புதன், 1 ஜனவரி, 2025

தமிழ்வாணனும் துப்பறியும் சாம்புவும் 

 நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  கடந்த கால சங்கடங்கள், உபாதைகள் விலகி, வரும் காலத்தில் எல்லா நலமும் பெற வாழ்த்துகிறோம்..  வாழ்த்தப்போகும் உங்கள் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றி.



=========                                          ===================                                       ==========

(I) 


திருவனந்தபுரத்திலிருந்து திரு ஜெயக்குமார் சந்திரசேகர் மூன்று கேள்விகள் கேட்கிறார்.....


1.  கேள்விலேயே எதிர்பார்க்கும் பதில் உட்படுத்தி கேட்பதால் என்ன பயன்?

பதில் சொல்பவர் நம்ம கட்சியில் இருக்கிறாரா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் 

& : யார் அப்படி கேட்டாங்க? அப்படி யாராவது கேட்டிருந்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் பெரும்பாலும் தவிர்த்து வேறு பதில் கூறுவேன்!

2.  விடை சொல்ல கடினமான கேள்வி "முதலில் வந்தது எது? கோழியா, முட்டையா? " என்ற கேள்விக்கு உங்கள் பதில்?

# முட்டை தான் முதலில் வந்தது. இதில் எப்படி சத்துகள் வரும் ? முட்டை என்பது கோழியின் முதல் உரு தானே ! ஆதிமுதலான முட்டை  கோழி அல்லாத பறவை சற்றே விபரீதமாக இட்ட முட்டை.

&  கோழிதான் முதலில் வந்தது.  பிறகு வந்தது முட்டை.  அதன்பிறகு வந்தது ஆம்லெட்.

3.  எ பி கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஆசிரியர்களின் ஈடுபாட்டை இழந்து வருகிறது.  வாரிசு அடிப்படையில் வாரிசுகளுக்கு இணை ஆசிரியர் பதவி கொடுக்கலாம்  அல்லவா? உங்கள் பதில்? உங்கள் VRS அல்ல எதிர்பார்ப்பது...

#  ஈடுபாடு குறைந்து வருகிறது என எதை வைத்துச் சொல்கிறீர்கள் ? நான் எப்போதும் போல்  வழக்கமான கவனக்குறைவோடுதான் இருந்து வருகிறேன்.

&  வாசகர்களின் ஈடுபாடு அதிகரித்தால் ஆசிரியர்களின் ஈடுபாடும் அதிகரிக்கும்.

JKC போன வாரமே இதற்கான பதில்களை எதிர்பார்த்தார்....தெரியுமா ஷீலா?


()()()()()                                                      ()()()()()()()                                              ()()()()()()()()()


(II)


பெங்களூருவிலிருந்து நெல்லைத் தமிழன் ('கேம்ப்' எங்கே என்று தெரியவில்லை) கேட்கும் கேள்விகள் என்னவென்றால்....


1.  ஒரே குழந்தையுடன் நிறுத்திக்கொள்வதன் சாதக பாதகங்கள் என்ன? சித்தி அத்தங்கா பெரியப்பா என்று பல உறவுமுறைகள் விட்டுப் போய்விடக் கூடாது என்று நாலைந்து பெற்றுக்கொள்வதை ஆதரிக்கிறீர்களா?

# தற்காலத்தில் இரண்டாவது குழந்தை விரும்பினாலும் பலசமயம் கிடைப்பதில்லை.  குழந்தைகள் நமது வயோதிகத்தில் நம்மைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் தவறான தல்ல. ஆனால் அத்தை சித்தப்பா போன்ற உறவுகள் காணாமல் போய் விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அதிக பிள்ளைகள் பெற்று படிப்பு கல்யாணம் ஆகியவற்றுக்கான பணவசதி இல்லாமல் அல்லல் படுவது சரியாக இராது.

&  எ பி ஆசிரியர்களில் ஒரே குழந்தையுடன் நிறுத்தியவர்கள் யாரும் இல்லை. ஆதலால் ஒ கு சாதக பாதகங்கள் பற்றி நாங்கள் சொல்வது அறிவு பூர்வமாக இருக்கலாம்; அனுபவ பூர்வமாக சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.

பெற்ற காலத்தில் சித்தி சித்தப்பா அத்தங்கா அம்மங்கா மச்சினி ஒர்ப்பிடி பற்றி எல்லாம் சிந்தனை இருந்தது இல்லை. நாம் இருவர்; நமக்கு இருவர் பிரின்சிபிள்தான் !


2.  பெற்றோர்களின் கடமை அவங்க வாழ்க்கையை நல்லா அனுபவித்து வாழ்வதா இல்லை பசங்களைப் பெத்துக்கிட்டு அவங்களுக்காகவே  வாழ்ந்து தங்கள் சுகத்தைக் குறைத்துக்கொண்டு, சாகும்போது எதுக்குடா இப்படி வாழ்ந்தோம் என்று நொந்துகொள்வதா?

 
& ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்துபவர்கள், குழந்தைகள் தலை எடுக்கும் வரை குழந்தைகளுக்காக வாழ்வது இயல்பே. குழந்தைகள் தலை எடுத்து, கல்யாணமாகி அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டால் அப்போ வாழ்க்கையை உனக்கு நான்; எனக்கு நீ என்று வாழத் தொடங்க வேண்டியதுதான்.


3. புத்தாண்டை குடி, ஆட்டத்துடன் நள்ளிரவு வரவேற்கும் வழக்கம் எங்கேயிருந்து இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் தொடங்கியது?

#  போர்த்திக்கொண்டு குளிரை சமாளிக்கும் அளவுக்கு கோடை வெப்பத்தை சமாளிப்பது சுலபமல்ல.  உலக மயமாக்கலின் கொடை. மேற்கிலிருந்து இறக்குமதி.‌

& வெயில் காலத்தை ஓட்டுவது கஷ்டமா இல்லை குளிர்காலத்தை ஓட்டுவது கஷ்டமா?  தில்லி வெங்கட்டுக்கு சரியாகச் சொல்லத் தெரிந்திருக்குமோ? (தில்லியில் குளிர்னா கடும் குளிர், வெயில்னா கடும் வெயில்)

4.  ஆகமத்தில் இல்லாத,  புத்தாண்டு நள்ளிரவில் கோயிலைத் திறந்துவைக்கும் வழக்கம் சரிதானா? 

#  ஆகமத்தில் இருப்பது இல்லாதது பற்றி நான் அறியேன்.‌ பக்தி வளர்கிறதென்றால் திறந்து வைப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.

5.  திங்கட்கிழமை, உணவுப் பதிவுக்குப் பதிலாக, மாதத்தில் ஒரு தடவையாவது, எந்த உணவு எங்கே சாப்பிட்டது தங்களுக்குப் பிடித்திருந்தது என்பதை வாசகர்கள் எழுதி அனுப்பினால் என்ன? பயணப்படுபவர்களுக்கு உபயோகமாக இருக்குமே? நானே வரும் திங்கட்கிழமைகளில் ஒரு நாள் அப்படி எழுதலாமா என்று நினைத்துள்ளேன்.

#  நிர்வாக ஆசிரியர் சொல்வார்.

6.   எப்போதும்போல, இந்த வருடத்திற்கு புதிய உறுதிமொழி எடுத்துக்கொள்ள நினைத்துள்ளீர்களா இல்லை போன வருடம் உறுதிமொழி எடுத்து கடைபிடிக்காதவற்றில் ஒன்றைத் திரும்பவும் புதிய உறுதிமொழியாக எடுத்துக்கொள்ள நினைத்துள்ளீர்களா?

#  புத்தாண்டு உறுதிமொழி என்று பிரத்யேகமாக ஏதும் இதுவரை பழக்கமில்லை.


என்ன நெல்லை...  எந்த திவ்யதேசத்தில் சுற்றுப்பயணம் இப்போ?  கோவில் போகத் தொடங்கிய பிறகு என்னை கண்டுக்கறதே இல்லை போல...

()()()()()()()                                  ()()()()()()()                                                             ()()()()()()()


(III)


சென்னை அயனாவரத்திலிருந்து குடந்தை கே. சக்ரபாணி சென்னை 28 தனது இந்த இரண்டு கேள்விகளுக்கு என்ன பதில் வரும் என்று காத்திருக்கிறார்....


1.  இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட  கொடி  இருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் அதை உபயோகப்படுத்தியதே இல்லையே

#  தேசத்துக்கு என்று ஒரு கொடி இருக்கும்போது மாநிலத்துக்கு தனிக் கொடி என்பது வேண்டாத ஒன்று. அதற்கான அங்கீகாரம் அளித்து ஆணை வெளியிடும்போது கொடியை எங்கு எப்படி பயன் படுத்த வேண்டும் என்று அறிவித்து அது அமுல் படுத்தப் படுகிறதா என்று சரி பார்க்கவும் வேண்டும். முழு விவரம் தெரியவில்லை.

& அங்கீகரிக்கப்பட்ட கொடியா! யார் அங்கீகரித்தது! 
முன்பு கருணாநிதி தனிக்கொடி கேட்டபோது இந்திராகாந்தி " தா கம்முனு கிட" என்று சொன்னதாக ஞாபகம். 
மஹாராஷ்டிரா, கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஆளுக்கு ஒரு கொடி வைத்திருந்தாலும் எங்கேயும் அதை அதிகாரபூர்வமாக பயன் படுத்த இயலாது.

2.  எல்லா டிவி சேனல்களும்  24 மணிநேரமும். இயங்குகிறதே. என்ன பிரயோஜனம்?  முன்பு போல்  காலை  5 மணிமுதல் இரவு  12 மணிவரை  இயங்கினாலே  போதும் என நினைக்கிறேன். சரியா.

#  இஷ்டப்பட்டவர்கள் வேண்டும் போது பார்த்துக்கொள்ளட்டுமே.  அதிக நேரம் ஒளிபரப்புவதால் சில நூறு பேருக்கு வேலை கிடைக்கிறதே. இருந்து விட்டுப் போகட்டும்.
.
& போகிற போக்கில் 'எல்லா டி வி சானல்களும் 'நான் தூங்கும்போது ஒளிபரப்பை நிறுத்தி நான் எழுந்ததும்தான் ஒளிபரப்பைத் தொடங்க வேண்டும்' என்று கூறுவீர்கள் போலிருக்கு !

சக்ரபாணி ஸாருக்கு யார் படம் போடறதுன்னு தெரியலை ஸ்ரீராம்க்கு...  நம்மளை போட்டு சமாளிக்கிறான்....


()()()()()()()                                                ()()()()()()()                                          ()()()()()()()



KGG பக்கம் 
 


கடந்த ஏழு வருடங்களாக பெங்களூரை விட்டு வெளியே எந்த ஊருக்கும் செல்ல இயலவில்லை. 

காரணம்: 

1) திருமதியின் உடல்நலம். 
2) கொரோனா காலகட்டம்.

திருமதியின் மறைவிற்குப் பிறகு வந்த முதல் விடுமுறைக் காலம் என்பதாலும் - என்னை மீண்டும் சந்தோஷ மனநிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற என் பையனின் விருப்பத்தாலும் இந்த கிறிஸ்துமஸ் கால விடுமுறை நாட்களை வெளியூர் ரிசார்ட்டில் தங்கி கழிக்கலாம் என்று முடிவு செய்தோம்.

இரண்டு மூன்று திட்டங்கள் பையனிடம் இருந்தன. 

1) கூர்க் ( கர்நாடகா) ரிசார்ட்டில் தங்குவது. 

இல்லையேல் நல்ல ரிசார்ட் உள்ள வேறு ஏதாவது சுற்றுலா ஊர்.  பையன் முதலில் ரிசார்ட் புக் செய்துவிட்டேன்; டிசம்பர் 29 கிளம்பி, அங்கு போய் சேர்ந்து, 30 , 31 அங்கு தங்கி, 31 மாலைக்குள் கிளம்பி அன்று நள்ளிரவுக்குள் திரும்ப வந்து சேர்ந்துவிடலாம் என்று செய்தி அனுப்பினான்.

நான் அதற்குள் கூர்க் பற்றி, அது பெங்களூரிலிருந்து எவ்வளவு தூரம், அங்கே என்னென்ன பார்க்க வேண்டும் என்னென்ன வாங்கலாம் என்றெல்லாம் கூகிள் உதவியோடு கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன்.

பையனிடம் எனக்காக எவ்வளவு செட் உடைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் - ஒரு ஸ்வெட்டர் போதுமா? என்றெல்லாம் கேட்டு செய்தி அனுப்பினேன்.

அவன் பதிலுக்கு பெங்களூரை விட அங்கே டெம்பரேச்சர் அதிகமாக இருக்கும் என்று செய்தி அனுப்பினான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

என்ன? பெங்களூரை விட கூர்க்ல டெம்பரேச்சர் அதிகமா! என்று வியந்து ஒரு செய்தி அனுப்பினேன்.

" அப்பா ரிசார்ட் பதிவு பற்றி நான் அனுப்பிய செய்தியை மீண்டும் பார்!"




இந்தப் பயணத்தில் நான் வாங்கிய முதல் பல்பு இது!  இருபத்தொன்பதாம் தேதி மதியம் இரண்டே கால் மணி சுமாருக்கு பாண்டி ராடிஸன் ரிசார்ட்க்குப் போய் சேர்ந்தோம்.



எங்கள் எல்லோரையும் வரவேற்று, ஆளுக்கு ஒரு தொப்பி கொடுத்தார்கள்.


இதைப் பார்த்த குடும்பக் குழு உறுப்பினர்கள் "தமிழ்வாணன், துப்பறியும் சாம்பு"  என்று ஆளுக்காள் கமெண்ட் அடித்தார்கள்.  ஒருவர் கூட ஜேம்ஸ்பாண்ட் என்று சொல்லவில்லை; க்யூட் என்று சொல்லவில்லை.



இருபத்தொன்பதாம் தேதி மாலை, அருகில் உள்ள கடற்கரைக்கு நடந்து சென்றோம்.

இது எல்லாவற்றையும் ஃபோனில் தட்டச்சு செய்து ஸ்ரீராமிற்கு அனுப்பி பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டு உள்ளேன்.  அதனால் படங்கள் விவரங்கள் என்று கோர்வையாக எழுத இயலவில்லை. 
அடுத்த வார புதன் பதிவில் கொஞ்சம் கோர்வையாக எழுத முயற்சி செய்கிறேன்.  பெங்களூருக்கு திரும்ப வரும்போது காரிலிருந்து தட்டச்சு செய்து அனுப்பியவை இவை! 

96 கருத்துகள்:

  1. Pondicherry resort...ஆரம்பம் அமர்க்களம்.

    எனக்கும் கூர்க் செல்லணும் என்று ரொம்ப வருடங்களாக ஆசை. விவரம் தெரிந்தால் பெப்ருவரி கிளம்பிவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  2. மிக தாமதமாக அனுப்பினாலும், முயன்று கேள்வி பதில்கள் வெளியிட்டதால், கேள்வி, பதில்கள் கோர்வையாக இல்லாத்து குறையாக எனக்குத் தோன்றவில்லை. (ஒருவேளை இது ஶ்ரீராம் தவறோ? ஏற்கனவே நேற்று நா.பா வந்து மறுமொழி கொடுப்பார் என்று காத்திருந்தேன் ஹா ஹா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றைக்கான பதில்கள்?  முயற்சிக்கிறேன்.

      கேள்வி பதில்களை மறுபடி படித்துப் பாருங்கள்.  சரியாய் இருக்கிறதா என்று...  கடைசி நிமிட வேலைகள்..  இரண்டு கைமாறி வருவதாலும்.. 

      சாக்குகள் கூடாது.  தெளிவாய் இருக்க வேண்டும் என்று தெரிகிறது!

      நீக்கு
  3. இன்றைய பதிவு பற்றி அல்லாமல், புத்தாண்டு வாழ்த்துகள்தாம் கருத்துகளாக்க் குவியும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்த பயம் உண்டு.. அனுஷ்கா தமன்னா காப்பாற்றுவார்கள் என்று நினைக்கிறேன்!!!

      நீக்கு
  4. ​நான் கடலூரில் வாழ்ந்த காலத்தில் (1960-1970) பாண்டிச்சேரிக்கு போவது என்பதின் அர்த்தமே வேறு. அன்று தமிழகத்தில் prohibition இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். பாண்டியில் கிடையாது.

    fit ஆனீர்களா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் அர்த்தம் இப்போதும் உண்டு - தரத்துக்காக... 

      ஆனால் கேஜிஜி இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்!

      நீக்கு
  5. எப்போதும் விடாமல் பிரார்த்திக்கும் கமலா ஹரிஹரன் மேடம் உட்பட அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டில் அனைவருக்கும் உடல்நலம் மேம்பட்ட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஃதே... அஃதே...

      பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. உங்களிருவரின் அன்பான புத்தாண்டு வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி. நன்றி சகோதரர்களே .. 🙏.

      நீக்கு
  6. புத்தாண்டு வாழ்த்துக்கள். பதிலகள கூறியமைக்கு நண்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.

      ஆனால்...

      மறுபடி செக் செய்து கொள்கிறேன்.

      நீக்கு
  7. //கோவில் போகத் தொடங்கிய பிறகு என்னைக்//- அட நீங்க வேற தமன்னாக்கா. உங்கள் லேடஸ்ட் படங்களை, மேக்கப்போடு பார்த்தபிறகுதான், விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு என்று, உலக ஆசைகளைத் துறந்து யாத்திரையை ஆரம்பித்துவிட்டேன் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சொல்லுங்கள் தமன்னா பாட்டிக்கு...

      நீக்கு
    2. அப்போ தமன்னாதான் (அந்த) பாட்டியா!

      நீக்கு
    3. அப்போ அனுக்கா இன்னும் பாட்டி ஆகல்லியோ:) ஹையோ புதுவருடமும் அதுவுமா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்:)))

      நீக்கு
  8. கோழிதான் முதலில் வந்தது என்ற பதில் தவறு. சேவல்தான் முதலில் வந்தது. அதனுடன் கோழி வந்த பிறகு, முட்டை வந்தது. ஆதாம் ஏவாள் கதை படித்ததில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'பெட்டைக் கோழிக்கு கட்டுச்சேவலைக் கட்டி வைத்தவர் யாரடா' என்று கவியரசரே கேட்டிருக்கிறார்!

      நீக்கு
    2. கீழ போய் என் கருத்தைச் சொல்லும் முன் கணினி ஸ்க்ரீன் இந்த இடத்தில் நின்று நெல்லையின் பதிலைக் காட்டணுமா சொல்லுங்க!!!! ஹாஹாஹா

      நெல்லை பரிணாம வளர்ச்சி படித்திருப்பீங்களே!!!!

      ஏனவே முதல் வித்துதான் அதாவது சேவலோ கோழியோ மனுஷனோ எதுவோ.....அந்தக் கரு உருவாவதற்கான மைக்ரோப்ஸ் கண்ணுக்குத் தெரியாதவை .....அவைதான் எனவே கோழியும் இல்லை சேவலும் இல்லை அது உருவாவதற்கான அந்த அணுக்கள்...

      கீதா

      நீக்கு
    3. பேசாம புதன் கேள்விக்கு அனுப்பிடவேண்டியதுதான். கீதா ரங்கன் க்கா, மியூசிக் படிச்சாரா பொருளாதாரம் படிச்சாரா பயாலஜியா? சமையல் கலையா இல்லை ஆல் இன் ஆல் அழகுராணியா?

      நீக்கு
  9. கீதா சாம்பசிவம் மேடம் பல்வேறு காரணங்களால் இணையத்தைவிட்டு விலகி இருப்பது வருத்தம்தான். புத்தாண்டில் மீண்டும் அனைத்தும் சரியாகி இணையத்துக்கு வர பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.   ரொம்பவே மிஸ் செய்கிறோம்.  அதே போல வல்லிம்மா.

      நீக்கு
  10. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், எ. பி ஆசிரிய பெருமக்களுக்கும் எ. பி குடும்ப வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், எனதன்பான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை தந்து மேலும் பல நன்மைகளையும் தர வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் இனிய காலை
    வணக்கங்கள்.
    எங்கள் ப்ளாக் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2025 நல் வாழ்த்துக்கள்

    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  15. இன்றைய பதிவின் முதல் படம் அழகு..

    பதிலளிநீக்கு
  16. கோழி என்பது இனம்..

    சேவல் கோழி குஞ்சு என்பது வம்சாவளி..

    கோழிக்கு ஏதடா வம்சாவளி!?...

    அதானே... நாம தான் விட்டு வைப்பதில்லையே!..

    பதிலளிநீக்கு
  17. கோழிக்கு அதிக பட்ச மாத சுழற்சி 21 நாள்.

    தனது இணை களைக் காப்பதில் சேவல் காட்டுகின்ற வீரம் மனித குலத்துக்கு எடுத்துக் காட்டு..

    குஞ்சுகளை அரவணைத்துக் காப்பதில் கோழிக்கு நிகர் கோழியே!..

    செயற்கைக் கோழியைத் தின்கின்ற இன்றைய மக்களுக்கு அதெல்லாம் காணக் கிடைப்பதில்லை!..

    பதிலளிநீக்கு
  18. நமக்கு அவித்த முட்டை முதலா ?ஆம்லெட்டு முதலா?..

    இதுவே முக்கியம்..

    வந்த வேலயக் கவனிப்போம்!..

    பதிலளிநீக்கு
  19. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  20. /// நமக்கு அவித்த முட்டை முதலா ?ஆம்லேட்டு முதலா?..

    இதுவே முக்கியம்..

    வந்த வேலயக் கவனிப்போம்!..///


    நான் எனது குடும்பத்தினருடன் புலால் உணவுகளைத் துறந்து முழு சைவனாகி ஏழு வருடங்கள் ஆகின்றன...

    அந்தக் கருத்து பதிவுக்காக எழுதப் பெற்றதாகும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்லைன் டெலிவரிகளில் (உணவு டெலிவரி) பிரிநாணிதான் கோடிக்கணக்காக டெலிவரி செய்யப்படுகிறது என்ற செய்தியைச் சமீபத்தில் படித்தேன். இவர் என்னடான்னா சைவம் ஆயிட்டாராம். ஊரோடு ஒத்துவாழ் என்பதை இவர் படிக்க விட்டிருப்பாரோ? பிரியாணி, புரோட்டா சால்னாவற்றையெல்லாம் துறந்த என்னத்தைக் காணப்போகிறாரோ.. ஹா ஹா ஹா

      நீக்கு
  21. குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இயற்கை நியதிதான் . ஆனால் குழந்தையை நன்றாக வளர்க்க முடியுமா? அதுவும் இப்போதைய காலகட்டத்தில், பள்ளிப் படிப்பு கல்லூரிப் படிப்பு என்பதெல்லாம் . இதை யோசிக்க வேண்டும். வளர்க்க முடியாம குழந்தைகிட்ட நம்ம இயலாமையின் கோபத்தைக் காட்டுவது என்பது கொடுமை. நிதி....கொஞ்சமாச்சும்....உடனே கேக்கக் கூடாது அப்ப குடிசை வாழ் மக்கள் பெத்துக்கக் கூடாதான்னு. பெத்துக்கலாம்....ஆனால் வச வசன்னு நிறைய பெத்து....அப்புறம் சமுதாயத்தில் சீரழிவதை விட. இது நான் சொல்வது ஐடியலிஸ்டிக்காக இருக்கலாம் ஆனால் நிறைய பெற்றுக் கொள்ளும் போது, எல்லாக் குழந்தைகளுக்கும் சரியாக முக்கியத்துவம் கொடுக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும். 6, 7 குழந்தைகள் எனும் போது முக்கியத்துவம் பிரிக்கப் படும் போது ஏதேனும் ஒரு குழந்தைக்கு அட்டென்ஷன் தேவைப்பட்டால் அது கொடுக்க முடியலைனா....அக்குழந்தைக்கு மன ரீதியாகப் பிரச்சனைகள் ஏற்படும்.

    கூட வே ஒரு சில பயிற்சிகள் என்று Racing world, society எல்லாம் நமக்கு வேண்டாம். அந்த அழுத்தம் கொடுக்காமல் வளர்க்க முடியும் என்பதையும் கொண்டால் நல்லது.

    வீட்டுச் சூழல்....கணவன் மனைவி இருவருக்கும் ஏதேனும் பிரச்சனை இருந்து அது குழந்தைக்கும் வரும் வாய்ப்பு இருந்தால் யோசிக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு குழந்தைகள் என்றாலும் முக்கியத்துவம் கொடுப்பது என்பது எவ்வளவு கடினம் அதுவும் ஆண் பெண் எனும் போது இருவரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் ரொம்ப வேறாக இருக்கும்.

      என்னை வளர்த்த விதம், குடும்பம் எல்லாம் என்னை ரொம்ப யோசிக்க வைத்த விஷயங்கள் நான் கல்லூரி படிக்கும் போது. எனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்னை யோசிக்க வைத்தது.

      குழந்தை வளர்ப்பிற்கு முதலில் நல்ல பேரன்டிங்க் ரொம்ப முக்கியம். வளர வளர, சுற்றும் நோக்கி, குழந்தைக்குத் தன்னைத் தானே சிந்தித்து வளர்த்துக் கொள்ளும் பக்குவம் இருந்தால் லக்கி சைல்ட் என்பேன்.

      கீதா

      நீக்கு
    2. கீதா ரங்கன் க்கா எழுதியுள்ளதைப் படித்தால், இந்தக் கேள்வியை ஒருவேளை முப்பது வருடங்களுக்கு முன்பாக்க் கேட்டிருந்தால், எபி ஆசிரியர்கள் வாசகர்கள் வீட்டில் குறைந்தபட்சம் ஆறேழு குழந்தைகள் இருந்திருக்கும் போலிருக்கே.

      நீக்கு
    3. நெல்லைத்தமிழனின், கீதா....க்காவுக்கும் நன்றியாக்கும் ஹா ஹா ஹா

      நீக்கு
  22. நெல்லையின் இரண்டாவது கேள்விக்கு - வின் வின் சிச்சுவேஷனில் பெற்றோர் பிள்ளைகள் இருந்தால், அப்படியான வளர்ப்பும் இருந்தால் இந்தக் கேள்விக்கு இடமில்லை.

    வயசானவங்கள் வீட்டில் இருந்தால் இந்தக் கேள்வி இன்னமுமே பொருந்தும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அம்மாவுக்கு நிறைய குழந்தைகள். அவர்களும் பிரச்சனை என்று வந்தால் விண் விண் சிச்சுவேசன்தான். பிரச்சனை செய்பவர்கள் இரண்டு பேருக்கும் முதுகில் அடி. அவ்வளவுதான்! முதுகு விண் விண்ணென்று வலிக்கும். இரு குழந்தைகளும் அழுதுகொண்டே ஓடிவிடுவதால் அப்புறம் பிரச்சினை கிடையாது!

      நீக்கு
  23. நெல்லையின் 5 வது கேள்விக்கு - நெல்லை , உங்களைத் தவிர ஓரிருவர் இருந்தாலும் எழுதுவது நீங்க மட்டுமாகத்தான் இருக்கும். ஆசிரியர்களில் ஸ்ரீராம் எழுதலாம்.

    எனக்கெல்லாம் அனுபவம் ரொம்ப ரொம்ப ரொம்பக் குறைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. JKC போன வாரமே இதற்கான பதில்களை எதிர்பார்த்தார்....தெரியுமா ஷீலா?//

    இதுக்கான படம் பார்த்து சிரித்துவிட்டேன். Very Apt!!!!! அதுவும் நசீரின் அந்தப் பார்வை செம பொருத்தம்....

    பிரேம் நசிர் பார்வை - ஜெ கே சி வந்துக்கிட்டே இருக்கார். நீ சொல்லிடு இந்த வாரம் பதில்கள் எல்லாம் ரெடி வெளியாகிடும்னு....நான் கொஞ்சம் பின்னாடி போய்....

    ஷீலா - அதான் ரெடி பண்ணிட்டீங்களே அப்புறம் எதுக்குப் பயம்....நீங்களே இங்க இருந்து அவருக்குச் சொல்லிடுங்க....

    கீதா

    பதிலளிநீக்கு
  25. கேஜிஜி, தமிழ்வாணன் தொப்பி என்று சொல்லியுள்ளது சரிதான். அழகாக இருக்கு.

    ஆனால் தமிழ்வாணன் பற்றி நினைத்தால் நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்று புத்தகம் எழுதி கல்லா கட்டிவிட்டு அல்பாயுசில் போன ரகசியம் சொல்லாமல் போய்விட்டதுதான் எனக்கு நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
  26. பாண்டிச்சேரி டிரிப் சூப்பர். பதிவில் உங்கள் வாட்சப் மெசேஜ் பார்த்து சிரித்துவிட்டேன். கூர்கில் பாண்டிச்சேரி ரெசார்ட்!!

    "தமிழ்வாணன், துப்பறியும் சாம்பு" //

    இதுக்கும் சந்தோஷப்படுங்க கௌ அண்ணா பெருமையான விஷயம்!!!

    நான் சொல்றேன் 'க்யூட்' நிஜமாகவே சூப்பரா இருக்கீங்க.

    எல்லாருக்கும் தொப்பி கொடுத்தாங்கனா...அப்ப துப்பறியச் சொல்லப் போறாங்களோ!!

    அது பாண்டிச்சேரி ஃப்ரென்ச் காரர்களிடம் இருந்தது இல்லையா அப்ப ஸோ அந்தப் பழக்கமா இருக்கும்.

    இன்னும் கூட பாண்டியில் ஃப்ரென்ச் வாசனை அடிக்கும். நான் இருந்தப்ப அதை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாகப் பெயர்கள். தமிழ்ப் பெயர்களைக் கூட முன்ன எல்லாம் பதியும் போது அப்படிப் பதிவாங்களாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. தண்ணீர் நிரப்பி இருக்காங்களோ அந்தப் பகுதியில் பார்க்க அழகா இருக்கு. மழை இல்லையே அங்கு இப்ப.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. எபி ஆசிரியர் குழுவிற்கும் வாசக சகோதர, சகோதரியருக்கும் அன்பான புது நாள்காட்டி ஆண்டு வாழ்த்துக்கள்.

    தங்கள் ஆரோக்கிய செல்வத்திற்கும்
    வருமான வரி கட்டும் அளவிற்கு
    நிறைய நிறைய வங்கி வைப்பு நிதி சேமிப்பிற்கும் இறைவன் அருள வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  29. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  30. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.

    ரிசார்ட் படங்கள் அருமை.
    தொப்பி தமிழ்வாணன் இது பொன்ற தொப்பி தான் அணிந்து இருப்பார்.
    ஜேமஸ்பாண்ட் போல நீங்கள் போஸ் கொடுத்து இருந்தால் ஒருவேளை சொல்லி இருப்பார்கள் ஜேமஸ்பாண்ட் போல இருப்பதாக.
    நெல்லை தமன்னாவை மறந்தாலும் நீங்கள் மறக்க விடமாட்டீர்கள் போலும்.

    பதிலளிநீக்கு
  31. //வாசகர்களின் ஈடுபாடு அதிகரித்தால் ஆசிரியர்களின் ஈடுபாடும் அதிகரிக்கும்.//

    நல்ல பதில்.

    //இஷ்டப்பட்டவர்கள் வேண்டும் போது பார்த்துக்கொள்ளட்டுமே. அதிக நேரம் ஒளிபரப்புவதால் சில நூறு பேருக்கு வேலை கிடைக்கிறதே. இருந்து விட்டுப் போகட்டும்.//

    நல்ல பதில்.


    பதிலளிநீக்கு
  32. /// பிரியாணி, புரோட்டா சால்னாவற்றையெல்லாம் துறந்த என்னத்தைக் காணப்போகிறாரோ.. ஹா ஹா ஹா ///

    நெல்லை அவர்களது அன்பினுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  33. புதன் கிழமை கெள அண்ணன் போஸ்ட் ஆச்சே.. இதில் எப்படி அனுக்கா:) வந்து வாழ்த்துச் சொல்கிறா, பாவனா தானே வந்திருக்க வேண்டுமென நினைச்சேன் பதிவின் முடிவில் தெரிஞ்சுபோச்ச்ச்ச்ச்:)...

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. புத்தாண்டு உறுதிமொழிக்கும் தமனாக்காவுக்கும் என்னா ஜம்பந்தமோ ஆரு கண்டா.. அந்த திருச்செந்தூர் கிருஸ்ணருகே வெளிச்சம்.

    தொப்பியுடன் சைட் போஸ்ட்டில் கொஞ்சம் குண்டான சார்லி ஷப்லின் போல அழகாக இருக்கிறீங்க கெள அண்ணன்.. இப்படியே ஹப்பியாக இருக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்செந்தூர் கிருஷ்ணரா...!!!??? இதென்ன புதுக்கதை?

      நீக்கு
    2. அது மட்டுமா! ஹப்பியாக இருக்கணுமாம்!!

      நீக்கு
    3. இதென்ன இது புயு வம்பாக்கிடக்கூஊ புயு வருடமும் அதுவுமா தெரியாமல் இடுப்பை விட்டிட்டமோ ஹா ஹா ஹா மேல்மருவத்தூர் வைரவா என்னைக் காப்பாத்துங்கோ 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

      நீக்கு
    4. ஹாஹாஹா! குருவாயூர் ஷண்முகா ஆதிராவிடமிருந்து இந்த குறும்பை பறித்து விடாதே __/\__

      நீக்கு
  35. எ.பி. ஆசிரியர் குழுவிற்கும், வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  36. வழக்கமாக எ.பி.யில் திங்கள்,செவ்வாய், புதன் கிழமைகளில் அதிகம் பங்களிப்பு செய்தவர்களின் விவரங்கள் வெளியிடுவீர்களே? 2024 ன் கணக்கு மறந்து விட்டீர்களா? அல்லது அவசியமில்லை என்று தோன்றி விட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்த ஒருமாத நிகழ்வுகள் + வெளியூர் பயணம் எல்லாம் புள்ளிவிவரம் எடுப்பதற்கு சாதகமாக அமையவில்லை. அடுத்த புதனில் வாய்ப்பு கிடைத்தால் வெளியிடுகிறேன்.

      நீக்கு
  37. இன்றைக்கா ? புத்தாண்டு எனக் கேட்கப்போகிறீர்கள். இன்றாவது வந்துவிட்டேனே :)

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!