அசோகமித்திரனின் இந்த நாவல் தொகுப்பை பார்க்கும் போது, 'வாசகர் இதை எப்படி என்று வைத்து படிக்க முடியும்? பிரித்தால், பாதியாக விண்டு வந்து விடாதா' என்று சந்தேகம் தோன்ற, அதை எடுத்து திருப்பிப் பார்த்தேன். பார்த்தபோது 'கொஞ்சம் பரவாயில்லை' என்று தோன்றியது.
2. தடங்கள் என்ற ஒரு புத்தகம் பார்த்தேன். பயணக் கட்டுரை புத்தகம். எடுத்து பிரித்துப் படித்துப் பார்த்ததில் பாலைவனம், ஒட்டகம், ஒட்டகத்துக்கு ஊசி போடுவது என்றெல்லாம் வந்தது. ஆஸ்திரேலியா பயணக் கதை போல...
3. மறுபடியும் ஒரு பெரிய புத்தகம் .
'பேய் பறவைகள்' என்று தலைப்பு. சீன எழுத்தாளர் போல தெரிகிறது.
இவ்வளவு பெரிய புத்தகத்தை வாங்கி போகிறவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள், எப்படி படிப்பார்கள், ராமாயணம் மகாபாரதம் ஸ்டாண்ட் வைத்திருப்பது போல் வீட்டில் வைத்திருப்பார்களா, எங்கு உட்கார்ந்து படிப்பார்கள் என்றெல்லாம் கவலை வந்தது்
நான் வாங்கப் போவதில்லை நமக்கு எதற்கு இந்த கவலை என்று வந்து விட்டேன்!!
மணிமேகலை பிரசுரம்.
"சங்கர்லால் கழுத்து கழுத்துப்பட்டையை தளர்த்திக் கொண்டு, சாய்வு நாற்காலியில் அமர்தபடி எதிரில் டீபாயின் மேல் கால்களை தூக்கிப் போட்டுக் கொண்டு தேநீரை சுவைத்தார்.."
இது மாதிரி வர்ணனைகளுக்கு ராமு வரைந்த ஓவியம் உட்பட சங்கர்லால் இன்னமும் மனதில் நிற்கிறார். சிறு வயதின் ஆரம்ப ஹீரோ்.
இந்த தலைப்புகளைப் பார்த்தபோது நான் பல வருடங்களுக்கு முன்பு வசித்த தஞ்சை மருத்துவக் கல்லூரி குடியிருப்புக்குச் சென்றுவிட்டேன். அங்குதான் அப்பா பைண்ட் செய்து வைத்திருந்த இந்த புத்தகங்களை எடுத்து படித்து சங்கர்லாலின் ரசிகன் ஆனேன்.
முதன் முதலில் முத்து காமிக்ஸ் படித்து இரும்புக்கை மாயாவியின்ரசிகன் ஆனேன் என்றால், முதலில் கதைகளாக படித்து சங்கர்லால் ரசிகள் ஆனேன்.
இப்போதும் முத்து காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டே விட்டை ரசிக்க முடிகிறது. சங்கர்லால் புத்தகங்கள் படிக்க முடியுமா என்று சோதிக்க வேண்டும். தமிழ்வாணன் நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் அத்தனை பேருக்கும் தூய தமிழ் பெயராக இருக்கும். மலர்விழி, துரைப்பாண்டியன், மலர்க்கொடி..
இவ்வளவு பெரிய புத்தகம் இருந்தால் பிரித்து படிக்க முடியுமா என்று சந்தேகம் எல்லோருக்கும் வரும். நானும் கேட்டிருந்தேன். 'உயிர்மை'யில் மனுஷ்யபுத்திரன் அதற்கு 'படிக்க முடியுமே' என்று சொல்வதுபோல ஒரு ஸ்பெசிமன் வைத்திருந்தார்.
ஒரு புத்தகத்தை பிரித்து வைத்திருந்தார்.
பிரித்தால் பக்கங்கள் பிரியாமல் அல்லது பைண்டிங் உடையாமல் அது விரிந்து கொடுக்கும் தன்மை இருப்பது போல இருக்கிறது பார்த்தால்.
உயிர்மையில் அதிகம் சுஜாதா புத்தகங்களை பார்க்க முடியும். சுஜாதாவின் நாவல்கள், தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்று பெரிய தொகுப்பாக போட்டிருக்கிறார்கள். அருமையான கலெக்ஷன். அவற்றை ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் நான் வாங்கி வைத்து விட்டேன்.
இப்போது சுஜாதா செக்ஷனை பார்க்கும்போது முதல் நாள் அங்கு ஓரிருருவர் கூட இல்லை. அடுத்த நாள் ஏதோ இருவர் இருந்தார்கள்.
அங்கிருந்த விற்பனை பெண்மணியிடம் "இப்போது சுஜாதா புத்தகங்களுக்கு மவுசு போய்விட்டதா? அங்கு அருகிலேயே நெருங்க முடியாது. இப்போது இவ்வளவு காற்றாடுகிறதே... மற்ற இடங்களில் தான் கூட்டம் அதிகமாக இருக்கிறது" என்று கேட்டேன்.
"யார் சார் சொன்னது? இப்பவும் சுஜாதா புத்தகங்களை தேடி வந்து கட்டு கட்டாக வாங்கி கொண்டு போகிறார்கள்" என்று பதில் சொன்னார் அந்தப் பெண்.
நான்கைந்து நாட்களாக பேச முடியாத அளவு இருமல். ஜுரம். இருமினால் உடம்பில் ஆங்காங்கே இழுத்துப் பிடித்துக் கொண்டு மகா அவஸ்தை. இதோ இந்தக் குழந்தைகள் போல நானும் மழையில் நனைந்து விளையாடி இருக்கிறேன் என்பது ஒரு மகிழ்ச்சியான நினைவு.
Face Book ல் ரசித்தது...
==================================================================================================================
=====================================================================================================
இணையத்தில் ரசித்த படம். இதற்கு என்ன கமெண்ட் கொடுப்பீர்கள்?
=======================================================================================
படித்ததன் பகிர்வு... காழ்ச்சப்பாடுகள் ------ மம்மூட்டி.
மகத்துவத்தினால் அல்ல, மாறாக மலையாளியின் மனதில் நான் கண்டுணர்ந்த கசடுதான் காரணமானது.
பச்சனும் நானும் அருகருகே அமர்ந்திருந்தோம். சினிமாவில் புகழ்பெற்ற பலரும் வணங்கி மரியாதை செலுத்தியபடி எங்களைக் கடந்து போனார்கள். யார் வந்தாலும் சிரிப்புடன் நெஞ்சில் கை வைத்து மரியாதை செலுத்தினேன். ஆனால் அமிதாப்பச்சன் பெண்கள் வந்தபோது அவர்களுடைய வயதிற்கு தகுந்தாற்போல நாற்காலியிலிருந்து எழுந்து மரியாதை செலுத்தினார். நான் மிகவும் வெட்கப்பட்ட தருணமாயிருந்தது அது.
மலையாளிகளாகிய நாம் பெண்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவதில்லை என்பது மட்டுமல்ல, ஆண்கள் வரும்போது பெண்கள் எழுந்திருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். நமக்கு எல்லாவற்றின் மீதும் எப்போதும் அலட்சியம் இருக்கிறது. நமக்குப் பிறர் மரியாதை தரவேண்டும் என்பதை நம் வாழ்வின் எதிர்பார்ப்பாய் நினைக்கிறோம். பேருந்துகளில் பெண்களின் இருக்கைகளில் நாம் உட்கார்ந்திருந்தாலும் எழுந்து அவர்களுக்கு இடம் கொடுக்க யோசிப்போம். ஆனால் கடைக்கோடி கிராமத்தில் வாழும், எழுத்துக்கூட்டி வாசிக்கக்கூடத் தெரியாத வடஇந்தியனோ, தமிழனோ, தெலுங்கனோ பெண்களுக்காக எழுந்திருப்பான். பேருந்திலாக இருந்தால் உட்காரச் சொல்லி நின்று பயணிப்பார்கள்.
பெண்களின் மீதான அவமதிப்பு மலையாளிகளின் பழைய பாரம்பரியமில்லை என்பது நிஜம். நம் பண்டைய இலக்கியங்களில் எல்லாம் காதலன் காதலியை பகவதி, தேவி என்றுதான் கூப்பிட்டிருக்கிறான். அங்கிருந்து வந்த இப்பதங்கள் நம் மொழியிலிருந்தும் இப்போது மாயமாயிருக்கிறது. திருமண நிகழ்வுகளில்கூட
இப்போது மரியாதை செலுத்தும் வழக்கமில்லை. இந்த மரியாதையின்மை நம் ரத்தத்தில் கரைந்ததின் பலனை நாம் அனுபவிக்காமலில்லை. யாருக்கும் அடங்கி அடிமையாய் வாழமுடியாது என்கிற மனசுதான் எவ்வளவோ வரலாற்றுப் போராட்டங்களுக்கு நம்மைக் கொண்டு சென்றிருக்கிறது. அதனுடைய பலனைப் பாவப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் அனுபவிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அதெல்லாம் இதை நியாயப்படுத்தக் கூடியதல்ல.
தமிழ்நாட்டில் பரஸ்பரம் 'சார்' என்றுதான் கூப்பிடுகிறார்கள். அவ்வார்த்தையில் மரியாதையின் ஊற்றுக்கண் இருக்கிறது. நமக்கே 'சார்' என்று கூப்பிடுவதைக் கேட்க ஆசையிருக்கும். ஆனால் கூப்பிட அல்ல. அப்படி கூப்பிட்டாலோ அதனுடைய அர்த்தம் வேறாக இருக்கிறது. ஒரு ஆட்டோ டிரைவரை 'சார்' என்று கூப்பிட நம்மால் முடியுமா? ஆனால் ஒரு தமிழரோடு பிரயாணம் செய்தால் நாம் இதைப் பார்க்கவும் கேட்கவும் முடியும்.
மற்றவர்களின் மேல், குவியும் தனிப்பட்ட மரியாதையைக்கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. கொச்சியில் இந்த ஐந்து வருடத்தில் லட்சாதிபதியான மனிதரொருவர் இருக்கிறார். நான் வெளிநாட்டிற்கு சென்றிருந்தபோது அந்நாட்டினர் அவர் பட்ட கஷ்டங்களையும், செலுத்திய உழைப்பையும், அடைந்த வளர்ச்சியையும் குறித்து மிகவும் மரியாதையோடும், வாத்சல்யத்தோடும் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு உலகச் சந்தையில் நல்ல மதிப்பும், விலையும் இருக்கிறது. அவருடைய வியாபார உத்தியும், கடின உழைப்பும்தான் அப்படி அவர் ஜெயித்ததிற்குக் காரணமாக இருந்திருக்கிறது. ஆனால் சொந்த ஊரில், கள்ளக் கடத்தல் செய்து கிடைத்த பணம்தான் அது என்று ஒரே வரியில்,
====================================================================================================
நியூஸ் ரூம்
- கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் வரை, பள்ளி பருவத்தில் இலந்தை பழம் சாப்பிடாத, பொன் வண்டுகளை பிடித்து விளையாடாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இலந்தை பழமும், பொன் வண்டுகளும் பிரசித்தம். பொதுவாக இலந்தை மரங்கள் உள்ள இடங்களில், பொன்வண்டுகள் தவறாமல் காணப்படும். தற்போது இலந்தை மரங்களை வளர்ப்பது குறைந்ததால், அதை சார்ந்து இருந்த பொன் வண்டுகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- போபால்: மத்திய பிரதேசத்தில், சாலையில் நடந்து சென்ற நபரை வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்ற போலீசார், ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி, அவருக்கு 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
- குவாலியர்: திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மகளை போலீசாரின் கண் முன்னே தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னை: டீ குடிக்க போன சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- கலிபோர்னியா: மெட்டா நிறுவனத்தில் 3600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மார்க் ஜூக்கர்பெர்க் முடிவு எடுத்துள்ளார்.
- சென்னை: கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்த பா.ம.க., தலைவர் அன்புமணி, கிழக்குக் கடற்கரையை பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் எனறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- உலக அளவில் போக்குவரத்து நெரிசலில் பெங்களூர் மூன்றாவது இடத்தில் உள்ளது.
================================================================================================================
பொக்கிஷம்
இந்த வார கதம்பம் முகநூலில் ஏற்கனவே வந்தவைகளின் தொகுப்பு போல் உள்ளது.
பதிலளிநீக்குசின்ன சின்ன ஆசைக்கு போட்டியா 'இந்த மழை' கவிதை. கொஞ்சம் கூடுதல் விரிவாக்கியிருக்கலாம்
அவளைக்கண்டதும்
தனது வரிகளை
என்பதில் வரிகளுக்கு பதிலாக வார்த்தைகளை என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
மூன்று கவிதைகளும் நன்றாக உள்ளன.
என்னது மம்மூட்டி ரசிகர் ஆகி விட்டீர்களா?
காழ்ச்ச என்பது தமிழில் காட்சி. பாடுகள் என்பது தமிழில் பதிந்தவை என்று அர்த்தம். ஆக காழ்ச்சப்பாடுகள் என்றால் மனதில் பதிந்த காட்சிகள் எனலாம்.
அவளைக் கண்டதும்
வியக்க வார்த்தைகள்
கிடைக்கவில்லை.
அகராதியில் தேடுகிறான்
கவிஞன். (ஸ்ரீராம்)
நியூஸ்ரூம் fonts ரொம்ப பொடி யாக உள்ளதால் படிப்பதில் சிரமம். பெரிது படுத்தி படிக்க வேண்டி உள்ளது.
மதுவால் மதுவில்
இறந்த தவளை.
பார்த்தபின்னும்
திருந்தவில்லை
தமிழன்
// விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான உதவித்தொகை ரூ 25ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.//
அறிவிப்புகள் கவர்ச்சியாகத்தான் உள்ளன. ஆனால் நடைமுறையில்? 108 தற்போது சரியாக வேலை செய்யவில்லை.
பொக்கிஷ ஜோக்குகளில் கடைசி ஜோக்கைத் தவிர மற்றவை முன்பே வந்தவையாகத் தோன்றுகிறது.
Jayakumar
வாங்க JKC ஸார்...
நீக்குநான்கைந்து நாட்களாக மிகக்கடுமையான இருமல் மற்றும் அவ்வப்போது ஜுரம். நேற்று இரவு வரை கூட வியாழனுக்கு எதுவும் தயார் செய்யவில்லை. பொங்கல் கொண்டாட்டங்கள் வேறு.. நேற்று எங்கள் வீட்டில் கணுப்பொங்கல். கலவை சாதம் செய்து சகோதரிகளை அழைத்து விருந்து வைத்து சீர் கொடுப்போம். அதன் காரணமாகவும் எதுவும் தயார் செய்ய முடியவில்லை. அதுதான் முகநூலிலிருந்து இறக்கி விட்டேன். மேலும் முகநூலில் படிக்காதவர்கள் இங்கிருப்பார்களே... கீதா ரெங்கன், நெல்லை, கமலா அக்கா, மாதேவி.....
மழை கவிதையும் மற்ற கவிதைகளும் எழுதப்பட்ட தேதியை கவனித்திருப்பீர்கள்!
கொஞ்சநஞ்ச அழகாகாயிருந்தால் வார்த்தைகளை மட்டும் புதுப்பிக்கலாம். இவ்வளவு அழகுக்கு வரிகளையே புதுப்பிக்க வேண்டி இருக்கிறது. ஹிஹிஹி...
நான் எப்போதுமே மம்மூட்டி ரசிகன். மம்மூட்டிக்கு அப்புறம் லாலேட்டனும், ப்ரித்வியும். இந்தப் புத்தகம் நீண்ட நாட்களாய் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகம் இப்போதுதான் வாங்கிப் படித்தேன். பரவாயில்லை. அவரே ஒரு தேர்ந்த எழுத்தாளராக இருக்கிறார். காழ்ச்சா பாடுகள் வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன். தமிழில் இது மூன்றாம் பிறை என்று வந்திருக்கிறது!
நியூஸ்ரூம் எழுத்துகளை நார்மலுக்கு கொண்டு வந்திருக்கிறோம். சென்ற முறையே கொஞ்சம் அதிக செய்திகள் என்றதும் சிறிய எழுத்துருவில் கொடுத்திருந்தேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்றதும் இந்த வாரமும் அப்படியே தொடர்ந்தேன்!
ஜோக்ஸ் சட்டென திரட்ட முடியவில்லை. இவை இன்னும் வெளியாகவில்லை என்று நினைத்துக் கொண்டு வெளியிட்டிருக்கிறேன். அடுத்த வாரம் உஷாராக இருக்கிறேன்!
மம்மூட்டி சினிமாவுக்கு வருமுன் வக்கீலாக இருந்தவர். ஒரு காலத்தில் என்னுடைய பாஸ் அவருடைய படம் என்றால் பார்க்கவேண்டும் என்று நச்சரிப்பார்.
நீக்குJayakumar
முகமது குட்டி!
நீக்குமோகன்லால் அறிமுகமான படம் ஒரு மம்மூட்டி படம் என்று நினைக்கிறேன்.
மஞ்சில் விரிஞ்சு பூக்கள்? நினைவில்லை.
DD நேஷனல் மாநில மொழி திரைப்படம் பகுதியில்m 80 களில் ஒரு ஞாயிறு மதியம் பார்த்தது!
ஆன்ட்டிபயோடிக் தேவை என்று தோன்றுகிறது. ...clav 625 வகையில் ஏதாவது ஒன்று 5 நாள் சாப்பிடலாம்.
நீக்குJayakumar
ஆம். அதுதான் ஐந்து நாட்கள் எடுத்துக் கொண்டேன். கூடவே மான்டிலுகாஸ் பிளாஸ்டின் மற்றும் DEC. கூட பல்மோக்ளியர் சிரப். மற்றும் செப்டிலின் மாத்திரை.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா...
நீக்குவணக்கமும், நன்றியும்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
முதல் பகுதி புத்தக கண்காட்சி திருவிழாவா? மூன்றில் இரண்டு படங்களும் பெரிதாக்கி படிக்கலாம் என்றால், வரவில்லை. முதல் படமும் தலைப்பும் வித்தியாசமாகத்தான் உள்ளது.
குண்டு புத்தகங்கள் மடியில் வைத்தபடி பக்கம் புரட்டி படிப்பது கடினம்தான். எங்கே பைண்டிங் பிரிந்து விடுமோ என்ற பயம் வரும். படிப்பதற்காக அமர்வதற்கு நாற்காலிகள் அந்தளவு வசதி இல்லாத அந்த நாட்களில் நம் முதுகும் வளைந்து விடும்.
தமிழ்வாணனின் சங்கர்லால் வரும் இடங்கள் ஒரு காலத்தில் மனனம். தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட அந்த வாசகங்கள் சரளமாக சொல்லி விடலாம். (பள்ளி பாடங்களில் இந்தளவு கவனம் இருக்கக் கூடாதா என்ற திட்டுக்கள் வேறு விழும்.) இப்போதும் ரசித்தேன்.
கவிதைகளில், மழைக்கவிதையும், பொக்கிஷ நகைச்சுவைகளில் சிலதும் முன்பே இங்கு ஒரு வியாழனன்று படித்திருக்கிறேன். எனினும் இப்போதும் படித்து ரசித்தேன்.
பனிப்பாறை கவிதை நன்றாக உள்ளது. அனுஷ்காதான் அழகென்றால். கவிதையும் அழகு.
மாமியாரின் மோதிரத்தை பாதுகாத்த சோனியா அவர்களின் பாரம்பரியமான செயல் பாராட்டுக்குரியது.
செய்திகள் சுவாரஸ்யமாக இருந்தது. தூங்கும் போதும் ஹெல்மெட் அவசியமென்ற சட்டங்கள் வரலாம். இன்னமும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. பிரித்து மேய்ந்து விட்டீர்கள்.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குதங்கள் உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். இங்கு எனக்கும், வீட்டில் குழந்தைகள் உட்பட அனைவருக்கும், ஜலதோஷம், காய்ச்சல் இருமல் என பல நாட்களாக அலைக்கழிக்கிறது. அத்துடன் தவிர்க்க முடியாத விஷேடங்கள் வேறு. இந்த தடவை பனி சற்று அதிகந்தான். அனைவரும் நலம் பெற பிரார்த்தனைகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த தடவை பனி அதிகம், விஷப்பனி என்று வருடா வருடம் சொல்வோம் என்று நினைக்கிறேன். இந்த முறை நான் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். அலோபதி, ஆயுர்வேதம், பாட்டி வைத்தியம் எல்லாம் செய்துகொண்டிருக்கிறேன்!
நீக்குபாஸ் கசாயம் போடுவார். வெற்றிலை, கற்பூரவல்லி இலை, மிளகு, சுக்கு, தனியா, இருந்தால் ...திப்பிலி, ஏலம் கொஞ்சம் பனை வெல்லம், அல்லது வெல்லம்/சீனி போட்டு நன்றாக கொதிக்கவைத்து மூன்று டோஸ் அருந்தினால் இருமல்/ காய்ச்சல் போகும்.
பதிலளிநீக்குJayakumar
நெல்லிக்காய் இஞ்சி சேர்ந்த கலவை , வெற்றிலை பூண்டு மிளகு ஓமம் சேர்ந்த கலவை . சித்தரத்தை கஷாயம்.. எல்லாம் ஜோராக உண்டு. இருமல் எல்லாவற்றையும் வாங்கி கொண்டு பெப்பே என்கிறது!
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்கு