சிறுவயதில் காலை ஆல் இந்தியா ரேடியோ திருச்சி, மதுரை வானொலி நிலையங்களில் அதிகாலை கேட்ட பகுதி பாடல்கள் மனதில் நின்ற வண்ணம் இருந்தன. அவற்றை 2022 மார்ச் 25 தொடங்கி சென்ற வாரம் வரை வரை பகிர்ந்து வந்திருக்கிறேன். நான் கேட்ட, மற்றும் அனைவர் அல்லது நிறையபேர் கேட்டிருக்கும் பிரபல அல்லது அடிக்கடி கேட்டிருக்கக் கூடிய பாடல்கள் காலியான நிலையில் வேறொரு யோசனை வைத்திருந்தேன். ஒரு பிறமொழிப் பாடல் ப்ளஸ் ஒரு தமிழ்ப் பாடல் என்று...
மிக ஆச்சரியகரமாக JKC ஸாரிடமிருந்து சில நாட்கள் முன்பு இந்த மெயில் வந்தது. அப்படி பிற மொழிப் பாடல்கள் என்று பகிரும் வகையில் நான் நிறைய ஹிந்திப் பாடல்கள் பகிரும் எண்ணத்தில் இருந்தேன். JKC இதை அனுப்பி இருப்பதால் இந்தப் பாடலுடன் தொடங்குகிறேன்.
============================================================
JKC Sir ன் மெயில்... அதைத் தொடர்ந்து பாடல்...
வணக்கம்\
வெள்ளி வீடியோ பதிவில் பிறமொழி பாடல்களையும், கருத்துக்கும்,
பாடலின் சிறப்புக்கும் ஏற்ப பாடல் காட்சியையும் உட்படுத்தி
பதிவிடலாம் என்பது எனது கருத்து.
உதாரணமாக ஒரு மலையாள சினிமா பாடலை மலையாள வரிகளுடன், அவற்றின்
தமிழ் உச்சரிப்புடன், தமிழ் மொழி பெயர்ப்புடன் தந்திருக்கிறேன். விருப்பம்
இருந்தால் பிரசுரிக்கவும்.
Movie : Arakkallan Mukkalkallan [1974] : அரைக்கள்ளன் முக்கால்
கள்ளன்.
Lyrics : P.Bhaskaran - பாடல் வரிகள் - பி. பாஸ்கரன்
Music : V.Dakishana Moorthy - இசை - வி. தக்ஷிணாமூர்த்தி
Singer : K.J.Yesudas - பாடியவர் - கே ஜே ஏசுதாஸ்
ராகம் : கீரவாணி
மலையாளப் பாடல் அப்படியே
தமிழில் - Transliterated version
நின்ற மிழியில் நீலோற்பலம்.
நின்னுடெ சுண்டில் பொன்னசோகம்
நின் கவிளினயில் கனகாம்பரம்
நீயொரு நித்ய வசந்தம்.
பிரேமகங்கையில் ஒழுகி ஒழுகி
வண்ண
காமதேவன்ர கஹளஹம்சமே
உள்ளிலே பொய்கையில் தாமரை
வலயத்தில்
ஊஞ்ஜலாடுக தோழி நீ
ஊஞ்ஜலாடுக தோழி
(நின்றெ)
வான வீதியில் உதிச்சு சிரிச்சு வரும்
பூநிலாவின்றே சகியானு நீ
இன்னென்ற சிந்தையாம் இந்திர சதஸிலாய்
இந்தீவர மிழியாடு நீ
இந்தீவர மிழியாடு
(நின்றெ)
பாடல் மொழியாக்கம்
உன்னுடைய விழிகளில் நீலோற்பலம்.
உன்னுடைய உதடுகளில் பொன் அசோகம்
உன்னுடைய கன்னங்களில் கனகாம்பரம்
நீ ஒரு நித்ய வசந்தம்.
பிரேம கங்கையில் மிதந்து வந்த
காமதேவனின் அம்சமே
உள்ளமது பொய்கையில் தாமரை
வட்டத்தில்
ஊஞ்சலாடுக தோழி நீ
ஊஞ்சலாடுக தோழி
வான் வீதியில் உதிச்சு சிரித்து வரும்
பூ நிலாவின் தோழி நீ
இன்று என்னுடைய சிந்தை என்ற
இந்திர சதஸில்
கருங்குவளை விழிப் பெண்ணான நீ ஆடுகிறாய்
கருங்குவளை விழிப் பெண்ணான நீ ஆடுகிறாய்
ஹரிஷ் : ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது
காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது
காதல்
ஹரிஷ் : முகவரி சொல்லாமல்
முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம்
அனுபவிக்கும் சுவாரஸ்யமானது
காதல் மிக மிக சுவாரஸ்யமானது
காதல்
ஹரிஷ் : சொல்லாமல் செய்யும்
காதல் கனமானது சொல்லச்
சொன்னாலும் சொல்வதுமில்லை
மனமானது சொல்லும் சொல்லை
தேடி தேடி யுகம் போனது இந்த
சோகம் தானே காதலிலே சுகமானது
ஹரிஷ் : வாசனை வெளிச்சத்தை
போல அது சுதந்திரமானதும்
அல்ல ஈரத்தை இருட்டினை
போல அது ஒளிந்திடும்
வெளி வரும் மெல்ல
ஹரிஷ்: ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது
காதல்
ஹரிஷ் : முகவரி சொல்லாமல்
முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம்
அனுபவிக்கும் சுவாரஸ்யமானது
காதல் மிக மிக சுவாரஸ்யமானது
காதல்
ஹரிணி : கேட்காமல் காட்டும்
அன்பு உயர்வானது கேட்டுக்
கொடுத்தாலே காதல் அங்கு
உயிராகுது கேட்கும் கேள்விக்காக
தானே பதில் வாழுது காதல் கேட்டு
வாங்கும் பொருளும் அல்ல
இயல்பானது
ஹரிணி : நீரினை நெருப்பினைப்
போல விரல் தொடுதலில்
புரிவதும் அல்ல காதலும்
கடவுளை போல அதை உயிரினில்
உணரனும் மெல்ல
ஹரிணி : ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ஹரிணி : முகவரி சொல்லாமல்
முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம்
அனுபவிக்கும் சுவாரஸ்யமானது
காதல் மிக மிக சுவாரஸ்யமானது
காதல்
முதல் பாடல்- மலையாளப் பாடல் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்கு//ராகம் (கீதா அக்கா கண்டுபிடிப்பார்.)//
ஜெ கே அண்ணா, கீதாக்கா அவங்களுடைய இப்போதைய சூழலில்
வலைப்பக்கம் வருவது எப்போதாவதுதானே.
கீதா
நான் இந்தப் பாடல் இப்போதுதான் கேட்கிறேன்.
நீக்குமுதல் பாடலும் நல்ல மெலடி....
பதிலளிநீக்குஅண்ணாவே அங்கு கொடுத்திருக்கிறார் ராகம்....கீரவாணி.
கீதா
சேர்த்து விட்டேன் கீதா... அது சரி, இரண்டாவது பாடல் என்ன ராகம்?
நீக்குபாடிப் பார்த்து சொல்ல முயற்சிக்கிறேன் ஸ்ரீராம்.
நீக்குகீதா
மத்தியமாவதி என்று என் மனதில் படுகிறது. ஸ்ரீ உள்ளே கொஞ்சம் எட்டிப் பார்க்கிறாரோ என்று ஒரு சின்ன ஐயம்.... உறுதி செய்து கொள்ள, தங்கையிடம் கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம்
நீக்குகீதா
__/\__
நீக்குஆனந்த பைரவியும் இருக்கிறதோன்னு !! ஹிஹிஹிஹி
நீக்குஎன் மனம், இந்தப் பாட்டைக் கேட்டு பாடிக் கொண்டு வரப்ப திடீர்னு மெட்டுப் போடு மெட்டுப் போடு பாடலின் சரண வரிக்குப் போகுது டக்குனு.....சரணத்தை முடித்து வரப்ப ரகசியமானது காதல்னு எடுத்தேன் என்னை அறியாமல்...
ஸோ கொஞ்சம் ஸ்வரம் எடுத்துப் பார்த்தாதான் பிடிபடும்....
தங்கையிடமிருந்தும் இன்னும் வரவில்லை
கீதா
:))
நீக்குஇரண்டாவது பாடலும் கேட்டிருக்கிறேன்...நல்ல மெலடி....ஆரம்ப இசையும் நல்லாருக்கும்.. பறவைச்சத்தத்துடன்...
பதிலளிநீக்குபாடல் வரிகள் பார்த்ததும் பாட்டு மெட்டு நினைவுக்கு வந்துவிட்டது!
ஆனா இந்தப் பாட்டு கோடம்பாக்கம்ன்ற படம் என்பது இப்பதான் தெரிகிறது
ஹரீஷ் ராகவேந்தர் இப்ப பாடுகிறாரா? ஹரிணி இப்ப எல்லாம் எப்போதாவதுதான் அவரது பாடல் வருகிறது என்று நினைக்கிறேன்.
கீதா
ஹரிஷ் இப்போல்லாம் பாடுகிறாரா என்றது தெரியவில்லை. ஏகப்பட்ட புது குரல்கள். எதுவும் மனதில் நிற்பதில்லை.
நீக்குஆனால் இந்தப் பாடல் செம மெலடி. வரிகளும் தடவிக்கொடுக்கும் இதம்.
யெஸ் யெஸ் ரொம்ப நல்லாருக்கும் இந்தப் பாடல் ...
நீக்குகீதா
ஹரிஷ் இப்போல்லாம் பாடுகிறாரா என்றது தெரியவில்லை. ஏகப்பட்ட புது குரல்கள்.//
நீக்குநிற்பதுவே நடப்பதுமே அதுக்குப் பிறகு தெரியவில்லை.
ஆமாம் புதுக்குரல்கள் நிறைய ஆனா நீங்க சொல்றது போல யாரு என்ன பாட்டு எதுவுமே மனசுல நிற்க மாட்டேங்குது. ஒரு பாட்டு அல்லது ரெண்டு பாட்டு அவ்வளவுதான் அதுக்குப் பிறகு தெரியலை ஆனா பேட்டி என்னவோ நிறைய வருது ஒரு பாட்டு பாடினதுமே!!!!
கீதா
கோடம்பாக்கம் படப் பாடல் காட்சி இப்பதான் பார்க்கிறேன் ஸ்ரீராம் அழகா இருக்கு படமாக்கிய இடங்கள்...எங்க ஊர்ப்பக்கம் போல இருக்கு.
பதிலளிநீக்குகீதா
இந்தப் பாடல் வெளியானதிலிருந்தே தொலைக்காட்சியில் பார்த்து, கேட்டு நான் மிகவும் ரசிக்கும் பாடல். என் அக்காவுக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். காலை ஐந்தரைக்கு எனக்கு மெசேஜ் அனுப்பி சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார். எபியில் தினமும் பதிவு வெளியான உடனேயே படித்து விடுவார்.
நீக்குசந்தோஷமான விஷயம் ஸ்ரீராம்....நம் உறவுகள், வெளி நட்புகளில் (அதாவது ப்ளாகராக இல்லாத நட்பு சொல்லறேன்) யாரேனும் ஒருவர் நம் பதிவைப் படித்து இப்படிச் சொல்லும் போது மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்!!!
நீக்குகீதா
எனக்கும் இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும் ஸ்ரீராம்.
நீக்குபல்லவிக்கும் சரணத்திற்கும் (முதல்) இடையில் வரும் ஆரம்ப இன்டெர்லூட் செமையா இருக்கும்...மொத்த இசையுமே நல்லாருக்கு.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம், நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரு பாடல்களுமே இப்போதுதான் கேட்டு ரசித்தேன். செவிகளுக்கு இனிமையாக இருந்தது. நல்ல ரசனை மிக்க வரிகள், இசை, பாடுகிறவர்களின் குரலினிமை என இரு பாடல்களும் நன்றாக உள்ளது.
சென்ற வாரத்திலிருந்து கிளைமாக்ஸ் காட்சிகள் என பல படங்களை பகிரப் போவதாக சொன்னீர்களே. .! ஆனால் இன்றைய மாற்றமும் அருமை. தங்களின் பல முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். எத்தனையோ தெரிந்த பாடல்களுக்கு நடுவே இப்படி தெரியாத நிறைய பாடல்களையும் கேட்டு ரசிக்கும்படியாக இருக்கும் உங்களின் வெள்ளி பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சோதனை முயற்சிகள் தொடரும் அக்கா... சோதனை உங்களுக்கும் சேர்த்துதான்... ஹா.. ஹா.. ஹா...
நீக்குஹா ஹா ஹா. சோதனைகள் தொடரட்டும். சோதனைகளும், ஒரு இதமான/ சுகமான முடிவுக்கு ஆரம்பபடிகள்தானே..! வரவேற்கிறோம். நன்றி.
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.... வணக்கம்.
நீக்குஇந்த வாரத்தின் பதிவுகள் சிறப்பு..
பதிலளிநீக்குமணி ப்ரவாளத் தமிழ் போல மணி ப்ரவாள மலையாளம் அருமை..
நன்றி.
நீக்குமணி ப்ரவாளத் தமிழைத் தான் ஒழித்துக் கட்டியாயிற்றே..
பதிலளிநீக்குயூ ட்டியூப்பர்களின் ஆங்கிலத் தமிழ் கேட்பதற்கே இல்லை...
:)))
நீக்குகோயில் பற்றிய செய்தியானால கொசகொச என்று இந்க்கிலீஸ் பிட்டுகள்...
பதிலளிநீக்குகேட்பதற்கே அறுவெறுப்பு..
இதில் என்ன இருக்கிறது செல்வாண்ணா... மெஸேஜ் கன்வே ஆனால் சரி!!
நீக்குஸ்ரீராம் ...
பதிலளிநீக்குநேற்று நீங்கள் அனுப்பி வைத்த தஞ்சை காணொளித் தொகுப்பின் இளைஞர் ஆர்வம் மிக்கவர்.. எனக்கு அவரை பிடிக்கும்...
ஆனால் பாருங்கள் ஆங்கிலத் தமிழ் எனக்குப் பிடிப்பதில்லை...
நேற்றைய
காணொளியில்
குட்டி குட்டி கருங்கல் என்கின்றார்..
அட்க் கொடுமையே!..
நான் அவரைத் தொடர்கிறேன். அவரின் நிறைய காணொளிகளில் என் கமெண்ட்டும் இருக்கும்!
நீக்குஅவருடைய காணொளிகள் எனக்கும் வரும்..
நீக்குகருத்து எல்லாம் செல்வதில்லை..
எனது பள்ளிக் காலங்கள் தஞ்சை என்பதால் ஒரு ஆர்வம், ஒரு பாசம்!
நீக்குவடை பஜ்ஜியைப் பார்த்து விட்டுச் செல்வதைப் போல நகர்ந்து விடுவேன்..
பதிலளிநீக்குLike மட்டும் உண்டு..
ஏனெனில் நீங்கள் தஞ்சையிலேயே இருக்கிறீர்கள்!
நீக்குஇரண்டாவது பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. முதல் தடவை கேட்கிறேன்.
பதிலளிநீக்குஆம்.. ரொம்ப இனிமையான பாடல். சிற்பியின் இசையில்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமலையாளப் பாடலும் கேட்க இனிமை. நடிக நடிகைகள் நன்றாக இல்லை.
நீக்குநெல்லை சார்
நீக்குமலையாள பட பாடலில் நடித்தவர்கள் பிரேம் நஷீர், ஜெய பாரதி.
பிரேம் நஷீர்
He was referred to as the Nithya Haritha Nayakan which means Evergreen Hero and super star of Malayalam cinema and holds two Guinness World Records; for playing the lead role in a record 725 films and for playing opposite the same heroine in 130 films. He died on 16 January 1989.
ஜெயபாரதி தமிழில் சிவகுமாரின் மனைவியாக மறுபக்கம் (இந்திரா பார்த்தசாரதியின் உச்சி வெயில்) என்ற படத்தில் நடித்தவர்.
Jayakumar
உங்கள் டூர் ஆபரேட்டர் நாலம்பலம் என்ற ராமர், பரதர், லக்ஷ்மணன், சத்ருக்கனன் கோயில்களான திருப்புரையாறு, கூடல்மாணிக்கம், மூழிக்குளம், பாயம்மல் ஆகிய க்ஷேத்திரங்களை உட்படுத்தியிருக்கிறாரா? இல்லை என்றால் அதற்க்கு ஒரு நாள் ஒதுக்கிச் சேர்க்கவும்.
நீக்குஜெ கே அண்ணா இதற்கு நெல்லை எங்கள் தளத்திலேயே பதில் சொல்லியிருக்கிறாரே பார்க்கலையா?
நீக்குகீதா
முதலாவது பாடல் இப்பொழுதுதான் கேட்கிறேன் அருமையான பாடல். நன்றி.
பதிலளிநீக்குஇரண்டாவதுபாடல் முன்பே கேட்டிருக்கிறேன் அதுவும் அருமையான பாடல்.
நன்றி மாதேவி.
நீக்குமுதல் பாடல் இனிமையாக இருக்கிறது இப்போதுதான் கேட்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டாவதுபாடல் நிறைய தடவை தொலைக்காட்சியில் கேட்டு இருக்கிறேன் நல்ல பாடல்.