உளுந்து சட்னி
தேவையானவை:
முழு உளுந்து 50 gr
சின்ன வெங்காயம் 15
பூண்டு 5 பல்
மிளகு ஒரு tsp
தக்காளிப் பழம் ஒன்று
தாளிப்பதற்கு :
கடுகு சிறிதளவு
கறிவேப்பிலை ஒரு இணுக்கு நல்லெண்ணெய்,
கல் உப்பு தேவைக்கு .
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, மிளகு இவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவும்..
அடுத்து -
உரித்த வெங்காயம், பூண்டு நறுக்கிய தக்காளி இவற்றையும் வதக்கிக் கொள்ளவும்.
அனைத்தையும்
சற்று நேரம் ஆற வைத்து, ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்..
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் -
கடுகு, கறிவேப்பிலை தாளித்துப் போட்டு இறக்கி
இட்லி தோசைக்கு பரிமாறவும்.
ஜனனேந்திரியங்களை பலப் படுத்துவதில்
உளுந்து முக்கிய பங்காற்றுகின்றது..
அக்காலத்தில் பருவம் எய்திய பெண்களுக்கு உளுத்தங் களியுடன் நல்லெண்ணெய் கலந்து கொடுப்பர்..
வேறு சில விஷயங்களும் இருக்கின்றன.. பொது வெளியில் சொல்வதற்கு சித்த மருத்துவம் பயின்றவன் அல்ல நான்..
உளுந்து சட்னி மூட்டு வலி குறைவதற்கும் நல்லது...
பிரியாணி யுகத்தில் வாழ்கின்றோம்.. உளுந்தங்களி சட்னி இவற்றுக்கு என்ன மரியாதையோ!?..
ஆரோக்கியம் என்று வருவதால் வற மிளகாய் சேர்க்கப்படவில்லை..
சரிதான் போ யா.. - என்பவர்கள் விருப்பம் போல வற மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்..
தரமான சமையல்
தருமே மகிழ்ச்சி
நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
ஃஃ
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்..
நீக்குஅனைவருக்கும் நல்வரவு..
பதிலளிநீக்குவருக... வருக...
நீக்குஇதனைப் பதிவு செய்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
பதிலளிநீக்குநாங்களும் நன்றி.
நீக்குஉளுந்துச் சட்னி வித்தியாசமான செய்முறை.
பதிலளிநீக்குஎங்கள் பக்குவத்தில் பூண்டு வெங்காயத்திற்கு வேலையில்லை.
பூண்டு வெங்காயம் கூடாது என்றால் அதற்கு மாற்று இல்லையா?..
நீக்குஉளுந்தைச் சிவக்க வறுக்கச் சொல்லியிருக்கீங்க. படத்தில் கறுப்பு உளுந்து இருக்கிறது. அது சிவக்க வறுபட்டதா என்று எப்படிப்்பார்ப்பது?
பதிலளிநீக்கு:))
நீக்குஹாஅஹாஹா நெல்லை வறுத்துப் பார்த்தாதானே தெரியும்!!!! (உங்களை வம்புக்கு இழுக்கலைனா நெல்லை அண்ணேன்னு சொல்றதுல அர்த்தமே இல்லை!!!!!!)
நீக்குதீயை குறைவாக வைத்துக் கொண்டு தொலி உளுந்தை வறுக்கணும். இல்லேனா தோல் வறுபட்டு உள்ள வறுபடாம இருக்குமே....வறுபடும் போது நல்ல வாசனை வரும். அது ஒரு தனி வாசனை. அதை வைச்சே கண்டுபிடிச்சிடலாம் உள்ள வறுபட்டிருக்கும்னு. மேல் கறுப்பும் மாறும்.
கீதா
இப்போதெல்லாம் மிளகாய் காரம் அதிகமாகச் சேர்த்துக்கொள்கிறேன். ஒரு தோசைக்கு 3 ஸ்பூன் மிளகாய்ப்பொடி. இதனால் உடம்பிலும் உப்பு சேர்கிறதோ என்ற டவுட் வேறு வருகிறது.
பதிலளிநீக்குதுரை செல்வராஜு சாரோ மிளகாயைச் சேர்க்க வேண்டாம் என்கிறார். அர்த்தம் இல்லாமலா இருக்கும்?
:))
நீக்குகுடலில் அழற்சி புண் முதலானவையும் செரிமான கோளாறுகளுக்குக்கும்மிளகாய் வற்ற்ல் தான் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்..
நீக்குகறுப்பு உளுந்தை சிவக்க வறுக்கும்படிச் சொல்லி...
பதிலளிநீக்குஅங்கே தான் இருக்கின்றது ரசனை..
அன்பிந் நெல்லை அவகளது வருகையும் கருத்துகளும் மகிழ்ச்சி..
பதிலளிநீக்குநன்றி
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக வருக..
நீக்குமகிழ்ச்சி
நன்றி..
நல்ல செய்முறைக் குறிப்பு , துரை அண்ணா.
பதிலளிநீக்குநம்ம வீட்டில் உளுந்து சாதம் செய்வதுண்டு திருநெல்வேலி பக்கங்களில் அதற்கு எள்ளுச் சட்னி போல (புளியோதரை எள்ளோரை தவிர) சில கலவை சாதங்களுக்கு உளுந்து சட்னி செய்வதுண்டு. அப்போதும் இப்போதும் நான் தொலி உளுந்து உடைத்தது பயன்படுத்துகிறேன். முழு தொலி உளுந்து முன்பு ஊரில் வாங்கியதில்லை ஆனால் நான் நம் விட்டில் வாங்குவதுண்டு.
இப்படிச் செய்வதற்,கும், தால் மக்கனி செய்வதற்கும், அடை செய்வதற்கும் பயன்படுத்துவதுண்டு.
உங்க ஊர்ப்பக்கம் கறுப்பு உளுந்தும் புழுங்கலரிசியும் மட்டும் போட்டு அடை செய்வதுண்டே துரை அண்ணா.
கீதா
உண்டு.. உண்டு...
நீக்குநான் சாப்பிட்டு இருக்கேன்..
மகிழ்ச்சி..
நன்றி சகோ
/// உளுந்து வறுபடும் போது நல்ல வாசனை வரும். அது ஒரு தனி வாசனை. அதை வைச்சே கண்டு பிடிச்சிடலாம் ///
பதிலளிநீக்குநான் சொல்ல நினைத்தேன்.
நன்றி சகோ
உடல் நலனுக்கு உகந்த உளுந்து சட்னு. நல்ல செய்முறை.
பதிலளிநீக்குநீங்கள் கூறியது போல மிளகு காரம் உடல் நலனுக்கு நல்லது.
அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி
நன்றி மாதேவி..
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் உளுந்து சட்னி செய்முறையை நன்றாக விளக்கி கூறியுள்ளீர்கள். முழு உளுந்து தோல் அகற்றாமல் சாப்பிட்டால் அதிலுள்ள சக்திகள் உடலுக்கு அதிகமாக கிடைக்குமென்று சொல்வது உண்மைதான். அதனால்தான், கறி கூட்டு வகைகளுக்கு தாளிப்பதற்கு கூட அதைத்தான் பயன்படுத்துவோம். இன்றைய உளுந்து சட்னி நன்றாக உள்ளது ஒரு முறை இப்படி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மை தான்..
நீக்குஅன்பின்
வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி
நன்றி ..
உளுந்து சட்னி நன்றாக இருக்கிறது .படங்களும், செய்முறையும்.
பதிலளிநீக்குதோல் உளுந்து நன்றாக வ்றுத்து இருக்கா என்று சந்தேகம் படுபவர்கள் கறுப்பு உளுந்துடன் கொஞ்சம் வெள்ளை முழு உளுந்தை அதனுடன் வறுத்து கொண்டால் சிவப்பாக வறுபட்டது தெரியும் என்று இப்போது சமையல் குறிப்பு சொல்பவர்கள் சொல்கிறார்கள்.
மிளகு சேர்த்து செய்வது நல்லது.
நல்ல யோசனையாக இருக்கின்றது..
பதிலளிநீக்குதங்களது
அன்பின்
வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி
நன்றி ..
வருகை தந்த
பதிலளிநீக்குஅனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...