Thursday, October 8, 2009

"எனக்குத் தெரியும்..."

அக்டோபர் 8 1932 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்திய விமானப் படைக்கு இன்று வயது 77 ஆகிறது. வயதானால் மனிதர்கள்தான் பலவீனமாவார்கள். உலகில் நான்காவது மிகப் பெரிய விமானப் படையாக பலமாகி உள்ள இந்திய விமானப் படை சுதந்தரத்துக்குப் பின் ஐந்து போர்க்களங்களை சந்தித்துள்ளது. ஆயிரத்து எழுநூறு விமானங்கள் உள்ள இதில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் வீரர்கள் கடமையாற்றுகின்றனராம். (நன்றி : தினமலர்)
வாழ்க வளர்க என்று வாழ்த்துவோம். ஏனென்றால் அதனால்தான் நாம் வாழ்கிறோம். எல்லோரும் சிறந்த கல்வி, வெளிநாட்டு வேலை என்று கனவு காணும்போது எத்தனையோ இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தாய் நாட்டுக்காக தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அருமையான வேலை, உடல்நிலை சரி இல்லை என்றால் உடனே மருத்துவ வசதி, பெற்றோருடனும் உற்றோருடனும் இருந்து கொண்டு பொழுது போகாமல் பலவித கேளிக்கைகள் என்று பொது ஜனம் வாழ எத்தனையோ ஜவான்கள் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து வசதிகள் சிறிதும் இல்லாத காடுகளிலும், மலைகளிலும் வசித்து காவல் காக்கும் பணியை பாராட்டுவோம். மழையா, குளிரா, கடும் வெயிலா, பசியா, தாகமா என்று எதனையும் பொருட்படுத்தாது தங்கள் கடமையை ஆற்றும் இவர்களுக்கு நம் வணக்கங்கள் உரித்தாகுக.
நக்சல்களால் உயிரிழந்த காவல் வீரரின் ஆறு வயது மகன் தான் பெரியவனாகி காவல் துறையில் சேர்ந்து தன் தகப்பனைக் கொன்ற அக்ரமக்காரர்களை வேரருப்பேன் என்று துக்கத்துடனும் வேதனையுடனும் சூளுரைததை நேற்று தொலைக் காட்சி செய்திகளில் பார்த்தோம்.
ஒரு போர்வீரன் போர்க்களத்தில் காயம் பட்டு விழுந்து கிடந்த தன் நண்பனை தூக்கி வரக் கிளம்பினான். அவனுடைய Captain "நீ இனி போவதால் பயனிருக்காது. அனேகமாக உன் நண்பன் இந்நேரம் இறந்திருப்பான்" என்றான். ஆனாலும் இவன் கிளம்பி சென்று தன் நண்பனைத்தூக்கிவரக் கிளம்பி கொண்டும் வந்து விட்டான். நண்பனின் உயிரற்ற உடலை சுமந்து வந்தவனைப் பார்த்த Captain, "நான் அப்போதே சொன்னேனே, இது பயனில்லாத வேலை என்று.." என்றான். இவன் பதில் சொன்னான், "இல்லை Captain! நான் செய்தது சரி! நான் என் நண்பனை அடைந்தபோது என்னைப் பார்த்த என் நண்பன் புன்னகையுடன் சொன்ன கடைசி வரிகள்,'எனக்குத் தெரியும்டா...நீ வருவேன்னு...'

6 comments:

ஆதி மனிதன் said...

அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளில் Force என்று சொல்லகூடிய ராணுவம் சார்ந்த பணியாளர்களுக்கு கிடைக்கும் மரியாதை மற்றும் வருமானம் நம் நாட்டு வீரர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

'எனக்குத் தெரியும்டா...நீ வருவேன்னு...' மனதை தொட்டது.

visu said...

சிறந்த கட்டுரை.

nandhini said...

ok not bad

Gokul said...

நான்காவது பெரிய படை தான் , ஆனால் சீனாவை ஒப்பிட்டு பார்த்தால் IAF சப்பாணி போல இருக்கிறது..

ஸ்ரீராம். said...

சப்பாணிதான்...என்ன செய்ய...தன் குஞ்சு பொன் குஞ்சுதானே கோகுல்?

Anonymous said...

கடமை ஆற்றி நம் படையினர் செய்யும் உயிர் தியாகம் மகத்தானது. அதற்கு சரியான மரியாதை இல்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை. இவர்கள் யாரைக் காக்க உயிர் தியாகம் செய்கிறார்களோ அவர்கள் எப்படிப் பட்டவர்கள்? சிக்கலான கேள்வி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!