ஸ்ரீ வசந்த வல்லபராயர் கோயில், வசந்தபுரம், பெங்களூர்
புது வருடம் ஆரம்பித்துவிட்டது. முந்தைய தொடரைத் தொடர்வதற்குப்
பதில், சமீபத்தில் நாங்கள் சென்றுவந்த ஒரு கோயிலைப் பற்றி
எழுதலாம் என்று நினைத்தேன். பெங்களூர் வந்த பிறகு, பிரபந்தங்களைச் சேவிக்க சில
கோயில்களுக்கும், குழுவாக ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்வது
உண்டு. சில நேரங்களில் எங்கள் குழு, ஒரு
கோயிலில் கூடி அங்கு பிரபந்தம் சேவிப்பது உண்டு. நாலாயிர
திவ்யப் ப்ரபந்தங்களில், என்ன என்ன சேவிப்பது என்று முன்பே
தீர்மானித்துக்கொண்டு, குழுத் தலைவர் எல்லோருக்கும்
தெரிவித்துவிடுவார். சௌகரியப்படுபவர்கள் அனைவரும் சென்று
கலந்துகொள்வோம். நாங்கள்
அப்படிச் செல்வது கடந்த ஒரு வருத்துக்கும் மேலாக மிகவும் குறைந்துவிட்து. சென்ற வருடம் செப்டம்பரில்
மகளின் நிச்சயதார்த்த்திற்குப் பிறகு எங்களுக்கு வேலை அதிகமாகிவிட்ட து. மகள் திருமணம் ஏப்ரலில் முடிந்து அவர்கள் ஏப்ரல் இறுதியில் வெளிநாடு
செல்வது வரை நேரம் வேகமாக ஓடிவிட்ட து. சமீபத்தில், குழுவில் இருக்கும் ஒருவர், தனக்கு 80வயது ஆரம்பமாகப் போவதால், தான் சிறிய வயதிலிருந்து
சென்றுகொண்டிருந்த ஒரு கோயிலில் பிரபந்தம் சேவிக்கலாம், அன்று
அங்கு கல்யாண உத்ஸவம் வேறு நடைபெறுகிறது. காலை 9 ½ யிலிருந்து மதியம் 1 மணி வரை கோயிலில் சேவிப்போம்
என்று சொல்லியிருந்தார். என்னிடம் பேசும்போது அந்தக் கோயில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலான மிகப்
பழமையான கோயில் என்று சொன்னார். அதனால் மனைவியுடன் அந்தக்
கோயிலுக்குச் செல்லாம் என்று நினைத்தேன். அது நாங்கள்
இருக்கும் இத்திலிருந்து சுமார் 12 கிமீ தூரம்.
Obsession மாதிரி,
தினமும் 9-10 கிமீ நடப்பது, பிறகு சமீபகாலமாக ஜிம்மிற்குச் சென்றுவருவது என்று பல வேலைகளை நான்
வைத்துக்கொண்டிருப்பதால், இந்த மாதிரி பயணம் எனக்கு என்
தொடர் வேலைகளுக்குக் குறுக்கீடாகிவிடுகிறது. இருந்தாலும்
அன்று காலை 4 மணிக்கே எழுந்து என் நடைப்பயிற்சி மற்றும் ஜிம்,
யோகா முடித்துவிட்டு, 8 ½ மணிக்குத்
தயாராகிவிட்டேன். ஓலா டாக்சியில் இருவரும் அந்தக்
கோயிலுக்குச் சென்றோம். ஞாயிறு காலை என்பதால், அரை மணி நேரத்திலேயே கோயிலுக்குச் சென்றுவிட்டோம். மற்றவர்களும்
வந்த பிறகு பெருமாளை வணங்கிவிட்டு, பிரபந்தம் சேவிப்பதற்காக
பிராகாரத்திற்குச் சென்றோம். அங்கு ஒரு மேடை, மைக் போன்றவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பொதுவாக
எல்லாக் கோயில்களிலும் (கர்நாடகா/பெங்களூர்)
தமிழ் பிரபந்தங்கள் சேவிக்கப்படுவதில்லை. காரணம்
அதற்கான ஆட்கள் நிறையபேர் இல்லாத துதான். கோயிலில்
உள்ளவர்களுக்கும் நாங்கள் திவ்யப்ப்ரபந்தம் சேவிக்கப்போவதில் மகிழ்ச்சி.
இந்தக் கோயில் வசந்த வல்லபராயர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் மாண்டவ்ய ரிஷி, அடர்ந்த
காட்டுக்குள் பாறையின் மீது கட்டிய கோயில் இது. ஸ்தலபுராணத்தின்
பிரகாரம், பெங்களூர் முன்பு கல்யாணபுரி என்று
அழைக்கப்பட்தாம். அங்கு வசந்தபுரம் என்ற இட த்தில்
அமைக்கப்பட்ட கோயில் இது. இந்தக் கோயிலைச் சுற்றி அடர்ந்த வனப்பகுதி இருந்த தாம். அங்கு ரிஷிகள் தவம் செய்வதற்கேற்ற சூழ்நிலை இருந்த தாம். கோவில் அர்ச்சகர், மாண்டவ்ய ரிஷி ஐந்து இடங்களில்
விஷ்ணு கோயில்களை அமைத்தாராம், அவர் பெயரால்தான் மாண்டவ்ய
என்று அழைக்கப்பட்ட பகுதி, பிற்காலத்தில் மாண்ட்யா என்று
பெயர் பெற்றுவிட்ட து என்றார். இந்த வசந்த வல்லபராயர்
கோயிலைச் சுற்றி ஐந்து புனித தீர்த்தங்கள் இருந்த தாகவும், தற்போது
இரண்டு தீர்த்தங்கள் மாத்திரம் இருக்கின்றன என்றார். (தேவதீர்த்தம்,
வசந்த தீர்த்தம்). அதிலும் இப்போது
தூர்த்துவிட்டு கட்டிடங்கள் கட்டுவது ஆரம்பித்துவிட்ட து என்றார். வனாந்தரப்பகுதியாக முற்காலத்தில்
இருந்த இந்த இடம் இப்போது மிகுந்த வளர்ச்சி பெற்று கட்டிடங்கள் வீடுகள் என்று
ஆகிவிட்டது.
வருடத்தின் முதல் ஞாயிறில் அந்தக் கோயிலின் படங்கள் அலங்கரிக்கட்டும் என்று நினைத்ததால் இந்தப் பதிவு.
கோவிலின் வெளியே வெற்றித்தம்பம் போன்று இருந்த இடத்தில் கருடாழ்வார் கோவிலின் மூலவரைப் பார்த்திருக்கும்படியான தோற்றம்.
கோவிலின் உள் நுழைந்ததும், துவாரபாலகர்களுக்கு இடப் புறத்தின் இரு மூலையிலும் அனுமான் சந்நிதியும் சக்கரத்தாழ்வார் சந்நிதியும் இருக்கின்றன.
கோவிலின் வெளிப்பிராகாரத்தில் நிறைய மிக அழகிய வாஹனங்கள் இருந்தன. கருட வாஹனம் உங்கள் பார்வைக்கு.
கோயில் விமானம் (கர்பக்ரஹத்தின் மீது). இதில், கோவில் கர்பக்ரஹம், குன்றின் பாறையின் மீது அமைக்கப்பட்டிருப்பது தெரியும்.
வெளிப்பிராகாரத்தில் இருந்த துளசி மாடத்தின் சிற்பம், யானைச் சிற்பம். இவையெல்லாம் பிற்காலத்தையவை.
ஸ்ரீ வசந்த வல்லபராய ஸ்வாமி மூலவர் (இணையம்) இரு புறமும் பூமி, நீளாதேவித் தாயார்.
கர்பக்ரஹப் பகுதிக்குச் செல்வதற்கு முன், வலது புறம் சிறிய சந்நிதியில் அலர்மேல்மங்கை தாயார்
இருக்கிறார். அதற்கு முன்வரைதான் எல்லா பக்தர்களும் செல்ல
முடியும். அதற்குமேல், ஆடைக்கட்டுப்பாடு
உண்டு (கேரளக் கோயில்கள் போல்).
கர்பக்ரஹம் மற்றும் அதற்கு முன் உள்ள சிறு மண்டபம், மிகவும் பழைமை வாய்ந்த து. இடைக்காலச் சோழர்கள் ஆட்சியின்போது கட்டப்பெற்றது. அதற்கு வெளிப்புறம் உள்ள கோயில் பகுதி மிகவும் பிற்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. பெங்களூர் மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதியில் பல கோயில்களை சோழமன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டியிருக்கிறார்கள்.
பிரபந்தப் பாராயணம் முடிந்து, மூலவருக்கு முன்பாக சாற்றுமுறை சேவித்து, தீர்த்தம்
சடாரி பெற்றுக்கொண்ட பிறகு, வெளிப்பிரகாரத்தில் எங்களுக்கு
பிரசாதம் ஏற்பாடு செய்திருந்தார்கள் (சர்க்கரைப்பொங்கல்,
புளியோதரை மற்றும் தயிர்சாதம்). 80ம் வயதில்
நுழையும் அன்பர், (இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்தவர்) எங்களுக்கு கடைசியில் தாம்பூலப் பை வழங்கினார்.
எங்களிருவருக்கும் இந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையான
கோயிலுக்குச் சென்றதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்தக் கோயிலில் இரவு ஏகாந்த சேவை 8 மணிவாக்கில்
இருக்குமாம். மிகவும் ச்ரத்தையாக அப்போது பூஜை நடக்குமாம்.
கூட்டம் அதிகமில்லையாம். ஒரு வார நாளில்
சென்றுவரவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
இந்த வருடத் துவக்கத்தில் மிகவும் பழைமையான கோவில் ஒன்றைப் பற்றித்
தெரிந்துகொண்டீர்களா? அடுத்த வாரம் இன்னொரு
கோயில் உலாவில் சந்திப்போம்.
புகைப்படங்களை அனுபவித்து எடுத்திருக்கிறீர்கள் நெல்லை.
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். நிறைய கோவில்களுக்குச் செல்லும்போது அங்கு பாற்கும் சில சிற்பங்களையோ இல்லை கோயில் அமைப்பையோ பகிர்ந்தால் செல்பவர்களுக்கும் அவற்றைக் காணும் எண்ணம் வரும் என்பதும் ஒரு காரணம். நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி.
நீக்கு
பதிலளிநீக்குஅந்தக்காலத்து பரணீதரன்-ஸ்ரீ வேணுகோபாலன் கோயில்கள் பற்றிய தொடர்களை எழுதி இருக்கிறார். அதே போன்று கோயில்களைப்பற்றிய தொடர்கள் எழுதுவதில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள். உங்களுடைய சிறப்பு அம்சம் புகைப்படங்கள். பத்தி பத்தியாக எழுதுவதை ஒரு புகைப்படம் சுருக்கமாக சொல்லிவிடும். தொடரட்டும் சேவை.
படங்கள் அருமையாக உள்ளன.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார்.. அவங்க எங்கே... நான் எங்கே..
நீக்குபதிவை கதை புராணம் என நீட்டாமல், படங்களை மாத்திரம் பகிர்வது என்ற என் எண்ணம்தான் காரணம். நன்றி.
நிகழ்சிக்கு ஏற்பாடு செய்தவர் படத்தில் இருக்கிறார் என்றால் அவரையும் சுட்டிக் காட்டியிருக்கலாம்.
பதிலளிநீக்குமற்றவர்கள் அனுமதி இல்லாமல் அதைச் சுட்டிக்காட்டுவது இயலாது இல்லையா?
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கோவில் உலா பகிர்வு அருமையாக உள்ளது. பெருமாளை தரிசித்துக் கொண்டேன். இந்த இடம் மண்டியாவில் உள்ளதா? படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா ஹ ஹா.. கமலா ஹரிஹரன் மேடம்... பெங்களூரில் என் வீட்டிலிருந்து 12 கிமீ தூரத்தில் உள்ளது (Bபுல் டெம்பிள், 3 கிமீ தூரத்தில் உள்ளது). வாங்க திரும்பவும்.
நீக்குஅழகான புகைப்படங்களுடன் விளக்கங்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி திண்டுக்கல் தனபாலன். நீங்க உடல் நலம் பெற்றது எனக்கு மனதளவில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வலையுலகில் உங்களின் தாக்கம் மிகப் பெரிது.
நீக்குநெல்லை, படங்கள் எல்லாம் செமையா இருக்கு. விவரங்களும். பழமையான கோவில்.
பதிலளிநீக்குஇந்தக் கோவிலுக்குப், பெங்களூருக்கு வந்த புதிதில் சென்றிருக்கிறேன். அதுவும் வசந்தபுராவில் ஒரு நிகழ்வுக்கான அழைப்பு வந்ததால்.
அப்போது ஊரைப் பற்றி அதுவும் இம்மாம் தூரம் தள்ளி இருக்கும் இடம் பற்றி ஒன்றும் தெரியாது. கூகுளில் தெரிந்து கொண்டு சென்றதுதான்.
எலஹங்காவிலிருந்து மெஜஸ்டிக் வந்து, மெட்ரோ ரயிலில் பனசங்கரி வந்து அங்கிருந்து பேருந்தில் வசந்தபுரா சென்றால் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு 3 , 4 நிமிடத்தில் இக்கோவில். நிகழ்வும் அந்த ஏரியாவில்தான் இருந்ததால். கோவில் தான் அடையாளம் சொல்லப்பட்டிருந்தது, அப்படி அமைந்த ஒரு வாய்ப்பு.
அப்புறம் தெரிந்தது எலச்சனஹல்லியிலிருந்து பக்கம் அது வரை மெட்ரோ ரயிலில் சென்று அங்கிருந்து ஒரு ஆட்டோவில் சென்றுவிடலாம். இல்லைனா பஸ் னா நேரடியாகக் கிடையாது. பனசங்கரியிலிருந்து என்றால் நேரடியாகப் பேருந்து உண்டு என்பதால் இப்படிச் சென்றேன்.
நான் மட்டுமே சென்றதால் மற்று மொருமுறை செல்லலாம் என்று நினைத்திருக்கிறோம். இப்ப இருக்கும் இடத்திலிருந்து இன்னும் கொஞ்சம் தூரம் குறைவுதான்.
கீதா
வாங்க கீதா ரங்கன்க்கா.. நீங்கள் இருவரும் இந்தப் பழைமையான கோவிலுக்குக் கண்டிப்பாகச் சென்றுவாருங்கள். காலையில் 9 1/2 மணி வாக்கிலோ அல்லது இரவு 7 1/2 மணிக்கு அங்கு இருப்பதுபோலச் சென்று வாருங்கள். புராதானமான கோவில் இது.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்.
நீக்குஸ்ரீ வசந்த வல்லபராயர் கோயில் மிக அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்கு//பிரபந்தங்களைச் சேவிக்க சில கோயில்களுக்கும், குழுவாக ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்வது உண்டு. //
மிகவும் நல்ல சேவை.
சார் திருவாசகம் முற்றோதல் செய்ய இப்படி, கோயில் , வீடுகளுக்கு போவார்கள். பாடல்களுக்கு விளக்கமும் சொல்வார்கள்.
கோயில் படங்கள், விவரங்கள் எல்லாம் அருமை.
//கோவிலின் வெளியே வெற்றித்தம்பம் போன்று இருந்த இடத்தில் கருடாழ்வார் கோவிலின் மூலவரைப் பார்த்திருக்கும்படியான தோற்றம்.//
எல்லா பெருமாள் கோவில்களிலும் பெருமாளை நோக்கி கை கூப்பிய நிலையில் இருப்பார் கருடன். இங்கு பெருமாளை தூக்கி செல்லும் சேவையை செய்வது போன்ற தோற்றத்தில் ஒரு காலை மடித்து அமர்ந்து இருக்கிறார்.
புதிய கோவில் தரிசனம் இன்று கிடைத்தது மகிழ்ச்சி, நன்றி.
வாங்க கோமதி அரசு மேடம். நானும் பயணித்துக்கொண்டிருப்பதால், சமீபத்தில் சென்ற கோயில் வரிசையில் இந்தக் கோவிலைப்பற்றி இங்கு எழுதினேன். நன்றி.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஹா ஹா ஹா. நீங்கள் இன்னமும் புல் டெம்பிளை நினைவு வைத்திருப்பதே அதிசயம்தான். ஒரு நாள் நந்திகேஷ்வரர் (அவரை) உங்களை காண வேண்டி அழைப்பார்.
இது (தாங்கள் வழிபட்ட தலம்) மாண்டவய மகரிஷி வழிபட்டு நிறுவிய இடம் என்றீர்களே... அதனால் பெயர் மருவி "மாண்டியா" என்றாகி விட்டதென்றும் பதிவில் சொல்லியுள்ளீர்கள். அதனால்தான் "மாண்டியாவில்" இந்த பெருமாள் உள்ளாரா எனக் கேட்டேன். தங்கள் வீட்டருகில் என்றால், பெங்களூரில் இந்த கோவில் உள்ள இடம் எங்கே? வசந்த புரம் எந்த ஏரியா என்பதை நான் அறியேன்.
படங்கள் எப்போம் பொல் அமர்க்களமாக உள்ளது. விபரங்களும் அருமை. இறைவன் என்னையும் தீடிரென அழைத்தால் நேரில் சென்று தரிசிக்கலாம். இப்போது தங்கள் பதிவின் வாயிலாக நல்ல தரிசனம் கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்க Bபுல் டெம்பிளுக்கு வந்திருப்பதால், அங்கிருந்து 8 கிமீ தூரம்தான் இருக்கும். வசந்தபுரா வசந்த வல்லபராயர் கோயில் என்று தேடினாலே கிடைத்துவிடும். மிகப் பழமையான கோயில்.
நீக்குஇதற்குப் பிறகு ஸ்ரீரங்கத்தில் ஐந்து கோயில்களைத் தரிசனம் செய்தேன். அதன் பிறகு பாண்டியநாடு/மலைநாடு திவ்யதேச யாத்திரை என்ற வகையில் 31 கோயில்கள் மற்றும் 3-4 அபிமான தலங்களைச் சேவித்தேன். எங்கள் அஜெண்டாவில், மதுரையில் கூடலழகர், திருமாலிருஞ்சோலை, ஒத்தைக்கடை நரசிம்மர் குடைவரைக்கோயில்கள்தாம் உண்டு. ஆனால் பாருங்க, கூடலழகர் கோயிலைச் சேவித்து வெளியே வரும்போது மெயின் ரோட்டில் அன்று சுந்தரேசர் மீனாட்சி திருத்தேர் வந்தது. இரண்டு தேர்களையும் சுந்தரேசர் மீனாட்சி இருவரையும் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த ஆச்சர்யமாக எனக்குத் தோன்றியது.
வணக்கம் சகோதரரே
நீக்குநல்லது.. மீனாட்சி சொக்கநாதர் தரிசனங்கள் தங்களுக்கு கிடைத்ததில் மிக்க சந்தோஷம். இறைவனின் தரிசனங்கள் எப்போது நமக்கு கிடைக்க வேண்டுமென உள்ளதோ அப்போது அவனே எதிர்பாராமல் நம் முன் வந்து நின்று விடுவான். அதுதான் அவனருள். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதைப்பற்றி யாத்திரைத் தொடரில் எழுதுகிறேன் கமலா ஹரிஹரன் மேடம். எனக்கு ஆச்சரியத்தை விளைவித்த சம்பவம் அது.
நீக்குஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில் என்பது ஆச்சரியத்தை தருகிறது.
பதிலளிநீக்குபடங்கள் பலவும் நேரடி தரிசித்த உணர்வை தருகிறது.
பிரபந்தங்களை சேவிப்பது நல்ல சேவை.
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்கு