முந்தைய பகுதிகள் : ஒன்று - இரண்டு
இன்னும் அரை மணி ஆகுமாம்!" என்று பதிலளிக்கிறான் அவன்.
ஜானகியின் பார்வை அவன் கையிலுள்ள புத்தகத்தின் மீது விழுகிறது.
"என்னடா புத்தகம் அது?" என்று கேட்கிறாள்.
"ஏதோ புத்தகம். உனக்கென்ன?" என்று பிகு பேசுகிறான் அவன்.
"கதைப் புத்தகமா?"
"ஊ ஹும்!"
"பாடப் புஸ்தகமா ?"
"ஊ ஹூம்!
"பின்னே கொடேன், பார்க்கலாம்!'' என்றவள், தானே வலுவில் அவன் கையிலிருந்து அதைப் பிடுங்கிக்கொள்கிறாள்.
பரபரவென்று நாலைந்து பக்கங்கள் புரட்டுகிறாள். அவள் முக பாவம் மாறுகிறது. புத்தகத்தை விட்டெறியாத குறையாக அவன் கையில் கொடுக்கிறாள் ஜானகி.
அவன் சிரிக்கிறான்.
"கர்மம்! கர்மம்!.. என்ன புஸ்தகம்டா இது?'' என்று கூறுவதற்குள் அவள் முகத்தில் சொல்ல முடியாத வெட்கம் சூழ்ந்து கொள்கிறது.
ஏன்?.. நல்ல புஸ்தகம்தான்!'' என்கிறான் அவன். “எது?.. இதுவா?.. இந்த மாதிரி கண்ட கண்ட படங்களைப் புஸ்தகத்தில் போடுவாளா?
"ஏன்?.. போடலாமே!" என்கிறான் கேலியுடன்.
'சும்மா இருடா அசத்து ! கதை புஸ்தகமோ, பாடப் புஸ்தகமோ இருந்தால் பரவாயில்லை. இதுமாதிரி அசிங்கமான படங்களைப் பக்கம் பக்கமா போடறதும், அதை ஒருத்தன் வாங்கிப் பார்க்கறதும்.. சேச்சே.. சுத்த கண்றாவி!
அவனை நேருக்கு நேர் பார்க்கவே அவள் உள்ளம் ஏனோ கூசுகிறது. வேறு பக்கம் திரும்புகிறாள். சற்றுத் தள்ளியிருந்த அவரைக் கொடியின் மீது அப்போதுதான் வந்து உட்கார்ந்திருந்த காக்கை ஒன்று தலையைச் சாய்த்துக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவளும் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். ''ஜானா!..'' என்ற அழைப்பு மிக அருகிலிருந்து எழுகிறது. தலையை மாத்திரம் திருப்புகிறாள். அவளுக்குப் பின்னால் நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறான் அவன்.
"என் மேலே கோபமா? என்று இளிக்கிறான் அவன். "சேச்சே!.. உன் கிட்டே எனக்கு என்னடா கோபம்?.. கொஞ்சம் தள்ளி நின்னு பேசு!" என்றபடியே சிரிக்கிறாள் ஜானகி.
அவளுடைய சிரிப்பு அவனுக்கு இன்னும் தென்பு அளிக்கிறது. "இந்தப் புஸ்தகத்தை வேணும்னா நிதானமாப் பார்த்துட்டுக் கொடேன் என்றவாறே அவள் கையின் அருகில் புத்தகத்தைக் கொண்டு போகிறான் அவன்.
"வேண்டாம்டா!.. தள்ளி நின்று பேசேன்"
சுற்றிலும் ஆளில்லாத சூழ்நிலை. அவளுடைய பருவம்; சற்றுமுன் அவள் பார்த்துவிட்டுக் கொடுத்த புத்தகம்: சிறு வயதிலிருந்தே நெருங்கிப் பழகிய தைரியம்; அவள் நின்று கொண்டிருந்த கோலம் ; ஸ்திரத் தன்மை படைத்திராத அவளுடைய மூளை; எல்லாமே ஒன்றுசேர்ந்து அவனுள் ஒரு வெறியை எழுப்புகின்றன.
உடனே ''ஜானா !'' என்றபடியே அவளுடைய தோள்பட்டையின் மீது தன் கையை வைத்து அவன் அழுத்த-
அடுத்த விநாடி, பலமான ஒன்று அவன் சுன்னத்தில் சம்மட்டி என்று மோதி, அவன் ஐம்புலன்களும் தடுமாறி, அவன் கண் பார்வை தெறிக்க, இரண்டடி பின்னால் சென்று - கால் இடறி, தட்டுத் தடுமாறுகிறான் அவன்.
'ஜானா !..'' என்று அவன் நா புரளுகையில், "உடனே ஓடிப் போயிடு! இல்லேன்னா, குடலைப் பிடுங்கி மாலையாப் போட்டுண்டுடுவேன்!" என்று சிரிப்பும் வெறியுமாக அவள் கூற." என்ன ஜானா இது? ஏதோ விளையாட்டுக்கு நான் பண்ணினால்.'' என்று தணிந்த குரலில் அவன் சமாதானம் பேச .
"எதுடா விளையாட்டு? தொட்டுப் பிடிக்கறது விளையாட்டா? புஸ்தகத்தைக் காட்டி மயக்கலாம்னு நினைச்சியா? பைத்தியம் கிட்டே எப்படியும் நடந்துக்கலாம்னு எண்ணமா?" என்று அவள் சீற -
"இல்லை ஜானா ! ரொம்ப நாள் பழகினவர்களாச்சே..." ன்னு என்று அவன் இழுக்க- "நான்தான்.."
"அதான் நானும் உன்னை இதோட விடறேன் ! இன்னொரு ஆசாமியா யிருந்தால் இங்கே கொலையே ஆமாம், ஒரு கொலையே - நடந்திருக்கும்! உம். ஓடு. திரும்பிப் பார்க்காமல் ஓடு!" என்று உத்தரவிடுகிறாள் ஜானகி.
கால் நடுங்க, கை உதற, முகம் வியர்வையை வாரிக் கொட்ட விடு விடென்று சென்று மறைகிறான் அவன்.
'முட்டாள் ! சுத்த முட்டாள்! அசடு!" என்று தனக்குள் முணு முணுத்துக் கொண்ட ஜானகி, மறுபடி யும் கிணற்று விளிம்பின் மீது உட் காருகிறாள்.
திடீரென்று அவள் உள்ளத்தில் சோகப் பெரு மழை 'சோ' என்று கொட்டத் தொடங்குகிறது. அனுபவித்தறியாத வேதனை இதயத்தில் மறுத்து தெறிக்கிறது. உதடும் சுண்ணும் துடிதுடிக்கின்றன. நாசித்துவாரம் விரிகிறது. இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு விம்முகிறாள். விம்மிக் கொண்டேயிருக்கிறாள்.
"யாருடி அது? ஜானாவா?'' என்ற குரல் அவள் தலையை உயர்த்துகிறது. சற்று முன் வாயாடிவிட்டுச் சென்ற பாட்டி!
"உம்!.. பார்த்தால் கண்றாவியாகத் தான் இருக்கிறது. என்ன செய்யறது சொல்லு!'' என்று அனுதாபப் படுகிற மாதிரிப் பேசுகிறாள் கிழவி.
''எது கண்றாவியா இருக்கு பாட்டி?" என்று கண்களைத் துடைத்தபடியே வினவுகிறாள் ஜானகி.
"அசடோ, பைத்தியமோ -மனுஷ ஜென்மம் தானே? அதது நடக்கற காலத்திலே நடந்தால் இப்படி இருக் குமா?"
''பாட்டி!" என்று அலறுகிறாள் ஜானகி.
"உங்கப்பனுக்கும் இப்படிப் புத்தி போயிருக்க வேண்டாம்! ஏதோ உனக்கேற்ற ஒரு புள்ளையைப் பார்த்து, உன்னை ஒப்படைச்சிருக்கலாம்!"
"ஐயோ பாட்டி... பாட்டி" என்று தலையில் அடித்துக் கொண்ட ஜானகி "உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு நீங்கள் போங்களேன். கல்யாணம் ஆகல்லேங்கறதுக்காகவா நான் அழறேன்!'' என்று கோபமாகக் கூறி விட்டு அவ்விடத்தைவிட்டு நகர்கிறாள்.
கூடத்தை ஜானகி கடந்து போகும் போது, அங்கிருந்த அமளியில் எவரும் அவளைக் கவனிக்கவில்லை. வாசற் பக்கம் விரைகிறாள். பந்தலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும் அவளைக் கண்டும் காணாததுபோல் இருக் கின்றனர். பந்தலில் நுழைந்து, தெருவில் வந்து நின்று, சுற்று முற்றும் பார்க்கிறாள் ஜானகி.
எதேச்சையாக அவள்பார்வை எதிர் வீட்டின் மீது விழுகிறது. வாசற்திண்ணையை யொட்டி அமைந்துள்ள அறையில் அவன் - சற்று முன்னால் அவளைக் கண்டு அலறி ஓடியவன் கல்யாண வீட்டையே பார்த்தபடி அமர்ந்திருப்பது தெரிகிறது.
வேகமாக அவனை நோக்கிச் செல்லத் தொடங்குகிறாள் ஜானா. அவன் பார்த்து விடுகிறான். அவன் உடல் நடுங்குகிறது.
"இங்கே என்னடா பண்ணிண்டிருக்கே?" என்று கேட்டவண்ணம் அவன் எதிரில் போய் நிற்கிறாள் ஜானகி. நா புரள மறுக்கிறது அவனுக்கு. இன்னும் பயம் தெளிந்தபாடில்லை.
'"முகூர்ந்தம் நடக்கப் போகிறது. அங்கே வராமல் என்னடா செய்கிறே?"
ஒன்றுமே நடவாததுபோல் அவள் கேட்கவே, அவன் பயம் அதிகரிக்கிறது.
"வந்து..வந்து.." என்று தடுமாறுகிறான் அவன். சிரிக்கிறாள் அவள்.
"உங்கப்பா கிட்டே, உங்கம்மா கிட்டே என்னைப்பற்றி.." என்று இழுக்கிறான் அவன். மறுபடியும் சிரிக்கிறாள் அவள்.
"அதுதான் இப்படிப் பேயறைஞ்ச மாதிரி உள்ளோடே உள்ளே இருக்கியா? அவ்வளவு பயப்படறவன் அப்படியெல்லாம் நடந்துக்கலாமாடா? அசடு! பயப்படாதே! நான் ஒண்ணும் சொல்லல்லே!
"நிஜம்மாவா?" என்று சந்தேகப் படுகிறான் அவன்.
"தோ பாரு ! எனக்குப் பொய் பேசத் தெரியாதாங்கு வாங்கினேன். அந்த சமாசாரம் அப்போதே தீர்ந்து போச்சு ! உடனுக்குடனே எல்லாத்தையும் மறந்துடணும். அப்போதான் என்னாலே வாழமுடியும். உம்.எழுந்து வா!"
மௌனமாக எழுந்து நின்ற அவள், தயங்கிய வண்ணம் கல்யாண வீட்டுக்குச் செல்கிறான்.
"நல்ல பிள்ளை! செய்யறதையும் செஞ்சுட்டு..... இப்படி மூலையிலே வந்து, முக்காடு போட்டுண்டு.. இந்த அழகிலே எங்கோ ஆபீஸிலே இருநூறு ரூபாய் சம்பளம் வேறு இந்த ஆம்பிளை சிங்கத்துக்கு!" என்று சிரித்த படியே - தனக்குத் தானே - கூறிக் கொண்டு, வாசலுக்கு வருகிறாள் ஜானகி.
அப்போதுதான், நாலு வீடுகள் தள்ளிக் குடியிருக்கும் அவளுடைய தோழி - முதல் நாள் இரவு அவளுடன் பேசி விட் விட்டுப் போனவள், கல்யாண வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறாள். "ஏய்!.. இங்கே வாடி!" என்று அழைக்கிறாள் ஜானகி. அருகில் வருகிறாள் சிநேகிதி.
''ஏண்டி இவ்வளவு நாழி ? இப்போ தான் வர்றியா?.. உம் !! ""
"என்னடி செய்யறது?.. வீட்டிலே வேலை இருந்தது!"
"என்னடி பிரமாத வேலை!. நம்ம வீட்டிலே கல்யாணம். விடிஞ்சதும் விடியாததும் நீ வரவேண்டியது இருக்க யாரோ மூணாம் மனுஷி மாதிரி ஆடி அசைஞ்சுண்டு வர்றியே!'' என்று கோபிக்கிறாள் ஜானகி.
''வரணும்னுதான் நினைச்சேன் . அம்மாவுக்கு திடீர்னு பாழாப் போன வயிற்று வலி வந்துடுத்து. அடுப்பை மூட்டி கஷாயம் வைச்சுக் கொடுத்துட்டு வர வேண்டியதாயிடுத்து!"
பெருமூச்செறிகிறாள் ஜானகி.
"என்ன வயிற்று வலிடி பாவம்!.. தீராத வயிற்று வலியாயிருக்கே. என் புத்தி மாதிரி!”
சிரித்தபடியே ஜானகி கூறினாலும், அக் குரலில் வேதனையும் இழையோடத்தான் செய்கிறது.
"உம்..என்ன செய்யறது ஜானா? பிறக்கறச்சயே ஒட்டிண்ட வியாதி, நடுவிலே ஓடியா போகும்? கண் மூடற வரையும் அனுபவிச்சுத்தானே ஆகணும்?"
சற்று நேரம் அவளையே வெறித்துப் பார்க்கிறாள் ஜானகி.
“சரியாச் சொன்னேடி! உம்.. உள்ளே போ!!' என்று அவள் கூறவும், இரு வரும் வீட்டுக்குள் செல்கின்றனர்.
★ ★ ★
மணி பதினொன்றுக்கு மேலிருக்கும்.
மாடி அறையில் வெறும் தரையில் தன்னையுமறியாமல் கண் மூடி உறக்கத்திலாழ்ந்து விட்ட ஜானகிக்குத் திடீ ரென்று விழிப்பு உண்டாகிறது. கீழே சந்தடியும் இரைச்சலும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. மேள வாத்தியம் மாத்திரம் கேட்காததை உணருகி றாள் அவள்
" அடேடே! முகூர்த்தம் ஆயிடுத்து போலிருக்கே ! நாம் பார்க்காம போயிட்டோமே!.. ஏதோ நாலு பேர் எக்ஸிபிஷன்லே எதையோ பார்க்கறாப் போல் நம்மைப் பார்க்கறாளே ன்னு இங்கே வந்து, அப்படியே தூங்கிப் போயிட்டேனே... தெரியாமலா எனக்கு உலகம் பைத்தியப் பட்டம் கொடுத்திருக்கு?" என்று எண்ணிக் கொண்டு, கீழே இறங்க நினைத்தவள் சற்று நிதானிக்கிறாள்.
மாடிப் படிகளில் எவரோ நடந்து வரும் ஓசை- அடுத்த நிமிஷம், வெங்கடேசன் உள்ளே நுழைகிறார். பெண்ணின் தூங்கி வழிந்த முகம் பெற்றவரின் இதயத்தை ஈட்டி கொண்டு பாய்ச்சுகிறது. போயும் போயும் இன்றுதான் தூங்குவதற்கு நாள் கிடைத்ததா இந்த அருமைப் பெண்ணுக்கு?
''ஜானா! சீக்கிரம் முகத்தைத் துடைச்சுக்கோம்மா! மாப்பிள்ளை வந்துண்டிருக்கார்!" என்கிறார் பரபரப்புடன்.
"மாப்பிள்ளையா? இங்கேயா? ஏன்?''
"உன்னை நமஸ்காரம் பண்ணணுமாம்!'- அவர் வாய் மூடவில்லை.
கழுத்தில் மாலையும், கையில் கங்கணமும், அரையில் மஞ்சள் வேஷ்டியுமாக, மணப் பெண் - ஜானகியின் தங்கை- பின் தொடர, உள்ளே வருகிறார் மாப்பிள்ளை.
நாணமே கண்டறியாத ஜானகிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கூச்சம். தோன்றியதோ தெரியாது. புடவைத் தலைப்பை நன்றாக இழுத்து விட்டுக். கொண்டு, உடலைப் போர்த்தியபடியே தலையைத் தொங்கப் போட்டுக் கொள்கிறாள். தரையைக் கீறிக் கொண்டி ருக்கிறது, அவள் கால் விரல்.
"என்னப்பா இது? என்னைப் போய் நமஸ்காரம் செய்யறதாவது! நான் அவ்வளவு பெரியவளா?" என்று தந்தையிடம் மெல்லிய குரலில் அவள் கூறுவது, மாப்பிள்ளையின் காதில் விழுகிறது.
"என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? என் பெண்டாட்டிக்கு அக்கா; என்னை விட மூன்று வயது பெரியவர். நான் ஏன் வணங்கி ஆசீர்வாதம் பெறக் கூடாது?" என்றபடியே நமஸ்கரிக் கின்றான் அவன். கூடவே, அவள் தங்கையும் வணங்குகிறாள். ஜானகியின் வாயிலிருந்து வார்த் தைகள் வரவில்லை. கை விரல்கள் லேசாக நடுநடுங்க, தங்கையின் தலையைக் கோதிக் கொடுக்கிறாள். அவள் கண்களில் நீர்
நிமிஷங்கள் நகர்கின்றன. இன்னதென்று விவரிக்க இயலாத உள்ள நெகிழ்வை உண்டாக்கும் அபூர்வ அமைதி சற்று நேரம் அங்கே ஆட்சி செலுத்துகிறது. புனிதமே உருவான மோனம்.
''உம்!.. அப்போ நாம கீழே போகலாமா?" என்று மாப்பிள்ளையைப் பார்த்துக் கேட்கிறார் வெங்கடேசன். அவரோ வைத்த விழியை எடுக்காமல் கண்களில் லேசாகச் சுரந்து நிற்கும் நீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்ளும் ஜானகியையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
"மாமா!.. ஒரு விஷயம்!..''- மாப்பிள்ளை கூறுகிறார்.
"முத முதல்லே -அதாவது பெண் பார்க்க உங்கள் வீட்டுக்கு வந்த போதே சொல்லணும்னுதான் எனக்கு எண்ணம். அப்போ அந்த விஷயம் பற்றிப் பேச எனக்கு என்ன உரிமை இருக்குன்னு சும்மா இருந்துட்டேன். இப்போ ஏற்பட்டிருக்கிற சூழ்நிலையே வேறு. இந்த வீட்டினுடைய நல்லது பொல்லாது எல்லாத்திலேயும்பங்கு கொள்ள உரிமை எனக்கு ஏற்பட்டுப் போச்சு. அந்தத் தைரியத்திலே..."
மாப்பிள்ளை நிறுத்துகிறார். வெங் கடேசனும் அவருடைய இரண்டாவது மகளும் சிலையாக நிற்கின்றனர். ஜானகி என்றுமே சிலைதானே !
"உங்க பெரிய பெண்ணைப் பற்றி இப்போ நாம ஒரு முடிவுக்கு வரணும். அதற்கு வேண்டிய வழியோடேதான் பேசறேன்!"
எங்கோ பார்த்ததுபோல் நின்று கொண்டிருக்கும் ஜானகி சிலிர்த்துக் கொள்கிறாள். அவளைப்பற்றி அல்லவா பேசப்போகிறாராம் மாப்பிள்ளை!
"உலகத்திலே படைக்கப்பட்ட எந்தப் பொருளும் உபயோகமற்றதா. போறது. கிடையாது. போகவும் போகாது. என் அபிப்பிராயம் இது, உங்க பெரிய பெண்ணுக்கு இருக்கற கோளாறு அப்படியொன்றும் பிரமாதமானதில்லை. விரலுக்குத் தகுந்த வீக்கம்னு சொல்றாப்போல, நாமும் நம்ம நிலைக்குத் தகுந்த இடமாப் பார்த்து ஏற்பாடு செஞ்சுட்டால் போறது!''
''அப்படீன்னா?'' என்று இடைமறிக் கிறார் வெங்கடேசன்.
"எனக்குத் தெரிஞ்ச இடம் ஒண்ணு இருக்கு. நிலம் நீச்சுக்குக் குறைவில்லை. வயிற்றுப் பாட்டுக் கவலையே வேண்டாம். பையனும் இள வயசு. நான் ஒருவார்த்தை சொன்னால் போதும், அவனோ அவன் வீட்டுப் பெரியவர்களோ தட்டிப் பேசமாட் டார்கள். அவ்வளவு நெருங்கிப் பழகியவர்கள். அந்தப் பையனை உங்க பெரிய பெண்ணுக்குப் பேசினால்.."
திக்குமுக்காடினார் வெங்கடேசன்.
"என்ன? என்ன? நம்ம ஜானாவையா?.. அப்படி ஒரு பையனுக்கா? நாம் அவ்வளவு கொடுத்து வைத்தவர்களா? மாப்பிள்ளை! மாப்பிள்ளை!.." - மேற்கொண்டு அவரால் பேச இயலவில்லை. குரல் நடுங்கிக் குறுகுகிறது.
"ஆனால் ஒரு விஷயம் நான் சொல்லணும். நம்ம பொண்ணுக்கு ஏதோ ஒரு குறை இருக்கிறாப்போல, அந்தப் பையன் கிட்டேயும் ஒரு குறை இருக்கு. இவ்வளவு வசதிகளைக் கொடுத்த ஆண்டவன், அந்தப் பையனுக்கு ஊனம் ஒன்றையும் வைச்சுட்டான். வாய் படைக்காத ஆத்மா அவன். பிறவி ஊமை. அந்த ஒரு குறையை நீக்கிட்டுப் பார்த்தா, மற்ற எந்த விதத்திலும் அவன் என்னை விட எவ்வளவோ உயர்ந்தவன்தான். சந்தேகமேயில்லை!"
வெங்கடேசன் திடுக்கிடுகிறார். அவருடைய இரண்டாவது பெண்ணுக்கும் துக்கம் பொங்குகிறது. ஜானகியோ-
இவ்வளவு நேரம் சூழ்ந்திருந்த வெட்கமும் லஜ்ஜையும் எங்கோ மறைய, விழுந்து விழுந்து சிரிக்கிறாள். மாப்பிள்ளை விழிக்கிறார்.
"ஏம்மா ஜானா இப்படிச் சிரிக்கறே?" என்று தந்தை கேட்கும் கேள்விக்குப் பதில்கூட அளிக்காமல் சிரிக்கிறாள் பெண். சற்றைக்கெல் லாம் அச்சிரிப்பு தானாகவே ஓய்கிறது.
"மாப்பிள்ளை!* என்று ஜானகி அழைக்கவும், அனைவருக்கும் தூக்கி வாரிப் போடுகிறது.
''மாப்பிள்ளை! நீங்கள் என் கூடப் பிறந்த தம்பி மாதிரி! அதுதான் நேருக்கு நேர் பேசறேன் . எங்கப்பாவும் அம்மாவும் படற அக்கறை போதாதுன்னு, நீங்க வேறு இவ்வளவு சிரமம் எடுத்துண்டு, எனக்காகப் பரிஞ்சு பேசறதுக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கேன். ஆனால் ஒரு விஷயம் தெளிவாச் சொல்றேன். உங்க எண்ணமும் என் எண்ணமும் ஒத்துப் போக வழியில்லை. உங்க எண்ணப்படி நடக்கற தெம்பும் எனக்கு இல்லை."
வெங்கடேசன் திணறுகிறார். மணப் பெண்ணும், மாப்பிள்ளையும் பதுமைகளாக நிற்கின்றனர்.
ஜானா கூறுகிறாள்:-"இவ்வளவு உறுதியா, இத்தனை தீர்மானமா- நான் பேசறேனேன்னு நீங்கள் வருத்தப்படக் கூடாது. உங்க மனசிலே உள்ள நல்ல எண்ணம் எனக்குப் புரியறது. ஆனால் எனக்கும் மனசுன்னு ஒண்ணு உண்டோ இல்லியோ? என் மனசிலே தோன்றதை-இன்னி இல்லை- ரொம்ப நேத்தி தோண்றதைத்தான் நான் சொல்றேன். காரணம் என்னையே நான் பரிபூர்ணமா உணர்ந்திருக்கேன். நீங்க சொல்ற பிள்ளை ஊமையாச்சேன்னு நான் நான் மறுத்துப் பேசல்லே. அப்படி எந்த ஒரு ஊனமும் இல்லாதவனாவிருந்தாலும், நான் சம்மதிக்கப் போறதில்லை. என் உண்மை சொரூபம் எனக்கே தெரியறதனாலேதான், இப்படியொரு அசைக்க முடியாத முடிவுக்கு நான் என்னிக்கோ வந்துட்டேன் மாப்பிள்ளை! என்னைப்போல உலகம் இல்லை. உலகத்தைப் போல நான் இல்லை. அபூர்வப் பிறவி நான். ஆனால், என்னுடைய இவ்வளவு துர்ப்பாக்கியத்திலும், கொஞ்சாம் அதிர்ஷ்டமும் பண்ணி யிருக்கேன்னுதான் சொல்லணும். இல்லாட்டா, என் மேல் பிரியம் வைக்க, என்னைப் பார்த்து இரக்கப்பட, எனக்கும் சேர்த்து கவலைப்பட, எனக்காக பூஜையும் விரதமும் அனுஷ்டிக் க- இப்படி யொரு அப்பா - அம்மாவைப் பெறறிருப்பேனா?'
கணீர் கணீர் என்று பேசும் பெண் அவள் பேசும் வார்த்தைகளைக் கேட்டு, உடல் புல்லரித்து நிற்கிறார் வெங்கடேசன்.
"சித்தே 'யோசனை பண்ணிப் பாருங்கோ !என்னைப் பைத்தியமாப் படைச்ச தெய்வம், என் அப்பா அம்மாவை சுயபுத்தியோடு படைச்சு எனக்காகக் கவலைப்பட விட்டிருக்கு. பெற்ற பெண்ணின் பித்துப் பிடித்த தன் நிலை பெற்றவர்களையே இவ்வளவு தூரம் ஆட்டி வைக்கிறதென்றால் அவளுடைய புருஷன் மனம் என்ன பாடு படாது? ஆயுள் முழுதும் நரக வேதனை தானே அவனுக்கு? என்னைக் கல்யாணம் பண்ணிண்ட பாவம், தோஷத்திற்காக, ஒரு புருஷன்-எவனாகத்தான் இருக்கட்டுமே -ஆயுள் தண்டனை அனுபவிக்கணுமா? புல்லா யிருந்தாலும் புருஷனா நினைக்கணும்னு சொல்ற அசட்டு சமுதாயத்திலே பிறந்திருக்கோமே. அப்படி இருக்கச்சே புருஷனையே புல்லா நினைக்கக்கூடிய ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் அவசியமா, மாப்பிள்ளை? நான் அசடு; ரெண்டுங்கெட்டான். அப்படி நினைத்தாலும் நினைத்து விடுவேன். அந்தப் புருஷனுக்கு அப்போ நான் துரோ தம் செஞ்சுடறவளா ஆயிட மாட்டேனா ? நீங்களே சொல்லுங்கோ?"
மாப்பிள்ளை விழிக்கிறார். ஏதோ தெய்வ சந்நிதானத்தில் நிற்பது போன்றதொரு நெட்டுயிர்ப்பு ஏற்படுகிறது அவருக்கு.
"அது போகட்டும் மாப்பிள்ளை! அப்படியே நான் கல்யாணம் செஞ்சுக்கறதா வைச்சுக்கலாம். என் வயிற்றிலே ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்துடறது. தாயைப் போல சேய்' என்று சொல்றதுக்கு ஏற்றபடி, அந்தக் குழந்தையிலே ஒண்ணு. என்னைப் போலவே அசடாப் பிறக்கிறதுன்னு வைத்துக் கொள்ளுங்கள். அது கதி பாவம் - எப்படி இருக்கும் ? எனக்கு எங்கப்பா அம்மா காட்டற பரிவை, படற இரக்கத்தை, சொல்ற ஆதங்கத்தை, நான் அது கிட்டே சொல்ல முடியுமா? சொல்லத்தான் சொல்வேனா? மலங்கமலங்க அதைப் பார்த்துண்டு நின்னால், அதை விடப் பெரிய சோதனை ஒண்ணு இருக்க முடியுமா, மாப்பிள்ளை ?.... அது சிரிக்கும், நானு ம் சிரிப்பேன் அது அழும், நானும் அழுவேன். அது ஜடமாய் இருக்க, நானும் ஜடமாய் இருக்க, இதைப் பார்த்துத் தாலி கட்டிய வன் உள்ளம் குமுறக் குமுற - வேண்டாம். மாப்பிள்ளை, வேண்டவே வேண்டாம். பிச்சைக்காரி ஒருத்தி வயிற்றிலே பிறந்தாலும், அந்தக் குழந்தை சௌக்கியமாய் இருக்கும். என் வயிற்றிலேபோய் பிறக்கலாமா? ஒருத்தருக்கு -நிழல் கொடுக்க முடியாவிட்டாலும், தலையில் விழாமலாவது நான் இருக்கக்கூடாதா? தனி மரமா இருக்கப் பிறந்தவள் இந்த ஜானா ! யோசனை செய்து பாருங்கள். பைத்தியக்காரி நான். உங்களுக்குப் புரியறதோ இல்லையோ, சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன் !!
மறு விநாடி, எவர் பதிலுக்கும் காத்திராமல், மள மள வென்று மொட்டை மாடிக்குச் சென்று விடுகிறாள் ஜானகி.
மாப்பிள்ளையின் குனிந்த தலை நிமிரவேயில்லை; மணப் பெண்ணின் விழிகள் நீரில் மிதக்கின்றன. பெரியவரின் மனம் பதை பதைக்கிறது..
"மாப்பிள்ளை! அவள் அசடு,ரெண்டுங்கெட்டான். அவள் சொன்னதை ஒன்றும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்!" என்று கரகரத்த குரலில் சமாதானம் கூறுகிறார் வெங்கடேசன்.
மாப்பிள்ளை லேசாகச் சிரிக்கிறார்.
என்ன மாமா! என்ன சொல்கிறீர்கள்? அவளா ரெண்டுங் கெட் டான்? தெய்வம் மாமா, அவள் தெய் வம்! நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!'' என்கிறார் உணர்ச்சியுடன்.
முகத்தைத் திருப்பிக் கொள்கிறார் மாமனார்.
"மாமா! உலகத்திலே ஒவ்வொரு பெண்ணும் கல்யாணமாகி, அந்தப் புருஷனுக்குத் தொண்டு செய்து, பணிவிடை புரிந்து, அவன் சுக துக்கத்திலே ஈடுபட்டு தெய்வம்னு பேர் எடுப்பா. அதுமாதிரி பத்து மாதம் சுமந்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, அதுக்குப் பாலூட்டி, சீராட்டி, அன்புடன் வளர்த்து, அக் குழந்தைக்குத் தெய்வமாத் திகழுவா ஒருத்தி. ஆனா. உங்க பெரிய பெண்ணுக்குக் கல்யாணமாகல்லே. குழந்தையுமில்லே. ஆனால் கைப்பிடிக்காத அந்தக் கணவனுடன் பெறாமல் பெற்றுவிட்டதாக எண்ணும் ஒரு குழந்தைக்குமாக தன் வாழ்வின் மலர்ச்சியையே, தன் பிற்கால வாழ்வின் வளமையை- எவ்வளவு பெரிய புத்தியுடன் தியாகம் செய்யத் துணிந்து விட்டாள், பார்த்தீர்களா? ஒரு புருஷனுக்கு அவன் மனைவி இதை விடப் பெரிய தொண்டு செய்ய முடியுமா? ஒரு குழந்தைக்கு அதனோடே தாய் இதை விடப் பெரிய தியாகம் பண்ண முடியுமா? இதைவிடப் பெரிய நோன்பு. உலகத்திலே யாராவது அனுஷ்டிக்க முடியுமா, மாமா?
வெங்கடேசனுக்குத் தலை சுற்றுகிறது. பெரிய பெண்ணின் வியாதி இந்த மாப்பிள்ளைக்கும் பரவி விட் டதோ என்று எண்ணுகிறார் அவர்.
"கோவிலுக்குப் போறோம் மாமா! சுவாமி சந்நிதிக்கு எதிரே திரை போட்டிருக்கு!' திரைக்கு நாம எல்லோரும் மறுபக்கம் நிற்கிறோம்: திடீர்னு திரையைத் திறக்கிறா. சுவாமியின் முகம் சட்டுனு தெரிய றது: அந்தத் தரிசனத்தைக் கண்டா உடம்பு சிலிர்க்கல்லே?.... தினம் பார்க்கற தினம் தெய்வம்தானே? பின்னே ஏன் திரை திறந்தவுடன், ஏதோ இத்தனை நாளாய்ப் பார்க்காத தெய்வத்தைப் பார்க்கற மாதிரி, பயபக்தியுடன் கன்னத்திலே போட்டுக்கறோம்? அதுபோல உங்க பெரிய பெண்ணு மனசு ஒரு கோவில். அதிலே ஞான விளக்கு எப்போதும் எரியறது. அது உலகத்திற்குத் தெரியல்லே . எப்போதாவது- கோவில் திரை விலகறாப்போல- அந்த உள்ளத்தின் கதவும் திறந்து, உண்மை சொரூபம் தெரியறச்சே, அந்தத் தெய்வத்தைத் தரிசிக்க முடியறது. அந்தத் தரிசனம் காணப் பெற்றவன் கொடுத்து வைச்சவனா இருக்கணும். நான் கொடுத்து வைத்தவன், மாமா!"
அடுத்த நிமிஷம் அம் மூவரும் அந்த அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில், மொட்டை மாடியில் எதையோ எண்ணி எண்ணி ஜானகி சிரித்துக் கொண்டிருக்கும் ஒலி அவர் கள் செவிகளில் விழுகிறது.
பெண்ணைப் பார்க்கிறார் பெற்றவர்.. கொண்டவனைப் பார்க்கிறாள் பெண். கைப் பிடித்தவனோ, காண முடியாத காட்சியைக் கண்டுவிட்ட புல்லரிப்பில் இருக்கிறான்.
ஜானகி எதற்காகச் சிரிக்கிறாள்? தனக்குப் பைத்தியப் பட்டம் கட்டி வேடிக்கை பார்க்கும் புவியைப் பார்த்தா? அல்லது, தான் இந்த உலகத்தைப் பைத்தியமாக எண்ணி விட்ட பெருமைக்காகவா? தன்னை அண்ட விடாமல் ஒதுங்கி வாழ்ந்த உலகத்திற்காகவா? அல்லது, தங்கையின் கணவன் மூலம் தன்னை அண்ட வந்த பிரபஞ்சத்தைத் தன் கால்களால் எட்டி உதைத்து விட்ட பெருமைக் காகவா?
ஆமாம்; ஜானா எதற்காக - யாருக் காகச் சிரிக்கிறாள் ?......
- நிறைந்தது -
அப்பாடா பக்கம் பக்கமா வசனம். கடைசியில் பைத்தியங்கள் எல்லாம் பைத்தியங்கள் இல்லை தெய்வங்களும் உண்டு என்று ஜானகியை உயர்த்திப் பிடிக்கிறார் ஆசிரியர். கதையின் முடிவு மீண்டும் கதையின் துவக்கத்திற்கு கொண்டு செல்கிறது. அவ்வாறு பார்க்கும்போது கல்யானம் நடப்பது தவிர கதையில் கதையே இல்லை என்று தோன்றுகிறது. ஆனாலும் ஜானகியின் குணாதிசயங்களை ஆராய்ச்சிசெய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர்.
பதிலளிநீக்குஇந்தக்காலத்திலும் படித்து வேலையில் இருக்கும் பெண்கள் ஜானகியைப் போன்று முரண், வக்கிரம் பிடித்த மனதுடையவர்கள்லாக இருப்பதை கண்டிருக்கிறேன். அதிகப் பிரசங்கித்தனம் என்பதா? பைத்தியம் என்பதா?
நான் பாயாசம் சாமிநாது பாயச அண்டாவைக் கவிழ்த்தது போன்று எதோ விபரீதம் நடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
மொத்தத்தில் அந்தக் காலத்திற்கு ஏற்ற கதை, நடை, சிந்திக்க வைக்கும் கதை.
Jayakumar
இதைத்தான் நானும் நினைத்தேன், போன கதையிலும் சொன்னேன்.. அந்தப் பெண்ணுக்கிருக்கும் ஓட்டிசக் குறைபாட்டைப் பற்றியதுதான் கதை.. என்பதுபோல முடிவு பெற்றிருக்கிறது.. சுபம்!!!
நீக்கு"யாருக்கு ஜானகி காத்திருந்தகாள்" என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இது ஒரு குறை
பதிலளிநீக்குJayakumar
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்கு//"மாமா! உலகத்திலே ஒவ்வொரு பெண்ணும் கல்யாணமாகி, அந்தப் புருஷனுக்குத் தொண்டு செய்து, பணிவிடை புரிந்து, அவன் சுக துக்கத்திலே ஈடுபட்டு தெய்வம்னு பேர் எடுப்பா. அதுமாதிரி பத்து மாதம் சுமந்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, அதுக்குப் பாலூட்டி, சீராட்டி, அன்புடன் வளர்த்து, அக் குழந்தைக்குத் தெய்வமாத் திகழுவா ஒருத்தி. ஆனா. உங்க பெரிய பெண்ணுக்குக் கல்யாணமாகல்லே. குழந்தையுமில்லே. ஆனால் கைப்பிடிக்காத அந்தக் கணவனுடன் பெறாமல் பெற்றுவிட்டதாக எண்ணும் ஒரு குழந்தைக்குமாக தன் வாழ்வின் மலர்ச்சியையே, தன் பிற்கால வாழ்வின் வளமையை- எவ்வளவு பெரிய புத்தியுடன் தியாகம் செய்யத் துணிந்து விட்டாள், பார்த்தீர்களா? ஒரு புருஷனுக்கு அவன் மனைவி இதை விடப் பெரிய தொண்டு செய்ய முடியுமா? ஒரு குழந்தைக்கு அதனோடே தாய் இதை விடப் பெரிய தியாகம் பண்ண முடியுமா? இதைவிடப் பெரிய நோன்பு. உலகத்திலே யாராவது அனுஷ்டிக்க முடியுமா, மாமா?//
பதிலளிநீக்குஅருமையாக இருக்கிறது மாப்பிள்ளையின் பேச்சு.
ஜானாவின் நோன்பை புரிந்து கொண்ட ஆதமா.
எதிர்வீட்டு பையனுக்கு ஜானாவை புரிந்து கொள்ள முடியவில்லையே!
அவனிடம் ஜானா பேசியதும் அருமை.
நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.
//ஜானா எதற்காக - யாருக் காகச் சிரிக்கிறாள் ?......//
பதிலளிநீக்குதன்னை புரிந்து கொள்ளாத பாட்டி போன்றவர்களை நினைத்து சிரிக்கிறாள்.
//ஐயோ பாட்டி... பாட்டி" என்று தலையில் அடித்துக் கொண்ட ஜானகி "உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு நீங்கள் போங்களேன். கல்யாணம் ஆகல்லேங்கறதுக்காகவா நான் அழறேன்!'' என்று கோபமாகக் கூறி விட்டு அவ்விடத்தைவிட்டு நகர்கிறாள்.//
அவள் எதற்கு அழுதாள், என்று பாட்டிக்கு தெரியாது.
அவளின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளா பாட்டி போன்ற அக்கம் பக்கத்தினரை, ஊர் மக்களை பற்றி நினைத்து சிரித்து இருப்பாள் ஜானா.
காலத்தை கடந்து நிற்கும் கதை! பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குராயசெல்லப்பா அவர்கள் தன் தாயாரின் பெயரில் நடத்திய சுவர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற ஜீ.வீ. ஐயா அவர்களுக்கும், பாராட்டுக்குரிய கதைகள் இருபதில் இடம் பெற்றிருக்கும் ஸ்ரீராமுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குஜீ. வீ. சாரைப் போல அனுபவமும், வயதும் எனக்கிருந்தால் இப்படிப்பட்ட போட்டிகளில் பங்கேற்பேனா என்பது சந்தேகம்தான். அவருடைய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் வியந்து பாராட்டுகிறேன். __/\__
நானும் மனமுவந்து
நீக்குபாராட்டுகின்றேன்..
பா.வெ! ஷமிக்கணும். 'காலத்தைக் கடந்து நிற்கும் கதை' என்ற பிலஹரி அவர்களுக்கான பின்னூட்டத்தைப் பார்த்து மனசுக்குள்ளேயே சந்தோஷித்தவன் உங்களின் இந்த பாராட்டுப் பின்னூட்டத்தைப் பார்க்கத் தவறியிருக்கிறேன். இது எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை..
நீக்குவேறென்ன? மேலோட்டப் பார்வையில் தப்பியிருக்கிறது.
கதை தேர்வான அறிவிப்பைக் கூட ஸ்ரீராம் சொல்லித் தான் தெரிந்து கொண்டேன். ஹி..ஹி.. வெ.சொ. வெட்கக்கேடு.
பாராட்டுக்கு நன்றி
பா.வெ.
வேறு சிலதுக்கும் உங்களைப் பாராட்டணும். புதன்
பார்க்கலாமா?
//நானும் மனமுவந்து பாராட்டுகிறேன்..//
நீக்குதம்பி துரை செல்வராஜூ அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த நன்றி. உங்கள் இருவர் கருத்துக்களையும் பார்க்காமலிந்திருக்கிறேன். அதனால் தான் இந்த தாமதம்.
நல்ல அம்சமான கதையமைப்பு...
பதிலளிநீக்குஇங்கிலீஸ் களேபரம் இல்லாமல் அப்புளை பண்ணி, ஆடு பண்ணி மாதிரியான கலக்கல் இல்லாமல் நாம் படித்த தமிழிலேயே நல்லதொரு வாசிப்பு...
மீண்டும் அந்த காலத்திற்குள்.
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
- யாருக்காகச் சிரிக்கின்றாள் ஜானா?...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
பிலஹரி அவர்கள் எழுதிய இந்த கதை மிக அருமையாக உள்ளது. பழைய நடை, மனதை உருக்கும் வரிகள்ஜானகியின் உணர்வுகள் அவள் பேசும் ஒவ்வொரு வரியிலும் இழைந்து மிளிருகின்றன.
/இவ்வளவு உறுதியா, இத்தனை தீர்மானமா- நான் பேசறேனேன்னு நீங்கள் வருத்தப்படக் கூடாது. உங்க மனசிலே உள்ள நல்ல எண்ணம் எனக்குப் புரியறது. ஆனால் எனக்கும் மனசுன்னு ஒண்ணு உண்டோ இல்லியோ? என் மனசிலே தோன்றதை-இன்னி இல்லை- ரொம்ப நேத்தி தோண்றதைத்தான் நான் சொல்றேன். காரணம் என்னையே நான் பரிபூர்ணமா உணர்ந்திருக்கேன். நீங்க சொல்ற பிள்ளை ஊமையாச்சேன்னு நான் நான் மறுத்துப் பேசல்லே. அப்படி எந்த ஒரு ஊனமும் இல்லாதவனாவிருந்தாலும், நான் சம்மதிக்கப் போறதில்லை. என் உண்மை சொரூபம் எனக்கே தெரியறதனாலேதான், இப்படியொரு அசைக்க முடியாத முடிவுக்கு நான் என்னிக்கோ வந்துட்டேன் மாப்பிள்ளை! என்னைப்போல உலகம் இல்லை. உலகத்தைப் போல நான் இல்லை. அபூர்வப் பிறவி நான். ஆனால், என்னுடைய இவ்வளவு துர்ப்பாக்கியத்திலும், கொஞ்சாம் அதிர்ஷ்டமும் பண்ணி யிருக்கேன்னுதான் சொல்லணும். இல்லாட்டா, என் மேல் பிரியம் வைக்க, என்னைப் பார்த்து இரக்கப்பட, எனக்கும் சேர்த்து கவலைப்பட, எனக்காக பூஜையும் விரதமும் அனுஷ்டிக் க- இப்படி யொரு அப்பா - அம்மாவைப் பெறறிருப்பேனா?'/
இந்த வரிகளை படிக்கும் போது என் கண்களில் கண்ணீர் திரண்டது. இவ்வளவு தெளிவாக பேசும் ஜானகியா பையித்தியம்..? அப்படி பார்த்தால் வேளைக்கொன்றாக ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு மாதிரியாக, சமயங்களுக்கு ஏற்றபடி திரித்துப் பேசும் நாம்தான் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதப்பிறவிகள் என நினைக்கத் தோன்றுகிறது.
தன்னை தொட்டவனை அதன் தீமையை உணர்ந்தவளாக கண்டித்துப் பின்னர் அவனை சர்வ சாதரணமாக மன்னிக்கும் குணமுடையவளை ஊரார் ஒரு மாதிரி நினைப்பதை எண்ணி அவளை படிக்கும் மனம் வேதனையடைகிறது.
மொத்தத்தில் ஜானகியின் உயர்ந்த மன நிலையை ஆசிரியர் உணர்த்தி விட்டார். அவளை சுற்றியிருக்கும் அவள் மனதை புரிந்து கொள்ளாதிருக்கும் உறவுகள், தெரிவர்களின் மனதில்தான் மனநோய் உள்ளதெவும் கூறி விட்டார்.
நல்ல கருத்துள்ள கதை.
ஆம்.. ஜானகி இவர்களின் அற்பமான மனநிலையை எண்ணித்தான் சிரிக்கிறாள் அவளின் மனதில் தன்னை தெளிவாக அனைவரையும் புரிந்து கொள்ள வைத்த இறைவனுக்கு நன்றி சொல்லத்தான் அவ்விதமான சந்தோஷ சிரிப்பை சமர்பிக்கிறாள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Excellent character portrayal. ஜானகி an authentic character. அதை இந்த உலகம் புரிந்து கொள்ளாது. உலகம் விரும்புவது மந்தைக் கூட்டத்தை. ஆமாம் சாமி போடும் கூட்டத்தை. தனி சிந்தனையுடன் இருந்தால் அதை நான் சொல்ல விரும்பாத அந்தச் சொல்லை சொல்லி முத்திரை குத்திவிடும். அதற்குத்தான் அவள் சிரிக்கிறாள். கடைசியில் அவள் பேசும் அந்த வசனம் அருமை.
பதிலளிநீக்குபிலஹரி அவர்கள் இத்தனை அழகான பாத்திரப்படைப்பு செய்தவர் ஒரு இடம் கொஞ்சம் exaggerated செய்தது ....இறைவனுக்கு ஒப்பீடு அந்த இடம் தவிர மற்றவை மிகவும் ரசித்தேன். எக்காலமும் பொருந்திப் போகும் பாத்திர ப்படைப்பு
முடிவு சூப்பர்
கீதா
ஜானகியின் மன நிலையில் கதையை நகர்த்தி செல்கிறார் ஆசிரியர். தெய்வ நிலைக்கு ஜானகியை உயர்த்தி விட்டார். முடிவு அக்காலத்துக்கு ஏற்றது.
பதிலளிநீக்குஇப்பொழுது இப்படிஉட்படுத்தப்பட்டனர். கவுன்சிலிங் அல்லது வைத்தியத்துக்கு உட்படுத்தப்படுவார்கள்.
ஜானகி நல்ல தெளிவுடன், தனித்துவ சிந்தனையுடன் இருந்திருக்கிறாள்...அதனால் சுற்றம் அவளை அந்த சொல்லைச் சொல்லி சொல்லி அது அவள். மனதில் பதிந்து அவள் மனதில் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்ற விரக்தியில் தான் அவள் அப்படி நடந்து கொள்கிறாள். தன்னையும்.மற்றவர்கள் சொல்வது போல் சொல்லிக் கொள்கிறாள்.பார்க்கப்போனால் அவள் புத்தி தெளிவாகத்தான் இருக்கிறது.. வித்தியாசமான சிந்தனை இந்த உலகின் சிந்தனைக்கு கொஞ்சம். மாற்றாக சிந்தனை எண்ணங்கள் உள்ளவரை இந்த உலகம் குத்தும் முத்திரை மற்றும்அவள் அல்லது அவன் ஒரு மாதிரி என்று சொல்வதும்....வழக்கம் தான்...
பதிலளிநீக்குபுத்தி தெளிவில்லாமல் போனால் தான் மருத்துவமும்....
கீதா
ராய செல்லப்பா சார் தான் அம்மாவின் பெயரின் டிரஸ்ட் தொடங்கி எழுதுபவர்கலை ஊக்குவிக்கும் உயர்ந்த எண்ணத்தில் கதைப போ ட்டி நடத்தியதில் நம் நட்புகள் பங்கு பெற்று பரிசும் வென்றிருப்பது சந்தோஷமான விஷயம் ....ஜீவி அண்ணாவுக்கு முதல் பத்து கதைகளில் இடம்பெற்று பரிசும், பாராட்டு பெரும் சிறப்புக் கதைகளில் ஶ்ரீராம் மற்றும்.பரிவை சே குமார் கதைக்குப் பரிசு kidaithullatharkup பாராட்டுகள். வாழ்த்துகள். ...வெற்றி பெற்ற கதைகள் புத்த்கங்களாக வெளிவரும் ...
பதிலளிநீக்குகதைகளை வாசிக்கும் ஆர்வம் கூடுகிறது. மற்றொரு சந்தோஷம் அவை உருமாறா மல் வெளிவருவதில் மகிழ்ச்சி..
கீதா
சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற ஜீவி சாருக்கும் ஸ்ரீராம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குJayakumar
சகோதரி தி.கீதாவிற்கும் அன்பு நண்பர் ஜேஸி சாருக்கும் நன்றி.
பதிலளிநீக்கு//சகோதரி தி.கீதாவிற்கும் அன்பு நண்பர் ஜேஸி சாருக்கும் நன்றி.//இதற்கு முந்தைய பின்னூட்டங்களை ஜீ.வி சார் பார்க்கவில்லையா?
நீக்குஆமாங்க..
நீக்குஆனால் ஆரம்பம் நன்றாக எழுதி வந்த ஆசிரியர்... முடிவில் ஜானகி கதைத்ததைப் பார்க்கும்போது, ஒரு ஓட்டிஷம் குறைபாடிருக்கும் பெண்ணால் இப்படிப் பேசுவது சாத்தியமே இல்லை... அதனால குறைபாடு இருக்கா இல்லையா என நம்மைக் குழப்பிவிட்டதுபோலவே இருக்குது முடிவு.
பதிலளிநீக்குஆனாலும் படிக்க... வசனங்கள் சுவாரஷ்யமாக இருந்தன.. கதைதானே அதனால எப்படியும் இருந்திட்டுப் போகட்டும்... ஏனெண்டால்......... தொடரும்..
ஏனெண்டால்.... கதை, கற்பனை என எண்ணியபடி இருந்தால் மனதில் தாக்கமில்லை... ஆனால் "அமரன்"... நெட்பிளிக்ஸ் ல வந்திட்டுது, தெரியாமல்.. இல்லை இல்லை உண்மைக் கதை.. அதன் முடிவென்ன.. என்றெல்லாம் தெரிஞ்சிருந்தும் ஒரு கியூரியாசிட்டியில பார்த்திட்டேன்... சே..சே... மனமெல்லாம் கனத்துப்போச்சு....
பதிலளிநீக்குபடத்தின் முடிவு தெரிஞ்சமையால... அந்தச் சம்பவம் எப்ப ஆகுமோ.. இப்ப ஆகிடுமோ என எதிர்பார்த்துக் காத்திருந்ததுபோலாகி விட்டது என் நிலைமை.. சரி போகட்டும் இப்படி எத்தனை கோடிச் சம்பவங்கள் குமிஞ்சு கிடக்குது... காலம் ஓடுது... ஓவரா அலட்டிட்டமோ.. சே.. சே அப்படி இருக்காது.. ஹா ஹா ஹா.