வெங்காயத்தொக்கு
இட்லி, தோசைக்கு தகுந்ததொரு பக்கத்துணை. செய்வதும் சுலபம். ஆனால் ருசி அபாரமாக இருக்கும். ஆனால் இது சின்ன வெங்காயத்துடன் மட்டுமே செய்ய வேண்டிய தொக்கு! இனி தொக்கு செய்யப்போகலாம்!
தேவையானவை:
உரித்த சின்ன வெங்காயம்- 2 கைப்பிடி
தக்காளி பழுத்ததாய் மீடியம் சைஸில்-1
புளி- சிறிய எலுமிச்சம்பழ அளவு
மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
தேவையான உப்பு
நல்லெண்ணெய்- 6 மேசைக்கரண்டி
வெந்தயம்- 1 ஸ்பூன், பெருங்காயப்பொடி- 1 ஸ்பூன்
செய்முறை:
புளியை வென்னீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் பெருங்காயப்பொடியுடன் பொடித்துக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்த தக்காளியுடன் ஒரு மிக்ஸியில் போட்டு ஒன்று பாதியாக நசுக்கவும்.
மறுபடியும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் 4 மேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றவும்.
வெங்காயக்கலவையை எண்ணெயில் போட்டு மஞ்சள் பொடி சேர்த்து மிதமான தீயில் சில நிமிடங்கள் வதக்கவும்.
பின் புளிக்கரைசல் மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
கலவை சுருண்டு வந்ததும் வறுத்த பொடியைச் சேர்த்துக் கலந்து மிகக் குறைந்த தீயில் ஐந்து நிமிடம் சமைக்கவும்.
பாக்கியுள்ள எண்ணெயை ஊற்றி, உப்பும் திட்டமாகச் சேர்த்துக் கலக்கி மேலும் குறைந்த தீயில் 2 நிமிடங்கள் வைத்து பிறகு இறக்கவும்.
ஒரு வாரம் வைத்திருந்து உபயோகிக்கலாம்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம், நன்றி.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்று தங்களுடன் செய்முறையான வெங்காய தொக்கு மிக அருமையாக வந்துள்ளது. நானும் இந்த முறையில்தான் இந்த தொக்கு செய்வேன்.
ஒரு நாளைகென இதை பயன்படுத்தும் போது வதக்கிய வெங்காயம், தக்காளியை வறுத்த வெந்தயம், ஒன்றிரண்டு சி. மி ஒரு ஸ்பூன் உ. ப, ஒரு ஸ்பூன் க. ப இவைகளுடன் மிக்ஸியில் அரைத்து பயன்படுத்தி விடுவேன்.
நீங்கள் சொல்வது போல வாரக்கணக்கில் வைத்திருந்து சாப்பிட இந்த செய்முறை கண்டிப்பாக உதவும். படங்கள் மற்றும் செய்முறை நன்றாக உள்ளது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருத்தம்:- தங்களுடைய எனப் படிக்கவும். நன்றி.
நீக்குஇன்றைக்கு எனது குறிப்பை இங்கே வெளியிட்டுள்ளதற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
பதிலளிநீக்குஇனிமையான பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கமலா ஹரிஹரன்!!
பதிலளிநீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநாங்கள் பூண்டு அல்லது கருவேப்பிலை அல்லது இரண்டும் சேர்த்து கொள்வோம். வாசனைக்காக.
Jayakumar
வெங்காயத்தில் நுண்மங்கள் பல நிறைந்துள்ளன..
பதிலளிநீக்குபள்ளி நாட்களில் பழய சோறும் பச்ச வெங்காயமும் தான் இன்று வரை இருக்கின்ற ஆரோக்கியத்தைத் தந்தவை..
வெங்காயம் வதக்கிய சோறும் சிறப்புடையதே..
நல்லதொரு குறிப்பு..
வாழ்க நலம்..
நல்லதொரு செய்முறை.
பதிலளிநீக்குஅருமையான வெங்காயத் தொக்கு .சுவையானதும்.
பதிலளிநீக்குநாங்களும் செய்வோம்.
சிறப்பான ரெசிப்பி
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
மனோ அக்கா நாவூறுகிறது. ரொம்பப் பிடித்த தொக்கு. நல்ல செய்முறை விளக்கம்.
பதிலளிநீக்கு//வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் பெருங்காயப்பொடியுடன் பொடித்துக்கொள்ளவும்//
அதே அதே ....வெந்தயம் போடும் போது அந்தச் சுவை அபாரமாக இருக்கும் இந்தத் தொக்கு...என் மகனுக்கு அனுப்புவதில் இது கண்டிபாக இருக்கும்.
கீதா
மிகவும் அருமையான தொக்கு.
பதிலளிநீக்குநானும் செய்வேன், வழி பயணத்திற்கு மிக நன்றாக இருக்கும்.
படங்களும், செய்முறையும் மிக அருமை.
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!!
பதிலளிநீக்குஇனிய பாராட்டிற்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!
பதிலளிநீக்குஅன்பான பாராட்டிற்கு இனிய நன்றி மாதேவி!
பதிலளிநீக்குஇனிமையான பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!!
பதிலளிநீக்குஅன்பான பின்னூட்டத்திற்கும் இனிய பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி கீதா!
பதிலளிநீக்குஇனிய பாராட்டிற்கும் அருமையான கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!!
பதிலளிநீக்கு