்களை குறிப்பிட்டு கூட்டுத்தொகையை வைத்து ஜோதிடம் சொல்ல்கிறார்கள். தமிழ் எழுத்துக்களுக்கு நேரான எண்கள் இல்லையா?
பதிலளிநீக்கு216 (?) எழுத்துகளுக்கு எங்கேயிருந்து எண் ஞாபகம் வைத்துக்கொள்வது!
நீக்கு26 எழுத்துகள் -
1) AIJQY
2) BKR
3) CGLS
4) DMT
5) EHNX
6) UVW
7) OZ
8) FP
அவ்வளவுதான் மேட்டர் ஓவர்!
இந்தியன் எக்ஸ்பிரஸில் பீட்டார் விடால் எண் ஜோதிடம் பார்த்த ஞாபகம்.
நீக்குஎனக்குப் புரியலை. F 6த்தானே இருக்கணும். அவங்க இஷ்டத்துக்கு எண் கொடுத்திருக்காங்களா?
நீக்குஇந்தக் கேள்விக்கு பதில் சொல்ல KGG யை மேடைக்கு அழைக்கிறேன்!!
நீக்குCheiro's book of numbers. Please see the book (pdf) I have sent to your WhatsApp number just now.
நீக்குநன்றி. அந்தப் பகுதியைப் படிக்கணும்... ஆனால் ஒரு நல்ல நியூமராலஜிஸ்ட் இங்க பெங்களூரில் இருக்கும்போது (வேற யாரு? கேஜிஜி சார்தான்) பேசாம அவர்ட்ட தேவையான தகவல்களைக் கொடுத்து ஜோஸ்யம் கேட்டுக்கலாமோ?
நீக்கு:)))))
நீக்குஜாதகம், கைரேகை, நியூமராலஜி எல்லாமே புத்தகங்கள் படித்து கற்ருக் கொண்டேன். ஆனால் பலன்கள் சொல்லுவதில்லை. அதற்கு புத்தக படிப்பு மட்டும் போதாது, இன்டியூஷன் தேவை. ஆனால் பார்க்கும் மனிதர்களின் குணாதிசியங்களை வைத்து அவர்கள் எந்த தேதியில் பிறந்திருப்பார்கள் என்று யூகிக்க பிடிக்கும். அது சரியாக இருக்கும் பொழுது ஒரு சந்தோஷம் வரும்.
நீக்குகுணாதிசயங்களை வைத்து பிறந்த தேதி கண்டுபிடிப்பது ஆச்சர்யம். வெற்றி வாய்ப்பும் கம்மியாக இருக்கும்.
நீக்குஜாதகம், கைரேகை, நியூமராலஜி எல்லாமே புத்தகங்கள் படித்து கற்ருக் கொண்டது ஆச்சர்யம், பாராட்டத்தக்கது.
நீக்குமுதல் இரு செய்திகளும் ஆ என்று சொல்ல வைத்தன! வியப்பில் இப்படியா என்று
பதிலளிநீக்குஎதனால் கருப்பு மை? குரூப் தேர்வு எழுத?
இந்த பிட் காயின் கணக்கு புரிவதில்லை...கிட்டத்தட்ட ஷேர் மார்க்கெட் போலவோ?
'ஜெட்ப்ளூ' க்கு அடிச்சது கோளு!
சசி தரூர் செய்தி அட!
//சொந்த ஊரில் தோட்டம் ஒன்றை அமைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளேன்.//
104 வயசு உள்ளவர் சொல்வது!!! அப்ப இப்பவும் சுயநினைவுடன் இருக்கிறாரா அதுவும் ஜெயிலில் இருந்தும் இத்தனை வயது!!! ஆச்சரியமா இருக்கு
கீதா
104 வயசுலயும் விடுதலை இல்லை! ஜாமீன்தான்!
நீக்கு:)))
நீக்குஆர் வி - பகுதி சுவாரசியமான தகவல்கள் என்று சொல்ல முற்படும் அதே சமயத்தில், இப்படியும் அதுவும் அறிவாளிகளே இப்படி குடுமிச் சண்டை, அதை இப்படி எழுதுவது...என்பது ஏனோ கொஞ்சம் நெருடுகிறது. புத்திக்கும் பக்குவத்திற்கும் இடைவெளி.
பதிலளிநீக்குகீதா
அல்லது நெகட்டிவ் விளம்பரம்?
நீக்குசொல்ல விட்டுப் போச்சு சிலிகான் ஷெல்ஃப் ஆர் வி தளம் அவ்வப்போது வாசிப்பதுண்டு. சுவாரஸியமான விஷயங்கள் கிடைக்கும்.
நீக்குகீதா
அல்லது நெகட்டிவ் விளம்பரம்?//
நீக்குஓ அப்படியும் இருக்குமோ!
பாருங்க இப்படித் தோணலை எனக்கு அதை வாசிக்கறப்ப.... ஹாஹாஹா
கீதா
இந்த மாவோரி மக்களைப் பற்றி இணையத்தில் பதிவாக வாசித்த நினைவு...கீதமஞ்சரி தளத்தில்? இல்லை துளசி அக்கா தளத்திலா? ம்ம்ம்
பதிலளிநீக்குகாணொளி பார்த்த நினைவில்லை - பாடலின் பொருள் நல்லாருக்கு வீர முழக்கம்.
கீதா
காணொளி பார்த்த நினைவில்லையா?
நீக்குகீதா... நான்தான் உங்களுக்கும் அனுப்பி இருந்தேன். பயங்கரமான முகபாவங்களுடன் இந்தப் பெண் பேய் பிடித்தது போல தன் சீட்டிலிருந்து கிளம்புவார்! இது போலவே கூட்டம் கூட்டமாக சொல்லிக்கொண்டே ஊர்வலம் விடுபவர்களும் இருக்கிறார்கள்.
சுஜாதா - கணையாழி - இது ஏற்கனவே வாசித்திருக்கிறேன் அந்த இரண்டாவது.
பதிலளிநீக்குரசித்த பகுதி
கீதா
ஓ... வாசிக்காதவர்களும் இருப்பார்களே என்று பகிர்ந்தேன்!
நீக்குசுஜாதாவின் முதல் கதை(வெளியானது) ஒரே ஒரு மாலை(ஆ. வி ) என்றுதான் நினைத்திருந்தேன். தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி நணபரே...
நீக்குகாரைக்குடி நாராயணன் அவர்களின் இந்தப் பேட்டியை பார்த்திருக்கிறேன், ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
__/\__
நீக்குமழை - கவிதையும் அந்தப் படமும் சூப்பர் ...ஆமா அதானே திரும்ப வருமா?!!! இப்பவும் நனைவேன் ஆனா பாருங்க...மூன்றாவது காதைக் கழட்டி வைக்கணுமே அந்த மழை ரிதம் மிஸ் ஆகுமே....
பதிலளிநீக்குகீதா
இப்பொழுது இந்த வயதில், மழையில் நனைய, ஆட்டம் போட வயசு இடம் கொடுக்கவில்லையே.... பார்ப்பவர்களும் ஒரு மாதிரி பார்ப்பார்கள்.
நீக்குபொக்கிஷத்தில் சிவாஜி, தென்றல் எனும் பத்திரிகைகள் தவிர மற்றவை பார்த்த்துண்டு.
பதிலளிநீக்குகீதா
__/\__
நீக்குதங்களது கை வண்ணம் எப்போதும் போல சிறப்பு...
பதிலளிநீக்குமற்ற பகுதிகளில் மனம் செல்ல வில்லை
அடடா... ஏன் இப்படி...
நீக்குபழைய இதழ்களின் அணிவகுப்பு அருமை...
பதிலளிநீக்கு__/\__
நீக்குபேசும் படம் சினிமா செய்திகளையும் கண்ணியமாகத் தந்தது.
பதிலளிநீக்குஅது அன்றைய நாகரிகம்..
ஆமாம்.
நீக்குபொம்மை என்றொரு மாதாந்திர திரை இதழும் வெளிவந்ததே...
பதிலளிநீக்குஆம். பிலிமாலயா...
நீக்கு1980களில் ஏதோ ஒரு குப்பை நிறுவனம் நடுப்பக்க கவுச்சி (கவர்ச்சி)
பதிலளிநீக்குஎன்று ஆரம்பித்து எல்லாவற்றையும் நாற அடித்தது...
அத்தோடு அந்தப் பக்கமே போகவில்லை
அது ஆங்கில புத்தகம்... அது பெயர் என்ன. மறந்து விட்டது... அதைப் பார்த்து அடித்த காபி...
நீக்குIlestrated weekly, குஷ்வந்த்சிங் ஆசிரியராக இருந்தபொழுது தொடங்கியதோ?
நீக்குநினைவில்லை!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பக்க தங்கள் எண்ணங்கள் அருமை. சிறு வயதில் மட்டுமல்ல..! இப்போதும் நாம் இதுபோல் ஒரு விதமான மூட நம்பிக்கைகளில் அது போல் நடந்தால் நல்லதென்று நினைக்கிறோமோ என சில சமயம் எனக்குத் தோன்றும். ஆனாலும் அந்த எண்ணத்தை விட இயலவில்லை. கூட்டுத் தொகை ஒற்றைபபடையாய் வந்தால் நல்லதென்று எண்ணம் அனைவருக்கும் உள்ளது. சிலருக்கு இரட்டை எண்கள் அதிர்ஷ்டத்தை தரும். தங்களின் மனதில் பட்ட விரிவான எண்ணங்களை தெரிவித்தமைக்கு நன்றி.
கவிதை நன்றாக உள்ளது.
செய்தியறை பக்கங்களில் பல செய்திகளை தெரிந்து கொண்டேன்.
பொக்கிஷ பகிர்வும் அறியாத சில பத்திரிக்கைகளுடன் நன்றாக உள்ளது. ஜோக்ஸ் இந்த வாரம் மிஸ்ஸிங். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.... சென்ற புதன் என்று நினைவு.. உடல்நிலை சரியில்லை என்று சொல்லி இருந்தீர்கள். உங்களைக் காணோம் என்றதும் உடல்நிலை சரியானதும் வருவீர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
நீக்குஇன்றைய வியாழன் வித்தியாசமான பகிர்வுடன்.
பதிலளிநீக்குகவிதை படம் நன்றாக இருந்தது.
நியூஸ்ரைம் செய்திகள் கண்டோம்.
பொக்கிசம் வித்தியாசமானது இவற்றில் சில கண்டிருக்கிறேன்.
நன்றி மாதேவி.
நீக்கு//சிறு வயதில் சபரிமலைக்கு மாலை போட்டவர்களைக் கண்டால் நானும் என் சகோதரியும் வாய் விட்டு 'சாமியே சரணம் ஐயப்பா' என்று சொல்வோம்.//
பதிலளிநீக்குசிறு வயதில் மட்டுமல்ல இப்போதும் நான் சபரி மலைக்கு செல்பவரை பார்த்தால் சரணம் ஐயப்பா என்று மனதில் சொல்வேன். தெரிந்தவர்கள் என்றால் சத்தமாக சொல்வேன்.
தெரிந்தவர்கள் போனால் ஐயப்பனுக்கு காணிக்கை கொடுத்து விடுவேன்.
முன்பு அவர்கள் வீட்டில் நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு பாடி வருவேன். பஜனை பாடல்கள் பிடிக்கும்.
நாங்கள் அப்படி சொல்வதில் போட்டி போட்டோம். அது ஒரு விளையாட்டு போல இருந்தது!
நீக்குஉங்கள் மழை கவிதையும் படமும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமழையில் நனைவது, விளையாடுவது எல்லாம் சிறு வயதிலே மட்டும் முடிந்தது. பொக்கிஷபகிர்வுகள் அருமை.
உண்மைதான். இப்போது மழையில் இறங்கி நனைவதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றும் பார்க்க வேண்டியிருக்கிறது.
நீக்குகவனியுங்கள்...
என்றும்! mmm!
நன்றி கோமதி அக்கா.
வாகனங்களின் கூட்டு எண்களை நானும் ஒரு காலத்தில் கவனித்ததுண்டு. 8055 எழுதப்பட்ட விதம் அருமை.
பதிலளிநீக்குமழை கவிதை.. உண்மை. நியூஸ் ரூம்.. நன்றி.
தொகுப்பு அருமை.