வணக்கம். கடந்த 17-01-2025 அன்று திரு ராய செல்லப்பா நடத்தி, நாங்கள் பங்கு கொண்டு, எங்கள் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து புத்தகமாக்கிய விவரங்களை முன்னர் அறிந்திருப்பீர்கள். விவரங்கள் வியாழனிலும் தருகிறேன்.
செல்லப்பா ஸாரின் அன்னையின் நினைவாக அவர் பெயரில் நடத்தப்படும் முதல் போட்டியில் முதலில் 19 பேர்களுக்கு தலா 5,000 ருபாய் பரிசு அறிவித்திருந்தார். ரூபாய் பெரிதல்ல, பங்குபெறுதலும், நம் படைப்பு தேர்ந்தெடுக்கப்படுவதுமே பெருமை.
வந்திருந்த 355 கதைகளில் முதல் 10 தேர்ந்தெடுத்தபின் இன்னும் ஏராளமான கதைகள் நன்றாக இருப்பதாக அவர் மனதில் பட, அங்கு அவர் எடுத்த முடிவுதான் ஆச்சர்யம். அவர் குடும்பமும் அதற்கு சம்மதம் தெரிவித்தது. அதாவது மேலும் 25 கதைகளை, - மேலும் பத்து என்று கூட அவர் முடிவு செய்திருக்கலாம்... - ஆனால் 25 கதைகள் என்று சொல்லி தேர்ந்தேடுத்தார். அதில் என் கதையும் இடம்பெற்றது. நான் போட்டி என்று கலந்து கொண்டது இதுவே முதல் முறை. அதில் என் படைப்பு தெரிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.
புத்தக வெளியீட்டு விழாவில் நேரில் அழைத்து கௌரவித்தார்கள். இந்தத் தெரிவில் முதல் தெரிவு 10, இரண்டாம் தெரிவு 25 ஆகமொத்தம் 35 கதைகள். இவற்றைப் படிக்க ஆவலாக இருப்பீர்கள். குவிகம் பதிப்பக வெளியீடான இந்த இரண்டு புத்தகங்களின் விவரம் கீழே தந்திருக்கிறேன். வாங்க விரும்புபவர்கள் ஆன்லைனிலும் வாங்கலாம்.
ஜீவி ஸார் கதைத் தலைப்பே வசீகரம். "மகாராணி அவனை ஆளுவாள்". உஷாதீபன் அவர்கள் கதையை மாலன் சிலாகித்தார். பரிவை சே குமார் கதை இடம்பெற்றுள்ளது. இவற்றைத் தவிர பழம்பெரும் எழுத்தாளர்கள் அகிலன், நா பா அவர்களின் வாரிசுகள் எழுதிய கதைகள் இருக்கின்றன. இன்னும் கல்கி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வென்ற ஒரு இளம்பெண்ணின் கதையும் அரங்கில் பாராட்டைப் பெற்றது.
பரிசு பெற்ற என் படைப்பை இன்று செவ்வாய் கதையாக பகிர்கிறேன். மிகுந்த எதிர்பார்ப்புடன் எதை எதிர்பார்த்தாலும் ஏமாற்றம்தான் கிடைக்கும். எனவே இந்த படைப்பை 'ஏதோ பரிசாமே... தேர்ந்தெடுக்கப்பட்ட கதையாமே' என்றெல்லாம் எதிர்பார்ப்பு ஏதுமின்றி அணுகுமாறு வேண்டி, கேட்டுக் கொள்கிறேன்!
மார்ட்டின் வாத்யார்.
பா. ஸ்ரீராம்
***************************************
மார்ட்டின் வாத்தியார் காலமாகி விட்டார்.
உள்ளூரில் அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பதால் சைமன் ஏற்கனவே வந்திருந்தான். உதவி கலெக்டராயிருந்த பொன்னுதுரை 'இதோ வருகிறேன் அதோ வருகிறேன்' என்று இதுவரை வரவில்லை. சபாவுக்கும், விக்டருக்கும், தானே சொல்லி இருப்பதாகச் சைமன் சொன்னான். அவர்களும் வந்து விட்டார்கள்.
இளங்கோ முன்வந்து, என்னைத் தோளணைத்து உள்ளே அழைத்துச் சென்றான். கண்கலங்கி இருந்தான். கோவிலிலிருந்து விஷயம் கேள்விப்பட்டு அப்படியே நேராக வந்து விட்டான் என்பதை அவன் கலர் வேஷ்டியும், விபூதிப் பட்டையும் சொல்லியது. இளங்கோ, ஸாருக்கு தத்துப் பிள்ளை மாதிரி. விளக்கில்லா வீட்டில், காய்கறி விற்று மகனைப் படிக்க வைத்துக் கொண்டிருந்த அம்மாவுடன் குடியிருந்து, படிக்க முடியாமல் கஷ்டப்படுவதைப் பார்த்து மார்ட்டின் ஸார், அவனைத் தன் வீட்டில் முன்னறையைக் கொடுத்து தங்க வைத்துப் படிக்க வைத்திருந்தார். இப்போது டெலிபோன் இலாகாவில் நல்ல வேலை. ஸாருக்கு ஏதாவது ஒன்றென்றால் உடனே ஓடி வந்து விடுவான்.
கொஞ்ச நேரம் அவர் முகத்தைப் பார்த்து நின்று விட்டு முகத்தைத் துடைத்தபடி வெளியே வந்தேன்.
உறவினர்கள் சூழ்ந்திருக்க அவர் மாணவர்களாகிய நாங்கள் சற்று தூரத்தில் நின்றிருந்தோம். எங்களுக்குத் தெரிந்த இன்னும் சில மாணவர்களும் வந்து சென்ற வண்ணம் இருந்தார்கள்.
"உட்காருங்க.. ஏன் நிக்கறீங்க அங்கிள்.." சிறு பெண் ஒருத்தி நாற்காலியைக் காட்டினாள்.
உட்காரவில்லை. ஏனோ உட்கார எங்கள் யாருக்குமே தோன்றவில்லை.
வயதானவர், எந்த நேரமும் என்னவும் நேரலாம் என்று தெரிந்தும், அவர் இல்லாமல் போவார் என்று என்னால் நினைக்க முடியவில்லை.
சிறுவயதில் என் பிரமிப்பு அவர் .
சில சமயங்களில் சில பேரைப் பார்த்த உடனே காரணம் இல்லாமல் பிடித்துப் போகும். அந்த வகையில் தான் இவர் எனக்கு.
அவர் எனக்கு வாத்தியாராக இருந்த காரணத்தாலும், எனக்குப் படிப்பு சரியாக வராத காரணத்தாலும் அப்போது தூரமாகிப் போனோம்.
சில சமயங்களில், நாம் கிடைக்காது என்று நினைப்பது எதிர்பாரா நேரத்தில் கைக்குக் கிடைத்துவிடும். அது போலவே, கிடைத்தது நிலைக்கும் என்று நினைப்பது 'சட்' என காணாமல் போகும். இரண்டுமே எனக்கு இவர் விஷயத்தில் நடந்தது.
"என்னை அடிக்கடி வந்து பார்ப்பார்" என்றான் சைமன்.
"போன வாரம் கூடப் பூக்காரத்தெரு பக்கம் ஒரு வேலை இருந்தது. வந்த போது ஸாரைப் பார்த்துட்டுதான் போனேன்" என்றான் சபா. அவன் விழிகள் நிறைந்திருந்தன.
நாங்கள் எல்லோரும் ஒரு வகுப்பு மாணவர்கள். எங்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை வகுப்பு ஆசிரியராகவும், வரலாறு புவியியல் ஆசிரியராகவும் இருந்தவர் மார்ட்டின்.
நாங்களே ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தோம். ஸார் இவ்வளவு நாள் இருந்ததே பெரிது. ஆனால் கடைசி வரை சுசுறுப்புடன் இருந்தார். எண்பதைத் தாண்டியவர் என்று சொல்ல முடியாத நடை. வாக்கிங் ஸ்டிக் கூட கிடையாது. உயரமான அந்த உருவம் முதுகு வளையாமல் நேராகவே நடந்து வரும்.
என்ன, முன்பு இளமையில் இருந்த வேகம் மட்டுப் பட்டிருந்தது, அவ்வளவுதான்.
இப்போதும் அவ்வப்போது எங்களுக்குத் தேவையான சமயங்களில் எல்லாம் அறிவுரை, யோசனை சொல்லிக் கொண்டிருந்தார். அவர் வார்த்தைகளை நாங்களும் மதித்தோம். எங்களுக்கு என்றும் அவர் மார்ட்டின் வாத்தியார்தான்.
அப்போது உயரமான மிடுக்கான உருவம். இலேசாக முறுக்கிய மீசையுடன் ராணுவ வீரன் போல இருப்பார். ஆனால் அவரைப் பார்த்தால் பயம் தோன்றாது. கண்களிலும், இதழ்களிலும் புன்னகை தயாராய் பூக்கக் காத்திருக்கும். வேகமாக வந்தாலும் அவர் உருவத்துக்குச் சைக்கிள் சாதாரண வேகத்தில் பறந்து வருவது போலவே இருக்கும். TVS 50 வாங்கி இருந்த அமல்ராஜா அதை மெதுவாகத்தான் ஓட்டி வருவார். இவர் வேகமாக சைக்கிளில் வந்து திரும்புவதே அழகாய் இருக்கும்.
சில வகுப்புகளுக்கொருமுறை பாடம் எடுக்காமல் கதை சொல்வார். அவர் படித்த கதைகள் என்பார். அதைக் கேட்கும்போது உணர்ச்சிபூர்வமாக இருக்கும். கந்தனுக்கு உதவி செய்த நாய் பற்றிய கதை ரொம்ப பிரபலம்.
இவரின் அணுகு முறைகளைக் கவனித்திருந்த ஃபாதர், ஏதாவது வகுப்புக்கு ஆசிரியர் செல்ல முடியாத நிலைமை என்றால், இவரை சப்ஸ்டிடியூட்டுக்காக அனுப்பி விடுவார். மாணவர்களுக்குப் பிடித்த வாத்யார்.
நன்றாகப் படிக்கும் மாணவர்கள் அவருக்குச் செல்லம்தான். ஏனோ எனக்குச் சரியாய் படிப்பு வரவில்லை. அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு ஹீரோவைப் பார்ப்பது போல நின்று பார்ப்பேன். என்னிடமும், 'நன்றாய்ப் படி.. படித்தால்தான் முன்னுக்கு வரலாம்' என்று சொல்லி இருக்கிறார்தான்.
ஏனோ எனக்கு அவர் நன்றாய்ப் படிக்கும் மாணவர்களிடம் பேசுவது போல என்னிடம் பேசுவதில்லை என்று ஏக்கமாக இருக்கும். கேம்ஸ் உட்பட எல்லா சப்ஜெக்ட் பற்றியும் பேசுவார், சொல்லிக் கொடுப்பார். படிப்பைப் பற்றிப் பேசுவதால் நெருங்கிப் பேசவும் தயக்கமாய் இருக்கும். எனக்கு வராத விஷயம் படிப்பு.
பின்னாட்களில் நான் சைக்கிள் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன்.
மார்ட்டின் ஸார் பூக்காரத்தெரு வீட்டிலிருந்து மாறி, நாஞ்சிக்கோட்டை ரோடில் ரொம்பத் தள்ளி, கொஞ்சம் தனியான இடத்தில் 'சீப்'பாக இருக்கிறது என்று வீடு கட்டிக் கொண்டு போயிருந்தார்.
முதல் முறை அவர் தாண்டிச் செல்லும் போது வேகமாக எழுந்து மரியாதை செலுத்தினேன். கேள்விக்குறியுடன் பார்த்தவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். சட்டென ஞாபகம் வந்து விட்டது அவருக்கு.
அவர் சம்மதம் கேட்டு, முதலாளியிடம் சொல்லி, அவரை சைக்கிளில் வீட்டில் விட்டு விட்டு வந்த அந்த நாள் எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது.
பொன்னுதுரையை முதன்மையாகச் சொல்லி, எங்கள் வகுப்பு சைமன் உள்ளிட்ட வேறு சில மாணவர்களையும் சொல்லி, 'நான் மட்டும் இப்படி ஆகி விட்டதாக' வருத்தப்படுவார். சமயங்களில் சைமன் அவரை 'பைக்'கில் கொண்டு வந்து விட்டுப் போவான். அவரால் சைக்கிள் ஓட்ட முடியாத நிலைமை. ஒதுக்குப்புறமாகச் சென்று விட்டதால் பஸ் வசதியும் கிடையாது.
இது தெரிந்ததும், நான் அவரை தூரத்தில் கண்டதுமே தயாராகி விடுவேன். இருப்பதிலேயே நல்ல சைக்கிளை எடுத்து, அவரை உட்கார வைத்து, வீட்டில் கொண்டு விட்டு வருவேன். அவருக்கென்றே பத்தாம் நம்பர் சைக்கிளை தயார் செய்து வைத்திருந்தேன். அவர்கள் வீட்டிலும் என்னைத் தெரிந்து வைத்திருந்தார்கள்.
பேசிக்கொண்டே வருவார். பேசிப் பேசி என்னை பேங்க்குக்கு அழைத்துச் சென்று கடன் வாங்கிக் கொடுத்தார்.
ஷுரிட்டி கையெழுத்து போட்டார். சைக்கிள் வாங்க வைத்தார். தனியாகக் கடை வைக்கத் தைரியம் கொடுத்து வைக்கச் செய்தார்.
"மார்ட்டின் சைக்கிள் மார்ட்" உதயமானது. முதல் நாள், 'அவர் நோட்' டில் எப்படி எழுதுவது, என்று அவர் கையாலேயே எழுதிக் கொடுத்தார். சிறுவர்களுக்கு இரக்கம் காட்டச் சொன்னார். நேர்மையாக இருக்கச் சொன்னார். ஒரு சைக்கிள் இன்று பத்து சைக்கிள்களுடன் நிற்கிறது. இரண்டு பேர்களை வேலைக்கு வைத்திருக்கிறேன்.
பின்னர்தான் தெரிந்தது, அவர் எனக்காய் விசேஷ அக்கறை எடுத்து, வெளியில் வருவது போல வந்து, என்னை சைக்கிள் ஓட்ட வைத்திருக்கிறார் என்று. என்னுடைய தாழ்வு மனப்பான்மை போனது. நானும் முதலாளி ஆனேன்.
சைமன், அவர் தன் அலுவலகம் வந்து கேட்ட உதவிகளை எல்லாம் செய்து கொடுத்ததாய் சொல்லிக் கொண்டிருந்தான். விக்டர், அவர் சொன்ன அறிவுரைகளை நினைவு படுத்திக் கொண்டிருந்தான். நான் ஒன்றும் பேசவில்லை.
ஸார் இவர்களைப் பற்றி என்னிடம் பேசும் போதெல்லாம் நான் கண்களைத் தாழ்த்தி விடுவேன்.
இவர்களுக்கெல்லாம் அவர் பள்ளியில் மட்டும்தான் வாத்தியார். எனக்கு அவர் பள்ளியில் மட்டுமல்ல, வாழ்விலும் கடைசி வரை ஆசிரியராய், வழிகாட்டியாய் இருந்தார். என்னை நிமிர்ந்து நிற்கச் செய்தார்.
"சைமன், பொன்னுதுரையை எல்லாம் போய் பார்த்துட்டு வர்றேன்னு நான் சொன்னா, நீ உன்னை ரொம்ப தாழ்த்திக்காதே.... எனக்கும் அவர்களிடம் வேலை இருந்தது.. சென்று வந்தேன்.. ஆனால் நீயோ எனக்கு நான் கேட்காமலேயே சைக்கிளில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டு உதவி செய்கிறாய்"
"ஸார்... இதப் போய்...." குறுகிப் போனேன்.
"தள்ளித் தள்ளிப் போகாதே... தைரியமா பேசு... அவங்க தோள்ல கைபோடு... நீங்க எல்லாம் நாடார் பங்களால ஒண்ணா மாங்கா அடிச்சு மாட்டிக்கிட்ட ஃப்ரெண்ட்ஸ்தானேடா... இப்போ என்னடா தயக்கம்... அவங்க வேலை அவங்களோட.. ப்ரெண்ட்ஸுக்குள்ள இதெல்லாம் பார்க்கக் கூடாது.. 'நீதான் ஒதுங்கி ஒதுங்கிப் போறே' ங்கறாங்க சைமனும், இளங்கோவும்..."
தயக்கமாய்த் தலையாட்டுவேன்.
"இளங்கோவைப் பார்... அவனுக்குத் தன்னையும் தெரியும், என்னையும் தெரியும்.. மரியாதையை விடறதில்ல... எதிலும் யாரையும் விட்டுக் கொடுக்கறதும் இல்ல.."
"எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் ஸார்.. உங்க உயரம், உங்க மீசை, உங்க சிரிப்பு, உங்க பேச்சு.." நான் என்னைப் பற்றிச் சொல்ல விரும்பினேன்.
"எனக்குத் தெரியும் மார்ட்டின்" என்றார் அன்பாய்.
ஆம். என் பெயரும் மார்ட்டின்தான்.
"நீ தூரத்திலிருந்தே என்னை பார்த்துக் கொண்டிருந்து விட்டு நகர்வது எனக்குத் தெரியாதுன்னா நினைக்கறே?"
இப்போதும் கண்களில் நீர் கோர்த்தது.
அதோ.. மார்ட்டின் கிளம்பிக் கொண்டிருக்கிறார். இனி எனக்கு இங்கு வர வேலையிருக்காது. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டேன். சர்ச்சுக்குச் சென்று விட்டு கல்லறைக்குப் போகவேண்டும்.
இனி இங்கு எனக்கென்ன வேலை... இனி இங்கே வரமுடியாது.. ஒருமுறை அவர் வாழ்ந்த வீட்டைத் திரும்பிப் பார்த்துக் கொண்டேன்.
விலகி மெல்ல வெளியே வந்தேன்.
கைகளை யாரோ பற்றினார்கள்.
அருள். மார்ட்டின் ஸாரின் பேரன். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டிருப்பவன். சாரை வீட்டில் இறக்கி விடும் போது சில சமயம் பார்த்திருக்கிறேன். அவனைப் பார்க்கும் நேரம், அவர் பார்வையில் ஒளி சற்று மங்கிப் போகும். அவனை அழைத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்வார். அவர் கைகள் அவன் தலை முடியை ஆதுரமாகக் கோதி விடும்.
எங்களைக் கண்டதும், வேலையாள் கைகளை மீறிக்கொண்டு அவன் ஓடி வருவான்.
எங்களை என்பதை விட என்னை.
என்னை என்பதைவிட என் சைக்கிளை...
"உன்கிட்ட தாம்பா அவன் கொஞ்சம் நல்லா பேசறான்" மார்ட்டின் ஸார் ஒரு முறை சொன்னது மனதில் ஒலித்தது.
"இனிமே இங்க வர மாட்டீங்களா அங்கிள்"
"ஏன்பா..? வர்றேன்... ஒன்னைப் பார்க்க வர்றேன்"
"சைக்கிள் ஓட்ட கத்து தர்றீங்களா அங்கிள்..".
அவன் கைகளைப் பற்றித் தலையைக் கலைத்து, "கண்டிப்பா வர்றேன் அருளு" என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன்.
********************************************************
பின்குறிப்பு :
புத்தகத்தில் படங்கள் இல்லை. இங்கிருக்கும் படங்கள் என்னால் இங்கு இணைக்கப்பட்டவை - ஸ்ரீராம்
நீங்களே இந்தக் கதையை எதிர்பார்ப்புகள் இன்றி வாசிக்க சொல்கிறீர்கள். கதை நிகழ்ந்தது, நிகழ்பவை கலந்து சீரான நடையில் செல்கிறது. துவக்கம் நன்று. முடிவு தான் வேறு மாதிரி இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. காரணம் மார்ட்டின் சார் குடும்பத்தை பற்றி கதையில் ஒன்றும் சொல்லாமல் கடைசியில் நாயகன் படம் மாதிரி ஒரு பையனை கொண்டு வந்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குஅவருடைய சைக்கிள் படிப்படியாக உபயோகம் அற்றுப் போன கதையையும் இணைந்திருந்தால் செண்டிமெண்ட் கதைக்கு கூடுதல் வலு கொடுத்திருக்கலாம் என்பது எனது கருத்து.
பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். வாரம் ஒரு கதை இது போல் செவ்வாய் அன்று பதிவிடலாம்.
Jayakumar
"அந்தப் படம் ரொம்ப சூப்பரா இருக்கு" என்னும் பெரும்பான்மைக் கருத்துடன் படம் பார்க்கச் செல்வோர் மனதில் பார்த்ததும் 'அப்படி ஒண்ணும் பெரிசா படத்துல இல்லையே' என்று கருத்து தோன்றும். அந்த பயத்துக்காக சொன்னேன்!
நீக்குநான் எழுத நினைத்திருந்த கரு வேறு. இது திடீரென தோன்றியது. போட்டியின் கடைசி நாளுக்கு முதல் நாள் நான் படித்த பள்ளியின் முன்னாள் மாணவர் - என் பேட்ச்மேட் - எழுதிய புத்தகம் ஒன்று கைக்கு கிடைத்தது. மனம் முழுக்க பள்ளி நாட்களில் திளைத்திருக்க, அந்த ஆசிரியர்களின் பெயர்களிலேயே கேரக்டர்கள் அமைத்து திடீரென தோன்றிய கரு! கரு முழுக்க கற்பனைதான். அது போலவே முடிவும் சட்டென அப்போது தோன்றியதுதான்!
எப்படியோ இடம் கிடைத்து விட்டது!
//வாரம் ஒரு கதை இது போல் செவ்வாய் அன்று பதிவிடலாம். //
நீக்குஅது இயலாது. கூடாது. இதை வெளியிடவே நான் செல்லப்பா ஸாரிடம் அனுமதி வாங்கி கொண்டேன்.
அன்பின் ஸ்ரீ ராம் என்றும் வளமுடன் வாழப் பிரார்த்தனைகள். மார்ட்டின் சார் கதை உணர்ச்சிகள் படிந்த ஒரு அன்பு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் ஆன புனுதம். மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.வெகு யதார்த்தமான கதை. சைக்கிள் கடையில் சைக்கிள்பழகும் கண்க்கு இப்பவும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.. மார்ட்டின் சாரின் பேரன் சைக்கிள் புராணத்தை முடித்து வைக்கிறான். மிக அருமை மா. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி அம்மா. நான் தஞ்சையில் ஹவுசிங் யூனிட்டில் இருந்தபோது பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு படிக்கும் காலங்களில் சசிகுமார் என்கிற சைக்கிள்கடை நண்பன் ஒருவன் இருந்தான்.
நீக்குஅவனிடமிருந்து சைக்கிள் எடுத்து ஓட்டப் பழகினேன். அப்படியே அவன் நண்பனானான். அவன் கடையில் அமர்ந்திருப்பேன். சேர்ந்து சினிமா எல்லாம் செல்வோம்.
நெகிழ்ந்தேன் ஸ்ரீராம். அருமையான கதை.
பதிலளிநீக்குநன்றி சகோ..
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கமும், நன்றியும்.
நீக்குசிறப்பான கதை. பரிசுக்கு மிகவும் தகுதியான கதை. படிப்போருக்கு இறுதியில் உண்டாகும் தாக்கம் கதைக்கு சிறப்பைக் கூட்டுகிறது.
பதிலளிநீக்குநன்றி ஜவர்லால்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவிபரங்கள் அறிந்து கொண்டேன். முதலில் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே.
தாங்கள் எழுதி பரிசு பெற்ற இந்த கதை நன்றாக உள்ளது. ஆரம்பமும் முடிவும் மனதை நெகிழ்த்தியது. மார்டின் சார் மறையவில்லை. நம் மனதில் மனதில் என்றும் வாழ்கிறார். அவரின் நல்ல மனதிற்கு அவரின் பேரனும் தான் வாழும் வாழ்க்கையில் உடல் குறைகளை மறந்து சந்தோஷங்களைக் காணப் போகிறான்.
நல்ல முடிவு. மிக அருமையாக எழுதி உள்ளீர்கள். மீண்டும் உங்களுக்கு என் மனம் நிறைந்த மகிழ்வுடனான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலா அக்கா.. சாதாரணமாகவே நீங்கள் பாராட்டுவதில் குறை வைப்பதில்லை. இன்றும்!
நீக்குஉண்மை கமலா அக்கா அளவிற்கு யாராலும் பாராட்ட இயலுமா என்ன
நீக்குவணக்கம் அனு ப்ரேம் சகோதரி.
நீக்குதங்களின் அன்பான பாராட்டுதலுக்கு மிக்க நன்றி சகோதரி. உங்களின் கருத்து மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. நீங்கள் என் பதிவுக்கு வந்து கருத்து தெரிவித்திருப்பதற்கு நான் இங்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதைக்கேற்றபடி பொருத்தமாக படங்களை இணைத்திருப்பதும் சிறப்பாக உள்ளது. மறக்கவியலாத கதை. வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குஇருப்பினும் நான் நினைத்த வண்ணம் படங்கள் அமையவில்லை. தென் இந்திய வயதானவர் என்றாலே AI தாடி கொடுத்து விடுகிறது. நோ தாடி நோ தாடி என்று அலறினாலும் தாடியுடன்தான் கொடுக்கிறது!
லுங்கி கைலி எதுவுமே அதற்கு விளங்கவில்லை! ரோட்ஸைட் சைக்கிள் கடை என்றால் நம்மூர் மாதிரி மரத்தடி அக்கடைகளைக் காட்டுவதில்லை.
கிடைத்த படத்தில் ஏதோ சுமாரான படங்களை இணைத்திருக்கிறேன்.
வணக்கம் சகோதரரே
நீக்குவயதானவருக்குரிய அந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தின் சாயல் நன்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. இரண்டாவதாக வளர்ந்த பிறகு அறிமுகம் ஆகும் அந்த மாணவரின் வசதியற்ற தன்மையை காட்டும் வகையில் அவரின் எளிதான தோற்றம்.
இரண்டாவது படத்தில், மார்ட்டின் வாத்தியார் காட்டும் பாதையில் நடந்து சென்று மாணவர் தன் வாழ்வில் ஒரு பிடிமானம் கண்ட போதினில் வந்த உடை மாற்றம். நீங்கள் பகிர்ந்த இரண்டு படங்களிலேயே கதையின் மொத்த சாராம்சத்தை கொண்டு வந்து நிறுத்துகிறது. படங்களை ரசித்தேன்.
அருமையாகத்தான் இந்த படங்களை தேர்வு செய்துள்ளீர்கள். இதில் குறையேதும் இல்லை. பாராட்டுக்கள் நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குநன்றி கமலா அக்கா.. என் நோக்கத்தைப் புரிந்து கொண்டீர்கள்.
இன்னொரு ரகசியம். மீட்டாவில் எப்போதும் ஒரே முகம் கிடைக்காது, மாறிக்கொண்டே இருக்கும். எனவேதான் அடுத்த படத்தில் இருவரின் முகமும் தெரியாதபடி முதுகைக் காண்பித்தேன்!!!
ஹா ஹா ஹா. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
நீக்குஎவரானாலும் ஒரு ஆசிரியரிடம் விசேஷ மரியாதை, பக்தி, நட்பு, உரிமை இவற்றில் ஒன்றிரண்டு இருக்க வாய்ப்பு அதிகம்.
பதிலளிநீக்குகதை படிப்பவருக்கு அந்த உணர்ச்சியைத் தூண்டிவிடுகிற, நினைவு படுத்துகிற கதையாக இருப்பது சிறப்பு.
நன்றி.. நன்றி.
நீக்குஇந்தக் காலத்தில் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு கிண்டலும், விரோதமும், கோபமும்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
முதலில் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள், ஸ்ரீராம்!
பதிலளிநீக்குஇன்னும் போட்டிகளில் (வேறு போட்டிகளிலும்) பங்கெடுத்து (இந்த வருடமும் செல்லப்பா சார் போட்டி அறிவிப்பார். அவர் தளத்திலும் சொல்லியிருந்தார்.) வெற்றி பெற வேண்டும் என்ற என் அவாவைப் பூர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் அதற்கும் வாழ்த்துகள்!
கீதா
நன்றி கீதா... ஆனால் யோசனை எனக்கு மட்டும்தானா? உங்களுக்கெல்லாம் இல்லையா? குறிப்பாக என்னைவிட சிறந்த கதைகள் எழுதும் உங்களுக்கு இல்லையா? நீங்களும் பங்கெடுக்க வேண்டுகிறேன்.
நீக்குஇளங்கோ, ஸாருக்கு தத்துப் பிள்ளை மாதிரி.//
பதிலளிநீக்குஇளங்கோ தத்துப் பிள்ளையாக இருந்தாலும், கதையின் 'நான்' நாயகனின் மீதும் மார்ட்டின் சாருக்கு ஓரிடம் இருந்திருக்கிறது என்பது கதையில் பின்னில் வருவதில் தெரிகிறது.
//சில சமயங்களில், நாம் கிடைக்காது என்று நினைப்பது எதிர்பாரா நேரத்தில் கைக்குக் கிடைத்துவிடும். அது போலவே, கிடைத்தது நிலைக்கும் என்று நினைப்பது 'சட்' என காணாமல் போகும். இரண்டுமே எனக்கு இவர் விஷயத்தில் நடந்தது.//
யதார்த்தமான மனதைத் தொட்ட வரிகள்.
நல்ல வாத்தியாருக்கும் மாணவனுக்குமான நெருக்கம், சில சமயங்களில் படிக்கும் போது தெரியாமல் போகும். பள்ளியை விட்டோ, கல்லூரியை விட்டோ வெளியில் வரும் போது அது வெளிப்படும் போது, அந்த நாட்களிய இழந்து விட்டோமோ என்றும் கூடத் தோன்றும்.
கீதா
நன்றி கீதா. அந்நாட்களில் ஆசிரியர்களிடம் சில மாணவர்கள் உரிமையுடன் பழகியதை பார்த்திருக்கிறேன். எனக்கு ஆசிரியர்கள் என்றால் எப்போதுமே பயம்!
நீக்குஹாஹா எனக்கும். நானும் உங்க செட்டாக இருந்தவள்தன!!
நீக்குகீதா
:))
நீக்குவணக்கம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குபள்ளிக் காலத்தில், நன்றாகப் படிக்கும் மாணவர்களிடம் தான் ஆசிரியர்கள் பேசுவார்கள், பழகுவார்கள் என்று எல்லோரையும் போலவே இந்தக் கதையின் நாயகனும் நினைத்திருக்கிறார். அந்த எண்ணத்தை மாற்றி படிக்காத மாணவனையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவனுடன் பேசி பழகி அவனது தலைவிதியையே மாற்றுவார்கள் ஆசிரியர் என்று உணர்வு பூர்வமான கதையை சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.
மார்ட்டின் சாருடன் முடியாமல் உங்கள் சைக்கிள் பயணம் அவரது பேரனுடன் துவங்கி இருப்பதாக (கதையை) முடித்திருப்பதும் மனதிற்கு இதத்தைக் கொடுக்கிறது. எளிமையான கதை மனதில் ஒட்டிக் கொள்ளுகிறது. மறுபடியும் பாராட்டுகள். இனி செவ்வாய் தோறும் உங்கள் கதையைப் படிக்க காத்திருக்கிறேன்.
அன்புடன் ரஞ்சனி
நன்றி ரஞ்சனி அக்கா.
நீக்கு//இனி செவ்வாய் தோறும் உங்கள் கதையைப் படிக்க காத்திருக்கிறேன்.//
ஆஹா.. அவ்வளவு போட்டிகள் நடக்க வேண்டும். அவற்றில் என் படைப்பு இடம் பிடிக்க வேண்டும். சாத்தியம்தானா?
மார்ட்டினின் தாழ்வுமனப்பான்மை அவனை தள்ளி நிற்க வைத்தாலும், மார்ட்டின் வாத்தியாரின் உதவியும், அவர் மற்ற நண்பர்கள் அவனை ஏற்பதையும் சொல்லும் இடம் எல்லாம் நல்லாருக்கு.
பதிலளிநீக்கு'நான்' பெயரைச் சொல்லாமல் அதன் பின் ஆசிரியர் 'தெரியும் மார்ட்டின்' என்று சொல்லும் இடம்....இப்படியான கதை அமைப்பு என்னைக் கவரும் ஒன்றும். அல்லது நான் நானாகவே செல்வதும் கூட ஆனால் இந்தக் கதைக்கு அது ரொம்ப முக்கியமாகிப் போகிறது!
முடிவு மனதைத்தொட்டது. உணர்வுபூர்வமான ஒன்று.
தாத்தாவுக்கும் அருளுக்கும் ஆன அந்த பந்தம், மார்ட்டினுக்கும் மார்ட்டின் வாத்தியாருக்குமான அந்த இலை மறை காயாக இருந்த அந்த உணர்வு பந்தம் மீண்டும் மார்ட்டின் வழி புத்துயிர்ப்பெறுவது ஒன்று நேரடியாக மற்றொன்று மறைமுகமாக!
கீதா
ஆம். மற்ற நண்பர்கள் இவனிடம் அந்தஸ்து பார்த்து பழகவில்லை என்பதை சொல்ல முயன்றிருக்கிறேன்.
நீக்கு// 'தெரியும் மார்ட்டின்' என்று சொல்லும் இடம்....//
அது கதை மாந்தர்களுடன் நம்மைக் கொஞ்சம் ஒன்றை வைக்கும் என்று தோன்றியது!
தாத்தாவுக்கும் இவனுக்கும் ஒரே பெயர் என்பது அந்தச் சிறுவன் மனதில் பதிந்திருக்குமா!
படிப்பில் சுட்டியாக இல்லை என்றால் ஆசிரியருடன் பழகும் வாய்ப்பு குறைவாகலாம் சில சமயங்களில்.
பதிலளிநீக்குஎன் பள்ளி நினைவு எட்டிப் பார்த்தது. கணக்கில் நான் ரொம்பவே சுமார் என்றால் தேர்ச்சி பெற முடியாத தருணங்களும் இருந்தன. ஆனால் அதே ஆசிரியைதான் - மேரி லீலா - என்னைப் புரிந்து கொண்டு, உன் உணர்வுகளைப் புரிந்து கொண்டு என் குடும்பச் சூழலைப் புரிந்து கொண்டு என்னை உளவியல் ரீதியாகக் கையாண்டவர்.
பள்ளியை விட்டு வந்து கல்லூரியில் சேர்ந்த பிறகும் சந்தித்ததுண்டு ஆனால் அதன் பின் வாழ்க்கை திசை திரும்பிய போது எல்லாமே மாறி அவரைச் சந்திக்க முடியாமல் போனது. கல்லூரியில் என்னைக் கையாண்ட ஆசிரியையும்.
கதையில் இப்பகுதி போன்று வருவது மனதை ஈர்த்தது.
கீதா
நம் அனுபவங்களின் ஏதோ ஒரு பகுதியை, நாம் படிக்கும் கதை தொட்டுச் செல்லும்போது, அந்தக் கதையுடன் ஒரு நெருக்கம் வருகிறது. நம் மனதுக்கு அருகில் வருகிறது.
நீக்குஉண்மை ஸ்ரீராம்.
நீக்குகீதா
கதை மிக இயல்பாகச் செல்கிறது. வித்தியாசமான களம். பரிசு பெற்றதற்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஒரு படைப்பை போஸ்ட் மார்ட்டம் செய்வது, உலக அழகி போட்டியில் கலந்துகொண்ட பெண்ணை இது கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம் மூக்கின் ஷார்ப் கொஞ்சம் குறைந்திருக்கலாம் என்றெல்லாம் எழுதுவது போன்றது
இருந்தாலும் வேலியில் போற ஓணானை மடியில் கட்டாமல் விடலாமா? எழுதறேன் என் கருத்தை
ஆஹா... வாங்க நக்கீரர்... உதறலுடன் காத்திருக்கிறேன். சிவபெருமான் போல சினம் கொள்ள மாட்டேன். அடுத்த படைப்புகளில் மாற்றிக்கொள்ள உதவும்.
நீக்குசிரித்துவிட்டேன் நெல்லை, ஆனா உங்க ஒப்பீடு சரியில்லை. அழகிப் போட்டி என்பது வேறு, படைப்புத் திறன் என்பது வேறு. அதெப்படி சொல்ல முடியும் இயற்கையின் படைப்பை, அழகை? இயற்கையின் படைப்பைக் குறை சொல்லுதலே பெரிய குற்றம் என்பேன்.
நீக்குநம்முடைய படைப்பு என்பது நாம உருவாக்குவது. போட்டியில் வென்றாலும், வந்திருந்த கதைகளில் சிறப்பான கதை, நடுவர்களின் முடிவு என்பதை யாராக இருந்தாலும் ஏற்போம். ஆனால் அதில் இருக்கும் நிறை குறைகள் ஒவ்வொருவரது பார்வையிலும் வித்தியாசப்படும். அதை எழுத்தாளர் தன் எண்ணப் போக்கிற்கு, தன் கதைக் கருவிற்குச் சரியெனக் கருதினால் தன் அடுத்த படைப்பில் உட்படுத்த உதவும். நிறைகளையும் மனதில் கொண்டு இன்னும் மேம்படுத்த உதவும்.
கீதா
அதேதான்.
நீக்குநக்கீரர்...! ஹா ஹா ஹா . நாரதரின் கலகமும், நக்கீரரின் வாதங்களும் நாட்டு மக்களுக்கு (எபி. வாசகர்களுக்கு) நன்மையைதான் பயக்கும்.
நீக்குஇறைவன் படைத்ததை மாற்ற முடியாதது போல எழுத்தாளர் கையைவிட்டுப் போய்விட்டால் கதை படைப்பு போலத்தான். விமர்சனத்தால் பயன் இல்லை. இருந்தாலும் கதை களம் இளமைக் காலத்தை நினைவுபடுத்துது
நீக்கு// நக்கீரர்...! ஹா ஹா ஹா . நாரதரின் கலகமும், நக்கீரரின் வாதங்களும் நாட்டு மக்களுக்கு (எபி. வாசகர்களுக்கு) நன்மையைதான் பயக்கும் //
நீக்கு:))
நன்றி நெல்லை.
நீக்குஎழுத்தாளர் கையைவிட்டுப் போய்விட்டால் கதை படைப்பு போலத்தான். விமர்சனத்தால் பயன் இல்லை. //
நீக்குஇல்லை நெல்லை...பதிப்பிடும் முன் கூட கதையை மாற்றிக் கொள்ளலாம். இந்தப் போட்டியிலே கூட அந்தச் சின்னப்பெண் முதலில் அனுப்பியிருந்த கதை எதிர்மறை முடிவோடு இருக்கு மாற்றலாம் என்று சொல்லப்பட, அப்பெண் அதை மாற்றி அனுப்பி வென்றிருக்கிறார்.
செல்லபப சாரே கூட அவர் தளத்தில் தான் எழுதிய குறுநாவல்? அதற்கு வந்தக் கருத்துகளை மனதில் கொண்டு, அச்சிடும் போது செய்கிறேன் என்று சொல்லியிருந்தார்.
ஏன் சில கதைகள் முதல் பதிப்பில் வெளி வந்து சில கருத்துகளின் அடிப்படையில் கொஞ்சம் மாற்றப்பட்டு அடுத்த பதிப்பில் மாறியும் வந்திருப்பதை இணையத்தில் படித்திருக்கிறேன்.
என்ன இருந்தாலும் அதைப் பற்றிக் கருத்து சொன்னால் அடுத்து எழுதும் போது தகுந்ததை மனதில் கொள்ள உதவும்.
கீதா
போட்டியில் வென்றவை கூட அச்சிடப்படும் போது எடிட் செய்யப்பட்டு மாற்றப்படுவதுண்டு.
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகடந்த நான்கைந்து நாட்களாக உடல் நலமின்றி (ஜலதோசம், காய்ச்சல்) இருந்த என்னை தங்களின் பரிசு பெற்ற கதை பகிர்வு இன்று இங்கு இழுத்து வந்து விட்டது. நன்றி.
இன்று பரவாயில்லை எனவும், குணமடைந்து விட்டேன் எனவும் நானே அதைச் சொல்லத்தான் இன்று வர நினைத்தேன். கடந்த நான்கு நாட்களாக அனைவரின் பதிவுகளுக்கும் வர இயலவில்லை பிறகு அனைத்தையும் படிக்கிறேன். அனைவரும் மன்னிக்கவும். அனைவருக்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உடல் நலத்தில் கவனம் வையுங்கள் அக்கா. எனக்கும் இருமல் விடமாட்டேன் என்கிறது. அதோடு தலை பாரம் (கதை பரிசு பெற்றதால் அல்ல!) அவ்வப்போது படுத்துகிறது.
நீக்குஇப்ப எப்படி இருக்கீங்க கமலாக்கா? தேவலாமா? உடம்பைப் பாத்துக்கோங்க. இந்த வருடம் குளிர் கொஞ்சம் தெரிகிறது. மரங்கள் பூங்காக்கள் ஏரிகள் எல்லாம் பாழடையும் முன்னான பழைய பெங்களூரின் குளிர்காலச் சாயல் கொஞ்சம்.
நீக்குகீதா
வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே
நீக்குவணக்கம் கீதா ரெங்கன் சகோதரி.
உங்கள் இருவரின் அக்கறையான விசாரிப்புகளுக்கு நன்றி. ஆம். இந்த வருடம் குளிர் அதிகமாக தெரிகிறது. அல்லது என் உடலின் பலவீனம் அதற்கு துணையாக போகிறதாவென்றும் தெரியவில்லை. இங்கு வந்த புதிதில் இந்த குளிரை விரும்பி ரசித்தேன். கடந்த ஆண்டும் இப்படித்தான் ஒருமாத காலமாக படுத்தியது.இனி வெய்யில் காலம் வந்தால், இந்த உபத்திரவங்கள் நீங்கும். ஆனால், அது வேறு ஒரு மாதிரியான படுத்தல்களை துவக்கும். எல்லாம் இறைவன் செயல்.
இப்போதைக்கு எனக்கு குணமாகி விட்டது. உங்கள் இருவரின் அன்புக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மை கமலா அக்கா...
நீக்குஒவ்வொரு வருடமும் இந்த வருடம் குளிர் அதிகம், இந்த வருடம் வெயில் அதிகம் என்று சொல்வோம்.. அது போலதான்.
மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும்
கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
அது தேடி இது தேடி அலைகின்றாய்
வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்
என்று பாடி இருக்கிறார் கண்ணதாசன்.
கமலாக்கா எனக்குக் குளிரை விட வெயில் தான் கூடுதல் தாக்கும்.
நீக்குகீதா
நான் மேலே கொடுத்துள்ள கவியரசர் வரிகளைப் படியுங்கள் கீதா...!
நீக்குகவியரசரின் வரிகள் சரியா இல்லாமல் இருக்குமா!
நீக்குஎன்னன்னா, வெயிலில் குளிரைத் தேடும்...உண்மை, குளிரில் வரும் வெயிலைப் போல வெயில் காலத்திலும் இருந்தால் நல்லாருக்குமே!!!
கீதா
வணக்கம் சகோதரரே
நீக்கு/மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும்
கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
அது தேடி இது தேடி அலைகின்றாய்
வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்/
கண்ணதாசனின் வரிகள். உண்மை. வர, வர இப்போது எது வந்தாலும் தவிக்கும் அளவிற்கு மனமும், உடலும் சோர்ந்து விட்டதென்று நினைக்கிறேன்.நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குகதை என்ன சொல்லுது? மார்ட்டின் சாரைப் பற்றியும், அவர் இறப்பு, அவரை நேசித்த பல்வேறு நிலையில் இருக்கும் மாணவர்கள் பற்றி. நல்லாச் சொல்லியிருக்கீங்க.
பதிலளிநீக்குகதையின் முதுகெலும்பு, சாதாரண படிப்பு சரியா வராத மாணவனை எப்படி அவனுக்கென்ற வாழ்க்கைக்கு உதவினார், அதனால் அவனும் அந்த வீட்டிற்கு தன்னால் இயன்றதை இனி செய்வான் என்பது. மார்ட்டின் சார் இவனைச் சொந்தத் தொழில் செய்ய எந்தவிதத்தில் காரணமாக இருந்தார் என்பது சரியாகச் சொல்லப்படலை. அதனால முடிவு ஈர்க்கலை.
முதல் வாக்கியமே நிமிர்ந்து உட்கார வைக்குது. முடிவும் அது சார்ந்த பகுதிகளும் ஈர்க்கவில்லை. அதனால் முதல் பத்து கதைகளுக்குள் வரலை
இனி யாரேனும் பரிசு பெற்ற தன் கதையை வெளியிட்டு வாசகர் கருத்தைக் கேட்பார்களா? ஹாஹா
ஸ்ரீராம்... உங்கள் எழுத்து ரசனையா இருக்கு. அது எல்லோருக்கும் வராது.
நீக்குகதையில் குறை என மனதுக்குப் பட்டதை எழுதியதால் நாங்கள்ளாம் இன்னும் நல்லா எழுதுவோம் என்று அர்த்தம் இல்லை. எல்லோரையும் அக்குவேறு ஆணிவேறுன்னு விமர்சித்து, அப்போ இவர் நல்லா படம் எடுப்பார்னு நினைத்து அவரைவைத்துப் படம் எடுத்து கையைச் சுட்டுக்கொண்டவர் நினைவு வருகிறது. தொட்டால் தொடருமோ என்னவோ படத்தின் பெயர்
இதில் ஒன்றும் தவறே இல்லை நெல்லை... எனக்கு ஒரு எக்ஸ்டரா ஐடியா கிடைக்கிறது. அவ்வளவுதான்.
நீக்கு// மார்ட்டின் சார் இவனைச் சொந்தத் தொழில் செய்ய எந்தவிதத்தில் காரணமாக இருந்தார் என்பது சரியாகச் சொல்லப்படலை. அதனால முடிவு ஈர்க்கலை. //
பதிலளிநீக்குஅவனுக்காகவே அடிக்கடி வந்தார், அவனுடன் சைக்கிளில் செல்வது போல பேசிப்பேசி நம்பிக்கை வளர்த்தார். பேங்க் லோன் எடுக்க சொல்லிக் கொடுத்தார். ஷுரிட்டியும் அவரே போட்டார் என்றெல்லாம் சொல்லி இருக்கிறேனே...
1500 வார்த்தைகள் லிமிட். அதற்குள் அடக்க நினைக்கும்போது இப்படி நேரிடும். எனினும் அப்படி சுருங்கச் கொள்கையிலேயே இன்னும் தெளிவாகச் சொல்லப் பழகுகிறேன். நன்றி நெல்லை.
//இனி யாரேனும் பரிசு பெற்ற தன் கதையை வெளியிட்டு வாசகர் கருத்தைக் கேட்பார்களா? ஹாஹா//
கண்டிப்பாக நான் கேட்பேன். இது போன்ற கருத்துகள் என்னை திருத்திக் கொள்ள உதவும், நல்ல யோசனைகளை ஏற்பேன்.
நெல்லை நீங்க கேட்ட கதைக்கான பதில் கதையிலேயே இருக்கிறதே. அதுகுறையல்ல.
நீக்குஇன்னும் விளக்கங்கள், உணர்வுகளை வெளிப்படுத்துதல் என்பதெல்லாம் போட்டி அறிவிப்பவர்கள் கொடுத்திருக்கும் எல்லைக்குள் முடிக்க வேண்டும் எனும் போது கொஞ்சம் தடுமாறும். அதுவும் கதை நேர்மறையாக இருக்க வேண்டும் என்பதும் விதிகளில் ஒன்று.
கீதா
நன்றி கீதா.
நீக்கு//குறிப்பாக என்னைவிட சிறந்த கதைகள் எழுதும் உங்களுக்கு இல்லையா? நீங்களும் பங்கெடுக்க வேண்டுகிறேன்.//
நீக்குஸ்ரீராம் மேலே உள்ள உங்கள் பதிலுக்கு...இங்கே
நான் சிறப்பாக எழுதுவேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனென்றால் என் கதைகள் காட்டாறு போல....அது இஷ்டத்துக்குப் பாயும். அணை போட்டுத் தடுத்தால் அழுத்தம் கூடும்!!!! கதையில் அல்ல!!!!
திறமை வேறு ஸ்ரீராம். அதாவது குறிப்பிட்ட விதிகளுக்குள் சிறுகதை எழுதுவது என்பது மிகப் பெரிய சவால். அசாத்திய திறமை அது என்னைப் பொருத்தவரை. (என் கூட கமலாக்காவையும் சேர்த்துக் கொள்கிறேன்!!!! கமலாக்கா கண்டிப்பா கோச்சுக்கமாட்டாங்க!)
அப்படியானவை ஓரிரண்டு நான் எழுதியவை எபியில் முன்பு வந்திருக்கின்றன என்றாலும், இங்க வந்தவங்களே வியந்து போனாங்க!!!!
நான் அத்திறமையை வளர்த்துக் கொள்ள முயன்றாலும் கைகூடுவது சிரமமாக இருக்கிறது. ஏனென்றால் என் கதைக்கருவும் அப்படியாகிவிடுவதால்.
அதனால, உங்களவு, நெல்லை, பானுக்காக்கா, ரஞ்சனிக்கா, துரை அண்ணா, இன்னும் எபியில் எழுதும் பலரைப் போன்று சிறுகதை கட்டத்திற்குள் எழுத முடியுமா என்னால் என்று யோசிக்கிறேன்.
இப்பவும் எழுத நிறைய வந்தாலும், ஆசை இருந்தாலும் எதுவுமே எழுத முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது பதிவு உட்பட.
உங்க ஊக்கத்துக்கு ரொம்ப நன்றி. எழுத முயற்சி செய்ய முயற்சி செய்கிறேன், ஸ்ரீராம்
கீதா
நீங்கள் சொல்வது வேறு. உங்கள் கதைகள் மிகவும் ஆழமானவை. அதில் சந்தேகமே இல்லை. யோசிக்க வைக்கும் வரிகள் நிறைய இருக்கும். வரையறைக்குள் அடக்குவது என்பது மிகவும் சுலபம். பெரிய கலை கைவரப்பெற்ற நீங்கள் அதை கைக்கொள்வதும் கடினமல்ல.
நீக்குநான் ஏற்கெனவே உங்கள் படைப்புகள் சிலவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள் என்று சொல்லி வருகிறேன்.
ஆமாம் சொல்லிட்டே இருக்கீங்க பத்திரிகைகளுக்கு அனுப்ப.
நீக்குவரையறைக்குள் அடக்குவதையும் மனதில் வைத்துக் கொள்கிறேன் ஸ்ரீராம். மிக்க நன்றி.
கீதா
__/\__
நீக்குவணக்கம் சகோதரி.
நீக்கு/திறமை வேறு ஸ்ரீராம். அதாவது குறிப்பிட்ட விதிகளுக்குள் சிறுகதை எழுதுவது என்பது மிகப் பெரிய சவால். அசாத்திய திறமை அது என்னைப் பொருத்தவரை. (என் கூட கமலாக்காவையும் சேர்த்துக் கொள்கிறேன்!!!! கமலாக்கா கண்டிப்பா கோச்சுக்கமாட்டாங்க!)/
உண்மை.. இத்தனை கண்டிஷன்களுடன் கதையை சுவாரஸ்யமாக எழுதி முடிப்பது ஒரு தனித் திறமை. அந்த சவாலில் திறமையுடன் எழுதி சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் நாம் அவரை பாராட்டி மகிழலாம்.
என்னால் இது போல வார்த்தைகளை சுருக்கிப் போட்டு எழுதவே வராது. இதை நானே சொல்ல நினைத்தேன். நீங்களும் சரியாக கூறி இருக்கிறீர்கள்.
நான் இதுக்கெல்லாம் கோபமே பட மாட்டேன். ஏனெனில் இது உண்மைதானே..! ஹா ஹா. என் எழுத்து அனுமார் வால் போல என்பது ஊரறிந்த, உலகறிந்த விஷயம். அட..! சும்மா ஒரு பழமொழிக்கு சொன்னேன். (என் எழுத்தை ஊரும், சொந்த உறவும் அறிந்ததில்லை. இதில் உலகம் வேறேயா? ஆசையைப் பாரு..! என்று என் மனசாட்சி இடிக்கிறது.:)) )
இன்றைய கதை பகிர்வு மிகவும் அருமையாக உள்ளது. இப்போதும் ஒரு முறை படித்து ரசித்தேன். நன்றி ஸ்ரீராம் சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
__/\__
நீக்கு// இப்போதும் ஒரு முறை படித்து ரசித்தேன். நன்றி ஸ்ரீராம் சகோதரரே.//
மறுபடியுமா? எனக்கே அப்படி முடியாதே...!!
சிறப்பு..
பதிலளிநீக்குஇனிய செவ்வாய்
மகிழ்ச்சி..
நன்றி செல்வாண்ணா...
நீக்குபரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஸ்ரீராம் சார் ..
பதிலளிநீக்குமனதில் நிற்கும் மார்ட்டின் கதை இக்கதையை குறைவாக சொல்லாதீர்கள்... நிச்சியம் மிக நிறைவான கதை படித்த உணர்வு ..இன்றும் பல தளங்களில் தொடர்ந்து கதை படிக்கிறேன் ...சில கதைகள் மட்டுமே மனதில் நிற்கும் அதில் இதுவும் ஒன்று.
வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் சார்
மறுமொழிகள் அனைத்தும் வழக்கம் போல அருமை
நீக்குரொம்ப சந்தோஷம், மிக்க நன்றி அனுபிரேம். பின்னூட்டங்கள் கொடுப்பதில்லை என்றாலும் இங்கு வெளியாகும் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறீர்கள் என்று நம்புகிறேன்.
நீக்குபல மாதங்களாக இங்கு வரவில்லை சார் , வாசித்து இருந்தால் வழக்கம் போல இரு வார்த்தை கருத்துரையாவது இருந்து இருக்கும்.. இனி தொடர்ந்து வாசிக்க வேண்டும்
நீக்குவரவேற்கிறேன்.
நீக்குஅதேபோல உங்களிடமிருந்தும் திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளுக்கு பங்களிப்பை எதிர்பார்க்கலாமா?
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குகதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமார்ட்டின் சாரின் மறைவுக்கு அவரிடம் படித்த மாணவர்கள் வருகையும் அவர்களை பற்றிய சிறு விளக்கமும் நேரில் பார்ப்பது போல இருக்கிறது.
//சில வகுப்புகளுக்கொருமுறை பாடம் எடுக்காமல் கதை சொல்வார். அவர் படித்த கதைகள் என்பார். //
நான் படிக்கும் போது சில நேரங்களில் நல்ல சினிமா கதைகள் சொல்லும் கணித ஆசிரியர் உமா, மற்றும் தமிழ் அம்மா கமலா அவர்கள் நினைவுக்கு வந்தார்கள்.
//நீங்க எல்லாம் நாடார் பங்களால ஒண்ணா மாங்கா அடிச்சு மாட்டிக்கிட்ட ஃப்ரெண்ட்ஸ்தானேடா... இப்போ என்னடா தயக்கம்... அவங்க வேலை அவங்களோட.. ப்ரெண்ட்ஸுக்குள்ள இதெல்லாம் பார்க்கக் கூடாது.. 'நீதான் ஒதுங்கி ஒதுங்கிப் போறே' ங்கறாங்க சைமனும், இளங்கோவும்..."//
பேசி பேசி தன்னிடம் படித்த மாணவரின் தாழ்வு மனபான்மையை போக்கி தனியாகக் கடை வைக்கத் தைரியம் கொடுத்து வைக்கச் செய்து இருக்கிறார். குழந்தைகளின் நலனில் அக்கறை உடையவர்கள் பெற்றோர்களும் ,ஆசிரியர்களும் தான். இருவருக்கும் அன்பை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
சைக்கிள் ஓட்ட கத்து தர்றீங்களா அங்கிள்..".
//அவன் கைகளைப் பற்றித் தலையைக் கலைத்து, "கண்டிப்பா வர்றேன் அருளு" என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன். //
நிறைவு பகுதி நெகிழ்வு. மார்ட்டின் சாரின் அன்பு அருளின் மூலம் தொடர போகிறது மகிழ்ச்சி.
நன்றி கோமதி அக்கா... உங்கள் ஆசிரியர்கள் பெயரும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்.
நீக்குஇந்தக் கதையில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் யாவும் 99% என் ஆசிரியர்களின் பெயர்கள்.
பரிசு பெற்றதற்கு மகிழ்ச்சி, வாழ்த்துகள். உங்கள் கதை புத்தக வடிவில் சிறு கதை தொகுப்பில் இடம் பெற்றது மேலும் சிறப்பு.
பதிலளிநீக்குசெல்லப்பா ஸாருக்கு நன்றி. அவர்தான் காரணம் என் படைப்பு ஒன்று ஒரு புத்தகத்தில் இடம்பெறுவதற்கு.
நீக்குஅருமையான கதை...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஜீவி சாருக்கு நேற்று பிறந்த நாள் என்று முகநூலில் பார்த்தேன், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், வணக்கங்கள்.
பதிலளிநீக்குஅவரின் கதையின் பெயர் நன்றாக இருக்கிறது.
அவர் கதையும் உங்கள் தளத்திலல்லது அவர் தளத்தில் இடம் பெறும் என்று நினைக்கிறேன். அவருக்கும் வாழ்த்துக்கள்.
கதை போட்டி நடத்திய திரு, ராய செல்லப்பா சாருக்கும் அதில் கலந்து கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துகள்.
அன்றைய மாலை பொழுதில் எல்லோரையும் சந்தித்து உரையாடியாது மகிழ்ச்சியான தருணமாக இருந்து இருக்கும் உங்களுக்கு.
பிறந்த நாள் வாழ்த்து சொன்னதற்கு நன்றி, சகோதரி.
நீக்குஎங்கள் எல்லோரின் மகிழ்ச்சியை உணர்ந்திருக்கிறீர்களா. அவர்களையும் பாராட்டி இருக்கிறீர்கள். நன்றி கோமதி அக்கா.
நீக்குஜீவி ஸார் கதை பற்றி அவர்தான் சொல்ல வேண்டும். அவர் தளத்தில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.
ஜீவி ஸார் பிறந்த நாள் ஜூலையில் வரும் என்று நினைக்கிறேன். இது FaceBook பிறந்த நாளாயிருக்கும் என்று நினைத்தேன். ஏனென்றால் அவரது சதாபிஷேகம் ஜூலையில் நடந்தது. அவர் நன்றி சொல்லி இருப்பதைப் பார்த்தால் இதுதான் உண்மையான பிறந்தநாளோ என்று எண்ணத் தோன்றுகிறது!
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜீவி ஸார்.
நான் ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவன். 1943
நீக்குபிறந்த வருடத்தில் 19 ஜனவரி ரோஹிணி நட்சத்திரம். ஆனால் பள்ளியில் சேர்க்கும் பொழுது
20-1-1943 என்று அடுத்த நாளைக் கொடுத்திருப்பதால் officially அதுவே பிறந்த நாளாகியிருக்கிறது.
அடுத்து சதாபிஷேகம். 80 வயது முடிந்து 81-ல் தான் சதாபிஷேகம். அதை 81-ல் எப்பொழுது வேண்டுமானாலும்
நாள், நட்சத்திரம் பார்த்து யதா செளகரியப்படி கொண்டாடலாம். சென்ற வருடம் நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு பேத்தி, பேரன்களுக்கு அங்கு ஸ்கூல் விடுமுறையில் பையனும் பெண்ணும் இங்கு வந்திருந்து கொண்டாடினார்கள். அதனால் தான் ஜூலை ஆயிற்து.
பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குபிறந்த நாள் வாழ்த்துகள் ஜீ வி அண்ணா.
நீக்குகீதா
மறுபடியும் வாழ்த்து சொல்கிறேன் ஜீவி ஸார்...
நீக்குநன்றி ஸ்ரீராம். அநேக ஆசிர்வாதங்கள். எல்லோருக்கும் இறைவனின் இறையருள் கிட்ட பிரார்த்திப்போம்.
நீக்கு__/\__
நீக்குவணக்கம் ஜீவி சகோதரரே
நீக்குஜனவரியில் உங்களுக்கு பிறந்த நாள் என்பதை தெரிந்து கொண்டேன். உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என் பணிவான நமஸ்காரங்களும்.
சகோதரர் திரு. ராயசெல்லப்பா அவர்கள் நிறுவிய சிறுகதை போட்டியில் கலந்து கொண்டு நீங்கள் எழுதிய கதையும் சிறப்பான விருதுடன் பரிசை பெற்றுள்ளது என்பதை அறிந்தும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.
நீக்குகலந்து கொண்ட முதல் போட்டியிலேயே குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்ததற்கு மனமார்ந்த பாராட்டுகள்! உணர்வுபூர்வமான நல்ல கதை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்குசெடி நட்டவர்களுக்கு முதல் பூ பூத்திருப்பதைப் பார்க்கையி. ல் அளவற்ற சந்தோஷம் ஏற்படுவது இயல்பு. அது போலத் தான் முதல் கதை பிரசுரமாவதும். அதுவும் பரிசு பெறுவதும். எழுத எழுத அந்த லாவகமும் வசப்படும். வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார்.
நீக்குஅருமையான நல்ல கதை, ஸ்ரீராம். ஓர் ஆசிரியனான எனக்கு மிக நெருக்கமாக அமைந்த கதை என்பதால் ஒன்றிப் போனேன். அன்பு, அடக்கம், நன்றி மறவாமை, குரு பக்தி...இப்படி....வாசிக்கும் போதே மனம் பூரிக்கும் இப்படியான கதைகளை வாழ்க்கை அனுபவங்கள் உள்ளவர்கள் மட்டும் தான் எழுத முடியும். அதை முழுதும் உணர்ந்துathai muzhuthum அனுபவிக்கவும் கைவசமாக வேண்டும் தான் மனதை தொட்ட கதை.
பதிலளிநீக்குyarai ellamo ninaikka vaitha kathaiயாரை எல்லாமோ நினைக்க வைத்த கதை.
பரிசு பெற்றதற்கு மனமார்ந்த பாராட்டுகள் ஸ்ரீராம், மற்றும் வாழ்த்துகள். இக்கதை பரிசு பெறாமல் இருந்திருந்தால் ஆச்சரியமாகியிருக்கும்.
இப்படி அருமையான போட்டி நடத்தி, ஊக்கப்படுத்தி எழுத்தாளர்களைக் kouகௌரவிக்கும் திரு ராய செல்லப்பா சாருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.
துளசிதரன்
ஆம். செல்லப்பா ஸாருக்கு நன்றி.
நீக்குஎன் அப்பா ஒரு எழுத்தாளராயினும், என்னை வற்புறுத்தி எழுத வைத்த கே ஜி கௌதமன் அவர்களுக்குத்தான் நான் முதல் நன்றி சொல்ல வேண்டும். இன்று நான் இவ்வளவு எழுத்தில் இவ்வளவு தூரம் வந்திருப்பதற்கு அவர்தான் மூல காரணம்.
அப்பாவுக்கு இயல்பாகவே நன்றி சேர்ந்து விடும். கேஜிஜிக்கு முதல் நன்றி. இப்போது செல்லப்பா சார் என்னை இன்னும் ஒரு படியில் ஏற்றி இருக்கிறார்,
நீங்கள் ஒரு ஆசிரியர் அல்லவா.... அதுதான் நீங்கள் இன்னும் ரசித்திருக்கிறீர்கள்.
காலையில் விட்டுப் போன கருத்துகள்.
பதிலளிநீக்குஜீவி அண்ணாவின் கதைத் தலைப்பே அட்டகாசமாக இருக்கிறது. அவருக்கு முதல் பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துகள் ஜீவி அண்ணா. உங்கள் கதை உங்கள் தளத்தில் வருமா? செல்லப்பா சாரிடம் அனுமதி வாங்க வேண்டுமோ?
பரிவை சே குமாருக்கும் வாழ்த்துகள்.
முகம் தெரிந்த தெரியாத, பரிசு பெற்றவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்!
எழுத்தின் மூலம், இணையம் மூலம், இதழ்கள் மூலம் அறியப்பட்டவர்கள் லிஸ்டில் இருந்தாலும் விவேக் காமெடிதான் நினைவுக்கு வருது. எனக்கு அவங்களைத் தெரியும் ஆனா அவங்களுக்கு என்னைத் தெரியாது!!
உங்களுக்கு இவங்களை எல்லாம் சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இனி வெளியில் இப்படியான நிகழ்வுகளுக்குச் செல்வதில் தயக்கம் இருக்காது!!!! இல்லையா ஸ்ரீராம்?! அந்த மாலைப் பொழுது கண்ணில் நிழலாடுது.
ஏஐ படங்கள் நல்லாருக்கு என்றாலும்....
கீதா
ஆம். அவர் கதையின் தலைப்பே தனி வசீகரம்.
நீக்கு//இனி வெளியில் இப்படியான நிகழ்வுகளுக்குச் செல்வதில் தயக்கம் இருக்காது!!!! இல்லையா ஸ்ரீராம்?! அந்த மாலைப் பொழுது கண்ணில் நிழலாடுது.//
ஹிஹிஹிஹி...
//ஏஐ படங்கள் நல்லாருக்கு என்றாலும்.... //
என்றாலும்....? உங்கள் மனபிம்பத்துக்கு ஒத்துவரவில்லையா?
பார்க்கலாம். நன்றி.
பதிலளிநீக்கு__/\__
நீக்குஆசிரியர் - மாணவர்களுக்கு இடையேயான பந்தம் தனித்துவமானது. அருமையான கரு. சிறப்பான நடை. நெகிழ்வான முடிவு. வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅன்பு வணக்கங்கள்
பதிலளிநீக்குகதையின் தலைப்பு மிக எளிமை. அதிலும் எளிமை கதையின் வரிகள். ஆனால் அதன் தாக்கம் படித்தப்பின் வெகு நேரம் இருந்தது என் மனதில், எண்ணங்களை எழுப்பிவிட்டது என்று கூட சொல்லலாம்.
கதையின் தொடக்கம் படித்தபோது சரி வாத்தியாரை பற்றி சொல்ல வருகிறார். கதையின் நாயகனுக்கு விருப்பமான வாத்தியாரை பற்றி சொல்கிறார் என்று எண்ணிக்கொண்டே படித்தபடி வந்தபோது நிறைய வாழ்வியல் விஷயங்களை வெகு எதார்த்த நடையில் கொண்டு போகிறார்.
இன்றைய தலைமுறைக்கு மிக மிக அவசியமான கதை இது. நம் காலத்தில் வாத்தியாருக்கு பிள்ளைகளிடம் பாகுபாடு பார்க்க தெரியாது. எல்லோரையும் நன்றாக படிக்கவைக்க முனைவார்கள். கண்டிப்பும் அன்பும் ஒரே போல இருக்கும். பிள்ளைகளும் வாத்தியார்களிடம் பயத்துடன் மரியாதையுடன் நடந்துக்கொள்வார்கள்.
எளிமையான வாத்தியார் தான் மார்ட்டின். ஆனால் அவரின் அதீத அன்பு அசர வைக்கிறது. குடத்திலிட்ட விளக்கு போல என்று சொல்லலாம். வாத்தியாரிடம் அன்பும் கண்டிப்பும் கலந்திருப்பது போதாதென்று ஜாதி மத பாகுபாடு இல்லாமல் படிக்க இயலாத இளங்கோவை தன் வீட்டிலேயே படிக்க அறை கொடுத்து, உணவிட்டு, கல்வியும் தந்த மார்ட்டின் வாத்தியாரை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். "இந்தக்காலத்தில் இப்படி ஒரு வாத்தியார் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்."
வாங்க மஞ்சுபாஷிணி... உங்கள் பாணி பின்னூட்டங்களுடன் வந்து விட்டீர்கள். நன்றி.
நீக்குதலைப்பை சிலாகித்ததற்கு நன்றி. வாத்தியாரின் மனதைப் புரிந்து கொண்டதற்கும் நன்றி. நிச்சயம் இந்தக் காலத்தில் இப்படி ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் அதற்கு காரணம் மாணவர்களும், அவர்கள் மனப்பாங்கும் பெற்றோரின் மனப்பாங்கும்தான். அரசாங்கமும் காரணம்.
படிப்பே வராத நம் நாயகனுக்கும் வாத்தியாரை பிடித்திருப்பது ஆச்சர்யமாக இருந்தது. விக்டர், சபா, சைமன், பொன்னுதுரை, இளங்கோ இன்னும் இன்னும் இன்னும்...
பதிலளிநீக்குகல்வி தந்த ஆசான் மறைவுக்கு, அவர் சொந்தங்களை விட மாணவர்கள் கூட்டம் தான் அதிகம். மார்ட்டின் வாத்தியாரால் பயன் பெற்ற பிள்ளைகளின் கூட்டத்தில் ஒட்டி ஒட்டாமல் ஓரமாக நின்றிருந்த நம் நாயகனின் எண்ண ஓட்டங்களில் நாமும் சேர்ந்தே பயணித்தோம்.
படிப்பு தான் வாழ்க்கையா என்றால் இல்லை, அது வாழ்க்கையில் ஒரு பகுதி தான், படிப்பே வரவில்லை என்றாலும் நம் நாயகனின் வாழ்க்கையில் முன்னேற அற்புதமான வழி காண்பித்த மார்ட்டின் வாத்தியாரை கும்பிட தோன்றியது. இப்ப இந்த காலக்கட்டத்தில் வாத்தியாரின் வாக்கு, வகுப்பில் படிச்சா இரு இல்லன்னா போ வெளியே வாத்தியாரின் கடுப்பு முகம் தான் கண்ணுக்கு முன் தோன்றுகிறது.
பிள்ளைகளின் சிறுவயது ஹீரோவாக மார்ட்டின் வாத்தியாரை வரிகளில் காட்டியது அழகு. சைமனுக்கு அரசு உத்தியோகம். பொன்னுதுரை சப் கலெக்டர். வாத்தியார் வயது மூப்பு காலத்தில் ஒரு வேலைக்காக அவர்களிடம் போனாலும் அவரை உட்காரவைத்து அவருக்கு வேண்டிய உதவியை செய்ய தவறி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் படிப்பே வராத நம் நாயகன், பிள்ளையாய் வளர்த்த இளங்கோ நன்றி மறக்கவில்லை.
ஒன்று தெரியுமா... இந்தக் கதையில் வரும் பெயர்கள் 99% என் ஆசிரியர்கள் பெயர்!
நீக்குபொன்னுத்துரை அப்புறம் வந்திருக்கலாம். ஆனால் கதைக்கு அவர்கள் அதற்குமேல் அவ்சசியமில்லை! நம் மார்ட்டினின் மனம்தான் அவசியம் இல்லையா?!!
படிப்பு வரவில்லை என்றால் என்ன.. யாரிடமும் தாழ்ந்து போகாதே என்று சொல்லிக்கொடுத்த வாத்தியார், படிப்பை தாண்டி படிப்பு வராத பிள்ளையை எக்கேடு கெட்டுப்போ என்று விட்டு விடாமல், எனக்கென்ன என்று ஒதுங்கி இருக்காமல், அவன் வாழ்க்கையிலும் ஒளி வீச செய்ய அவரின் முயற்சி இதோ இன்று இந்த கதை எழுத தூண்டியது என்று எண்ணத்தோன்றியது.
பதிலளிநீக்குஒருவரால் நாம் பயனடையும்போது நாமும் அவருக்கு நம்மால் முயன்றதை செய்யலாம் என்ற நல்ல விஷயத்தை சொல்லிக்கொடுத்தது இந்த கதை. வாத்தியார் காலம் முடிந்தது... அவர் இருந்தவரை வந்து பார்த்து பழைய கதைகளை பேசிய நினைவுகளோடு கனத்த இதயத்தோடு நாமும் நகர முற்படும்போது, இல்லை இல்லை இந்த கதை இதோடு முடியவில்லை. மார்ட்டின் வாத்தியாரின் பேரன் அருள் எல்லோருடனும் பழகாமல் ஒதுங்கி இருந்த குழந்தை நம் நாயகனோடு மட்டும் சிரித்து விளையாடும் அற்புதம் ஏன் என்று யோசிக்கவைத்தது. அதற்கான முத்தாய்ப்பான வரிகள் தான் இனி எங்கே இந்த வழி வரப்போகிறோம் என்று நினைத்த நாயகனை வாத்தியாரின் பேரன் தன் குழந்தை சிரிப்பால் வரவைத்து கதையை தொடர வைத்துவிட்டான். மனமும் லேசானது.
நன்றாக படிக்க வைத்த வாத்தியாரை நாம் நினைவில் வைத்துக்கொள்வ்வோம். பிள்ளைகளை எல்லோரையும் நல்வழி நடத்திச்சென்றவரை நாமும் நல்லபடி அனுப்பி வைப்போம். அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொல்ல நிறைய நல்லவைகளை உள்ளடக்கிய இந்த கதையின் ஹைலைட்... வாத்தியாரின் பெயரும் மார்ட்டின், நம் நாயகன் பேரும் மார்ட்டின்... செம்ம ட்விஸ்ட்.. நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை.
சிலபேர் சம்பளத்துக்கு ஏற்ப வேலை செய்வர். இவரைப்போன்ற சிலர் தம் மனதுக்குத் தகுந்த மாதிரி நிறைவுடன் பணியாற்றுவர். அவர்களால் இந்த மாதிரி சூழ்நிலையில் தங்கள் பிள்ளைகளை, தங்கள் மாணவர்களை கைவிட முடியாது.
நீக்குஒரே பேர் இருந்ததால் தான் வாத்தியாருக்கு இந்த பிள்ளை நல்லா படிக்கலைன்னாலும் இந்த வாஞ்சையா என்று கேட்டால் இல்லை இல்லை இல்லவே இல்லை என்று கத்த தோணிற்று.. ஏனெனில் மார்ட்டின் வாத்தியாரின் இயல்பே இது தான். ஆனாலும் ஒரு ட்விஸ்ட் கொடுத்த எழுத்தாளருக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குநல்லவை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க மார்ட்டின் வாத்தியாரின் திருத்தமான ஆணித்தரமான வார்த்தைகள் மக்குப்பிள்ளை மார்ட்டினையும் நல் வழி காட்டியது அற்புதமே.
பொன்னுதுரை வரேன் வரேன்னு வரவே இல்லை என்ற வரி நெருடலாக யோசிக்கவைத்தது.. பெரிய பதவியில் இருப்பதால் பணிச்சுமையோ, கல்வி கற்பித்த ஆசானை இறுதியிலாவது வந்து பார்த்தாரா சப் கலெக்டர் பொன்னுதுரை?
பிள்ளைகள் பள்ளிவிட்டு போனாலும் இறக்கும் வரை எல்லோருடனும் மார்ட்டின் வாத்தியார் நட்புடன் இருந்திருக்கிறார்.. என் மனதை நிறைத்த வரிகள் இவை.
இளங்கோ தன்னையும் தெரிந்தவன் என்னையும் அறிந்தவன். மரியாதை விடறதில்ல, விட்டுக்கொடுப்பதும் இல்லை " இந்த வரிகள் நச்"
காரணமே இல்லாமல் சில பேரை பார்த்தமே பிடித்துவிடும்...
மார்ட்டின் சார் என் சிறுவயதின் பிரமிப்பு... இந்த சிறு சிறு வரிகள் கதைக்கு அழகு சேர்த்தது.
"உங்க சிரிப்பு, உங்க மீசை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் உங்களை" வாத்தியார் இந்த வரிகள் கேட்டதும் அவர் முகம் பூத்திருக்கும் புன்னகை பூக்களால் கண்டிப்பாக. ஏனெனில் மார்ட்டின் வாத்தியாருக்கும் பிடிக்குமே மாணவன் மார்ட்டினை.
இந்த அன்பான வாத்தியார் பள்ளியில் எந்த வகுப்பு வாத்தியாராவது வரவில்லை என்றால் சப்ஸ்டிட்யூட்டாக மார்ட்டின் வாத்தியாரை தான் போடுவார்கள் என்ற வரி படிக்கும்போது ம்ச்ச் நம்ம பள்ளியில் இந்த மார்ட்டின் வாத்தியார் இருந்திருக்கக்கூடாதா என்று நினைக்க வைத்தது...
பள்ளியை தாண்டியும் நல்லதை செய்தவர் மார்ட்டின் வாத்தியார். கேட்காமலேயே உதவி செய்த வாத்தியாருக்கு, அவர் கேட்காமலேயே அவருக்கு பணிவிடை செய்ய காத்திருந்த மாணாக்கன் மார்ட்டினுக்கு கிடைத்த வாய்ப்பு நல்ல நிலைக்கு வருமுன்பே வாத்தியாரை சைக்கிளில் வீடுவரை கொண்டு சென்றுவிட்டு வந்த மார்ட்டின் முதுகில் தட்டிக்கொடுக்க தோன்றியது. சைக்கிள் கடையில் வேலை செய்துக்கொண்டிருந்த மார்ட்டின் சைக்கிள் கடை முதலாளி ஆனது நமக்கெல்லாம் ஒரு பாடம்....
படிப்பு என்னடா கண்ணா... உன்னிடம் இருக்கும் இந்த பண்பு தான் மார்ட்டின் சைக்கிள் மார்ட் முதலாளியாக்கியது. சபாஷ் மார்ட்டின்... கல்வியே வார்க்கையல்ல... படிப்பே வராத குழந்தையை என்ன செய்வது? அவனுக்கு பிடித்த விஷயத்தை ஊக்குவித்து முன்னுக்கு வரவைத்து முதலாளி ஆக்கவைத்தது...
மாணவன் மார்ட்டின் வாழ்க்கையில் வாத்தியார் மார்ட்டின் வரவில்லையென்றால் தாழ்வு மனப்பான்மையிலேயே தன் வாழ்க்கையை தொலைத்து முன்னேற வழி தெரியாமல் என்ன செய்து கொண்டிருப்பான் இப்போது மார்ட்டின் என்று மிரள வைத்தது..
ஜாதி மத வேறுபாடின்றி பிள்ளைகளை அரவணைத்து கல்வி மட்டுமல்லாது சமத்துவம் போதித்து, தாழ்வு மனப்பான்மை அகற்றி, நல்லவை எடுத்துச்சொல்லி, இல்லாதவருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து மார்ட்டின் வாத்தியார் எல்லோர் மனதிலும் தெய்வமாக உயர்ந்தார். நம் மனதையும் கண்களையும் நிறைத்துவிட்டார்.
இந்த கதை படிக்கும்போதே என்னென்னவோ தோன்றியது. இந்த கதை படித்த அத்தனைப்பேருக்கும் தான் படித்த பள்ளி வகுப்பு வாத்தியார், பிடித்த வாத்தியார், நம்மை விரட்டிய வாத்தியார், அன்பால் கட்டிவைத்த வாத்தியார் என்று அத்தனையும் நம் மனதுக்குள் வந்து போயிருக்கும் தானே? எனக்கு அப்படி தான் தோன்றியது..
மூன்று முறை படித்தேன் கதையை அலுக்கவில்லை.. வியந்தேன்..
அதிகம் வாசிப்பதில்லை....
அதிகம் எழுதுவதில்லை.....
இந்த கதை மீண்டும் எழுத வைத்தது நல்லதொரு விமர்சனத்தை.
இந்த கதைக்கு பரிசு கிடைக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யப்பட்டிருப்பேன்.
அருமையான கதை.. பாராட்டுகள் பா. ஸ்ரீராம் நல்லதொரு கதை தந்தமைக்கு அன்பு நன்றிகள்பா.
அந்த மிகச் சிறியட்விஸ்ட்டை ராசித்ததற்கு நன்றி.
நீக்குநிச்சயம் மார்ட்டினின் மாணவன் பொன்னுத்துரை அப்படி தலைக்கனமேறியவனாக இருக்க மாட்டான்!
இன்றும் நாற்பது, ஐம்பது வயதுடைய மனிதர்கள் தங்கள் பழைய ஆசிரியர்களைத் தேடிப்போய் மரியாதை செய்வதைப் பார்க்கிறோம். கேரளாவில் பாஸ்ட்டாண்டில் மனம் பேதலித்து திரிந்து கொண்டிருந்த தங்கள் ஆசிரியையை ஒரு மாணவர் அடையாளம் கண்டு மற்ற மாணவர்களுக்கும் சொல்லி அவரை மீட்டு உதவி செய்ததை சிலகாலம் முன்பு படித்திருப்பீர்கள்.
கதையின் அண்டவே வந்த வரிகளை சுட்டிக்காட்டி பாராட்டியதற்கும், ரசித்ததற்கும் நன்றி,
இளங்கோவை வீட்டிலேயே வைத்துக் காத்தாலும் அவன் இப்போதும் காவி வேஷ்டியுடன் இருக்கிறான் என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறேன். அவர்களை அதிகாரம் செய்வதில்லை, தன் மதத்துக்கு இழுப்பதில்லை...
மூன்று முறை பொறுமையாக படித்து, ரசித்து, கருத்திட்டமைக்கு நன்றி மஞ்சு...
கதை நன்றாக இருக்கு. ஆனால் முதலிலேயே அருளின் அறிமுகம் இருந்திருந்தால் முடிவு நன்றாகத் தனித்துத் தெரிந்திருக்கும். திடீரென வரவே கதையை சென்டிமென்டலாக முடிக்க நினைத்துச் சேர்த்தாற்போல் ஓர் எண்ணம். இதுக்குக் கருத்தை ஏற்கெனவே போட்டுட்டு அது வரலை போல. இன்னிக்குத் தான் பார்த்தேன்
பதிலளிநீக்கு1500 வார்த்தைகளுக்குள் முடிக்க கட்டுப்பாடு. எனவே முடிந்தவரை நிறைய இடங்களை விவரிக்காமல் சுருக்கமாக கடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.
நீக்குஇனி இந்த வீட்டுக்கு வர தேவை இல்லையே என்ற அவன் சோகத்துக்கு பதில்தான் அது என்பதால் கடைசியில் வருவது சரி என்று நினைத்தேன்.
பரிசு பெற்றதுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.
நீக்கு