திங்கள், 25 டிசம்பர், 2017

திங்கக்கிழமை : கத்தரிக்காய் தொக்கு - அதிரா ரெஸிப்பி





கத்தரிக்காய் தொக்கு:)..
ஒரு மருவாதைக்கெண்டாலும் என்னைக் கேளாமல்,என் தொக்கைத் தொட்டிட்டார் இவர்:) வேனா? வேனா? விட்டிடுவேனா?:)
ந்த தொக்கின் கதையே பெரிய கதையாக இருக்கு. இது செய்து இப்போ 6 மாதங்கள் ஆகப்போகுது.. இனி வெளிவர, இன்னும் எத்தனை மாதங்களோ தெரியவில்லை:).. எடுத்த  படமெல்லாம் கொம்பியூட்டரோடு காணாமல் போயிந்தி:).. இருப்பினும் விதி வலியது பாருங்கோ:).. அப்பப்ப என் அருமை பெருமைகளை, என் சொந்த பந்தக்களுக்கு அனுப்புவதால், படங்களை திரும்ப மீட்டு வந்துட்டேன்ன்.. ஆரு செய்த புண்ணியமோ:).

சரி இது ஒரு ஸ்பெஷல் தொக்கு [ இருக்காதா பின்ன?:).. அதிரா செய்ததெல்லோ:)] அதனால எல்லோரும் செய்து பாருங்கோ.. டெய்லி இதைச் செய்து தரச்சொல்லி உங்க ஆத்தில:), அல்லோரும் கேய்ப்பினம் பாருங்கோ:).
==========================எழுத்தோட்டத்துக்கு முன்:)===========================
நெல்லைத்தமிழனின் இட்லிப் பொடி 2,3 தடவைகள் செய்திட்டேன், இடியப்பத்துக்கும் சூப்பரா இருக்கு. இதில் ஏன் பொடி கறுத்துப்போச்சு?:), இட்லி ஏன் கறுப்புச் சேர்ந்திருக்கு:) எண்டெல்லாம் கிளவி:).. ஹையோ கேள்வி எழுமே:)... எழட்டும் எழட்டும்:) அப்போ பார்த்துக்கலாம்:)
================================================================
தேவையானவை:
கத்தரிக்காய் - நோர்மல் சைசில் கட் பண்ணிடுங்கோ.
வெங்காயம், பழப்புளி, உள்ளி[பூண்டு](ஃபைன் ஆக் கட் பண்ணுங்கோ), எண்ணெய்.. இதுக்குக் கடலை எண்ணெய்தான் பாவிக்க வேணும்.. அதுதான் இதன் ஸ்பெஷல் சுவையே . அத்தோடு எண்ணெய் விட்டு வதக்கும்போது, கஞ்சல்தனம் + ரெளடித்தனம்:) எதுவும் பண்ணாமல், கொஞ்சம் வஞ்சகமில்லாமல், ஒரு 4 மேசைக்கரண்டியாவது விடுங்கோ:)..  [ஆண்டுக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால்தானே சமைக்கப்போறீங்க:) அப்போ எண்ணெய்க் கணக்கெல்லாம் வாணாம்.. இதை நான் அஞ்சுக்கு சொல்லல்லே:))] மற்றும் கடுகு, கறுவா, ஏலக்காய், கராம்பு.. கறியின் அளவுக்கு ஏற்ப.
வறுப்பதற்கு:
எண்ணெயில்லாமல் வறுத்து, பவுடராக்கி எடுத்து வைக்கவும். மஞ்சளையும் எள்ளையும் வறுக்க வேண்டாம், அடுப்பை ஓஃப் பண்ணியபின் சேர்த்துக் கிளறினால் போதும். கொஞ்சம் நன்கு வறுபட்டால்தான் நல்ல கலர் கிடைக்கும்.
பொட்டுக்கடலை - ஒரு மேசைக்கரண்டி
மல்லி - ஒரு தேக்கரண்டி
எள்ளு - ஒரு தேக்கரண்டி
கச்சான் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் - அரைத் தேக்கரண்டி.
இங்கு அளவுகள் 200 -250 கிராம் கத்தரிக்காய்க்கு என எடுத்துக்கோங்க:)..  கறிக்கு மிளகாய்த்தூள் சேர்க்கப் போவதில்லை நாம், அதனால செத்தல் மிளகாயை உங்கள் காரத்துக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளுங்கோ.


கடலை எண்ணெயை விட்டு, கடுகு, ஏலக்காய், கராம்பு, கறுவா போட்டு வதக்கி, பின்பு உள்ளி, வெங்காயம் போட்டு வதக்கவும், நன்கு கலர்மாறி வதங்கட்டும்.

பின்பு கத்தரிக்காயுடன் உப்பும் சேர்த்து வதக்குங்கோ.

அதன் பின்னர் கரைத்த புளியை விட்டுக் கொதிக்க விடோணும்..

நன்கு கொதிக்கும்போது, வறுத்து அரைத்த பவுடரைச் சேர்த்து நன்கு பிரட்டி, இறுகியதும், இறக்கவும்.

 ஆவ்வ்வ்வ்வ் சுடச்சுட சூப்பர் தொக்கு ரெடீஈஈஈஈ:)..
()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8
சந்தோசம் அதிகமானால், எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காது:), சந்தோசம் தொண்டையை அடைத்துப் பதில் வராமல் தடுத்து விடும்:)..
இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)
()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8()8



தமிழ்மணம்.

56 கருத்துகள்:

  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் துரை முந்திட்டார்

    பதிலளிநீக்கு
  2. அன்பின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஸ்ரீராம் ..
    வணக்கம் கீதா மற்றும் அனைவருக்கும்..

    பதிலளிநீக்கு
  4. கிறிஸ்துமஸ் அதுவுமா பூஸார் கையில் டுப்பாக்கி...

    பதிலளிநீக்கு
  5. கறுவா? அரிவாளோனு பயந்துட்டேன். கச்சான்= வேர்க்கடலை? அருஞ்சொற்பொருள் கொடுங்க அதிரடி! இல்லைனா நேரே காவிரிக்குத் தான்!

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம், கிறித்துமஸ் வாழ்த்துகள்!! அனைவருக்கும்.அண்ட்.ஸ்ரீராம், துரை சஓக்!!!

    ஹை கீதாக்கா வாங்க!! காலை வணக்கம்!

    நான் ஆஜர்...பின்னாடி வரேன் அதிராவின் கத்தரியைச் சுவைக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் கீதா அக்கா,, நீங்கள் பழைய பதிவில் பேசிக்கொண்டிருந்த நேரம் இங்கு பதிவு வந்துவிட்டது! ஹிஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  9. அதுசரி... கடேசி போட்டாவுல அது என்ன A...

    நாங்க வந்து A க்கு பக்கத்தில (A)1 போடணுமாக்கும்!?...

    பதிலளிநீக்கு
  10. நட்புகள், உறவினர் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ஏஞ்சல்... கிறிஸ்துமஸ் பரிசாய் இன்று எனக்கு தம கன்னுக்குத் தெரியத் தொடங்கி உள்ளது. எத்தனை நாளோ!

    பதிலளிநீக்கு
  11. அதென்ன கடேசி போட்டாவுல A ந்டு மட்டும் போட்டுருக்கு?..

    நாங்க வந்து பக்கத்தில 1 போடணுமாக்கும்!?...

    பதிலளிநீக்கு
  12. மன்னிச்சுக்குங்க துரை ஸார்... அவங்க 1 போட்டு அனுப்பி இருந்தாங்க... அதை வாங்கிச் சேமிக்கும் நான் எடுத்து டேஸ்ட் பார்த்தேன்... ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  13. கிறிஸ்த்மஸ் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும். பண்டிகை நாளில் உண்டு களியுங்கள்..கூடி மகிழுங்கள் !

    பதிலளிநீக்கு
  14. அப்பாவிக் கத்திரிக்காயை நடுவில் படுக்கவைத்து சுற்றிவர வெடிகுண்டைக் கட்டிவைத்திருக்கிறமாதிரித் தெரிகிறதே.. திங்கள் ப்ளாக், எங்கள் கிழமைதானே இது?

    பதிலளிநீக்கு
  15. முடிவில் போட்ட ஏ ஸூப்பர்....
    படங்கள் அருமை
    அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  16. கத்தரிக்காய் தொக்கு - பார்க்க நல்லாத்தான் இருக்கு. நான் உபயோகப்படுத்தாத பலவித பொருட்களைத் தவிர்த்துவிட்டு செய்துபார்க்கிறேன்.

    காடுகளிலில் சுள்ளிகளைப் பொறுக்கி, அதனைக் கட்டிக்கொண்டுவருவதுபோல ஒரு சுள்ளிக்கட்டும், 3 ஆப்பிள்களும் படத்தில் இருக்கு. இது அழகுக்கா அல்லது, காரம் அதிகமாகப்போனாலோ அல்லது கத்தரிக்காய் அளவு குறைந்துவிட்டாலோ, ஆப்பிளையும் கட்பண்ணிப் போடுங்கள் என்று சொல்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  17. இட்லிப் பொடி கறுப்பாவது, அதில் எள் சேர்த்திருப்பதால், எண்ணெய் சேர்க்கும்போது கொஞ்சம் கறுப்பானமாதிரி தெரியும். நீங்க அதிகமாக மிளகாய்ப்பொடி இட்லி மேல சேர்த்திருக்கீங்க போலிருக்கு. இருந்தாலும் நல்லா இருக்கு. இங்கெல்லாம், இட்லில மிளகாய்பொடி எண்ணெய் தடவி (காலையிலேயே செய்து) மாலையில் சாப்பிடும்போது நல்லா ஊறி ருசியா இருக்கும். ஆனால், பயணத்தின்போது, இரவு இட்லி/மி.பொடி தடவினது, காலையில் லண்டனில் இறங்கி, குளித்து 9 மணிக்குச் சாப்பிடும்போது ஜில் என்று ஐஸாக இருக்கும், ருசி மிகவும் குறைந்துவிடும். உங்களுக்கு அங்கத்தைய கிளைமேட்டில் உடனேயே சாப்பிடணும்னு நினைக்கறேன். காலைல செய்து மாலைலலாம் சாப்பிடமுடியாது இல்லையா?

    பதிலளிநீக்கு
  18. "சந்தோசம் தொண்டையை அடைத்துப்" - துக்கம் தொண்டையை அடைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 'சந்தோஷமா தொண்டையை அடைக்கும்'? எப்பவோ அம்மா சொன்ன பழமொழிகளை அரைகுறையாக நினைவில் வைத்துச் சொன்னால், அதையும் யாரும் இங்க கேள்வி கேட்பினம் இல்லையே. எல்லோரும் அதிராவுக்கு பயப்படுவினம் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  19. தொக்கு நன்றாக இருக்கு. படங்களும். பெரிய கத்தரிக்காய். குழைவாக வரும். அன்புடன் யாவருக்கும் கிரிஸ்துமஸ் வாழ்த்துகள்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  20. ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் கடவுளே இன்று என் ரெசிப்பியோ???? எனக்கு சத்தியமாத் தெரியாது இன்று வெளிவரும் என... விடிய எழும்பிப் பார்த்து அப்பூடியே ஷாக்ட்ட்ட்ட்ட் ஆகிட்டேன்ன்ன்ன்:).. தெரிஞ்சிருந்தால் அதில ஒரு கிரிஸ்மஸ் வாழ்த்துச் சொல்லியிருப்பேன்:)... ஸ்ரீராம் திகதி சொல்கிறேன் என்றிட்டு சொல்ல மறந்திட்டார்ர்.. எனக்கும் சேர்பிறைஸ் பிடிக்கும் என்பதால் கேட்காமல் விட்டிருந்தேன்ன்ன் ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  21. ஆஅவ்வ்வ் இம்முறை துரை அண்ணன் ஸ்பீட்டா ஓடி வந்திட்டார்ர் முதலாவதாக வாங்கோ வாங்கோ.. பின்ன அதிராவின் கத்தரிக்காய்த் தொக்கு என்றதனாலதான் அதைப் பார்க்கும் ஆவலில் ஸ்பீட்டா ஓடியிருக்கிறார்ர்:))..

    //துரை செல்வராஜூ said...
    வணக்கம் ஸ்ரீராம் ..
    வணக்கம் கீதா மற்றும் அனைவருக்கும்..///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது ஒரு நியாஆஆஆயமே இல்ல:)... வணக்கம் அதிரா எண்டும் சொல்லியிருக்கோணும்:) பறவாயில்லை அஜீஸ் பண்ணிடுறேன்ன்:)) இது ஒண்டும் புதிசில்லை எனக்கு ஹா ஹா ஹா:))..

    ///கிறிஸ்துமஸ் அதுவுமா பூஸார் கையில் டுப்பாக்கி...///
    ஹா ஹா ஹா அது கேக் சுடப்போறாரோ என்னமோ:)... மிக்க நன்றி துரை அண்ணன்.

    பதிலளிநீக்கு
  22. வாங்கோ கீதாக்கா வாங்கோ..

    ///Geetha Sambasivam said...
    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் துரை முந்திட்டார்//
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நல்ல வடிவா இந்தக் குளிருக்குப் போர்த்துக்கொண்டு நித்திரை கொண்டிட்டு, லேட்டா எழும்பி ஓடி வந்து கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எண்டால்ல்ல்?:)) .. முதலாவதா வருவதெண்டால்ல்.. நித்திரை கொள்ளக்கூடா கீதாக்கா:).. இங்கின முதலாவதா கொமெண்ட் போடுவதெனின் நாங்கள் நித்திரை கொள்ளாமல் இருந்தெல்லோ போட்டுவிட்டுக் கொள்ளுவோம்:) கடமை முக்கியம்:))

    பதிலளிநீக்கு
  23. ///Geetha Sambasivam said...
    கறுவா? அரிவாளோனு பயந்துட்டேன். கச்சான்= வேர்க்கடலை? அருஞ்சொற்பொருள் கொடுங்க அதிரடி! இல்லைனா நேரே காவிரிக்குத் தான்!///

    ஹா ஹா ஹா கீதாக்கா நீங்க கறுவாவை பட்டை என்பீங்க என்ன?:) புதுசில் நான் பட்டை என்றால் என்ன எனத் தேடிக் கண்டு பிடிச்சேன்... தெரியாவிட்டாலும் கரெக்ட்டாக் கண்டுபிடிச்சிட்டீங்க பொருட்களை... இப்படி நீங்களே கண்டு பிடிக்கட்டும் என நினைச்சுத்தான் நான் சொல்வதில்லை:)..

    மியாவும் நன்றி கீதாக்கா.

    பதிலளிநீக்கு
  24. ///நான் ஆஜர்...பின்னாடி வரேன் அதிராவின் கத்தரியைச் சுவைக்கா

    கீதா//

    வாங்கோ கீதா வாங்கோ.. எங்கே கீதாவை 2 நாட்களாகக் காணவில்லை, இன்று ஒரு தேடுதல் போடோணும் என நினைச்சிருந்தேன்.. தேட விடாமல் வந்திட்டீங்க.. விடுமுறை போயிருந்தீங்களோ.. வாங்கோ வந்து என் தொக்கை செய்து பாருங்கோ... இது பாண்[பிரெட்] உடன் கூட சாப்பிடலாம் சூப்பரா இருந்துது.

    எனக்கும் 2,3 நாட்களாக கொஞ்சம் ஃபீவர் கீதா.. லோவிலயும் இல்ல ஹை லயும் இல்ல மீடியத்திலயே நிக்குது ஹா ஹா ஹா:).. விடுமுறை என்பதால் ரெஸ்ட்:)).. மிக்க நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீராம், கெள அண்ணன்.. மற்றும் இங்கு ஞாயிற்றுக்கிழமை பதிவு போடும் 2 வது ஆசிரியர்.. மற்றும் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்... __()__

    பதிலளிநீக்கு
  26. ///துரை செல்வராஜூ said...
    அதுசரி... கடேசி போட்டாவுல அது என்ன A...

    நாங்க வந்து A க்கு பக்கத்தில (A)1 போடணுமாக்கும்!?...///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது அதிரா வின் முதல் எழுத்தைப் போட்டேன்ன்.. சிலர் படம் பார்த்துக் கேட்டிச்சினம் என்ன அடல்ஸ் ஒன்லி ஃபூட்டோ என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் எது செஞ்சாலும் சொந்தத்திலயும் சரி நட்பிலயும் சரி காலை வாரி விடவே எல்லோரும் ரெடியா நிற்பினம்:))... நானும் ஓடி ஓடி ஸ்ரெடியாவே நிற்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  27. ///ஸ்ரீராம். said...
    நட்புகள், உறவினர் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ஏஞ்சல்... கிறிஸ்துமஸ் பரிசாய் இன்று எனக்கு தம கன்னுக்குத் தெரியத் தொடங்கி உள்ளது. எத்தனை நாளோ!///

    ஹா ஹா ஹா ஏஞ்சல் இன்று சாறி கட்டி, தடக்கி விழுந்து இனி 2,3 நாளக்கு பெட் ரெஸ்ட் என இருக்கப் போறா பாருங்கோ ஹா ஹா ஹா:)).. இதுக்குத்தான் ஊரில ஒரு பயமொயி:) சொல்லுவினம்... “தான் அறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம் என”.. ஹையோ படிச்சதும் கிழிச்சு.. அந்த டெல்லியில மூன்று ஆறும் ஆரம்பிக்கும் இடத்தில எறிஞ்சிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))[பெயர் வாயில வருகுதில்லை இப்போ].. ஒரு ஆத்தில போட்டா.. ஒட்டிப் படிச்சிடுவா:))..

    பதிலளிநீக்கு
  28. ///ஸ்ரீராம். said...
    மன்னிச்சுக்குங்க துரை ஸார்... அவங்க 1 போட்டு அனுப்பி இருந்தாங்க... அதை வாங்கிச் சேமிக்கும் நான் எடுத்து டேஸ்ட் பார்த்தேன்... ஹிஹிஹி...//

    ஆஹா ஆஹா.. எல்லோரும் ஓடிவாங்கோ இம்முறை ஸ்ரீராம் டேஸ்ட் பார்த்திட்டார் சாம்பிள் எடுத்து ஹா ஹா ஹா:).. ஆனா சுவை பற்றிச் சொல்லவே இல்லையே:))

    பதிலளிநீக்கு
  29. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    அப்பாவிக் கத்திரிக்காயை நடுவில் படுக்கவைத்து சுற்றிவர வெடிகுண்டைக் கட்டிவைத்திருக்கிறமாதிரித் தெரிகிறதே.. திங்கள் ப்ளாக், எங்கள் கிழமைதானே இது?///

    வாங்கோ ஏகாந்தன் அண்ணன்.. ஹா ஹா ஹா பூஸாரை மேலே துவக்கோடு பார்த்து விட்டு போஸ்ட் படிக்கத் தொடங்கியமையால எல்லாம் வெடி குண்டாகத் தெரியுது உங்களுக்கு:))... ஹையோ இண்டைக்குத் திங்கக் கிழமை தான்:) அது கத்தரிக்காய்த் தொக்குத்தேன்ன்ன்:)).. சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்கோ:) ஹா ஹா ஹா மிக்கநன்றி ஏகாந்தன் அண்ணன்...

    பதிலளிநீக்கு
  30. // நல்ல வடிவா இந்தக் குளிருக்குப் போர்த்துக்கொண்டு நித்திரை கொண்டிட்டு, லேட்டா // க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இல்லையோ! ஐந்தரை மணியிலிருந்து கணினியைத் திறந்து வைச்சுட்டு உட்கார்ந்துண்டு, ரிஃப்ரெஷ் பண்ணிப் பண்ணி அலுத்துப் போய் டாஷ்போர்டிற்கும் பதிவுக்கும் அங்கேயும், இங்கேயும் ஓட்டமாய் ஓடி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போதும், போதும்! கடைசியிலே பார்த்தால் ஶ்ரீராம் ரகசியமா பப்ளிஷ் பண்ணிடறார். துரை முந்திடறார்! :))))))

    பதிலளிநீக்கு
  31. Geetha Sambasivam said...
    ////ஐந்தரை மணியிலிருந்து கணினியைத் திறந்து வைச்சுட்டு உட்கார்ந்துண்டு, ரிஃப்ரெஷ் பண்ணிப் பண்ணி அலுத்துப் போய் டாஷ்போர்டிற்கும் பதிவுக்கும் அங்கேயும், இங்கேயும் ஓட்டமாய் ஓடி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போதும், போதும்! கடைசியிலே பார்த்தால் ஶ்ரீராம் ரகசியமா பப்ளிஷ் பண்ணிடறார். துரை முந்திடறார்! :))))))///

    ஹா ஹா ஹா ஹையோ கீதாக்கா உங்கள் ஜொந்தக் கதை யோகக் கதை கேட்டு இந்தக் கிரிஸ்மஸ் நாளில் மீ நொந்து நூலாகிட்டேன்ன்ன்ன்:)).. ஒருவருக்குத் துன்பம் வரலாம்.. ஆனா இவ்ளோ துன்பம் வந்திடக்கூடாது:)).. இருப்பினும் நீங்க காரியத்தில கண்ணா இருக்கேல்லை கீதாக்கா:)).. பாருங்கோ ஸ்ரீராம் உங்களைப் பழைய பதிவிலேயெ இருக்க விட்டிட்டு, ரைமுக்கு அவர் பப்ளிஸ் பண்ணி துரை அண்ணனை முந்த வச்சிட்டார்ர்ர்ர்:)).. விடாதீங்கோ கீதாக்கா:)) இது திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் ஜதீஈஈஈ ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதேஏஏஏ சதீஈஈஈஈஈ:))... ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  32. வாங்கோ கில்லர்ஜி...

    //KILLERGEE Devakottai said...
    முடிவில் போட்ட ஏ ஸூப்பர்....///


    ஆஅங்ங்ங்ங் பார்த்தீங்களோ கில்லர்ஜிக்குப் புரியுது:)).. மிக்க நன்றி கில்லர்ஜி:))..

    பதிலளிநீக்கு
  33. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

    //நெல்லைத் தமிழன் said...
    கத்தரிக்காய் தொக்கு - பார்க்க நல்லாத்தான் இருக்கு. நான் உபயோகப்படுத்தாத பலவித பொருட்களைத் தவிர்த்துவிட்டு செய்துபார்க்கிறேன்.///

    இதில் நீங்க உள்ளி வெங்காயம் தானே சேர்க்க மாட்டீங்க?.. ஏனையவை ஓகேதானே?..

    ///காடுகளிலில் சுள்ளிகளைப் பொறுக்கி, அதனைக் கட்டிக்கொண்டுவருவதுபோல ஒரு சுள்ளிக்கட்டும்,///
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்களுக்குப் பொறாமை நான் இவ்ளோ வச்சிருக்கிறேன் என..:) எனக்கு கறுவா சும்மா சாப்பிடப் பிடிக்கும்.. இந்தக் குளிருக்கு, விரத காலங்களில் எல்லாம் ஜக்கெட் பொக்கட்டில் வைத்திருந்து குட்டிக் குட்டித்துண்டா சாப்பிடுவேன்.

    இது அக்கா ஆட்களுக்கு அவர்கள் நண்பர் குடும்பம் இந்தியாவில் இருந்து கப்பலில் பொருட்கள் அப்பப்ப அனுப்பி விடுவினம்{பணம் கொடுப்பார்கள்}.. அப்படி வந்ததில் தான் எனக்கும் 2 கட்டுத் தந்தவ.. இன்னும் நிறைய இருக்கு.

    பதிலளிநீக்கு
  34. //நெல்லைத் தமிழன் said...
    இட்லிப் பொடி கறுப்பாவது, //

    இல்ல நெல்லைத்தமிழன், நான் வெள்ளை எள்ளுத்தான் செர்த்தேன்.. என்னாலும் கண்டு பிடிக்க முடியாமல் போச்சு ஏன் எண்ணெய் பட்டவுடன் கறுப்பாகுது என.. பவுடரைப் பாருங்கோ அழகான கலரில இருக்கு.

    பின்பு தான் கண்டு பிடிச்சேன், நான் செத்தல் மிளகாயை கறிகளுக்குப் பாவிக்கும்போது எப்பவும் விதைகளை அப்படியே ரின் க்குள் கொட்டி விட்டு, தோலை மட்டுமே எடுப்பேன், காரம் அதிகமாகிடும் என...

    அதனால விதைகள் மட்டும் அரைக்கிலோ மட்டில் சேர்ந்திருந்தது.. அப்போ இந்தப் பொடிக்கு மிளகாய்க்குப் பதில் விதைகள் மட்டுமே சேர்த்தேன்..

    எதுவுமே சுடச்சுட சாப்பிட்டால்தான் ருசி அதிகம். அதுவும் இங்கத்தைய குளிருக்கு ஆவி பறந்தால்தான் சாப்பிட நல்லாயிருக்கும்.. அதுக்காக நெடுகவும் கிச்சினிலேயெ நிக்க முடியாதெல்லோ.. ஒவ்வொருவர் ஒவ்வொரு நேரம் வருவினம் சாப்பிட...

    அதனால மைக்குரோவேவ் ல சூடு பண்ணித்தான் சாப்பிடுவோம். ரீ கூட ஊத்திப்போட்டுக் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் போட்டு விட்டு விடுவேன் பின்பு மைக்குரோவேவ் தான்:))... அரை மணித்தியலத்திலேயே குளிர்ந்திடும் இங்கு...

    பதிலளிநீக்கு
  35. //நெல்லைத் தமிழன் said...
    "சந்தோசம் தொண்டையை அடைத்துப்" - துக்கம் தொண்டையை அடைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 'சந்தோஷமா தொண்டையை அடைக்கும்'? //

    ஹா ஹா ஹா ரெண்டுமே தொண்டையை அடைக்கும்:)).

    ///எல்லோரும் அதிராவுக்கு பயப்படுவினம் போலிருக்கு.///
    ஹா ஹா ஹா அப்பூடியா சொல்றீங்க?:) இது எனக்குத் தெரியாமல் போச்சே:)).. இனிமேல் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கத் தேவையில்லைப்போல இருக்கே:))... நோ நான் நம்ப மாட்டேன்:) நான் நம்பி தெகிறியமா:) வெளியில வந்தால் பிறகு எல்லோரும் ஓட ஓட விரட்டுவீங்க:))

    ஹா ஹா ஹா மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  36. //காமாட்சி said...
    தொக்கு நன்றாக இருக்கு. படங்களும். பெரிய கத்தரிக்காய். குழைவாக வரும்.//

    வாங்கோ காமாட்சி அம்மா வாங்கோ... ஓ அப்போ தொக்குச் செய்ய பெரிய கத்தரிக்காய்தான் நல்லதோ?.. இங்கு பெரிய கத்தரிக்காய் மட்டுமே கிடைக்கும், ஏனைய குட்டிக் காய்கள் எனில் தமிழ்க்கடையில் மட்டுமே கிடைக்கும்.

    மிக்க நன்றி காமாட்ஷி அம்மா.

    பதிலளிநீக்கு
  37. அதிரா தொண்டை அடைக்குதே என்ன சொல்ல எது சொல்ல நீங்களே கிரேட்டும் போட்டுட்டீங்க சிரமம் வைக்காமல் அதையே நானும் முன்மொழிகிறேன் முதல் படத்தில் ஆப்பிளும் காகித பூவும் இருக்கவும் என்னடா இது என்று பார்த்தல் அதெல்ல்லாம் அழகுக்கு என்று பயம் தெளிந்தேன் பின் குறிப்பை பார்த்து ஹா ஹா
    இங்கு வருகை புரிந்திருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து தோழமைகளுக்கு
    கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  38. எங்கள் வீட்டிலும் செய்வதுண்டு!

    பதிலளிநீக்கு
  39. அதிரா ரெசிப்பி நல்லாருக்கு... பொருட்களின் பெயர் புரிந்தது அது பிரச்சனை இல்லை...ஆனால் பிரிப்பரேஷன்...எள்ளும் மஞ்சளும் வறுக்காமல்...சரி மஞ்சள் பொடிதானே வறுக்கமாட்டோமே..சரி எள்ளு வறுக்க வேண்டாம் ஓகே ஆனால் கடைசியில் சேர்க்கலையோ அதைப் பற்றிச் சொல்லவில்லையே..

    அதுக்கு அப்புறம் ஒரு டவுட்...எண்ணை இல்லாமல் வறுக்கணும்னு முதலில் சொல்லிட்டு அப்புறம் எண்ணை விட்டு வறுத்துப் பொடி பண்ணச் சொல்லியிருக்கீங்களே....

    ஒரு வேளை நான் தான் சரியா புரிஞ்சுக்கலையோ?!!!

    இந்தப் பொடி ஆந்திர சமையலில் பயன்படுத்துவாங்க....

    நல்லாருக்கு குறித்துக் கொண்டேன்...மேற் சொன்ன டவுட் இருந்தாலும் புரிந்த அளவில் செய்து பார்க்கிறேன் ஹிஹிஹிஹி...யும்மி ரெசிப்பி!! அதிரா!! பூஸார் படம் சூப்பர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  40. ஆமாம் அதிரா இரண்டு நாள் வலைத்தளத்திற்கு ஆஃப் கொடுத்திருந்தேன்...பயணம் தான்...வெளிநாட்டிலிருந்து மாமியார்-மாமனார் வீட்டு நெருங்கிய உறவினரின் வருகை...
    அதான்
    கீதா

    பதிலளிநீக்கு
  41. புலியூர் பூஸானந்தா என்ன இப்படிச் சொல்லிப் போட்டார். துக்கம் தானே தொண்டையை அடைக்கும் வார்த்தைகள் வராது...! சந்தோஷம் வந்தால்...ஓ ஓகே இந்த அழகிப் போட்டியில் எல்லாம் ஜெயித்ததும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் தளும்ப...பேச முடியாமல் ....அப்படியாக இருக்கலாம் இல்லையா பூஸாநந்தா..??!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  42. சின்ன வயசில சாப்பிட கிடைக்கல, வயசான காலத்தி்ல சாப்பிட கிடைக்குது, சாப்பிட முடியல, அதில நீங்க வேற விதவிதமா ரெசிபி போட்டு ஆசையை தூண்டி விடுறீங்க

    பதிலளிநீக்கு
  43. மீ வந்திட்டேன் :) போனில் வோட்டு போட்டு படிச்சேன் ..இப்போ மை pin ஊட்டம் :)
    அந்த பப்பி தொட்டு தானே பார்த்தார் அதுக்கு எதுக்கு மிரட்டறீங்க :)
    இடியாப்பத்துக்கு இட்லிப்பொடி ஓகே ஆனா எதுக்கு அந்த குக்கீஸ் ஜிஞ்ஜர்ப்ரெட் டைஜஸ்டிவ் பிஸ்கட்ஸ் மேலெல்லாம் இட்லிப்பொடியை போட்டிருக்கீங்க

    பதிலளிநீக்கு
  44. ஏன் தொட்டாய் பப்பி :) ஏன் தொட்டாய் ..எங்களை ப்ரொடக்ட் செய்யவா :)

    பதிலளிநீக்கு
  45. ஆஆவ் !! எப்படி வேர்க்கடலையை தோலோட போடணுமா இல்லை தோல் நீக்கி போடணுமானு சொல்லலை :)

    பதிலளிநீக்கு
  46. @ஸ்ரீராம் :) நேற்று மிட்நைட் சர்ச்சில் இருக்கும்போது 12 க்கு நெஞ்சு படபடன்னு அடிச்சுது :) எல்லாம் அடிச்சி பிடிச்சி ஓடி வருவேன் இங்கே முதல் கமெண்ட் போட :) ..கொஞ்சம் நாள் அநேகமா இப்படி 12 :30க்கு வருவேன் :)

    பதிலளிநீக்கு
  47. http://seasonalhome.files.wordpress.com/2012/11/pkg-with-tag_s.jpg

    கிக்கிக்கீ :)
    @நெல்லைத்தமிழன் ஹாஹ்ஹா ..விறகுகட்டை காட்டில் ஹாஹ்ஹா விழுந்து புரண்டு சிரிக்கிறேன்

    எனக்கு என்னமோ இந்த பட்டை கட்டினத்தை பார்த்தா christmas Potpourri and Scented Decor லருந்து எடுத்து வச்ச மாதிரியே இருக்கு :)

    பதிலளிநீக்கு
  48. //அதனால விதைகள் மட்டும் அரைக்கிலோ மட்டில் சேர்ந்திருந்தது.. அப்போ இந்தப் பொடிக்கு மிளகாய்க்குப் பதில் விதைகள் மட்டுமே சேர்த்தேன்..//

    தெய்வமே திருநாளும் அதுவுமா இதெல்லாம் கண்ணில் படணுமா :)

    பதிலளிநீக்கு
  49. கத்திரி தொக்கு பார்க்கப் பிரமாதம். செய்து பார்க்கிறேன்.
    மிக நன்றி அதிரா. இனிய க்றிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  50. நேற்றி இரவு எவ்வளவோ ட்றை பண்ணினேன், எங்கள் புளொக் திறக்கவே இல்லை... இன்றும் அப்படித்தான் விடாமல் பிரெளசர்கள் மாத்தி ட்றை பண்ணி இப்போ மக்தொன் ஊடாகத் திறந்தேன்...

    ஆறிய கஞ்சிபோலாகி விட்டமையால், விரிவான பதில் இல்லாமல் நன்றி சொல்லி விட்டு ஓடிவிடுகிறேன்...

    பூவிழி, புலவர் ஐயா, கீதா, அஞ்சு, திரு அசோகன், வல்லிம்மா, கரந்தை அண்ணன் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  51. படங்களுடன் சிறந்த வழிகாட்டல்
    வாயூறுது ஐயா!

    பதிலளிநீக்கு
  52. மிக்க நன்றி ஜீவலிங்கம் அண்ணன்... அதுசரி ஆரை ஐயா எண்டு கூப்பிடுறீங்க? ஸ்ரீராமைத்தானே?:)..

    பதிலளிநீக்கு
  53. //அதுசரி ஆரை ஐயா எண்டு கூப்பிடுறீங்க? ஸ்ரீராமைத்தானே?:).. //


    ஹா... ஹா... ஹாதிரா!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!