வாசலில் ஒரே அமர்க்களம்.
ஏழெட்டு வாழைத் தண்டுவிளக்குகள் 'பளீரென்று ஒளியை வாரி இறைத் துக் கொண்டிருக்கின்றன. பந்தல் தாங்காத கூட்டம். பெரியவர்களின் அட்டகாசமான பேச்சுக் குரல்கள். சிறுவர்களின் கூக்குரல். புஸ் புஸ் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஐந்தாறு காஸ் விளக்குகள், கூடம் பூராவும் கோல மயம். இலைக் கட்டுகளும், சந்தனச் சிதறலும், சீவல் பாக்கும் இறைபட்டுக் கிடக்கின்றன. பின்புறம், பிரத்தியேகமாக அமைக் கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையில் தயாராகிக் கொண்டிருக்கும் விருந்தின் நறுமணம்.
''ஜானகி!.. ஜானகி !.." என்று அழைத்த வண்ணம் தோழி ஒருத்தி வீடு பூராவும் - அதாவது கீழ்ப்பகுதி யெல்லாம் - தேடிக் கொண்டிருக்கிறாள். அவளைக் காணவில்லை. மாடிக்குச் சென்று பார்க்கிறாள் அந்தப் பெண். பார்த்தவள் பிரமிக்கிறாள்.
ஜானகியா இப்படி இருக்கிறாள்?.. எப்போதும் அசடு வழியும் ஜானாவா இவள்?
தழையத் தழையப் பின்னியிருந்த நீண்ட கருநாகக் கூந்தல். அதிலே - ஆட்சி செலுத்தும் ஒற்றை ரோஜா. வட்ட நிலா போன்ற வதனம். அதன் மையத்திலே - செதுக்கி அமைத்துள்ள சந்தனக் கட்டை போன்ற நெற்றியின் நடுவிலே - பளீரென்ற குங்கும்ப் பொட்டு. பருவம் போர்த்திவிட்ட பேரழகைத் தாங்கி நிற்கும் பொலிவு நிறைந்த மேனி. சுவரில் நிழல் ஆடு வதுபோல், காற்றில் அசைந்து கொடுக்கும் வழவழப்பான சில்க் புடவை. அதன் நிறத்திற்கேற்ற வெல்வெட் ரவிக்கை. பார்க்கும் கண்ணையே பிடுங்கி விடுவதைப் போன்றதொரு அழகா?
"என்னடி இது?. எரிச்சுடறாப்போல பார்க்கறியே!. சிரித்துக் கொண்டே கேட்கிறாள் ஜானகி.
*ஒண்ணுமில்லேடி! உன் அழகைப் பார்த்துபார்த்து அலங்காரத்தையும்..."
"பார்த்து.."
"அந்தப் பாழாப் போற ஆண்டவன் எவ்வளவு கொடுமைக்காரங்கறதை நினைச்சு.."
இருவரும் சிரிக்கின்றனர்.
ஏண்டி, இப்போ ஆண்டவனைத் திட்டறே?''
"திட்டாம வாழ்த்தச் சொல்றியா ஜானா? இவ்வளவு சௌந்தர்யத்தைப் படைச்ச பாழுந் தெய்வம், கூடவே மூளையையும் இப்படி மழுங்கச் செய்து விட்டு வேடிக்கை பார்க்கற கொடுமையை எண்ணினால்.."
சடேரென்று நிறுத்துகிறாள் தோழி. அதிகம் பேசி விட்டோமோ என்ற பயம் கூடவே எழுகின்றது. அப்படித் தப்பித் தவறி ஜானாவுக்குக் கோபம் ஏற்பட்டு விட்டால், தன் கன்னம் வீங்கி விடும் என்ற அச்சமோ என்னவோ !
சற்று நேரம் ஜானகி வாயே திறக்க வில்லை. எங்கோ மோட்டு வளையின் மீது அவளுடைய கெண்டை விழிகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. மேலே இரண்டு உத்தரக் கட்டைகளுக்குமிடையே ஒரு பல்லி, அப்படியே கோந்து போட்டு ஒட்டியதைப்போல் தவம் செய்து கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சுவரில் காரை பெயர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. "உம்... வெள்ளைஅடிச்சு எவ்வளவு நாள் ஆச்சு?.. இந்தக் கல்யாணத்தைக் காரணமாகக் கொண்டாவது, வர்ணம் பூசக கூடாதோ? இந்த அழகிலே வெற்றிலைக்குச் சுண்ணாம்பு எடுத்துக் கொண்டு மிஞ்சிப் போகும் சுண்ணாம்பையெல்லாம் அப்பா கண்ட கண்ட இடத்தில் - சுவரில் தடவி, அதுவேறு ஓட்டுப் போட்ட பிளாஸ்திரி மாதிரி..'
"என்னடி ஜானா ? மலைச்சுப் போயிட்டே!" என்று தோழியின் குரல் அவளை உலுக்குகிறது. சற்று முன்பு தன் அழகைப்பற்றி அவள் கூறியது நினைவுக்கு வருகிறது.
"என்னடி சொல்றே நீ ?.. நான் ரொம்ப அழகா இருக்கேன், ஆனால் பைத்தியமாவும் இருக்கேன்னுதானே? என்று கேட்கிறாள். பதில் கூறவில்லை சிநேகிதி.
"நீ சொல்றது வாஸ்தவம்தாண்டி! நானே எனக்குள்ளே ஆயிரம் தடவை அதே கேள்வியைக் கேட்டுப் பார்த்துட்டேன். பதில் கிடைக்க மாட்டேங்கறதே! அழகைக் கொடுத்த ஆண்டவன், ஏண்டி அறிவை எடுத்துக்கணும்? அந்த அழ கையும் கொடுக்காம இருந்து தொலைச்சிருக்கக் கூடாதா?.. உலகத்தை ஒரு மாதிரிபடைச்சு, என்னை மாத்திரம் வேறு மாதிரி ஏன் படைக்கணுமாம்?. எனக்கு இப்போ ஒரு சந்தேகம்டி.... எதுக்காக எனக்குப் பைத்தியக்காரிப் பட்டம் கட்டணும்? --இப்போ உலகம் என்னைப் போல இல்லியா, இல்லேன்னா நான் உலகத்தைப் போலஇல்லியா? நீயேபதில்சொல்லு!"
ஜானகி பேசுகிறாள். அவள் பேச்சிலோ, பேசும் விதத்திலோ மழுங்கிய மூளையின் அபஸ்வரமே தட்டவில்லை. சிநேகிதி பிரமித்து நிற்கிறாள்.
"பதில் தெரியல்லியா?.. ஒழியட் டும். இன்னொண்ணுசொல்றேன், கேளு. எந்தவிதத்திலே நான் உங்களைப்போல இல்லை? எப்போதும் சிரிச்சுண்டே இருக்கேன்னு சொல்லுவே. நான் கேட்கறேன், கோவில்லே தெய்வம் முகத்திலே எப்போதும் சிரிப்பு தவழறதே, அதைப் போய் மந்தஹாஸம் அப்படி இப்படின்னு சொல்லச்சே, என் சிரிப்பு மாத்திரம் பைத்தியச் சிரிப்பாயிடறதோ? ஒழியட்டும். நாள் கணக்காலே சாப்பிடாம, ஜடமா இருந்துடறேன்னு சொல்வே. நான் கேட்கறேன். அந்த நாள்லே, காட்டுலே தவம் பண்ணின ரிஷியெல்லாம் பச்சைத் தண்ணீர் கூட வாயிலே ஊற்றிக்காம இருப்பாளாமே. அதுமாத்திரம் நிஷ்டை, தபஸ் ஆயிடறது. நான் பட்டினி கிடந்தால், பிரக்ஞை இல்லாதவ ஆயிடறேன். அப்படித்தானே? ரோட் டிலே போகிறவர்களைப் பார்த்து, அவர்களைக் கூப்பிட்டு நான் பேசறது தப்புன்னா, மனசிலே கல்மிஷம் இல்லாம, வர்மம் வைச்சிருக்காம எல்லோரிடத்திலேயும் பரிவோட நடந்துண்டா அவாகிட்டே தெய்வம் வாசம் பண்ணும் என்று பிரமாதமாச் சொல்கிறார்களே? அப்போ அதெல்லாம் வரட்டு வேதாந்தமா?..''
முடுக்கி விட்ட கிராமபோனாகப் பொரிந்து தள்ளிக் கொண்டிருக்கிறாள் ஜானகி. வந்தவளுக்கு 'ஏண்டா வந்தோம்' என்றாகி விடுகிறது.
"உம்..உம்.. நாழியாச்சு.. எல்லோரும் கிளம்புங்கோ கோவிலுக்கு ; மாப்பிள்ளை அழைப்புக்கு நாழியாச்சு!" என்று புரோகிதர் பந்தலில் போட்டுக் கொண்டிருந்த கூச்சல் அறையில் நுழைகிறது.
''வாடி ஜானா!.. இங்கேயே மச மசன்னு பேசிண்டிருக்காமே!. மாப்பிள்ளை அழைப்புக்குப் போக வேண்டாமா?.. என்கிறாள் சிநேகிதி. அவள் பேச்சு ஜானகியின் காதுகளில் ஏறவில்லை.
"உனக்குத் தெரியுமோ தெரியா தோடி!. நான் சொல்றேன் கேளு! என் தங்கைக்குக் கல்யாணம் நிச்சயம் செய்ய அப்பா எவ்வளவு தயங்கினார் தெரியுமா?.. ‘நீ இருக்கச்சே அவளுக்கு எப்படியம்மா பண்றது?'ன்னு கண்ணாலே ஐலம் விட்டார். நான்தான் முடிவா-பிடிவாதமா 'அரச மரத் தடிப் பிள்ளையாருக்கும் எனக்கும்தான் இனிமேல் கல்யாணம் ஆகணும். எனக்காக அவள் வாழ்வை ஏன் கெடுக்கணும்? நான் மூத்தவளாப் பிறந்த தோஷத்திற்காக அவளை வதைக்கணுமா?'ன்னு சண்டை போட்டேன். அப்புறம்தான் இவ்வளவு ஏற்பாட்டையும் செய்யச் சொன்னேன். இதோ நாளைக்கே அவள் ஜாம் ஜாம்னு கழுத்திலே தாலியோடே வண்டி ஏறிடப்போறா! அப்புறம் இந்தத் தெருவும், இந்த அறையும், மொட்டை மாடியும்தான் எனக்கு மிஞ்சப் போறது!..'' என்று கூறிய ஜானகி கண்களைப் பொத்திக் கொள்கிறாள். அவள் உடல் குலுங்க, உள்ளம் விம்முகிறது.
''ஜானா!..ஜானா! .. அழக் கூடாது. நல்ல நாளும் அதுவுமா இப்படிக் கலங்கினா, உன் தங்கைக்குத் தானே கஷ் டம்? மனசைத் தேற்றிக்கணும். தலைக்கு மேலே போன விஷயம் இது. வருத்தப்படலாமா சொல்லு. இவ்வளவு நேரம் எவ்வளவோ வேதாந் தம் பேசிட்டு, இப்படிக் கண்ணீர் விடலாமா? மனுஷ வஞ்சனையை மீறிடலாம், ஜானா ! தெய்வ வஞ்சனையைத் தாங்க முடியாதே!"
"சும்மா இருடி!.. தெய்வமும் உலகமும் உசத்தியோ ? தெருவோட போறோம். நாய் ஒண்ணு குரைச்சுண்டே பின்னாலே வரும். நாம பாட்டுக்குப் போயிண்டிருந்தா, அதுவும் குரைச்சுண்டேதான் வரும். சடேர்னு திரும்பி, ஒரு கல்லை எடு, பார்ப் போம். வாலைச் சுருட்டிண்டு ஓடறதா இல்லையா, பார்! அதுமாதிரிதாண்டி உன் உலகமும் ! லட்சியம் பண்ணாம போறவளைப் பார்த்து 'பைத்தியம், ரெண்டுங் கெட்டான் ' ன்னு சொல்லிண்டே இருக்கும். சடேர்னு திரும்பிப் பார்த்து 'தூ'ன்னு ஒரு துப்புத் துப்பிட்டா... அவ்வளவுதான் வாயடைச்சுப் போயிடும் அதுக்கு. எனக்கும் அப்படிப் பண்ண காலம் வராமல் போயிடறதா, பார்க்க !"
முகத்தில் பனிக்கத் தொடங்கிய வெண் முத்துக்களைத் துடைத்தபடிப் பேசுகிறாள் ஜானகி.
''சரி ..சரி! இப்போ நீ வரப் போறியா, இல்லியா சொல்லு! சத்தமெல்லாம் ஓய்ஞ்சு போயிடுத்து. எல்லோரும் கோவிலுக்குப் போயிட்டா போலிருக்கு. அங்கேயிருந்துதானே மாப்பிள்ளை அழைப்பு நடக்கணும்?.. வாயேன்!..''
ஜானகியின் கையைப் பற்றுகிறாள் தோழி. பாம்பை உதறுவது போல் உதறுகிறாள் ஜானகி.
"மாப்பிள்ளையும் ஆச்சு; அழைப்பும் ஆச்சு! நான் ஒண்ணும் வரல !..."
வந்தவள் விழிக்கிறாள்.
"கல்யாணமாம் கார்த்திகையாம்! தடிமாடு மாதிரி என்னை வைச்சுட்டு, சின்னவளுக்குக் கல்யாணம் நடத்தற அழகைத்தான் பாரேன்!"
தூக்கிவாரிப் போடுகிறது தோழிக்கு. சற்று முன்புதான் என்னவெல்லாமோ பேசிவிட்டு திடீரென்று இப்போது...
"அப்போ நான் போகட்டுமா?' என்று சிநேகிதி வினவியதும்,
''என்னடி இது! திரும்பத் திரும்ப என் வாயை உம்..'' என்றவாறே ஜானகி இரண்டடி முன்னால் எடுத்து வைக்கவும்,
தடதடவென்று கீழிறங்கி விடுகிறாள் வந்தவள்.
ஜானகியின் உத்தண்டமான சிரிப்பில் மாடியே நடுங்குகிறது..!
கூடம் திமிலோகப்படுகிறது.
ஹோமப் புகையும் மந்திர ஒலியும் வீடெங்கும் சுற்றிச் சுற்றி வருகின்றன. உறவினர்களும் நண்பர்களும், குழந்தை குட்டிகளும் வீடு முழுமையும் குழுமி யிருக்கின்றனர்.
மணைக்கருகில் நின்று கொண்டிருக்கும் வெங்கடேசன் நொடிக்கொருதரம் பெண்கள் பகுதியைப் பார்த்தபடியே இருக்கிறார். அவர் வயிற்றில் செய்யும் சங்கடம் அவருக்குத்தானே தெரியும்? மூத்த பெண்ணின் மீது பதித்த பார்வையை எடுக்கவேயில்லை அவர். அவள் இன்று ஏதாவது அசம்பாவிதமாக நடந்து கொண்டு விடுவாளோ என்ற திகில். நாலு மனிதர்கள் எதிரில் ஏதாவது தலைக் குனிவு ஏற்பட்டு விடக் கூடாதே என்ற பெருங்கவலை.
ஆனால் அவர் பயந்தபடி யெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரையும் போலத் தான் ஜானகியும் புதுப் புடவை சரக் சரக் என்று சப்திக்க, தலை கொள்ளாத பூவுடன், முழங்கை வரை அடுக்கியிருந்த வளையல்கள் பளீ ரென்று ஒளி வீச, அங்கே சுற்றிக் கொண்டிருக்கிறாள். வருபவர்களை அவள் உபசரிப்பதும், தாம்பூலம் அளிப்பதும், பலகாரம் எடுத்துக் கொடுப்பதும்.
அடே அப்பா! ஜானகியா இப்படி நடந்து கொள்கிறாள்? அசடு என்ற பட்டத்தைத் தலையில் வாங்கிக் கட் டிக் கொண்டிருக்கும் ஜானாவா இவ்வளவு சாத்வீகமாக நடந்து கொள்கிறாள்? ஆண்டவனே, இப்போதைய அவளுடைய குணத்தை ஸ்திரமாக அளிக்காமல் அவளை அசடாக்கி விட்டாயே ! வெங்கடேசன் இதயம் பொருமியது.
"ஏண்டி ஜானா!.. உனக்கு எப்போடி கல்யாணம்?" என்று எவளோ ஒருத்தி வெகு அக்கறையுடன் கேட் கிறாள்.
''எனக்குத் தானே? அடுத்த முகூர்த்தத்திலே நடத்திட வேண்டியது தான் ! ஆனால்,நீங்கள் அவசியம் வரக் கூடாது - இப்படியெல்லாம் கிளறி விட்டு வேடிக்கை பார்க்கறதுக்கு!''
'பட்'டென்று பதில் வருகிறது அவளிடமிருந்து.
"சுத்த அப்பாவியா இருக்கியேடி ஜானா!.. மூத்தவ இருக்கச்சே இளையவளுக்கு என்னடி அவசரம் வந்துடுத்து இப்போ? முகத்திலே அறையறாப்போல, உன் அப்பனைக் கேட்கப் படாதோ?.."- கிழவி ஒருத்தி வாயை அரைத்துக் கொண்டே தீயை மூட்ட நினைக்கிறாள்.
"அதென்ன பாட்டி அப்படிச் சொல்லி விட்டீர்கள்! ரெண்டு மாசம் முன்னால் உங்க தங்கை 'பொட் டுனு' கண்ணை மூடிட்டாளே! நீங்க தானே முதல்லே போயிருக்கணும். ஏன் போகல்லே?"-சிரித்தபடியே கேட்கிறாள் ஜானகி.
சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் சிரிக்கின்றனர். கிழவியின் முகம் - பாவம் - சுருங்குகிறது.
"இப்படி ஆண்டவன் படைச்சிருக்கச்சயே, இவ்வளவு ஆணவம் இருக்கே, இன்னும் நாலு பேரைப் போல இருந்தால்..அவ்வளவுதான்..' என்று ஒன்றிரண்டு அபிப்பிராயச் சொற்களும் கிளம்பாமல் இல்லை. எதையுமே எவரையுமே -மதிக்கவில்லை ஜானகி. திடீரென்று அவளுக்கு என்னவோ தோன்றுகிறது. கையில் நுனி இலை ஒன்றை எடுத்துக் கொண்டு. விடுவிடென்று புழைக் கடைப்பக்கம்,சமையல் நடந்துகொண் டிருக்கும் பகுதிப் பக்கம் செல்கிறாள்.
''இதிலே ஆறு இட்டிலி வையுங்கள்!'' என்று அதிகாரத்துடன் பரிசாரகர் எதிரில் போய் நிற்கிறாள். அலட்சியமாகப் பார்க்கிறார் அவர்.
"ஆறு இட்டிலிகள் வையுங்கள், மாமா!"
"இட்டிலியும் இல்லே. ஒண்ணு மில்லே. பேசாமல் போகமாட்டே?" -எரிந்து விழுகிறார் அவர்.
'என்ன ? இட்டிலி இல்லியா? என்று ஆத்திரத்துடன் கேட்கிறாள் அவள்.
''நீ மாத்திரம் ஒசத்தியா என்ன?... சித்தே முன்னே தானே பத்து இட்டிலி வாங்கிண்டு போனே? இப்போ வந்து மறுபடியும் கேட்கறே. அனாவசியமா கொடுக்கக் கூடாதுன்னு எஜமானர் உத்தரவு.. பேசாமல் போ!."
"எஜமானர் உத்தரவு? எஜமானர் உத்தரவு இல்லே?.. அப்போ நான் யாராம்?" என்று உரத்த குரலில் அவள் கேட்கவும், சற்று முன் அவள் வாயைக் கிளறிய கிழவி அங்கு வந்து சேரவும் சரியாக இருக்கிறது..
விஷயத்தை ஊகித்துவிட்ட கிழவி பரிசாரகர் பக்கம் திரும்புகிறாள்.
"பேசாமல் அந்தப் பொண்ணு கேட்கறதைக் கட்டிக் கொடுங்கள். அவள் யாரு தெரியுமா? கல்யாணப் பெண்ணின் தமக்கை. கூடப் பிறந்த தமக்கையாக்கும்!..''
பாவம், பரிசாரகர் ஒடுங்கி விடுகிறார். மடமடவென்று ஏழெட்டு இட் டிலிகளைக் கட்டிக் கொடுக்கிறார். பெற்றுக் கொண்ட ஜானகி பீடு நடையோடு கிணற்றடிப் பக்கம் செல்கிறாள்.
"எனக்குத் தெரியாதே அம்மா!.. அந்தப் பொண்ணு அவ அப்பன் கிட்டே ஏதாவது.." என்று அவர் இழுக்கிறார்.
''உம்!..'' என்று அலட்சியமாக ஆரம்பித்த கிழவி, "அதெல்லாம் ஒண்ணும் சொல்லத் தெரியாது அதுக்கு. ரெண்டுங் கெட்டான் ஜென்மம். வர ஆனியோடே இருபத்தெட்டு வயசு பூர்த்தி ஆறது. பேசிண்டே இருக்கும். திடீரென்று மேலே விழுந்து பிடுங்கிடும். பசி எடுத்தா, அரைப்படி சோறு கேட்கும். அதே மாதிரி பட்டினி கிடக்க ஆரம்பிச்சா, இரண்டு நாள் தண்ணீர்கூட குடிக்காமலும் இருக்கும். மனசு இருந்தா, ரோட்டிலே போறவளை வலுவிலே கூப்பிட்டுப் பேசும் மனசு இல்லையோ, சாணத்தைக் கரைத்துக் கொட்டும். இதையும் ரெண்டொருத்தன் பார்க்கத்தான் வந்தான். ஒருத்தனைப் பார்த்து 'உன் பேரு என்னடா?'ன்னு கேட்டுடுத்து. ஓடியே போயிட்டான் அந்தப் பிள்ளையாண் டான். இன்னொருத்தனிடம் எனக்குச் சமைச்சுப் போடுவியா?'ன்னு கேட்டுது. அவன் ஏன் இருக்கப் போறான்?" என்று முடிக்கிறாள்.
திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.
"என்ன பண்றது சொல்லுங்கோ! நடுவிலே வந்த கோளாறுன்னா, இடையிலே போயிடும். கண்ணை முத முதல்லே தொறக்கச்சியே பிறந்த வியாதி, கண்ணை மூடின பிறகுதானே மறையும்? வெங்கடேசனைச் சும்மா சொல்லக் கூடாது. பாவம்... அவன் பார்க்காத வைத்தியம் இல்லை. போகாத கோவில் இல்லை, செய்யாத மந்திரம் இல்லை. விதி யாரை விடறது? இதை அனுபவிக்காம தப்பிட முடியுமா?.. அதுதான் பேசாம, ரெண்டாவது பொண்ணுக்குக் கல்யாணம் செய்துட்டான்!!"
ஒரு வழியாகக் கிழவியின் வாய் மூடுகிறது. இரக்கம் ததும்ப கிணற்றுப் பக்கம் ஒருமுறை பார்த்த பரிசாரகர், தன் பணியைக் கவனிக்க உட்புறம் சென்று விடுகிறார்.
கிணற்றின் சுவரின்மீது அமர்ந்திருந்த வண்ணம் இட்டிலிகளை விழுங் கொண்டிருந்த ஜானகி, கடைசி இட்டிலியை ஒரே வாயில் விழுங்கி விட்டு, இலையை விட்டெறிந்தபடியே எழுந்து நிற்கிறாள். அருகில் தயாராக நீர் நிரப்பப்பட்டிருந்த பெரிய - அண்டாவிலிருந்து ஒரு குவளைத் தண்ணீர் எடுத்து கையைக் கழுவிவிட்டு, தலையை நிமிர்த்துகிறாள்.
"என்ன ஜானா!.. இங்கே என்ன பண்ணிண்டிருக்கே?" என்றபடியே எதிரில் இளைஞன் ஒருவன் - எதிர் வீட்டுப் பையன் - நிற்கிறான்.
அவளை விட இரண்டொரு வயது குறைவாக இருக்கலாம். வாட்ட சாட்டமாக வளர்ந்துள்ள உடம்பு. சரிகை வேஷ்டி. உயர்ந்த ரகச் கட்டை. முகத்தில் படித்த களை. கையில் ஏதோ புத்தகம். ஜானகியுடன் சின்னஞ் சிறு வயதிலிருந்தே பழகியவன், விளையாடியவன்.
"நீ எங்கேடா இங்கே வந்தே?.. பலகாரம் சாப்பிட்டியா?.. இல்லேன்னா எங்கூட வா.. வாங்கித் தரேன்!... என்கிறாள் அவள்.
பழகின தோஷமோ, இல்லா விட்டால் பழகத் தெரியாத தோஷமோ, சர்வ சாதாரணமாக 'டா' போட்டுப் பேசி விடுவது அவள் வழக்கம். அவனும் அதையெல்லாம் வித்தியாசமாக எடுத்துக் கொள்பவனாக இல்லை.
"டிபன் தானே?.. அதுதான் உங்க அப்பா வந்து உடனே உபசரிச்சாச்சே!.. நீ வேறு உபசரிக்கணுமா?" என்றபடியே சிரிக்கிறான் அவன்.
"அதுக்கில்லேடா !.. கல்யாண மும்முரம் பாரு!ஒருத்தொருத்ரையும் பார்த்துப் பார்த்துக் கவனிக்காட்டா, என்ன கலியாணம் பண்ணிட்டான்?'னு பின்னாலே பேசுவார்களே!..''
"ஒருத்தரும் ஒண்ணும் பேச மாட்டா!.. அதுதான் வர்றவா எல்லோரையும் உங்கப்பாவும், அம்மாவும் - எல்லாத்துக்கும் மேலே நீயும் கவனிக்கறபோது குற்றம் குறைக்கு இடமேது?. சித்தே முன்னேதான் ஓடி ஆடி நீ எல்லோரையும் உபசாரம் செய்யறதை நான் பார்த்தேனே!''
சற்று நேரம் இருவரும் பேசவில்லை. கல்யாணக் கூடத்திலிருந்து எழும் மந்திர உச்சாடனங்களும், இரைச்ச லும் தெளிவாகக் காதில் விழுகின்றன. சமையல் நடந்துகொண்டிருக்கும் பகுதியிலிருந்து அடர்த்தியான புகைப்படலம் எழுந்து கொண்டேயிருக்கிறது. அந்த இடத்தைச் சுற்றிலும் மூங்கில் தட்டியால் அடைப்பு போடப்பட்டிருப்பதால், உள்ளே வேலை செய்யும் ஆசாமிகளின் ஓசைதான் கேட்கிறதே யொழிய, உருவங்கள் தெரியவில்லை.
"மாங்கல்யதாரணம் ஆயிடுத்தாடா?" என்று கேட்கிறாள் ஜானகி.
[ அடுத்த வாரம் ]
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குஇதுவரையிலும் கதை ஜானகியின் split personality பற்றித்தான் விளக்கமாக சொல்கிறது. events களுக்கு அதிகம் importance தரப்படவில்லை. பாயாசம் (தி. ஜா. ர) சாமிநாது செய்தது போன்று ஏதொ ஒரு எதிர்பாராத சம்பவம் நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உண்டாகுக்குகிறது. அது வரையிலும் கதை ஓகே.
பதிலளிநீக்குஅந்தக் கால கதையில் எது எப்படி போகும் என்று சட்டென கணிக்க முடியாது JKC ஸார்..
நீக்குஅப்புறம் ஒரு விஷயம்... தி ஜா ர என்றால் தி ஜா ரங்கநாதன். மஞ்சரி ஆசிரியர். நீங்கள் சொல்வது தி,ஜா
தி. ஜானகிராமன்.
என்ன அருமையான இயல்பான பேச்சுத் தமிழ்..
பதிலளிநீக்குமனதை நெகிழ்விக்கின்ற நடை...
பொக்கிஷம் பொக்கிஷம் தான்!..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய தொடர் கதையான எழுத்தாளர் பிலஹரி அவர்களின் உயிர் நோன்பு கதை நன்றாக உள்ளது. ஜானகியின் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வருமென்பதை நான் சென்ற வாரம் ஊகித்ததைப் போலவே நகர்ந்து வருகிறது. கதையானாலும், நல்லவையாக நடந்தால் நல்லதுதான்.
கடந்த வியாழனிலிருந்து சற்று உடல்நல குறைவினால் இயல்பாக என்னால் வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். வெள்ளி பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்.இப்போது நலம் பெற்று விட்டேன். இனி தொடர்ந்து அனைவரின் பதிவுகளுக்கும் வருகிறேன். அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா அக்கா நலம் தானே? இப்ப?
நீக்குவெள்ளிப் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்ததைக் கவனிக்கவில்லை டக்கென்று கருத்திட்டு ஓடிவிடுவதாலும் பெரும்பாலும் பின்னர் வராததாலும்
//கடந்த வியாழனிலிருந்து சற்று உடல்நல குறைவினால் இயல்பாக என்னால் வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். //
அக்கா ப்ளீஸ்... மன்னிக்கவும் என்ற சொல் எதற்கு? உடல் நலக் குறைவினால் வராம இருந்ததற்கு எதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம்?
கீதா
வணக்கம் சகோதரி
நீக்குதங்களின் அன்பான பதில் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி.
இப்போது நான் நலமாக உள்ளேன். உங்கள் பதிவிலும், சகோதரர் துளசி அவர்களின் பதிவையும் பார்த்தேன். படித்து விட்டு கருத்திடுறேன். கடந்த சில நாட்களாக எல்லோரின் பதிவுகளுக்கு உடனேயே வர இயலவில்லை என்பதற்காகத்தான் என் மன்னிப்புடன் என் உடல் நலமின்மை காரணத்தை தெரிவித்தேன். வேறு ஒன்றுமில்லை..! உங்களின் அன்பான விசாரித்தலுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீராம், பிலஹரியின் கதை நடை அட்டகாசம்.
பதிலளிநீக்குஇதில் ஒரு பாராவின் அர்த்தம் (இதே நடை அல்ல இந்தக் காலத்து நடை. எழுதிக் கொண்டிருந்த!!!!!!!!!!!!!!! ஒரு கதையில் ஆண் கதாபாத்திரம்...)
கதாசிரியர் எப்படி முடித்திருப்பார் ஜானகியை எப்படி அடுத்த பகுதியில் படைத்திருப்பார் என்று யோசனை வருகிறது.
எனக்கென்னவோ ஜானகியைத்தான் மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவள் இந்த உலகம் போகும் போக்கில் இல்லை சற்று வித்தியாசமானவள் ஆட்டு மந்தைக் கூட்டத்தைச் சேர்ந்தவள் அல்ல என்றே தோன்றுகிறது....
இது அவள் தோழி வந்தப்ப உள்ள அந்த பாரா வாசித்ததும் வரும் கருத்து அடுத்து வாசித்து வருகிறேன்.
அழகான அந்தக்காலத்து நடை...ரசித்து வாசிக்கிறேன்
கீதா
ஜானகி பேசுகிறாள். அவள் பேச்சிலோ, பேசும் விதத்திலோ மழுங்கிய மூளையின் அபஸ்வரமே தட்டவில்லை. சிநேகிதி பிரமித்து நிற்கிறாள்.//
பதிலளிநீக்குபாருங்க நான் மேலே கருத்து சொல்லிட்டு அடுத்தாப்ல வாசிக்க வந்தப்ப இந்த லைன் ஆசிரியரே சொல்லியிருக்கிறார்....ஆர்வத்தைத் தூண்டுகிறது கதை
கீதா
வர்மம் வைச்சிருக்காம//
பதிலளிநீக்குவன்மம் என்று வரணுமோ ஸ்ரீராம்....
கீதா
ஆஹா இந்தக் கதைல ஜானகி கேட்பது போலத்தானே ஒரு பாத்திரப் படைப்பு....என் கதையில்....
பதிலளிநீக்குஇந்த உலகம் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்திப்பவர்களையும், பேசுபவர்களையும் இப்படித்தான் மூளை மந்தம் பைத்தியம் என்ற சொற்களில் சொல்லிப் பட்டம் கொடுத்துவிடும்.
நார்மலான மனிதர்களையும் இப்படி ஆக்கிவிடும்.
கீதா
"சும்மா இருடி!.. தெய்வமும் உலகமும் உசத்தியோ ? தெருவோட போறோம். நாய் ஒண்ணு குரைச்சுண்டே பின்னாலே வரும். நாம பாட்டுக்குப் போயிண்டிருந்தா, அதுவும் குரைச்சுண்டேதான் வரும். சடேர்னு திரும்பி, ஒரு கல்லை எடு, பார்ப் போம். வாலைச் சுருட்டிண்டு ஓடறதா இல்லையா, பார்! அதுமாதிரிதாண்டி உன் உலகமும் ! லட்சியம் பண்ணாம போறவளைப் பார்த்து 'பைத்தியம், ரெண்டுங் கெட்டான் ' ன்னு சொல்லிண்டே இருக்கும். சடேர்னு திரும்பிப் பார்த்து 'தூ'ன்னு ஒரு துப்புத் துப்பிட்டா... அவ்வளவுதான் வாயடைச்சுப் போயிடும் அதுக்கு. எனக்கும் அப்படிப் பண்ண காலம் வராமல் போயிடறதா, பார்க்க !"//
பதிலளிநீக்குஇந்த வரிகளை வாசித்ததும் என்னை அறியாமல் கை தட்டியது. சூப்பர்.
ரசித்த வரிகள் -
//''எனக்குத் தானே? அடுத்த முகூர்த்தத்திலே நடத்திட வேண்டியது தான் ! ஆனால்,நீங்கள் அவசியம் வரக் கூடாது - இப்படியெல்லாம் கிளறி விட்டு வேடிக்கை பார்க்கறதுக்கு!''//
//"அதென்ன பாட்டி அப்படிச் சொல்லி விட்டீர்கள்! ரெண்டு மாசம் முன்னால் உங்க தங்கை 'பொட் டுனு' கண்ணை மூடிட்டாளே! நீங்க தானே முதல்லே போயிருக்கணும். ஏன் போகல்லே?"-சிரித்தபடியே கேட்கிறாள் ஜானகி.//
கடைசி வரி ஏதோ ஓர் எதிர்பார்ப்பைக் கிளறுகிறது.
.
அந்தக் காலத்தில் ஜானகி போன்றவர்களைச் சுற்றத்தான் புரிந்து கொள்வதுகடினம் தான். இப்போது போன்று இல்லையே....கவுன்சலிங்க், Transactional analysis அது இது என்று.
கீதா
கதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//தழையத் தழையப் பின்னியிருந்த நீண்ட கருநாகக் கூந்தல். அதிலே - ஆட்சி செலுத்தும் ஒற்றை ரோஜா. வட்ட நிலா போன்ற வதனம். அதன் மையத்திலே - செதுக்கி அமைத்துள்ள சந்தனக் கட்டை போன்ற நெற்றியின் நடுவிலே - பளீரென்ற குங்கும்ப் பொட்டு. //
கதை வரிகளுக்கு பொருத்தமான மாயாவின் படம் அழகு.
முன்பு படித்த நினைவு வரவில்லை. எந்த வாரபத்திரிக்கையில் வந்தது? விகடனில் வந்து இருக்குமோ!
"மாங்கல்யதாரணம் ஆயிடுத்தாடா?" என்று கேட்கிறாள் ஜானகி.//
அடுத்து ஏதாவது நடுக்குமோ என்ற பயம் எழுகிறது, நல்லதே நடக்கட்டும் என்று மனசு நினைக்கிறது.
வணக்கம் சகோதரி
நீக்குநலமா? எப்படி இருக்கிறீர்கள்? உங்களை பதிவுலகில் பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது. உங்கள் வீட்டில் மகன், மகள் மருமகள் பேரன், குழந்தைகள் அனைவரும் நலமா? இன்று உங்களை இங்கு சந்திப்பது மனதிற்கு மகிழ்வாக உள்ளது. நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், நான் வலைபக்கம் வந்து ஒரு மாதம் ஆகி விட்டது.
வீட்டில் எல்லோரும் நலம். தொடர் அலைச்சல் கராணமாய் உடல் நிலை கொஞ்சம் சரியில்லை, அதனல் இங்கு வரமுடியவில்லை.
உங்கள் உடல் நிலை சரியாகி விட்டதா? வீட்டில் எல்லோரும் நலம் தானே?
உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ஒருவிதமாக நேரம் எடுத்துக் கதையைப் படிச்சுவிட்டேன்... சூப்பராகப் போகுது, அதிகம் அலட்டல் இல்லாமல் நன்றாகப் போகிறது, அதிலும் கதாசிரியர், ஜானகிக்கு இருக்கும் மனநலக் குறைவு பற்றி நன்கு ஆராட்சி பண்ணிப்போட்டுத்தான், கதையை எழுதுகிறார் என்பதும் புரியுது...
பதிலளிநீக்குமிக அழகாக, ஒரு கணம் ஒரு "முகமாக" மாற்றிக் காட்டுகிறார் ஜானகியை.. நன்று.
தொடரட்டும் படிக்கிறேன்.
இதில இன்னொன்று சொல்லோணும், கதையின் எழுத்துநடை, உச்சரிப்பு பார்க்கும்போது, ஸ்ரீராமின் சொல் நடை போலவே இருக்குதே, ஹா ஹா ஹா கதையை அப்படியே கொப்பி பேஸ்ட் பண்ணாமல், படித்துப் படித்துப்போட்டு உங்கட ஸ்டைலில் எழுதுறீங்களோ எனவும் எண்ணத் தோணுது:).
பதிலளிநீக்குகதைக்கேற்ப முதற்படம் சூப்பராக இருக்கு, ஆனா வரைந்தவர் பெயரை அதில் காணவில்லையே...
பதிலளிநீக்குமுதல் பாகத்தை படித்து விவரங்கள் தெரிந்து கொண்டேன். விகடனில் வந்த குறு நாவல் என்று தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்கு