ஒட்டாவா: கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுபவர் அனிதா இந்திரா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். அனிதா இந்திரா கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர். சர்வதேச அரங்கில் மட்டும் அல்லாமல், உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். புதிய தலைவர் தேர்வாகும் வரை அவர் தலைவர் பதவியில் நீடிப்பார். தற்போது அடுத்தக்கட்டமாக பிரதமர் ரேசில் இரண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளனர். அந்த வகையில், கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரா ஆர்யா களம் இறங்குகிறார். இன்னொருவரான அனிதா ஆனந்தும் பதவிக்கு மோதுகிறார். தமிழக தந்தை - பஞ்சாப் தாயாருக்கு பிறந்த அனிதா ஆனந்த், தாமும் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அனிதா இந்திரா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். அனிதா இந்திரா கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர்.
வெளிநாடுகளில் புகழ் பெற்ற, இந்திய வம்சாவளியினர், ரிஷி சுனக் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு, அடுத்த இடத்தில், 57 வயதான அனிதா இந்திரா உள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய உடனேயே, இந்திய ஊடகங்களின் கவனம் அனிதா இந்திரா பக்கம் திரும்பியது. இவரது வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகள், நாளிதழ்கள் உட்பட அனைத்திலும் சிறப்பு செய்திகள் வந்த வண்ணம் இருந்து கொண்டு இருக்கிறது. அனிதா இந்திராவின் தந்தை ஆனந்த், ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர். அம்மா சரோஜ் மயக்க மருந்து நிபுணராக இருந்தவர். அனிதாவின் தந்தைவழி தாத்தா வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அனிதாவைப் பொறுத்தவரை, அவர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசின் சுற்றுலா மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக பணியாற்றினார். அவர் 2019ம் ஆண்டு முதல் லிபரல் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, கோவிட் தொற்றுநோய் காலத்தில் கனடாவில் தடுப்பூசி கொள்முதல் உள்ளிட்டவற்றை அனிதா மேற்பார்வையிட்டார். அரசியலில் இறங்குவதற்கு முன், அனிதா, கார்ப்பரேட் நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்ற டோர்னட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அனிதா இந்திரா பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கனடாவில் தமிழர்கள் தமிழ் மாதத்தின் தொடக்கத்தை தைப் பொங்கலாகக் கொண்டாடுவார்கள். ஒரு கனடா நாட்டவர் என்ற முறையில், மகிழ்ச்சியான தைப் பொங்கல் கொண்டாடுபவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பி. கு : இப்போது இவர் போட்டியிலிருந்து விலகி விட்டதாக தகவல்.
=======================================================================================================
===============================================================================================
==================================================================================================
நான் படிச்ச கதை நாடகம் (JKC)
இது தாண்டா ஆஃபீஸ்!
கதையாசிரியர்: ஜோதிர்லதா கிரிஜா
நண்பர் : என்ன ஒரே சிரிப்பு.
சொல்லிட்டு சிரியும்.
நான்: அதுவா இன்னைக்கு ஒரு கதை படிச்சேன். அதை நினைத்து தான். முக்கியமா
இரண்டு காரணங்கள். தலைப்பை
வாசிக்கும்போது தவறி “இது தண்ட ஆஃபீஸ்” என்று வாசித்தேன். இரண்டாவது
என்னுடைய பாஸ் பெயரில் கதையில் ஒரு பாத்திரம். இதுக்கு நடுவில அண்டா குண்டா ‘அதாண்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா ‘ என்ற பாடலும் எட்டிப்பார்த்ததா, அதான் சிரிப்பு.
நண்பர்: சிடுமூஞ்சி நீயே
சிரிக்கணும்னா என்னமோ இருக்கு. கொஞ்சம்
சுருக்கமா சொல்லு. நானும்
சேர்ந்துக்கிறேன்.
நான்: உனக்கு மட்டுமா, எ பி
வாசகர்களையும் சேர்த்துக்கிறேன். ஊடாலே
எல்லாம் சந்தேகம் அது இதுன்னு கேட்கப்படாது. கடைசிலே கேட்கோணும்.
நண்பர் : சரி.
நான்: கதை ஒரு மத்திய சே ஒன்றிய அரசு அலுவலகம் பற்றியது, கதை என்பதைக் காட்டிலும் ஒரு ஓரங்க நாடகம்
என்று கூறலாம். காரணம் கதைக்களம்
கடைசி வரை மாறவில்லை. அதே போல்
வலுவான கதைக்கரு இல்லை. உரையாடல்களிலேயே
கதை செல்கிறது. கதை ஆசிரியர்
ஜோதிர்லதா கிரிஜா. நிறைய
எழுதியவர். பிரபலமானவர். ஆர்வி, ரா. கி. ரங்கராஜன் போன்ற பெரிய ஆசிரியர்களால்
ஊக்குவிக்கப்பட்டவர்.
நண்பர்: ஆதவன் எழுதினாரே “ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்” அது போலவா?
நான்: அதுவும் நாடகம் தான்
என்றாலும் இது அது போல் இல்லை.
சரி நாடக அரங்கின் திரையைத் தூக்குகிறேன்.
ஒரு
அக்கவுண்ட் செக்சன். மக்கள் தொடர்பு அதிகம் இல்லாதது. காலை மணி 8:50
பாத்திரங்கள்
ஒவ்வொன்றாக அரங்கப் பிரவேசம்.
வீணா
முதல் வரவு.. ஆள் இல்லாத ஆபீசில் பேன் எல்லாம்
சுற்றிக்கொண்டிருக்கிறது. அடுத்து
ஜெயராமன் நுழைகிறார்.
ஜெயராமன்
தானும் புன்னகை புரிந்தபடி, “குட் மார்னிங், வீணா!” என்றவாறு தனது
இருக்கையில் அமர்ந்தான். பிறகு,
தலையை உயர்த்தியபடி, “நீங்கதான் ஃபேனையெல்லாம் போட்டீங்களா ?”
என்றான்.
“நீங்க நுழைஞ்சதைப் பாத்துக்கிட்டேதான் நானும் வந்தேன். யாருமே இன்னும் வராத செக்ஷன்லே யாரு இப்படி
ஃபேனையெல்லாம் சுத்த விட்டிருப்பாங்கன்னு தெரியலியே ?”
இப்படி
ஆரம்பிக்கிறது கதை.
இவர்கள்
இருவரும் அக்கப்போர் பேசுபவர்கள்.
நாற்காலியைத்
துடைத்துவிட்டு அதில் உட்கார்ந்த ஜெயராமன்,
“பில்டிங் செக்ஷன் கணநாதன் தெரியுமா
உங்களுக்கு ? வேலையே செய்ய
மாட்டான். சரியான வாழைப் பழச்
சோம்பேறி!” என்றான்.
“தெரியும்.”
“அவனுக்கும் இதேதான் வேலை. எப்ப
பாரு, போனஸ் எவ்வளவு வரும்,
அர்ரியர்ஸ் எவ்வளவு வரும், சம்பள உயர்வு எவ்வளவு வரும்னு கணக்குப்
போட்டமணியந்தான்.”
“நாங்கல்லாம் அவனைப் பணநாதன்னுதான் சொல்றது.”
“அதுவும் சரிதான்.”
“போன பே கமிஷன் வந்தப்ப கையில என்ன வரும், கையில என்ன வரும்’னு
கேட்டுண்டே அலைஞ்சான். ‘வேலையே
செய்யாத உனக்கெல்லாம்‘ அப்படின்னு
மனசுக்குள்ள சொல்லிட்டு, ‘கையில
சிறங்குதான் வரும்’னேன்.”
வீணா
கோப்பு ஒன்றைப் பிரித்துக்கொண்டே, “வேலையே செய்யாம எப்படி இவங்கல்லாம்
காலந்தள்றாங்க! ஆச்சரியமாயிருக்கு!”
என்றாள்.
“நம்ம ஜெநா இல்லியா ? அதே
மாதிரிதான்,” என்று பதில்
கூறிவிட்டு ஜெயராமன் தானும் ஒரு கோப்பைப் பிரித்தான்.
“வர்ற பேப்பர்ஸை ரிஜிஸ்டர்ல எண்ட்ரி போட்றதோட சரி. வேற எந்த உருப்படியான வேலையும் செய்யறதில்லை.
மற்றவர்களைக் கொண்டு அவருடைய வேலைகளை
முடிப்பதில் கில்லாடி. இன்று அவர்
மந்த்லி ஸ்டேட்மென்ட் போட்டாகணும்.”
இப்படி
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜெ நா என்ற ஜெய நாராயணி நுழைகிறார். ஜெ நா ஒரு மேனா மினுக்கி. எப்போதும்
மேக்கப் கலையாமல் பார்த்துக்கொள்வார்.
.ஸ்ஸ். . . . வர்றாங்க,
வர்றாங்க. . .”
“குகுகு.. . குட் மார்னிங்,
ஜெநா!”
இன்பரசு
வந்தான். இருவரையும் நோக்கி, “காலை வணக்கம், நண்பர்களே!” என்றான்.
இருவரும் பதிலுக்குக் காலை வணக்கம்
செலுத்தினார்கள்.
“ஏய், இன்பரசு ! இப்படிச் செந்தமிழ்லயே பேசிப் பேசி உன்
பல்லெல்லாம் சீக்கிரமே விழுந்துடப் போறது, பாரு.”
“நான் தமிழன். தமிழுணர்வு
கொண்டவன், அப்படித்தான் பேசுவேன்.”
அப்போது
தலைமை எழுத்தர் பிரிவுக்குள் நுழைந்தார்.
இன்பரசு எல்லாரையும் முந்திக்கொண்டு,
“காலை வணக்கம், அய்யா!” என்றான்.
தலைமை
எழுத்தர், “
. . .’காலை வணக்கம்’ கிறது தமிழங்களோட வழக்கமா என்ன ? தமிழ்ப் பண்பாடா எனா ? வெறுமன ‘வணக்கம்’னு மட்டுந்தானே
சொல்லணும் ?” என்றார். பிறகு தமது இருக்கையில் அமர்ந்தார். முகத்தில் வழக்கமான புன்னகை இல்லை.
“அய்யா! பண்பாடு பற்றி நாம்
பேசவில்லை. என்பாடு தமிழன்
தமிழில்தான் பேசவேண்டும் என்பது மட்டுமே.”
“இது சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஆஃபீஸ், இன்பரசு! உனக்கு அவ்வளவு
தமிழ் ஆர்வம்னா, தமிழ்
வாத்தியாராப் போய் வேலை செய்!”
“அய்யா!”
“ . . . ‘சார்’னு கூப்பிடு.”
“திச் ஈஸ் த லிமிட்!”
ஆத்திரத்துடன் எழுந்து நின்று, “மிஸ்டர் இன்பரசு!
இது என்னோட கடைசி எச்சரிக்கை. அப்புறம் நான் நம்ம செக்ஷன் ஆஃபீசர் கிட்ட
கம்ப்ளெய்ண் பண்ணிடுவேன். தெரிஞ்சுதா
?” என்றார் தலைமை எழுத்தர்.
“அய்யா! ‘இதுதான் என்
பொறுமையின் எல்லை’ என்று தமிழில்
கூறலாகாதா ?”
“ஷட் அப்!”
“வாயை மூடு!”
“என்னது!”
“ , , , ‘ஷட் அப்’புக்குத் தமிழ் கூறினேன், அய்யா!”
தலைமை
எழுத்தர் ஆவேசமாகப் பிரிவிலிருந்து வெளியேறினர்.
வீணா
சிரிப்பை அடக்கியவண்ணம், “எப்பவும் இன்பரசு செந்தமிழ்ல பேசறதை யெல்லாம்
சிரிச்சுண்டே கேட்டுண்டிருப்பாரே! இன்னைக்கு
என்ன ஆச்சு அவருக்கு ?” என்றாள்.
அவள் குரலில் வியப்புத் தெரிந்தது.
இன்பரசு, துளியும் கவலைப் படாமல், “இன்று
தமது அகத்தில் மாமியுடன் சண்டை போட்டிருப்பார். அந்த எரிச்சலின் மிச்சம் மீதிகளை அலுவல் அகத்தில் காட்டுகிறார். . . வேறொன்றுமில்லை!” என்றான்.
தலைமை
எழுத்தரைப்பற்றி சில வார்த்தைகள். அப்பாவி, வேலை தெரியும், உழைப்பார். மற்றவர்கள்
இவர் மேல் குற்றங்களை சுமத்திவிட்டு பதவி உயர்வுகளை பெற்று சென்று விட்டனர்.
“பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி ஒரு வம்புல மாட்டிண்டுட்டேம்மா. ஒரு ஃப்ராட் கேஸ் அது. என் மேல எந்தத் தப்பும் கிடையாது. பண்ணினதெல்லாம் ரெண்டு ஆஃபீசர்ஸ். கடைசியில மாட்டிண்ட தென்னமோ நான்! அதுலேர்ந்து வெறுத்துப் போயிடுத்தும்மா.”
“என்ன சார் நடந்தது ? சொல்லலாம்னா
சொல்லுங்கோ.”
“சுருக்கமாச் சொல்லணும்னா, லீவ்ல
போயிருந்த ஒருத்தனோட வேலையை ஒரு பொறுப்பு உணர்ச்சியால நான் இழுத்துப் போட்டுண்டு
செய்யப் போக, அந்த ஃப்ராடைப்
பண்றதுக்காகவே அப்படி நான் பண்ணினதாப் பேராயிடுத்து எனக்கு! ஆஃபீசர்ஸ் ரெண்டு பேரும் நோட் ஷீட்ஸையெல்லாம்
கம்ப்ளீட்டா மாத்தி, ரீ-பில்ட் பண்ணிட்டா. அது பெரிய கதைம்மா. விவரமாச் சொல்லணும்னா ரொம்ப நாழியாகும்.
சுருக்கமா இதுதான். . . .” என்ற தலைமை எழுத்தரின் கண்கள் கலங்கின.
நான்: ஒய் என்ன தூங்கிட்டீரா.
நண்பர்: இல்லை கொஞ்சம் சுவாரசியமா
இருக்கு. நடுவிலே பேசாதேன்னு நீ
தானே சொன்ன.
ஆதவன் “ஒரு அறையில் இரு
நாற்காலிகள்” கதையில் இருந்து ஒரு
மேற்கோள் கேளும்
‘அரசாங்கத்திலே இனிஷியேட்டிவ் எடுத்துக் கொள்பவன் அல்ல, எடுத்துக் கொள்ளாதவன்தான் விரும்பப்படுகிறான்…’
இது இங்கே பொருந்துதா?
நண்பர்: அப்படியா. சரி.
சரி
கதைக்கு திரும்புவோம்
“இன்னைக்குக் கார்த்தால என் ஒய்ஃபோட வாக்குவாதம். அந்த மூட்லயே வந்தேனா ? இன்பரசுவோட செந்தமிழ் என் காதுல தேனாப்
பாயறதுக்குப் பதிலாச் செந்தேளாப் பாஞ்சுடுத்து! . . . அது கெடக்கு. . . நம்ம ஜெநா மன்த்லி ஸ்டேட்மெண்ட் போட்டாச்சா ?
தெரியுமா ?”
அப்பிரிவில்
பணி புரியும் சென்னகேசவலு வேர்க்க விறுவிறுக்க,
அவசர நடையில் அங்கு வந்து தனது
இருக்கையில் பொத்தென்று அமர்ந்தான். முகத்தைக் கைக்குட்டையால் அழுத்தித் துடைத்தபடி, “எடுத்துண்டு போயாச்சா ?” என்றான்.
“என்னப்பா கேக்கறே நீ ? செத்த
வீட்டில கேக்குற கேள்வி மாதிரியில்ல கேக்குறே! எடுத்தாச்சான்னு!”
“அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரைக் கேக்கறேம்ப்பா! நீ வேற. தெரியாத மாதிரி
பேசு.. டயத்துக்கு வந்துட முடியற
கொழுப்பா ?”
அப்போது
ஒரு பியூன் வந்தார். அன்றாடம் தபால்களை வெவ்வேறு பிரிவுகளில்
பட்டுவாடாச் செய்வது அவரது பணி.
“வாய்யா, சுந்தரேசன்!
இன்னைக்கு எத்தனை லெட்டர்ஸ் ?”
“தகராறு பிடிச்ச பேப்பரு ஒண்ணு இருக்குங்கையா. அத்தை முதல்ல வாங்கிக்குங்க. மத்தப் பேப்பரை யெல்லாம் அப்பால கொண்டுட்டு
வர்றேன்,” என்ற சுந்தரேசன் அந்தத்
தாளை அவரிடம் நீட்டினார்.
“பேஜார் பிடிச்ச பேப்பர், சார்!
பத்து செக்ஷன் சுத்தியாச்சு. சுத்திச் சுத்திக் காலு நோவுது, சார். அல்லாரும், என்னிதில்ல,
என்னிதில்லன்றாங்க. சுத்துறதே வேலையாப் போச்சு, சார், ரெண்டு நாளா!”
“அப்ப, சுந்தரேசன்கிற பேரை
சுத்தரேசன்னு மாத்திட்டாப் போச்சு,” என்றாள் ஜெயநாராயணி.
சென்னகேசவலுவைத்
தவிர எல்லாரும் சிரித்தார்கள்.
தலைமை
எழுத்தர் எதையும் காதில் வாங்காமல்,
சுந்தரேசன் கொடுத்த தாளை வாங்கி
முணுமுணுவென்று படித்துவிட்டுச் சத்தமாய்ச் சிரித்தார். எல்லாரும் ஆவலுடன் அவரையே பார்த்தார்கள்.
“இன்னாத்துக்கு சார் சிரிக்கிறீங்க ?” என்றார் சுந்தரேசன்
தலைமை
எழுத்தர், தமது சிரிப்பு ஓய்ந்ததும், வாயைத் திறந்தார்: ”கேலிக் கூத்துன்னா, கேலிக்கூத்து! கவர்ன்மெண்ட் ஆஃபீஸ்ல உள்ளவங்க எவ்வளவு அழகா வேலை பண்றாங்கங்கிறதுக்கு இதை
விட நல்ல உதாரணம் இருக்கவே முடியாது!”
----------------------------------------------------------------------------------------------------------
பிற்பகல்
சாப்பாட்டு நேரத்தின் போது எல்லா ஆண்களும் வெளியே சென்றிருக்க, ஜெயநாராயணியும் வீணாவும் மட்டும் பிரிவிலேயே அமர்ந்து சாப்பிடத்
தொடங்கிசார்கள்.
வீணா, தயிர் சாதத்தை விழுங்கிக்கொண்டே, “ஆமா ? உன்னை எல்லாரும் ஏன்
ஜெநா, ஜெநான்னு கூப்பிட்றாங்க ?
ஜெயநாராயணிங்கிற உன் பேரைச் சுருக்கி,
ஒண்ணு, ஜெயான்னு கூப்பிடணும், இல்லேன்னா,
நாராயணின்னு கூப்பிடணும். அதென்ன, ஜெநா ?” என்று கேட்டாள்.
“நீ இந்த செக்ஷன்ல ஜாய்ன் பண்றதுக்கு முந்தி ஒரு ஆங்கிலோ-இண்டியன் ஹெட் க்ளார்க் இருந்தாரு. தெரியுமில்லியா ?”
“ஆமா. மிஸ்டர் விக்டரைத்தானே
சொல்றே ?”
“ஆமாமா. அவர் வாயிலே
ஜெயநாராயணின்ற என்னோட பேரு நுழையல்லே. ஜெயான்னு கூப்பிடச் சொன்னேன். ஜாயா, ஜாயான்னு
கூப்பிட்டாரு. ரெயில்வே ஸ்டேஷன்ல
சாயா விக்கிற மாதிரி இருந்திச்சு. சரிதான்னு,
நாராயணின்னு கூப்பிடச் சொன்னேன். அதுவும் வரல்லே. நாரா, நாரான்னு கூப்பிட்டாரு. நாராசமா
யிருந்திச்சு. அப்புறம் நம்ம
ஜெயராமன் தான் ரெண்டு பகுதிகளோட முதல் எழுத்தையும் சேர்த்து, ‘ஜெநா’ ன்னு கூப்பிடச் சொன்னாரு.”
“சென்னகேசவலுவுக்கும் இதே மாதிரிக் கதையா ?”
“ஆமா. முதல்ல, கேசவன்னுதான் கூப்பிடச் சொன்னாரு. கேசு, கேசுன்னு கூப்பிட்டாரு. ஒரு
ஆளைப் பார்த்துக் கேசு, கேசுன்னு
கூப்பிட்டா நல்லாவா இருக்கு ? அதான்
சென்னான்னு கூப்பிடச் சொன்னாரு. அப்புறம்
இன்னொரு க்ளார்க். அவரோட பேரை
மிஸ்டர் விக்டர் ‘டாண்ட்யூடாப்னி’
அப்படின்னு உச்சரிப்பாரு. அது என்ன பேருங்கிறதைக் கண்டுபிடி, பார்ப்போம். நீ சரியாச் சொன்னா காப்பி வாங்கித் தருவேன்.”
“தெரியல்லே. நீயே சொல்லிடு.”
“ஸ்பெல்லிங் சொல்றேன். D-A-N-D-A-Y-U-D-A-P-A-N-I.”
“இரு, இரு. எழுதின்னா பார்க்கணும் ?” என்று வீணா கூற, ஜெயநாராயணி மறுபடியும் ஒவ்வோர் எழுத்தாக
நிறுத்தி நிறுத்திச் சொன்னாள்.
“அட, கஷ்டமே! தண்டாயுதபாணி! அதையா டாண்ட்யூடாப்னிம்பாரு ? சரியாப் போச்சு!”
சற்றுப்
பொறுத்து, “ஆமா ? உனக்கும் அந்தச் சென்னாவுக்கும் ஏன் ஆகவே மாட்டேங்குது ? எப்ப பாரு சண்டை போட்றீங்களே ?” என்று வீணா விசாரித்தாள்.
“என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டாரு. பொண்டாட்டி செத்து, அந்தாளுக்கு
ஒரு கொழந்தை வேற இருந்திச்சு. எனக்குப்
பிடிக்கல்லே. மாட்டேன்னுட்டேன்.
மேலே
அறிமுகம் செய்த வீணா, ஜெயராமன், இன்பரசு, ஜெய நாராயணி,
தலைமை எழுத்தர், சென்ன கேசவலு, பியூன் சுந்தரேசன் தவிர மேலும் நால்வர் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்.
அவர்கள் தண்டபாணி, தற்போது விடுப்பில் இருக்கிறார். வீரபத்திரன் மருத்துவ விடுப்பு, கந்தையா
மற்றுமொரு பியூன், சின்னியம்மா
துப்புரவு பணியாளர்.
தண்டபாணி
சிறந்த சிவ பக்தர். அலமாரியில்
நிறைய விபூதி பொட்டலங்களை வைத்திருக்கிறார்.
வீரபத்திரனைப்
பற்றி : “சென்னா! வீரபத்திரனோட வீட்டு அட்ரெஸ் தெரியுமாப்பா ? அந்தாளை லீவைக் கட் பண்ணிட்டு உடனே வந்து வேலையில ஜாய்ன் பண்ணச் சொல்லணும்.
அதுக்குத்தான். முக்கியமான பேப்பர்ஸை யெல்லாம் கொஞ்சம் கூட
மனச்சாட்சியே இல்லாம கட்டி வெச்சுட்டுப் போயிருக்கான்.”
“நீங்க ஜி.எம். கையெழுத்துல லெட்டர் அனுப்பினாலும் வரமாட்டான்,
சார். மெடிக்கல் லீவ்ல இல்லே போயிருக்கான் ? ஏதோ பத்திரிகை வெச்சிருக்குற நாவல் போட்டியில கலந்துக்கக் கதை எழுதுறதுக்காக
லீவ் போட்டிருகான், சார். வர மாட்டான்.”
அடுத்து
சின்னியம்மா
: “ஊர்க்கதை பேசிக்கிட்டு நீ போடுற வேர்க்கடலைத் தோலை யெல்லாம் வேர்க்க
விறுவிறுக்க வாரித் தள்ளுறது என்னோட வேலை இல்லேம்மா. தெரிஞ்சுக்க!” என்றாள் சின்னியம்மா, கோபமாக.
சென்னகேசவலு, “சின்னியம்மா! நீ ‘ரைமா’ பேசறே! சி(ன்)னிம்மாவுக்கு வசனம் எழுதப் போகலாம் நீ!” என்றான்.
“என் பொயப்பே வெசனமாகீது. இதுல
நான் இன்னாயா வசனமெல்லாம் எய்தறது ?”
வீணா, “இத பாரு, சின்னியம்மா.
நீ ரொம்பப் பேசறே. தப்பு! நீ சரியாப் பெருக்கல்லைங்கிறதை ஒத்துக்கிட்டு மறுபடியும் துடப்பத்தை
எடுத்துண்டு வா!” என்றாள்.
தொடர்ந்து, “தரையைப் பெருக்கிறியோ இல்லியோ, வாயைப் பெருக்கத் தெரியறது நல்லா,” என்று அவள் கண்டிக்கவும், சின்னியம்மா
தலையைக் குனிந்துகொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
ஆக
ஆபீஸ் அலுவலர்களை பற்றி அறிந்து கொண்டீர்கள்.
இனி அன்று நடக்கும் இரண்டு ‘வேலை’ களை காண்போம்.
எல்லா
அலுவலங்களிலும் நடக்கும் ஒன்று தான் “பொறுப்பை மற்றவர்க்கு தள்ளி விடுதல்”.
பியூன்
வந்தார். அன்றாடம் தபால்களை வெவ்வேறு பிரிவுகளில்
பட்டுவாடாச் செய்வது அவரது பணி.
“வாய்யா, சுந்தரேசன்!
இன்னைக்கு எத்தனை லெட்டர்ஸ் ?”
“தகராறு பிடிச்ச பேப்பரு ஒண்ணு இருக்குங்கையா. அத்தை முதல்ல வாங்கிக்குங்க. மத்தப் பேப்பரை யெல்லாம் அப்பால கொண்டுட்டு
வர்றேன்,” என்ற சுந்தரேசன் அந்தத்
தாளை அவரிடம் நீட்டினார்.
“பேஜார் பிடிச்ச பேப்பர், சார்!
பத்து செக்ஷன் சுத்தியாச்சு. சுத்திச் சுத்திக் காலு நோவுது, சார். அல்லாரும், என்னிதில்ல,
என்னிதில்லன்றாங்க. சுத்துறதே வேலையாப் போச்சு, சார், ரெண்டு நாளா!”
“அப்ப, சுந்தரேசன்கிற பேரை
சுத்தரேசன்னு மாத்திட்டாப் போச்சு,” என்றாள் ஜெயநாராயணி.
சென்னகேசவலுவைத்
தவிர எல்லாரும் சிரித்தார்கள்.
“சார்! நம்ம செக்ஷன்ல ஒரே
ஒரு ஆளுக்கு மட்டும் நான் ஜோக் சொன்னா சிரிக்கக் கூடாதுன்னு சங்கல்பம்!” என்றாள் ஜெயநாராயணி.
இன்பரசு, குறுக்கிட்டு, “ரொம்ப
அல்பம்!” என்றான்.
தலைமை
எழுத்தர் எதையும் காதில் வாங்காமல்,
சுந்தரேசன் கொடுத்த தாளை வாங்கி
முணுமுணுவென்று படித்துவிட்டுச் சத்தமாய்ச் சிரித்தார். எல்லாரும் ஆவலுடன் அவரையே பார்த்தார்கள்.
“இன்னாத்துக்கு சார் சிரிக்கிறீங்க ?” என்றார் சுந்தரேசன்
தலைமை
எழுத்தர், தமது சிரிப்பு ஓய்ந்ததும், வாயைத் திறந்தார்: ”கேலிக் கூத்துன்னா, கேலிக்கூத்து! கவர்ன்மெண்ட் ஆஃபீஸ்ல உள்ளவங்க எவ்வளவு அழகா வேலை பண்றாங்கங்கிறதுக்கு இதை
விட நல்ல உதாரணம் இருக்கவே முடியாது!”
இவ்வாறு
சொல்லிவிட்டு அவர் மறுபடியும் சிரிக்க,
“சார், சார்! விஷயம் இன்னதுங்கிறதை
சொல்லிட்டுச் சிரிங்க சார்னா ? அப்பதானே
நாங்களும் கொஞ்சம் சிரிக்கலாம் ?” என்றாள்
வீணா.
“நாலு மாசத்துக்கு முந்தி ரிடைர் ஆன நம்ம நாலடியார்தான் இதை நம்ம ஆஃபீசுக்கு
அனுப்பியிருக்கார்.”
இன்பரசு, மகிழ்ச்சியோடு, ”என்னே
அவர்தம் தமிழ்ப்பற்று! நாலடியார்
என்று பெயர் வைத்துக் கொண்டுள்ளாரே!” என்றான்.
“அட, நீ வேற. சும்மா இரய்யா. அவரு ரொம்பக் குள்ளமா யிருப்பாரு. அதுக்காக நான் வெச்சிருக்கிற நிக் நேம் அது. அவரு வேற யாருமில்லேய்யா. நம்ம
குண்டுக் குமரேசந்தான் எழுதி யிருக்காரு.”
ஜெயநாரயணி, “ஓ! அவரா ? அப்படி என்ன சார் சிரிக்கச் சிரிக்க லெட்டர்ல
எழுதியிருக்காரு ?” என்றாள்.
“சிரிக்கச் சிரிக்க அவரு எதுவும் எழுதல்லேம்மா, ஜெநா! அவரே சிரிப்பாச் சிரிச்சுக்கிட்டு இருக்காரு. ரிடைர் ஆனதுலேர்ந்து இன்னும் பென்ஷன் வராததால ..
. அவரு என்ன கேக்கறாருங்கிறதைக் கூடச்
சரியாப் புரிஞ்சுக்காம ஆளாளுக்கு, ‘இது எங்க பேப்பர் இல்லே’ ன்னு
அதைப் பந்தாடியிருக்காங்களேன்னு சிரிச்சேன். பேப்பரோட மார்ஜின்ல, ‘நாட்
ஃபார் திஸ் செக்ஷன்’ அப்படின்னு
எத்தினி பேரு எழுதி யிருக்காங்கன்னு பாருங்க. . .”
பியூன்
சுந்தரேசன் குறுக்கிட்டு, “எங்க ஹெட்க்ளார்க்கு அய்யா பென்ஷன் செக்ஷன்னு
மொதல்ல சரியாத்தான் சார் எழுதினாரு. அவங்கதான் எங்களுது இல்லேன்னு பதிலுக்கு எழுதிட்டாங்க ஓரத்துல,” என்றார்.
”அதான்யா நானும் சொல்றேன். லெட்டரைச்
சரியாப் படிக்காம பென்ஷன் செக்ஷன் ஆளு என்ன எழுதியிருக்கார்னு கேளுங்க எல்லாரும்.
தனக்கு இன்னும் பென்ஷன் வராததால,
60 வயசுல மெச்சூர் ஆக இருந்த
இன்ஷ்யூரன்ஸ் பாலிசியை சரண்டர் பண்ணிப் பணம் வாங்கி அதுல குடும்பச் செலவை மேனேஜ்
பண்ணினதா எழுதியிருக்காரு. ‘இன்ஷ்யூரன்ஸ்’ங்கிற வார்த்தை கண்ணுல பட்டிச்சா ? உடனே, அந்தாளு, ‘இது எங்களது
இல்லே. இன்ஷ்யூரன்ஸ் செக்ஷன்ல
செய்ய வேண்டிய வேலை’ன்னு ஓரத்துல
குறிப்பு எழுதிட்டாங்க. அப்பால நீ
இன்ஷ்யூரன்ஸ் செக்ஷனுக்குப் போயிருக்கே. அங்க என்ன பண்ணினாங்க ? ‘நான்
ஒரு சின்சியர் ஸ்டாஃபா இத்தினி வருஷம் உழைச்சும் எனக்குப் பென்ஷன் வரலை’ ன்னு அவர் எழுதியிருக்கிற வாக்கியத்துல
இருக்குற ‘ஸ்டாஃப்”ங்கிற வார்த்தையில பார்வை பட்டதும், ‘இது ஸ்டாஃப் செக்ஷன் பண்ண வேண்டிய வேலை’
அப்படின்னு இன்ஷ்யுரன்ஸ் செக்ஷன்லே
எழுதிட்டாங்க. அப்பால நீ ஸ்டாஃப்
செக்ஷனுக்குப் போயிருக்கே. அங்க
இருந்த பிரகஸ்பதி என்ன செஞ்சாரு ? ‘நான் பில்டிங் செக்ஷன் ஹெட்க்ளார்க்கா ரிடைர் ஆனவன்’ அப்படின்னு இந்தாளு எழுதறாரு. ‘பில்டிங் செக்ஷன்’கிற வார்த்தை கண்ணுல பட்டிச்சா ? போச்சு! முழுக்கப் படிச்சுப் பார்க்காம, ‘ இது பில்டிங் செக்ஷன் பண்ண வேண்டிய வேலை’ அப்படின்னு அதுக்கு மார்க் பண்ணிட்டாரு ஸ்டாஃப் செக்ஷன் ஆளு!”
“அடப்பாவிகளா! இது மாதிரி
வேலையைச் சரியாச் செய்யாத ஆள்கள் மேல யெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கணும்,
சார்!” என்றான் சென்னகேசவலு, ஜாடையாக
ஜெயநாராயணியின் பக்கம் பார்த்தபடி. அவள் புரிந்துகொண்டு முகம் கடுத்தாள்.
“பில்டிங் செக்ஷன் ஆளு என்ன சார் எழுதினாரு ?” என்று ஜெயராமன் ஆவலுடன் வினவினான்.
“இதோ. . . வந்துண்டே
இருக்கேன். . .’என்னோட பேங்க்
அக்கவுண்ட்ல இருக்கிற பணத்தை யெல்லாம் எடுத்துச் செலவு செஞ்சிண்டிருக்கேன்’
அப்படின்னு எழுதியிருக்காரு குமரேசன்.
அதுல இருக்குற ‘அக்கவுண்ட்’ ங்கிற வார்த்தையைப் பார்த்ததும் அக்கவுண்ட்ஸ் செக்ஷனுக்கு – அதாவது நம்ம செக்ஷனுக்கு – மார்க் பண்ணிட்டாங்க! ஒரு லெட்டரை முழுக்கப் படிச்சுப் பார்க்கப்
பொறுமை இல்லாதவனுக்கெல்லாம் சர்க்கார் உத்தியோகம். ஆயிரக் கணக்குல சம்பளம், போனஸ்,
மண்ணாங்கட்டி! . . வேலை கத்துக்குறதுக்கு முந்தி ஸ்டிரைக் பண்ணக்
கத்துக்குறானுக!” என்றார் தலைமை
எழுத்தார், ஆத்திரமாக.
இன்பரசு, குறுக்கிட்டு, “அய்யா!
நீங்கள் தேவையற்று எங்கள் தொழிற்
சங்கத்தை வம்புக்கு இழுக்கிறீர்கள்! எங்கள் வேலை நிறுத்த அறிக்கையைக் கேலி செய்கிறீர்கள். இது தகாது. . .” என்று தொடங்க, “அட, சும்மாருய்யா. வேலை நிறுத்தமாம், வேலை நிறுத்தம்! வேலையின்னு ஒண்ணு நடந்தாத்தேனேய்யா அதை
நிறுத்துறதுக்கு ?” என்றார் தலைமை
எழுத்தர்.
“அப்புறம், சார் ?” என்றான் ஜெயராமன்.
“இந்த வேலையில நம்ம செக்ஷனோட பங்கும் கொஞ்சம் இருக்குதான். ஆனா அது இப்ப இல்லே. பென்ஷன் செக்ஷன்ல முதல்ல டீல் பண்ணி, அவரு சம்பந்தப்பட்ட ரெகார்ட்ஸையெல்லாம் நமக்கு அனுப்பின பிற்பாடுதான் நம்ம வேலை தொடங்கணும். . . இத பாருய்யா, சுந்தரேசன்! நான் விவரமா ஒரு நோட் எழுதி வைக்கிறேன். ஒரு அரை மணி கழிச்சு வா. நானும் மொட்டையா, ‘ இது எங்களுக்கு இல்லை’ ன்னு எழுதினா மறுபடியும் நீ சுத்தரேசனாயி சுத்தோ சுத்துணு சுத்தணும்.
. . பாவம் நீ. போயிட்டு வாய்யா.”
“நல்ல கூத்து, சார்!” என்ற சுந்தரேசன் அங்கிருந்து அகன்றார்.
-------------------------------------------------------------------------------------------------------------
அப்போது
பியூன் சுந்தரேசன் அங்கு வந்தார்.
“என்னப்பா ? இன்னொரு தகராறு
பிடிச்ச பேப்பரா ?”
“இல்லே, சார். டில்லியிலேருந்து தந்தி வந்திருக்குது. ஏதோ பார்லிமெண்ட் கொஸ்டினாம். உங்க ஆஃபீசரு வராததால எங்க ஆஃபசரு வாங்கினாரு.
உங்களாண்ட குடுக்கச் சொன்னாரு.”
“சரி. குடுத்துட்டுப் போ.
அப்படியே, காலையில கொண்டு வந்தியே, நாலடியார் பென்ஷன் கேஸ், அந்தப் பேப்பருக்குப் பின்னாலேயே விவரமா ஒரு
நோட் போட்டு வெச்சிருக்கேன். அதை
எடுத்துட்டுப் போய்ப் பென்ஷன் செக்ஷன்ல குடு. . . இந்தா!”
சுந்தரேசன்
போனதன் பிறகு, தந்தியைப் படித்த தலைமை எழுத்தர், “இது லீவ்ல இருக்கிற தண்டபாணி டீல் பண்ற கேஸ்னா ?”
என்று கூறிய போது, சாப்பிடப் போயிருந்த சென்னகேசவலுவும், ஜெயராமனும், இன்பரசுவும் பிரிவுகுள் நுழைந்தார்கள்.
“ஏம்ப்பா, சென்னா! தண்டபாணி தன்னோட அலமாரிச் சாவியை உங்கிட்ட
குடுத்தானா, லீவ்ல போறப்போ ?”
யாருமே
அவர் பக்கம் பார்க்காமல் மும்முரமாக வேலை செய்வது போல் தலை குனிந்து
அமர்ந்திருந்தார்கள்.
“ம்! இப்ப எல்லார் கிட்டவும்
அவங்கவங்க பேப்பர்ஸே எக்கச் சக்கமா இருக்குமே! இதை வாங்கிக்க மாட்டாங்களே! எனக்குத்
தெரியுமே ? எல்லாம் என்னோட தலை
எழுத்து. நானே டீல் பண்றேன்.
தலைமை எழுத்தர்ங்கிற டெசிக்னேஷனைத் தலை
எழுத்தர்னுதான் மாத்தணும். . . அலமாரியில
ஒரு தட்டு முழுக்க விபூதிப் பொட்டலம். . . பெரிய சிவபக்தன்!”
இன்பரசு
குறுக்கிட்டு, “அவர் உண்மையான சிவனடியார் தான் அய்யா! அதனால்தான் பதில்களை அனுப்பாது ‘சிவனே’ என்று இருந்து வந்துள்ளர்!” என்றான்…..
தில்லியிலிருந்து
வந்திருந்த தந்திக்கு பதிலை எழுதி முடித்திருந்த தலைமை எழுத்தர்,”கந்தையா! இந்தாய்யா.
இந்த டெலிகிராமைக் கீழே டெலிக்ராஃப்
ஆஃபீசுக்குப் போய் உடனே அனுப்பிட்டு வா. . .” என்றார். கந்தையா அதை
வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.
அப்போது
கந்தையா தந்தியின் அலுவலக நகலைக் கொண்டு வந்து தலைமை எழுத்தரிடம் கொடுத்தான். ஜெயநாராயணி கைப்பையுடன் எழுந்து சென்றாள்.
“ஜெயா மேக்-அப் போட்டுக்கக்
கிளம்பிப் போயாச்சு. அப்ப சரியா
மணி மூணரைன்னு அர்த்தம். யாரும்
கெடியாரம் பார்க்கத் தேவை இல்லே. வாங்க.
காண்டீனுக்குப் போய்க் காப்பி
குடிச்சுட்டு வரலாம்,” என்று
சென்னகேசவலு கூற, எல்லாரும்
எழுந்தார்கள்.
அவர்கள்
மறைந்ததும், “நாலேகாலுக்கு முன்னாடி திரும்ப மாட்டாங்க.
அஞ்சரை வரைக்கும் ஆஃபீஸ்னு பேரு. ஆனா அஞ்சு மணிக்கே மொத்த ஆஃபீசும்
காலியாயிட்றது. ம்! .. . நீங்கல்லாம் அஞ்சுக்கே போயிடலாம்தான். நான் – ஹெட்க்ளார்க் – அப்படிப்
போயிட முடியுமா ?” என்றார் தலைமை
எழுத்தர்.
கந்தையா, “சார்! சில செக்ஷன்லே
எட்கிளார்ர்க்குங்க டெலிபோன் வந்தாப் பாத்துக்கன்னு சொல்லிட்டுப் பியூனைக்
காவலுக்கு வெச்சுட்டுப் போயிர்றாங்க, சார். யாராச்சும் அபீசருங்க
போன் பண்ணிக் கூப்பிட்டா, ‘இப்பதான்
சார் போனாரு’ அப்படின்னு சொல்லச்
சொல்லிட்டுப் போறாங்க. ஆனா.
. . ஹிஹி! பியூனுக்குக் காப்பி வாங்கிக் குடுத்துடுவாங்க.
. .” என்று இளித்தான்.
“யாருக்கும் பொறுப்பே இல்லேம்மா. குடுத்து வெச்ச கடனைத் திருப்பி வாங்கிக்கிறதுக்கு வர்றவங்க மாதிரிதான்
ஆஃபீசுக்கு வந்து சம்பளம் வாங்கிட்டுப் போறாங்க முக்கால்வாசிப் பேரு. . . “
சற்றுப்
பொறுத்து ஜெயநாராயணி பவுடர் மணம் கமழ வந்தாள்.
அதன் பிறகு அவளும் வீணாவும்
காண்டீனுக்குக் காப்பி குடிக்கப் புறப்பட்டுப் போனார்கள்.
தலைமை
எழுத்தர், “கந்தையா! இங்க வா. நீ ஒரு காப்பி
குடிச்சுட்டு, அப்படியே எனக்கும்
ஒரு காப்பி வாங்கிட்டு வா,” என்றபடி
கந்தையாவிடம் காசைக் கொடுக்க, அவன்
கிளம்பினான்.
அவன்
போன பிறகு, தனிமையில், ‘ம்! . . . என்னமோ
காப்பியும் டீயும் குடிக்கிறதுக்காகவே எல்லாரும் ஆஃபீசுக்கு வர்ற மாதிரி இருக்கு.
நானும் கெட்டுத்தான் போயிட்டேன்.
. அப்பனே! முருகா!’ என்று கொட்டாவி விட்டபடியே தலைமை எழுத்தர் தமது நாற்காலியில் சாய்ந்து
கொண்டார்.
என்ன கதை புரிஞ்சுதா?
நண்பர்: என்னமோ பிட்டு பிட்டா
கொஞ்சம் உருவி உருவி சொல்லிட்டே. முழு
கதை என்னன்னு புரியலை.
நான்: அதான் தொடங்கும்போதே
சொல்லிட்டேனே. கதை இல்லை. நாடகம். 30 பேஜ். அம்புட்டையும் இங்கே
பதிய முடியாது. லிங்க் தரேன்.
பார்த்துக்கோ.
இந்த பிட்டுகளையெல்லாம் மாலையாய் கோர்த்து தருகிறார் ஆசிரியர். படிப்பதற்கு ஒரு Y G நாடகம்
போல இருக்குது.
நண்பர்: இன்னும் ஒரு சந்தேகம்.
ஆபீசில் இவ்வளவு பேசறாங்களே எப்போ வேலை செய்வாங்க?
நான்: இது பொது மக்கள் வந்து
போகும் ஆபீஸ் அல்ல. யாரும் யாருக்கும் பதில் கூற வேண்டாம்.
நண்பர் : சரி அப்போ நான்
புறப்படறேன்.
நான்: இரும். ஆசிரியர் பற்றி தெரிஞ்சுக்க வேண்டாமா?
பின்னுரை
எல்லா அலுவகங்களிலும்
அக்கப்போர், கோள் மூட்டுதல் சோப்பு
போடுதல் என்பவை உண்டு.
பள்ளியில் நண்பர்களுக்கு பட்டப்பெயர் வைத்த விளையாட்டு
அலுவலகத்திலும் தொடரும்.
ஆபீஸ் ஸ்டேஷனரி வீட்டுக்கும் எடுத்துச் செல்லப்படும். .
கடைசியாக சர்க்கார் காரியம் முறைபோல நடக்கும். (பொறுப்பை தட்டிக் கழித்தல்)
கதை சிறுகதைகள்.காம் தளத்தில் இருந்து
எடுத்தது.
கதையின் சுட்டி இது தாண்டா ஆபீஸ்
எழுத்துப்பிழைகள் நிறைய உள்ளன. ஓரளவு சரியாக்கப்பட்டு என்னுடைய சேமிப்பில் உள்ள
ஜோதிர்லதா கதை பார்க்கவும்.
– “மகரந்தம்” மாத இதழ் – மார்ச், 2000
ஜோதிர்லதா கிரிஜா (ஜோதிர்லதா முக்தா கிரிஜா)
(மே 27,1936- ஏப்ரல் 18, 2024) எழுத்தாளர், நாவலாசிரியர்.
ஜோதிர்லதா கிரிஜாவுக்கு, சென்னையில், அஞ்சல் துறையில் சுருக்கெழுத்தாளர் பணி
கிடைத்தது. தொடர்ந்து பணியாற்றி
பதவி உயர்வு பெற்றார். நிறைய எழுத
வேண்டும் என்பதற்காகவே விருப்ப ஓய்வு பெற்று எழுத்துப் பணியில் ஈடுபட்டார்.
திருமணம் செய்து கொள்ளவில்லை.
25-க்கும் மேற்பட்ட
நாவல்கள், 650-க்கும் மேற்பட்ட
சிறுகதைகள், 60-க்கும் மேற்பட்ட
குறுநாவல்கள், 50-க்கும் மேற்பட்ட
கட்டுரைகள், மற்றும் பல நாடகங்களை
ஜோதிர்லதா கிரிஜா எழுதியுள்ளார்.
முப்பதுக்கும் மேற்பட்ட
சிறுகதைகளை இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளான ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’,
‘ஃபெமினா’, ‘ஈவ்ஸ் வீக்லி’, ‘யுவர் ஃபாமிலி’, ‘ஃபிக்க்ஷன் ரிவ்யூ’, ‘சண்டே எக்ஸ்பிரஸ்’, ‘விமன்ஸ் இரா’, ‘வீக் எண்ட்’ ஆகியவற்றில் எழுதியுள்ளார்.
P S
என்னுடைய
பாஸ் பெயரில் கதையில் ஒரு பாத்திரம்.
கண்டு பிடித்தீர்களா?
தெரியவில்லையா… இதோ
ஜெய நாராயணி: பெற்றோர் வைத்த பெயர். பள்ளியில் இடையில் ஒரு பூரணத்தை வைத்து ஜெய பூர்ண நாராயணி ஆக்கிவிட்டார்கள். சிலர் நா பாவின் குறிஞ்சிமலர் நாயகி ‘பூரணி’ என்றும் விளிப்பர்.
செய்திகள் அருமை...
பதிலளிநீக்கு