தினை உருண்டை
தேவையான பொருட்கள் :
தினையரிசி 250 gr
பச்சைப் பயறு 100 gr
பழுப்பு வெல்லம் 100 gr
முந்திhp 15
திராட்சை 10
ஏலக்காய் தூள் சிறிதளவு
நெய் தேவைக்கேற்ப
செய்முறை :-
அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு, மிதமான சூட்டில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்..
அதே வாணலியில் மேலும் சிறிது நெய் விட்டு தினையரிசியை சிவக்க வறுத்து ஆறியதும்
அனைத்தையும்
மிக்ஸியில் இட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து
பச்சைப் பயறையும் சிவக்க வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
வெல்லத்தை கல்லுரலில் இடித்துப் பொடியாக்கி
தண்ணீருடன் சேர்த்து, கம்பி பதமாக பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
தினை மாவு பயற்றம் மாவு இவற்றுடன் முந்திரி, திராட்சை ஏலக்காய் தூளைச் சேர்த்து வெல்லப் பாகினை ஊற்றிக் கிளறவும்..
இப்போது இந்தக் கலவையினை அழுத்திப் பிசைந்து, கைகளில் நெய் தடவிக் கொண்டு சிறு சிறு
உருண்டைகளாகப் பிடித்து வைத்து முருகனுக்கு நிவேதனம் செய்த பின் வீட்டிலுள்ள அனைவருக்கும் வழங்கவும்..
உடல் நலனை உத்தேசித்து
வெல்லத்தின் அளவை மாற்றிக் கொள்வது உங்கள் விருப்பம்..
நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும் நல்வரவு..
பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
கைத்தலபேசியின் செயற் குறைபாட்டினால் இப்பதிவுக்கான படத் தொகுப்பினை உருவாக்க இயலவில்லை..
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு ஜி
பதிலளிநீக்குநல்வரவு தங்களுக்கு
நீக்கு..
மகிழ்ச்சி நன்றி ஜி
சுவையான தினை உருண்டை .
பதிலளிநீக்குமாவிளக்குதான் முருகனுக்கு படைத்து சாப்பிட்டிருக்கிறோம். இவ்வாறு செய்ததில்லை. நல்ல குறிப்புக்கு நன்றி.
தங்களது வருகைக்கு
நீக்குமகிழ்ச்சி.. நன்றி மாதேவி..
Me used to prepare this urundai often. Now due to my ill health not preparing.
பதிலளிநீக்குஎன்ன கோளாறு என்று தெரிய வில்லை.. சர்க்கரையில் இருக்கலாம்
நீக்குபொதுவாக தினை நல்லது.. இப்பொழுது கூட வாங்கியுள்ளேன்..
நலம் வாழ பிரார்த்தனைகள்..
நன்றி அக்கா.. மகிழ்ச்சி..
நல்ல குறிப்பு துரை அண்ணா. நல்லா சொல்லியிருக்கீங்க.
பதிலளிநீக்குதினை அரிசியில் இப்படிச் செய்ததுண்டு துரை அண்ணா. ரொம்பவே சுவையாக இருக்கும்.
ஆனால் சர்க்கரை/வெல்லம் பயன்பாடு இல்லாததால் செய்வதில்லை. சாப்பிடவும் சின்னக் குழந்தைகள் இருந்தால் செய்து கொடுக்கலாம். யாருமில்லை எனவே செய்வதில்லை. யாராச்சும் கேட்டா செஞ்சு கொடுக்கலாம்.
கீதா
தாங்கள் சொல்வது உண்மையே.. இங்கேயே நல்ல சர்க்கரைக்கு அலைய வேண்டியதாக இருக்கின்றது..
நீக்குதங்களது வருகைக்கு
மகிழ்ச்சி.. நன்றி சகோ
அருமை ஐயா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கு
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்
தினை உருண்டை செய்முறை குறிப்பு அருமை.
பதிலளிநீக்குதினை அதிரசம், தினை மாவிளக்கு, தினை புட்டுஅமுது சாப்பிட்டு இருக்கிறேன். தினை உருண்டை செய்து பார்க்க வேண்டும். கீதா சொல்வது போல குழந்தைகள் விரும்பி கேட்டால் செய்து கொடுக்கலாம்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா