பானுமதி வெங்கடேஸ்வரன் :
எத்தனையோ திறமையான நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்த பாலசந்தரின் கண்களில் அவர் வீட்டிலேயே இருந்த கீதா கைலாசம் என்னும் திறமையாளர் படாமல் போனது எப்படி?
# கீதா கைலாசம் திறமையானவர் என்பது என்னைப் போலவே அவருக்கும் தெரியாமல் இருந்திருக்கும்.
சினிமா உலகில் பலர் " சனியன் என்னோடு போகட்டும் என்னவர்களுக்கு வேண்டாம் " என்று நினைப்பதும் உண்டு.
& ஒருவேளை 'கீ கை' திறமை அப்போது வெளிவராமல் போனதற்கு, அவருடைய நாத்தனார் 'பு க' தான் காரணமோ! (நமக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ் !!)
மஞ்சு விரட்டில் பார்வையாளராக கலந்து கொண்டிருக்கிறீர்களா?
* ஒரே ஒருமுறை. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் பார்வையாளராக கலந்துகொண்டேன்.. மாடுகள் ஒடிவருவதைக் கொஞ்ச நேரம் பார்த்ததுமே கழன்று கொண்டேன்.
# இல்லை. வெறும் மாட்டு வண்டிப் போட்டியிலேயே மாடுகளை சித்ரவதை செய்வது கண்டு வருந்தியிருக்கிறேன்.
காளையை "அடக்குவது" என்றால் அதன் பின்னே ஓடி அதன் திமிலைக் கட்டிக்கொண்டு பத்து நொடிகள் தொங்குவது என்பது ஒரு முரணாகத் தோன்றுகிறது.
& " மஞ்சு விரட்டில், பார்வையாளராக .. " ஆம்! ஞாபகம் இருக்கு.
அப்பொழுது நான் பாலிடெக்னிக் படித்துக் கொண்டிருந்தேன். நாகையில், முனிசிபல் கேர்ள்ஸ் ஹை ஸ்கூல் பக்கத்தில் எங்கள் வீடு. பெண்கள் பள்ளி, அருகிலேயே ஆண்கள் தேசிய உயர்நிலைப் பள்ளி. (ஹி ஹி நான் படித்த பள்ளி! ஆனால் அப்போ எல்லாம் நான் சமர்த்துப் பையன். வாயில் விரல் வைத்தால் கூட விசில் அடிக்கடிக் தெரியாது!) பெண்கள் பள்ளிக் கூடத்தில் 'வீட்டுக்கு பெல்' அடித்த உடனேயே வெளியே ஓடி வரும் பெண்கள் - ஆறாவது வகுப்பு தொடங்கி, பதினோராம் வகுப்பு வரை யார் யார் எந்த நேரத்தில் வெளியே வருவார்கள் என்பது அங்கு வீதியில் காத்திருக்கும் பையன்களுக்கு அத்துப்படி. அப்போ மஞ்சு என்னும் அழகிய பெண் 'சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்' - வெளிப்பாளையம் பக்கத்திலிருந்து வந்து படித்து செல்லும் பெண்.
அவளை நான்கைந்து பையன்கள் விரட்டி(!) பின்னாலேயே செல்வார்கள். அந்த மஞ்சு விரட்டு பார்த்தது இன்னும் எனக்கு பசுமையாக நினைவு இருக்கு. சக்ரபாணி சார் சொல்வது போல ' பசுமை நிறைந்த நினைவுகளே! ' என்று பாடாத குறை!
உங்கள் தந்தை உங்களுக்கு கூறிய சிறந்த அறிவுரை, நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கூறிய சிறந்த அறிவுரை எவை?
# " ஒருவருக்கு மற்றவர் அறிவுரை சொல்லி அதனால் அவர் திருந்துவது என்பது மிக மிக துர்லபம் " இது என் தந்தை எனக்கு சொல்லிய மிகச்சிறந்த அறிவுரை.
என் குழந்தைகளுக்கு நான் சொல்லி அவர்கள் அதை எடுத்துக் கொண்டது என்பது எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
& என் அப்பா எனக்கு, பரிட்சை எழுதும் நாட்களில்தான் அதிகமாக அறிவுரைகள் சொன்னது உண்டு. " பரீட்சைக்கு தயார் செய்யும்போது, சும்மா படித்துவிட்டு, 'இந்த கேள்விக்கு பதில் தெரியும் ; அந்த கேள்விக்கு பதில் தெரியும்' என்று இருந்துவிடாதே - தெரிந்த பதிலாக இருந்தாலும் கூட ஒருமுறை எழுதிப் பார். கணக்குப் பரீட்சைக்குத் தயார் செய்யும்போது நிறைய கணக்குகள் போட்டுப் போட்டுப் பழகவேண்டும். பரிட்சை எழுதி முடித்தவுடன், எழுதிய பதில்களை ஒருமுறை படித்துப் பார்த்து சரி பார்" இவை எல்லாமே அவர் கூறிய சிறந்த அறிவுரைகள். நானும் இவற்றையே என் குழந்தைகளுக்கு சொன்னது உண்டு. அது சிறந்த அறிவுரையா இல்லையா என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும்.
நெல்லைத்தமிழன் :
1. பரமபதம் சொக்கட்டான் புலி-ஆடு ஆட்டம் போன்றவைகளின் இடத்தை இப்போது எவை பிடித்துக்கொண்டன?
# எங்கள் வீட்டில் தற்போது beyblade. மாறுதலுக்குட்பட்ட பொழுது போக்கு . நான் பார்த்த வரை குழு விளையாட்டுகள் அருகி வருகின்றன.
& தொலைக்காட்சி சீரியல்கள்?
2. இறந்தவர் வீட்டுக்கு ஒப்பாரி வைக்க ஆட்களை அனுப்பும் தொழில் செழிப்பது எதைக் காட்டுகிறது?
# வாய்விட்டு அழக் கூட மனிதருக்கு நேரமில்லை அல்லது சோக உணர்ச்சி இல்லவே இல்லை என்பதைத்தான்.
& 'கூலிக்கு மாரடிப்பவர்கள்' என்று முன்பு கேள்விப்பட்டதுண்டு. அது இவர்கள்தானோ?
3. உண்மையாகவே பணம் கொடுத்தால் கொள்ளைக்கூட்டம் கூட தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட முடியுமா?
# அந்த விஷயம்தான் எனக்கும் பிடிபடவில்லை. வாக்கு எண்ணும் போது எந்தத் தொகுதியில் யார் நமக்கு ஓட்டு போடவில்லை என்பதை வைத்து வென்ற அரசியல்வாதிகள் அந்த தொகுதி மக்களை வஞ்சம் தீர்க்கிறார்கள் என்பதால் காசு வாங்குவோர் அனைவரும் யார் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு தன்னியல்பாக ஓட்டுப் போட்டு விடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
& அரசியல், தேர்தல் என்றாலே ஏதோ பணம் சம்பாதிக்க ஒரு வழி என்று ஆகிவிட்டது. " எப்படியும் நீ சம்பாதிக்கப் போறே - அதில் நானும்தான் கொஞ்சம் பணம் பார்க்கிறேனே " என்பதுதான் சாமானிய வாக்காளரின் நிலை. அதிக பட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் திருவிழா - பணம் சம்பாதிக்க ஒரு வழி. அவ்வளவுதான்.
4. மீசை வைத்துக்கொள்ளலாம் எடுத்துவிடலாம் என்று எது தீர்மானிக்கிறது? எப்போது அந்த எண்ணம் வருகிறது?
# மீசை இருந்தால் அழகு என்று நம் மனதுக்குப் படும்போது அல்லது தோற்றத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறபோது மீசை வைத்துக் கொள்கிறோம்.
& நான் இதுவரை மீசையை எடுத்துவிடலாம் என்கிற முடி(வே) எடுத்ததில்லை. டெய்லி shave செய்துகொள்ள சோம்பேறித்தனம்!
5. துன்பம் நேர்கையில், மூடு அவுட்டாகும் இல்லை சோகமான தருணங்களில் எப்படி வெளியில் வருகிறீர்கள்?
# அதிர்ஷ்டவசமாக தாங்க முடியாத சோகம் அல்லது துன்பம் இதுவரை எனக்கு ஏற்படவில்லை. என்றாலும் அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது ஒரு அரை மணி நேரம் அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து இருந்தாலே அது சரியாகிவிடும். கோபம் உண்டாகும் சமயம் இதை நான் பரீட்சித்துப் பார்த்திருக்கிறேன்.
& பாண்ட் சட்டை அணிந்து, செருப்புப் போட்டுக்கொண்டுதான்.
கே. சக்ரபாணி , சென்னை 28:
1. முன்பெல்லாம் தேங்காய் துவையல் அரைச்சிவிட்ட சாம்பார் சாதம் வத்தக்குழம்பு சாதத்திற்கு நல்லெண்ணெய் அல்லது சுட்ட எண்ணெய் ஊற்றி சாப்பிடுவோம் இப்போதெல்லாம் யாரும் அப்படி சாப்பிடுவதாக தெரியவில்லையே. நாம் கூடசாப்பிடுவதில்லையே ஏன்?
# நானும் இது பற்றிக் கவலைப் படுவதுண்டு. ஏதோ நெய்க்கு வழியின்றி நல்லெண்ணெய் என்று நினைக்கிறோமோ ? நல்லெண்ணெய் மணக்கும் துவையல் சாதம் ருசியே அலாதியானது.
& எனக்காக சமையல் செய்பவருக்கு இதெல்லாம் செய்யத் தெரிந்திருந்தால், கண்டிப்பாக இவற்றை செய்யச் சொல்லி, ரசித்துச் சாப்பிடுவேன்.
2. இரத்தத்திலகம் படத்தில் கல்லூரி இறுதி ஆண்டு பிரிவு உபசாரம் விழாவில் சிவாஜிகணேசன் அவர்களும் சாவித்திரி அவர்களும். பாடும், "பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே" என்ற பாடல் எல்லோர்மனதிலும் ஒரு உணர்ச்சியை தூண்டும். எல்லா கல்லூரிகளிலும் அப்போது பிரிவு உபசார விழாவில் ஒலிபரபரப்பப்படும். உங்கள் கல்லூரி நாட்களில் உங்கள்அனுபவம் பகிரவும்.
# நான் கல்லூரி போகாத SSLC. அந்த நாட்களில் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் இருந்ததில்லை.
& நாங்கள் (1971) கொஞ்சம் அட்வான்ஸ்டு மாணவர்கள். எல்லோரும் " ஹாப்பி இன்று முதல் ஹாப்பி " என்று பாடியவாறு, ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம். அதற்குப் பின் எல்லோரும் நாகை பாண்டியன் தியேட்டரில் " ஜஸ்டிஸ் விஸ்வநாதன் " என்னும் படம் பார்த்தோம். அதோடு முடிந்தது எங்கள் பிரிவு உபச்சார விழா!
= = = = = = = = = = =
KGG பக்கம் :
பாண்டிச்சேரி கதையை பாதியில் விட்டுவிட்டேனோ?
பயணத்தில் வாங்கிய முதல் பல்பு பற்றி (கூர்க் vs பாண்டிச்சேரி) ஜனவரி 1 ஆம் தேதி பதிவில் எழுதியிருந்தேன்
இப்போ அடுத்த பல்பு பற்றி எழுதுகிறேன்.
சாதாரணமாக பெரிய ரிசார்ட்களில் ரூம் அல்லது தங்குமிடம் (வீடு போன்ற சௌகரியங்கள் கொண்ட இடத்திற்கு ) ATM கார்ட் போன்ற ஒன்றை தங்கப்போகும் பிரதான ஆளின் கையில் கொடுத்துவிடுவார்கள்.
மொத்தம் ஏழு பேர் சென்றிருந்தோம். ஒரு அறைக்கு அதிக பட்சம் 3 பேர் தங்கலாம் என்பதால் நாங்கள் 3 அறைகள் வாடகைக்கு எடுக்கவேண்டியது ஆயிற்று.
கொடுக்கப்பட்ட அந்த அட்டையை நாம் ஆக்கிரமிக்கப் போகும் அறையின் / தங்குமிடத்தின் பிரதான கதவின் கைப்பிடி அருகே கொண்டு சென்றால், ஒரு பச்சை விளக்கு ஒரு நொடி எரியும்.
உடனே கதவைத் திறந்து, கதவின் பக்கச் சுவற்றில் காணப்படும் ஒரு கங்காரு பை போன்ற அமைப்பில் அந்த அட்டையை சொருகிவிடவேண்டும்.
அப்போதான் ரூமுக்கு பவர் சப்ளை இணைப்பு வரும்.
இதெல்லாம் நான் 20 வருடங்களுக்கு முன்பு அலுவலக வேலை தொடர்பாக இந்தூர் சென்றிருந்த சமயம் பரிச்சயமாகியிருந்த விஷயங்கள். ரிடயர் ஆன பிறகு எல்லாம் மறந்து போய்விட்டன.
முதலில் ரிசப்ஷன் பகுதியிலிருந்து ரிசார்ட்டைச் சேர்ந்த பேட்டரி கார் மூலமாக நாங்கள் அனைவரும் ரிசர்வ் செய்யப்பட்டிருந்த ரூம் அருகில் இறக்கிவிடப்பட்டோம்.
அறையைத் திறந்துவிட்டு பிறகு அட்டையை அதன் இடத்தில் சொருகினான் என்னுடைய பையன், நான் உள்ளே சென்று அறையின் அமைப்புகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன்.
பையன், "நான் ரிசப்ஷனுக்குப் போய், நம்முடைய லக்கேஜ் எல்லாம் சரியாக எடுத்து வருகிறார்களா என்று பார்த்து, எந்தெந்த லக்கேஜ் எந்தெந்த அறைக்குப் போகவேண்டும் என்பதை சொல்லி வருகிறேன்' என்று சொல்லிவிட்டு ஒரு பேட்டரி கார் ஏறிப் போய்விட்டான்.
நான் உள்ளே நோட்டம் விட்டபின், அறைக்கு வெளியே வந்து, எதிரில் இருந்த புல்வெளியை பார்த்துக்கொண்டிருந்தேன்.
உள்ளே திறப்பு அட்டை அதன் இடத்தில் இருந்ததால், எப்போது வேண்டுமானாலும் கதவைத் திறந்துகொள்ளலாம் என்று நினைத்தேன்.
" பச் .. .. சக் "
கதவு மூடிக்கொண்டுவிட்டது.
திரும்பத் திறந்தால், திறக்க வரவில்லை !
ஆஹா கிடைத்துவிட்டதடா இரண்டாவது பல்பு !!
சரி - திருவருட்செல்வர் படத்தில் டி எல் மகராஜன் பாட்டுப் பாடி ஆலய மணிக்கதவைத் திறந்தது போல பாட்டுப் பாட, பாடல் யோசித்தபோது .. ..
லக்கேஜ்களுடன் ஒரு பேட்டரி காரில் வந்து இறங்கிய பையனிடம் நடந்ததை விவரித்து அசடு வழிந்தேன்!
அவன் மீண்டும் ஒரு பேட்டரி கார் ஏறி ரிசப்ஷன் நோக்கிச் சென்றான்.
ஒரு எக்ஸ்ட்ரா அட்டை வாங்கி வந்து என்னிடம் கொடுத்து, "இதை எப்பொழுதும் உன்னுடைய மொபைல் ஃபோன் உறையிலேயே வைத்துக்கொள்; மொபைல் ஃபோன் இல்லாமல் வெளியே வராதே!" என்றான்.
மீதி கதைகள் பிறகு எழுதுகிறேன்!
= = = = = = = = =
Automatic Door Lock கதவு இருப்பவர்கள் வீட்டிலும் இந்தப் பிரச்சனை வரும். ஹோட்டல்களில் உதவிக்கு அழைக்க முடியும். வீட்டில் அது கஷ்டம், ஒரு சாவியை இன்னொருவர் வீட்டில் கொடுத்துவைக்கணும். எங்கள் வளாகத்தில் 8-10,000 ரூபாய்க்கு நம்பர் லாக் மற்றும் விரல் ஸ்கேனிங் லாக் போட ஆஃபர் வந்தது. நான் இன்னும் போடவில்லை.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தகவலுக்கு நன்றி.
நீக்குதேங்காய் துவையலுக்கு நல்லெண்ணெய் உபயோகிக்க மாட்டார்கள். மற்ற எல்லாத் துவையலுக்கும். இப்போதும் வற்றல் குழம்பு மற்றும் துவையலுக்கு நல்லெண்ணெய்தான். தோசை வார்க்கவும் நல்லெண்ணெய்தான். சிறிய வயதில் சுடச் சுட சாதம், நல்லெண்ணெய், சிறிது உப்பு கலந்து சாப்பிட்டதுண்டு (வேறு எதுவும் இல்லாமல். அதுபோல எனக்குப் பிடிக்கும் என்று அம்மா, சுடசாதம், மேலே ஜீனி, சூடான பால் விட்டு பாலும் சாதம் சாப்பிடக் கொடுப்பார்கள். )
பதிலளிநீக்குகலவை(!) சாத மன்னர்!
நீக்குகேள்விகள் நிறைய. ஆனால் கேள்விகள் எல்லாம் interview போல அமைந்துவிட்டன.
பதிலளிநீக்குபல்பு வாங்கியது சுவாரசியம். இந்த அட்டை சொருகும் முறையை சுமார 25 வருடங்களுக்கு முன்பே பெங்களூரில் பார்த்திருக்கிறேன்.
DD யின் இன்றைய பதிவைப் பார்க்க சிபாரிசு செய்கிறேன்.
கருத்துரைக்கு நன்றி. டிடி பதிவு பார்க்கிறேன்.
நீக்குகேரளத்தில் சம்மந்தி என்ற தேங்காய் துவையலை சாதத்தில் பிசைந்து சாப்பிடுவோம். பொதுவாக தேங்காய் எண்ணெய் தான் அதில் சேர்க்கப்பட்டிருக்கும். தாளிதம் கிடையாது.
பதிலளிநீக்குசம்மந்தி, பருப்பு, சாம்பார், பாயாசங்கள் (2 அல்லது 3), புளிசேரி, ரசம், மோர் (சம்பாரம்) இவைதான் சத்யா எனப்படும் விருந்தில் சாபபிடும் முறை.
தகவல்களுக்கு நன்றி.
நீக்குஎல்லாமே சுவாரஸ்யமாக இருந்தது ஜி
பதிலளிநீக்குநன்றி. வாழ்க வளமுடன்.
நீக்குகல்லூரியில் இறுதி நாள் என்பது சம்திங் ஸ்பெஷல். காரணம் அப்போ நாம் ஒரு பய உணர்ச்சி (இதுவரை விளையாட்டுத்தனமா இருந்துவிட்டோம், அடுத்தது என்ன என்ற கேள்விக்குறி, மேற்படிப்புன்னா எது, எதற்கு வேலைவாய்ப்பு உண்டு, என்ற, அடுத்தது என்ன என்ற பய உணர்ச்சி.... அக்காவை வம்புக்கிழுக்காமல் இருக்கலாமா? அது தகுமா?... பெண்களுக்கு இந்தப் பயம் கிடையாது. இந்த மடம் இல்லாட்டா சந்தை மடம் என்பதுபோல, மேல படிக்க அனுப்பிச்சா ஓகே, காம்படிடிவ் எக்சாம் எழுதணும்னாலும் ஓகே.. இல்லையா.. வீட்ல பார்க்கிற பையனுக்கு கழுத்தை நீட்டிட வேண்டியதுதான். ). இதற்கிடையில், இதுவரை பழகிவந்த நண்பர்களைப் பிரிகிறோமே என்ற இனம் புரியாத வருத்தம்.... அது ஒரு தனி உணர்ச்சி... வாழ்க்கையில் மீண்டும் வராத உணர்ச்சி அது.
பதிலளிநீக்கு//டெய்லி ஷேவ் சோம்பேறித்தனம்//- நான் முப்பது வருடங்களுக்குமேல் தினமும் பல்தேய்ப்பது போல, அதைத் தொடர்ந்து ஷேவ் என்ற பழக்கம் உள்ளவன் (இதுல ரிவர்ஸ் ஷேவும்). ஒரு யாத்திரையின்போது, குழுத் தலைவர் சொன்னார் என்பதற்காக ஷேவ் செய்யாமல் முழு யாத்திரையிலும் இருந்தேன். இந்த லட்சணத்துல தாஜ்மஹல் விசிட் வேறு. இப்போ அந்தப் படங்களைப் பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கு. அப்போது தவிர, அம்மா, அப்பா மறைவையொட்டிய பன்னிரண்டு நாட்களும்).
பதிலளிநீக்குஒன்று தெரியுமா? எப்போ முடி வெட்டிக்கொள்வது (ஷேவ் உட்பட) என்பதற்கு சில விதிகள் உண்டு (ஆசாரமாக இருப்பவர்களிடம்). என் கசினிடம் அதைப்பற்றிக் கேட்டேன் (ஒரு வருடத்துக்கு முன்). அதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது, அதை ஃபாலோ செய்ய முடியாது என்று சொல்லிவிட்டான்). அதுவும் நல்லதுதான் என்று விட்டுவிட்டேன்.
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குமஞ்சு விரட்டு!..
பதிலளிநீக்குஎந்த மஞ்சு?...
நன்பனோட தங்கை ஆயிற்றே - மஞ்சு!...
பதிலளிநீக்குமாமூ.. ஜெந் டமிள் ல ஜொல்லிற வேண்டியது தானே.. ஜல்லிக்கட்டுன்னு..
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு