இராயர் கோபுரத்தைக் கண்டபிறகு நாங்கள் அடுத்து இராமானுஜ மண்டபம் என்று அழைக்கப்படும் குடவரைக் கோயிலை அடைந்தோம்.
ராமானுஜ மண்டபம் (முற்றுப்பெறாத மண்டபம்)
இந்த மண்டபம் முதலாம் மஹேந்திரவர்மன் காலத்தையது. இது சிவனுக்காக ஏற்பட்ட கோயில் அல்லது சிவனின் மூன்று உருவங்களுக்கான கோயில். இங்குள்ள கல்வெட்டு, ருத்ரத்தை நெஞ்சினால் ஜெபிக்காதவர்கள் ஆறுமடங்கு பாவம் செய்தவர்கள் என்று சொல்கிறது. பிற்காலத்தில் (14-15ம் நூற்றாண்டில்) இந்த மண்டபத்தை வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் எடுத்துக்கொண்டு இங்கிருந்த உருவங்களைச் சிதைத்து அதன் மீது வைணவச் சிற்பங்கள் செதுக்கலாம் என்று நினைத்தனர். அதனால் இங்கிருந்த சுவற்றில் இருந்த பல்வேறுபட்ட சிற்பங்கள் முற்றிலும் உளியால் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது. வைணவர்கள் இதனைப் பிற்காலத்தில் ஆக்கிரமித்ததனால் இராமானுஜ மண்டபம் என்று அழைக்கப்பட்டாலும், மஹேந்திரவர்மன் காலத்தில் இது சிவனுக்கான கோயில்.
இந்தக் கோயிலை ஆக்கிரமித்தவர்கள் அதன் முன்பு மண்டபம் போன்று தூண்களை நிறுவியிருக்கிறார்களாம். மகேந்திரவர்மன் காலத்தில் இது இல்லையாம்.
முன்மண்டபத் தூண்களைக் கடந்துவிட்டால் பல்லவர்கால சிங்கத் தூண்களைப் பார்க்கலாம்.
சிதைக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள். எனக்கு முதல் சிற்பம் கஜலக்ஷ்மி தோற்றத்தைத் தருகிறது. இரண்டாவது சிற்பம் வேலைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் துர்கையை நினைவுபடுத்துகிறது.
முதல் படத்தில் உள்ளது ஜடாமுடியுடன் கூடிய சிவனாக எனக்குத் தோன்றுகிறது.
மண்டபத்தின் பக்கவாட்டுப் பகுதியில் சீராகச் செதுக்கப்பட்டிருக்கும் படிகள்.
மகாபலிபுரம் கலங்கரை விளக்கு 1904ல் ஏற்படுத்தப்பட்ட து. (2001லிருந்து விடுதலைப் புலிகள் பிரச்சனை காரணமாக (அதாவது இலங்கையிலிருந்து வரும் படகுகளுக்கு உபயோகப்படக்கூடாது என்று) இந்தக் கலங்கரை விளக்கம் உபயோகம் தடைபட்டது. அதையொட்டி உள்ள படம் மஹிஷாசுர மர்தினி கோயில்
மஹிஷாசுரமர்தினி கோயில்/மண்டபம்
இது ஒரு முக்கியமான குடவரைக்கோயில். இது துர்கையின் பிறப்பான மஹிஷாசுரமர்தினிக்காக அமைந்த கோயில். இதில் நடுவில் உள்ள சிறிய சன்னிதி, பின்னணியில் சிவனும் பார்வதியும் இருக்கும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் முன்பு தரையில் சிவலிங்கம் இருந்திருக்க வேண்டும். தற்போது லிங்கம் இருந்ததற்கான ஓட்டை மாத்திரமே தெரிகிறது.
சிவனின் சன்னிதிக்கு இருபுறமும் உள்ள மாடங்களில் தெய்வ உருவங்கள் இல்லை. ஆனால் துவாரபாலகர்கள் மாத்திரம் இருக்கிறார்கள்.
இந்த மண்டபத்தின் வடக்குப் பகுதியில் துர்கைக்கும் மஹிஷாசுரனுக்கும் நடந்த யுத்தம் சித்தரிக்கப்பட்டுள்ளது. போர்முனையில் இருப்பதால் எட்டு கரங்களிலும் ஆயுதங்களைத் தாங்கி துர்கை இருக்கிறாள்.
இந்த மண்டபத்தின் தெற்குப் பகுதிச் சுவற்றில் மஹாவிஷ்ணு, அனந்தசயனத் திருக்கோலம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் தாமரையுடன் இருக்கிறார். இவரின் மேற்புறத்தில் திருப்பாதங்கள் பகுதியிலிருந்து மது கைடப அரக்கர்கள் கோபத்துடன் பொருத வருவதுபோல இருக்கிறது. ஆதிசேஷன் அவர்களைப் பார்த்துச் சீறுவது போல வடிக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பார்க்கும்போது எனக்கு திருமெய்யம் குடவரைக் கோயிலில் இருந்த விஷ்ணு சிற்பம் நினைவுக்கு வந்தது. ,
ஓலைக்கண்ணீஸ்வரர் கோயில்/பழைய கலங்கரை விளக்கம்
இதுதான் பழைய கலங்கரை விளக்கம். இது சிவபெருமானுக்குரிய கோயில். இதன் மேல் பகுதியில்தான் விளக்கை எரித்தார்கள் பழையகாலத்தில். இது மஹிஷாசுரமர்தினி குகைக் கோயிலுக்கு அருகில் பெரிய பாறை மீது அமைந்துள்ளது. இது 8ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஓலைக்கண்ணீஸ்வரா கோவிலை எவ்வளவு உயரத்தில் கட்டியிருக்கிறார்கள் பாருங்கள்.
உலைக்கண் ஈஸ்வரர் (நெற்றிக்கண்) என்ற பெயர் மருவி ஓலைக்கணீஸ்வரர் கோயிலாக ஆகிவிட்டது. இதில் சிவலிங்கம் இருந்ததாம். 18ம் நூற்றாண்டுவரை வணங்கப்பட்டுவந்த கோயில் இது. பிறகு சிவலிங்கத்தை யாரோ அகற்றிவிட்டார்களாம்.
மேலே ஏறிச்சென்றால், கோயில் வெளிப்புறச் சுவற்றில் நிறைய சிற்பங்கள். ஆனால் ஒடுக்கமான பகுதி
சிற்பங்கள் பிரம்மாண்டமாக இருந்தாலும் அவை நுணுக்கமாக
இழைக்கப்படவில்லை.
பழைய கலங்கரைவிளக்கத்திலிருந்து புதிய கலங்கரைவிளக்கின் தோற்றம்
இன்னொரு புறத்தின் தோற்றம். காடுகளாக தற்போது இருக்கிறது. எப்போது கட்டிடங்கள் வருமோ?
சிவன், சிவகணங்கள் தோற்றங்கள் அழகாகவே இருக்கின்றன.
மேல் ஏறுவதற்குக் குறுகலான படிகள். பாதுகாப்பிற்காக
கம்பிவலைத் தடுப்பு போட்டிருக்கிறார்கள்.
அங்கிருந்து பார்த்தபோது இன்னொரு பாறையில் வெட்டப்பட்டிருந்தது. ஏதேனும் சிற்பத்திற்கான வேலையை ஆரம்பித்திருப்பார்களோ?
காலை வேளையில் சென்றிருந்தாலும், கூட்டம் மெதுவாக வர ஆரம்பித்திருந்தது. அது சரி.. வெயில் ஏறிவிட்டால் அப்புறம் எங்கே இந்த இடங்களுக்குச் செல்ல முடியும்?
தலசயனப் பெருமாள் கோவிலின் பின்புறமுள்ள குன்றில் இருந்த பல்வேறு புடைப்புச் சிற்பங்கள், கோவில்கள் போன்றவற்றைப் பார்த்த பிறகு கீழிறங்கி, அருகிலுள்ள ஐந்து ரதக் கோவில்கள் என்றழைக்கப்படும் இடத்திற்குச் செல்ல நினைத்தோம். குன்றுகளின் பல்வேறு இடங்களுக்கு ஏறி வந்த களைப்பில், மனைவி ஐந்து ரதம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கேட்டாள். கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அங்கிருந்த ஆட்டோக்காரிடம் ஐந்து ரதம் பார்க்கணும், அங்கு 20 நிமிடங்களாகும், பிறகு எங்களை கோவில் முன்புறத்தில் இறக்கிவிடணும் என்று பேசிக்கொண்டு ஆட்டோவில் ஐந்து ரதத்திற்குச் சென்றோம். ஆட்டோகாரரோ, நீங்க மெதுவா இந்த இடத்தைப் பார்த்துவிட்டு என்னைக் கூப்பிடுங்கள் (போன் நம்பர் கொடுத்தார்), நான் வந்து உங்களை கோவில் முன்பு டிராப் பண்ணுகிறேன் என்றார்.
ஐந்து ரதங்கள் அமைந்திருந்த பகுதி அருகில்தான் இருந்தது. அங்கு என்ன கண்டோம் என்பதை அடுத்த வாரம் காண்போமா?
(தொடரும்)
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... நமக்கும் அதே ப்ரார்த்தனைகள்தாம். இன்று எங்களிடத்திலிருந்து சுமார் 12 கிமீ தூரத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோவிலில் கல்யாண உத்சவம் மற்றும் பிரபந்தம் சேவிக்கச் செல்கிறோம்.
நீக்குஎல்லோரும் கூடவே நடந்து களைத்து விட்டார்களா? யாரையும் காணோம்.
பதிலளிநீக்குபதிவின் விவரங்கள் புதிது. படங்கள் எப்போதும் போல் துல்லியம், அழகு.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். ஞாயிறு அல்லவா? கொஞ்சம் அதிகமாக ஓய்வெடுப்பார்கள். நான் காலையில் பத்து கிமீ நடந்துவிட்டு, ஜிம்மில் முக்கால் மணி நேரம் செலவழித்தபிறகு, இன்னும் ஒரு மணி நேரத்தில் கோயிலுக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறேன்.
நீக்கு// எல்லோரும் கூடவே நடந்து களைத்து விட்டார்களா? யாரையும் காணோம்.//
நீக்குஎனக்கென்னவோ JKC இதைச் சொல்லி இருப்பது, நீங்கள் மட்டும் அந்த ஒரு புகைப்படத்தில் இருப்பதைப் பார்த்து விட்டு என்று தோன்றுகிறது!
அங்கு நிறையப் பேர் வர ஆரம்பித்துவிட்டார்கள். புகைப்படத்தில் இடமும் வரணும் நானும் இருக்கணும் என்று ஒரு புறத்தில் இறங்கும்போது எடுத்த புகைப்படம் அது. அதனால் யாரும் இல்லாததுபோல் தெரிகிறது
நீக்குJKC நீங்கள் தனியாக நிற்பதைச் சொல்ல வந்தாரா, அல்லது எபியில் இன்னும் வாசகர்கள் வரவில்லை என்பதைச் சொல்ல வந்தாரா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்!!!.
நீக்குஎ பி யின் அட்டண்டன்ஸ் பற்றித்தான்.
நீக்குJayakumar
வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கோவில் தரிசன பகுதி படங்களும், விளக்கங்களும் எப்போதும் போல் மிக அருமையாக உள்ளது.
/இந்த மண்டபம் முதலாம் மஹேந்திரவர்மன் காலத்தையது. இது சிவனுக்காக ஏற்பட்ட கோயில் அல்லது சிவனின் மூன்று உருவங்களுக்கான கோயில். இங்குள்ள கல்வெட்டு, ருத்ரத்தை நெஞ்சினால் ஜெபிக்காதவர்கள் ஆறுமடங்கு பாவம் செய்தவர்கள் என்று சொல்கிறது. பிற்காலத்தில் (14-15ம் நூற்றாண்டில்) இந்த மண்டபத்தை வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் எடுத்துக்கொண்டு இங்கிருந்த உருவங்களைச் சிதைத்து அதன் மீது வைணவச் சிற்பங்கள் செதுக்கலாம் என்று நினைத்தனர். அதனால் இங்கிருந்த சுவற்றில் இருந்த பல்வேறுபட்ட சிற்பங்கள் முற்றிலும் உளியால் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது. வைணவர்கள் இதனைப் பிற்காலத்தில் ஆக்கிரமித்ததனால் இராமானுஜ மண்டபம் என்று அழைக்கப்பட்டாலும், மஹேந்திரவர்மன் காலத்தில் இது சிவனுக்கான கோயில்./
இதை படிக்கும் போது, தெய்வங்களுகிடையே பாகுபாட்டை ஏன் இந்த மனிதர்கள் உண்டாக்கினார்கள் என யோசிக்க வைக்கிறது. அழகான சிற்பங்களை ஒரு கலையாகக் கூட கருதாமல், ஏற்படுத்திய தெய்வ உருவங்களை சிதைக்குமளவிற்கு எப்படித்தான் மனம் வந்ததோ? சிதைந்த புகைப்படங்களை பார்க்கும் போது மனது வேதனைப்படுகிறது.
மற்ற அத்தனை படங்களும், அதன் விளக்கங்களும் அருமையாக உள்ளது. உங்களுடன் நானும் மாமல்லபுரம் வந்து நேரில் பார்த்ததை போன்ற உணர்வை தருகிறது தங்களின் பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் எண்ணமும் வேதனையும் சரிதான். அடக்குமுறை, ஆக்கிரமிப்பின் மூலம் இந்தியாவில் பிறந்த மதங்களைத் திணித்துவிட முடியாது, கலைப் படைப்புகளை கலைப்படைப்பாகத்தான் பார்க்கணும் என்ற எண்ணம் வருவதற்கே மனது பக்குவப்பட வேண்டுமல்லவா?
நீக்குபதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி.
// இதை படிக்கும் போது, தெய்வங்களுகிடையே பாகுபாட்டை ஏன் இந்த மனிதர்கள் உண்டாக்கினார்கள் என யோசிக்க வைக்கிறது. அழகான சிற்பங்களை ஒரு கலையாகக் கூட கருதாமல், ஏற்படுத்திய தெய்வ உருவங்களை சிதைக்குமளவிற்கு எப்படித்தான் மனம் வந்ததோ? சிதைந்த புகைப்படங்களை பார்க்கும் போது மனது வேதனைப்படுகிறது. //
நீக்குஉண்மை. எனக்கும் அதே வேதனைதான்.
தெய்வங்களுக்கிடையே மாத்திரமல்ல, கிறிஸ்துவை எப்படி வழிபடுவது என்பதிலும் நிறைய பிரிவுகள். இந்த வம்பே வேண்டாம் என்பதால், முஸ்லீம்கள் தொழும் கடவுளுக்கு உருவம் கொடுப்பதே பெரிய தவறு என்று மதக் கொள்கையாக ஆகிவிட்டது. அதுவும் தவிர, அவர்களின் இறை தூதர்களுக்கும் உருவம் கொடுப்பதோ இல்லை அவர்களை வழிபடுவதோ பெரிய தவறு என்றும் வைத்துள்ளார்கள். (ஆனால் அவர்களிடமும் பிரிவுகள் உண்டு)
நீக்குநம்முடைய பெற்றோர்கள்தாம் உலகத்திலேயே மிகப் பெரியவர்கள் என்று நம்பும் உரிமை நமக்கு உண்டு. ஆனால், அடுத்தவருடைய பெற்றோரைவிட...என்ற ஒப்பீடுதான் அனைத்து அனர்த்தங்களுக்கும் முதல் படி.
வெட்டப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கும் அந்தப் பாறையைப் பார்த்தால் யானையின் பின்புறம் போல இல்லை?
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம். பாறைக் குன்றுகள் நமக்கே கற்பனையை உண்டாக்கும்போது சிற்பிகளுக்குக் கேட்கவா வேணும்?
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவடிவேலும் மயிலும் துணை
நீக்குஎபியின் ஞாயிறு பக்கங்கள் புதிய பரிணாமத்தில்!.
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜு சார். ஞாயிறு பதிவு எப்போதும்போல்தானே இருக்கிறது?
நீக்குஎனக்கு சரியான புரிதல் இல்லை...
நீக்குசொல்ல வந்ததை தெளிவாகச் சொல்வதற்குத் தெரிய வில்லை..
பதிவு சிறப்பாக இருக்கின்றது என்பதை சொன்னேன்...
நீக்குநன்றி துரை செல்வராஜு சார். உங்கள் பல்வேறு வேலைகளுக்கிடையில் மொபைல் மூலமாகவே நீங்கள் தினமும் ஒரு பதிவு போடுவது என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்துகிறது. தொடருங்கள்.
நீக்குபங்களாதேஷில் கிருஷ்ண வழிபாட்டு தலத்தை யாரோ மர்ம நபர்கள் கொளுத்தி விட்டார்களாம்...
பதிலளிநீக்குமதம் முன்னிலைப்படுத்தப் படும்போது மனிதர்களுக்கு மதம் பிடிப்பது இயற்கைதானே
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநான் மாமல்ல புரத்தில் இங்கெல்லாம் செல்லவில்லை...
பதிலளிநீக்குஅப்போது இன்னும் கொஞ்சம் சுற்றி இருக்கலாம்..
உண்மைதான் துரை செல்வராஜு சார். நிறைய நடக்கணும், அலையணும். அந்த அந்த வயதில்தான் இவையெல்லாம் சரிப்படும். கோயில்கள் என்றால் எப்பாடு பட்டாவது, கஷ்டப்பட்டாவது சென்றுவிடுவோம். இவையெல்லாம் சுற்றுலாத் தலங்கள்தானே
நீக்குஇந்த மத பாகுபாகுபாடுகள், ஒரு மதத்திற்குள்ளேயே ஒவ்வொரு தத்துவத்திற்கும், தெய்வங்களுக்கிடையேயும் இப்படிப் பாகுபாடுகள் வேதனை ஒரு புறம் கூடவே எனக்கு அதில் உடன்பாடில்லை என்பதால்தான் நான் என் மனதில் மாபெரும் சக்தியாகப் பார்ப்பது. வணங்குவது.
பதிலளிநீக்குஎந்தவித பாரபட்சமும் வராது. எதிலுமே.
கீதா
வாங்க கீதா ரங்கன்(க்கா). நீங்கள் சொல்வது சரிதான். ஒருவர் சிவ பக்தனாக இருந்தால், எந்தக் கோவில் இறையையும் சிவனாகப் பார்க்கும் தன்மை இருக்கவேண்டும். இதேதான் விஷ்ணுவை வணங்குபவருக்கும், துர்கையை வணங்குபவருக்கும். பாரபட்சம் என்பதே தவறு (காரணம் நமக்கெல்லாம் - அனேகமாக எல்லோருக்கும், அந்தத் தகுதியே கிடையாது என்பது என் எண்ணம்)
நீக்குபாறைச் சிற்பங்கள் சூப்பர், ஒவ்வொன்றும் செமையா செதுக்கியிருக்காங்க....நீங்க எடுத்த விதமும் சூப்பர்.
பதிலளிநீக்குஅத்தனை படங்களையும் ரசித்து பார்த்தேன்.
மகிஷாசுர வதம் அந்தச் சிற்பம் என்ன தெளிவு இல்லையா?
கீதா
ஆமாம் கீதா ரங்கன். 3-4 சிற்பங்கள் மிக மிக அருமையாகச் செய்திருக்கிறார்கள் (செதுக்கியிருக்கிறார்கள்).
நீக்குநானும் இப்பகுதியிலிருந்து கடற்கரையைப் பார்த்ததை போன பதிவில் சொல்ல நினைத்தேன்....இங்கு கொஞ்ச தூரம் சென்றதும் இடையில் மரங்களும் கடலும் தெரியுமே என்று.
பதிலளிநீக்குஇன்னிக்கு அவை வந்துவிட்டன. ஆமாம் இந்த மண்டபம் அருகில் தான்...இதைக் கடந்தா வெளியில்தானே...
ஐந்து ரதம் பகுதியில் பக்கிங்க்ஹாம் கனால் தண்ணி ஓடும்...பாலம் இருக்கும் அப்புறம் ஓடும் தண்ணி அடி வழி இந்தப் பக்கம் வந்து அருகில் பீச் ஆனால் இப்ப தேங்கி இருக்கும் பகுதியாக இருந்தது பாண்டிச் சேரி செல்லும் போது இப்பகுதி தெரியும்.
ஐந்து ரதம் கொஞ்சம் தூரம் நடக்க வேண்டும். உள் வழி செல்லலாம் இருப்பிடங்கள் தெருக்கள் வழியும் செல்லலாம்.
மஹாபலிபுரம் முழுவதும் நிதானமாகப் பார்க்க அரை நாள் வேண்டும். ஆனால் வெயில்...நாங்கள் மாலையில் சென்றோம். பசங்க கூட என்பதால். மாலையில் என்றால் வீட்டிலிருந்து மதியம் கிளம்பி பஸ் பிடித்து (அப்ப ஈசி ஆர் அருகில்தான் இருந்தோம்)....கிறிஸ்துமஸ் லீவு என்பதால் கொஞ்சம் வெயில் கம்மி.
கீதா
நீங்கள் சொன்னது சரிதான் கீதா ரங்கன். என்னுடைய எண்ணம், மஹாபலிபுரம் இடங்களைப் பார்க்கச் சரியான நேரம் காலை 9 மணிக்குள், அதுவும் நவம்பர்-ஃபெப்ருவரி. வெயில் காலங்களில் போனால் கொஞ்சம் கசகச வெனவும், கூட்டமும் இருக்கும்.
நீக்குமாமல்லபுரம் அழகிய படங்களுடன் கண்டோம்.
பதிலளிநீக்கு"இங்கிருந்த சுவற்றில் இருந்த பல்வேறுபட்ட சிற்பங்கள் முற்றிலும் உளியால் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது. வைணவர்கள் இதனைப் பிற்காலத்தில் ஆக்கிரமித்ததனால் இராமானுஜ மண்டபம் என்று அழைக்கப்பட்டாலும், மஹேந்திரவர்மன் காலத்தில் இது சிவனுக்கான கோயில்./
இதேதான் பல இடங்களில் காணக் கூடியதாக இருக்கிறது மத வேற்றுமை செய்யும் வேலையால் பலதும் அழிந்துபோவது .
அடுத்து ஐந்துரதம் காண வருகிறோம்.
வாங்க மாதேவி அவர்கள். திருவாரூரில் தியாகேசர் கோவில் மிகப் பெரியது. அந்தக் கோவிலில் மிகப் பெரிய அளவில் உள்ள புத்தர் சிலையைப் பார்த்தேன். இதைப்பற்றி பின்பு எழுதுவேன்.
நீக்குஇருக்கும் கோவிலை இடிப்பது, மாற்றி வேறு தெய்வத்துக்குரியதாக ஆக்குவது என்பதெல்லாம் என்னால் சீரணிக்க முடியாத விஷயங்கள்.
மாமல்லபுரம் அனைத்து படங்களும் அருமை. வரலாற்று செய்திகளும் தெரிந்து கொண்டேன்.பழைய, புதிய கலங்கரை விளக்கம் படங்கள் அருமை.
பதிலளிநீக்குகலங்கரை விளக்கம் படத்தில் இந்த புதிய கலங்ககரை விளக்கத்தில் ஏறி ஓடுவார் சரோஜாதேவி, சிவகாமி சிவகாமி என்று எம்.ஜி. ஆர் ஓடுவார். ஆனால் அந்த கலங்கரை விளக்கம் அவர்கள் தயார் செய்தது.
பொன்னெழில் பூத்தது புது வானில் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
முன்பு உள்ள பழைய சினிமாவில் அடிக்கடி மகாபலிபுரம் காட்டுவார்கள். மனதில் தங்கி விட்டவை பார்த்து பார்த்து.
இப்போது உங்கள் பதிவில் நல்ல தெளிவாக பக்கத்தில் போய் பார்த்தது போல பார்த்து விட்டேன். மகிஷாசுர வதம் அந்தச் சிற்பம் நல்ல காலை வேளை படம் எடுத்ததால் பளிச் என்று இருக்கிறது.
வாங்க கோமதி அரசு மேடம். நிறைய பயணங்களுக்குப் பிறகு சோர்வு நீங்கிவிட்டதா?
நீக்குகாலை வேளையில் புகைப்படம் எடுத்ததால் பளிச்சென்று இருக்கிறது.
பழைய படங்களில் மகாபலிபுரம் வரும். அப்போதைய நிலைமையைவிட இப்போ இன்னும் அழகாக இருக்கிறது. நன்றி
/// தற்போது லிங்கம் இருந்ததற்கான ஓட்டை மாத்திரமே தெரிகிறது.,///
பதிலளிநீக்குலிங்கம் இருந்ததற்கான பீட த்வாரம் மாத்திரமே தெரிகிறது என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும்..
இப்படிக் கூறியிருப்பது தவறென்றால் விட்டு விடவும்..
துரை செல்வராஜு சார்..நீங்க எழுதியிருப்பது சரிதான். ஆனால் இந்த மாதிரி பதிவுல்லாம் எழுதும்போது சரியான வார்த்தை சிக்காது. அதனால் நமக்குத் தெரிந்த வார்த்தையை உபயோகப்படுத்திவிடுகிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி
நீக்குமுதல் படத்தைப் பார்க்கும்போது, ராமானுஜர் மண்டபம் தெரியவில்லை, 2 முதலைகள் படுத்திருப்பதுபோலவே தெரியுதே ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குஏதோ படசூட்டிங்போல ஒரு இளைஞர் படி இறங்குகிறார்... அண்ணி அதனை சூட் பண்ணியிருக்கிறா ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் தெளிவாக இருக்குது, நீங்க போன பகுதியில் சொல்லியிருப்பதுபோல[என் கொமெண்ட்டுக்குப் பதிலில்], வெயில் இல்லாத நேரம் போனால்தான் தெளிவாக எடுக்க முடியும்.
பதிலளிநீக்குநான் பல வீடியோக்கள் சன் கிளாஸஸ் ஐக் கழட்டாமல் அதனூடாகவே எடுத்திருக்கிறேன், அப்படி அங்கத்தைய வெயிலை என்னால் தாங்கவே முடிவதில்லை, சன் கிளாஸஸ் இல்லை எனில் தலையிடிக்கத் தொடங்கிடும் எனக்கு.
அங்கு 8 மணிக்கே நல்ல வெயில் வந்திடுதே....
எனக்கும் சில நாட்களாக தொண்டை நோ, இருமல், மெல்லிய காச்சல் இப்படி நகருது நாட்கள்...