முன் குறிப்பு :- பதிவு பெரிதாக இருப்பது போல தோன்றினாலும், அது உண்மையல்ல. நிறைய படங்கள் காரணமாக அப்படித் தெரியலாம். எனினும் உங்கள் வசதியை முன்னிட்டு பொக்கிஷம் பகுதி இடம்பெறவில்லை!
படித்துக் களைப்பதற்கு எழுத்துப் பகுதி அதிகம் இல்லாமல், பார்த்து, ரசித்துக் கடக்க எளிதான படங்கள் அதிகம் இருக்கும்.
********************************************************
இவ்வளவு பெரிய புத்தகம் இருந்தால் பிரித்து படிக்க முடியுமா என்று சந்தேகம் எல்லோருக்கும் வரும். நானும் கேட்டிருந்தேன். 'உயிர்மை'யில் மனுஷ்யபுத்திரன் அதற்கு 'படிக்க முடியுமே' என்று சொல்வதுபோல ஒரு ஸ்பெசிமன் வைத்திருந்தார்.
ஒரு புத்தகத்தை பிரித்து வைத்திருந்தார். பிரித்தால் பக்கங்கள் பிரியாமல் அல்லது பைண்டிங் உடையாமல் அது விரிந்து கொடுக்கும் தன்மை இருப்பது போல இருக்கிறது பார்த்தால்.
இருந்தாலும் பக்கம் புரட்டுவது என்பது கொஞ்சம் அலுப்பான செயலாக இருக்கும் என்றே தோன்றுகிறது! அதற்கு பக்கத்தில் மற்ற புத்தகங்களையும் பார்த்தேன் எதுவும் சிறிய சைஸ்லயே இருக்காது போல...!!
உயிர்மையில் அதிகம் சுஜாதா புத்தகங்களை பார்க்க முடியும். சுஜாதாவின் நாவல்கள், தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்று பெரிய தொகுப்பாக போட்டிருக்கிறார்கள். அருமையான கலெக்ஷன். அவற்றை ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் நான் வாங்கி வைத்து விட்டேன்.
இப்போது சுஜாதா செக்ஷனை பார்க்கும்போது முதல் நாள் அங்கு ஓரிருருவர் கூட இல்லை. அடுத்த நாள் ஏதோ இருவர் இருந்தார்கள்.
அங்கிருந்த விற்பனை பெண்மணியிடம் "இப்போது சுஜாதா புத்தகங்களுக்கு மவுசு போய்விட்டதா? அங்கு அருகிலேயே நெருங்க முடியாது. இப்போது இவ்வளவு காற்றாடுகிறதே... மற்ற இடங்களில் தான் கூட்டம் அதிகமாக இருக்கிறது" என்று கேட்டேன்.
"யார் சார் சொன்னது? இப்பவும் சுஜாதா புத்தகங்களை தேடி வந்து கட்டு கட்டாக வாங்கி கொண்டு போகிறார்கள்" என்று பதில் சொன்னார் அந்தப் பெண்.
நான் கொடுத்திருக்கும் புகைப்படத்தில் இருக்கும் மனுஷின் இரண்டு கவிதைகளை படிக்க முடிகிறதா? இரண்டு தினங்களில் எடுக்கப்பட்ட இரு வேறு கவிதைகள்.
சாதாரணமாக பழைய புத்தகக் கடை என்றாலே எனக்கு ஒரு காதல் உண்டு.
எனக்கென்ன, எல்லாருக்குமே இருக்கும்.
ஆனால் நாம் தேடும் புத்தகங்கள் அந்த கடையில் இருந்தால்தான் சுவாரஸ்யம். நாம் தேடுவது போல அந்த புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் ஏமாற்றம்தான்.
மதுரையில் நியூ சினிமா அருகில் பழைய புத்தக கடைகள் பார்த்து இருக்கிறேன். நிறைய பொக்கிஷங்கள் கிடைக்கும். பழைய பைண்ட் செய்யப்பட்ட கதைகள் போல...
ஆனால் இத்தனை கடைகள் இங்கு இருந்தும் நான் பார்த்தது பெரும்பாலும் ஆங்கில புத்தகங்கள் தான். இதில் மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புக்கான பாட புத்தகங்கள் மட்டுமே ஒருவர் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார். சில கடைகளில் எதை எடுத்தாலும் இருபது ரூபாய், எதை எடுத்தாலும் 50 ரூபாய் என்று போர்டு வைத்திருக்கிறார்கள்.
ஒரே அடுக்கில் பல புத்தகங்கள் ஒன்றாக வெவ்வேறு புத்தகங்கள் அடுக்கப்பட்டு இருப்பதால் சரியாக பார்க்கவும் முடியவில்லை.
என்னவோ கடைசியில் நான் ஆர்வமாக எதிர்பார்த்த இந்த பழைய புத்தக கடை விஜயம் ஏமாற்றம் தான் எனக்கு!!
==================================================================================================
செய்திகள் அதிகம் இருப்பதாய்த் தோன்றலாம். படித்துக் கடக்க எளிது; விஷயமும் அறிந்து கொள்ளலாம். சுவாரஸ்யமும் கூட!
நியூஸ் ரூம்
பானுமதி வெங்கடேஸ்வரன்+
- திருவனந்தபுரம், கேரளாவில், சமாதி அடைந்த சாமியாரின் இறப்பு குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், அவரது உடலை போலீசார் நேற்று தோண்டி எடுத்தனர். இது தொடர்பாக தனியார் 'டிவி'க்கு பேட்டியளித்த அவரது மகன் ராஜசேனன், 'தனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில், நள்ளிரவு நடந்தே சென்று என் தந்தை ஜீவ சமாதி அடைந்தார். என் உடலை யாரும் பார்க்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டதால், அது குறித்து வெளியே தெரிவிக்கவில்லை' என, கூறியிருந்தார். அவரது பதிலும், ஜீவ சமாதி அடைந்த இடத்தில் கோபன் சுவாமிக்கு அவசர அவசரமாக நினைவு மண்டபம் எழுப்பப்பட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் போலீசில் புகார் அளித்தனர். (17-1-25)
- வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் பெரும்பாலானோரின் விருப்பத் தேர்வாக கனடா உள்ளது. அதேநேரத்தில், கனடா சென்று அங்கிருந்து அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேற முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒ ட்டாவா: கடந்த ஆண்டு கனடாவில் கல்வி பயில இடம் கிடைத்தும் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள், கல்வி நிறுவனங்களில் சேராதது தெரியவந்துள்ளது.
- இறந்து 4 மாதமான நிலையில் கணவர் உடலை பார்த்து அதிர்ச்சி
- டெக்சாஸ்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 7வது ராக்கெட் சோதனை முயற்சியில் ஸ்டார்ஷிப் வெடித்து சிதறியது விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- எல்லையில் இந்திய ராணுவத்தின் நிலைகள், சீன ராணுவத்தின் நிலைகள், அவற்றின் சாதக பாதகங்கள், பேச்சுவார்த்தையில் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதை பற்றிய தகவல்களை பரிமாற, இந்த சம்பவ் ஸ்மார்ட்போன்களை புழக்கத்தில் வைத்து இருந்திருக்கின்றனர். இந்திய ராணுவம், தொழில்துறையின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் கிட்டத்தட்ட 30,000 அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளன.
- மும்பை: நடிகர் சயீப் அலிகான் காயம் அடைந்ததும், விரைவாக லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டோ டிரைவர் பஜன் சிங், 'எனக்கு அவர் பிரபலம் என்று தெரியாது. நான் வாடகை வாங்க வில்லை. அவருக்கு உதவியதில் நான் திருப்தி அடைந்தேன்' என தெரிவித்தார்.
- சென்னை மக்களுக்கு புதிய அனுபவம்! முதல் புறநகர் ஏ.சி. ரயில் பயணத்துக்கு ரெடி
- மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் குஜராத்தின் ஆமதாபாத் இடையே, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த சேவையை துவங்க திட்டமிடப்ட்டுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
- சென்னை: காரில் ஒரு வழி பயணத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கும் சேவையை, சென்னையில் செயல்படும், 'ட்ராப் டாக்சி' நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில், 3 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வழி பயண கட்டணத்தால், 22 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது.
- "என்னுடைய ரசிகர்களே.. படத்தைப் பாருங்கள்.. அஜித் வாழ்க; விஜய் வாழ்க என்று சொல்கிறீர்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்?" - அஜித்.
- சிக்கமகளூரு : திருமணத்துக்கு முந்தைய நாள், மணமகளின் தந்தை விபத்தில் இறந்துவிட, இவ்விஷயத்தை மனைவிக்கும், மகளுக்கும் தெரிவிக்காமல், உறவினர்கள் திருமணம் செய்து வைத்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், சாலையோரம் பிச்சை எடுக்கும் நபர், 1.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மொபைல் போன்' பயன்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கோள்கள் சில சந்தர்ப்பங்களில், ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வம் நிகழும். இன்று முதல் வரும் 25ம் தேதி வரை, வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்கள், ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இவை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை வானில் தெரியும். இவற்றில், நெப்டியூன், யுரேனஸ் ஆகியவற்றை நுண்ணோக்கியால் மட்டுமே காண முடியும்.
- பெங்களூர்: வங்கி ஏ.டி.எம். களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்து போலீஸ் துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வங்கிகள், ஏ.டி.எம்.களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி எஸ்.பி.களுக்கு டி.ஜி.பி. அலோக் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.ஆக பணிபுரியும் ராஜா சிங் என்பவரும், சைதாபேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ.ஆக பணிபுரியும் சன்னி லாய்ட் என்பவரும் வருமானவரித்துறையில் பணிபுரியும் இருவரின் கூட்டோடு வெளிநாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருள்களை கடத்தி வரும் நபர்களை குறிவைத்து அவர்களிடம் மாமூல் வசூலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி சி.டி.ஸ்கேன் இயந்திரம் வாங்கிக் கொண்டு,கையில் 20 லட்சம் ரொக்கத்தோடு வந்த முகமது கவுஸ் என்பவரை மிரட்டி 20 லட்சம் ரூபாயை பிடுங்கிக் கொண்டு விரட்டி விட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட முகமது கவுஸ் இவர்கள் மீது திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் மேற்படி மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் சன்னி லாய்ட் டேராடூனில் தலைமறைவாக இருந்திருக்கிறார் - போலீஸ் இல்லை பொ...கி.
- காற்றாலை மின் நிறுவு திறனில் முதலிடத்தில் இருந்த தமிழகம் இப்போது இரண்டாவது இடத்தில். சூரிய சக்தி மின்சாரத்தில் மூன்றாவது இடம். திட்டங்களை ஊக்குவிக்கும் சலுகைகள் அடங்கிய கொள்கை இல்லாததால் முதலீடுகள் ஆந்திரா,தெலுங்கானாவுக்கு செல்லும் வாய்ப்பு.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் கிரெடிட் கார்ட் மூலம் செலவழிப்பது திருச்சி, திருப்பூர்,ஜெய்ப்பூர்,அசன்சோல்போன்ற நாட்டின் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் அதிகரித்துள்ளது.
- திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மகளை போலீசார் முன் அவள் தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் குவாலியரில் நடந்துள்ளது.
- ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் சாலையோரம் பிச்சையெடுக்கும் நபர் 1.44 லட்சம் மதிப்பிலான 'ஐஃபோன் 16 ப்ரோ மேக்ஸ்' மொபைல் ஃபோன் பயன்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. (இது படச்செய்தியாகவும் உள்ளது)
- திருத்தனி: பூட்டியிருந்த டாஸ்மாக் கடையொன்றில் புகுந்த சிலர் அங்கு கல்லாவில் இருந்த பணத்தை தொடாமல் பியர் பாட்டில்களை மட்டும் காலி செய்துவிட்டு சென்றிருக்கின்றனர்.
========================================================================================
அந்த நடிகர் யாராய் இருக்கும்? உங்களுக்கு மனதில் யாரைத் தோன்றுகிறதோ எனக்கும் அவர்தான் மனதில் வருகிறார்!
============================================================================================
==========================================================================================
=========================================================================================
புத்தக வெளியீடு
ஜனவரி 17 ஒரு இனிய மாலையாகககழிந்ததற்கு முக்கிய காரணம் திரு Chellappa Yagyaswamy அவர் தன் அன்னையின் நினைவாக அவர் பெயரில் நடத்த ஆரம்பித்திருக்கும் அறக்கட்டளை - அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு அறக்கட்டளை - மூலம் ஒரு சிறுகதைப்போட்டி கடந்த வருட இறுதியில் அறிவித்தார். வெற்றி பெறும் 10 பேர்களுக்கு தலா 5,000 ரூபாய் பரிசு அறிவித்தார். நானும் கலந்துகொண்டேன். நான் கலந்து கொண்ட முதல் போட்டி!
வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியானபோது ஒரு இனிய ஆச்சர்யம் காத்திருந்தது. பத்து பேர்களைத் தவிர மேலும் 25 பேர்களுக்கு தலா 1,000 ரூபாய் பரிசு தர முடிவு செய்து, மேலும் 25 கதைகளைத் தேர்ந்தெடுத்திருந்தார். பின்னர் இது மங்கல காரணங்களுக்காக பரிசுத்தொகை ஒரு ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது.
இங்கு ரூபாய் பரிசு முக்கியமில்லை. பங்கு பெறுதலும், தேர்ந்தெடுக்கப்படுவதும்தான். முதல் பத்து பேர்கள் கொண்ட குழுவில் நான் இடம்பெறவில்லை. ஆனால் 25 பெயர்கள் கொண்ட பலகையில் எனக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு பிரிவு சிறுகதைகளையும் தனித்தனியாக புத்தகமாக கொண்டு வந்தார் திரு chellappaa அதுவும் மிக விரைவாக.
அதற்கான விழாதான் 17 ம் தேதி மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழா.
வரவேற்புரை ஆற்றிய செல்லப்பா ஸாரின் பேச்சில் புன்னகைக்க வைக்கும் குறும்பான பல வரிகள் இருந்தன.
அவர் மகளும் மகளின் மகளும் இறைவணக்கமாக 'மனதில் உறுதி வேண்டும்' பாடலும், நீராரும் கடலுடுத்த' பாடலும் அதிராமல் மிக இனிமையாக பாடினார்கள்.
மூத்த எழுத்தாளர்கள் திருமதி உஷா சுப்பிரமணியம், திரு மாலன், கல்கி ஆசிரியர் திரு ரமணன், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியும், இலக்கிய ஆர்வலருமான திரு பட்டாபிராமன் ஆகியோர் பங்கு கொண்டு பேசினார்கள்.
திரு மாலன் பேசும்போது சிறுகதை இலக்கியம் அழிந்துவிடுமோ என்று கவலை இருந்தததாகக் குறிப்பிட்டார். காலத்தை ஒட்டி,. நிகழ்காலத்தின் மறக்க முடியாத பெரும் சம்பவங்களை, கொடுமையான நிகழ்வுகளை வைத்து சிறுகதைகள் வெளிவரவேண்டும் என்றார். அவ்வாறு வந்திருந்த ஓரிரு சிறுகதைகள் பற்றி பேசினார்.
திரு ரமணன் சிறுகதைத் தொகுப்பு எவ்வளவு வெளிவந்திருக்கிறது, எப்போதிலிருந்து என்பது பற்றி விரிவாக பேசினார். அவர் அதில் ஒரு ஆராய்ச்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டார். 25 கதைகள் கொண்ட தொகுப்பிலிருந்து சில கதைகளை சொல்லி சிலாகித்தார்.
திருமதி உஷா சுப்பிரமணியன் முதல் புத்தகத்தில் வெளிவந்திருந்த ஓரிரு கதைகளை சிலாகித்து பேசினார். குறிப்பாக
Venkataraman Ganesan யின் 'மகாராணி அவனை ஆளலாம்' கதை பற்றி பேசினார். பின்னர் உரையாற்றிய திரு பட்டாபிராமனும் ஜீவி கதை பற்றி பேசி சிலாகித்தார்.
செல்லப்பா ஸாரின் திருமதி - அவர் ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை - ஒருவரையும் விடாமல் குறிப்பிட்டு நன்றியுரை ஆற்றினார். இரவு எட்டு மணிக்கு விழா இனிதே நிறைவுற்றது.
பரிசு பெற்றவர்களுக்கு அவர்கள் கதை இடம்பெற்ற புத்தகங்கள் இரண்டும், இன்னொரு புத்தகம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டன. இது பெரிய விஷயம். பரிசு பெற்றவர்களை ஒரு நாற்காலியில் அமரவைத்து கௌரவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
வந்திருந்த அனைவருக்கும் முன்னதாக நல்ல தரமான சமோசா, கேக், காஃபி வழங்கப்பட்டதை சொல்லியே ஆகவேண்டும். அங்கு
Ganesh Bala , திரு தஞ்சை ஹரணி ஆகியோரையும், நா பா மகள், அகிலன் அவர்கள் புதல்வர் ஆகியோரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. திரு
Ushadeepan Sruthi Ramani வருவார் என்று எண்ணியிருந்தேன். ஏமாற்றம்.
நன்றி செல்லப்பா ஸார்.
சமோஸா... கேக்... காஃபி... காஃபி புகைப்படத்தில் வரவில்லை!
இளையவரோ... பெரியவரோ... அவரே அவர் கையால்.....
கணேஷ் பாலா தான் வைத்திருந்த ஒரு உஷா சுப்ரமணியம் பைண்டிங் நாவலில் அவர் கையெழுத்தப் பெற்றபோது என் கேமிராவில் சிறைப்பிடித்தேன்!
"இவருடன் என்னை ஒரு புகைப்படம் எடு ஸ்ரீ.. " என்ற கணேஷிடம், புகைப்படம் எடுத்து அனுப்பிவிட்டு, "யாருப்பா இவர்?" என்று கேட்டபோது "இவர்தான் தஞ்சாவூர் ஹரணி" என்றார்.
விழா தொடங்க இருக்கும் நிலையில் திரு மாலன், திரு ரமணனிடம் அதுபற்றி பேசும் செல்லப்பா ஸார். பின்னணியில் அமர்ந்திருப்பது அவர் பாஸ்.
இளமையாக இருக்கிறார் என்று அவர் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்று திருமதி உஷா சுப்ரமணியத்தைக் குறிப்பிட்டு பேசிய செல்லப்பா ஸார்... "அவர் கதைகள் சிலவற்றை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன் என்கிற ரகசியத்தை இங்கு சொல்லலாமா கூடாதா என்று தெரியவில்லை" என்றார்! 'செல்லப்பா டச்'! திருமதி உஷா சுப்பிரமணியம் அவர்கள் வயது 80 க்கு மேல்...
மாலன் அவர்களின் சிறப்புரை சுவாரஸ்யமாக இருந்தது. நடுவில் கிடைத்த இடைவெளியில் அவரிடம் அவரின் புகழ்பெற்ற "வீடு என்று எதனைச் சொல்வீர்" கவிதை (பற்றி) சொல்லி சிலாகித்தபோது கைகளை நெஞ்சில் வைத்து, தலையை சாய்த்து நன்றி சொன்னார். அவர் கிளம்பும் சமயம் அவரிடம் என் ஒரு புத்தகத்தில் கையெழுத்தும் வாங்கி கொண்டேன். அப்பா.. நல்ல உயரம்தான் அவர். எனக்கு உயரமானவர்கள் என்றாலே ஒரு ஈர்ப்பு வரும். லேசாக பொறாமையும் வரும்!
மாலன் கையெழுத்து
புத்தக வெளியீடு....
நா பார்த்தசாரதி அவர்களின் மகள் பரிசு வாங்கியபோது.....
முதல் பரிசு பெற்றவர்கள் சான்றிதழோடு மேடையில் முக்கிய விருந்தினர் பின்னால்...
=========================================================================================
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம், நன்றி.
நீக்குவித்தியாசமான வியாழன் பதிவு. மனுஷ்ய புத்திரன் புத்தகங்கள் கிலோ கணக்கில் விற்கிறார்களா? என்றாலும் இது நல்ல முயற்சி. யாரும் இரவல் கேட்கமாட்டார்கள்.
பதிலளிநீக்குதிறந்த புத்தகக் கவிதைகள் இரண்டையும் வாசிக்க முடிந்தது.
உறுதி செய்ய பற்றி : கடவுளே கண் இல்லையா எனறு நாம் தான் கேட்போம். இங்கு அவர் தானாகவே மூடிக்கொண்டார். ஏன் என்ற சிந்தனை பல கற்பனைகளைத் தோற்றுவிக்கிறது.
தங்களைப்பற்றி... கவிதை நகுலனின் கவிதையை ஒத்து இருக்கிறது. யாரும் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கே தெரியாத பல விடயங்கள் (குறிப்பாக மனைவிக்கு ) மற்றவர்கள் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
தந்தை இறந்ததை மறைத்து திருமணம் நடந்த செய்தி அடிப்படையில் சில வருடங்களுக்கு முன் பரதம் என்று ஒரு மலையாளத் திரைப்படம் வந்தது. நெடுமுடி வேணு, மோகன்லால், ஊர்வசி நடித்தது. ஊர்வசியும் மோகன்லாலும் போட்டி போட்டு நடிப்பார்கள். மேலும் விவரங்களைத் தர கீதா ரங்கன் அவர்களை அழைக்கிறேன். இப்படப்பாடல் ஒன்றை வெள்ளி வீடியோவுக்கு தர உத்தேசித்திருந்தேன். யு டியூபில் பாருங்கள்.
உதட்டில் முத்தம் கொடுப்பவர் பற்றி: உலகமே அறியும் நாயகன் தானே?
சும்மா இருப்பது பற்றி: மனம் ஒரு குரங்கு. சும்மா இருக்க முடியாது தான். ஆனால் மதியம் உணட மயக்கத்தில் ஆபீசில் நாற்காலியில் தியானம் செய்வேன்!.!!
தியானத்திற்கும் உறக்கத்திற்கு வித்தியாசம் உண்டல்லவா? தியானத்தில் உணர்வு இருக்கும், ஆனால் சிலை போல் இருப்போம் அசைவு இருக்காது., தூக்கம் என்பது ஒன்றுமே அறியாத நிலை. சில சமயம் செயலும் இருக்கும் (பிறல்தல் போன்று).
படங்கள் துல்லியம்.
Jayakumar
//யாரும் இரவல் கேட்கமாட்டார்கள்//
நீக்குபுதிய சிந்தனை. முதலில் யார் இதை எல்லாம் வாங்குகிறார்கள் என்றே தெரிந்து கொள்ள ஆவல்!
கவிதைகளை படித்திருக்கிறீர்கள்... சூப்பர்.
தமிழில் ஆஹா என்று ஒரு படம் வந்தது. இதே போல கதை அமைப்பு. சுவாரஸ்யமான படம். ரகுவரன் நடித்தது.
சும்மா எல்லாம் யாராலும் இருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றும்.
நீங்கள் சொல்லும் ஆபீஸ் மதிய தியானம் நான் அவ்வப்போது தவறாது செய்து வருகிறேன்!
நன்றி JKC ஸார்..
வயிற்றெரிச்சலில் பிச்சைக்கார்ரிடம் ஐபோன் செய்தி இருமுறை இடம்பெற்றதா?
பதிலளிநீக்குஅப்படி இல்லை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்!
நீக்குநான் படச்செய்தியாக எடுத்து வைத்திருந்தேன். அக்கா டெக்ஸ்ட் செய்தியாக கொடுத்திருந்தார். அதை நீக்கவில்லை.
புத்தகம் பெரிதாக இருந்தாலும் நல்ல உள்ளடக்கம் இருந்தால் படிப்பதற்கு நன்றாக இருக்கும். உவெசாவின் என் சரித்திரம் அப்படிப்பட்ட புத்தகங்களுள் ஒன்று
பதிலளிநீக்குஅப்படியும் நான் சிரமமாகவே உணர்வேன். எங்கு வைத்து படிப்பீர்கள்? என்ன நோக்கத்தில் இப்படி புத்தகம் வெளியிட்டிருக்கிறாரோ... மூன்று உ வே சா புத்தகம் ஒரு மபு புத்தகத்தில்!
நீக்குசிறுகதைப் போட்டி பரிசு நிகழ்வை நன்றாக எழுதியிருக்கீங்க. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல, அந்தத் துறையில் உள்ளவர்களை சிலாகித்திருக்கீங்க. செல்லப்பா சாரின் தன்மையை ஒரு படத்தின் மூலம் தெரிவித்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎன்னுடைய புத்தகம் வழங்கும் நேரம் வருமா என்று காத்திருக்க வேண்டியதாயிற்று. கடைசிக்கு முதல்தான் என் புத்தகம். அவர் ஒரு சாடனறிதழை கையில் எடுத்து 'எங்கள் பிளாக் என்று ஒரு பிளாக் 15 வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறார்கள். சிறுகதைகளை அங்கு ஊக்குவிக்கிறார்கள் என்று சொன்னபின்தான் நான் எழுந்தேன், என் பாஸ் கேமிரா தயாரானது.
நான் என் செல்லை என் முன்னே அமர்ந்திருந்த ஒருவரிடம் கொடுத்திருந்தேன். அவர், அவர் நண்பருக்காக வந்திருந்தார். வளைத்து வளைத்து படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்.
போகன் சங்கரின் எழுத்து ஆச்சர்யம். சும்மா தியானத்தில் உட்காருவது கஷ்டமல்ல. ப்ராக்டிஸ் வேண்டும். தொடர்ந்து அமர்ந்தால், அது நமக்குப் புதிய கதவுகளைத் திறக்கும் வாய்ப்பு உண்டு.
பதிலளிநீக்குஆச்சர்யம் என்பதைவிட சுவாரஸ்யம்.
நீக்குFaceBook ல் அவர் பகிரும் நிறைய கருத்துகள் புன்னகைக்க வைக்கும், சுவாரஸ்யமாய் இருக்கும்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்,
நீக்கு