சில நேரங்களில் நாம் திட்டமிடாமலேயே சில கோயில்களுக்குச் செல்ல நேரிடும். அப்படிப்பட்ட சமயங்களில் இறைவனே நமக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தது போலத் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு கோயிலைப் பற்றித்தான் இந்த வாரம் எழுதுகிறேன்.
ஆழ்வார் பன்னிருவர். அவர்களில், மதுரகவியாழ்வார், அவரது குருவான நம்மாழ்வாரை மாத்திரமே பத்துப் பாசுரங்களால் பாடியிருக்கிறார். இதனை ‘ஆச்சார்ய பக்தி’ என்று சொல்வர். ஆண்டாள், அரங்கன் மீது கொண்ட அதீத பக்தியுணர்வால் பலப் பல பாசுரங்களை இயற்றி கடைசியில் அந்த அரங்கனையே கணவனாக அடைந்தாள். ஆண்டாள் ப்ரபந்தப் பாசுரங்களை இயற்றிடினும், அவர் துளசி நந்தவனத்தில் சிறு குழந்தையாகக் கிடைத்தவள் என்பதாலும், இறைவனையே கணவனாக வரித்தவள் என்பதாலும், பொதுவாக ஆழ்வார்கள் என்று சொல்லும்போது ஆண்டாளைச் சேர்ப்பதில்லை. அதனால் ஆழ்வார் பதின்மர் என்றே சொல்வர்.
இவர்களில் தொண்டரடிப்பொடியாழ்வார் இரண்டு பிரபந்தங்களை இயற்றியுள்ளார். திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள். அவர் பாடியது அரங்கனை மாத்திரம்தான். அவரது வரலாறு சுவையானது…..
விப்ரநாராயணர் என்ற இயற்பெயர் பெற்ற இவர், நந்தவனம் அமைத்து திருவரங்கப் பெருமானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தார்.
கணிகைப் பெண் ஒருத்தி, தேவதேவி என்ற பெயருடையவள், தானும் அந்தத் திருப்பணியில் கலந்துகொள்வதாகக் கூறி, சூழ்ச்சியால் விப்ரநாராயணரை மயக்குகிறாள். அவளின் நினைவாகவே அவளது வீட்டு வாயிலில் நிற்கும் நிலைக்கு விப்ரநாராயணர் வந்துவிடுகிறார்.
இந்த அவல நிலை கண்ட ரங்கநாயகித் தாயார், இவரைத் தடு த்தாட்கொள்ளுமாறு ரங்கநாதரை வேண்ட, அரங்கனும், விப்ரநாராயணரின் ஏவலாள் என்று சொல்லிக்கொண்டு கோயில் பொன் வட்டிலை தேவதேவியிடம் கொடுத்துவிடுகிறார். கோயிலின் பொன்வட்டில் களவு காரணமாக விப்ரநாராயணர் சிறைவாசம் அனுபவிக்க நேரிடுகிறது. பிறகு அரங்கன், அரசனின் கனவில் தோன்றி உண்மையை உரைக்க, விப்ரநாராயணர் சிறைவாசம் நீங்கப்பெறுகிறார். பெண் ஆசை நீங்கப்பெற்ற விப்ரநாராயணர், அரங்கனின் அடியார்களுக்கு அடியராய் வாழ்ந்து தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற பெயர் பெற்றார்.
இதைப்போன்ற பல வரலாறுகளை நாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆன்மீகச் செம்மல்கள் வாழ்வில் காணலாம். தவறுகள் செய்தாலும் அவனுடைய அருள் கிட்டுமானால் மனம் திருந்தி பெரிய நிலைக்கு ஒருவன் வரமுடியும் என்ற நம்பிக்கை அளிப்பவை அந்த வரலாறுகள்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பிரபந்தங்களின் சிறப்பு, அவரது திருப்பள்ளியெழுச்சி, நித்தமும் கோயில்களில் சேவிக்கப்பெறுகிறது (மற்ற இரண்டு பிரபந்தங்கள், திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை). அவரது “திருமாலை பிரபந்தம்’, ‘திருமாலைக்கு உருகார் ஒரு மாலைக்கும் உருகார்’ என்ற புகழ் பெற்றது.
தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போல என் தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கு அறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகருளானே
(திருமாலை, 31வது பாசுரம்)
நான் தவமுடையோர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்லன். மிகுந்த செல்வம் படைத்தவர்களில் ஒருவனும் அல்லன். என்னைச் சேர்ந்தவர்களுக்கோ, உப்புத் தண்ணீர் போல ஒன்றுக்கும் உதவாதவனாக இருக்கிறேன். சிவந்த அதரங்களை உடைய பெண்களாலும் துரத்திவிடப்படும் கள்வனைப் போன்றவனாக இருக்கிறேன். இப்படிப்பட்ட எனக்கு வீனான பிறவி கொடுத்துள்ளாய் என்று உருகுகிறார்.
மூன்று நிலை கோபுர நுழைவாயில். இதற்கு முன்பு, நந்தவனம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.
ரங்கநாயகித் தாயாருக்கு தனிக் கோயில் உண்டு. ரங்கநாயகித் தாயார் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில்.
கர்பக்ரஹத்தின் முன் உள்ள மண்டபத்தின் அமைப்பு சோழர் காலக் கட்டிட க் கலையை ஒத்திருந்தது. (மாடம்) மாடத்தின் உட்புறம் மேற் பகுதியில் அழகிய ஓவியங்கள், காலத்தால் வெகுவாகப் பழுதுபட்ட நிலையில்.
ஒரு தடவை சென்றிருந்தபோது ஓவியங்கள் இன்னும் தெளிவாக இருந்தன.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் ப்ரார்த்தித்துக்கொண்ட பிரகாரம் ரங்கநாதர் இந்தத் தலத்தில் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தந்தார். ரங்கநாதர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் வெகு சில கோயில்களில் இத் தலமும் ஒன்று. இங்கு ரங்கநாதர், ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சிதருகிறார்.
இந்தக் கோயிலுக்கு இதற்கு முன்பு மூன்று முறை சென்றிருந்தாலும், அன்றைய தினம் திட்டமிடாமல் எங்களுக்கு இந்தக் கோயில் தரிசனமும், அங்கிருந்த அர்ச்சகர் மூலம் பல செய்திகளைக் கேட்கும் வாய்ப்பும் கிட்டியது. அங்கிருந்த அர்ச்சகர், சாளக்கிராமங்களைப் பற்றியும் அவற்றை தினமும் ஆராதனை செய்வதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.
மனதில் ஏதோ தோன்ற, அங்கிருந்தே என் தம்பியிடம் பேசினேன், அப்பா ஆராதனை செய்த சாளக்கிராமங்கள் எங்கே இருக்கின்றன என்று. அவனோ, அவரது ஆராதனைப் பெட்டி, ஆராதனைக்குரிய சாமக்கிரியைகள் எல்லாமே வீட்டு சன்னிதியில் இருப்பதாகவும், எனக்கு வேண்டுமானால் தந்துவிடுவதாகவும் சொன்னான். அந்த சாளக்கிராமங்களை, தான் ஆராதனம் செய்யாததால், பத்து வருடங்களுக்கு முன்பு கோயிலுக்குக் கொடுத்துவிட நினைத்ததாகவும், அது அமையவில்லை என்றும் சொன்னான். (அதை எடுத்துக்கொண்டு வரவும், இன்னொருவருக்குத் தரவும் சில முறைகள் உள்ளன. அதன்படி அவன், வேறு ஒரு வேலைக்காக சென்னை சென்றிருந்தபோது, அனைத்தையும் அழகிய பையில் வைத்துத் தந்தான். அவற்றை என் பெங்களூர் வீட்டிற்குக் கொண்டுவந்து சன்னிதியில் வைத்ததும் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது. ) அப்பாவின் ஆராதனைப் பெட்டி எங்கள் வீட்டிற்கு இத்தனை வருடங்கள் கழித்து வரவேண்டும் என்று இருந்திருக்கிறது.
மனதில் மிகுந்த திருப்தியுடன் அன்று மற்ற கோயில்களுக்குச் செல்ல ஆரம்பித்தோம்.
அடுத்த வாரம் வேறு ஒரு கோயில் பதிவுடன் சந்திக்கலாம்.
திருமண்டங்குடி எங்கு இருக்கிறது. கோயில் வருமானம் இல்லாமல் எப்படியோ காப்பாற்றப்பட்டு வருகிறது என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குமுதலில் மண்டங்குடி என்றதும் இப்படி ஓர் ஊரா என்னு வியந்தேன். காரணம் மண்டன் என்றால் மடையன்--- மலையாள அர்த்தம். மடையர்கள் ஊர் என்று ஆகிறது.
சாளக்கிராமங்கள் புகைப்படம் இடம் பெறவில்லையே!
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். இந்தத் தலம் கும்பகோணம் அருகில், கவித்தலம் செல்லும் பாதையில் இருக்கிறது.
நீக்குபல கோயில்களில் வருமானம் குறைவு. தரிசிக்கச் செல்லும்போது மனதை சஞ்சலப்படுத்தும் விஷயம் இது.
சாளக்கிராமங்களுக்கான பதிவு வேறு வரும். அடுத்தவாரம் என்ன எழுதலாம் என்ற யோசனையில் நான். இந்த மாதம் இரு பிரயாணங்கள் இருக்கின்றன.
மூலவர் சந்நிதியும், சந்நிதியில் உள்ள திருவுருவங்களும் இரண்டு படங்களுக்கிடையில் மிகவும் வித்தியாசமாக உள்ளன. இரண்டும் ஓர் சந்நிதி படம் என்று சொல்ல முடியவில்லை. சரியாக கூர்ந்து கவனிக்கவும்.
பதிலளிநீக்குஅதே போல் விஸ்வசேனர் என்ற பெயரின் கீழ் உள்ள சிலை விஸ்வசேனர் அல்ல. அது முதல் திருவடி போல் உள்ளது.
Jayakumar
இல்லை ஜெயகுமார் சார். கவசம் மற்றும் அலங்காரங்களால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது என நினைக்கிறேன்.
நீக்குஎன்னிடத்தில் விக்ஷ்வஷேனர் ஆராதனைப் பெருமாள் உண்டு. இருவரும் ஒன்றே என நினைக்கிறேன்.
கூர்ந்து கவனித்து சந்தேகத்தை எழுப்பியதற்கு நன்றி
விஸ்வசேனர் வேறு, விஸ்வக்சேனர் வேறு என்று புரிந்து கொண்டேன். தவறான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்குஇல்லை ஜெயகுமார் சார். எங்கள் ஆசார்ய பரம்மரையில், பெருமாள், பிராட்டியார், விஸ்வக்ஷேனர், நம்மாழ்வார், நாதமுனிகள்,... ஆளவந்தார், ... இராமாநுஜர்... என்றே வரும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி.
நீக்குகாலையிலேயே இனிப்புக் கொழுக்கட்டை, மணிக்கொழுக்கட்டைப் பதிவுகளை வெளியிட்டு என் டயட் விரத்த்திற்குச் சோதனை வைக்கலாமா?
வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கோவில் தரிசன பதிவு அருமை.
இந்த ஊர் கேள்விபடாதது. உங்கள் பதிவை படித்தவுடன் கூகுளிட்டு இந்த ஊர் பற்றிய செய்திகளையும் விபரமாக தெரிந்து கொண்டேன்.
விபர நாராயணர் வாழ்க்கை சரிதம் தெரியும். உங்கள் பதிவிலும் படித்து சந்தோஷ மடைந்தேன். எத்தனை பெரிய மகான்கள் தோன்றிய திவ்ய தேசமிது என்பதை இக் உணரும் போது மெய் சிலிர்க்கின்றது.
திருமண்டங்குடி நாராயணரையும் தரிசனம் செய்து கொண்டேன். ஆழ்வார் தரிசனமும் பெற்றேன்.
கோவில் படங்களும் விபரங்களும் வழக்கம் போல அருமையாக உள்ளது. இப்படி நல்ல, நல்ல கோவில் தரிசனங்கள் கொடுத்து வரும் தங்களுக்கு என் பணிவான நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பல கோயில்களுக்கும் பலமுறை செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு தடவைதான் பகிர்ந்துகொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
நீக்குஇங்கு, நின்றுகொண்டிருக்கும் நிலையில் ரங்கநாதர் அமைந்துள்ளார். இதற்கு முந்தைய தடவைகள் சென்றிருந்த சமயங்களில், வேறொருவர் கோயிலைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு தடவையும் அரை மணிக்குக் குறையாமல் வரலாற்றைச் சொல்லி தரிசனம் செய்துவைத்து மிக ருசியான பிரசாத்த்தையும் தருவார். யாத்திரையின்போது இந்தக் கோயிலுக்குச் செல்லும்போது, யாத்திரை நடத்துபவர், சன்னிதிகளைச் சேவித்துவிட்டு விரைவாக வந்துவிடுங்கள், அடுத்தடுத்த கோயில்களுக்கு நடை சாத்துவதற்குள் செல்லவேண்டும் என்று, இதனால் சொல்லுவார்.
புதனுக்கான கேள்வி... ஒவ்வொரு தெய்வீகமான கிராமங்களைப் பார்க்கும்போதும், அந்த அமைதியான சூழலை நினைத்து இங்கேயே மிகுதி வாழ்நாளைக் கழித்துவிடலாமே என்று தோன்றுகிறது. ஏன் நகர வாழ்க்கை நமக்குத் திருப்தியைக் கொடுப்பதில்லை?
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஇவ்விதமே நாங்களும் பல இடங்களுக்குச் செல்லும் போது நினைத்துள்ளோம். ஆனால், எதுவுமே அக்கரைப் பச்சைதான்...! ஏனெனில் மனம் எனும் மாய பிசாசு மாறி, மாறி அலைக்கழிக்கும் குணமுடையது. புதன் பதிலாக சகோதரர் கௌதமன் அவர்கள் என்ன சொல்லிப் போகிறார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குநெல்லை, கௌ அண்ணா கேள்விகளை ஒன் டு ஒன்னில் கொடுக்கச் சொல்லியிருந்தாரே!
நீக்குஇங்கே கொடுத்தால் சில சமயம் விடுபட வாய்ப்புள்ளது.
கீதா
கோவில் படங்கள் சூப்பர் நெல்லை.
பதிலளிநீக்குகோவில் பற்றிய விவரங்களும்.
கீதா
கோவில் பற்றிய தகவல்கள் விரிவாக தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குபடங்களும் அழகாக இருக்கின்றன.
ரங்கநாயகித்தாயாருக்கான அந்தக் கோயில் சூப்பரா இருக்கு கோபுர விதானம் அழகான கலைவடிவத்தில் சின்னதா...
பதிலளிநீக்குஅந்த இரு படங்களும் சுப்பர்.
எல்லாப் படங்களும் ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க நெல்லை.
மற்றபடி உங்க அளவுக்கு எனக்குப் பக்தி பூர்வமாகச் சொல்ல வராது. பதிலும். ஏன்னா எனக்கு பக்தி என்பது சுத்தம்!
படங்கள் எல்லாம் ரசித்துப் பார்த்தேன்.
பாவமான கோவில் போல இருக்கு. பராமரிப்பு இல்லாம. வருமானம் இல்லை போல.
கீதா
இந்த மாதிரி கோயில்களுக்கு அனுதினமும் விளக்கேற்றி
பதிலளிநீக்குஉகந்த வேளைகளில் நைவேத்தியங்களை படைத்து முகமலர்ச்சியுடன் நமக்கும் தெய்வ தரிசனம் செய்வித்து வழியனுப்பும் அருளாளர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இவர்களே இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள் என்று என் மனசுக்குத் தோன்றும். அப்படியான தருணங்களிலேயே இப்படியான வாய்ப்புகள் கிடைக்கும் நாமும் பாக்கியசாலிகளாகிறோம். எல்லாமே தெய்வ அருளில் தான் நடக்கின்றன.