செவ்வாய், 22 ஜனவரி, 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : அப்புவாகிய நான்... - கீதா ரெங்கன்


அப்புவாகிய நான் / கோயில் பிரசாதம்

கீதா ரெங்கன் 



நான் அப்பு! வயது 5. என் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா முதல் ஊரார் அனைவருக்கும் நான் செல்லம். என் அக்கா, அண்ணாவுடன் நான் அடிக்கும் லூட்டி இருக்கிறதே! சில சமயம் எல்லோரும் எங்களை கோபித்துக் கொள்ளும் அளவிற்குச் செல்லும். செல்லமாகத்தான்!


என் ஊரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமே! எனக்கு என் ஊரை ரொம்பப் பிடிக்கும். ஊர் மிகவும் சிறியதுதான் ஆனால் மிகவும் அழகாக இருக்கும் தெரியுமா? ஊரைச் சுற்றி ஆறு, வாய்க்கால், தோப்புகள், வயல்கள் என்று பச்சைப் பசேலென்று இருக்கும். அருகில் மலைகள் வேறு. மழை நன்றாகப் பெய்யும். ஊரின் நடுவில் அழகான, பெரிய, ரொம்பப் பழமையான கோயில். தெப்பக் குளமும் அத்தனை அழகு! நான் நன்றாக நீந்துவேனாக்கும்! நீங்கள் சின்னியை பார்த்தால் அவளிடம் மட்டும் சொல்லி வையுங்கள். சின்னி யாரென்று உங்களூக்குத் தெரியாதே! பின்னர் சொல்கிறேன்.


எங்கள் ஊர்க் கோயிலுக்கு எங்கிருந்தெல்லாமோ மக்கள் வருவார்கள். வெள்ளைக்காரர்கள் கூட வருகிறார்கள். அவர்களுடன் நானும் நடந்து எல்லா இடங்களுக்கும் செல்வேன். அதனால் வருகிறவர்கள் எல்லோருக்கும் என்னை மிகவும் பிடிக்கும். கோயிலை ஃபோட்டோ எல்லாம் எடுப்பார்கள். என்னையும் கூட எடுத்து ஏதோ ஃபேஸ்புக்காமே அதில் கூடப் போட்டார்களாமே! நீங்கள் என்னைப் பார்த்தீர்களோ? ஓ! உங்களுக்கு என்னைத் தெரியாதே! இப்போது என்னைப் பற்றிச் சொல்லிவிட்டேன் இல்லையா? அடுத்த முறை அவர்கள் என் ஃபோட்டோவைப் போடும் போது என்னைப் பாருங்கள்! அவர்கள் மீண்டும் வரும் போது “அப்பு எங்கே” என்று என்னைக் கேட்டு வரவழைப்பார்கள். இப்போதெல்லாம் எனக்கு ஹிந்தியும், ஆங்கிலமும் கூட நன்றாகப் புரிகிறது.

எனக்கு எங்கள் கோயில் ரொம்பப் பிடிக்கும். ஏன் சொல்லுங்கள்? எல்லாம் தினமும் மூன்று வேளையும் கிடைக்கும் பிரசாதம்தான் காரணம். அத்தனைச் சுவையாக இருக்கும். என் அம்மா, அப்பா கூட என்னைக் கலாய்ப்பார்கள். “வீட்டுல திங்கறது போதாதுனு கோயில்ல போயும் கொட்டிக்குது பாரு! சரியான அலவலாதி” என்று! அதென்னவோ தெரியவில்லை. எனக்கு எங்கள் வீட்டில் சாப்பிட்டாலும் கோயில் பிரசாதம் சாப்பிடவில்லை என்றால் என்னவோ போலிருக்கும். சில சமயம் பிரசாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டு வீட்டில் சாப்பிடாமல் கூட இருந்துவிடுவேன். பிரசாதம் கொடுக்கும் நேரம் எல்லாம் எனக்கு அத்துப்படியாக்கும்!

நீங்களும் எங்கள் ஊர்க் கோயிலுக்கு வாங்க. கோயிலில் இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு நல்ல நண்பர்கள். என்னுடன் வந்தால் பிரசாதம் நிறைய கிடைக்கிறதாம், கூட வருபவர்கள் சொல்லிக் கொள்வார்கள். நான் உங்களுக்குத் துணையாக வந்து ஊரெல்லாம் சுற்றிக் காட்டுவேன். நீங்கள் அப்புறம் உங்கள் ஊருக்குப் போகவே மாட்டீங்க. அதுவும் என்னை விட்டுப் போக மாட்டீங்க! கண்டிப்பாக போட்டோ எடுப்பீங்க!


எங்க ஊர்ல சத்தமே அவ்வளவா இல்லாம அமைதியா இருக்கும். வண்டி எல்லாம் உள்ளே வராது. எல்லாம் ஊருக்கு வெளியே நடக்கும் தூரத்தில நின்று விடும். அங்குதான் போய் எல்லோரும் ஏறிக்கொள்வார்கள். எங்க ஊர் வண்டிகளும் அங்க ஒரு பெரிய ஷெட் இருக்கும் அங்கதான் நிறுத்தனும். 

எங்க ஊர்ல புகையே இருக்காது.  சைக்கிள்தான் நிறைய. என் அப்பா என்னை சைக்கிள்ல பின்னால உட்கார வைச்சு ஓட்டிட்டு போவார். எனக்கு ரொம்பப் பிடிக்கும். முக்கியமா ஒன்னு சொல்லனும். எங்க ஊர்த் தலைவர் என்னை தட்டிக் கொடுத்து சொல்லுவார். “இவென் ரொம்ப வித்தியாசமா இருக்கான்லா. வெளிய ஒரு எடத்துலயும் ஒன்னுக்கு அடிக்கறதே இல்லைல்லா”ன்னு.

தெருவுல குப்பையே இருக்காது. எல்லாம் அவரவர் வீட்டுக்குப் பின்னாடி உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டிடனுமாம். அன்னிக்கு நான் ஒரு கவரை எடுத்துப் பார்த்தேன். என் அண்ணன் வந்து அதைப் பிடுங்கி அந்த தொட்டில போட்டான். ப்ளாஸ்டிக் எல்லாம் தெருவுல உள்ள பெரிய  சிமென்ட் தொட்டிக்குள்ள போடனுமாம். எங்க வீட்டுல பேசிக்கொள்வார்கள் “மத்த ஊர்ல எல்லாம் மாடு ப்ளாஸ்டிக்கை திங்காமே. பாவம்” னு. 

எனக்கு எங்க ஊர் மாடுகளைப் பார்த்தா பயமா இருக்கும். பெரிசா இருக்கும். ப்ளாஸ்டிக்னா என்ன? எனக்குத் தெரியலையே. விஷமா? ஒன்று சொல்ல மறந்துட்டேனே. எங்க ஊர்ல பட்டாசு வெடிக்கும் பழக்கமே கிடையாதாக்கும்! எல்லாமே எங்க ஊர்த் தலைவர் போட்டிருக்கும் எழுதப்படாத சட்டம்னு எங்க வீட்டுல பேசிக்கொள்வார்கள். சட்டம்னா என்ன? உங்க ஊர் எல்லாம் இப்படி இருக்குமா? 

இடையில் அத்தையின் வீட்டில் விசேஷம் என்று நாங்கள் அத்தை இருக்கும் ஊருக்குப் போனோம். சென்னையாம் அதன் பெயர். ஆனால், எனக்கு அது பிடிக்கவே இல்லை. ஒரே சத்தம், வண்டிகள், புகை, அழுக்கு, வெயில், தண்ணீரே இல்லை. இரண்டு ஆறுகள் பார்த்தேன். ஐயே! அதுவா ஆறு!? எங்கள் ஊர் ஆற்றை வந்து பாருங்கள். அதை விடுங்கள், அத்தையின் வீட்டருகில் கோயில் இருந்தும் கோயிலில் பிரசாதமே தரலை. எனக்குப் பிடிக்கலை. எனக்கு நண்பர்களும் இல்லை. எங்கள் யாருக்குமே நகரம் பிடிக்கவில்லை. அண்ண்னும், அக்காவும் நரகம்னு சொன்னாங்க. எங்கள் ஊருக்கு எப்போது வரப் போறோம் என்று ஆகிவிட்டது. விசேஷம் முடிந்து ஊருக்கு வந்ததும்தான் நிம்மதியாக இருக்கிறது.

ஹான்! சின்னியைப் பற்றி சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேனே. மேற்குத் தெரு எங்கள் தெருவிற்கு நேரெதிர்த் தெரு. அங்கு வெளியூர்க் குடும்பமாம். ஹிந்திக்காரர்களாம். எனக்குத்தான் ஹிந்தி புரியுமே. அவர்கள் வீட்டுப் பெண் தான் சின்னி! நல்ல சுருட்டை முடியோடு பார்க்க பொம்மை மாதிரி அழகாக இருக்கிறாள்னு அவள் பெயர் சின்னியாம்! எனக்கு நல்ல தோழிதான். நான் அவளை விளையாடக் கூப்பிடுவேன். ஆனால், அவளது அம்மா அப்பா அவளை விட மாட்டார்கள். அவள் திண்ணையில் இருக்கும் அழி வழியாக என்னை எட்டிப் பார்ப்பாள்.

அந்தத் தெருவில் இருக்கும் பாண்டியும் எனக்கு நல்ல தோழன்தான். ஆனால், ஏனோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் என்னைக் கண்டால் டூ விடுறான். நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன் தெரியலை. சின்னி அவனுடன் மட்டும் தான் விளையாடனுன்னு நினைக்கிறானோ? அவனுக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு ஊரார் பேசிக் கொள்வார்கள். அவனுக்குக் கோயில் பிரசாதம் கொடுக்கவே மாட்டார்கள். நான்தான் அவன் பாவம் என்று கோயில் பிரசாதம் அவனுக்கும் கொடுப்பேனே! அப்புறம் ஏன் என்னிடம் டூ என்று தெரியவில்லை! என் அம்மா அப்பா கூடக் கோபப்படுவார்கள். பாண்டியனோடு விளையாடாதே என்று. ஆனால் நான் அதற்கெல்லாம் கவலையேபடுவதில்லை. எனக்கு எல்லோரையும் பிடிக்கும்.

இப்போது மார்கழி இல்லையா? கோயிலில் பிரசாதம் களை கட்டும். அதுவும் கோயில் மடப்பள்ளி எங்கள் வீட்டிற்கு அருகில் என்பதால் அந்த மணம் அப்படியே கட்டி இழுக்கும். கூட்டம் அதிகமாக இருக்கும். நான் வீட்டில் கொஞ்சம்தான் சாப்பிடுவேன். எல்லோர் வீட்டு வாசலிலும் அழகாகக் கோலம் போடுவார்கள். விளையாட்டுப் பிள்ளை நான் மிதித்துவிடுவேனோ என்று என்னை “ஏய் தள்ளிப் போ” என்று சொல்லுவார்கள். நான் ரொம்ப நல்ல பிள்ளையாக்கும். இப்போது பழகிவிட்டது. புரிந்து கொண்டு மிதிக்காமல் போவேனாக்கும்.

சற்றுப் பொருங்கள். கோயிலில் மணிச் சத்தம் கேட்கிறதே. உங்களோடு பேசிக் கொண்டிருந்ததில் கவனிக்கவே இல்லை. அடடா! அதற்குள் உச்சிக்கால பூஜை ஆகிவிட்டதா? பிரசாதம் கிடைக்குமே! பிரசாதம் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்.

ஓடுகிறேன்…………

“அப்புவை காங்கலை? என்னாச்சுடே? அவனுக்குப் பிரசாதம் கொண்டாந்தேன்”

ஆ! இது கோயில் அண்ணன் குரல். நான் எங்கிருக்கிறேன்? ஏன் என்னால் எழ முடியவில்லை?

“அப்பு அப்பு! பிரசாதம் திங்கப் போகாம இன்னும் படுத்துக் கிடக்க.” அம்மாவின் குரல்.

ஓ! நான் ஓடலையா? என்னாச்சு எனக்கு?

‘அப்பு……அப்பு… ஏண்டா அப்படிப் பாக்கே.” அம்மாவின் கவலைக் குரல். என்னைத் தடவிக் கொடுக்கிறாள். 

“ஐயோ இங்கன வாங்களேன்! நல்லாத்தானே இருந்தான். வாலை ஆட்டமாட்டேங்கான்…..காதும் ஆடலை….ஐயோ ஒன்னுக்கு வேற அடிக்கான்.....அப்பூஊஊ டேஅப்பு இந்தாப்பு” 

அம்மாவின் கையில்………கோயில் பிரசா…………



படங்கள் கர்ட்டசி இணையம்

74 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்…
    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஆ ஆ ஆ ஆ நான் ரிஷபன் அண்ணா கதையா இருக்குமோனு வந்தேன்...பாத்தா அப்பு!!!!

    சரி வரேன் இன்னிக்கு லேட்டு எழுந்தது. லொக்கி லொக்கி....

    தில்லில வேற அண்ணாச்சி ஒரே குமைச்சு குமைச்சு...பாதில இருக்கு...

    அப்புறமா வரேன் வேலை முடிச்சுட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம்ம் எங்க மோதியின் நினைவு வந்து விட்டது. பால் பாயசம் என்றால் ரொம்பப் பிடிக்கும். வறுக்கும்போதே வாசனையின் மூலம் மோப்பம் பிடித்துக் கொண்டு சமயலறை வாசலில் ஓரமாக வந்து உட்காருவான். நட்ட நடுவில் தான் படுப்பது வழக்கம். ஒரு தரம் வாலை மிதித்துவிட்டேன். திட்டியதில் புரிந்து கொண்டு ஓர் ஓரமாய் உட்காருவான். பாயசம் நிவேதனம் செய்யும் வரை பொறுமையாய்க் காத்திருப்பான். சப்பாத்தி அடுத்துப் பிடித்த பண்டம்.

    இதே போல் தான் 98 ஆம்வருடம் டிசம்பர் மாதம் பதினாறாம் தேதி மார்கழி ஒன்றாம் தேதி அதிகாலையில் ட்கோலம் போட வாசலுக்கு வந்தால் வால் ஆடவில்லை. படுத்துக் கிடந்தான். விளையாட்டாக்கும் என நினைத்துத் தொட்டு உலுக்கியதில் கண்களைக் கஷ்டப்பட்டுத் திறந்து என்னைப் பார்த்தான். உடனே சந்தேகம் வர அவரைக் கூப்பிட்டேன். அவர் வந்து பார்த்ததும் மிக மெதுவாக வாலை ஒரு முறை தூக்கி ஆட்டினான். அவ்வளவு தான் கண்கள் மூடிக்கொண்டன.

    இந்த வருத்தம் இப்போதும் மறையவில்லை. ஆனால் அதுக்கப்புறமாத்தான் ஊரிலுள்ளவை எல்லாமே செல்லங்கள் தான், தனியா வேண்டாம்னு விட்டுட்டோம். இதைப் படிக்க ஆரம்பிக்கையிலேயே புரிந்து விட்டது, அப்பு யாரென. ஆகவே முடிவில் ஆச்சரியம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றுதான் அதீதம் பக்கத்தில் நாய்மனம் பக்கம் திறந்து பார்த்தேன். அங்கும் உங்கள் மோதியின் நினைவுகளை பகிர்ந்திருந்தீர்கள் கீதா அக்கா....

      நீக்கு
    2. மிக்க நன்றி கீதாக்கா. மோதி பாவம்..உங்கள் வருத்தம் புரிந்து கொள்ள முடியும்...எனக்கும் ப்ரௌணியின் மறைவு இன்னும் கண் முன்னே வருத்தமும் உண்டு..நானும் மகனிடம் சொல்லிட்டேன் இப்ப கண்ணழகிக்கு அப்புரம் யாரையும் வைச்சுக்க மாட்டேன். ஊர்லதான் நிறைய இருக்கேன்னு. பார்ப்போம்...

      அக்கா முடிவு நான் நினைத்து எழுதலை....அப்படியே எழுதிப் போனப்ப வந்துருச்சு...இந்தக் கதை எழுதத் தொடங்கி ஒரு 3 வ்ருஷம் இருக்கும் கொஞ்சம் கொஞ்சமா எழுதி முடிச்சு வைச்சுருந்தேன் எபிக்கு அனுப்ப. அப்புறம் ஒருவழியா அனுப்பிட்டேன்...

      மிக்க நன்றி கீதாக்கா

      நீக்கு
    3. என்னாதூஊஊஊஉ மோதி????:) அதிவும் கீசாக்கா வீட்டு ......???? ஆவ்வ்வ்வ்வ்வ் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு.....:)

      நீக்கு
    4. http://sivamgss.blogspot.com/2014/02/blog-post_6626.html அதிரடி, இங்கே போய்ப் பாருங்க. இதுக்கு முன்னாடியும் மோதி பத்தி எழுதி இருக்கேன். எனக்குக் கல்யாணம் ஆனதில் இருந்து 98 வரை எங்க வீட்டில் செல்லங்கள் மாத்தி மாத்தி இருந்திருக்கின்றன. 98க்குப் பின்னர் தான் வேண்டவே வேண்டாம்னு விட்டுட்டோம். :(

      நீக்கு
    5. அதிரா கீதாக்கா பதிவுகள் ல மோதி பத்தி நிறைய சொல்லியிருப்பாங்க! சுப்புக் குட்டி போல!!!! மோதி பத்தி அக்கா சொல்லிருந்தாலும் எனக்கென்னவோ சுப்புக்குட்டியை ரொம்ப பிடித்துவிட்டது!!!!!

      கீதா

      நீக்கு
    6. ஆம் கீதாக்கா என்னோட மல்ட்டி கதையிலும் சொன்னீங்க ..உங்களுக்கு மோதி மறக்க முடியாத செல்லம் ..
      எனக்கு பப்லு மாதிரி

      நீக்கு
    7. ஊரில் செல்லங்கள் நிறைய இருந்தாங்க அப்பா செல்லங்களின் டாக்டர் என்கிறதால் :) வெளிநாடு வந்து மகளுக்காக ஹாம்ஸ்டர் ,கோல்ட் மீன்கள் ..இதில் தங்க மீன்க;ல் 10 வருஷம் இருந்தாங்க ..அவங்க போனபின் அந்த POND க்ளீன் செஞ்சி மண் நிரப்பிட்டேன் ..
      ஒவ்வொருமுறையும் என்னை எட்டி பார்க்கும் செல்லங்கள் இல்லா அந்த குளத்தை பார்க்க பிடிக்கலை ..
      வேணவே வேணாம்னு நினச்சும் இப்போ ரெண்டு பொண்ணுங்க மியாவ்ஸ் :)

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இன்றைக்கு கீதாஜி அவர்களின் கைவண்ணத்தில் ஒரு கதை.... ஆவலுடன் படித்து முடித்தேன். நல்ல கதை.

    அப்பு - மனதைத் தொட்டார்....

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் அனைவருக்கும். ஓ! கீதா ரங்கன் கதையாகும். ஐந்து வயசுக்காக பையன் இப்படிக்கூட பேசுமான்னு ஒரே அதிசயம். ஊர் வர்ணனை பிரமாதம். 5 வயசிலயே பரமபதமா .அடப்பா வமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா வாங்க...5 வயசு ..ம்ம்ம்ம் ஒரு கற்பனைதான் பைரவர் பேசினால் எப்படி இருக்கும்னு....எங்கள் வீட்டு கண்ணழகி ப்ரௌனி எல்லாம் அவர்களின் கண் உடல் அசைவு வைச்சே நாங்களே அது இப்படி நினைக்குது அப்படி நினைக்குது பாரு என்னமா சொல்றா பொண்ணு..பாரு பெட்ஷீட் வேணுமாம் குளிருதாம் எப்படி கேக்கறா பாரு அப்படினு பேசிக் கொள்வதுண்டு. ஸோ அப்படியே ஒரு கற்பனை....அதுவும் பாண்டியிலிருந்து கண்ணழகி, ப்ரௌனி ரெண்டு பேரையும் வண்டியில் அழைத்து வந்தப்ப ரெண்டும் ஜன்னல் வழியாக பயந்து கொண்டே வேடிக்கைப் பார்த்து வந்தனவா அப்ப அவங்க மனசுல என்ன தோனும்னு நினைச்சுப் பார்த்ததுண்டு அப்படி ஒரு கற்பனைதான் வல்லிம்மா...

      மிக்க நன்றி வல்லிம்மா...

      கீதா

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் சொல்லிய மாதிரி - தொடக்கத்திலேயே உள்ளுணர்வு சொல்லிவிடுகிறது....


    அத்துடன் இப்படித்தான் முடியப் போகிறது என்றும்......

    அது சரி... அப்பு எங்கே?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ துரைசெல்வராஜூ அவர்கள் கீதா சொல்லியதை நான் சொன்னதாக சொல்லி விட்டார்கள்.
      நான் டைப் அடித்துக் கொண்டு இருந்தது உள்ளுணர்வாக அவருக்கு தெரிந்து விட்டது போலும்!

      நீக்கு
    2. அதனால் பரவாயில்லை கோமதி! :) கொஞ்ச நாட்களாகவே துரை சகோதரர் கொஞ்சம் குழப்பம்/தடுமாற்றம் கொண்டு காணப்படுகிறார். விரைவில் சரியாகப் பிரார்த்திப்போம்.

      நீக்கு
    3. துரை அண்ணா வந்தாச்சு...இன்று கொஞ்சம் லேட் எழுந்தது.

      ஆமாம் பல சமயங்களில் உள்ளுணர்வு சொல்லிவிடும்....

      மிக்க நன்றி துரை அண்ணா கருத்திற்கு...

      கீதா

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    எ. பியின் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இன்று சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் எழுதியதா? மிகவும் நன்றாக இருக்கும். அவருக்கு வாழ்த்துக்கள். கொஞ்சம் நேரம் வேலைகள் கழிந்ததும் நிதானமாக படிக்கிறேன். தங்களின் நேற்றைய பதிவும் படித்தேன். சகோதரர் கெளதமன் அவர்களின் திருமதி மீனாட்சி கெளதமன் அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவர்களின் கைவண்ணத்தில் சிறப்புற்ற க மி பூ மியும் மிகவும் நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா வாங்க வாங்க....ரொம்ப நாளாச்சு பார்த்து....திடீர்னு காணாமப் போயிட்டீங்களே! நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்னு போல!!!
      எப்படி இருக்கீங்க கமலாக்கா?

      நிதானமா படிச்சுட்டு வாங்க கமலாக்கா....

      நான் முதலில் இன்று க மி பூ மி க செய்யலாம்னு பூண்டு கூட உரிச்சு வைச்சேன். ஆனா இன்னும் ஜல்பு போகலை..ஏற்கனவே எனக்கு ஃப்ளேவர் அறியும் திறன் போய் சில வருஷமாச்சு....இப்ப ஜல்பு வேறயா சுத்தமா ஒன்னுமே தெரியலை ஸோ அது செய்யலை....கோல்ட் ரிலீவ் ஆனதும் செய்யலாம்னு வைச்சுட்டேன்...

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  9. கீதா , நெகிழ வைத்து விட்டீர்கள்.மனம் கனத்து விட்டது.
    அப்பு யார் முன்பே தெரிந்து விட்டது. செல்லங்களை வளர்ப்பவர்களுக்கு அவர்களுக்கு என்ன உறவோ அந்த முறையில் அழைக்க வைப்பார்கள்.எங்கள் சாரின் அண்ணன் வீட்டில் இருக்கும் செல்லத்திடம் யார் வந்து இருக்கிறார்கள் பார்! ஆச்சி, அத்தை, என்று உறவு முறை சொல்லி பேசுவார்கள் செல்லமும் ஒவ்வொருவருக்கும் குதுகலத்தோடு வாலை ஆட்டி முகமன் கூறும்.


    நாய்க் குட்டி ஒன்று குப்பையில் இருக்கும் பாலிதீன் பையை எடுத்துக் கொண்டு ஓடி அதன் உள்ளே இருப்பதை எடுக்கப் போராடும் காட்சியை முகநூலில் போட்டு இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா எங்க வீட்டுல கூட கண்ணழகி, ப்ரௌனிக்கு என் மகன் அண்ணா, நான் அம்மா, கணவர் அப்பா என் மகனுக்கு அத்தை பைரவிகளுக்கும் அத்தை. சித்தப்பா எல்லாம் ...அவர்களை எலலம் கண்டதும் இவர்கள் வாலை ஆட்டி குதிப்பார்கள் பாருங்கள் ஹையோ கொள்ளை அழகு.

      இப்ப கூட கண்ணழகியையும் பார்க்கநும் என்று மகனின் அத்தை வந்துவிட்டு சென்றார். அன்று முழுவதும் கண்ணழகி அத்தையுடனேயேதான் இருந்தாள்.

      கோமதிக்கா அந்தக் காணொளியை உங்க தளத்துல போடறீங்களா? நான் முகனூலில் இல்லையே....

      மிக்க நன்றி அக்கா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  10. மார்கழி மாதம், கோவிலில் அதன் முடிவு. நல்லகதிதான் செல்லத்திற்கு கஷ்டபடாமல் போய்விட்டது, தினம் கோவிலை வலம் வந்ததால்.
    உடம்பு சரியில்லாத பாண்டியனுடன் நட்பு வைத்துக் கொண்டதால் இதற்கும் நோய் தொற்று ஏற்பட்டுவிட்டதா?
    சின்ன வயதில் உடம்புக்கு வந்து விட்டதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை எழுதத் தொடங்கியது என்னவோ மூன்று வருடங்கள் முன்...மார்கழி ஆனது அப்புறம்தான்...

      பாண்டியனுடன் என்றில்லை கோமதிக்கா....பொதுவாகவே பைரவ/வி களுக்கு உப்பு தித்திப்பு ஆகாது. கொடுக்கக் கூடாது. அதனால்தான் அவர்களுக்கு சொறி மற்றும் பல பிரச்சனைகள் எல்லாம் வருகிறது என்று கால்நடை மருத்துவம் சொல்கிறது. தெருவில் இருக்கும் பைரவ/விகள் அதனால்தான் பல அவஸ்தைகளுக்கு உள்ளாகின்றார்கள். சில சமயம் காரணம் தெரியாமலேயே இறந்துவிடுகிறார்கள் இப்படிப் பல உணவுகளை உண்பவர்கள். அது போஸ்ட்மார்ட்டம் செய்தால்தான் சரியாகத் தெரியும்.

      மகன் சொன்னதிலிருந்து சொல்லுகிறேன் அக்கா...

      பிட்ஸ்/பொமரேனியன் வகையறாக்கள் கொஞ்சம் சென்சிட்டிவ்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  11. படங்கள் பொருத்தமாய் இருக்கிறது.
    அப்புவை பார்க்க முடியாதது வருத்தம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எல்லாம் எங்கள் ஊர் படங்கள் கோமதிக்கா. ஆனால் நெட்டில் எடுத்தவை. நான் ஊருக்குச் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் ஃபோட்டோ எடுக்கும் வாய்ப்பு இல்லை. அதை செட் செய்து ஸ்ரீராமுக்கு அனுப்பிய பிறகுதான் மண்டையில் உரைத்தது....அடடா நம்ம அனு சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தாங்களே அவங்ககிட்ட வாங்கியிருக்கலாமேன்னு....அப்புறம் போனால் போகுதுனு விட்டுட்டேன்....

      கீதாக்கா கூட நாரோயில் வரை போய்ட்டு எங்க ஊருக்குப் போகாம வந்துட்டாங்க....

      மிக்க நன்றி அக்கா கருத்திற்கு. அப்பு என்று யாரும் இருக்கலைக்கா...சும்மா ஒரு பைரவ/வி மனதில் நினைத்துப் பேசுவது போல...

      கீதா

      நீக்கு
  12. சென்ற முறைபோல் இல்லாமல் சில வரிகளிலேயே இது வளர்ப்பு நாய் சொல்லும் கதை என்பதைப் புரிந்துகொண்டேன்.

    கிராம்ம், கோவில் எல்லாம் கண்களில் விரியும்படி எழுதியிருக்கீங்க.

    எனக்குத்தான் வளர்ப்புப் பிராணிகளைப் பற்றி புரிந்துகொள்ள முடிவதில்லை.

    பாராட்டுகள் கீதா ரங்கன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு. சென்ற முறை? அப்ப இதுக்கு முன்ன இப்படி ஏதாவது கதை அனுப்பியிருக்கேனா இங்க எபி ல? என் நினைவுக்கு ஒன்னுமே வரலை போங்க...அதுவும் சமீபமா என் மூளை மழுங்கிப் போச்சு..

      எங்க ஊர் படமாக்கும்...நெட்டுல எடுத்தது...நீங்க இன்னும் போகலையே ஸோ சும்மா இப்படிச் சொல்லியாவது போவீங்களோன்னுதான்....சிலது கற்பனை...நிஜம் இல்லை...

      நீங்கன்னு இல்லை இங்கு வருபவர்கள் யாரேனும் எங்கள் ஊருக்குப் போறதா இருந்தா சொல்லுங்க. சாப்பாடு, தங்க எலலம் சொல்லிச் செய்து தரேன்.

      நெல்லை வளர்ப்புப் பிராணினு இல்ல..எல்லா ஜீவ ராசிகளையும் புரிந்து கொண்டாலே அதுல வளர்ப்பும் அடங்கிடுமே...

      மிக்க நன்றி நெல்லை கருத்திற்கும் பாராட்டிற்கும்..

      கீதா

      நீக்கு
    2. ஹலோ கீதா ரங்கன்... உங்க ஊருக்கு நான் 2006ல் போயிருக்கேன் (மலையாள திவ்யதேச யாத்திரையின் போது). ஆனா கோவில் மட்டும்தான் போனோம். காலைல அங்கு ஒருவர் கோவிலில் மைக்கில் (அப்படீன்னு ஞாபகம்) கர்நாடக பாடல்கள் பாடினார். (பிராமணர் இல்லை). எனக்கு மனதை மயக்கியது. அவருக்கு சிறிது அன்பளிப்பு கொடுத்தேன்.

      அந்த பாடல் நிகழ்ச்சிலனாலயும், கோவிலுக்கு எதிரே இருந்த பெரிய குளத்தில் சோப்புப் போட்டுக் குளிக்காதீர்கள் என்று எழுதியிருந்ததனாலேயும் அந்த ஊர் எனக்கு மறக்கவில்லை.

      ஊரின் வீதிகளுக்குச் சென்றதில்லை. அங்குதான் நம்மாழ்வாரின் தாய் (உடையநங்கை?) இருந்த வீடு, இப்போது பஜனை மடமாக இருக்கிறது என்று படித்திருக்கிறேன். இன்னும் மனைவியோடு அங்கு செல்லும் வாய்ப்பு வரலை.

      நீக்கு
    3. ஓ! நீங்கள் போனப்ப பாடியவர் ஒல்லியாக உயரமாக இருந்தாரா? கர்நாடக இசை என்றால் என்றால் நித்யானந்தம் என்பவர். நான் இருந்தப்ப அவர்தான் பாடுவார். சன்னதியில். அவர் மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்று என்ற பாடலைப்பாடினால் நான் நின்று கேட்டுவிட்டு வருவேன், அவர் கோட்டார் ராமச்சந்திரபாகவதரிடம் இசை பயின்றவர். கோட்டார் ராமச்சந்திர பாகவதர் பாலமுரளியின் சிஷ்யர்.

      மற்றொருவர் குண்டாக இருக்கும் ஒரு தாத்தாவும் பாடுவதாக அறிந்தேன். ஆனால் நான் இருந்தப்ப அவரைப் பற்றித் தெரியாது. நித்யாநந்தம் ரொம்ப நன்றாகப் பாடுவார். குரல் மிக மிக நன்றாக இருக்கும்.

      குளத்தில் நாங்க இருந்தவரை துணி தோய்த்துக் குளித்து எல்லாம் செய்திருக்கோம். அப்புறம் வந்த கண்டிஷன் போல...ஆனால் மிக மிக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. எங்கள் ஊர் குளம் எனக்கு மிகவும் பிடிக்கும். நடுக்குளம் வரை நீந்திவிட்டு வந்ததுண்டு. போட்டியும் போடுவோம். பாவாடையை நீர்க்குமிஸி போல ஃபொஃப் என்று ஆக்கிக் கொண்டு மிதப்போம்....இப்படி நிறைய..

      நாங்கள் இருந்த அதாவது என் அம்மாவின் அம்மா/என் பாட்டி நாங்கள் இருந்த வீட்டின் வெகு அருகில் அதாவது திண்ணையில் அமர்ந்து பார்த்தால் உட்புறம் தெரியும் அளவு அருகில்...தான் இருந்தோம். மேற்குப் பகுதி. அப்புறம் கிழக்கே சென்றோம் அத்தத்தில் மூன்றுகல்படிக்கட்டருகில். மேற்கும் கிழக்குமாக ஒரே அக்ரகாரம்தான். பாட்டிகளின் காலத்திற்குப் பிறகு கசின்ஸ் எங்கள் கல்யாணம் ஆன பிறகு அம்மா அப்பா பஜனை மடத்திற்கு அதாவது நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கை இருந்த வீடு தொட்டடுத்த வீட்டில் வாடகைக்கு இருந்தார்கள். பஜனை மடத்திலிருந்துதான் அதுதான் ஜடாயுபுரத்திற்குச் செல்லும் வழியின் ஆரம்பம். மேலே கூட அந்தப் பாதையின் படம் உள்ளது மூன்றாவது படத்தில் ஆட்டோ நிற்கும் பாதைதான் ஜடாயுபுரம் செல்லும் பாதை...

      அனு ப்ரேம் வந்தால் படத்தைப் பார்த்ததுமே சொல்லிவிடுவார்.....

      கீதா

      நீக்கு
  13. படிக்கும்போதே அப்பு யாரென தெரிந்தது.
    முடிவில் மனம் கனத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி....

      ஹா ஹா ஹா நானும் சஸ்பென்ஸ் என்றெல்லாம் எழுதலை மனம் போன போக்கில் எழுதி அப்புறம் கரெக்ட் செஞ்சேன்...முடிவும் அப்படியே வந்துவிட்டது...

      கீதா

      நீக்கு
  14. எதுக்கு அப்புக்கு இந்த முடிவு..
    சரளமான நடை.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரிஷபன் அண்ணா உங்க கருத்தைக் கண்டு ரொம்ப மகிழ்ச்சியும் ஊக்கமும்!!!

      அப்புவின் முடிவு...அது தானாகவே மனதில் வந்துவிட்டது. காரணம் என் மனதில் மகன் சொன்னது பதிந்த காரணமாகவும் கூட இருக்கலாம். பைரவர்களின் உணவு விஷயங்கள். அவர்களுக்கு உப்பு, தித்திப்பு கூடாது. அதனால் பல பிரச்சனைகள் வரும் என்று மகன் சொல்லியிருப்பதால்...வீட்டில் செல்லம் இருப்பதால் அவன் அதற்குச் சில கடைபிடிக்கச் சொல்லியிருக்கான்.

      இப்போது கூட இங்கு நல்ல குளிர் என்பதால் செல்லத்திற்கு சென்னை வெதர் பழகி இப்போது இது முதல் இப்படியான குளிர்காலம் என்பதால் அவளுக்கும் தொண்டைக் கட்டியிருக்கு. குரைப்பதில் வித்தியாசம் இருக்கு. அவர்களுக்கும் சளி எல்லாம் வரும் காய்ச்சல் எல்லாம்....

      மிக்க நன்றி ரிஷபன் அண்ணா தங்களின் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  15. அப்பு நெகிழவைக்கும் கதை.
    அருமை அக்கா.

    பதிலளிநீக்கு
  16. ஆஆஆ இன்Dஉ கீதா கதையா?... சூப்பரா இருக்கு கீதா... வெள்ளையர்களோடு நானும் நடப்பேன் என்றவரை, ஒரு குட்டித் தம்பியாகவே நினைச்சேன் அப்புவை:).. பின்புதான் புரிஞ்சுது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா சீக்கிரமாவே வந்துட்டீங்களே!!! ஓ உங்களுக்கு அது சஸ்பென்சாக இருந்துச்சா...உண்மைய சொல்லனுன்னா நான் அப்படி எழுதலை...அப்படியே மனம் போற போக்கில எழுதினேன்....

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
    2. ஏழியா எழும்பியதாலதான் கீதா வந்தேன் இல்லை எனில் கதை படிக்கவே ஈவினிங் ஆகியிருக்கும்:(..

      நீக்கு
  17. மிக அழகாக எழுதி வந்து முடிவில் கொஞ்சம் மனம் கனப்பது போலாச்சு இருப்பினும் பறவாயில்லை அது ஓவர் வெயிலுக்கு அப்பு மயங்கி பிரசாதத்தோடு எழும்பிடுவார்ர்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பு எழும்பிட்டா நல்லதே அதிரா....சின்னியோடும் பாண்டியோடும் விளையாடுவாரே!!! இன்னும் கதைகள் கதைப்பாரே!! அதுவும் கூட மனம் போக்கில் விட்டுவிட்டேன்...மாற்றவில்லை..

      மிக்க நன்றி அதிரா

      கீதா



      நீக்கு
  18. கீசாக்கா, நெ தமிழனைப்போல, அப்புவுக்கும் கோயில் என்றாலே சாப்பிடும் நினைவுதான் கர்ர்ர்ர்ர்ர்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அதிரா அந்த லிஸ்ட்ல என்னையும் ஸ்ரீராமையும் விட்டுட்டீங்களே!!! நோ நோ!! கூட்டுங்கப்பா பஞ்சயாத்தை!! ...

      அதிரா நான் கோயில் போகும் போதெல்லாம் முதல்ல எங்காவது பிரசாதம் கொடுக்கறாங்களான்னு ஒரு நோட்டம் விடுவேன் பாருங்க.....அதென்னவோ தெரியலை கோயில் பிரசாதம்னா ஒரு ஆசை எனக்குண்டு. ஒரு வேளை அதுவும் அப்புவின் கேரக்டரில் வந்துருக்குமோ!!! ஹா ஹா ஹா ஹா

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
    2. ஒரு தடவை அடையாறு பத்மனாபா கோவிலுக்கு மனைவி குழந்தைகளோடு போனபோது, நுழையற சமயத்துல பிரசாதம் கொடுத்திட்டிருந்தாங்க. என் மனைவி, கோவிலுக்குள்ள போலாம், பிரசாதம் தர இடத்தில் நிற்கக்கூடாதுன்னு என்னைக் கூட்டிக்கிட்டு போயிட்டா. தரிசனம் எல்லாம் முடிந்து வந்தப்போ பிரசாதம் எப்பவோ முடிந்துவிட்டிருந்தது.

      ஆமாம்... கோவில்னா பிரசாதம் ஞாபகம் வந்தால் தப்பா? அது இறைவனின் பிரசாதம்தானே.

      நீக்கு
    3. அப்படி நோட்டம் விடறதுனால எங்க வீட்டுல (அப்போவே அதாவது எங்க ஊர்ல இருக்கும் போதே) என் கூட வரவங்க எனக்கு வைச்ச பெயர் பறக்காவட்டி!!! ஹா ஹா ஹா ஹா....

      கீதா

      நீக்கு
    4. டப்புத்தான் நெ தமிழன் டப்புத்தான்ன்ன் கோயில் எண்டால் சுவாமிதான் நினைவுக்கு வரோணும் கர்ர்ர்ர்ர்:).

      இங்கு இந்தியாவுக்கு அடுத்து 2 வது திருப்பதி என அழைக்கப்படும் திருப்பதிக்கோயில் பேமிங்காமில் இருக்கு... எங்கள் வீட்டிலிருந்து விடிய 5 மணிக்கு வெளிக்கிட்டால், காரில் 4.30 மணித்தியாலத்தில் போயிடலாம்... அப்படி ஒருநாள் போய் கை கால் கழுவிவிட்டு பார்த்தால் சுடச்சுட எலுமிச்சை சாதம் இருந்துது... பூசை பார்த்துவிட்டுத்தானே சாப்பிடுவோம், பூஜை பார்த்திட்டு வந்தால் ஒரு சொட்டுக்கூட இல்லை கர்ர்ர்ர்:)... பிள்ளைகளுக்குத்தான் கோயில் பிரசாதம் ரொம்பப் பிடிக்கும்... கணவரும் வீட்டில் வேண்டாம் என்பார் கோயிலில் எந்தச் சாதமும் சாப்பிடுவார்... அன்Tஉ ஏமாறமாக இருந்துது....
      நம் ஊர்களில் எனில் கோயில் பூஜை முடிந்த பின்னரே, சாப்பிட அனுமதிப்பர்...

      நீக்கு
    5. உடனே ஆஆஅ அதிராவின் சமையல் எனப் புறப்படக்குடா கர்ர்ர்ர்:)... கோயிலில் அதிகம் படிக்கும் அப்போ அது தேனாமிர்தமாகிடுதுபோல:)..

      நீக்கு
    6. ஆஆஅ பறக்காவடி:)... நான் பறவைக்காவடி எனப் படிச்சிட்டேன் கீதா:)..

      நீக்கு
    7. இதில இன்னொன்று, சின்ன வய்சிலிருந்தே கோயில் எனில் சாப்பிடாமலே போவோம் , பூஜை இல்லை எனில் சுற்றிக். க்ம்பிட்டு திருநீறு பூசிய பின்னரே அப்பா சாப்பிட விடுவார்.. அது பழக்க மாகிட்டுது...

      நீக்கு
    8. நெல்லை ஹையோ நான் பத்மனாபர் கோயிலுக்குப் போனால் பிரசாதம் கொடுப்பதைப் பார்த்துவிட்டால் முதலில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுத்தான் உள்ளே செல்வேன்..ஹிஹிஹிஹிஹிஹி...

      நீங்க சொல்லிருப்பது போல திரும்ப வரும் போது கிடைக்காது. ஒரு வேளை உடன் வருபவர்கள் விடவில்லை என்றால் உள்ளே போயிட்டு...ஹையோ வேண்டாம்...பறக்காவட்டியேதான்!!! ஹா ஹா ஹா ஹா ஹா...அதென்னவோ தெரியவில்லை கோயில் பிரசாதம் என்றால் தனிதான்...ஆனா இத்தனைக்கும் எங்க ஊர்ல திங்க பிரசாதமே கிடையாது. மலையாளத்து பழக்கவழக்கம்...

      அதிரா! பறவைக்காவடி!! ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
  19. மயக்க நிலையிலும் சின்னியின் நினைவும் வருதே... சைட் அடிச்சிருக்கிறார் , சரி வரேல்லைப்போல ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா...ரொம்பவே அவருக்கு சின்னியைப் பிடிக்கும்....ஆனா பாருங்க சின்னியோட பேரன்ட்ஸ் விடலையாம் ஒரே குறை அப்புவுக்கு..

      அப்புவுக்குத் தன் நிலை தெரிஞ்சுருக்கும் போல அதான் நம்மகிட்ட எல்லாம் சொல்லிட்டார்.....தன் ஊர் பற்றி, கோயில் பற்றி என்று...

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  20. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
    என்பதைப் போல் நன்றாக
    எழுதத் தெரிந்தவர்களுக்கு
    ஒரே ஒரு வார்த்தைக் கூட போதும்தான்
    என்பதை நிரூபிக்கும் கதை
    பகிர்ந்தவருக்கும் எழுதியவருக்கும்
    நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சகோ கருத்திற்கு. அந்த அளவிற்கு நான் இருக்கேனா என்று தோன்றியது...

      கீதா

      நீக்கு
  21. அப்பு யார் என்று தெரிந்தாலும் மனது வேதனைப்பட்டது. எவ்வளவு வீட்டினருடன் அன்பாகப் பழகி நம்மில் ஒன்றாக இருந்தது. பிரஸாதங்கள் சாப்பிட்டாலும், மரணம் அனாயாஸமாக கிடைத்துவிட்டது. வேதனையான விஷயமாக இருந்தாலும் அதிகம் அவதிப்படவில்லை. கதையின் நடை அப்புவே கண்முன் வந்து சொல்வதுபோல இருந்தது. கீதாவின் கதை மனதைவருடுகிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி காமாட்சி அம்மா. தங்களின் கருத்திற்கு. ஊக்கம் அளிக்கும் வார்த்தைகள்.

      கீதா

      நீக்கு
  22. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

    நலமா? படங்கள் கதையோடு இணைந்து கை கோர்த்தபடி மிக மிக அழகாக, பசுமையாக இருக்கின்றன. அழகான ஊரைப் பற்றியும், கோவில்களின் அருமை பெருமைகளை பற்றியும் அப்பு விளக்கும் போது, ஒரு இடத்தில் அவர் ஒரு செல்லம் என்பது புரிந்தது. நீங்களும் இறுதி வரை அழகாக அப்பு என்பது யாரென்று தெரியாதபடிக்கு கதையினை நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறீர்கள். ஆனால் முடிவு மனதை என்னமோ செய்து விட்டது. இந்த முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. கடவுள் அப்புவை இன்னமும் கொஞ்சம் வாழ வைத்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது. மரணம் என்பது எந்த உயிருக்கும் இயல்பெனினும் வேதனையாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலாக்கா நான் நலமே.

      படங்கள் எங்கள் ஊர்தான். கோயில்களின் பெருமைகளில்....கோயில் பெருமை மிக்கதுதான் இருந்தாலும் நான் கொஞ்சம் அளந்துவிட்டேன் ஹிஹிஹிஹிஹி....

      ஆனால் அக்கா நான் அப்படி நினைத்து எழுதலைக்கா..அதே போல முடிவும் கூட நான் இப்படி என்று நினைக்கவில்லை. அப்பு பேசுவது போல ஒரு கற்பனையில் மனம் போன போக்கில் எழுதினேன். அவ்வலவுதான்...முடிவும் அப்படியே வந்தது. மேலே கருத்தில் சொல்லியபடி மகன் சொன்னது மனதில் பதிந்ததனால் அப்படி ஒரு முடிவு மனதில் தோன்றியதோ என்னவோ...

      அதிரா சொல்லியிருப்பது போல் மயக்கத்தில் இருந்து எழுந்துவிடுவார் அப்பு என்றே நினைத்துக் கொள்வோம் அக்கா...

      மிக்க நன்றி கமலாக்கா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  23. சின்னி, பாண்டி இவர்களை யூகித்தப்பிறகுதான் அப்புவும் அவர்கள் ஜாதி என்று யூகித்தேன். பாவம் அப்புவை ஏன் சாகடித்து விட்டீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுக்கா! அப்புவை சாகடிக்க வேண்டும் என்றெல்லாம் சாகடிக்கலை அக்கா...அது அப்படியே மனம் போன போக்கில் எழுதி அப்படியே வந்துவிட்டது அவ்வளவுதான்...சஸ்பென்ஸும் ப்ளான் பண்ணி எல்லாம் எழுதலை...அதுவும் அப்படியே அமைந்துவிட்டது..

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  24. உங்கள் ஊர் அழகாகவே இருக்கட்டும், அதற்காக சென்னையை கேவலமாக சொல்ல வேண்டுமா?😒

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா சென்னையை நானா கேவலாமா சொன்னேன் அது அப்பு அல்லவோ?!!! அப்பு கொஞ்சம் ஓவராத்தான் பில்டப் கொடுத்திருக்கார் ஊரைப் பத்தி!!! ஹா ஹா ஹா

      மிக்க நன்றி அக்கா...

      கீதா

      நீக்கு
  25. ஆஆவ் !!சூப்பரா எழுதியிருக்கீங்க கீதா அப்பு பேசறமாதிரி ..எனக்கு பப்லு கதை நினைவுக்கு வந்தது :) நீங்க மியாவ் அமுதசுரபி நான்லாம் மனுஷ உருவில் இருக்கும் செல்லங்கள் தானே :))) ஹாஹாஹா .

    கதை அழகாய் கிராமிய காட்சிகளை விவரித்து சென்றது ..இன்னொரு முக்கியமான விஷயம் இப்போல்லாம் நாலுகால் வால் செல்வங்களுக்கும் டயபிடீஸ் ,கிட்னி ஹார்ட் பிரச்சினைகள் வருது நிறையவே ..முயல்களுக்கு கேரட் அதிகமா க்குடுக்கக்கூடாதுன்னு இங்கே சொல்றாங்க ..கோயில் யானை ஒன்று நீரிழிவால் இறந்தததிற்கும் காரணம் நம்ம குடுத்த பிரசாதம் தான் :(

    அப்புறம் அப்புவுக்கு ஒன்னும் ஆகியிருக்காது எழும்பிடுவான் ..தூக்கத்தில் மூச்சா போனது கெட்ட கனவு கண்டிருப்பான் இல்லைனா யூரினரி இன்பெக்ஷனாலும் இருக்கும் :) இனிமே நாலுகால் செல்லங்களுக்கு இனிப்பு பிரசாதத்தை குடுக்க வேணாம்னு சொல்லணும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க மியாவ் அமுதசுரபி நான்லாம் மனுஷ உருவில் இருக்கும் செல்லங்கள் தானே :))) ஹாஹாஹா //

      யெஸ்ஸு யெஸ்ஸு ஏஞ்சல்!!! கண்டிப்பா!!

      // கதை அழகாய் கிராமிய காட்சிகளை விவரித்து சென்றது ..இன்னொரு முக்கியமான விஷயம் இப்போல்லாம் நாலுகால் வால் செல்வங்களுக்கும் டயபிடீஸ் ,கிட்னி ஹார்ட் பிரச்சினைகள் வருது நிறையவே ..முயல்களுக்கு கேரட் அதிகமா க்குடுக்கக்கூடாதுன்னு இங்கே சொல்றாங்க ..கோயில் யானை ஒன்று நீரிழிவால் இறந்தததிற்கும் காரணம் நம்ம குடுத்த பிரசாதம் தான் :( //

      நீங்கள் வந்தீங்கனா இதைச் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்...சொல்லிட்டீங்க.

      ஆமாம் ஏஞ்சல் பல செல்லங்கள் இப்படி இந்தக் கோயில் பிராசாதங்களை உண்டு அலல்து கல்யாணச் சாப்பாட்டை உண்டு...சிலது சாக்கலேட் ஐஸ்க்ரீம் கூட சாப்பிட்டுடுதுங்க....என் மகன் ரொம்ப கண்டிப்பு. நம்ம செல்லங்களுக்கு சப்பாத்தி கூடப் போடாதன்னு..இங்கு வீட்டில் கண்ணழகி என்ன டிமான்ட் செய்தாலும் அவளது ஃபுட் தவிர அதுவும் அளவு உண்டு. அந்த அளவுதான். க்ரீம் இல்லாத தயிர் ஒரு ஸ்பூன் வேணா கொடு என்பான் அவ்வளவுதான். பேக்கரி ஐட்டம்ஸ் அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்தான் ஆனா போடாத நீ வீட்டுல உப்பு சர்க்கரை எதுவும் போடாம செஞ்சு வேணா கொடு...ஆனா வெளில வாங்கிக் கொடுக்காத என்பான். அவர்களுக்கான சில ஸ்னாக்ஸ் மட்டும் சென்னைக்குப் போகும் போது அவன் க்ளினிக்கில் வாங்கிக் கொள்வேன். அங்க ஒரு நாலுகால் காதலி வீட்டுல இதுங்களுக்குனு ஸ்பெஷலா செஞ்சு விக்கறாங்க இவங்க டாக்டர்ஸ் அதை செக் பண்ணிட்டு க்ளினிக்ல வைச்சுருக்காங்க...பூஸாருக்கும் இருக்கு...

      ஆமாம் இங்கயே முயல்களுக்கு அப்பவே என் பையன் சொல்லுவான் கேரட் அதிகம் கொடுக்காதீங்கனு. அவன் ஃப்ரென்ட் வைல்ட் அனிமல்ஸ் எம்விஎஸ்ஸி படிச்சுட்டு வண்டலூர் ஜூவுல இருக்கார். அவரும் அதே சொல்லுவார்.

      கண்டிப்பா அப்பு எழுந்துருவார்னு நம்புவோம்!!! யெஸ் கோயில்ல அப்புறம் வீட்டுல வளர்க்கறவங்களும் நாம் சாப்பிடும் உணவைக் கொடுக்க வேண்டாமே என்ற எண்ணம் இருந்ததால்தானோ என்னவோ இப்படி என் மனம் போன போக்கில் எழுதினேன்...அதுவும் பிட் பிட்டாக...

      மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  26. வளர்ப்புச் செல்லத்தின் கதை நன்றாயிருக்கிறது மூன்று வருஷமா ஒரு கதை எழுத எங்கள் செல்லி போனதிலிருந்து நாய்கள் மேல் ஒட்டுதல் குறைந்து விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் கருத்திற்கு...

      மூணு வருஷம் என்பது என் சோம்பேறித்தனம் ஒன்று....கதைக்கு ஃப்ளோ விட்டுப் போனால் அப்படியெ நிற்கும் சார். இப்படி இன்னும் சில கதைகள் இருக்கு.

      மிக்க நன்றி சார்

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!