முருங்கைக்காய் மசாலா
தேவையானவை :-
முருங்கைக்காய் 5.
பூண்டு 5 பற்கள்
சாம்பார் வெங்காயம் 10
கல் உப்பு தேவைக்கு.
அரைப்பதற்கு :
தேங்காய் ஒரு மூடி.
மிளகு ஒரு tsp
சோம்பு 2 tsp
கசகசா 2 tsp
பட்டை சிறிது.
கிராம்பு 2
ஏலக்காய் 2.
மஞ்சள் தூள் 1/2 tsp
மல்லித்தூள் 2 tsp
தாளிப்பதற்கு :-
பசுநெய் 2 tsp
கடுகு , உளுத்தம்பருப்பு சிறிதளவு
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
குறிப்பு:-
1)
பிஞ்சாக இல்லாமலும்
முற்றியதாக இல்லாமலும்
நடுத்தரமாகப் பார்த்து
முருங்கைக் காய்களை
வாங்கிக் கொள்ள வேண்டியது அவசியம்..
2)
இந்தப் பக்குவத்திற்கு
சாம்பார் வெங்காயம் தான் வேண்டும்..
செய்முறை:-
முருங்கைக் காய்களை சீராக நறுக்கி இட்லித் தட்டில் வைத்து அவித்துக் கொள்ளவும் .
வெந்த முருங்கைக் காய்த் துண்டுகளின் உட்புற சதையை மட்டும் வழித்து எடுத்துக் கொள்ள வேண்டும்..
வெங்காயம் பூண்டு இவற்றைத் தோல் நீக்கி சுத்தம் செய்து அலசி விட்டு
சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்..
தேங்காயைத் துருவி
மிக்ஸியில் இட்டு மிளகு கசகசா சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்..
வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் பசுநெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலையுடன் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்..
இத்துடன்
நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்..
வதக்கிய வெங்காயத்துடன்
முருங்கைக்காய் சதைப்பகுதி,
தேங்காய் விழுது மஞ்சள் பொடி மல்லித் தூள் உப்பு சேர்த்துக் கிளறி சற்றே கொதிக்க விட்டு இறக்கினால் முருங்கைக் காய் மசாலா தயார்..
இது
உடலுக்கு வலு சேர்க்கும்.. மிகச் சிறந்த மருந்து..
ஃஃ
தரமான சமையல்
தருமே மகிழ்ச்சி
நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
ஃஃஃ
ஃஃஃ
என்ன இது... வருட ஆரம்பத்திலேயே முருங்கைக்காய் மசாலாவா?
பதிலளிநீக்குதுரை செல்வராஜு சாருக்கு இளமை முறுக்கு திரும்புகிறதா?
வருட ஆரம்பத்தில் இனிப்பு பதிவு வரும் என எதிர்பார்த்தேன். இன்றே எழுதி அனுப்பிடறேன்.
பதிலளிநீக்குஏன் நெல்லை வருட ஆரம்பம்னா இனிப்புதான் என்று?
நீக்குநம் மனசுதானே காரணம்?
கீதா
இந்த கீதா ரங்கன்(க்கா)வை பெண் பார்க்க வந்தபோது கேசரி இல்லாமல் வெறும் மிளகாய் பஜ்ஜி பண்ணி வந்தவர்களுக்கு உபசரித்திருப்பாரோ? அடுத்தமுறை "அவரை"ப் பார்க்கும்போது கேட்கணும்.
நீக்குமுருங்கைக்காய் சிறப்பு ஜி
பதிலளிநீக்குதுரை அண்ணா செம செய்முறை. ரொம்ப நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமுருங்கைக்காய் வைத்து இப்படியும் - நானும் அதை அவித்து உள்ளே இருப்பதை வழித்து எடுத்துச் செய்வதுண்டு. முருங்கை + சின்ன வெங்காயம் தான்.
வெ, பூ, மசாலா சேர்க்காமல் செய்ய வேண்டும் என்றால் என் பாட்டி இருந்தப்ப, தேங்காய், ஜீரகம் வரமிளகாய் சேர்த்து மையாக அரைக்காமல் அம்மியில் ஓட்டி அல்லது மிக்ஸியில் ஓட்டிச் சேர்ப்பதுண்டு.
அதே பாட்டியிடம் தான் நான், இலங்கை செய்முறை முருங்கை பால் கறி செய்யவும் தெரிந்து கொண்டேன். செமையா இருக்கும் அதன் சுவையும். ஆனால் பாட்டி சாப்பிட மாட்டார். எங்களுக்குச் செய்து தருவார்.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையாக வந்த முருங்கைக்காய் மசாலா நன்றாக உள்ளது. இது போல் நான் செய்ததில்லை. இனி ஒருமுறை இவ்விதம் செய்து பார்க்கிறேன்.
நிறைய முருங்கைக்காய் போட்டு சாம்பார், வெறும் முருங்கைக்காய்கள் மட்டும் போட்டு அவியல் மாதிரி செய்திருக்கிறேன். இது போல மசாலா சேர்த்து செய்ததில்லை. இனி செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். சற்றே இடைவெளிக்குப் பிறகு இங்கே வருகை.
பதிலளிநீக்குஇன்றைய சமையல் செய்முறை சிறப்பு. தொடர்கிறேன்.
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம்..
பதிலளிநீக்குஇரண்டு நாட்களாக கைத்தலப் பேசியின் தொடுதிரை செயல் இழந்து விட்டது.,
பதிலளிநீக்குஇணையமும் சரியில்லை...
நலம் வாழ்க...
இளம் பிள்ளைகள் இருக்கின்ற வீடுகளில்
பதிலளிநீக்குஇப்படி சமைக்க மாட்டார்கள்...
இல்லறம் ஒழுங்கக நடந்து மகப்பேறு தாமதிக்கும் போது வாரம் இருமுறை ச்மைத்துக் கொடுக்க 48 நாட்களுக்குள் குறை தீரும்....
சித்த மருத்துவ முறைகள் எனக்குத் தெரியாது..
பதிலளிநீக்குசித்த மருத்துவத்தில் ஆர்வமுடையவன்
நான்..
அவ்வளவே..
முருங்கைப் பூ வைத்தியமும் இருக்கின்றது...
பதிலளிநீக்குஆனால் முதலில் பூக்களின் சுவை அறிய வேண்டும்... அனுபவம் வேண்டும்!..
முருங்கைப் பூ வைத்தியத்தைப் பொது வெளியில்
பதிலளிநீக்குபேசக் கூடாது...
நல்லது... அருமை...
பதிலளிநீக்குமுருங்கை மசாலா நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநாங்கள் அவித்து எடுத்து சம்பலாகவும் செய்வதுண்டு.