நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 10 ஜனவரி, 2025
சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்
சிந்துபைரவியில் ஏனோ இளையராஜா S. P. பாலசுப்ரமணியத்தை பாட அழைக்கவில்லை.
முழுக்க முழுக்க 'தாஸேட்டன்'தான் அப்பா.. என்ன குரலப்பா... என்ன இசை அப்பா... விருது பெற்ற திரைப்படம். "இது மாதிரி இசை ஏன் மற்ற படங்களுக்கு கொடுக்கவில்லை என்று கேட்கிறார்கள்... இந்த மாதிரி கதை, இந்த மாதிரி இசை கொடுக்க வாய்ப்புள்ள காட்சிகளை யார் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் கொடுக்க முடியும்" என்று பேசினார் இளையராஜா.
ஓரொரு பாட்டு கேட்கும்போதும் இந்தப் படத்திலேயே இதுதான் பெஸ்ட் ஸாங் என்று நினைக்க வைக்கும் ('தண்ணி தொட்டி தேடிவந்த' பாடல் தவிர)
இந்தப் படம் வெளிவந்தபோது இதன் ஒலிநாடாக்கள் பயங்கர ஹாட் சேல்ஸ். பாலச்சந்தர் படங்களில் வசனங்களும் கூர்மையாக இருக்கும். காட்சிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டை தீட்டப்பட்ட காட்சிகளாயிருக்கும். குடியில் கெட்டு, தெருத்தெருவாக சுற்றும் JKB யாரோ ஒரு ஷர்மா கச்சேரி நடக்கும் அரங்குக்குள் சென்று அவரை மிரட்டி அவர் பாடும் முறையை தாக்கி இவர் தர்பார் பாடிக் காட்டுவார். சற்றே செயற்கையாக இருந்தாலும், அந்தக் காட்சியில் அதை மறக்கடிப்பது இளையராஜாவு, யேசுதாஸும். அந்த ஷர்மா தாழ் ஸ்ருதியில் லோச்சனா பாடி இடைவெளி விட, யேசுதாஸின் கம்பீரக்குரலில் ஸ்வரம் எழும் பாருங்கள்... எங்கு எதை எப்படி வைப்பது என்பதை, அந்தக் காட்சியில் KB யும், இளையராஜாவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
ஒரு பெண்ணின் மீதான ஏக்கம், என்னதான் அவள் சங்கீதத்தில் விற்பன்னியாக இருந்தாலும், ஒரு கலைஞனை இப்படி ஆட்டி வைக்குமா? சுஹாசினியைக் கெஞ்சி சிவகுமாரை தீர்த்தகி சொல்லி, அவர் திருந்தியதும் சுஹாசினியை ஊரை விட்டு விரட்டி விடுகிறார்கள். சிவகுமார் கோபித்ததும் மறுபடி அழைக்கிறார்கள். அவர் வருகிறேன் என்று வரும். யேசுதாஸ் குரலில் அமிர்தவர்ஷினி... அமிர்தவர்ஷினியில் பல கீர்த்தனைகள், பல சினிமாப பாடல்கள் இருந்தாலும் எனக்கு இந்தக் காட்சிக்குப் பொருத்தமாக மனதில் எழுந்த பாடல் 'வானின் தேவி வருக...'
அதுவும் இளையாராஜா இசையில் அமைந்த அமிர்தவர்ஷினி பாடல், ஆனால் SPB குரலில்.
இப்போது இங்கு பகிரும் பாடல் சுஹாசினி திரும்பி வருகிறேன் என்று உறுதி அளித்திருக்கும் நாளில் யேசுதாஸ், மன்னிக்கவும் JKB பாடும் பாடல். இந்தப் பாடலிலும் ஒரு ஸ்பெஷல் செய்திருந்தார் இளையராஜா. இதுவும் காட்சிக்கு பொருத்தமாக அமையும்படி செய்திருந்தார்கள் இரு மாயன்களும். ஆரோகணப பிரயோகத்தில் மட்டுமே பாடலை அமைத்திருந்தார் இளையராஜா. ஒரு சரிவை சந்தித்து விட்டு மீண்டு வந்திருக்கும் JKB க்கு இனி சரிவே - அவரோகணமே- வரக்கூடாது என்பது போல..
பாடலின் இடையிலேயே சுஹாசினி தன் தாயுடன் பேசும் ரகசிய நயன பாஷை.. அதற்கு இளையராஜா தந்திருக்கும் ஒற்றை வயலின் இழைதல்... இந்த தாய்மகள் உறவு மட்டும் படத்தில் யாருக்கும் வெளிப்படாமல் போகிறதே என்று ஏக்கமாகவும் இருக்கும்.
கல்யாணி ராகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலின் வரிகளும் ரசிக்கும்படி இருக்கும். முகம் காட்ட மறுத்தாய்... முகவரியை மறைத்தாய்...,, சிரிப்பாலே எரித்தாய் மடிமீது மரித்தேன், நீ முன்வந்து பூ சிந்து விழித்துளிகள் தெறிக்கிறது துடைத்து விடு..
காட்சியுடன் இருக்கும் காணொளிகளை பகிர விடாமல் செய்திருக்கிறார்கள் பாவிகள்! காட்சியையும் சேர்ந்து ரசிக்க வேண்டுமென்றால் இங்கு க்ளிக் செய்து அங்கு சென்று பார்க்கவேண்டும்!
படம் முடிவு வழக்கம் போல KB பாணி. பக்கத்து வீட்டு நீதியின் பேரனை (அல்லது பேத்தியை?) சுலக்ஷணா சிவகுமார் தம்பதிக்கு பரிசாகக் கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறார்!
கலைவாணியே கலைவாணியே உனை தானே அழைத்தேன் உயிர் தீயை வளர்த்தேன் வர வேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன் பலமுறை நினைத்தேன் அழுதேன் இசை தரும்
கலைவாணியே உனை தானே அழைத்தேன் உயிர் தீயை வளர்த்தேன் வர வேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன் பலமுறை நினைத்தேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே
இஞ்சி சாறு எடுத்து நெற்றியில் தேய்த்துக் கொண்டால் அல்லது சுக்கு அரைத்துப் பூசிக் கொண்டால் எந்த தலைவலியை க இருந்தாலும், தலைவலி கொஞ்ச நேரத்திலேயே குணமாகும். நான் தலைவலிக்கு இதைத்தான் எப்போதும் பயன்படுத்துவேன். உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.
ஸ்ரீராம் அவர்கள் க்க பற்றிய விளக்கத்தில் சிறு திருத்தம். க்க என்ற அடைமொழி முஸ்லிம்கள் மட்டுமே உபயோகிக்கும் ஒன்று. பெரியவர் என்று அர்த்தம். பிராமணர் பெயருடன் ஐயர் வாள் என்று அடைமொழி சேர்ப்பது போல.
இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். சிந்து பைரவி படம் தொலைக்காட்சியில் தான் பார்த்து ரசித்தேன். அதில் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். நீங்கள் பகிர்ந்த இந்தப்பாடல் டாம். மிக அருமையான பாடல்.
இரண்டாவது பாடல் கேட்டதில்லை. கேட்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஆஹா இன்று சிந்து பைரவி (அப்படித்தானே சிந்து பைரவி என்று இரு கதாபாத்திரங்கள்!!) பாடல்!
அசாத்தியமான திரைக்கதை அமைப்ப்பு, கதை, காட்சிகளின் அமைப்பு, கூர் திட்டப்பட்ட வசனங்கள் (கே பி யின் அக்மார்க் இந்த இரண்டும்) அருமையான படம். பாடல்களின் வைரமுத்து ஜொலித்திருப்பார். இளையராஜாவின் இசை விளையாட்டு, நல்ல நடிக நடிகைகள் என்று அப்படி எல்லாமும் அமையப்பெற்ற ஒரு திரைப்படம்.
மிகவும் ரசித்த படம்.
படம் பற்றிய உங்கள் வரிகள் அனைத்தையும் டிட்டோ செய்கிறேன் ஸ்ரீராம்.
அதுவும் கடைசிப் பாடல் ஆரோகணம் மட்டுமே அமைந்த கல்யாணி அதன் வரிகள் நீங்க சொல்லியிருப்பதை நானும் ரசித்திருக்கிறேன். அப்பவே, என்ன ஒரு காட்சிப்பா
ராகம் கொடுக்கும் உணர்வுகள் என்று சொல்லப்படும் அம்சங்கள் பொருத்தமாகவும் அமைந்திருக்கும் படம். விரஹம், சோகம், காருண்யம் என்று.
இந்தப் பாடலை மிக மிக ரசித்திருக்கிறேன் அது போல பாடறியேன் படிப்பறியேன் ரொம்ப ரொம்ப ரசித்த பாடல்
சித்ரா கலக்கியிருப்பார்.
தாஸேட்டனும் வாவ்!
இந்தப் பாடலில் இடம் பெறும் காட்சிகளை நீங்களும் ரசித்திருப்பீங்கன்னு நினைக்கிறென் ஸ்ரீராம். பைரவி வீட்டில் சிந்துவை வரவேற்க அவள் இருக்கும் ஃபோட்டோவையும் மாட்டுதல், புடவை, மாலை, திருமாங்கல்யம் என்று தயாராக வைத்தல்
அம்மாவும் பெண்ணும் பார்த்துக்க் கொண்டு விழிகளால் பேசிக் கொள்வது - பெண் அப்படிப் பிறந்தவள்.........இப்ப பெண்ணிற்கும் அப்படியான குழந்தை ஆனால் முகம் தெரிந்த அப்பா ஃபேமஸ் பாடகர். இருந்தாலும் அதே நிலை....பெண், அம்மாவைப் பார்த்ததும் முதலில் ஒரு சின்ன குற்ற உணர்வு? அதில் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள் கண்ணில் நீர்.....அதைக் கண்ணால் பேசிக் கொள்வதும், அம்மா ஆறுதல் சொல்வதும்...... என்ன ஒரு அற்புதமான காட்சி இல்லையா?
சிந்து பைரவி சமயத்தில் எல்லாம் ராஜாவும் எஸ்பிபியும் நல்லாதானே கை கோர்த்திட்டிருந்தாங்க! எதனால இந்தப் படத்துல எஸ் பி பி இல்லைன்னு தெரியலை.... தண்ணி தொட்டி பாட்டுக்கு தாஸேட்டனுக்குப் பதிலா எஸ் பி பி பாடியிருந்தால் என்று யோசித்திருக்கிறேன். இன்னும் பொருந்தியிருக்குமோன்னு. எஸ் பி பி முறையா கர்நாடக சங்கீதம் கத்துக்கலைனாலும், அவ்வகையான பாடல்களையும் சூப்பரா பாடுவாரே!
உன்னால் முடியும் தம்பியில் எஸ்பி பிக்கு இடம் உண்டு.
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார்... வணக்கம்.
நீக்குவைகுண்ட ஏகாதசித் திருநாள்.
பதிலளிநீக்குஇறைவனின் பரிபூர்ண அருள் சித்திக்க வேண்டுவோம்.
வேண்டுவோம்....
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குகாக்க.. காக்க..
நீக்குவைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்தீர்களா!!..
பதிலளிநீக்குசங்கரா டிவி சானலில் சென்னையில் ஸ்ரீரங்கம் என்று
நீக்குஅதிகாலையிலிருந்து பக்தி மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அதில் மனம் லயித்து நனைந்தது தான்.
இல்லை. அந்த அளவு பக்தி கரடி எல்லாம் இல்லை நான்! காலையிலிருந்து ஒற்றைத்தலைவலி வேறு படுத்துகிறது!
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்கு/காலையிலிருந்து ஒற்றைத்தலைவலி வேறு படுத்துகிறது!/
இஞ்சி சாறு எடுத்து நெற்றியில் தேய்த்துக் கொண்டால் அல்லது சுக்கு அரைத்துப் பூசிக் கொண்டால் எந்த தலைவலியை க இருந்தாலும், தலைவலி கொஞ்ச நேரத்திலேயே குணமாகும். நான் தலைவலிக்கு இதைத்தான் எப்போதும் பயன்படுத்துவேன். உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஜெஸி ஸார்! தாஸேட்டன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?
பதிலளிநீக்குசேட்டன் என்பதன் மருஊ ஏட்டன். தாஸேட்டன் தாஸ் ஏட்டன். தாஸ் அண்ணன்.
நீக்குJayakumar
சேட்டன், க்கா (மம்முக்கா) பிரயோகங்கள் அண்ணன் என்பதைக் குறிக்கும்.
நீக்குஸ்ரீராம் அவர்கள் க்க பற்றிய விளக்கத்தில் சிறு திருத்தம். க்க என்ற அடைமொழி முஸ்லிம்கள் மட்டுமே உபயோகிக்கும் ஒன்று. பெரியவர் என்று அர்த்தம். பிராமணர் பெயருடன் ஐயர் வாள் என்று அடைமொழி சேர்ப்பது போல.
நீக்குJayakumar
தண்ணீத் தொட்டி
பதிலளிநீக்குJKB அண்ணாவை மிகவும் கேவலப்படுத்திய பாடல்.. காட்சி அமைப்பு...
அப்படி வைத்தால்தான் மீண்டு வரும் காட்சிகள் எஃபெக்டிவாக இருக்கும்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கமும், நன்றியும்.
நீக்குமாரணி கச்ச கவர்னு...
பதிலளிநீக்குஆ!..
சேட்டன்களுக்கு தெகிரியம் ஜாஸ்தி தான்!..
அம்பது வருசத்துக்கு முன்னால் -
பந்தாடிய பருவங்களை நறுக்கச் சொன்னவர்களே
என்ன நியாயம்?..
ஹா.. ஹா.. ஹா...
நீக்குசிந்துபைரவி..
பதிலளிநீக்குகீர்த்தனைகள் மகாகவி பாடல்களைத் தவிர்த்து -
வைரத்தின் சிறப்பான வரிகள்..
ஆமாம்.
நீக்குபாடறியேன் படிப்பறியேன்
பதிலளிநீக்குஇந்த வரிகள் எல்லாம் கிராமத்து அம்மாச்சிகளின் குரலெடுப்பு..
அதில் இளசின் பங்கையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்!
நீக்குஇரண்டும் சிறப்பான பாடல்கள்.
பதிலளிநீக்குவடக்கன் வீரகதா பாடல் பதினைந்து வருடங்களுக்கு முன்பு தினமும் கேட்டு ரசித்த பாடல்.
நன்றி ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். சிந்து பைரவி படம் தொலைக்காட்சியில் தான் பார்த்து ரசித்தேன். அதில் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். நீங்கள் பகிர்ந்த இந்தப்பாடல் டாம். மிக அருமையான பாடல்.
இரண்டாவது பாடல் கேட்டதில்லை. கேட்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. வடக்கன் வீர கதா பாடல் நானும் இப்போதுதான் கேட்டேன்.
நீக்குஆஹா இன்று சிந்து பைரவி (அப்படித்தானே சிந்து பைரவி என்று இரு கதாபாத்திரங்கள்!!) பாடல்!
பதிலளிநீக்குஅசாத்தியமான திரைக்கதை அமைப்ப்பு, கதை, காட்சிகளின் அமைப்பு, கூர் திட்டப்பட்ட வசனங்கள் (கே பி யின் அக்மார்க் இந்த இரண்டும்) அருமையான படம். பாடல்களின் வைரமுத்து ஜொலித்திருப்பார். இளையராஜாவின் இசை விளையாட்டு, நல்ல நடிக நடிகைகள் என்று அப்படி எல்லாமும் அமையப்பெற்ற ஒரு திரைப்படம்.
மிகவும் ரசித்த படம்.
படம் பற்றிய உங்கள் வரிகள் அனைத்தையும் டிட்டோ செய்கிறேன் ஸ்ரீராம்.
அதுவும் கடைசிப் பாடல் ஆரோகணம் மட்டுமே அமைந்த கல்யாணி அதன் வரிகள் நீங்க சொல்லியிருப்பதை நானும் ரசித்திருக்கிறேன். அப்பவே, என்ன ஒரு காட்சிப்பா
ராகம் கொடுக்கும் உணர்வுகள் என்று சொல்லப்படும் அம்சங்கள் பொருத்தமாகவும் அமைந்திருக்கும் படம். விரஹம், சோகம், காருண்யம் என்று.
கீதா
இந்தப் பாடலை மிக மிக ரசித்திருக்கிறேன் அது போல பாடறியேன் படிப்பறியேன் ரொம்ப ரொம்ப ரசித்த பாடல்
பதிலளிநீக்குசித்ரா கலக்கியிருப்பார்.
தாஸேட்டனும் வாவ்!
இந்தப் பாடலில் இடம் பெறும் காட்சிகளை நீங்களும் ரசித்திருப்பீங்கன்னு நினைக்கிறென் ஸ்ரீராம். பைரவி வீட்டில் சிந்துவை வரவேற்க அவள் இருக்கும் ஃபோட்டோவையும் மாட்டுதல், புடவை, மாலை, திருமாங்கல்யம் என்று தயாராக வைத்தல்
அம்மாவும் பெண்ணும் பார்த்துக்க் கொண்டு விழிகளால் பேசிக் கொள்வது - பெண் அப்படிப் பிறந்தவள்.........இப்ப பெண்ணிற்கும் அப்படியான குழந்தை ஆனால் முகம் தெரிந்த அப்பா ஃபேமஸ் பாடகர். இருந்தாலும் அதே நிலை....பெண், அம்மாவைப் பார்த்ததும் முதலில் ஒரு சின்ன குற்ற உணர்வு? அதில் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள் கண்ணில் நீர்.....அதைக் கண்ணால் பேசிக் கொள்வதும், அம்மா ஆறுதல் சொல்வதும்...... என்ன ஒரு அற்புதமான காட்சி இல்லையா?
கீதா
வடக்கன் வீர காதா பாடலும் நிறைய கேட்டிருக்கிறேன். அருமையான பாடல்.
பதிலளிநீக்குபடம் பார்த்ததில்லை
கீதா
சிந்து பைரவி சமயத்தில் எல்லாம் ராஜாவும் எஸ்பிபியும் நல்லாதானே கை கோர்த்திட்டிருந்தாங்க! எதனால இந்தப் படத்துல எஸ் பி பி இல்லைன்னு தெரியலை.... தண்ணி தொட்டி பாட்டுக்கு தாஸேட்டனுக்குப் பதிலா எஸ் பி பி பாடியிருந்தால் என்று யோசித்திருக்கிறேன். இன்னும் பொருந்தியிருக்குமோன்னு. எஸ் பி பி முறையா கர்நாடக சங்கீதம் கத்துக்கலைனாலும், அவ்வகையான பாடல்களையும் சூப்பரா பாடுவாரே!
பதிலளிநீக்குஉன்னால் முடியும் தம்பியில் எஸ்பி பிக்கு இடம் உண்டு.
கீதா
அனைவருக்கும் வைகுண்ட ஏகாதசி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுதலாவது பாடல் கேட்டிருக்கிறேன்.
இரண்டாவது பாடல் இப்பொழுதுதான் கேட்கிறேன். நல்ல பாடல்.