வெள்ளி, 3 ஜனவரி, 2025

கண்ணுக்குள்ள மோகம் தோணுது கன்னி பொண்ண காணும் போது

 

1980 ல் வெளிவந்த 'கிராமத்து அத்தியாயம்' என்னும் இந்தப் படத்தை கல்கியின் நளினி சாஸ்திரி பாராட்டி எழுதி இருந்தாராம்.  இயக்கம் ருத்ரய்யா.

ருத்ரய்யா இரண்டே படங்கள்தான் இயக்கினார்.  ஒன்று 'அவள் அப்படிதான்'.  இன்னொன்று இந்தப் படம்.  இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க அவர் முதலில் தெரிவு செய்தது சமீபத்தில் மறைந்த குடிசை இயக்குனர் ஜெயபாரதியை.  அவர் நடிக்க மாட்டேன் என்று, நடிப்பதில் ஆர்வமில்லாமல், இயக்கத்திலேயே குறியாக இருந்தார்.  

அடுத்து இவர் எதிர்பார்த்தது கமலஹாசனை.  அவரும் ஒப்புக்கொண்டிருந்தாலும் அந்த சமயம் அவர் KB யுடன் லண்டனில் படம் ஒன்று செய்து கொண்டிருந்ததால் இதில் நடிக்க முடியவில்லை.  நாயகி வேடத்துக்கு ருத்ரய்யா விரும்பிய சரிதாவும் கிடைக்கவில்லை.  

எனவே நந்தகுமார் ஸ்வர்ணலதா என்னும் புது முகங்களை வைத்து படத்தை முடித்தார்.  ஒருவேளை பிரபலங்கள் நடித்திருந்தால் படம் ஹிட் ஆகியிருக்குமோ என்னவோ...  

அப்புறம் அவர் 'ராஜா என்னை மன்னித்துவிடு' என்று கமல்ஹாசன், சந்திரஹாசனை வைத்து ஒரு படம்   எடுக்கத் தொடங்கினார்.  கால்வாசி படத்தில் நடிக்கும்போது ஸ்டார் வேல்யூ இல்லை என்று கமல்ஹாசன் அவர் காலை வாரி விட்டு விட, படம் நின்று போனது.  அதன் பாடலை  இளையராஜா அப்புறம் அதை மோகன் நடித்த 'அன்பின் முகவரி' படத்துக்கு  உபயோகித்துக் கொண்டார்.  

அப்புறம் 'உண்மையைத் தேடி' என்றொரு படம் முயற்சி செய்து நிறைவேறவில்லை.  அப்புறம் சுஜாதா கதை ஒன்றை (May be ஒரு விபத்தின் அனாடமி) படமாக்க நினைத்து ரகுவரனை நாயகனாகப் போட்டு எடுக்கத் தொடங்கி பணப்பிரச்சனையில் அதுவும் நின்று போனதாம்.  கமல் ரஜினிக்கு எல்லாம் நல்ல நண்பர் என்று பெயர்.  அவர்கள் ஒன்றும் உதவவில்லை போலும்!

கங்கை அமரன் பாடல்களுக்கு இளையராஜா இசை.  இளையராஜா அந்த சமயம் ஊதியம் பத்தாயிரம், ஒப்பதினைந்தாயிரம் போலதான் வாங்கி கொண்டிருந்தாராம்.பின்னர் அது ஒன்றரை லட்சமாக உயர்ந்ததாம்.  ஆனாலும் இளையராஜா வாங்கும் அளவு ஊதியம் கங்கை அமரனுக்கோ, பாஸ்கருக்கோ கிடைக்கவில்லை.  இளையராஜாவும் அவர்களுக்கு ஊதியம் அதிகமாக கைகொடுக்கவில்லை என்று தெரிகிறது.  

கங்கை அமரன் பல இசை அமைப்பாளர்களிடமும் பக்க வாத்தியக்காரராகவும் (கிடார்) பாடல்கள் எழுதியும், அப்புறம் படங்கள் இயக்கியும் கொஞ்சம் காசு பார்த்தாராம்.  அவர் இசை அமைக்கவும் வந்ததும் இளையராஜாவுக்கு கோபம், பொறாமை வந்து அமரனை வீட்டை விட்டே வெளியே போக சொல்லி இருக்கிறார்.  அப்புறம் அவர்கள் குரு ஜி கே வெங்கடேஷ் அறிவுரையால் அமைதி காத்தாராம்.  திறமையான இளையராஜாவின் மறுபக்கம் கொஞ்சம் கசப்பானது.

இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே ஹிட்.  தலைவர் ஒரு அருமையான சோகப்பாடல் பாடி இருக்கிறார் இதில்.  'வாடாத ரோசாப்பூ...' என்னும் பாடல்.  கங்கை அமரனின் வரிகள் எல்லா பாடல்களிலும் நன்றாக இருக்கும்.

இன்று பகிரப்போகும் பாடல் மலேஷியா வாசுதேவன், எஸ் ஜானகி குரலில் வரும் 'ஆத்து மேட்டுல...  ஒரு பாட்டு கேக்குது..' என்னும் பாடல்.  பாடல் இனிமை என்றால், அதன் இன்டர்லூட் எனப்படும் இசை பிரமாதம்.  

 இதுவே நீண்டு விட்டதால் மலேஷியா வாசுதேவன் பற்றி அப்புறம் பிறிதொரு நாள் அவர் பாடலை பகிரும்சமயம் பகர்கிறேன்!

புதுமுகங்கள் நடிப்பு சுமார் என்றாலும் ரசிக்கலாம்.  ஸ்வர்ணலதா நன்றாக செய்திருக்கிறார்.  அதே சமயம் பாடலை குரலுடன் நன்றாக ரசிக்க வேண்டும் என்றால் காட்சியைப் பார்க்காமல் ரசிக்க வேண்டும்!  கிராமத்து இசையில் இனிமையான ஒரு பாடல்.

எஸ் ஜானகி  :  ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு

எஸ் ஜானகி : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

எஸ் ஜானகி : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு

எஸ் ஜானகி : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

மலேஷியா : காட்டுல கட்டில் ஒன்னு போடவா
கையில கட்டி கொண்டு ஆடவா

எஸ் ஜானகி : ஏஹே என்ன ஆசை ஏக்கம் வந்து பேச

மலேஷியா : கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னி பொண்ண காணும் போது
ஆத்து மேட்டுல

எஸ் ஜானகி : ஒரு பாட்டு கேட்குது

மலேஷியா : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு

எஸ் ஜானகி : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

மலேஷியா : கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா
சேர்க்கவா கையில் உன்னை சேர்க்கவா

எஸ் ஜானகி : ஊஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் கேட்க மாட்டேன்

மலேஷியா : சொல்ல சொல்ல வேகம் ஏறுது
தூக்கிக்கிட்டு போகபோறேன்

மலேஷியா : ஆத்து மேட்டுல
எஸ் ஜானகி   : ஹா
மலேஷியா       : ஒரு பாட்டு கேட்குது
எஸ் ஜானகி   : ஆஹான்

எஸ் ஜானகி : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

27 கருத்துகள்:

  1. இந்தப் பாடலை ஹாஸ்டலில் வசித்தபோது பலமுறை கேட்டிருக்கிறேன்.

    அருமையாக இருக்கும். நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    அம்மாடி..! ஒரு பாட்டுக்கு எவ்வளவு விளக்கங்களை சேகரித்து தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். இந்தப் பாட்டு வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போது காட்சியாகவும் கேட்டேன். புது முகம் என்றாலும் ஸ்வர்ணலதா நன்றாகத்தான் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் சரிதாவையும் நினைவுபடுத்துகிறார். அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    இன்று பக்தி பாடல் மிஸ்ஸிங் கா? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க கமலா அக்கா...

      பக்திப்பாடல்கள் - அறிந்த பாடல்கள், பாடல்கள் ஸ்டாக் காலி என்பதால் வெவ்வேறு கொடுத்து வருகிறேன்!

      ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  4. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  5. தலை வாழை இலை விரித்து ஊறுகாய் அப்பளத்தை மட்டும் வைத்து விட்டு

    அவ்ளோ தான்!... என்றதைப் போல இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  6. கட்டில் போடவா
    கட்டி அணைக்கவா...

    கட்டி அணைக்கவா
    கட்டில் போடவா...

    80 களில் இந்த மாதிரியே உருட்டிக்கினு இருந்தனுவோ...

    இந்தப் பாட்லயும் அந்த மாதிரி வந்துருக்கு..

    பதிலளிநீக்கு
  7. ஆஹா! ஸ்ரீராம் ரொம்பப் பிடித்த பாடல். நிறைய கேட்டிருக்கிறேன். பாடல் பற்றி பார்த்ததுமே பாடல் பாட வந்துவிட்டது.

    செம பாடல். கங்கையின் வரிகள் நல்லாருக்கும். அதுவும் கிராமத்துப் பாடல் என்றால்.

    இப்பவும் ரசிக்கிறேன், ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ருத்ரய்ய அருமையான டைரக்டர். ஆனால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நீங்க பதிவுல சொல்லியிருப்பது போல் பல தடங்கல்கள்.

    ஓ கமல் ரஜனி நல்ல நட்பா? ஆனா பாருங்க ஒரு உதவி கூட இல்லையே அப்புறம் என்ன நட்பு?!!!

    இந்தக் கதைக்கு பதிவுல சொல்லியிருப்பது போல் நடிகர்கள் நடிகைகள் அமைந்திருந்தால் மிக நன்றாக வந்திருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமல் ரஜினி எல்லோருமே சந்தர்ப்பவாதிகள்தானே...

      நீக்கு
  9. படம் பார்த்ததில்லை பார்க்க வேண்டும் என்று நினைத்த படம். யுட்யூபில் இருக்கிறது என்று தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிராமத்து அத்யாயம் படத்தையோ சொல்கிறீர்கள்?  பொறுமை இருக்காது!

      நீக்கு
  10. /// அடடா... அப்படியா?
    என்ன குறை?..///


    இறையிசைப் பாடல் ஒன்று கூடக் கிடைக்க வில்லையே!..

    பதிலளிநீக்கு
  11. அருமையான பாடல் முன்பும் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்.

    நல்ல பாடல் பகிர்வு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. கிராமத்து அத்தியாயம்' பட விவரமும் தெரிந்து கொண்டேன்.
    பாடல் இனிமையானது கேட்டு பல வருடம் ஆச்சு. இன்று கேட்டேன்.
    இந்த நடிகையும் , நடிகரும் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், வேறு எதிலும் நடித்த மாதிரி தெரியவில்லை.  படமே வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!